logo

layastamilnovel

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
412


காலேஜ் இரண்டாம் ஆண்டு லீவில் தன் தோழி மிருதுளாவை காண அமெரிக்கா சென்று இருந்தாள் மீனு.

அங்கே தான் தன் மேற்படிப்பை மிருதுளா படிக்கின்றாள்.
.

அவளை PICK UP செய்ய ஏர்போர்ட் வந்திருந்தா மிருதுளா தன் செல்ல தோழியை கண்டதும் அங்கேயே சந்தோசமாக துள்ளி குத்தாள்.

"HEY.... மீன்ஸ்... டார்லிங்... "ஓடி சென்று மீனுவை கட்டிக்கொண்டாள்.

மீனுவும் மிருதுளாவை கட்டிக்கொண்டு தன் சந்தோசத்தை வெளிப்படுத்தியவள் "என்ன டி என்னை பார்த்ததும் இவ்வளவு சந்தோசமா இருக்க... என்னை அந்த அளவுக்கு மிஸ் பண்ணுனியா?" என்றாள் தன் லக்கேஜை எடுத்து மிருதுளா வந்த காரில் வைத்துக்கொண்டே.

" பின்னே இல்லையா? உன்னை பார்த்து ரெண்டு வருஷம் ஆகிருச்சு. உன்னையும் என் கூட வந்து படிக்க வாடி ன்னு கூப்பிட்டா நீதான் வரமாட்டேன்னு சொல்லி இந்தியால இருக்க காலேஜில் சேர்ந்துட்ட... இங்கே நான் வந்து இத்தனை நாளில் ஒரு முறை கூட வெளியே எங்கயும் என்ஜோய் பண்ண போகவே இல்லை தெரியுமா? " என்றாள் மீனுவுடன் காரில் கிளம்பிக்கொண்டே.

" ஏன்? உனக்கு இங்க எந்த BOY பிரெண்டும் கிடைக்கலையா? " என்றாள் மீனு சிரித்துக்கொண்டே.

" ஏய் அது எல்லாம் ஒரு மேட்டரா நான் ஓகே சொன்னா போதும்னு நிறைய்ய்ய பேர் என் பின்னாடி சுத்திட்டு இருக்காங்க, BUT அதில் எனக்கு விருப்பம் இல்லை " என்ற மிருதுளா.

" உன்னை மாதிரி என்னோட WAVE LENGTH க்கு ஏற்பு இங்க யாருமே செட் ஆகலை மீன்ஸ்" என்றாள் சோகமாக.

"சரி விடு இப்போதான் நான் வந்துட்டேனே. நான் இங்கே இருந்து ஊருக்கு கிளம்புற வரைக்கும் நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஊரை சுத்துறோம், பார்ட்டி போறோம் என்ஜாய் பண்றோம். சரியா?" என்றால் மீனு.

" இப்போதான் எனக்கு சந்தோசமா இருக்கு மீன்ஸ்" என்று அவளை கட்டிக்கொண்டாள் மிருதுளா.

சிறிது நேர பிராயணத்தில் மிருதுளாவின் வீடு வந்துவிட.. இருவரும் சென்று குளித்து முடித்து வந்த அன்றே ஊர் சுற்ற கிளம்பி விட்டனர்.

முதலில் இருவரும் அந்த நகரத்தில் இருக்கும் முக்கிய இடங்களை எல்லாம் சுற்றி பார்த்து விட்டு மாலை போல ஒரு பெரிய டான்ஸ் கிளப்பிற்கு சென்றனர்.

உள்ளே இருவரும் பேசிக்கொண்டு நுழைந்தனர். அப்போது சரியாக அவள் எதிரில் மீனுவின் பெரியப்பா மகள் ரியா அந்த கிளப்பை விட்டு வெளியேறுவதற்காக முழு போதையில் வந்தாள் .

அவளை இங்கே இந்த நிலையில் பார்த்ததும் மீனுவிற்கு சற்று அதிர்ச்சியாக தான் இருந்தது. தள்ளாடிப்படியே எழுந்து நடந்து சென்ற ரியா கீழே விழப் போக... அவளை ஓடி சென்று தாங்கி பிடித்துகொண்டாள் மீனு.

"அக்கா பாத்து வாங்க.. ஏன் இப்படி எல்லாம் குடித்து உன் பேரை நீயே டேமேஜ் பணிக்குற ?" என்றாள் அக்கறையோடு.

அமெரிக்காவில் மீனுவை எதிர்பார்க்காத ரியா " ஏய் நீ யாரு முதல்ல.. அதான் உன்னையும் உன் குடும்பத்தையும் எங்க குடும்பத்தோட ஒட்டுமில்லை உறவும் இல்லைன்னு துரத்தி விட்டுட்டோமே. அப்புறம் என்ன அக்கான்னு வந்து உறவு கொண்டாடுற" என அந்த போதையிலும் மீனுவை குத்திக்காட்டி பேசுவதை மறக்காமல் செய்தால் ரியா.

அதைக் கேட்டதும் மீனு அதற்கு மேல் எதுவும் பேசாமல் ரியாவை விட்டு விலகி நிற்க...

"குட் இந்த டிஸ்டன்ஸ்லயே இருக்க பழகிக்கோ” என்ற ரியா அங்கிருந்து செல்லப் போனவள் திரும்பி “ஆமா இது அமெரிக்காவாச்சே!!! உனக்கு இந்த ஊர்ல அதுவும் நாட்டை விட்டு இங்கு வந்து என்ன வேலை இருக்கு. இந்த ஊருக்கு இவ்வளவு செலவு செஞ்சு வர அளவுக்கு உங்க அப்பா காசு சேர்த்து வச்சுட்டானா? " என கேட்டாள் .

மீனு ரியாவிடம் எதுவும் பேசாமல் நின்று இருக்க... மீனுவன் கையை இறுக்கி தன் கையோடு கோர்த்துக் கொண்ட மிருதுளா. “இவ என்னோட பிரண்டு இவளுக்கு இங்க நான் இருக்கேன். அதனால என்ன பார்க்க இங்கே வந்து இருக்கா இதுல உனக்கு என்ன வந்துச்சு” என்றாள் ரியாவிடம் சண்டைக்கு செல்வது போல மிருதுளா பேச.

“ஏய் மிரு… நீ பேசம வா டி… அது தான் நமக்கு இவங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைனு சொல்லிட்டாங்க. இனி அவங்ககிட்ட என்ன பேச வேண்டி இருக்கு வந்த முதல் நாளே கண்டவங்களை எல்லாம் நினைச்சு நம்மல நம்மளை அப்செட் பண்ணிக்க வேண்டாம். நீ வா நம்ம உள்ள போய் பார்ட்டி என்ஜாய் பண்ணலாம்” என்று மீனு ரியாவை ஒரு பொருட்டாகவே கண்டுகொள்ளாமல் மிருதுளா உடன் உள்ளே சென்றாள்.

அவர்கள் இருவரும் தன்னை கேலி பேசிவிட்டு தன்னை மதிக்காமல் சென்றதை ரியாவாள் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

வெளியே செல்ல இருந்த ரியா மீண்டும் அந்த டான்ஸ் பார்ட்டி நடக்கும் இடத்திற்குள் வந்தவள் ட்ரிங்க்ஸ் வழங்கும் இடத்திற்கு பக்கத்தில் அமர்ந்து மீனுவும் மிருதுளாவும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் .

மீனுவும், மிருதளாவும் ரியா மீண்டும் உள்ளே வந்தது தெரியாமல் பார்ட்டியை என்ஜாய் செய்ய ஆரம்பித்தனர்.

உள்ளே வந்ததும் தான் அணிந்திருந்த லெதர் ஜாக்கெட்டை கழட்டி அருகில் இருந்த டேபிளில் வைத்து விட்டு மீனு கையில்லாத வெள்ளை பனியனும் ப்ளூ நிற காட்டன் பாண்டும் அணிந்தபடி பார்ட்டியில் இறங்கி மிருதளாவுடன் ஆட ஆரம்பித்து இருந்தாள்.

நீண்ட நேரம் இருவரும் ஆடி கலைத்து தங்களுக்காக புக் செய்து இருந்த டேபிளில் வந்து அமர்ந்தவர்கள் பேரரை அழைத்து தங்களுக்கு குடிக்க கூல்டிரிங்ஸ் கொண்டு வர சொன்னார்கள்.

பேரரரும் அவர்கள் ஆர்டர் செய்த கூல்ட்ரிங்க்ஸை கொண்டு வந்து அவர்கள் டேபிளில் வைத்துவிட்டு செல்ல மீனு மிருதுளா இருவரும் அங்கே நடனமாடி கொண்டிருந்தவர்களை பார்த்தபடி அந்த ஜூசை குடிக்க ஆரம்பித்தனர்.

அவர்களுக்கு கூல்ட்ரிங்ஸ் வைத்து விட்டு அங்கிருந்து வந்த அந்த பேரர் நேராக ரியா அமர்ந்திருந்த இடத்திற்கு வந்து அவள் கையில் ஒரு கவரை கொடுத்து “மேடம் நீங்க கொடுத்த பொடிய அந்த பொண்ணுங்க குடிச்ச கூல்ட்ரிங்க்ஸ்ல கலந்துட்டேன்” என்று அவளைப் பார்த்து தலையை சொரிந்து கொண்டு கூற.

பர்சிலிருந்து ஒரு கட்டு பணத்தை எடுத்து அவனிடம் கொடுத்தவள் “இந்த விஷயம் வெளியே தெரியாதபடி பார்த்துக்கோ” என்று விட்டு அவர்கள் இருவரும் அந்த ஜூஸ் முழுவதையும் குடித்து முடிக்கிறார்களா என்று பார்த்துவிட்டு…

“ இப்போ வரை என்னடி ஆட்டம் போட்டீங்க இரண்டு பேரும் இனிமேல் நான் கொடுத்த போதை மருந்தோட ஆட்டம் ஆரம்பிக்க போகுது... எங்க ரெண்டு பேரும் உங்கள மறந்தே இப்போ ஆட போறீங்க அதை இங்கு இருக்கிறவங்க எல்லாம் பார்த்து ரசிக்க போறாங்க. உங்க ரெண்டு பேரோட மானமும் போகப்போகுது” என நினைத்த ரியா அவர்கள் இருவரையும் பார்த்து திமிராக சிரித்து விட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டாள் .

ஜூஸை குடித்த சிறிது நேரத்தில் இருவருக்குமே தலை சுற்றுவது போலவும் உடலெல்லாம் சூடாக இருப்பது போலவும் உணர... மிருதுளாவிடம் “என்ன டி திடீர்னு தலையெல்லாம் சுத்துற மாதிரி இருக்கு உடம்பெல்லாம் ஏதோ செய்து” என்றாள் மீனு தன் உடலை எல்லாம் தேய்த்து விட்டுக் கொண்டே.

“என்னன்னு தெரியலடி எனக்கும் அப்படித்தான் இருக்கு வா நம்ம ரெண்டு பேரும் முதல்ல இங்கிருந்து கிளம்பலாம். இனிமேல் இங்க இருக்கிறது சரியில்ல நம்ம உடனே வீட்டுக்கு போகலாம்” என அங்கிருந்து இருவரும் கிளம்பி வெளியே வந்தனர்.

வெளியே வரும்பொழுதே இருவருக்கும் போதை அதிகமாகி உடலெல்லாம் மேலும் சூடேறி விட்டது.

மீனு மிருதளாவிடம் " ஏய் மிரு இந்த நிலைமையில் நம்ம ரெண்டு பேரும் இப்போ உன் வீட்டுக்கு போக வேண்டாம். இங்கே பக்கத்தில் எங்கேயும் ரூம் இருந்தா அங்கே தங்கிட்டு காலையில போய்க்கலாம். இப்போ டிராவல் பண்றது நம்ம ரெண்டு பேருக்குமே சேஃப் இல்ல எனக்கு ஏதோ சரியில்லைனு தோனுது. நம்மளோட இந்த நிலைமையை பார்த்து வேறு யாரும் நம்மள மிஸ் யூஸ் பண்ணிட கூடாது வா.. " என அவள் கைப்பிடித்து அழைத்து அங்கே எதுவும் ஹோட்டல் இருக்கிறதா இருவரும் தங்குவதற்காக என தேடிக்கொண்டே இருவரும் சென்றனர்.

டான்ஸ் பார்ட்டி நடந்த அதே சாலையில் சிறிது தூரம் தள்ளி ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டல் இருக்க இருவரும் யோசிக்காமல் அந்த ஹோட்டலுக்குள் நுழைந்தனர். சாதாரண ஹோட்டலில் தங்கி கொண்டால் தங்களுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்த விடும் என முடிவெடுத்து தான் இந்த பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு வந்தனர்.

உள்ளே வரும் பொழுது இருவரும் தள்ளாடியபடி ரிசப்ஷனிர்ருக்கு வர அங்கே ரிசப்ஷனில் வேலை செய்பவர்கள் இவர்கள் இருவரையும் பார்த்துவிட்டு அதிகமாக குடித்துவிட்டு வந்திருக்கிறார்கள் என முகம் சுளித்தனர்.


மிருதளா நேராக ரிசப்ஷனுக்கு வந்தவள் தன்னுடைய ஐடி கார்டை காட்டி தங்களுக்கு ரூம் புக் செய்தாள்.

அவர்களுக்கு கொடுத்த ரூம்கியை வாங்கிக் கொண்டு இருவரும் லிஃப்ட் ஏறினர்.

அவர்களோடு வேறு சிலர் லிப்டில் ஏற மிருதளாவும் மீனுவும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு தங்களுக்கு கொடுக்கப்பட்டு ரூம் இருந்த தளத்திற்கு சென்றனர்.

மிருதளா புக் செய்தது ஒரு பெரிய ஷூட் ரூம். அங்கே இரண்டு படுக்கை அறைகள் தனித்தனியாக இருந்தது. போதையில் உள்ளே வந்த இருவரும் நேராக சென்று ஒரே பெட்டில் படித்துக் கொண்டனர் .

முதலில் இருவருக்குமே உடல் மிகவும் சூடாக இருப்பதை உணர்ந்திருக்க... மீனு மிருதளாவிடம் “எனக்கு உடம்பெல்லாம் ரொம்ப சூடா இருக்கு நான் போய் குளிச்சிட்டு வரேன். நீ ரூம் சர்வீஸ்க்கு கால் பண்ணி நமக்கு குடிக்க எதுவும் கொண்டு வரச் சொல்லிடு” என்று விட்டு மீனு குளிக்க சென்று விட்டாள்.

மிருதளாவும் ரிசப்ஷனுக்கு ரூமில் இருந்து போனில் அழைத்து தங்கள் இருவருக்கும் குடிப்பதற்காக ஜூஸ் கொண்டுவர சொல்லிவிட்டு ரூமுக்கு வெளியே வைத்துவிட சொல்லி போனை வைத்தவள். கட்டிலில் படுத்து அப்படியே உறங்கிப் போனால்.


இங்கே குளித்துவிட்டு வந்து மீனு வெளியே வர சரியாக அவளுடைய ரூம் காலிங் பெல் அழுத்தும் சத்தம் கேட்டது.

குளித்துவிட்டு ஈர டவளை உடலில் சுற்றிக்கொண்ட மீனு மற்றொரு டவலை எடுத்து தன் மேல் போர்த்தியபடி போதை இன்னும் இறங்காமல் தள்ளாடியபடி தன்னரை கதவை திறந்து வெளியே வந்தாள் .

வெளியே வந்தவள் அங்கே யாரையும் காணோம் என்று யார் இருக்கிறார்கள் என பார்ப்பதற்காக அறையை விட்டு வெளியே வர... அவள் அறைக்கதவு தானாக மூடிகொண்டது . யாரையும் காணோமே என தேடியப்படியே சற்று முன்னாள் நகர…அவள் காலுக்கு கீழே இருந்த ஜூஸை தட்டி விட்டிருந்தாள்.

"அச்சச்சோ ஜூஸ் கொட்டிடுச்சு.." என பாவமாக பார்த்தவள் குனிந்து அந்த ஜூஸ் டம்ளர்களை எடுக்க போக...

அப்போது ஒரு வலிய கரம் அவளைப் பிடித்து இழுத்து அவள் ரூமுக்கு எதிரே இருந்த ரூமிற்குள் தள்ளி கதவை அடைத்து விட்டு சென்றது.

மீனுவுக்கு இருந்த போதையில் தன்னை ரூமுக்குள் இழுத்துச் சென்றது மிருதளா
தான் என்று நினைத்துக் கொண்டாள்.

அவள் இருப்பது தன்னுடைய அறை தான் என்றும் நினைத்துக் கொண்டவள் "மிரு...ஜூஸ் எல்லாம் கொட்டிடுச்சுடி... ரொம்ப தாகமா இருக்கு" என சொல்லிக்கொண்டே அங்கிருந்த பெட்ரூமிற்குள் நுழைந்தாள்.

அப்போது அங்கு டேபிளில் மது பாட்டில் இருக்க… மீனுவிற்கு தாகம் எடுக்கவும் அதை எடுத்து அப்படியே தன் வாயில் கவிழ்த்து முழு பாட்டிலையும் குடித்து முடித்தாள்.

மெல்ல தள்ளாடிப்படி போதை மருந்தின் வீரியத்துடன், மதுவின் போதையும் சேர்ந்து கொள்ள… அவள் இருந்த மெத்தையில் யாரோ படுத்திருக்க அவர்கள் அருகில் வந்து அது யார் என பார்த்தவளுக்கு போதை மயக்கத்தில் கண் மங்கலாக தெரியவும் அங்கே படுத்திருந்தவர் முகம் தெரியவில்லை.

"ஹலோ யார் நீங்க? எங்களோட ரூமுக்குள்ள நீங்க என்ன பண்றீங்க?" என படுத்திருந்தவனின் தோளை தொட்டு திரும்ப...


அவள் திருப்பிய வேகத்தில் மீனுவின் கையைப் பிடித்து தன் அருகே இழுத்த அந்த உருவம் அவளை தனக்கு கீழே கொண்டு வந்து அவளை அழுத்தி கட்டிலில் படுக்க வைத்து மீனு அணிந்திருந்த டவளை வேகமாக அவள் உடலில் இருந்து உதவி தூர வீசியது.

 

Author: layastamilnovel
Article Title: ராட்சசன் 24
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top