EPISODE 23
முகம் முழுவதும் பூரிப்புடன் தனக்குள்ளேயே எதையோ நினைத்தபடி சிரித்துக்கொள்வதும் , வெட்கப்படுவதுமாக இருந்தாள் ரதி.
“என்ன ஆச்சு இந்த புள்ளைக்கு … காலையில் இருந்து ஆளே சரி இல்லையே ஒரு மார்க்கமா சுத்திகிட்டு இருக்கா… இது சரி இல்லையே… ” என்று ரதியை இவ்வளவு நேரம் கவனித்துக்கொண்டு இருந்த குணவான் தன் சீட்டில் இருந்து எழுந்து நேராக ரதியின் கேபினுக்கு வர…
அவரை போலவே கமலியும் ரதியை இவ்வளவு நேரம் கவனித்தவள் “இவளுக்கு என்ன ஆகிருச்சு இன்னிக்கு… ” என்று யோசனையோடு எழுந்து ரதியிடம் வந்தவள்.
“ஏய் என்ன டி காலையில் ஆபிஸ் வந்ததுல இருந்து என்னவோ நீயா சிரிச்சுட்டு இருக்க.. என்ன டி ஆச்சு உனக்கு ” என்று ரதியின் தோளில் இடித்தாள் .
“ஆமா கமலி நானும் அதை கேக்க தான் இங்க வந்தேன் . என்ன ஆச்சு ரதி உனக்கு.. எதை நினைச்சு இப்படி நீயா சிரிச்சுட்டு இருக்க.. அபப்டி என்ன நினைச்சு நீ சிரிக்குறியே அதை எங்ககிட்ட சொன்னா உன்கூட சேர்ந்து நாங்களும் சிரிப்போம் இல்ல… ” என்றார் குணவான்.
அவர்கள் இங்கு வந்து ரதியை உலுக்கியதும் தான் தன் காதல் உலகில் ராக்கியுடன் இவ்வளவு நேரம் காதலில் கசிந்துருகிக்கொண்டு இருந்தவள் . இப்பொது இருவரின் குரல் கேட்டு நிகழ் உலகம் வந்தவள் “என்ன… என்ன சொன்னிங்க ரெண்டு பேரும் ..” என்று இவ்வளவு நேரம் இவர்கள் பேசியது எதுவும் காதில்
கேட்காதவளாய் அவர்கள் இருவரையும் பார்த்தாள்.
“சரியா போச்சு போ… இவ்வளவு நேரம் நானும் கமலியும் மாத்தி மாத்தி உன்கிட்ட கேள்வி கேட்டுட்டு இருக்கோம். நாங்க பேசினதெல்லாம் எதுவுமே காதுல விழலையா உனக்கு” என்றார் குணவான்.
“ அப்படியா! என்ன பேசினீங்க ரெண்டு பேரும் நான் சரியா கவனிக்கல” என்றாள் ரதி
“ம்ம்… சுரக்காய்க்கு உப்பு பத்தலையான்னு நான் இவர்கிட்ட கேட்டேன். அதுக்கு இவரு பதில் சொல்லிட்டு இருந்தாரு. அதை பத்திதான் நாங்க ரெண்டு பேரும் பேசிகிட்டு இருந்தோம்” என்று ரதியை முறைந்தவள்.
“நீ போயி உன் வேலையை கண்டினியூ பண்ணுமா போ..” என்று கமலி ரதியை பிடித்து தள்ளிவிட்டு
“ உன்கிட்ட போய் பேச வந்தேன் பாரு என்ன சொல்லணும் டி.. ஏதோ ஒரு மார்க்கமா சுத்திக்கிட்டு இருக்க.. இருக்கட்டும் பேசிக்கிற உன்ன” என்று அங்கே குணவான் இருந்த காரணத்தால் எதுவும் கேட்டுக் கொள்ளாமல் தன் கேபினுக்கு சென்று விட்டாள்.
“ என்னாச்சு இவளுக்கு சம்பந்தமே இல்லாம பேசிட்டு போறா” என்று எதுவும் புரியாமல் அன்றைய நாளிற்கான கதையை எடிட் செய்ய ஆரம்பித்து இருந்தாள்.
வேலை நேரம் முடித்துவிட்டு ஆபீசிலிருந்து கிளம்பும் நேரம் சரியாக ராக்கி அவளுக்கு போன் செய்திருந்தான்.
அந்த நேரம் பார்த்து குணவானும், கமலியும் அங்கே வந்துவிட அவசரமாக போனை அட்டென்ட் செய்தவள்.
“சொல்லுடா.. ரவுடி” என்றாள் ஹஸ்கி குரலில்.
“என்னடி பண்ற ஆபீஸ் முடிஞ்சுதா” என்றான் அவளை போலவே ராக்கியும் ஹஸ்கி வாய்ஸில்.
“ம்ம்ம்…ம்ம்ம்… இப்பத்தான் முடிஞ்சது கிளம்பிட்டு இருக்கேன். எதுக்குடா போன் பண்ணின”என்றாள் மீண்டும் ஹஸ்கி குரலில்.
“என்ன ரவுடி குட்டி… இப்படி கேட்டுட்ட உன்கிட்ட பேசணும்னு எவ்வளவு நேரம் காத்துட்டு இருக்கேன் தெரியுமா.. இப்படி என்ன எதுக்கு போன் பண்ணனு கேட்டு மூட் அவுட் பண்ணிட்டியே” என்றான் சோகமாக
“அச்சோ !.. நான் அதுக்காக கேட்கேல செல்லம். இங்கே கமலி என் கூட இருக்கா அவளுக்கு நம்ம ரெண்டு பேரும் லவ் பண்ற விஷயம் தெரியாது. அவளுக்கு தெரிஞ்சது அவ்வளவுதான் அதனாலதான் அப்படி கேட்டுட்டேன் சரி சீக்கிரம் சொல்லு இதுக்கு கூப்பிட்ட” என்றாள்.
“அதுவா எனக்கு உன்ன பாக்கணும் போல இருக்குடி. நீ எங்க இருக்கேன்னு சொல்லு நான் உன்ன பாக்க நேர்ல வரேன்” என்றவன். “ஆமா அந்த குள்ள வாத்து எதுக்கு உன் கூட இருக்கா ரெண்டு பேரும் எங்கேயும் வெளில இருக்கீங்களா” என்றான்.
அப்போதுதான் ரதி அவசரப்பட்டு தான் கமலியுடன் இருப்பதை சொல்லிவிட்டோம் என்று நினைத்தவள். “நல்ல வேளை நான் ஆபீஸ்ல இருந்து இப்பதான் கிளம்புறேன்னு அவன்கிட்ட சொல்லாம விட்டேன்” என்று நினைத்துக் கொண்டே “அது அது ஒன்னும் இல்ல அவ என்ன பார்க்கிறதுக்காக வந்திருக்கா நாங்க எப்படியும் கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருப்போம். இன்னைக்கு நம்ம மீட் பண்ண முடியாது நான் உனக்கு நைட் மெசேஜ் பண்றேன் தூங்கிடாத” என்றாள்.
“அப்போ நம்ம ரெண்டு பேரும் மீட் பண்ண முடியாதா..” என்றான் ஏக்கமாக.
“இல்லடா குட்டிமா கொஞ்சம் பொறுத்துக்கோங்க நாளைக்கு கண்டிப்பா ரெண்டு பேரும் மீட் பண்ணலாம். ம்.. சரியா” என்றவள் “சரி சரி நான் அப்பறோம் பேசுறேன் கமலி வரா … அவ கிளம்பினது டெக்ஸ்ட் பண்றேன் வெச்சிடவா” என்று ஃபோனை கட் செய்தாள்.
“முதல்ல இந்த குள்ள வார்த்தையும் என் ரவுடி குட்டியையும் ஒன்னு சேர விடக்கூடாது. எப்ப பாத்தாலும் அந்த கமலி என் செல்லத்துக்கு பின்னாடியே சுத்திகிட்டு இருக்கா. இவ லவ் பண்றாளா இல்ல நான் லவ் பண்றேனானே தெரியல” என்று புலம்பியபடி போனை வைத்தவன்.
“சரி எப்படியும் நைட்டு தான் எனக்கு மெசேஜ் பண்றேன்னு சொல்லி இருக்கா. அப்படியே போய் அண்ணனை பார்த்துட்டு வந்துருவோம். அவர் ஊருக்கு வந்ததுமே என்னை பார்க்கணும்னு கால் வேற பண்ணிட்டாரு…” என்று புல்லட்டை எடுத்துக்கொண்டு நேராக சிஎம் வீட்டுக்கு கிளம்பினான் ராக்கி.
ராகவ்விற்க்கு இன்று ஹாஸ்பிடல் செக் அப்பிற்கு செல்ல வேண்டும். அதனால் அவனை மூர்த்தி தன் பைக்கில் அமர வைத்து ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்றிருந்தார்.
அவனை முழுவதுமாக பரிசோதித்த டாக்டர் ராகுவின் வலது தோளில் குண்டடி ஆழமாக பதிந்திருப்பதால் அவன் கண்டிப்பாக மூன்று மாதங்களுக்கு ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார். அந்த கைக்கு அதிக வேலை கொடுக்கக் கூடாது என்றும் அவர் ஸ்டிரிக்ட்டாக கூறி விட..
அவரை பார்த்துவிட்டு வெளியே வந்த மூர்த்தி “டாக்டர் சொன்ன மாதிரி நல்லா ரெஸ்ட் எடுத்துக்க ராகவா அப்பதான் பின்னாடி எந்த பிரச்சினையும் வராது. காயம் ரொம்ப ஆழமா இருக்குன்னு வேற சொல்லி இருக்காரு. ஏற்கனவே ரத்தமும் ரொம்ப அதிகமா போயிடுச்சு கொஞ்சம் கவனமா இருக்கணும் எல்லா விஷயத்துலையும் புரிஞ்சுதா” என்றார் மூர்த்தி.
“அப்பா! டாக்டர் இப்படித்தான் எதையாவது சொல்லிக்கிட்டு இருப்பாங்க. அதுக்காக நான் இன்னும் மூணு மாசம் வீட்டிலேயே இருக்கிறதா.ஏற்கனவே 1 மாசமா நான் சும்மா தான் வீட்ல இருக்கேன் . அதெல்லாம் என்னால முடியாது நான் வேலைக்கு இன்னும் ஜாயின் பண்ணவே இல்ல. முதல்ல நான் போய் டிஜிபி சார் மீட் பண்ணிட்டு அவர்கிட்ட விஷயத்தை சொல்றேன். நான் முதல்ல டியூட்டில ஜாயின் பண்றேன் அதுக்கப்புறம் இது எல்லாம் பாத்துக்கலாம்” என்றான்.
“என்ன விளையாடுறியா? இதுக்கு நான் ஒத்துக்கவே மாட்டேன். உடம்பு மொதல்ல முழுசா குணமாகட்டும் அதுக்கப்புறம் மத்ததெல்லாம் பாத்துக்கலாம். போலீஸ் வேலையே இல்லைனாலும் பரவாயில்லை எனக்கு நீ தான் முக்கியம்” என்றார் அப்பாவிற்கே உண்டான அக்கறையுடன் பாசத்தோடும்.
“என்ன போலீஸ் வேலையே வேணாமா! ஏன் விளையாடுறீங்களா? இந்த போஸ்டிங் கிடைக்கிறதுக்காக நான் ராப்பகலா கஷ்டப்பட்டு படிச்சு இந்த வெளியில் சேர்ந்திருக்கேன்.ட்ரைனிங் பீரியட்ல எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு தெரியுமா உங்களுக்கு. அது எதுவும் தெரியாம நீங்க என்னடான்னா சர்வ சாதாரணமா இந்த வேலையை வேண்டாம்னு சொல்லிட்டீங்க” என்று அவரிடம் கோபப்பட்டவன்.
” வேணும்னா இப்படி பண்ணுங்க நீங்களும் என்னோட கிளம்பி டிஜிபி ஆபீஸ்க்கு வாங்க நான் அவர்கிட்ட டியூட்டியே ஜாயின் பண்ற பத்தி சொல்ற அவர் என்ன சொல்றாரோ அதுதான் முடிவு யார் சொன்னாலும் அதுக்கப்புறம் நான் கேட்க மாட்டேன் சரியா” என்றவன் நேராக அவரை டிஜிபி ஆபிசுக்கு வண்டியை விடச் சொன்னான்.
டிஜிபி ஆபீஸில் வந்திறங்கிய ராகவ் அவரை பார்ப்பதற்காக அவருடைய அறைக்கைச் செல்ல சிறிது நேரம் அவனை காக்க வைத்து விட்டு உள்ளே அழைத்தார் டிஜிபி குமரன் அவர்களை உள்ளே அமர அமரச்சொன்னார்.
அமர்வதற்கு முன் ராகவ் டிஜிபிக்கு தன் மரியாதை செலுத்தியவன்.
“சார் நான் டூட்டியில் எப்போ ஜாயின் பண்ணனும்னு சொல்லுங்க . அதை கேட்டுட்டு போகலாம்னு தான் நேரலையே வந்தேன்” என்றார் பவ்வியமாக.
“ராகவ் நானே உங்களுக்கு கால் பண்ணி பேசணும்னு இருந்தேன்”என்றவர்.
“ராகவ் உங்க ஹெல்த் கண்டிஷன் எப்படி இருக்கு.. டாக்டரை பார்த்திங்களா ” என்றார்.
“இப்போ தான் சார் டாக்டரை பார்த்த்துட்டு வந்தோம். என் பையனுக்கு இன்னும் காயம் சரி அகல இன்னும் மூணு மாசம் அவனை ரெஸ்ட் எடுக்க சொன்னாரு . இவன் அதை எல்லாம் கேட்காம டூட்டிக்கு வந்தே தீருவேன்னு நிக்குறான். நீங்களே கொஞ்சம் எடுத்து சொல்லுங்க சார் கொஞ்சம் உடம்பை பாத்துக்க சொல்லுங்க..” என்றார் மூர்த்தி ராகவ் பேசுவதற்கு முன்பு முந்திக்கொண்டு குமாரனிடம் பேசினார்.
“என்ன ராகவ் அப்பா சொல்றது எல்லாம் உண்மை தானா.. ” என்றார் குமரன்.
“சார் அவர் அப்படி தான் டாக்டர் என்ன சொன்னாலும் அது படி செய்யணும்னு சொல்லுவார் .எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல . நான் நாளைக்கே டியூட்டியில் ஜாயின் பண்றேன் ” என்றான்.
“நோ..நோ .. ராகவ் உங்க அப்பா சொல்றது சரி தான். நீங்க 3 மோந்த்ஸ் கழிச்சே டியூட்டியில் ஜாயின் பண்ணிக்கோங்க . ” என்றவர்.
“நீங்க ரெஸ்ட் எடுக்குற இந்த பீரியட்ல சில ஒர்க்ஸ் உங்களுக்கு குடுக்கிறேன் . அதை மட்டும் நீங்க செய்யமுடியுமா ” என்றார் குமரன்.
“சியூர் சார் எனக்கு வீட்ல சும்மா இருக்க போர் அடிக்குது . அடலீஸ்ட் இந்த மாதிரி எதுவும் ஒர்க் இருந்தா போதும் ” என்றவன் “என்ன ஒர்க் சார் “என்றான்.
“அது கொஞ்சம் கான்பிடென்ஷியல் ” என்றவர்.
“நீங்க நாளையில் இருந்து இங்க என்னோட ஆபீஸ்க்கு வந்திருங்க.. நாம நாளைக்கு மற்ற விபரங்களை பேசிக்கலாம் ” என்றார்.
“என்ன சார் இது என் புள்ளைய ரெஸ்ட் எடுக்க விடுவிங்கனு பார்த்தா வேளைக்கு வர சொல்லிட்டீங்க ” என்றார் மூர்த்தி.
“கவலை படாதீங்க… நீங்க நினைக்கரு மாதிரி கஷ்டமான வேலை எதுவும் இல்ல . இங்க ஆஃபீஸ்ளையே தான் ராகவ்க்கு வேலை இருக்கும் எங்கையும் போக வர வேண்டியது இல்ல… தினமும் இவரை பிக் அப் பண்ணி நேரத்துக்கு ட்ரோப் பண்ணவும் நான் ஏற்பாடு செய்றேன். உங்க மகன் அலைச்சல் இல்லாம வந்து போவாரு சரியா ” என்று சிரித்தார் குமரன்.
“சார் அப்பா அப்படிதான் பேசுவார் நீங்க எதுவும் நினைச்சுக்க வேண்டாம் ” என்றவன் அவரிடம் விடைபெற்று வீட்டிற்கு கிளம்பினான்.
இங்கே சிவராஜனை பார்த்துவிட்டு வந்ததில் இருந்து ராக்கியின் முகமே சரி இல்லை அதை கவனித்த ஓவியா “என்ன மாரீஸ் அண்ணா ஏன் ஒரு மாதிரி இருக்கு ” என்றாள் .
“அதுவா நம்ம ஐயாவை பார்த்துட்டு வந்துச்சுல்ல.. அங்க அந்த ரத்தினமூர்த்தி நம்ம ராக்கியை பத்தி தப்பு தப்பா ஐயாகிட்டே போட்டு குடுத்துட்டான், அதுவும் உன் அண்ணி கூட சேர்த்து வெச்சு பேசி இருக்கான். நம்ம ஐயா எப்பவும் ராக்கிக்கு தான் சப்போர்ட் பண்ணுவாரு இன்னிக்கு என்னவோ அந்த இரத்தினதொட பேச்சை கேட்டுட்டு ராக்கிகிட்டே சரியாவே பேசல…”
“ரத்தினம் நம்ம ரதியை ஐட்டம் , அது இதுனு சொல்லி பேசிட்டான் . ஏற்கனவே ரதியையம், ராக்கியையும் மில்லுல வெச்சு பாத்த ரத்தினம் இதே மாதிரி பேசி தான் உன் அண்ணன்கிட்டே வாங்கி கட்டிட்டு போனான். ஆனா இப்ப ஐயா முன்னாடியும் அதே மாதிரி பேசவும் அவனை எதுவும் செய்ய முடியாம இருந்துட்டான் ராக்கி. அப்பறோம் ஐயா ராக்கியை தனியா கூப்பிட்டு ஏதோ பேசி இருக்காரு அவர்கூட பேசிட்டு வெளியே வந்தவன் கோபத்துல கிளம்பி வந்துட்டான் ” என்றான் மாரீஸ்.
“இவ்ளோ நடந்து போயிருச்சா.. இந்த ரத்தினத்துக்கு ஏன் இந்த வேண்டாத வேலை ” என்று புலம்பிய ஓவியா “சரி கிளம்பு மாரீஸ். அண்ணன் இப்போ இருக்க கோபத்துக்கு எதுவும் அதுக்கிட்டே பேச முடியாது ” என்றவள் ” நான் போயி தூங்குறேன் எனக்கு தூக்கம் வருது ” என்று உள்ளே எழுந்து செல்ல…
மாரீஸும் ராக்கியிடம் சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்பி இருந்தான்.
இன்னமும் கோபம் குறையாமல் அந்த ரத்தினம் பேசியதை நினைத்தவாறு தன் ரூமில் படுத்து இருந்தான் ராக்கி .
சரியாக மணி 10 ஆகி இருக்கும் ரதியிடம் இருந்து அவனுக்கு “என் ரவுடி ராஸ்கல் என்ன பண்றீங்க… ” என்று கேட்டு அவனுக்கு மெசேஜ் அனுப்பி இருந்தாள்.
ரதியின் மெசேஜ் வந்த அடுத்த நொடி தன் மொபைலை எடுத்து ரதிக்கு கால் செய்த ராக்கி ரதி போனை அட்டென்ட் செய்த அடுத்த நொடி “நீ உண்மையாவே என்னை லவ் பண்றியா பீடா ” என்றான்.
“ஆமாடா டா.. ஏன் இப்படி கேக்குற… ” என்றாள் புரியாமல்.
“அப்போ நாளைக்கு உன் வீட்டு ஆளுங்க முன்னாடி நான் இதே கேள்வியை கேப்பேன். அங்கையும் நீ தயங்காம இந்த ரௌடிப்பையனை லவ் பண்றேன்னு சொல்லணும் . அப்போதான் நான் நம்புவேன் ” என்றவன் போனை வைத்துவிட…
இங்கே ரதி எதுவும் புரியாமல் குழப்பமாக கட்டிலில் படுத்திருந்தாள்
