Home Uncategorizedஇராக்கதனின் ரதி அவள் part-1-25

இராக்கதனின் ரதி அவள் part-1-25

by Layas Tamil Novel
283 views

 EPISODE 25.

சிவராஜன் ரதியை ராக்கிக்கு திருமணம் செய்து கொடுக்க சொல்லி கேட்டதும் அனைவரும் அதிர்ச்சியில் நின்று இருக்க…

சிவராஜனின் பின்னால் நின்று இருந்த ராக்கியை பார்த்த ராகவ் “சார் , இவர் உங்ககிட்டே அடியாளா இருக்காரு. இவருக்கு போய்  எப்படி ரதியை கல்யாணம் செய்த்து கொடுக்க முடியும். ரதி நல்லா படிச்சவ graduate  ஒரு நல்ல வேளையில் இருக்கா.. அப்படி இருக்கவ  எப்படி இவனை… “என்றவன்

அந்த வார்த்தையில் ராக்கி ராகவ்வை முறைக்க.. அதை கண்டுகொள்ளாதவன் “எப்படி சார் இந்த கல்யாணம் நடக்கும் . நீங்களே யோசிச்சு பாருங்க.. ரதியே இவரை கல்யாணம் செய்துக்க சம்மதம் சொல்லுவாளான்னு எனக்கு தெரியல.. ” என்றான்.

“ராகவ் நீ இரு.. ” என்று ராகவ்வை அதற்கு மேல் பேசவிடாமல் அமைதிப்படுத்திய மூர்த்தி.

“ஐயா! நீங்க இவ்ளோ பெரிய இடத்துல இருந்துட்டு இந்த தம்பிக்காக எங்ககிட்டே பேசவந்திருக்குறது ரொம்ப சந்தோசம். என் பையன் ரதி மேல இருக்க அக்கரையில் இப்படி பேசிட்டான் ” என்றவர்

“இந்த தம்பிக்கு என் பொண்ணை கொடுக்க எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல.. ஆனா ராகவ் சொன்னது போல ராக்கி தம்பி உங்ககிட்டே … ” என்று அவர் தயங்க..

“அடியாளுன்னு ஏன் நினைக்குறிங்க.. நான் அண்ணனோட பர்சனல் பாடி கார்ட் , அவரோட பாதுகாப்புக்கு நான் பொறுப்பு. இந்த வேலை ஒன்னும் கேவலமானது கிடையாது ” என்று போனவன் ராகவ்வை முறைக்க..

“அடியாள்  எப்பவும் அடியாள் தான். உனக்குன்னு எந்த ஒரு தொழிலும் சரியா இல்ல… ஒரு நிலையான வருமானம் கிடையாது. சார் நீ செஞ்ச வேளைக்கு சம்பளம்னு ஒன்னு தறாரா ” என்றான்.

அதை கேட்ட சிவராஜன் ராக்கியை பார்க்க..

“அண்ணா எப்பவும் எனக்கான வேளைக்கு மாசா மாசம் பணம் கொடுத்துடறார் ” என்றான்.

“அது நீ செய்த அடியாள் வேளைக்கு கூலி தானே.. ” என்று தைரியமாக CM அங்கு இருக்கிறார் என்று கூட பார்க்காமல் ராகவ் ராக்கியை கேட்டான்.

ராகவ் பேசியது சிவராஜனுக்கே கோபம் வந்தது. “தம்பி நீங்க பேசுறது பாக்கும்போது நான் அடிதடிக்கு ஆளை வெச்சு வேலை வாங்குற மாதிரி தெரியுது ” என்றான் சற்று அதட்டும் குரலில்.

“சார் நான் உங்களை தப்பா சொல்லல.. நீங்க அரசியல்ல இருக்கீங்க.. உங்களுக்கு நிறைய விஷயம் இல்லீங்களா நடக்கும் . அதுக்கு இப்படி பட்ட ஆளுங்களை நீங்க கூட வெச்சு தான் ஆகணும். நான் உங்களை எதுவும் சொல்லல .. இவரை தான் சொல்றேன். இப்படி ஒரு வேலையை செய்றவரை எப்படி நாங்க ரதிக்கு கல்யாணம் செய்த்து கொடுப்போம். எங்கள விடுங்க.. எங்க ரதியே இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டா.. ” என்று ராகவ் திரும்பி ரதியை பார்க்க..

அவள் ராகவ்வையும், ராக்கியையும் மாறி மாறி பார்த்தாள் .

“ஏம்மா ரதி இங்க கொஞ்சம் வா… ” என்று சிவராஜன் அவளை அழைக்க…

தயங்கிக்கொண்டே அவரிடம் வந்தவளை “எனக்கு எல்லாமே தெரியும். ராக்கி  என்கிட்டே ஏலவிஷயத்தையும் சொல்லிட்டான். நீ தைரியமா உன்மனசுல என்ன இருக்கோ அதை சொல்லு.. நீ சொல்றது தான் முடிவு ” என்றார்.

ரதி சுற்றிலும் இருக்கும் தன் குடும்பத்தையும், ராக்கியையும் மாறி மாறி பார்த்தவள் “எனக்கு ராக்கியை பிடிச்சிருக்கு.. நானும் அவரும் ஒருத்தரை ஒருத்தர் காதலிக்கிறோம்” என்று இத்தனை நாள் மறைத்து வைத்து இருந்த இவர்கள் காதலை  தன் குடும்பத்தின் முன்பு போட்டு உடைத்தால்

ரதியின் வாயில் இருந்து வந்த வார்த்தைகளை கேட்டு அவர்களால் நம்ப முடியவில்லை அவளிடம் வேகமாக வந்த சோபனா அவள் கையை பிடித்து தன் பக்கம் திருப்பியவர் “ரதி ! என்ன சொல்ற.. நீயும் இந்த தம்பியும் விரும்புறீங்களா! எத்தனை நாளா இது நடக்குது ” என்றார்.

“அம்மா! அது.. அது வந்து… ” என்று ரதி பேச தயங்க…

இவ்வ்ளவு பேர் முன்னிலையில் தன்னை அடியாள் என்று சொல்லி ராகவ் மட்டத்தட்டிய போதும் ரதி தன்னை காதலிப்பதை ஒத்துக்கொண்டதை நினைத்து சந்தோசத்தில் இருந்தவன் . சோபனா ரதியை அதட்டுவதை பார்த்து  “அத்த!!! எதுக்கு ரதியை அதட்டுரிங்க.. என்கிட்டே கேளுங்க அத்த நான் சொல்றேன் ” என்றவன் .

“நானும் ரதியும் காதலிக்க ஆரம்பிச்சு ஒரு மாசம் , 2 நாள் , 6 மணி நேரம் , 37 நிமிஷம் ஆச்சு… ” என்றவன் ரதியை பார்த்து “என்ன பீடா ! சரியா சொன்னேனா.. ” என்றான்.

“ம்ம்… ” என்று ரதி ஆர்வத்தில் ராக்கிக்கு தம்ஸ் அப் காட்ட..

அவள் அருகில் வந்த மாளவிகா “அக்கா! உன் ஆர்வத்தை குறை அங்க பாரு ராகவ் உன்னை எப்படி முறைக்குறான்னு .. ” என்று உயர்த்திய அவள் கையை பிடித்து கீழே இறக்கினாள் .

ராகவ்வை பார்த்ததும் ரதி அமைதியாகி விட…

“சரி இவங்க ரெண்டு பேரும் காதலிக்கிற விஷயம் தெரிஞ்சிருச்சுல்ல.. அடுத்து என்ன பண்ணனும்னு ரெண்டு குடும்பமும் சேர்ந்து பேசி முடிவெடுங்க… ” என்றவர் எழுந்து ரதியை பார்த்து “காபி  ரொம்ப நல்லா இருந்துச்சும்மா.. “என்றார். பின் அனைவரிடமும் சொல்லிக்கொண்டு

தன் கார்ட்ஸ்களுடன் வெளியே வர… அங்கே அதற்குள் ரதியின் வீட்டின் முன்பு ஆட்கள் கூடிவிட்டனர். சிவராஜனை பார்த்ததும் சத்தமிட ஆரம்பித்துவிட்டனர். சிலர் போனை எடுத்துக்கொண்டு அவரோடு போட்டோ எடுக்க வர…

வேகமாக முன்னே வந்த ராக்கி அவர்களை எல்லாம் விலக்கிவிட்டு சிவராஜன் காரில் ஏற உதவியவன் அவர் உள்ளே அமர்ந்ததும் கதவை சுற்றிவிட்டு காரை எடுக்க சொன்னான்.

சிவராஜன் அங்கிருந்து கிளம்பும் வரை பார்த்துக்கொண்டு நின்று இருந்தவன் திரும்பி பார்க்க.. ரதியின் மொத்த குடும்பமும் வெளியே ராக்கியை பார்த்துக்கொண்டு நின்று இருக்க..

அவர்கள் பின்னால் நின்று இருந்த ரதி “வராத.. போய்ட்டு.. ” என்று காற்றில் சைகை செய்து ராக்கியை அங்கிருந்து போக சொன்னாள் .

“என்ன.. என்ன பீடா .. என்னை கூப்டியா ” என்றவாறு அவர்களை தாண்டி வீட்டிற்குள் சென்றான் ராக்கி .

“கடவுளே! டேய் நான் உன்ன உள்ள வராத அபப்டியே போன்னு  தானே சொன்னேன். இப்போ எதுக்கு உள்ள வந்த… “என்றாள் அவனுக்கு மட்டும் கேட்கும் படி.

“நீ அப்படியா சொன்ன.. எனக்கு நீ என்னை கூப்பிட மாதிரி இருந்துச்சு ” என்றான் ராக்கி பொய்யாக. அவள் சைகை செய்ததுமே அவனுக்கு புரிந்து இருந்தது. அப்படி அவள் குடும்பத்திற்கு அவள் வேண்டுமானால் பயந்து போகலாம் . நம்ம ராக்கி பயக்குற ஆளா சொல்லுங்க…

இவர்கள் இருவரும் தங்கள் முன்னேயே ரகசியம் பேசுவதை பார்த்து ராகவ் கோபத்தோடு நின்று இருந்தான்.

மூர்த்தி அவர்களிடம் வந்தவர் “உள்ள போலாமா.. ” என்றவர் வாசலில் நின்று இருந்தவர்களை கடந்து உள்ளே சென்றார்.

இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க… “ரதி உள்ள வா.. ” என்ற ராகவ் அவள் கையை பிடித்து இழுத்துக்கொண்டு போனான்.

“ம்ஹும்.. ” என்று அதை கண்டு பெருமூச்சுவிட்டவன் அவர்கள் பின்னால் உள்ளே சென்றான்.

ஹாலிற்கு வந்த மூர்த்தி ராக்கியை பார்த்தார்.

அவன் அமைதியாக அவர் எதிரில் நின்று இருக்க… “ஏன் தம்பி நிக்குறீங்க உக்காருங்க ” என்றவர் .

ராக்கி அமர்ந்ததும் “சொல்லுங்க தம்பி நீங்களும் என் பெண்ணும் ஒருத்தரை ஒருத்தர் காதலிக்குறிங்க .. என் பொண்ணை கல்யாணம் பனிக்கனும்னு CM ஐயே கூப்டு வந்து பொண்ணு கேட்டுட்டீங்க.. நீங்களே சொல்லுங்க என்ன பண்ணலாம். உங்க வீட்ல பெரியவங்க யாரும் இருக்காங்களா அவங்களை கூப்டு வந்திங்கன்னா மேற்கொண்டு பேசலாம் ” என்று தன் சம்மதத்தை கூறினார்.

அதை ரதி எதிர்பார்க்கவில்லை “அப்பா! ” என்று ஓடிச்சென்று அவரை கட்டிக்கொண்டவள் “ரொம்ப தேங்க்ஸ் ப்பா… நீங்க இவ்ளோ சீக்கிரம் எங்க காதலை ஏத்துப்பீங்கன்னு நான் நினைக்கவே இல்ல.. ” என்று அவர் தோளில் சாய்ந்து ஆனந்தத்தில் அழுதாள்.

“அப்பா! நீங்க கொஞ்சம் யோசிச்சு முடிவெடுங்க.. இப்படி எடுத்தேன் கவுத்தேன்னு  ரதி மாதிரி நீங்களும் முடிவெடுக்காதீங்க ” என்றான் ராகவ்.

அவன் பேசியது கேட்டு கோபம் வந்தாலும் ரதிக்காக  அமைதியாக அமர்ந்து இருந்தான் ராக்கி .

“டேய் நீ அமைதியா இரு அப்பாவுக்கு என்ன செய்யணும்னு தெரியும் . இந்த தம்பிக்கு என்ன குறைச்சல் ரதியும் அவரை காதலிச்சுட்டா.. அப்பறோம் என்ன ” என்று சோபனாவும் ரதியின் காதலுக்கு பச்சை கொடி காட்டிவிட.. தங்கள் காதலுக்கு இவ்வளவு சீக்கிரத்தில் சம்மதம் கிடைத்ததை நினைத்து சந்தோசமாக ராக்கியை  பார்த்தாள் .

அவள்  சந்தோசம் ராக்கிக்கும் தொத்திக்கொள்ள… யாரும் பார்க்கா வண்ணம் ரதியை பார்த்து இதழை குவித்து முத்தம் கொடுத்தான்.

அதை கண்டு வெட்கம் கொண்டாள் அவன் பீடா .

ரதியின் சந்தோசத்தை பார்த்த சோபனாவும், மூர்த்தியும் சந்தோஷம் அடைந்தனர்.

“தம்பி.. அடுத்து என்ன பண்ணலாம்னு நீங்களே சொல்லுங்க.. ” என்றார்.

“அப்பா! எதுக்கு இவ்ளோ அவசர படறீங்க.. இப்போத்தானே பேசிருக்கீங்க.. எல்லாம் பொறுமையா பாத்துக்கலாம்” என்றான் ராகவ் .

“டேய் நீ சும்மா இரு.. உனக்கு இதெல்லாம் புரியாது. இவங்க காதலிச்சது நமக்கு சீக்கிரமே தெரிஞ்சிருக்குன்னு சந்தோசப்படு “என்றவர் .

“தம்பி நீங்க சொல்லுங்க ” என்றார் .

“மாமா! எனக்கு சொந்தம்னு சொல்லிக்க.. என் தங்கச்சி ஓவியாவை தவிர வேற யாரும் கிடையாது. அப்பறோம் என் கூட இருக்க என் பசங்க , எங்க அண்ணன் இவங்க மட்டும் தான் நான் நல்லா இருக்கணும்னு நினைக்குறவங்க . எங்க கல்யாணத்துக்காக பேச ஓவியா தான் வருவா . அவளை வெச்சு எது பேசுறதா இருந்தாலும் பேசிக்கலாம் ” என்றவன் போனை எடுத்து மாரீஸுக்கு அழைத்தவன் ஓவியாவை அழைத்து வர சொன்னான்.

ஓவியாவின் பெயரை கேட்ட ராகவுக்கு இவ்வளவு நேரம் இருந்த டென்ஷன் காணாமல் போனது . எப்போது ஓவியா வருவாள் என்று வாசலை எதிர்பார்த்துக்கொண்டு இருந்தான்.

 அரை மணி நேரத்தில் ஓவியா அங்கே வந்தவள் “அண்ணா என்ன ஆச்சு? ” என்று பதற்றமாக உள்ளே வந்தாள்.

“ம்ம்.. எல்லாம் காதல் பிரச்சனை தான் . நீ வந்த பிறகு தான் எல்லாம் பேசணும்னு எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க ” என்றான் ராகவ் நக்கலாக .

அவன் சொன்னதை கேட்டதும் “அய்யய்யோ! என்ன காதல் பிரச்சனையா! ” என்று அவள் அதிர்ந்த்து ராகவ்வை பார்க்க… அவனோ எதுவும் தெரியாதது போல அவளை பார்த்தான் .

“உங்க அண்ணனுக்கு எதுவும் ஆகல… நீ ஏன் இவ்ளோ பதற்றமா  இருக்க… ” என்று ஓவியாவை இழுத்து தன் அருகில் நிறுத்தினார் சோபனா .

“அண்ணனுக்கா.. ” என்று ஓவியா புரியாமல் ராக்கியை ப்பார்க்க..

“உங்க அண்ணியை கல்யாணம் செய்துக்க நாள் பார்க்கணும் . வீட்ல பெரியவங்க யாரையாச்சும் கல்யாணம் பேச வர சொன்னாரு . என் வீட்டு பெரிய மனுசி நீதானே.. ” என்றான்.

“அண்ணா! என்ன சொல்ற ! நிஜமாவே உனக்கும் அண்ணிக்கும் கல்யாணமா!” என்று ஆச்சர்யமாக கேட்டாள் .

“ஆமா அவங்க ரெண்டு பேருக்கும் தான் கல்யாணம் . பின்னே உனக்கும் எனக்குமா கல்யாணம் ” என்றான் ராகவ் .

அவன் பேசியதை கேட்டு அதிர்ந்து அவனை பார்த்தாள்  ஓவியா

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured