Home Uncategorizedஅயோக்கியனின் அரியாசனம் இராக்கதன் 2-3

அயோக்கியனின் அரியாசனம் இராக்கதன் 2-3

by Layas Tamil Novel
551 views

EPISODE 3

வேலுவை கட்டாயப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார் செல்வி 

வீட்டிற்குள் நுழைந்ததுமே நேராக தன் அறைக்கு சென்றுவிட்டாள் திகழினி.

வேலுவின் அம்மா பாக்கியமும், அப்பா கந்தவேலுவும் ஒருவித தயக்கத்தோடு நின்று இருக்க… சிவராஜனின் வீட்டை அதிசயம் என வாயை பிளந்து சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்தாள் வேலுவின் தங்கை ஹரிணி

“மன்னிச்சிருங்க சம்மந்தி, என் பொண்ணு கொஞ்சம் கோவக்காரி அதுவும் சமீபமா தான் இப்படி எல்லாம் நடந்துகிரா அவ உண்மையாவே ரொம்ப நல்ல பொண்ணு என்றார் செல்வி

ஐயோ நீங்க ஏன் மா எங்ககிட்டே மன்னிப்பு கேட்டுட்டு. திடீர் கல்யாணம் தானே இது ரெண்டு பேரும் இதை ஏத்துகிற மனநிலைக்கு இன்னும் வராத அப்போ இப்படி நடக்குறது பொறுத்து தானே ஆகணும் என்றார் பாக்கியம்

அவரின் இந்த புரிதலான பேச்சை கேட்டு சற்று நிம்மதியாக இருந்தது செல்விக்கு.

வேலு வாப்பா வந்து உக்காரு என்றவர் பாக்கியத்தையும், கந்தவேலுவையும் சோபாவில் அமர சொன்னவர் 

 நீங்க பேசிட்டு இருங்க நான் அவருக்கு மாத்திரை கொடுத்துட்டு வந்துடறேன் என்று ரூமுக்குள் சென்றார் செல்வி 

 அண்ணா உன்கிட்ட எவ்வளவு முறை சிஎம் வீட்டை கூட்டிட்டு வந்து  காட்டுன்னு சொல்லி இருக்கேன் ஆனா நீ தான் அதெல்லாம் பெரிய இடம் போக கூடாதுன்னு என்ன கூட்டிட்டு வரமாட்டேன்ட்ட ஆனா இப்ப பாரு நீயே சிஎம் வீட்டு மருமகன் ஆயிட்ட என்று அந்த வீட்டை ஆச்சரியமாக பார்த்தபடி பேசினாள் ஹரிணி

ஏய் ஹரிணி வாய  வச்சிட்டு சும்மா இருடி யாராவது நம்ம பேசுறது கேட்டிட போறாங்க என்று அவளை அதட்டினார் கந்தவேலு

 அப்பா இங்க யாரும் இல்ல நம்ம மட்டும்தான் இருக்கோம் என்றவள் வேலுவிடம்  அண்ணா அண்ணி எப்படிப்பட்ட டைப் நல்லா பேசுவாங்களா  என்றாள்

எனக்கும் தெரியல ஹரிணி நானே அவங்கள சமீபமா தான் பார்க்கிறேன் அவங்க எப்படிப்பட்டவங்க எந்த மாதிரி பழகுவார்கள் என்று எனக்கு ஐடியாவே இல்ல என்றான் 

என்ன அண்ணா இப்படி பேசுற… அவங்க உன்னோட ஒய்ஃப் நீ என்ன அண்ணிக்கு ரொம்ப மரியாதை கொடுத்து பேசுற என்று சிரித்தாள் ஹரிணி 

“ஹரிணி! கொஞ்ச நேரம் அமைதியா இரு டி , எப்போ தான் இந்த மாதிரி பேசுறதை நிப்பாட்ட போறியா தெரியல ” என்று அலுத்துக்கொண்டார் பாக்கியம்.

“அம்மா! நான் என்ன இல்லாததையா சொன்னேன் ” என்று அவள் முடிக்கவில்லை.

“ஹரிணிஈ…!” என்று வேலுவின் குரல் அவளை கப் சிப் என்று ஆகியது.

“என்ன வேலு! உன் தங்கச்சியை ஒரு வார்த்தையால அடக்கிட்டே… ” என்றபடி அங்கு வந்தார் செல்வி.

“அம்மா!” என்று அவன் எழுந்திருக்க…

“வேலு! என்ன இது இனியும் இந்த இப்படி எழுந்து நின்னு எனக்கு நீ மரியாதை தரணும்னு எந்த அவசியமும் இல்ல. நான் உனக்கு இப்போ அத்தை ஆகிட்டேன். என் பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு இன்னமும் நீ இப்படி நடந்துகிறது எனக்கு கொஞ்சமும் பிடிக்கல ” என்றார்.

“அப்போ என் அண்ணா உங்களை அத்தை மாதிரி நடத்தணும்னா நீங்களும் என் அண்ணனை இனிமேல் வேலுன்னு பேர் சொல்லி கூப்பிடாம மாப்பிள்ளை அப்படினு கூப்பிட்டா நல்லா இருக்கும்” என்றாள் முந்திரி கொட்டை ஹரிணி.

“ஏய்! நீ அடி வாங்க போரே டி.. இப்படி தான் பேசுவியா?” என்று பாக்கியம் அவள் பின்னங்கையை பிடித்து கிள்ள…

“ஷ்! ஆஹ்! அம்மா! வலிக்குது விடுங்க…” என்று அவர் கையை தட்டிவிட்டு வேகமாக செல்வியிடம் வந்தவள் “அத்தை பாருங்க.. என் அம்மா என்னை மிரட்டுறாங்க” என்று பாக்கியத்தின் மீது கம்பளைண்ட் செய்தாள்.

“பழகிய சிறிது நேரத்திற்கு எல்லாம் இவ்வளவு அன்னியோன்யமாக பழகும் ஹரிணியை மிகவும் பிடித்துப் போய்விட்டது செல்விக்கு.

“நீ பேசினத்துல என்ன தப்பும் இல்லம்மா… “என்றவர் “உன் பேரு என்ன சொன்ன… ” என்று யோசித்தவர்.

“ஹ..ஹா… ஹரிணி! ” என்று சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் ஜெனிலியா ஹாசினி என்ற பெயரை எப்படி சொல்லி காண்பித்தாரோ அதே போல ஹரிணியும் சொல்ல…

“இவளை என்ன தான் பண்றது. 20 வயசு ஆச்சுன்னு தான் பேரு இன்னும் சின்ன பிள்ளை மாதிரி பேசிட்டு இருக்கா ” என்று சலித்துக்கொண்டாள் கந்தவேலு.

“விடுங்க அண்ணா! சின்ன பொண்ணு தானே பேசட்டும் , இவ பேசுறதை கேக்க சந்தோசமா தான் இருக்கு” என்றவர்.

“அம்மாடி ஹரிணி! எனக்கு உன் அண்ணனை பேர் சொல்லி கூப்பிட்டே பழகிருச்சு. அவர் சொன்னாலும் சொல்லாட்டியும் இந்த வீட்டோட மாப்பிள்ளை தான். அவருக்கு உண்டான மரியாதையை நானும் , என் புருசனும் , இந்த வீட்ல இருக்கவங்களும் நிச்சயம் கொடுப்போம். நீ உன் அண்ணனை பத்தி கவலை படாத சரியா” என்று சிரித்தார்.

“ஓகே! எனக்கு எந்த ப்ரோப்ளேமும் இல்ல..” என்று தோளை குலுக்கியவள் வேலுவின் அருகில் சென்றவள் “நீ சொன்ன மாதிரியே செல்வி அத்தை ரொம்ப நல்லவங்க அண்ணா” என்றாள்.

அதை கேட்டு சிரித்தவர் “உன் அண்ணன் காலையில் இருந்து ரெஸ்ட் எடுக்கவே இல்ல . கொஞ்ச நேரம் வேலு ரெஸ்ட் எடுக்கட்டும் ஹரிணி . நீ வா நம்ம பேசிட்டு இருப்போம்” என்றார் செல்வி.

“ஓகே அத்தை! அப்போ எனக்கு உங்க வீட்டை யாரையாவது விட்டு சுத்தி காட்ட சொல்றிங்களா?” என்றாள்.

“ஹரிணிஈ!…” என்று வேலு அதட்ட…

“அத்தை பாருங்க… உங்க முன்னாலையே என் அண்ணன் என்னை மிரட்டுது” என்று வேண்டுமென்றே சினுங்க..

“வேலு! இப்போ எதுக்கு அவளை அதட்டுற.. நீ போ… மேல தான் திகலினி ரூம் இருக்கு. ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் பேசிட்டு இருங்க.. நான் உங்க ரெண்டு பேருக்கும் குடிக்க ஜூஸ் கொடுத்து விடறேன்” என்றார்.

வேலு எதுவும் பேசாமல் நின்று இருக்க.. “என்ன வேலு அப்படியே நின்னுட்டு இருக்க.. நீ போ.. ” என்று அவனை அங்கிருந்து கட்டாயப்படுத்தி திகழினி அறைக்கு அனுப்பி வைத்தவர்.

“அண்ணா! அண்ணி! நீங்களும் வாங்க நம்ம வீட்டை சுத்தி பாத்துட்டு வரலாம்” என்று வந்தவர் அங்கு வேலையாள் கொண்டு வந்த ஜூஸை எடுத்து மூவருக்கும் கொடுத்துவிட்டு “இதை குடிங்க அப்பறோம் நாம் வீட்டை சுத்தி பாக்கலாம்”என்றார்.

இங்கே திகழ் அறைக்கு வந்த வேலு தயக்கத்தோடு கதவை தட்டினான்.

“ம்ம்…ம்ம்… கதவு திறந்து தான் இருக்கு , உள்ள வா… ” என்று திகழினியின் குரல் வரவும் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றான்.

அங்கே திகழ் அமர்ந்து இருந்த கோலம் கண்டு அதிர்ந்து தான் போனான் வேலு.

வேலு, திகழ் நிலைமை என்னவாகும்

ஓவியா, ராகவ் என்ன செய்கிறார்கள் பார்க்கலாம்

You may also like

2 comments

Emelie Hessel August 18, 2025 - 4:54 am

I have been browsing online more than three hours today yet I never found any interesting article like yours It is pretty worth enough for me In my view if all website owners and bloggers made good content as you did the internet will be a lot more useful than ever before

Reply
Amari Hand August 19, 2025 - 12:31 am

Wonderful web site Lots of useful info here Im sending it to a few friends ans additionally sharing in delicious And obviously thanks to your effort

Reply

Leave a Reply to Emelie Hessel Cancel Reply

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured