Home Uncategorizedஅஸ்க.. லஸ்கா..காதல் 5

அஸ்க.. லஸ்கா..காதல் 5

by Layas Tamil Novel
480 views

EPISODE 5

மலேசியாவில்… ச்சே… இந்த தமிழ் எப்பவும் என்கிட்ட

உரசுரதையே வேலையா வச்சுட்டு இருக்கான். நான் எது செஞ்சாலும் என் கூட போட்டிக்கு

வந்து, ஏதாவது செஞ்சு எனக்கு குடைச்சல் கொடுத்துட்டே இருக்கான்,” என்று

தமிழின் பரம எதிரியான தாஸ், தன் பி.ஏ.விடம் புலம்பிக் கொண்டே இருந்தான்.

எப்படி இவன் புலம்புகிற அளவுக்கு நம்ம தமிழ் என்ன

செய்தான்?

நாயகன் தமிழ், உலகளவில் பிரபலமான, புகழ்பெற்ற கட்டிடக்கலை

நிபுணர். தமிழ் வடிவம் அமைத்துக் கொடுத்த கட்டிடங்களின் டிசைன்கள் அனைத்துமே

எந்த ஒரு குறையோ, மாற்றமோ சொல்ல முடியாத அளவுக்கு மிகத் தெளிவாக இருக்கும்.

அதனாலேயே, அவனிடம் தங்கள் ப்ராஜெக்ட் கொடுக்க மல்டிநேஷனல் கம்பெனிகள்

போட்டி போட்டுக்கொண்டு, தங்கள் கம்பெனிக்கு ப்ராஜெக்ட் செய்யச் சொல்லி, அவனது

அப்பாயின்ட்மென்ட்டுக்காக வருடக் கணக்கில் காத்துக் கொண்டே இருக்கின்றன.

தமிழின் தாத்தாவின் தாத்தா காலத்திலிருந்தே

கட்டிடக்கலையில் அனைவரும் கைதேர்ந்தவர்களாக இருந்து வந்தனர். அதன் விளைவாகவே,தமிழ்வும்

அவர்களை விடவும் இந்தத் தொழிலில் விஸ்வரூபம் எடுத்து, தன் பெயரையும் குடும்பப்

பெயரையும் பிரபலமடைய வைத்திருக்கிறான்.

தமிழின் தாத்தாவின் தாத்தா பெயர் குமரன். அவர்

அக்காலத்திலிருந்தே கட்டிடக்கலையில் காலத்திற்கு ஏற்ப பல புதிய முயற்சிகளைச்

செய்து, அதை வெற்றிகரமாகவும் நடத்திக் கொண்டு வந்தவர். அவர் வழியாக வந்த தமிழின்

தாத்தா குமரனும் அதையே பின்பற்றி, தன் மகன் குருசாமிக்கும் இந்தத் தொழிலில் இருக்கும்

நெளிவுசுழிவுகளைக் கற்றுக் கொடுத்தார்.

குருசாமியும் தன் மகனுக்கு, தன் தாத்தாவும் அப்பாவும்

சொல்லிக் கொடுத்ததை அவருக்குத் தெரிந்த வகையில் சொல்லிக் கொடுக்க… அதைத் தவிர,தமிழின்

ஈடுபாடும் அவனுடைய முயற்சியுமே இவர்களின் குமரன் குடும்பத்தை இவ்வளவு தூரம் மேலே

கொண்டு வந்திருக்கிறது.

தமிழின் தாத்தாவும் அவருடைய தாத்தாவும் ஒரே மாதிரி

பெயரில் இருக்கிறார்கள் என்று பார்க்கிறீர்களா? தமிழின் தாத்தா பெயர்

குமரன். அவருடைய கொள்ளுத் தாத்தா பெயர் தான் தமிழின் தாத்தாவுக்கு

வைத்திருக்கிறார்கள்.

“குமரன் குடும்பம்” என்று சொன்னாலே, கட்டிடக்கலைத்

துறையில் இவர்களைப் பற்றியும் இவர்கள் குடும்பத்தைப் பற்றியும் தெரியாதவர்கள்

யாருமே இருக்க முடியாது. இப்படிப்பட்ட, காலம் காலமாக பரம்பரை பரம்பரையாக இந்தத்

தொழிலில் கைதேர்ந்து, இவ்வளவு தூரம் வந்திருக்கும் குமரன் குடும்பத்துடன் போட்டி

போட்டுக் கொண்டு, இப்போது புதிதாக உருவெடுத்திருக்கிறது தாஸ் ஆர்க்கிடெக்சர்

நிறுவனம்.

எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் துறையில் கொடி கட்டிப்

பறக்கும் தமிழின் “எஸ் ஆர்க்கிடெக்ஸ்” உடன் போட்டி போட்டு, பலமுறை

தோற்றுக்கொண்டே இருக்கிறது தாஸின் ஆர்க்கிடெக்சர் நிறுவனம்.

சரி, இப்போது எதுக்கு இந்த தாஸ் தமிழை

திட்டிக்கொண்டிருக்கிறான் என்றுதானே யோசிக்கிறீர்கள்?

தமிழ் பிசினஸ் விஷயமாக மலேசியா போயிருந்தான் இல்லையா?அங்கே, மலேசியாவிலேயே

பரம்பரை பணக்காரர்களில் ஒருவர், நவீன வசதிகளுடன் கூடிய ஒரு பெரிய ஹைப்பர் மாலையை உருவாக்க,தமிழிடமும்

இன்னும் சில நிறுவனங்களிடமும் ஹைப்பர் மாலை வடிவமைப்பதற்கான டிசைன்கள்

கேட்டிருந்தனர்.

தமிழ் தன் டிசைனிங்கை அவர்களுக்கு அனுப்பியிருக்க,வழக்கம் போல

தமிழின் டிசைனை எந்த மறுப்பும் மாற்றமும் இல்லாமல், அந்த மலேசியப் பணக்காரர்

தமிழுக்குத் தங்கள் மாலிற்கு டிசைன் செய்யும் பொறுப்பைக் கொடுத்துவிட்டனர்.

தமிழ் கொடுத்தது போலவே, தாஸ் கம்பெனியும் தங்கள்

டிசைனைக் கொடுத்திருக்க, தாஸின் டிசைனைப் பார்த்த மாத்திரத்திலேயே அதை

“வேண்டாம்” என்று ஒதுக்கிவிட்டனர்.

இந்தக் கோபமும், அதேபோல ஏலத்திற்கு தமிழுக்கு முன்பே

வந்திருந்த தாஸ், இலாகியாவைப் பார்த்த மாத்திரத்திலேயே அவள் மீது மோகம்

கொண்டான். அவளை ஏலத்தில் எடுப்பதற்காகக் காத்திருக்க…

ஆனால், அதற்கும் வாய்ப்பில்லாமல், தமிழ், இலாகியாவை

ஏலத்தில் யாரும் எதிர்பார்க்காத தொகையை கொடுத்து ஏலத்தில் எடுத்துவிட்டான்.

பிசினஸில் தமிழிடம் தோற்றதைக் கூட பெரியதாக எடுத்துக்

கொள்ளாத தாஸ், ஏலத்தில் தான் வாங்க நினைத்த பெண்ணை தமிழிடம்

இழந்துவிட்டோம் என்று ஆத்திரத்தில் தான், “தாம் தூம்” என்று தன்

பி.ஏ.விடம் கத்திக்கொண்டு இருந்தான்.

“அந்தப் பொண்ணு எப்படி இருந்தா தெரியுமா? செஞ்சு வச்ச

சிலை மாதிரி அவ்வளவு அழகா இருந்தா. எப்படியும் அவளை அந்த ஏலத்துல எடுத்துட்டு

வரணும்னு நினைச்சேன். ஆனா கடைசி நிமிஷத்துல வந்த அந்த தமிழ், இந்த

ஏலத்துக்கு வந்த சிலையை எனக்குக் கிடைக்காம, கழுகு மாதிரி கொத்திட்டு

போயிட்டான்.”

தன் பி.ஏ.வைப் பார்த்த தாஸ், “ஆமா, அவன் எப்படி சரியா ஏலம்

எடுக்க அந்த நேரத்தில் அங்கே வந்தான்? உனக்கு அந்த மாதிரி இடத்துக்கு வர்றது எல்லாம்

சுத்தமா பிடிக்காதே… அவன் அங்கு வந்தது என்னால நம்ப முடியல. அங்க வந்ததும்

இல்லாம ஒரு பொண்ணு, அதுவும் அத்தனை தொகை கொடுத்து எதுக்காக அந்த தமிழ்

ஏலத்துக்கு எடுத்திருக்கான்?” என்று புரியாமல் தடவி எழுதும் தாஸ் கேட்க,

“சார், அங்கே அவரோட ஃப்ரெண்ட் வினித் தமிழுக்கு முன்னாடியே

வந்து காத்துட்டு இருந்தாரு. வினித் தான் ஏலம் நடந்த இடத்துக்கு தமிழை வரச்

சொல்லியிருக்கணும்,” என்றான் தாஸின் பி.ஏ.

“வினித்தா! அவனும் மலேசியா வந்திருந்தானா? தமிழ்

மட்டும் தானே மலேசியா வராதா நான் கேள்விப்பட்டேன்,” என்றான் தாஸ்.

“ஆமா சார், நமக்குக் கிடைச்ச தகவல் படி தமிழ் மட்டும்தான் மலேசியா

வர்றதா இருந்துச்சு. ஆனால் லாஸ்ட் மினிட்ல தான் அந்த வினித் தமிழ் கூட

கிளம்பிருக்கான். அவன் மலேசியா வந்ததுனாலதான் தமிழை ஏலம் நடத்துற இடத்துக்கு

கூட்டிட்டு வந்திருக்கிறான்,” என்றான் பி.ஏ.

தான் ஏலத்தில் எடுக்க நினைத்த பெண்ணை எடுக்க முடியாமல்,தமிழ்வும்

வினித்தும் எப்படி கணக்கில் இடைஞ்சலாக வருவார்கள் என்று தாஸ் நினைத்துப்

பார்க்கவில்லை. அவர்கள் இருவரையும் நினைத்த தாஸ் கொலை வெறியில் இருந்தான்.

இதைவிட, இலாகியாவை அந்த ஏலத்தில் பார்த்ததிலிருந்து அவளை

எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்று வெறி அவனிடம் அதிகமாக இருந்தது. ஏலம்

இடத்தில் பார்த்த இலாகியாவை தமிழிடம் இருந்து எப்படியாவது பறித்து விட

வேண்டும் என்று தாஸ் அதற்காக யோசிக்க ஆரம்பித்தான்.

தமிழின் முகமும் இலாகியாவின் முகமும் அருகருகில்

இருக்க… அவள் மூக்கின் நுனியும் அவன் மூக்கின் நுனியும் உரசிக்கொள்ள… அதில்

சூடேறிய தமிழ் அவளிடம் இருந்து விலகிச் செல்ல முயல, அப்போது அவன் இதழ் அவள்

இதழில் உரசியது.

“இந்த பொண்ணு…” தமிழ் தான் என்ன செய்து

கொண்டிருக்கிறோம் என்று யோசித்தபடியே கண்களை உயர்த்தி இலாகியாவின் கண்களைப்

பார்க்க, தூங்கிக் கொண்டிருந்த இலாகியா திடுக்கிட்டு எழுந்து அவனையே பார்த்துக்

கொண்டிருந்தாள்.

வினித் இலாகியாவை அழைக்கச் சென்றபோது, தான் யார்,தன்னைப் பற்றிய

விபரம் என்ன என்பதை எதுவும் அவளுக்குத் தெரியக்கூடாது என்று சொல்லியிருந்தான்

தமிழ். தன்னைப் பற்றிய விபரமே அவளுக்கு தானாகத் தெரியும் வரை தெரியக்கூடாது

என்று நினைத்திருந்தவன், இப்போது அவனே அவன் முகத்தைக் காட்டும்படி ஆகிவிட்டது என்ற

யோசனையோடு இலாகியாவைப் பார்க்க… இலாகியா இன்னமும் அவனையே பார்த்துக்

கொண்டிருந்தாள்.

அவளிடம் இந்தியா செல்லும் வரை தன்னைப் பற்றி எதுவும்

தெரியக்கூடாது என்று நினைத்திருந்தவன், இப்போது அவளைப் பார்க்க வந்துவிட்டு, அவளிடம் இப்படி

வசமாக மாட்டிக் கொண்டோமே என்று தன்னையே நொந்து கொண்டான்.

தன் முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் அவனையே பார்த்துக்

கொண்டிருந்த இலாகியா, மீண்டும் கண்கள் மூடி உறக்கத்திற்குச் சென்றுவிட்டாள்.

தன்னைப் பார்த்து அதிர்ச்சியாகாமல் மீண்டும் கண்கள் மூடிப் படுத்திருக்க, அவள்

முகத்திற்கு அருகில் குனிந்து அவளை உற்றுப் பார்த்தான்.

இலாகியாவின் மூச்சு சீராக வந்து கொண்டிருந்தது. அதை வைத்தே

அவள் தூங்கிவிட்டாள் என்று உணர்ந்தவன். “நல்ல வேளையாக அவள் தூக்கத்தில் தான்

தன்னைப் பார்த்திருக்கிறாள். கண்டிப்பாக தன்னைப் பற்றிய நினைவு அவளுக்கு இருக்காது,”என்று

தமிழுக்குத் தோன்றியது.

இந்த யோசனையோடு இலாகியாவின் முகத்தைப் பார்த்துக்

கொண்டிருந்த தமிழ், தன் மனதிற்குள் எழுந்த சிந்தனையை அடக்க முயன்றான். ஏன்

இவ்வளவு நெருக்கத்தில் பார்த்ததிலிருந்து அவன் உடல் முழுவதும் சூடாகி விடுவதை

உணர்ந்தவன், அதைச் சமன் செய்து கொள்ள தன் தலையை அழுந்தக் கோதியவன்,அவன் அருகில்

இருந்து சற்று விலகி நின்றான். இந்த அறை முழுவதும் ஏசியால் குளிரூட்டப்பட்டு

இருக்க…

தமிழின் உடலோ சூடாகிக் கொண்டிருப்பதை உணர்ந்தவன்,தன் சட்டையின்

பட்டன்களைக் கழட்டிவிட்டு, பேன்டிற்குள் சொருகி இருந்த தன் சட்டையை வெளியே

எடுத்துவிட்டவன், தன் கண்களை மூடி மூச்சை இழுத்து தன்னை ஆசுவாசப்படுத்திக்

கொண்டான்.

இன்னும் ஒருமுறை பார்த்துவிட்டு, வந்த சுவடு தெரியாமல் அவள்

அறையில் இருந்து தன் சட்டையை சரி செய்தபடி கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான்.

இலாகியாவின் அறையில் இருந்து வெளியே வந்த தமிழ் கதவைச்

சாற்றிவிட்டு திரும்ப… அவன் எதிரே கைகளைக் கட்டிக்கொண்டு வினித் இருந்தான். அவனை

இங்கே எதிர்பார்க்காத தமிழ், அங்கு வினித் இருப்பதையே கருத்தில் கொள்ளாமல் அவனைத் தாண்டி

வெளியே சென்றான்.

“எங்கடா ஒருத்தன் இவ்வளவு பெருசா நின்னுட்டு இருக்கேன், என்னப்

பார்த்து எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல் எப்படி போறான் பாரு. இது முன்னாடி வந்து

நின்னோமே… ஏன்டா இங்க வந்த, என்ன வேணும்னு ஏதாவது ஒரு வார்த்தை கேக்குறானா? திமிரு

புடிச்சவன்!” என்று தமிழ்வைத் திட்டிக்கொண்டே வினித் வேகமாக ஓடிச் சென்று

தமிழின் முன்னாள் வந்து வழிமறித்து நின்றான்.

தன் முன்னால் வந்து நின்ற வினித்தை “என்ன?”என்பது போல

அவனைப் பார்க்க… “இப்பவாவது என்னன்னு கேட்கிறானா பாரு!” என்று அவனை

முறைத்த வினித், தமிழ்வை அப்போதுதான் நன்றாகக் கவனித்தான்.

தலைமுடி எல்லாம் கலைந்து, சட்டை பட்டன்கள் கழன்று

அலங்கோலமாக நின்றிருந்தான் தமிழ்.

“டேய்… மச்சான்… அந்தப் பொண்ணு பிடிக்கலைன்னு சொன்ன,ஆனா நீ

இருக்கிற கோலத்தைப் பார்த்தா…” என்று வினித் தமிழ்வை மேலிருந்து கீழாக

பார்த்தபடி கேட்க… தமிழ் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருக்க…

“என்னடா நான் கேட்டதுக்கு எந்தப் பதிலும் பேசாமல் அப்படியே

சிலை மாதிரி நிக்கிறான். ஒருவேளை நான் கேட்டது உண்மைதானோ? அதனால்தான் எந்தப் பதிலும்

பேசாமல் அமைதியா நிக்கிறானோ?” என்று யோசனையோடு இருந்த வினித், தன்னைத் தாண்டி தமிழ்

செல்லப் போக அவன் கையைப் பிடித்து நிறுத்தியவன்,

“என்னடா இப்படி அவசரப்படுற? அந்தப் பொண்ணுக்கு 17வயசுடா ஆகுது!

என்ன பண்ணி வச்சிருக்க?” என்று தமிழிடம் நேரடியாக வினித் கேட்க… தன்னைப்

பார்த்து இப்படி ஒரு கேள்வியைக் கேட்ட வினித்தை நிமிர்ந்த தமிழ், எரித்து

விடுவது போல பார்த்தான்.

அவன் பார்வையே வினித்திற்கு, தான் நினைத்தது தவறு என்று

பதில் சொன்னது.

“ஐயோ, அவசரப்பட்டு கேள்வியைக் கேட்டுவிட்டோமோ! இவன் பார்க்கிறது

பார்த்தால் என்ன இங்கேயே அடிச்சு துவைத்து, பிளைட்ல இருந்து கீழே

தூக்கி வீசிடுவான் போல இருக்கு,” என்று யோசித்த வினித், தமிழ்வை விட்டு விலகிப்

பின்னால் செல்லப் போன வினித்தைச் சட்டையைப் பிடித்து இழுத்து தன் அருகில்

நிறுத்திய தமிழ்,

“என்னப் பார்த்து என்ன கேள்விடா கேட்ட? உனக்கு என்ன

பார்த்தா எப்படி தெரியுது?” என்றான் அவன் கழுத்தை நெரித்தவாறு.

“அது… அது இல்லடா மச்சான்… நான் வேணும்னே அப்படி கேட்கல.

நீ அந்தப் பொண்ணு ரூம்ல இருந்து வந்த கோலத்தைப் பார்த்து தான் நான் தப்பா

புரிஞ்சுக்கிட்டேன்,” என்று வார்த்தைகளைத் திணறித் திணறிப் பேசினான் வினித்.

வினித் சொல்வதை காதில் வாங்கவில்லை தமிழ். அவன் கழுத்தை

மேலும் நெரிக்க, வினித்தின் முகமெல்லாம் சிவந்து அவனால் பேசவே முடியவில்லை.

தன் கைகள் கொண்டு தன் கழுத்தில் இருந்த தமிழின் கையை விளக்க வினித் முயற்சிக்க,அவன் பிடி

இரும்புப் பிடியாக இருந்தது. அவனால் எப்படி தமிழின் கையைப் பிரிக்க முடியும்?

“டே… டேய்… ம்… மச்சி… மச்சான்… முடியல…

முடியலடா!” என்று மிகவும் கஷ்டப்பட்டு தமிழிடம் இருந்து தன்னை

விடுவித்துக் கொள்ள வினித் போராட, அவன் கழுத்தைப் பிடித்திருந்த தமிழ், அவன்

கழுத்திலிருந்து கையை எடுத்தவன், அவனைத் தாண்டி வேகமாக தன் சீட்டிற்குச் சென்றான் தமிழ்.

தமிழின் கோபமே வினித்திற்கு உணர்த்தியது, தான் தவறான

கேள்வியைத் தமிழிடம் கேட்டு விட்டோம் என்று. ஒரு நண்பன் என்ற முறையில்

தமி பற்றி வினித்திற்கு நன்றாகவே தெரியும். அப்படி இருக்க, தான் எப்படி

இப்படி ஒரு கேள்வியைக் கேட்டு அவன் மனதை நோகடித்தோம் என்று தன்னைத்தானே திட்டிக்

கொண்டவன், தமிழ் எப்பொழுதுமே தவறாக யாரிடமும் நடந்து கொள்ள மாட்டான்,தன்னை மீறி

எந்தத் தவறும் செய்ய மாட்டான் என்று தன் நண்பனைப் பற்றி நல்லவிதமாக யோசித்தபடியே

அவன் பின்னால் சென்றான் வினித்.

தன் முகத்தைப் பார்த்தே ஒருவன் தன்னிலை மறந்து தடுமாறிப்

போனது கூடத் தெரியாமல், இங்கே ஒருத்தி கண்கள் மூடி நிம்மதியாக தூங்கிக்

கொண்டிருந்தாள்.

You may also like

1 comment

Mehala July 11, 2025 - 2:47 pm

Super super super super super super super

Reply

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured