EPISODE 26
“உனக்கும் எனக்குமா கல்யாணம்” என்றவனை மொத்த குடும்பமும் அதிர்ச்சியாக பார்க்க..
ஓவியா கண்களை சுருக்கி ராகவ்வை பார்த்தவள் “என்ன இப்படி சொல்லிட்ட .. ” என்பது போல பார்வையலேயே அவனை முறைத்தாள்.
“சாரி டி! ஒரு ஆர்வத்துல பேசிட்டேன் ” என்பது போல புருவம் சுருக்கி இதழ் வளைத்து அவளிடம் யாருக்கும் தெரியாமல் மன்னிப்புக்கேட்டவன் .
“அட ! என்ன அப்படி பாக்குறீங்க.. நான் சொன்னது உங்க அண்ணாவுக்கும் , ரதிக்கும் தான் கல்யாணம் . உனக்கா கல்யாணம்னு கேட்க வந்தேன். கூட என்னையும் சேர்த்துட்டேன்” என்று ஏதோ உளறி சமாளிக்க..
“நீ எப்போ தான் புரியுற மாதிரி பேசிப்பலகை போறியோ தெரியல.. ” என்று அவனை முறைத்த சோபனா.
ராக்கியை பார்த்து “தம்பி எங்களுக்கும் பெருசா சொந்த பந்தங்கள் எதுவும் கிடையாது. இவரோட தம்பி வீடு மட்டும் தான் எங்க கூட ரொம்ப நெருக்கமா இருக்காங்க . அப்பறோம் ரொம்ப பழகினவங்க , அக்கம் பக்கத்துல இருக்குறவங்கனு கொஞ்ச பேரை கூப்பிடணும் ” என்றார்.
“அத்தை அதுக்கு என்ன யாரை வேணும்னாலும் நீங்க கூப்டுக்கோங்க.. எனக்கும், என் பீடாவுக்கும் கல்யாணம் நடந்தா போதும். ” என்று ரதியை பார்த்தான்.
அவளுக்கோ இந்த கல்யாண பேச்சு எடுத்ததில் இருந்து என்னவோ ராக்கியை நேருக்கு நேராக பார்க்கவே கூச்சம் பிடுங்கித்தின்றது. அவனை பார்க்கும்போதெல்லாம் உள்ளுக்குள் ஒரு பிரளயமே ஏற்பட்டு விட்டது இந்த கொஞ்ச நேரத்தில் . இப்போதும் அப்படித்தான் ராக்கியை பார்க்க வெட்கப்பட்டவள் “அம்மா ! நீங்க பேசிட்டு இருங்க நான் உள்ள போறேன் ” என்று ஓடிவிட..
அவளின் வெட்கத்தை பார்த்தவன் “என் ரவுடி குட்டிக்கு வெட்கம் எல்லாம் வருமா ” என்று ஓடுபவளை ஆசையாக பார்த்தான்.
“ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் விரும்பிட்டீங்க.. இந்த ஜாதகம்.. பொருத்தம் அது இதுனு தேவை இல்லேன்னு நினைக்குறேன் ” என்ற மூர்த்தி .
“ஒரு நிமிஷம் என் பிரெண்ட் சாமிநாதன் இருக்கான். அவன் ஜோசியர் தான் அவன்கிட்டே அடுத்த முகுர்த்தம் எப்போன்னு கேக்குறேன் ” என்று தன் மொபைலை எடுத்து அவருக்கு கால் செய்தான்.
அதை கண்டு ராகவ் “அம்மா! ஏன் இவ்ளோ அவசரமா எல்லா ஏற்பாட்டையும் பண்றீங்க… கொஞ்சம் பொறுமையா யோசிச்சு கல்யாண ஏற்பாட்டை எல்லாம் பார்த்துக்கலாமே “என்றான் இவ்வளவு சீக்கிரமாக கல்யாண ஏற்பாடு நடப்பது சரியா என்று யோசனை அவனுக்கு .
“டேய் இதுல என்ன டா உனக்கு பிரச்சனை” என்றவர்.
“ரதிக்கு இப்பவே 26 வயசாச்சு.. நீ அம்பல பொறுமையா கல்யாணம் பண்ணிக்கலாம். ஆனா ரதி அப்படியா .. ஏற்கனவே அவளை பொண்ணு கேட்டு நம்ம தூரத்து சொந்தம் எல்லாம் வந்துட்டு இருக்காங்க. எப்படியும் அவளுக்கு கல்யாணம் பண்ண தானே போறோம் . அது அவ காதலிச்ச இந்த தம்பிக்கே பன்னுறதுல என்ன பிரச்சனை ” என்றார் சோபனா.
அவர் சொன்னதை கேட்டு ராகவுக்கு அவர்கள் முடிவு சரி தான் என்று தோன்றவே அமைதியாகி விட்டான் .
இங்கே ஓவியவோ அவனை முறைத்துக்கொண்டு நின்று இருந்தாள் அவளை பார்த்தவன் “என்ன ?” என்றான்.
தன் உதட்டை சுளித்தவள் திரும்பிக்கொள்ள… “என்ன ஆச்சு இவளுக்கு ஏன் இப்படி முகத்தை வெச்சிட்டு இருக்கா ” என்று யோசித்தபடி நின்று இருந்தான்.
ஜோசியரிடம் பேசிவிட்டு போனை வைத்த மூர்த்தி “தம்பி அடுத்த வர்ற திங்கள் ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்றான் . உங்களுக்கு அந்த முகுர்த்தம் ஓகேவா ” என்றார்.
அவர் சொன்னதும் இன்று என்ன கிழமை என்று யோசித்தான் ராக்கி .
இன்று ஞாயிற்றுக்கிழமை அப்போ இன்னும் ஒரு வாரம் இருக்கா என்று யோசித்தவன் “அங்கிள் இன்னும் ஒரு வாரம் இருக்கா! எங்க கல்யாணத்துக்கு ” என்றான்.
தான் இதுவே சீக்கிரம் என்று நினைத்துக்கொண்டு இருக்க.. ராக்கியோ ஒரு வாரமா ! என்று ஏதோ ஒரு வருடம் போல பேசுகிறான் என்று ராக்கியை பார்த்து முறைத்தான்.
ராக்கி பேசியதை கேட்டு சிரித்த மாளவிகா “ராக்கி அத்தான் ரொம்ப அவசரப்படாதிங்க.. எங்க அக்கா அடலீஸ்ட் ஒரு வாரமாச்சும் எங்க கூட இருக்கட்டுமே.. விட்டா இப்பவே அவளை உங்ககூட கூப்டு போயிடுவீங்க போல.. ” என்றாள் .
“நான் கூப்டு போக ரெடி தான். ஆனா எல்லாத்துக்கும் ஒரு நேரம் வரணுமே .. ” என்றவன் ஏக்கமாக ரதியின் அறையை பார்த்து பெருமூச்சு விட்டான்.
“சரி தம்பி அப்போ அடுத்த வாரம் திங்கள்கிழமை ப்ரம்ம முகுர்த்தத்தில் நம்ம வடபழனி முருகன் கோவில்ல கல்யாணத்தை வெச்சுக்கலாம் ” என்றார் மூர்த்தி.
ராக்கியும் சம்மதம் சொன்னவன் “சரிங்க அங்கிள் அப்போ நான் போய் கல்யாண வேலை எல்லாம் பாக்குறேன். மத்த எந்த வேலையா இருந்தாலும் என் வீட்டு பெரிய மனுஷியை கூப்டுக்கோங்க… ” என்றவன் .
“ஓவி .. போலாமா.. ” என்றான்.
“என்ன தம்பி அதுக்குள்ள கிளம்புறீங்க.. இருங்க டிபன் செய்றேன் சாப்பிட்டு போங்க ” என்றவர்.
“மாலு நீ வா ” என்று அவளை அழைத்துக்கொண்டு கிச்சனுக்கு செல்ல…
“அத்தம்மா.. இருங்க நானும் வரேன் ” என்று அவர் பின்னால் சென்றாள்.
“என்ன டி புதுசா அத்தம்மா ன்னு கூப்பிட்ற.. ” என்றார்.
“ஆமா நீங்க தான் இப்போ எனக்கு மாமியார் ஆகிட்டீங்களே “என்றாள்.
அவளை திரும்பி சோபனா பார்க்க… “அது.. என் அண்ணாவுக்கு நீங்க மாமியார் ஆகிட்டீங்களே.. அப்போ எனக்கு நீங்க அத்தம்மா தானே.. அதனால தான் அப்படி சொன்னேன் ” என்றாள்.
சோபனாவும் சிரித்துக்கொண்டு வேளைகளில் மூழ்கினார்.
இங்கே ஓவியா என்ன செய்கிறாள் என்று அவளை பார்க்க கிச்சனுக்கு சென்றுவிட..
தம்பி நீங்க டிவி பாத்துட்டு இருங்க… நான் கொஞ்சம் வெளியே போய்ட்டு வரேன் என்றவர் டிவியை ஆன் செய்து ரிமோட்டை அவன் கையில் கொடுத்துவிட்டு வெளியே கிளம்பினார்.
அவர் செல்லும் வரை சமத்து பையன் போல சோபாவில் அமர்ந்து இருந்தவன் மூர்த்தியின் தலை மறைந்த பிறகு வீட்டில் இருப்பவர்கள் என்ன செய்கிறார்கள் என்று நோட்டம்விட்டவன் அடுத்த நொடி ரதியின் அறைக்கதவை திறந்து உள்ளே சென்றான்.
தன் பெட்டில் படுத்திருந்த ரதி கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் தலையை தூக்கி யார் என்று பார்த்தவள் அங்கே ராக்கி கதவை சாற்றிவிட்டு உள்ளே வந்தவன் ரதி படுத்திருப்பதை பார்த்து “ஒய் பீடா ! அங்க எல்லாரும் நமக்கு கல்யாண ஏற்பாடு எல்லாம் தீவிர செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. நீ என்ன இங்க படுத்திருக்க.. ” என்றபடி உள்ளே வந்தவன் படுத்திருந்த ரதியின் அருகில் வந்து அவனும் படுத்துக்கொண்டான் .
சட்டென்று எழுந்தவள் “டேய் இங்க என்ன பண்ற.. வீட்ல யாரவது பாத்திரப் போறாங்க.. முதல்ல நீ வெளிய கிளம்பு ” என்று ராக்கியின் கையை பிடித்து இழுத்தாள்.
“போலாம் பீடா என்ன அவசரம் “என்று அவள் கையை பிடித்து தன் பக்கம் இழுத்தான்.
அவன் இழுத்ததில் ராக்கியின் மேல் போய் விழுந்தாள் .
“என்ன ராக்கி இது.. விடு டா.. யாராவது வந்திறபோறாங்க.. ” என்று அவன் மேல் இருந்து ரதி எழுந்துகொள்ள முயல..
“என்ன பீடா இரு போலாம் ” என்று அவளை மீண்டும் இழுத்து தன் மேல் இழுத்து போட்டு ரதியை கட்டிக்கொண்டான்.
“என்ன டா ரவுடி நீ .. உனக்கு பயமாவே இல்லையா .. யாராவது வந்துட்டா என்ன செய்றது ” என்று அவன் மார்பில் கோலம் போட்டபடி கேட்டாள் ரதி.
அவள் செயல் குறுகுறுக்க ராக்கியின் உடல் சிலிர்த்தது . “ஏய் என்ன டி பண்ற.. கையை வெச்சுட்டு சும்மா இரு..எனக்கு உடம்பெல்லாம் என்னவோ பண்ணுது ” என்று அவள் கையை பிடித்துக்கொண்டான் .
“ம்ஹும்.. கையை விடு டா… நீ மட்டும் என்னை உன் மேல போட்டுக்கிட்டு கட்டிபிடிச்சிட்டு இருக்க.. நான் உன்னை எதுவும் பண்ணக் கூடாதா.. ” என்று அவனிடம் செல்லமாக கோபித்துக்கொண்டாள் ரதி.
“பீடா எதுக்கு டி கோச்சுக்கிற.. நீ இப்படி பண்ணினா எனக்கு ஒரு மாதிரியா இருக்குல்ல.. அப்பறோம் நான் உன்னை எதுவும் செஞ்சுட்டேன்னா என்ன செய்றது அதனால தான் சும்மா இருக்க சொன்னேன் ” என்றான்.
“ஓஹோ.. உனக்கு மட்டும் தான் ஒரு மாதிரி இருக்குமா … எனக்கும் தான் நீ என்னை இப்படி கட்டிபிடிச்சுட்டு இருக்குறது என்னவோ பண்ணுது. இதையெல்லாம் நான் கண்ட்ரோல் பண்ணிட்டு அமைதியா இருக்கேன் . உன்னால அப்படி இருக்க முடியாதா டா… ” என்று அவன் மார்பில் தலை சாய்த்து படுத்துக்கொண்டாள் .
அவளை தன் மேல் இருந்து அருகில் படுக்க வைத்து எழுந்தவன் “உன்னை இந்த ட்ரேஸ்ல நான் சரியாவே பாக்கல .. அதான் பாத்துட்டு போலாம்னு வந்தேன் ” என்று படுத்திருந்த ரதியை ரசிக்க துவங்கினான்.
அவன் முன் படுத்திருந்தவள் “ராக்கி.. போடா.. எனக்கு ஒருமாதிரி இருக்கு ” என்று அவனை பார்க்க முடியாமல் கட்டிக்கொண்டாள் .
” நீ என்னை இப்படி கட்டிக்கிறது எனக்கும் தான் ஒரு மாதிரி இருக்கு… நான் என்ன செய்றது” என்று ராக்கியும் அவளை கட்டிக்கொண்டான்.
“இங்க பாரு டா செல்ல குட்டி.. என் பேபி ம்மா.. நீ முதல்ல வெளிய கிளம்பு டா.. எனக்கு நீ இங்க இருக்க இருக்க ரொம்ப பயமா இருக்கு.. என் வீட்ல இருக்கவங்க வந்திற போறாங்க” என்று அவனை வெளியே கிளம்ப சொன்னான் .
“சரி என்ன நான் இப்போ வெளிய போகணும் அவ்ளோ தானே உனக்கு.. ” என்று தன் மேல் இருந்தவளை மெத்தையில் படுக்க வைத்தவன் கட்டிலில் இருந்து கோபமாக எழுந்தான் .
அவன் கோபித்துக்கொண்டதை பார்த்த ரதி கட்டிலில் இருந்து எழுந்தவள் “டேய் டேய் என் ராக்கி பையா .. கோச்சுக்கிட்டயா டா.. “என்று கட்டிலில் முட்டிபோட்டு நின்றவள் ராக்கியின் கையை பிடித்து தன் பக்கம் திருப்பினாள் .
“அதான் தெரியுதுல்ல.. நான் உள்ள வந்ததுல இருந்து நீ என்னை வெளிய போ ன்னு துரத்திட்டே இருந்தா எனக்கு கோபம் வராம என்ன பண்ணும் ” என்று கோபத்தில் முறுக்கிக்கொண்டான்.
“சாரி டா ரவுடி பையா வீட்ல எல்லாரும் இருக்காங்க டா எனக்கு ரொம்ப பயமா இருக்கு டா அதான் பயத்துல உன்னை கிளம்ப சொன்னேன் ” என்றவள் .
“நான் தான் சாரி கேட்டுட்டேன்ல இன்னும் என்ன டா கோபம் உனக்கு ” என்றவள் ராக்கியின் முகத்தை தன் பக்கம் திருப்பினாள் .
“நீ இப்படி எல்லாம் சாரி கேட்டுட்டா அதை எல்லாம் என்னால ஒத்துக்க முடியாது ” என்றான் .
“வேற என்ன பண்ணனும் டா.. ” என்று குழைந்தாள் ரதி.
“ம்ம்.. எனக்கு முத்தம் குடு நான் உன்னை மன்னிச்சுறேன் ” என்றான்.
“டேய் இதுதான் சாக்குன்னு முத்தம் கேக்குற பாத்தியா!…” என்று அவனை குறும்பாக பார்த்தாள் .
“ஆமா அப்பறோம் எனக்கு சாக்கு கிடைக்குற அப்போ தானே நான் முத்தம் கேக்க முடியும் ” என்றான் .
“இப்போ உனக்கு முத்தம் வேணும் அப்படி தானே.. ” என்றாள் .
“ஆமா .. ” என்று ஆர்வமாக அவளை பார்த்தான் .
“சரி வா… ” என்று சிரித்தவள் ராக்கியின் கன்னத்தில் முத்தம் வைத்தாள் .
“ஏய் என்ன இது கன்னத்துல முத்தம் குடுக்கிற… இதெல்லாம் நான் ஒதுக்க மாட்டேன். எனக்கு இங்க முத்தம் வேணும் ” என்று ராக்கி தன் உதட்டை காட்டினான்.
“ராக்கி !!! ” என்று சிணுங்கிய ரதி “இங்க வேணாம் டா.. .” என்று அவள் தன் வீட்டை சுட்டிக்காட்டி கூற..
“ம்ஹும் எனக்கு இங்க தான் வேணும் ” என்று தன் இதழை குவித்து காட்டினான் ராக்கி .
“விட மாட்டியே… ” என்ற ரதி.
“சரி கண்ண மூடு ” என்றாள் .
ராக்கியும் அதற்கு சம்மதம் சொல்லி கண்களை மூடியவன் அவள் முன் தன் முகத்தை கொண்டு சென்றான்.
சிறிது நேரம் அப்படிய நின்றவன் “என்ன பீடா முத்தம் குடுக்க இவ்ளோ நேரமா… ” என்றான்.
“ம்ம்… நீ எவ்ளோ நேரம் நின்னாலும் நான் உனக்கு எதுவும் குடுக்க முடியாது . வீட்ல எல்லாரும் இருக்காங்க இங்க வெச்சு முத்தம் குடுக்க மாட்டேன் போடா.. ” என்று வாசல் கதவு பக்கம் நின்று ராக்கியிடம் பேசினாள் .
கண்களை திறந்து பார்த்த ராக்கி “ஏய் பீடா இப்படி முத்தம் குடுக்காம என்னை ஏமாத்த பாக்கறியா.. ” என்று அவள் அருகில் செல்ல போக..
ராக்கி தன்னை நோக்கி வரவும் வேகமாக கதவை திறந்து கொண்டு வெளியே ஓடிவிட்டாள் ரதி .
“அடிப்பாவி இப்படி என்னை ஏமாத்திட்டியே… பொரு டி.. உனக்கு இன்னும் 1 வீக் தான் டைம் . அதுக்கு அப்ரோம் நீ என்ன பண்ணினாலும் , எங்க ஓடினாலும் நான் உன்ன விடமாட்டேன் டி என் செல்லக்குட்டி.. அப்பறோம் எப்படி நீ என்கிட்டே இருந்து எஸ்கேப் ஆவேன்னு பாக்குறேன்” என்று அவர்கள் திருமணத்தை பற்றிய கனவுகளோடு அவள் அறையை விட்டு வெளியே வந்தான் .
