Home Uncategorizedஅஸ்க்..லஸ்கா..காதல் 38

அஸ்க்..லஸ்கா..காதல் 38

by Layas Tamil Novel
312 views

EPISODE-38

தமிழை உடனே கிளம்பி அவன் தனி பங்களாவிற்கு வரச் சொன்னது ஏற்கனவே தமிம் ஆதித்யாவும் முடிவு செய்ததுதான்.

தீபா தமிழ்வுக்கு உணவு கொண்டு வருகையில், மாடியில் இருந்த அவள் அறையில் இருந்து தீபாவுக்குத் தெரியாமல் பார்த்துவிட்டுத்தான் ஆதித்யாவுக்கு தமிழ் மெசேஜ் அனுப்பி இருந்தான்.

ஆதித்யாவும் தமிழ் மெசேஜ் அனுப்பிய அரை மணி நேரத்தில் ஏற்கனவே பேசி வைத்தது போல தமிழுக்கும் கால் செய்து அவனை அங்கிருந்து கிளம்ப வைத்தார்.

தீபா வீட்டில் இருந்து கிளம்பிய தமிழ் நேராக தன்னுடைய வீட்டிற்குத்தான் சென்றான்.

இங்கே வாசலில் காரை நிறுத்திவிட்டு அதிலிருந்து இறங்கி தமிழ் தன்னிச்சையாக கார்டன் பக்கம் தன் பார்வையைத் திருப்ப…

இலக்கியா முதன்முதலாக இவன் வீட்டிற்கு வரும் பொழுது இங்கு நின்றுதான் செடிகளை ரசித்துக் கொண்டிருந்தாள். அது தமிழின் நினைவிற்கு வந்தது.

ஏனோ அவனுக்கு இப்போதே இலக்கியாவைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது.

அப்படித் தோன்றிய மறுநொடி பார்ட்டியில் தீபாவிடம் இலக்கியா நடந்து கொண்டதாக தீபா கூறியதெல்லாம் தமிழின் மனக்கண்ணுக்குள் தோன்றி மறைந்தது.

மாத்திரையின் வீரியம் தன் வேலையைக் காட்டத் தொடங்கி இருக்க, தமிழின் உடல் மிகவும் சூடாக மாற ஆரம்பித்தது.

“இப்போதைக்கு இந்தப் பிரச்சினையை முதலில் பார்ப்போம், அதன் பிறகு இலக்கியாவிடம் தீபா சொன்னது பற்றிக் கேட்டுக்கொள்ளலாம்” என்று நினைத்த தமிழ் தன் வீட்டுக்குள் நுழைய…

அவனுக்காக ஏற்கனவே அங்கே காத்திருந்த ஆதித்யா தமிழ் வந்ததும் அவன் சட்டையைக் கழட்டச் சொல்லிவிட்டு அவனைப் படுக்கை அறைக்கு அழைத்துச் சென்றவன்.

தமிழுக்கு எடுத்துக் கொண்டிருந்த மருந்தின் வீரியத்தைப் பரிசோதிக்க இரத்த மாதிரியை எடுத்தவன், அவனை சிறிது நேரம் ரிலாக்ஸாக ஓய்வெடுக்கச் சொன்னான்.

தமிழின் உடலில் இருந்து எடுத்த இரத்த மாதிரியை இங்கேயே பரிசோதிப்பதற்காக அனைத்துக் கருவிகளையும் ஏற்கனவே இங்கே வரவழைத்துவிட்டுத்தான் தமிழ் தீபாவின் வீட்டிற்கு கிளம்பி இருந்தான்.

ஆதித்யா அவனை ரிலாக்ஸாக இருக்கச் சொன்ன போதிலும், தமிழ்னால் தன்னுடைய உடலில் எழுந்த உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

அவன் எவ்வளவோ முயன்றும் தமிழ்னால் எதுவுமே செய்ய முடியவில்லை.

தமிழ் தன் உணர்வுகளோடு போராடிக் கொண்டபடி படுக்கையில் படுத்து இருக்க, சிறிது நேரத்தில் அவனுடைய இரத்த மாதிரியைச் சோதித்த ரிசல்ட் வந்துவிட, அதை எடுத்துக்கொண்டு வந்தான் ஆதித்யா.

தமிழ் தன் உணர்வுகளை அடக்க மிகவும் போராடிக் கொண்டிருப்பதை கவனித்த ஆதித்யா.

“நீ சிரமப்படுறது எனக்குப் புரியுது தமிழ். நீ இன்னைக்குச் சாப்பிட்ட உணவுகளிலும், உன்னுடைய இரத்த மாதிரியிலும் ஏற்கனவே உனக்கு டெஸ்ட் பண்ணின அதே மருந்தோட விளைவுகள் தான் வந்திருக்கு” என்றான் ஆதித்யா.

“வாட்? என்ன சொல்ற ஆதித்யா? அப்போ நீ சொன்னது போல நான் சாப்பிட்ட சாப்பாட்டில் தான் அந்த மருந்து கலந்து இருக்கு? அதுவும் தீபா வீட்ல சாப்பிட்ட உணவுல தான் கலந்து இருக்கு அப்படித்தானே சொல்ற?” என்றான்.

“ஆமாம்” என்று ஆதித்யா தலையாட்ட…

“ஒரு நிமிஷம் இரு” என்று சொன்னவன் தன்னுடைய மொபைலை எடுத்து, அதில் அவனுடன் அவனுடைய வீட்டில் வேலை செய்யும் தலைமைப் பெண்மணிக்கு கால் செய்தான்.

அந்தப் பெண்ணிற்கு முழுவதுமாக ரிங் போய் கட்டானதே ஒழிய அவள் ஃபோன் எடுத்துப் பாடாக இல்லை.

“ச்சே….இந்த பொண்ணு ஏன் ஃபோனே எடுக்க மாட்டேங்குது?” என்று கடுப்பில் தமிழ் கட்டிலில் இருந்து எழுந்தவன், இங்கேயும் அங்கேயும் அறைக்குள் அலைந்து திரிந்து கொண்டிருந்தான்.

அவனை அப்படிப் பார்க்க ஆதித்யாவுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

“தமிழ், கொஞ்ச நேரம் நீ ரிலாக்ஸா படுத்துடு, நான் உனக்கு இன்ஜெக்ஷன் பண்றேன். கொஞ்சம் கொஞ்சமாக உன்னுடைய வீரியம் குறையும். அதுவரை கொஞ்சம் பொறுத்துக்கோ” என்றான்.

“ஏதாவது செய்து இதை முதல்ல சரி பண்ணு, என்னால் முடியவில்லை” என்றான் தமிழ்.

“சரி” என்று விட்டு தமிழைப் படுக்கச் சொன்னவன், அவனுக்கு இன்ஜெக்ஷன் போட்டுவிட்டு தமிழ் தூங்குவதற்கும் மருந்து கொடுத்துவிட்ட ஆதித்யா.

“நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோ தமிழ். போன தடவை சாப்பிட்ட மருந்தோட வீரியம் எதுவோ அதுதான் இந்த தடவை சாப்பிட்ட மருந்தோட வீரியமும். ஆனால் போன தடவை கூட நீ கொஞ்சம் கண்ட்ரோலா இருந்த. இந்த தடவை உன்னால முடியல.

நான் சொல்லித்தான் தெரியணும் இல்ல, உனக்கே உன் உடம்புல ஏற்படுற மாறுதல் பத்தி உனக்குத் தெரிந்திருக்கும்.

அதனால நீ இந்த ரூமை விட்டு வெளியே எங்கேயும் போகாத. கொஞ்சம் கண்ட்ரோலா இருக்க ட்ரை பண்ணு… வெளியே எங்கும் போயிடாத, அப்புறம் விபரீதம் உனக்குத்தான்” என்று நக்கல் செய்ய…

“ஏன், ஏற்கனவே கடுப்புல இருக்க நான், நீ திருப்பி இவனை நக்கல் செய்யவும் டேய்” என அவனை அடித்துச் செல்ல….

“சரி சரி, நான் பக்கத்து அறையில்தான் இருப்பேன். எதுனாலும் உன்னால முடியல, ரொம்பச் சத்தமா இருக்கு அப்படின்னா உடனே நீ எனக்கு கால் பண்ணு, நான் வந்து பார்க்கிறேன்” என்று சொன்னவன்.

தமிழின் இடுப்புக்குக் கீழே பார்த்து, “பாவம் டா நீ” என்று மீண்டும் நக்கல் செய்ய…

“முதல்ல இங்கிருந்து வெளியே போடா..” என்று தமிழ் கடுப்பில் கத்த…

“இதோ நான் இப்போ கிளம்பிட்டேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து ஆதித்யா ஓடிவிட்டான்.


நள்ளிரவைக் கடந்திருக்கும் தமிழுக்கு ஆதித்யா போட்ட மருந்துகள் எதுவுமே வேலை காட்டவில்லை.

எப்படியாவது தன் உடல் சூட்டைத் தணித்துக் கொள்ளலாம் என்று நினைத்தவனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை, தூக்கமும் வரவில்லை.

நேராக எழுந்து பாத்ரூமிற்குச் சென்றவன் தன் ஆடைகளைக் கிழித்தெறிந்து விட்டு ஷவரை திறந்து கொண்டு சில்லென்ற தண்ணீரில் நின்றான்.

தமிழின் உடல் முழுவதும் சில்லென்று நீரில் நனைய…

கொஞ்சம் கொஞ்சமாக அவனது உடல் சூடு தனிவது போல தமிழுக்குத் தோன்றியது.

நீண்ட நேரம் சில்லென்ற தண்ணீரில் ஷவருக்கடியில் நின்று குளித்த தமிழுக்கு உடல் குளிர்வது போலத் தோன்ற, ஷவரை ஆஃப் செய்துவிட்டு இடுப்பில் கெட்டியான துண்டைக் கட்டிக் கொண்டு பாத்ரூம் கதவைத் திறந்து வெளியே வர…

அப்போது சரியாக தமிழின் ஃபோன் அடித்தது. “இந்த நேரத்தில் யார் தனக்கு அழைக்கிறார்கள்?” என்று யோசனையோடு தமிழ் ஃபோனை எடுக்க…

ஆதித்யாதான் தமிழுக்கு அழைத்திருந்தான்.

காலை அட்டென்ட் செய்து ஃபோனைக் காதில் வைக்க, “ஹலோ தமிழ், இப்போ எப்படி இருக்கு உனக்கு? ஓகேவா?” என்றான்.

“ம்ம்ம்ம்…. கொஞ்சம் பரவாயில்லை, நான் கொஞ்சம் ரிலாக்ஸாத்தான் இருக்கேன்” என்று தமிழ் சொல்ல…

“அப்பாடா….”என்று பெருமூச்சு விட்ட ஆதித்யா, “சரி தமிழ், எனக்கு ஹாஸ்பிடல்ல ஒரு எமர்ஜென்சி கேஸ் வந்திருக்குன்னு ஹாஸ்பிடல்ல இருந்து கால் பண்ணி இருக்காங்க. நான் அவசரமாகப் போகணும். வர எவ்வளவு நேரம் ஆகும்னு தெரியல. நீ வேற தனியா இங்கே இருக்க. நான் இல்லாம சமாளிச்சுக்குவியா?” என்று கேட்டான் ஆதித்யா.

“ஒரு பிரச்சனையும் இல்ல ஆதித்யா, நான் ஃப்ரீயாத்தான் இருக்கேன். நீ போயிட்டு வா, முதல்ல ஹாஸ்பிடல்ல பாரு. அப்படி எதுவும் விபரீதம்னா நான் உனக்கு உடனே கால் பண்றேன்” என்று விட்டு தமிழ் போனை வைக்க…

எதற்கும் இருக்கட்டும் என்று ஆதித்யா வினித்திற்கு கால் செய்தவன், தமிழின் நிலை பற்றி விபரம் சொல்லிவிட்டு, அவனுக்குத் துணையாக இருக்க இங்கே வரும்படி சொல்லியவன் அங்கிருந்து கிளம்பினான்.


தமிழின் தம்பி நள்ளிரவு மாடலிங் ஷூட்டிங் இருந்ததால், அந்த ஷூட்டிங் முடியும் வரை தன்னுடைய ஆட்களுடன் வேலை பார்த்துவிட்டு அப்போதுதான் ஓய்வு எடுக்கலாம் என்று அவன் அறைக்குச் சென்றான் ராஜு.

அவன் அறைக்கு வரவும், ராஜுவின் மொபைலில் மெசேஜ் வரவும் சரியாக இருந்தது.

அறைக்குள் வந்தவன் தன் மொபைலை ஆன் செய்து மெசேஜைப் பார்க்கலாம் என்று ஓபன் செய்யப் போக…

அப்போது சரியாக நமது ஃபோன் அடித்தது. திரையில் தெரிந்த பெயரைப் பார்த்ததும் சந்தோஷமான ராஜு காலை அட்டென்ட் செய்து, “சொல்லு யாழினி என்ன இந்த நேரத்துல கால் பண்ணி இருக்க…

உனக்கு என்னோட ஞாபகம் இத்தனை நாளுக்குப் பிறகு இப்போதுதான் வந்துச்சா? ஏன் என்கிட்ட ஒரு முறை கூட நீ பேசவே இல்லை?” என்று ராஜு பாட்டிற்குப் பேசிக் கொண்டே போக…

“ஸ்டாப் தி பிளடி நான்சென்ஸ் ராஜு” என்று மறுமுனையில் இருந்து அந்தப் பெண்ணின் குரல் சத்தமாக ஒலிக்கவும், இவ்வளவு நேரம் சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருந்தவனின் முகம் இறுக்கமாக மாறியது.

“ராஜு ஏன் யாழினி இவ்வளவு கோவமா இருக்க…. என்ன ஆச்சு? ஏன் இந்த நேரத்துல எனக்குக் கால் பண்ணின?” என்று ராஜு கேட்க…

“முதல்ல என்னோட பேரு முழுசா கூப்பிட்ட பிறகு இப்படிச் செல்லப் பேர் வச்சு கூப்பிடுற அளவுக்கு நீ இன்னும் எனக்கு உரிமையானவன் கிடையாது” என்று அந்தப் பக்கம் இருந்த பெண் கோபமாகப் பேச…

“சரி யாழினி, நான் உன்னோட பேரை முழுசாவே சொல்லி கூப்பிடுறேன். இப்போ எதுக்கு எனக்குக் கால் பண்ணின…. இப்படிச் சண்டை போடத்தான் இந்த நேரத்துல எனக்கு நீ கால் பண்ணி இருக்கேன்னா பேசாம எனக்குக் கால் பண்ணாமலே இருந்திருக்கலாம்.

நான் எவ்வளவு ஆசையா சந்தோசமா உன்கிட்ட பேசுறேன். ஆனா நீ என்கிட்ட ஏன் இவ்வளவு கோபமா பேசுற?” என்றான்.

“நீ செய்த காரியத்துக்கு நான் உன்கிட்ட பேசவே கூடாது, உன் முகத்தில் முழிக்கவே கூடாது என்று நினைத்திருந்தேன்.

ஆனா அந்த விதி மறுபடியும் என்ன உன்கிட்ட பேச வச்சிருச்சு…” என்றால்.

“நீ என்ன சொல்ற யாழினி எனக்கு எதுவுமே புரியல” என்று ராஜு சொல்ல…

“உன் ஃபோன்ல வந்து இருக்கிற மெசேஜை பாரு” என்றாள்.

“ஒரு நிமிஷம்” என்றவன் தன் ஃபோனை அன்லாக் செய்து தற்போது வந்திருந்த மெசேஜை ஓபன் செய்ய, அதில் யாழினியும் ராஜுவும் ஆடை இல்லாமல் ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு ஒரே போர்வைக்குள் படுத்திருப்பது போல ஃபோட்டோ இருந்தது.

அதைப் பார்த்ததும் அதிர்ச்சியான ராஜு ஃபோனைக் காதில் வைத்து, “யாழினி என்ன இது? யார் இப்படி ஒரு ஃபோட்டோவை எனக்கு அனுப்பியது?” என்று கேட்டான்.

“என்னைக் கேட்டால் எனக்கு எப்படித் தெரியும்? உனக்கு எந்த நம்பரிலிருந்து அந்த ஃபோட்டோ வந்துச்சோ அதே நம்பரில் இருந்துதான் எனக்கும் வந்துச்சு” என்றால் யாழினி.

“அப்போ உனக்கும் இந்த ஃபோட்டோவை அனுப்பினது யாருன்னு தெரியாதா?” என்றான் ராஜு.

“எனக்கு எப்படித் தெரியும்? இந்த ஃபோட்டோவை எனக்கு அனுப்பினவன்தான் உனக்கும் இதை அனுப்பி இருக்கிறதா எனக்கு மெசேஜ் பண்ணி இருந்தான்.

அவனுக்குக் கால் பண்ணினா அந்த நம்பர் லைன் போகவே மாட்டேங்குது.

அதனாலதான் நான் உனக்குக் கால் பண்ணினேன். உன்னை நம்பி ஃப்ரெண்டா பழகுனதுக்கு ஏற்கனவே நீ எனக்கு செஞ்ச துரோகம் போதாதா…. இப்போ இந்த ஃபோட்டோவையும் காட்டி என்னை மிரட்டி என் வாழ்க்கையில இன்னும் என்னென்ன எல்லாம் செய்யப் போற?” என்றால் ஆத்திரமாக.

“யாழினி நான் சொல்றதைக் கேளு, சத்தியமா நான் இந்த மாதிரி கேவலமான எந்த வேலையையும் செய்ய மாட்டேன்.

உனக்கு இந்த ஃபோட்டோவை யார் அனுப்புனதுன்னு எனக்கும் தெரியல… என்ன நம்பு” என்றான் ராஜு.

“போதும், அபிஷியலி ஒரு முறை நம்பி நான் ஏமாந்தது போதும். மறுபடியும் மறுபடியும் நீ என்கிட்ட பொய் சொல்லாத… நீ என்ன பண்ணினாலும் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கப் போறதில்ல.

இப்படி நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா இருந்த ஃபோட்டோவை எல்லாம் யாரோ நம்பரிலிருந்து அனுப்புன மாதிரி எனக்கு நீயே பொய்யா அனுப்பிட்டு. இதை அனுப்புனது யாருன்னு உனக்குத் தெரியாதுன்னு நாடகம் ஆடுறியா? போதும் உன் நடிப்பு” என்றால் யாழினி.

தான் இவ்வளவு சொல்லியும் யாழினி தன்னை நம்பாமல் பேசியதைக் கேட்ட ராஜுவுக்கு அவள் மேல் அளவு கடந்த கோபம் வந்தது.

“இங்க பாரு யாழினி, நான் சொல்றத நல்லா கேளு, இந்த ஃபோட்டோவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அதேபோலத்தான் இதுக்கு முன்னாடி உனக்கும் எனக்கும் நடந்த அந்த சம்பவத்துக்கு சத்தியமா நான் பொறுப்பில்லை. நான் எதையும் வேணும்னு செய்யல, அது என்னையும் மீறி நடந்துருச்சு. அதுக்காக உன்கிட்ட எத்தனை முறை வேணா மன்னிப்பு கேட்கிறேன். நான் செய்யாத தப்பு எல்லாம் என் மேல போட்டு என்ன மேலும் துன்புறுத்துவதில் உனக்கு என்ன அவ்வளவு சந்தோஷம்?” என்றவன்.

“நீ ஃபோனை வை, இதை யார் அனுப்புனாங்க, என்ன பண்ணுனாங்கன்னு எல்லா விவரமும் தெரிஞ்சிட்டு நான் திரும்ப உனக்குக் கால் பண்றேன்” என்று சொல்லிவிட்டு ஃபோனைக் கட் செய்தான் ராஜு.

யாழினி என்ன செய்வது, ஏது செய்வது என்று ஒன்றும் புரியவில்லை. இந்த ஃபோட்டோ மட்டும் தங்களுக்கு வந்தது போல வேறு எவரேனுக்கும் சென்றிருந்தால் தன்னை பற்றி அனைவரும் என்ன நினைப்பார்கள் என்று நினைக்க நினைக்க அவளுக்குப் பதட்டம் அதிகமானது.

இங்கே ராஜு யாழினிவிடம் கோபமாகப் பேசி ஃபோனை வைத்துவிட்டு முதலில் அவன் அழைத்தது தன் அண்ணன் தமிழுக்குத்தான்.

ஆனால் அவன் மொபைலில் ஃபோன் சுவிட்ச் ஆஃப் என்று வந்தது. அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தவன்.

அடுத்த ஃபோனை வினித்திற்குத்தான் போட்டான்.

“டேய் வினித் நீ எங்கடா இருக்க? நான் உடனே உன்னைப் பார்க்கணுமே” என்று ராஜு சொல்ல…

“என்னடா நெனச்சிட்டு இருக்கீங்க? அண்ணனும் தம்பியும் மாத்தி மாத்தி நைட் என்ன ஒவ்வொருத்தனுக்கும் வேலை வாங்கிக் கொண்டே இருக்கீங்க…” என்றான் கடுப்பாக.

“ஏண்டா இப்ப என்ன பிரச்சனை? இப்ப ஏன் நீ இவ்வளவு கடுப்பாகுற?” என்று ராஜு கேட்க…

“உன் அண்ணனுக்கு உடம்பு சரியில்லைன்னு அவனோட வீட்ல தனியா இருக்கான்னு அவனுக்கு ட்ரீட்மென்ட் பார்த்துட்டு இருந்தா ஆதித்யா எனக்கு ஃபோன் பண்ணி அவனுக்குத் துணையாய் இருக்கச் சொல்லி சொன்னான்.

சரி, இவனைப் பார்க்க வரலாமேனு நான் இங்கு வந்தா, சரியா அந்த நேரத்துக்கு இலக்கியா எனக்கு ஃபோன் பண்ணி, ‘தமிழ் இன்னும் வரலையே என்னாச்சு, ஏதாச்சும்’னு ரொம்ப வருத்தப்பட்டாள். நான் விஷயத்தைச் சொல்லி தமிழைப் பார்க்கத்தான் போறேன்னு சொன்னதும், ‘என்னை வந்து கூட்டிட்டு போங்க, நான் போய் அவர் கூட இருக்கேன்’னு அடம் பிடித்து அந்தப் பொண்ணு என் கூடக் கிளம்பி தமிழின் வீட்டுக்கு வந்துருச்சு. நான் இப்போ அங்கதான் இருக்கேன்” என்றான்.

“எதுவும் பெரிய பிரச்சினையா?” என்று கேட்டான் ராஜு.

“என்ன பிரச்சனைன்னு எனக்குத் தெரியல. ஆனா நான் வாசல்ல காரை நிறுத்துனதும் இலக்கியா இறங்கி தமிழைப் பார்க்க உள்ள ஓடிட்டா. நான் உள்ள போகப் போனேன், அதுக்குள்ள நீ எனக்குக் கால் பண்ணிட்ட” என்றான் வினித்.

“அதான் தமிழைப் பார்த்துக்க இலக்கியா வந்தாச்சு. உனக்கு இன்னும் அங்கே என்ன வேலை வேண்டி இருக்கு? இங்கே எனக்குத் தலை உயிர் போற ஒரு விஷயம் நடந்துருச்சு. தயவு செய்து நீ உடனே கிளம்பி வா” என்று வினித்திடம் கெஞ்ச…

“சரி வரேன், வந்து தொலைகிறேன். முதல்ல நீ எங்கே இருக்கேன்னு எனக்கு லொகேஷன் ஷேர் பண்ணு. இன்னும் கொஞ்ச நேரத்துல நான் அங்க வந்துடுறேன்” என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு உள்ளே செல்லாமல் வந்தபடியே காரை எடுத்துக்கொண்டு கிளம்பி ராஜுவைப் பார்க்க வினித் சென்றான்.

You may also like

1 comment

Mehala August 25, 2025 - 4:37 pm

Super super super super super super

Reply

Leave a Reply to Mehala Cancel Reply

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured