Home Uncategorizedஇராக்கதனின் ரதி அவள் part-1 22

இராக்கதனின் ரதி அவள் part-1 22

by Layas Tamil Novel
319 views

EPISODE 22

“இப்போ எதுக்கு என்ன உள்ள விட்டு கதவை சாத்துறீங்க… யாராவது வந்தா என்ன நினைப்பாங்க ” என்று கேட்டுக்கொண்டே வீட்டில் யாரும் இருக்கிறார்களா என்று நோட்டமிட்டபடி உள்ளே சென்றாள் ஓவியா.

“யாரு என்ன நினைச்சா எனக்கு என்ன… நீயே இவ்ளோ சாதாரணமா இருக்கும்போது எனக்கு என்ன வந்துச்சு ” என்று அவள் பின்னால் சென்றான் ராகவ்.

“ம்ம்… ஏன் சொல்ல மாட்டீங்க.. நான் சும்மா என் சீனியரை பார்த்துட்டு போலாம்னு வந்தேன் ” என்றவள் நேராக கிச்சனுக்குள் நுழைந்தாள் .

அவள் பின்னால் வந்த ராகவ் கிட்சன் கதவில் சாய்ந்து நின்றவன். “வீட்ல தான் யாரும் இல்லேன்னு தெரியுதுல்ல… நான் வேற தனியா இருக்கேன். என்னை எதுவும் செய்துட மாட்டியே.. ” என்று பயந்தவன் போல கூறினான்  ராகவ் .

அவனை திரும்பி பார்த்து முறைத்த ஓவியா ” இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலையா …” என்றவள் திரும்பி கிடச்சனில் இருந்த பாலை எடுத்து அடுப்பில் வைத்து சூடு செய்ய ஆரம்பித்தாள் 

“ஏய் என்ன பண்ற… என் வீட்டுக்குள்ள யாரும் இல்லாத அப்போ வந்த.. சரி  பரவாயில்லைனு விட்டா … இப்போ என் வீட்டு கிட்சனுக்குள்ள வந்து பால் காய்ச்சிட்டு இருக்க… அடுத்து என்ன காய்ச்சின பாலை எடுத்துட்டு என் ரூமுக்கு வர போறியா ” என்றான் அவனுக்கு முதுகு காட்டி நின்று இருந்தவளை ரசித்துக்கொண்டே..

“வீட்டுக்கு ஒருத்தி வந்திருக்காளே அவளுக்கு சாப்பிட எதுவும் வேணுமான்னு கேட்க கூட தோணல உங்களுக்கு. ஏதோ பாவமேன்னு  எனக்கு நானே டி போட்டுக்க வந்தா ரொம்ப தான் பேசுறிங்களே நீங்க…  உங்களுக்கும் சேர்த்து டீ போடலாம்னு தான் இருந்தேன். ஆனா நீங்க பேசின பேச்சுக்கு டீயும் இல்ல.. ஒன்னும் இல்ல… ” என்றாள்.

“நீயே டீ போட்டு குடிச்சாலும் நான் குடிக்க மாட்டேன் ” என்றான் ராகவ் .

“ஏன் குடிக்க மாட்டீங்க..” என்றாள்.

“ஏன்னா சின்ன வயசுல இருந்து நான் டி காபி எதுவும் குடிக்குறது இல்ல.. ஒன்லி பால்.. பால்  மட்டும் தான் ” என்றான்.

அவன் அப்படி சொன்னதும் சட்டென்று திரும்பி அவனை பார்த்தவள் பின் முகத்தை திருப்பிக்கொண்டு “இவரு சின்ன குழந்தை பால் மட்டும் தான் குடிப்பாரு.” என்று தனக்குள்ளேயே பேசிகொண்டவள் டீயை வடிகட்டி ஒரு கப்பில் ஊற்றிக்கொண்டவள் கிச்சனை விட்டு வெளியே வர ராகவ் வாசலை மறைத்துக்கொண்டு நின்றான்.

“இப்போ வழியை விடப்போறிங்களா இல்லையா ?” என்று அவனை முறைத்தாள் .

“சும்மா சும்மா இந்த குட்டியூண்டு கண்ணை வச்சிட்டு என்னை முறைக்காத.. எனக்கு ஒன்னும் உன்னை பார்த்து எந்த பயமும் இல்ல… ” என்றவன் .

“உன் கண்னு குட்டியா இருந்தாலும் அழகா இருக்கு.. நீ ஏன் உன் கண்ணுக்கு கண் மை போடல… ” என்றான்.

“கண்மையா! அதெல்லாம் போடா எனக்கு பிடிக்காது ” என்றாள் .

“பிடிக்காதா! ” என்றவன் “ஒரு நிமிஷம் என் கூட வா… ” என்று அவள் கையில் இருந்த  டீ கப்பை வாங்கி வெளியே வந்து ஹாலில் வைத்தவன். ஓவியாவை பார்க்க…

அவள் புரியாமல் அவனையே  பார்த்துக்கொண்டு நின்று இருந்தாள் .

அவளருகில் வந்தவன் ” என் கூட வா… ” என்று ஓவியாவின் கையை பிடித்து அழைத்து சென்றான்.

“இங்க பாருங்க.. எதுவா இருந்தாலும் இப்படியே சொல்லுங்க.. எதுக்கு என் கையை பிடிச்சு இழுத்துட்டு போறீங்க…  என்ன விடுங்க.. ” என்பர் அவன் கையில் இருந்து தன் கையை விடுவிக்க முயன்றாள் .

அவளை திரும்பி பார்த்தவன் “ஷ்… பேசாம என்கூட வா… ” என்று ஓவியாவை அழைத்துவந்தவன் நேராக மிருதுளாவின் அறைக்குள் சென்று அவளை அங்கிருந்த ட்ரெஸ்ஸிங் டேபிள் முன் அமர வைத்தவன் எதையோ தேட…

அவன் உரிமையாக ஓவியா கையை பிடித்து அழைத்து வந்தது அவள் தோளை  தொட்டு அமர வைத்தது என்று அவனுக்கே தெரியாமல் ஓவியா ராகவ்வை ரசித்தாள் .

“ஆஹ்! இங்க வெச்சிருக்கா பாரு ” என்றவன் கையில் ஒரு காஜல் பென்சிலை எடுத்தவன் ஓவியாவின் முகத்திற்கு முன்பு கையை நீட்டினான்.

அதை பார்த்தவள் “:என்ன பண்றீங்க..” என்று சேரில் இருந்து எழுந்திருக்க போனாள் ஓவியா.

“உன்னை எதுவும் செய்ய மாட்டேன்.. நீ முதல்ல உக்காரு…” என்று அவளை அமர வைக்கும் ஆர்வத்தில் ஓவியாவின் தோள்களில் தன் கட்டுப்போட்ட கையையும் சேர்த்து அவள் தோளில் வைத்து அழுத்திவிட.. “ஷ்!… அம்மாஆ… ” என்று வலியின் அலறிவிட்டான்.

“என்ன ஆச்சு.. கையில எதுவும் அடிப்படிருச்சா… எங்க காட்டுங்க… ” என்று எழுந்தவள் ராகவ்வின் கையை முன்னும் பின்னும் திருப்பி பார்த்தவள் அவனை தான் அமர்ந்த சேரில் அமரவைத்துவிட்டு . மீண்டும் அவன் கையை அக்கறையாக பார்க்க ஆரம்பித்தாள் .

அதை கண்டு ஓவியாவுக்கு தன் மேல் அக்கறை இருப்பதை தெரிந்து கொண்டவன் .

“ஏய் அவ்ளோவா வலி இல்ல.. லேசா கவனம் இல்லாம கையை ஊனிட்டேன் அவ்ளோ தான் ” என்றவன் .

“ஒரு நிமிஷம் இரு.. என்னை விடு..  முதல்ல..”  என்றவன் தன் அடிபட்ட கையை லேசாக மேலே தூக்கி அந்த கைக்குள் ஓவியாவை நிற்க வைத்தவன். தன் இடது கையால் காஜலை அவள் முகத்திற்கு முன் கொண்டு சென்றான் .

‘உங்களுக்கு கை வலிக்கும் என்ன இது என்னை விடுங்க… ” என்று அவன் கை வளைவிற்குள் இருந்து வர நினைத்தவளை நிறுத்த நினைத்தவன் “ஷ்… அம்மாஆ… ” என்று மீண்டும் அலறியவன் .

“இங்க பாரு நீ அசைஞ்சதுனால தான் எனக்கு கை வலிக்குது ஒரு 2 மினிட்ஸ் நீ அமைதியா நில்லு.. இந்த காஜலை நான் உனக்கு போட்டு பாக்கணும் ப்ளீஸ் ” என்று முகத்தை வலியில் வைத்திருப்பவனை போல ஓவியாவிடம் பாவனை செய்தான்.

அவன் முகம் வலியில் இருப்பதை கண்டதும் அசையாமல் அப்படியே நின்றவள் “உங்களுக்கு என்ன இப்போ நான் இந்த காஜலை போடணும் அவ்ளோ தானே… குடுங்க நானே போட்டுக்கிறேன் ” என்று அவன் கையில் இருந்த காஜலை வாங்க போனாள் .

“ம்ஹும்.. முடியாது நான் தான் உனக்கு போட்டு விடுவேன். இதுக்கு முன்ன நீ சின்ன வயசுல தானே காஜல் போட்டேன்னு சொன்ன… அதுக்கு பிறகு போட்டது இல்ல தானே… ” என்றான் ராகவ் .

“ம்ஹும்…” என்று ஓவியா தலையை ஆட்ட..

“அப்போ உனக்கு முதல் முரையா காஜல் போட்டுவிட்டது நானா தான் இருக்கணும் ” என்றவன் ஓவியா திமிற முயல…

“நீ இப்படி அசஞ்சு எனக்கு கை  வலி தான் வரவைக்க போற .. ” என்று ராகவ் சற்று குரலை உயர்த்தி பேச..

அதன் பின் ஓவியா அசையாமல் அமைதியாக நின்று கொண்டாள் .

அவளை தன் கால்களுக்கு இடையில் பிடித்து நிப்பாட்டியவன் கையை மேலே உயர்த்தி அவள் கண்களுக்கு அழகாக மெதுவாக காஜலை போட்டுவிட ஆரம்பித்தான்.

ராகவின் கை வளைவிற்குள் மாட்டிக்கொண்டு ஓவியாவுக்கு என்னவோ போல இருந்தது

சற்று அசைந்தால் அவன் கால்களுக்கு இடையில் நின்றிருந்தவளுக்கு அது வேறு அசௌகரியத்தை ஏற்படுத்த வேறு வழி இல்லாமல் அமைதியாக அவனிடம் முகத்தை கொடுத்துவிட்டு நின்றுகொண்டாள் .

“நானே போடுகிறேனே … இப்படி இடது கையில போடு விடறேன்ன்னு என் கண்ணை குத்திராதிங்க… ” என்று சிணுங்கினாள்.

“நீ இப்படி பேசினா தான் கை  ஸ்லிப் ஆகி கண்ணை குத்திருவேன். நீ பேசாம அமைதியா 2 மினிட்ஸ்  அப்படியே நில்லு.. வேலை முடிஞ்சிரும் “என்றவன் தீவிரமாக ஒவ்வியாவின் கண்களுக்கு அழகாக மை தீட்டி முடித்தவன். “இப்போ பாரு ” என்று கண்ணாடியின் முன்பு அவளை திருப்பி காட்டினான்.

ஓவியாவின் குட்டி கண் ராகவ்வின் கைவண்ணத்தில் அழகாக கட்சி அளித்தது. நானா இது! என்பது போல கண்ணாடியையே உற்று பார்த்தவள் கண்களை சிமிட்டி சிமிட்டி அந்த அழகை ரசித்தாள் .

அதை ராக்வவும் ரசிக்க தவறவில்லை.

“இப்போ சொல்லு மை போட்டா உன் கண்ணு அழகா இருக்கும்னு நீ நினைச்சு பார்த்திருப்பியா… ” என்றான்.

அவனை விட்டு வேகமாக நகர்ந்து வந்தவள் “என் கண்ணு எங்க அழகா இருக்கு… இப்படி சந்திரமுகி படைத்துல  வர ஜோதிகா மாதிரி அப்பிவிட்டுட்டு அழகா இருக்குன்னு பெருமை பேசுறீங்க… ” என்று வேண்டுமென்றே பொய் கூறியவள் “நான் வீட்டுக்கு போறேன் . டைம்  ஆச்சு?” என்று மாளவிகாவின் பெட் ரூமை விட்டு வேகமாக வெளியே வந்தாள்.

“ஏய் ! ஓவி… நில்லு.. ஏன் அதுக்குள்ள போற… உண்மையை சொல்லு உன் கண்ணு அழகா இருக்கா? இல்லையா? ” என்று அவள் பின்னால் வந்தவன் ஓவியாவின் கையை பிடித்து தன் பக்கம் இழுத்தான்.

அதில் அவன் மார்பில் மோதி நின்றவள் “என்ன இது என்னை விடுங்க.. ஏற்கனவே லேட்  நான். என் அண்ணா என்னை தேடும் ” என்று அவனிடம் இருந்து விலக முயல..

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லிட்டு நீ கிளம்பு .. ” என்று அவள் இடையில் கை கொடுத்து தன்னோடு இறுக்கிப் பிடித்தான்.

“ஐயோ! யாரும் இல்லாத நேரமா வந்து இவன்கிட்டே மாட்டிகிட்டேன். வந்ததுல இருந்து என்னை இழுத்து இழுத்து பிடிச்சு வெச்சுகிறானே… ” என்று உள்ளுக்குள் அழுத்த்துக்கொண்டவள் ராகவ்வை நிமிர்ந்து பார்த்தாள் .

அவள் பார்வையை நேராக ஏறிட்டவன் “ம்ம்.. சொல்லு…. ” என்று மேலும் அழுத்தம் கூட்ட …

“நீங்க தானே போட்டுவிட்டீங்க.. நீங்களே சொல்லுங்க… ” என்றாள் வெட்கத்தோடு..

“ரொம்ப அழகா இருக்கு உன் கண்ணு அதுவும் மை போட்ட அப்பறோம் இன்னும் அழகா தெரியுது. எனக்கு வரபோற மனைவிக்கு கண்ணு எப்படி இருக்கணுமோ அப்படி இருக்கு உன் கண்ணு ” என்று அவள் கண்களை வர்ணிப்பது போலவே தன் மனதில் இருந்த எண்ணத்தை வெளிப்படையாக ஓவியாவிடம் நேரடியாக கூறிவிட..

அவனை நேருக்கு நேராக பார்த்தவள் “ஆனா எனக்கு வர போற புருசனுக்கு மீசை இவ்ளோ குட்டியா இருந்தா எனக்கு பிடிக்காது . அதே போல இப்படி கிளீன் ஷேவ் பண்றவங்களையும் பிடிக்காது ” என்றாள் .

“ஏய் என்னோட போலீஸ் வேளைக்கு தாடி எல்லாம் வைக்க கூடாது டி.. ” என்றான் ராகவ்.

“அப்போ வேலையை விட்டுடுங்க… ஒரு தாடி கூட உங்களால வெச்சுக்க முடியல.. இதுல பேச்சுக்கு மட்டும் ஒன்னும் குறைச்சல் இல்ல.. ” என்றவள். “விடுங்க என்ன.. நான் கிளம்புறேன் ” என்று அவனை தள்ளிவிட்டு வாசல் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள்.

“ஏய் நான் வேலையை விட்டுட்டா  அப்பறோம் உனக்கு சோறு, துணி மணி எல்லாம் யாரு டி வாங்கி குடுப்பா… உத்யோகம் புருஷ லட்சணம். உன் புருஷன் IPS ஆஃபீஸ்ர்னு சொல்லிக்க நீ பெருமை படனும் அதை விட்டுட்டு ஒரு தாடிக்காக வேலையை விடுன்னு சொல்ற… ” என்று அவள் பின்னால் சென்றான்.

“எனக்கு என் புருஷன் பெரிய போலீஸ் ஆபிஸரா இருக்கணும்னு எந்த போகனும்ன் இல்ல… என் புருஷன் என் பின்னாடி சுத்திட்டு நான் சொல்றதை கேட்டுட்டு இருந்தா போதும். அவனை உக்கார வெச்சு நான் சோறு போடுவேன் ” என்றவள் கேட்டை திறந்து கொண்டு வெளியே சென்றவள் தன் ஸ்கூட்டியில் ஏறியபடி அவனை பார்த்தாள்.

ஓவியா பேசியதை கேட்டு சிரித்தவன் “அது எல்லாம் சரி தான் நீ சொல்ற மாதிரி நான் தாடி வளர்த்தா உன் கையாள எனக்கு சமைச்சு போட்டு உன் கையாள எனக்கு ஊட்டி விட்ரியா டி பொண்டாட்டி.. ” என்று அவளை ஆர்வமாக பார்த்தான் .

“அதான் உங்க போலீஸ் வேளைக்கு தாடி வளர்ந்த கூடாதுனு சொன்னிங்களே..  அப்பறோம் எப்படி தாடி வளர்ப்பிங்க… ” என்று ராகவ் தன்னை பொண்டாட்டி என்று அழைத்ததை கேட்டு உள்ளுக்குள் ஒரு தாக்கம் வந்தவளாக அவனை பார்த்தாள் .

“அதை நான் பார்த்துகிறேன் . நீ சொன்னதை நான் செஞ்சா எனக்கு நான் கேட்டது கிடைக்குமா ” என்றான்.

அவன் கேட்டதற்கு எந்த பதிலும் சொல்லாமல் வண்டியை ஸ்டார்ட் பண்ணி கிளப்பி இருந்தாள் .

அவள் பதில் ஏதும் சொல்லாமல் செல்வதை ஏக்கமாக பார்த்துக்கொண்டு ராகவ் நின்று இருக்க.. சிறிது தூரம் வண்டியை ஓட்டி  சென்ற ஓவியா திரும்பி ராகவ்வை பார்த்து சிரித்தவள் அங்கிருந்து கிளம்பி இருந்தாள் .

அவள் சிரிப்பே அவனுக்கு சம்மதம் சொன்னது போல தோன்ற… தன் கன்னத்தை தடவிக்கொண்டே செல்லும் அவளையே  பார்த்துக்கொண்டு இருந்தான்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured