Home Uncategorizedஇராக்கதனின் ரதி அவள் part-1-24

இராக்கதனின் ரதி அவள் part-1-24

by Layas Tamil Novel
235 views

EPISODE 24.

விடியற்காலை 5 மணியை போல வாசல் கதவை திறந்து கொண்டு வெளியே வாசல் தெளிப்பதற்காக கையில் துடைப்பதுடன் வந்த சோபனா தனக்கு எதிரே நின்று இருந்தவர்களை பார்த்து அதிர்ந்து போனார்.

“யார் இவங்க.. இந்த நேரத்துல என் வீட்டு வாசல் முன்ன நின்னுட்டு இருக்காங்க …” என்று யோசித்தவர். தனியாக வெளியே வந்து வாசல் தெளிப்பதற்கு அச்சம் கொண்டார்.

கையில் இருந்த துடைப்பத்தை அப்படியே போட்டுவிட்டு நேராக ராகவ்வை அழைக்க அவன் அறைக்கு வந்தார் “ராகவா!.. டேய் ராகவா!.. சீக்கிரம் எழுந்து வாடா… ” என்று அவனை எழுப்பினார்.

தூங்கிக்கொண்டு இருந்தவன் அவன் அம்மாவின் குரலை கேட்டதும் கண்விழித்தவன் “அம்மா! என்ன இது இவ்ளோ காலையில வந்து எழுப்பி விடறீங்க… என்னம்மா பிரச்சனை உங்களுக்கு ” என்று தன் கழுத்தில் மாட்டி இருந்த பெல்ட்டை சரிசெய்துகொண்டு கட்டுபோட்டிருந்த கையை லேசாக மேலே உயர்த்தி சரி செய்தவன் வந்து கதவை திறக்க…

“டேய் இங்க வந்து பாரு.. ” என்று அவனை இழுத்துக்கொண்டு நேராக வாசலுக்கு அழைத்து வந்தார்.

“டேய் இங்க வந்து பாரு.. ” என்று அவனை இழுத்துக்கொண்டு நேராக வாசலுக்கு அழைத்து வந்தார்.

“என்னம்மா.. எங்க கூப்டு போறீங்க என்ன.. ” என்று கண்களை தேய்த்துக்கொண்டே வெளியே பார்த்தவன் அங்கே இரண்டு வாட்டசாட்டமான ஆண்கள் கையை பின்னால் கட்டிக்கொண்டு மிடுக்காக அவன் வீட்டின் முன்பு நின்று இருந்தனர்.

“யாரும்மா இவங்க… ” என்று சோபனாவிடம் கேட்டுக்கொண்டே படிகளில் இறங்கி வாசல் கதவை திறக்க போனான்.

“டேய் இரு டா… இப்போ எதுக்கு நீ கதவை திறக்குற.. அவனுங்களை பார்த்தாலே சரி இல்ல. நீ அமைதியா இங்க நின்னு அவங்க என்ன செய்றங்கனு மட்டும் பாரு. போய் வம்புல எதுவும் மாட்டிக்காத சரியாய். நான் போய் அப்பாவை கூப்டு வரேன் ” என்று ராகவ்வை அங்கேயே நிற்கச்சொல்லிவிட்டு உள்ளே மூர்த்தியை அழைக்க சென்றார்.

“நான் ஒரு IPS ஆஃபீசர்னு இந்த அம்மாவுக்கு நியாபகம் இருக்கா இல்லையா? என்னவோ என்னை சின்ன பையன் மாதிரி ட்ரீட் பண்ணிட்டு போறாங்க”என்று யோசித்தவன்.

அவர் உள்ளே சென்றுவிட்டாரா என்று பார்த்துவிட்டு வேகமாக வாசல் கதவை திறந்துகொண்டு வெளியே வந்தவன்.

“ஏய் யாரு நீங்க எல்லாம் எதுக்காக என் வீட்டு முன்னாடி வந்து நின்னுட்டு இருக்கீங்க…” என்று அதிகார தோரணையில் பேசிக்கொண்டு அவர்களை நோக்கி சென்றான்.

இருட்டில் தெரிந்த அவர்கள் உருவத்தை நெருங்கி வந்த பின் தான் அவர்கள் இருவரையும் சரியாக கவனித்தான் ராகவ்

அவன் வீட்டின் முன்பு நின்று இருப்பது Z கேட்டகிரியை சேர்ந்த பாதுகாவலர்கள் என்று. அதுவும் முதல் அமைச்சர் சிவராஜனின் பாதுகாவலர்கள் என்று தெரிந்ததும்.

“இவங்க எதுக்காக இங்க வந்திருக்காங்க.. அதுவும் இந்த நேரத்துக்கு.. ” என்று யோசித்தபடி அவர்களை பார்த்தான்.

“குட் மோர்னிங் மிஸ்டர் ராகவ் ” என்று ஒரு பாடி கார்ட் ராகவ்வை பார்க்க…

I

“குட் மோர்னிங் ” என்றவன்

“நீங்க CM ஓட கார்ட்ஸ் தானே… இந்த நேரத்துல என் வீட்ல என்ன செயிரிங்க ” என்றான் குழப்பமாக,

“CM உங்களை நேர்ல மீட் பண்ண வரேன்னு சொல்லிருக்காரு. அவர் இந்த அறிவுக்கு வாரத்துக்கு முன்னாடி இங்க எல்லாம் சரியா இருக்கா .. சேபா இருக்கான்னு பார்க்க நாங்க வந்திருக்கோம் ” என்றவர்.

“நீங்க போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க.. இன்னும் கொஞ்ச நேரத்துல CM இங்க வந்திருவார் ” என்றார்

“அவர் எதுக்காக இங்க வரணும்..” என்று ராகவ் குழப்பமாக கேட்க..

அந்த கார்ட் ராகவ்வின் கேள்விக்கு பதில் சொல்லும் முன் அவர்கள் முன் ஒரு ஜீப் வேகமாக வந்து ராகவ் வீட்டு வாசலில் வந்து நின்றது. அதில் இருந்து ராக்கி இறங்கி வந்தவன் நேராக அந்த கார்ட்ஸ் இடம் வந்தவன் எல்லாம் சரியா இருக்கா எதுவும் பிரச்சனை இல்லையே…” என்று அவர்களிடம் கேட்டுவிட்டு ராகவ் வீட்டை சுற்றி ஒரு நோட்டம் விட்டவன் அங்கே பாதுகாப்பை உறுதி செய்துவிட்டு தன் ஜீப்பின் பின் சீட்டின் கதவை திறக்க..

அதில் இருந்து சிவராஜன் மிக சாதாரணமாக இறங்கி வந்தார்.

அவரை பார்த்ததுமே வேகமாக அவர் முன் போய் நின்ற ராகவ் “சார் !” என்று போலிஸிற்கே உண்டான மரியாதையை சிவராஜனுக்கு செலுத்தியவன் “சாரி சார் சல்யூட் அடிக்க முடியல ” என்று தன் காயம் பட்ட கையை காட்டினான்.

“பரவால்ல ப்பா… என்னை காப்பாத்த போய் தானே உனக்கு இப்படி ஆகிடுச்சு என்றவர்.

“உன் உடம்பு இப்போ எப்படி இருக்கு. காயம் ஆறிடுச்சா.. ” என்று கேட்டுக்கொண்டே ராகவ் தோளில் கை போட்டு நடந்தார்.

“இப்போ பரவால்ல சார்.. ” என்று பதில் சொன்னவன் ” என்ன விஷயம்னு சொல்லி இருந்தா நான் உங்களை மீட் பண்ண வந்திருப்பேனே சார். நீங்க இவ்ளோ தூரம் வரணுமா…” என்று அவன் கேட்டுக்கொண்டு இருக்க…

“அண்ணா உள்ள போய் பேசலாமா.. இந்த ஏரியா ஆளுங்க ஒவ்வொருத்தரா எழுந்து வர ஆரம்பிச்சுட்டாங்க ” என்றான் ராக்கி பவ்வியமாக.

“சரி ராக்கி ” என்றவர்.

“உள்ள போலாமா ராகவ் ” என்று அவனை பார்த்து சிரிக்க..

“சார் வாங்க…” என்று அவரை தன்னோடு அழைத்து செல்ல..

“இந்த மனுஷனை எத்தனை வாட்டி எழுப்புரத்து. இப்படி கூப்பிடறது கூட தெரியாத அளவுக்கு அப்படி தூக்கம் வேண்டி இருக்கு.. ராகவ் வேற அங்க தனியா இருக்கான்” என்று புலம்பியபடி வாசலை நோக்கி வந்தார்.

சிவராஜன் ராகவ் வீட்டிற்குள் வர.. அவர்களுக்கு முன்னே வந்த ராக்கி வேகமாக படிகளில் ஏறி வந்து அவர்கள் வீட்டு வாசல் கதவை விலாசமாக திறந்து வைத்தான்.

ராக்கி வாசலில் இருப்பதை பார்த்த சோபனா “அடடே ! ராக்கி.. என்னப்பா நீ இங்க.. அதுவும் இவ்ளோ காலையில வந்திருக்க… ” என்று அவனிடம் பேசிக்கொண்டே வந்தவர் அவன் பின்னால் சிவராஜன் ராகவ் தோளில் கை போட்டு அவனிடம் பேசிக்கொண்டு தன் வீட்டிற்குள் வந்து கொண்டு இருப்பதை பார்த்து அப்படியே நம்பமுடியாமல் நின்றுவிட்டார்.

“என்ன ஆண்ட்டி அப்டியே நின்னுட்டிங்க.. CM அண்ணாவே உங்க வீட்டுக்கு வந்திருக்காரு. அவரை வாங்கனு கூப்பிடமா இப்படி நின்னுட்டு இருந்தா என்ன செய்து ” என்று சிரித்துக்கொண்டே உள்ளே வந்தவன் அங்கே இருந்த சோபாவை ஒரு முறை தூசி தட்டிவிட்டு சிவராஜனை அதில் அமர சொன்னான்.

சிவராஜன் சோபாவில் அமர்ந்துவிட்டு ராகவ்வையும் தன்னோடு அமர சொல்ல… “இல்ல சார் நான் நிக்குறேன் ” என்று அவர் பதவிக்கு மரியாதையை கொடுத்து அவர் எதிரே நின்று கொண்டான்.

“ஐயோ ! CM என் வீடு தேடி வந்திருக்காரு.. எனக்கு கையும் ஓடல காலும் ஓடலையே. நான் இப்போ என்ன செய்வேன்” என்று உள்ளுக்குள் உதறல் எடுத்தபடி அவர்களையே பார்த்துக்கொண்டு இருந்த சோபனா திடீர் என “என்னங்க!!! என உச்சஸ்தாதியில் காத்த ஆரம்பித்தார்.

அவர் இப்படி செய்ததும் வெளியே CM பாதுகாப்பிற்காக நின்று இருந்த அவருடைய பாதுகாப்பு படை ஆட்கள் மொத்தமாக வீட்டிற்குள் நுழைந்துவிட்டனர். சிவராஜனுக்கு எதுவோ ஆபத்து என்று நினைத்து அவரை சூழ்ந்து கொண்டு நின்றவர்கள் சோபனாவை நோக்கி துப்பாக்கியை குறிபார்த்தபடி நிற்க..

அதற்கு மேல் அவருக்கு பேச்சு வருமா என்ன.. அப்படியே வாயை பிளந்தபடி மூச்சை பிடித்துக்கொண்டு நின்றுவிட்டார் சோபனா.

“அம்மா! இப்போ எதுக்கு இப்படி கத்துணிங்க பாருங்க… “என்று அவரை அவசரமாக வந்து மேலும் அதுவும் பேசாமல் தடுத்திருந்தான் ராகவ்.

சோபனா போட்ட சத்தத்தில் உறங்கிக்கொண்டு இருந்த அனைவரும் என்னவோ ஏதோ என்று எழுந்து வெளிஏ வந்தவர்கள் அங்கே வந்திருந்தவர்களை பார்த்து உறைந்து போயிருந்தனர்.

ராக்கி CM இந்த கார்ட்ஸ்களிடம் எந்த பிரச்னையும் இல்ல நீங்க வெளியே இருங்க..” என்று அவரைகளை அனுப்பிவைத்தவன்.

தன் ரூமில் இருந்து அரைக்கால் ட்ரவுசரும், இடை வரை கை இல்லாத டீ ஷர்ட்டும் அணிந்து நின்று கொண்டு இருந்த ரதியை பார்த்தான்.

அவளை இப்படி ஒரு உடையில் பார்த்திராதவன் அப்படியே உறைந்துபோய்விட்டான்.

ரதியோ இந்த நேரத்தில் இங்கு யாரையும் எதிர்பார்த்திராதவள் வந்திருந்தவர்களை எல்லாம் பார்த்துவிட்டு குறிப்பாக ராக்கியை பார்த்தவள் தன்னை இந்த கோலத்திலா அவன் பார்க்க வேண்டும் என்று தன்னையே நொந்து கொண்டவள் திரும்பி தன் அறைக்குள் செல்லப்போக..

“ரதி எனக்கு என்ன செய்றதுன்னு தெரியல டி நீ போய் நம்ம CM க்கு காபி போட்டு எடுத்துட்டு வா டி..” என்று சோபனா ரதியை போக சொல்ல..

வேறு வழி இல்லாமல் ரதி கிச்சனுக்கு செல்ல.. அவளுடன் மாளவிகாவும் பின்னே சென்றாள்.

“ஐயா மன்னிக்கணும் .. உங்களை பார்த்த சந்தோஷத்துல என்ன செய்றதுன்னு தெரியாம கத்திட்டேன் ” என்று சிவராஜனிடம் சோபனா மன்னிப்புகேட்டார்.

அவரும் சிரித்துக்கொண்டே :”என்னை நேர்ல பாத்துட்டு இப்படி ஷாக் ஆனா ஒரு ஆளை நான் இன்னிக்கு தான் பாக்குறேன்” என்றவர்.

“ராகவ் இவர்தான் உன் அப்பாவா… ” என்று அங்கு அப்பாவியாக நின்று இருந்த மூர்த்தியை காட்டி கேட்டார்.

“ஆமா சார் ” என்றான்.

“உங்க பையன் மட்டும் இல்லேன்னா நான் இந்த நேரத்துக்கு உயிரோட இருந்திருப்பேனா என்னனு எனக்கே தெரியாது. என் உயிரை காப்பாத்தின உங்க பையனை C சந்திச்சு நன்றி சொல்லிட்டு போலாம்னு வந்தேன். ” என்றார்

“இவ்ளோ காலையில் வந்ததுக்கு மன்னிக்கணும் ” என்றார்.

“ச்சே.. ச்சே..ஏன் இப்படி சொல்றிங்க…, நீங்க எங்க வீட்டுக்கு வந்ததே சந்தோசம். ₹ என்று மூர்த்தி பேசிக்கொண்டு இருந்தார்

முதலில் சற்று தயங்கினாலும் L சகஜமாக சோபனாவும், மூர்த்தியும் சிவராஜனிடம் பேசிக்கொண்டு இருக்க.. காபி போட்டு அதை ட்ரெயில் வைத்து எடுத்து வந்தாள் ரதி.

 அவள் பின்னால் வந்த மாளவிகா சோபனாவின் அருகில் சென்று நின்று கொள்ள காபியை எடுத்து வந்து சிவராஜனின் முன்பு நீட்டினாள் ரதி.

அதை வாங்கிக் கொண்ட சிவராஜன்  “ராகவ் இவங்க ரெண்டு பேரும்” என்று ரதியையும் மாளவிகாவையும் பார்த்து கேட்க.

 “சார் இது ரதி என்னோட ட்வின் சிஸ்டர் இவ மாளவிகா என்னோட தங்கச்சி” என்று அவர்கள் இருவரையும் சிவராஜ் எனக்கு அறிமுகம் செய்து வைத்தான். ராகவ்.

 அவர்கள் இருவரையும் பார்த்து புன்னகைத்தவர் “அப்புறம் நான் இங்கே வந்தது ஒரு முக்கியமான விஷயத்தை பேசத் தான். இல்ல… இல்ல ரெண்டு முக்கியமான விஷயம்” என்றவர்.

” ராகவ் உன்னோட ரெக்கார்ட்ஸ் எல்லாம் நான் பார்த்தேன். நீ போலீஸ் ட்ரைனிங் பீரியட்ல எவ்வளவு கடுமையா டிரெய்னிங் எடுத்துக்கிட்டேன்னு நம்ம டிஜிபி மூலமா நான் தெரிஞ்சுகிட்டேன்.  எனக்கு நீ ஒரு உதவி பண்ணனும்” என்றார்.

 ஒரு முதலமைச்சரே தன் வீடு தேடி வந்து தன்னிடம் உதவி கேட்பதை ராகவ்வால் நம்ப முடியவில்லை அதை அவரிடம் காட்டிக் கொள்ளாமல் “சார் சொல்லுங்க என்ன செய்யணும்” என்றான்.

 “இன்னும் ஆறு மாசத்துல எலக்சன் நடக்க போகுது. நான் தமிழ்நாடு முழுக்க பிரச்சாரம் செய்ய போகணும்.  எனக்கு எந்த நேரத்துல எந்த பக்கம் இருந்து ஆபத்து வரும்னு சொல்ல முடியாது.” என்றவர் ராக்கியியை திரும்பிப் பார்த்துவிட்டு .

“என்னோட பக்கபலமே ராக்கி தான் அவன் எனக்கு எல்லா விஷயத்துலயும் பாதுகாப்பா நம்பிக்கையான ஆள் அப்படின்னு சொல்லலாம். ஆனா என்னுடைய அன் ஆபீஸியல் வேலைகளுக்காக தான் நான் ராக்கிய நம்பி இருக்கேன். எனக்கு அபிஷியலா பாடிகாட்ஸ் இருந்தாலும் நீ என்னை உன்னோட உயிரையும் பத்தி யோசிக்காமல்  காப்பாத்தினதுல இருந்து. எனக்கு நீ என்னோட பாதுகாப்புக்காக என் கூட இருக்கணும்னு நான் நினைக்கிறேன். உன்னோட கனவு ஐபிஎஸ் வேலை தான் எனக்கு நல்லா தெரியும்”

 ₹இந்த எலக்சன் முடியுற வரைக்கும் நீ எனக்கு பாதுகாப்பா என் கூட தேர்தல் பிரச்சாரத்துக்கு என் கூட வரணும்னு நான் எதிர்பார்க்கிறேன். உன்ன நான் கம்பெல் பண்ணல இது என்னோட ரெக்வெஸ்ட் நீ யோசிச்சு முடிவெடுத்து என்கிட்ட சொல்லலாம்” என்றார்.

“சார் எனக்கு கையில அடிபட்டு இருக்கு அது சரியாக இன்னும் ரெண்டு மாசம் ஆகிடும்னு டாக்டர் சொல்லி இருக்காரு என்று ராகம் சொல்ல அப்போ ஒன்னும் பிரச்சனை இல்ல”

” நீங்க குணமானதும் என்கிட்ட வந்துடுங்க ஒரு நாலு மாசம் தான் அதுக்கப்புறம் நான் உங்களை தொந்தரவு பண்ண மாட்டேன் நீங்க உங்க கனவை நோக்கி அதுக்கப்புறம் பயணிக்கலாம் நல்ல யோசிச்சு ஒரு முடிவு சொல்லுவீங்கன்னு நம்புறேன்” என்றார் சிவராஜன்.

 ஓகே சார் நான் யோசிச்சு சொல்றேன் என்றான் ராகவ்.

 “சார் ஏதோ ரெண்டு விஷயத்துக்காக எங்க வீடு தேடி வந்தேன்னு சொன்னீங்க. ஒன்னு ராகவ் பத்தி சொல்லிட்டீங்க இன்னொரு விஷயம் என்னன்னு சொல்லலையே” என்றார் மூர்த்தி ஆர்வமாக.

 அவர் ஆர்வத்தைக் கண்டு  சிரித்த சிவராஜன் நல்ல விஷயம் தான் என்றவர் ராக்கியை பார்க்க அவன் சிவராஜன் அருகில் வந்து நின்றான்.

“ராக்கியை உங்களுக்கு ஓரளவுக்கு தெரியும் நினைக்கிறேன். அவன் உங்க குடும்பத்தோட அவனுக்கு இருக்கிற பழக்கத்தை என்கிட்ட சொல்லி இருக்கான். “

” ராக்கிய எனக்கு நல்லாவே தெரியும் அவனோட பத்து வயசுல இருந்து என்கிட்ட தான் வேலை பார்க்கிறான். கிட்டத்தட்ட ராக்கி என்னோட தம்பி மாதிரி நான் அவனுக்கு உங்க பொண்ண கல்யாணம் பண்ணி கொடுக்க சொல்லி இங்கே கேட்டு வந்திருக்கேன்” என்றார்.

 “என்னோட தம்பிக்கு உங்க பொண்ணு ரதிய கல்யாணம் பண்ணி கொடுக்குறீங்களா? உங்களுக்கு சம்மதமா?” என்று நேரடியாக சிவராஜன் மூர்த்தியையும் சோபனாபையும் பார்த்து கேட்க…

  ஷோபனா மூர்த்தியை விட அதிர்ச்சியில் நின்றிருந்தது அங்கு ரதிதான் அவளால் சிவராஜன் பேசியதை நம்பவே முடியவில்லை.

 அதிர்ந்து போய் சிவராஜனையும் ராக்கியையும் மாறி மாறி பார்த்தாள்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured