Home Uncategorizedஅயோக்கியனின் அரியாசனம் இராக்கதன் PART 2 -25

அயோக்கியனின் அரியாசனம் இராக்கதன் PART 2 -25

by Layas Tamil Novel
97 views

அயோக்கியன் 25

 மதியம் போல ராக்கி ரதிக்கு கால் செய்திருந்தான் .

 ஹலோ என்றாள் சோர்வாக 

 என் குரல் ஒரு மாதிரியா இருக்கு எதுவும் சாப்பிடலையா என்றான்.

சாப்பிட்டேன், நானும் ஓவியாவும் பிரக்னண்டா இருக்கு நான் இருக்கோன்னு அம்மா கம்பல் பண்ணி இங்க ரெண்டு பேரையும் சாப்பிட வச்சாங்க என்றாள் 

 அப்புறம் ஏன் குரல் இவ்வளவு டல்லா இருக்கு மாளவிகா எதுவும் சொன்னாளா என்றான் ராக்கி 

ம்ம்ம்… ஆமா அவளுக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமே இல்ல போல நாம தான் சரியா விசாரிக்காம கல்யாணம் பண்ணி வச்சுட்டோன்னு எனக்கு தோணுது என்றாள் 

 அவகிட்ட கேட்டு அவ சம்மதம் வாங்கின பிறகு தானே கல்யாண ஏற்பாடு நடந்தது இப்ப என்ன இப்படி சொல்ற அவ என்ன சொன்னா என்றான்.

அவன ஆரம்பத்துல இருந்து அவளுக்கு பிடிக்கலையாம். அத்தைக்கு அப்பா கொடுத்த வாக்குக்காக தான் வேற வழி இல்லாம உன்ன கல்யாணம் செய்துக்கிட்டேன். கல்யாணம் பண்ணினதுக்கு அப்புறம் அவன் கூட மனசு மாறி வாழலாம்னு தான் நினைச்சாளா…  ஆனா அவளுக்கு அவன் கூட இருக்கவே பிடிக்கலன்னு சொன்னா என்றாள்.

 சரி ஏன் அவன பிடிக்கல என்ன காரணம் அது ஏதும் சொன்னாளா என்றான் ராக்கி 

ம்ம்.. சொன்னா அவன் கேரக்டர சரியில்லன்னு சொல்றா மாலு. ஊர்ல நிரைய பொண்ணுங்க கூட ஜீவன் பழக்கம் வச்சிருந்து இருக்கான்.  அம்மா கூட ஒரு நாலஞ்சு வருஷத்துக்கு முன்னாடி லீவுக்கு அத்தையை பார்க்க ஊருக்கு போயிருந்தா . மாலு அங்க போயிருந்தப்ப அவகிட்ட கூட ஜீவன் ஏதோ தப்பா நடந்துக்க பார்த்ததா சொல்றா.  இதெல்லாம் கேட்டா எனக்கு என்ன பண்றதுன்னு புரியல ராக்கி.  ஒரே குழப்பமா இருக்கு அவ சொல்றத நம்பறதா? வேண்டாமா?  எதுவுமே புரியல   என்றாள்.

 நிஜமாகவே ஜீவன் அப்படிப்பட்ட ஆள் தானா நீ என்ன சொல்ற என்றான் ராக்கி.

எனக்கு தெரிஞ்ச வரை ஜீவன் முன்ன ஊதாரி பொறுப்பில்லாமல் ஊர் சுத்துறவன் அப்படித்தானே ஒழிய இந்த மாதிரி பொண்ணுங்க விஷயத்துல தப்பாவோ மாளவிகாகிட்ட தப்பா நடந்து இருக்க  வாய்ப்பில்லைன்னு தான் தோணுது. மாலு எதுவும் தப்பா புரிஞ்சுக்கிட்டாளோ.. அதுவும் அவகிட்ட எனக்கு சரியா கேட்க முடியல.  இந்த நேரத்துல நான் போய் கேட்டு என்ன நம்பலையான்னு ஏதாவது கேட்டாள்னா என்ன பண்றதுன்னு கொஞ்சம் யோசனையா இருக்கு” என்றாள்.

ம்ம்ம்… நீ சொல்றதும் சரிதான் எதுவும் நாம கேட்கப் போய் அவ மனசு கஷ்டப்படக்கூடாது இதை பொறுமையா தான் டீல் பண்ணனும் என்றவன்.  ஒரு ரெண்டு நாள் அவளை ஃப்ரீயா விடுவோம் அதுக்கப்புறம் எதுனாலும் பேசி காம்ப்ரமைஸ் பண்ணலாம் என்றான்.

ம்ம்ம்… சரி என்றாள் ரதி.

ஈவினிங் நான் வரவா உன்ன கூட்டிட்டு போக..  இல்ல மாளவிகா கூட ஒரு ரெண்டு நாள் இருந்துட்டு வரியா என்றான் ராக்கி.

இல்ல நான் வீட்டுக்கு வரேன் ஈவினிங் நீ வா நீயும் வந்து கொஞ்சம் மாளவிகாகிட்ட பேசு அதுக்கப்புறம் போலாம் என்றாள்.

சரி ஈவினிங் வரேன் என்று போனை கட் செய்தவன். அப்படியே சேரில் சாய்ந்து தலைக்கு கை கொடுத்தபடி அமர்ந்து விட்டான்.

இவ்வளவு நேரம் ரதி சொன்னதை அப்போதுதான் கேட்பவன் போல நடித்திருந்தான் ராக்கி. ஆனால் அவனுக்கு முன்னமே மாளவிகாவின் பிரச்சனை தெரியும்.

 அவள் கோவாவில் இருக்கும்போது அடிக்கடி அவளுடன் அழைத்து பேசுவான் ராக்கி. அவள் எப்படி இருக்கிறாள் சந்தோசமாக இருக்கிறாளா என்று அவன் கேட்பது வழக்கம். அப்படி ஒரு நாள் ராக்கி பேசிய போது தான் ஏற்கனவே ஜீவனுடன் சண்டையிட்டு இருக்க.. மனம் நொந்து போயிருந்த மாளவிகா ராக்கி அழைத்ததும் தன் மனதில் இருந்த பாரத்தை கொட்டி இருந்தாள். அவளை சமாதானம் செய்தவன் ஜீவனிடம் இது பற்றிப் பேசுவதாக கூறியும் இருந்தான்.

ஹனிமூன் சென்று வந்த பிறகு ஜீவனிடம் பேசலாம் என்று தான் இருந்தான். இங்கு நடந்த பிரச்சனையில் அதை மறந்திருக்க.. மாளவிகா நேற்று ராக்கிக்கு போன் செய்து சென்னை கிளம்பி வருவதாக சொல்லவும் அப்போதே அவனுக்கு புரிந்துவிட்டது. ஏதோ பிரச்சனை என்று.

இப்பொது என்ன செய்வது என்று தான் அவனுக்கி யோசனையாக இருக்க.. மொபைலை எடுத்து அவன் அடுத்து அழைத்தது என்னவோ ஜீவனுக்கு தான்.

மாளவிகா சென்றதில் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தான் ஜீவன். ராக்கி அழைத்ததும் எடுத்து காதில் வைத்தவன் சொல்லுங்க சகல என்றான் சுரத்தில்லாமல்.

என்ன ஆச்சு ஜீவா மாளவிகா கோவிச்சுட்டு வர அளவுக்கு ரெண்டு பேருக்கும் அப்படி என்ன தான் பிரச்சனை என்றான் ராக்கி.

சகல நான் முன்னாடி போக்கிரித்தனமா, பொறுப்பில்லாம இருந்தது உண்மைதான். ஆனா நான் மொத்தமா மாறி ரொம்ப நாள் ஆச்சு சகல.. சொல்லப்போனால் அவளை கல்யாணம் பண்ணிக்கனுங்கற ஆசையில தான் நான் இந்த போக்கிரி தனத்தை எல்லாம் விட்டுட்டு பொறுப்பா மாறினேன். மாமா சொன்ன ஒரே காரணத்துக்காக கஷ்டப்பட்டு படிச்சு இந்த பதவிக்கும் வந்துட்டேன். இதுக்கு மேல நான் எப்படி என்ன ப்ரூப் பண்றதுன்னு தெரியல. என்றவன்  சற்று நிறுத்தி தன்னை அசுவாசப்படுத்தியவன்.

கல்யாணத்துக்கு முன்னாடி என் மேல அவ கோவமா இருந்தா தான் போகப் போக எல்லாம் சரியாகும்னு நினைச்சேன். ஆனா அவ கொஞ்சம் கூட இறங்கி வரதா தெரியல அவ மனசு மாறும்னு நம்பிக்கையும் எனக்கு இல்ல. அதான் ஊருக்கு கிளம்புறேன்னு அவ வந்து நின்னதும் அவளை தடுக்க கூட தோணாம போகட்டும்னு விட்டுட்டேன் இதுக்கு மேல என்னால பொறுமையா இருக்க முடியாது  சகல நடக்கிறது நடக்கட்டும் என்றான் விரக்தியாக.

அவன் சொல்வதை முழுவதுமாக கேட்ட ராக்கி இருவருக்கும் இடையில் சரியான புரிதல் இல்லை என்று மட்டும் தோன்றியது அவனுக்கு. உட்கார்ந்து பேசினாலே சரியாகிவிடும் என்று தான் நினைத்தான்.

சரி ஜீவா… ஒரு வாரம் போகட்டும் நானே மாளவிகாகிட்டே பேசி சமாதானம் பண்ணி அவளை ஊருக்கு அனுப்பி வெக்குறேன் என்றான் ராக்கி.

எனக்கு அந்த நம்பிக்கை இல்ல சகல.. அவ இறங்கி வர மாட்டா யார் சொல்லியும் கேட்கவும் போறதில்ல.. அவளுக்கு என்ன வேணுமோ அதை பண்ணட்டும் நான் குறுக்க நிக்கல என்று போனை வைத்திருந்தான்.

யோசனையோடு அமர்ந்த ராக்கி மாளவிகாவிடம் இது பற்றி பேசவேண்டும் என்று முடிவெடுத்திருந்தான்.

இங்கே கட்சி வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்க்கு வந்த வேலு குளித்துவிட்டு வந்தவன் சிவராஜனுடன் கட்சி விஷயங்களை. பேசிக்கோண்டிருந்தான்.

திகழ், ஹரிணி, பாக்கியம், செல்வி எல்லோரும் மாலை ஷாப்பிங் சென்றுவிட்டு வீட்டிற்கு வர..

ஹாலில் இருந்தவர்களைப் பார்த்த திகழ் என்னப்பா டாக்டர் உங்களை ரெஸ்ட் எடுக்க சொன்னா நீங்க இங்கேயும் கட்சி, வேலைன்னு பிசியாவே இருக்கீங்களே.. கொஞ்சமாவது ரிலாக்ஸா இருக்க வேண்டியதுதானே என்றாள் திகழினி.

சும்மா வீட்டிலேயே எவ்வளவு நேரம் தான் இருக்கிறது மா..  கட்சி ஆபிசுக்கும் போக வேண்டாம்னு உன் அம்மாவும் நீயும் ஸ்ட்ரிக்டா சொல்லிட்டீங்க. ஏதோ கொஞ்ச நேரம் வேலுகிட்ட கட்சி விஷயங்களை பேசிட்டு  இருக்கேன் அதுவும் கூடாதுனா எப்படி என்றார்.

 அதுக்குத்தான் இவங்க ரெண்டு பேருக்கும் பொறுப்பு கொடுத்து கட்சியை பார்த்துக்க சொல்லிட்டீங்கல்ல இனிமேல் நீங்க கட்சி விஷயமா பேசுறேன் அதை பண்றேன் இதை பண்றேன்னு எதுவுமே செய்யக்கூடாது ரிலாக்ஸா இருங்க என்ற வாழ்விடம் உங்க அப்பா தான் கூப்பிட்டு வச்சு பேசுறாருன்னா நீயும் அவருக்கு டென்ஷன் கொடுத்து இருக்கேன் என்றால் இடுப்பில் கையை வைத்துக் கொண்டு 

 அவளை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்துவிட்டு முறைத்தவன் காலையிலிருந்து ஐயா வீட்டிலேயே தான் இருக்கிறார் வெளியிலும் போக கூடாதுன்னு சொல்லிட்டேன் எப்பவும் கட்சி வேலைன்னு பிசியா இருக்கிறவர் ஒரே இடத்தில இருக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கும் அதனால தான் அவர் கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் இருக்கட்டும் என அவருக்கு புடிச்ச விஷயங்களை அவர் கிட்ட நான் பேசிட்டு இருக்கேன் எனக்கு என்ன செய்யணும்னு தெரியும் என்றான் 

 உனக்கு தான் எல்லாம் தெளிவா போய் எங்களுக்கு எதுவும் தெரியாது நீ சொல்றியா நீ என்று மேலும் அவள் நெஞ்ச நிமித்துக்கொண்டு அவனை..

 அவனும் அவள் அனுமதி இருந்த நெஞ்சத்தை ஒரு மார்க்கமாக பார்த்துவிட்டு ஆமா எனக்கு எல்லாம் தெரியும் என்றான் குதர்க்கமாக 

 அவன அப்படிச் சொன்னதன் அர்த்தம் ஏனோ புரிந்தது போல இருக்க அவன் பார்வை சென்ற இடத்தையும் கவனித்தவள் சட்டுன வேறு பக்கம் திரும்பிக் கொண்டு  சிவராஜனை பார்த்து உங்களுக்கு தகுந்த மாதிரி தான் இருக்கான் என்னமோ பண்ணுங்க என்றாள் கோபமாக.

 ஏய் உனக்கு கல்யாணம் ஆயிடுச்சு அவரு உனக்கு புருஷன். கொஞ்சம் கூட மரியாதையை இல்லாம நீ வா போ அவன் இவன்னு பேசுற ஒழுங்கா மரியாதை கொடுத்து பேசுடி என்றார் செல்வி 

அம்மா எனக்கு எப்படி பேச வருமோ நான் அப்படித்தான் பேசுவேன் என்றவள் வேலுவை ஒரு பார்வை பார்த்துவிட்டு அறைக்கு சென்றுவிட.

அவனும் அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தான்.

இதை கவனித்த மற்றவர்கள் அவரவர் வேலையை பார்க்க சென்றுவிட.. 

வேலு இன்னமும் திகழ் சென்ற திசையையே பார்த்துக்கொண்டிருக்க.. அவன் அருகில் வந்த ஹரிணி ம்க்கும்.. என்று தன் குரலை செருமிநாள்.

அவளை திரும்பி பார்த்து என்ன என்றான்.

அண்ணியையே பாத்துட்டு இருக்க இங்க நானும் இருக்கேன் அண்ணா என்று சிரித்தவள் அவன் அருகில் வந்து அமர்ந்தாள்.

அவனும் சிரித்துவிட்டு சொல்லு டி என்ன பேசணும் உன்கிட்டே என்றான்.

அண்ணா எனக்கு காலேஜ்க்கு நெக்ஸ்ட்டு வீக் பீஸ் கட்டணும். அதான் உன்கிட்டே கேட்கலாம்னு என்றாள்.

எனக்கு நியாபகம் இருக்கு ஹரிணி நான் கட்டிடறேன் என்றவன். ஆமா அப்பா எங்க வந்ததில் இருந்து அவர் கண்ணுலயே படலையே என்றான்.

அப்பாவுக்கு இங்க இருந்து என்ன பண்றதுனு தெரியல அப்படியே அவர் பிரெண்ட்ஸ் எல்லாம் பாத்துட்டு வரேன்னு போனார் அண்ணா என்றவள் நாளைக்கு எனக்கு டெஸ்ட் இருக்கு நான் போய் பிரிப்பேர் பண்றேன் என்று எழுந்து சென்றுவிட்டாள்.

சிறிது நேரம் ஹாலில் அமர்ந்து கட்சி கணக்கு வழக்குகளை பார்த்தவன் இரவு உணவை முடித்து விட்டுத் தான் மேலே அறைக்கு சென்றான்.

அவன் உள்ளே வரவும் திகழ் குளித்துவிட்டு குட்டை ஷார்ட்ஸ்யும், கை இல்லா மெல்லிய பனியனையும் அணிந்து இருந்தவள் கண்ணாடி முன் அமர்ந்து பாடி லோஷன் போட்டுக் கொண்டிருந்தாள் 

அவளை கண்டும் காணாமல் கதவை சாற்றிவிட்டு வந்தவன். நேராக அவள் வைத்திருக்கும் புஸ்தக அலமாரிக்கு வந்தவன் அதில் இருந்த புக் ஒன்றை எடுத்து வந்தவன் அங்கே இருந்த சாய்வு இருக்கையில் அமர்ந்து புத்தகத்தை புரட்ட ஆரம்பித்திருந்தான்.

அதை எல்லாம் கண்ணாடி வழியே பார்த்த திகழ்.

ஏய் பிஏ உன்னைத்தான் என்னோட புக்ஸ் எடுக்கக் கூடாதுனு சொன்னேன்ல.. இப்போ எதுக்கு அதை எடுக்குற கொடு என்று எழுந்து வந்து அவன் கையில் இருந்த புக்கை பிடுங்கப் போக..

அவள் கையைப் பிடித்து சட்டென தன் கை வளைவிற்குள் கொண்டு வந்து அவளை இழுத்து மடியில் அமர வைத்தவன். 

ஏன் உன்னோடதை நான் யூஸ் பண்ண கூடாதா என்றான். ஒரு மார்க்கமாக.

என்ன இவன் முழியே சரி இல்லையே என்று நினைத்தவள். டேய் பியே எவ்ளோ தைரியம் இருந்தா என்னை கட்டிப்பிடிப்ப.. என்று அவன் மடியில் இருந்து எழப்போனவளை இழுத்து மீண்டும் மாடியில் அமர்த்திக் கொண்டவன்.

உன்னோட புக்ஸ் எல்லாமே ரொமான்டிக்கா.. 18+ கு மேல தான் இருக்கு. அப்போ உனக்கு அதுல ரொம்ப இண்டெர்ஸ்ட் ரொம்ப அதிகமா இருக்கணுமே… என்றான்.

ஆமா அதுக்கு என்னை இப்போ என்றாள் அவனிடம் இருந்து திமிறிக்கொண்டே..

அப்பறோம் ஏன் உன் புருஷனை டிவெர்ஸ் பண்ணின.. அவன்கூட சந்தோஸ்மா இருந்திருக்க வேண்டியது தானே… என்று அவளை கடுப்படித்தான் 

அந்த ராஸ்களை பத்தி நீ ஏன் டா பேசுற.. என்றவள் அவனை பத்தி பேசி என்னை டென்ஷன் பண்ணாத என்றவள் அவன் மார்பில் கை வைத்து அவனிடம் இருந்து எழுந்தாள்.

ஏன் உன்னோட எக்ஸ்பெக்ட்டேசனுக்கு அவன் பொருந்திப் போகலையா? என்றான்.

அவனை நின்று அழுத்தமாகப் பார்த்தவள். அவனுக்கு பெட்ல நான் மட்டும் பத்தாதுன்னு என் முன்னாடியே வேற ஒருத்திய கூப்டு வந்து ஒன்னா இருந்தான். அதான் போடான்னு டிவெர்ஸ் பண்ணிட்டேன் அவனை.. நீயும் வேணும்னா சொல்லு உனக்கும் டிவெர்ஸ் கொடுத்துறேன். எனக்கு எந்த பிரச்னையும் இல்ல.. இது எனக்கு புதுசும் இல்லையே என்று விரக்தியாகப் பேசினாள்.

அவள் சொன்னதில் வேலுவிற்கே அவள் நிலை புரிந்து வலித்தது. வேகமாக அவளிடம் வந்தவன். டிவெர்ஸ் எல்லாம் எனக்கு வேணாம் நீ தான் வேணும் தரியா என்று அவள் கண்ணங்களை தன் கரத்தில் ஏந்தி இருந்தான்.

அதில் அதிர்ந்தவள் விழி விரித்து அவனை பார்த்துவிட்டு விலகியவள். ஏய் பியே இப்படி வந்து என்கிட்டே பேசுற வேலை வேணாம். ஒழுங்கா போய்ட்டு என்று தடுமாறினால் அவள் .

ஏய்ய் போர்ஜெரி இப்போ எதுக்கு பதட்டப்பட்ற.. அதான் நீயும் நானும் கல்யாணம் செய்துடோமே.. அப்பறோம் இதெல்லாமம் நமக்குள்ள சகஜம் தானே என்றான் 

அவளோ கல்யாணம் செய்துகிட்டா இதெல்லாம் பண்ணனும்ன்னுய் அவசியமில்லை என்று சொல்லிவிட்டு சென்றவள் போர்த்திக்கொண்டு உறங்கி விட…

அவனும் அவள் தடுமாறுவதை கண்டு ரசித்து சிரித்த படி அவள் அருகில் படுத்துவிட்டான்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured