Home Uncategorizedஇராக்கதனின் ரதி அவள் part-1-9

இராக்கதனின் ரதி அவள் part-1-9

by Layas Tamil Novel
272 views

EPISODE 10

மாரீஸ் ராக்கியின் பின்னால்  பயந்து நின்று இருக்க.. வாசலில் தன்னோடு போலீசை அழைத்து வந்திருந்த ரதி வீட்டிற்குள் ராகியும், மாரீஸும் நிற்பதை பார்த்தவள்.

“கடைசில என் வீட்டுக்கே வந்துட்டானுங்களே… ” என்று நினைத்தவள். சோபனா ரதிக்கு போன் செய்து அவளுடைய நண்பர்கள் வந்திருக்கிறீர்கள் என்று சொன்னது இவர்களை தானா…” என்று அதிர்ச்சியானாள் .

“இந்த அம்மாவுக்கு அறிவே இல்ல.. என்னோட பிரெண்ட்ஸுன்னு யார் வந்தாலும் வீட்டுக்குள்ள விட்டுட  வேண்டியதா… ” என்று சோபனாவை திட்டிக்கொண்டே உள்ளே வந்தவள்.

“ஏய் நீங்க ரெண்டு பேரும்  எதுக்கு என் வீட்டுக்கு வந்திருக்கீங்க… ” என்று  ராகியின் அருகில் வந்தவள்.

“நீ தான் என்னோட பிரெண்டா.. ” என்றாள் .

“ஆமா  நேத்து தானே நம்ம பிரெண்ட்ஸ் ஆனோம்.. ” என்றான் ராகியும்.

“என்ன ராக்கி பொசுக்குன்னு பிரெண்ட்ஸுன்னு சொல்லிட்டே … ” என்ற மாரீஷை காலில் மிதித்து அவனை ஆப் செய்தான் ராக்கி .

“ரதி யார் அது.. இவங்க தான் உன்னை பார்க்க வந்திருக்குறதா அம்மா உனக்கு போன் பண்ணினதா … ” என்று கேட்டபடி வாசலில் நின்று இருந்த போலீஸ் ரதியை உரிமையாக பெயர் சொல்லி அழைக்க…

ரதி அவனை பார்த்து ஆமாம் என்பது போல தலையை ஆடியவள் “நீ ஏன் வாசல்லையே  நிக்குற டா உள்ள வா… ” என்று அழைத்தாள்.

“பாத்தியா ராக்கி  அந்த போலீஸு  உன் ஆளை பேர் சொல்லி கூப்பிடறதும், உன் ஆளு அவனை வாடான்னு உரிமையா பேசுறதையும் பார்த்தா எனக்கு என்னவோ இது சரி இல்லேன்னு தோணுது. இந்த புள்ளைக்கும் அவனுக்கும் எதுவும் கனெக்ஷ்ன்  இருக்கப்போகுது . அதை முதல்ல கன்பார்ம் பண்ணிக்க.. இலேன்னா நீ தான் பின்னாடி வருத்தப்படணும் ” என்று ராகிக்கு தூபம் போட்டான் மாரீஸ்.

அதை கேட்டவன் மாரீஸ் சொல்வது என்பதை போல தலையை ஆட்டியவன் வாசலில் ஷூவை கழட்டிவிட்டு வீட்டிற்குள் வர இருந்த போலீசை பார்த்தான்.

“டேய் உள்ள வராத… அங்கையே நில்லு… ” என்று கிட்சனின் வாசலில் இருந்து சோபனா கத்த …

“அம்மா ! இப்போ எதுக்கு அவனை உள்ள வர வேணாம்னு சொல்ற… ” என்றாள்  ரதி.

“ராக்கி அவங்க அம்மாவையே அந்த புள்ள எதிர்த்து பேசுது அந்த போலீஸ் காரனுக்காக அப்போ அவங்க ரெண்டு பேருக்குள்ளேயும் ஏதோ இருக்கு…” என்றான் மாரீஸ்.

“டேய் அப்படி எல்லாம் இருக்காது நீ கொஞ்சம் சும்மா இரு.. ” என்று அவனை அதட்டிய மாரீஸ் கிச்சனில் இருந்த சோபனாவை பார்க்க..

“அந்த ஆரத்தி தட்டை எடுத்துட்டு வாம்மா …” என்று கிச்சனுக்குள் குரல் கொடுக்க…

கையில் ஆரத்தி தட்டுடன் சிரித்த முகமாக ஓவியா கிச்சனில் இருந்து வெளியே வந்தவள் “இந்தாங்க ஆன்டி ” என்று தட்டை அவள் கையில் நீட்டினாள்.

“நீயே எடுத்துட்டு வாம்மா.. என் புள்ள IPS பாஸ் பண்ணி முதல் முதலா  வீட்டுக்கு வரான் . அவனுக்கு நீ ஆரத்தி எடுத்தா நல்லா இருக்கும்னு எனக்கு தோணுது ” என்று அவர் சொல்ல…

“பையனா!! ” என்று மாரீஸ் திரும்பி வாசலில் நின்று இருந்தவனை பார்க்க… அப்போது தான் ரதிக்கும் , அவனுக்கும் ஏதோ ஒரு ஒற்றுமை இருப்பது போல தோன்றியது .

சோபனா சொன்னதை கேட்டு ஏதோ திருப்தி ஆனது போல ராக்கிக்கு  தோன்ற…

டிவிக்கு பின்னால் இருந்த ரதியின் பேமிலி போட்டோவை பார்த்தான்.

ரதி அவள் அப்பாவின் மடியில் கையை ஊன்றி அமர்ந்து இருப்பது போலவே இந்த பக்கம் அவளை ஆச்சு அசலாய் உரித்து வைத்து இருந்த சிறுவன் அவளை போலவே சோபனாவின் மடியில் கையை ஊன்றி சிரித்துக்கொண்டு போட்டோவிற்கு போஸ் கொடுத்துக் கொண்டு இருந்தான்.

“தம்பி என்ன அந்த போட்டோவை அப்படி பாக்குறீங்க.. ” என்றார்.

“அம்மா இந்த போட்டோவுல ரதி மாதிரியே ஒரு சின்ன பையன் .. .” என்று ராக்கி கேட்க…

“அந்த சின்ன பையன் தான் இப்போ IPS பாஸ் பண்ணிட்டு வந்து வாசல்ல நிக்குறான். ரதியும் , என் மகன் ராகவும் ஒட்டி பிறந்தவங்க. அதான் தம்பி ட்வின்ஸ் ” என்று சொல்லிவிட்டு .

“வாம்மா  ஓவியா நீயே வந்து என் மகனுக்கு ஆரத்தி எடு… ” என்று அவளை அழைத்து வர…

ஓவியாவை பார்த்துக்கொண்டு நின்று இருந்த ரதி “நீங்க… நீ…. ” என்று அவளிடம் வர…

“சீனியர்!! நீங்க எங்க இங்க… ” என்றாள்  ரதியை பார்த்து.

“ஒய்! மினுக்கி… என் வீட்டுக்கே வந்து என்னையே கேள்வி கேக்குறியா ” என்று ரதி சிரித்தாள்.

“நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிறதை பார்த்தா ஏற்கனவே ஒருத்தருக்கு ஒருத்தர் தெரிஞ்சவங்க மாதிரி இருக்கே.. ” என்றார் சோபனா.

“ஆமாம்மா .. எனக்கும் அப்படித் தான் தோணுது ” என்ற மார்ஸ் ” ஓவியா உன் அண்ணி… ” என்று கூறியவன் நாக்கை கடித்துக்கொண்டு ராக்கியை பார்க்க..

ராக்கி “நீ மூடு.. ” என்று கையால் சைகை செய்தான்.

அவன் பேசுவதை வினோதமாக அனைவரும் பார்க்க அதற்கு மேல் பேசாமல் அமைதியாகி விட்டான் மாரிஸ்

“நான் எவ்ளோ நேரம் இப்படியே நிக்குறது . நீங்க எனக்கு ஆரத்தி எடுக்க போறிங்களா இல்ல.. நான் உள்ள வரட்டுமா ” என்று  இவ்வளவு நேரம் ஓவியாவையே பார்த்துக்கொண்டு நின்று இருந்த ராகவ் பேசிக்  கொண்டே உள்ளே வர முயல…

“டேய் டேய்.. அங்கையே நில்லுடா.. உள்ள வந்துறாத.. ” என்றவர் “நீங்க அப்பறோம் பேசிக்கோங்க.. முதல்ல என் புள்ளைய ஆரத்தி எடுத்து உள்ளே கூட்டிட்டு வரேன் ” என்று ஓவியாவை வரச்சொல்லி ராகவிற்கு  ஆரத்தி எடுக்க சொன்னார்.

ராகவை அப்போது தான் ஓவியா நன்றாக பார்த்தாள். கம்பீரமாக கட்டுமஸ்தான உடல் . கட்டை  மீசை லேசாக முறுக்கி விட்டிருந்தது. கீழ் உதட்டிற்கு கீழ் ஒரு கீற்று போல தழும்பு… போலீஸ் உடையில் மிடுக்காக நின்று இருந்தவனையே  உற்றுப்பார்த்தவளுக்கு ரதிக்கு ஆன் வேடம் போட்டு இருந்தாள்  எப்படி இருக்குமோ அதே போல இவன் இருபப்தை பார்த்ததும் பொசுக்கென்று சிரித்துவிட்டாள்.

“என்ன ம்மா சிரிக்குற… ” என்றார்

“ஒண்ணுமில்ல ஆன்டி நீங்க சூடத்தை பற்ற வைங்க… “என்றாள்  வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு .

ஓவியா தன்னை பார்த்து தான் சிரிக்கிறாள் என்று பார்த்ததுமே ராகவிற்கு புரிந்துவிட.. அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான்.

சோபனா சூடத்தை ஏற்ற…

“ஆன்டி நீங்களும்  வாங்க,… சீனியர் நீங்களும் வாங்க மூணு பேரும்  சேர்ந்து ஆரத்தி எடுக்கலாம் ” என்று அழைக்க…

மூவரும் சேர்ந்து ராகவிற்கு ஆரத்தி சுற்ற ஆரம்பித்ததும் . வாசலில் இருந்து வேகமாக ஓடி வந்த மாளவிகா “எனக்கும் சேர்த்தே ஆரத்தி எடுங்க… ” என்று ராகவை கட்டிக்கொண்டு நின்றவள் “டேய் எப்படி டா இருக்க.. ” என்றாள் .

“வந்துட்டியா… சரி பேசாம நில்லு டி…  ஆரத்தி சுத்தும்போது அமைதியா இருக்கனும்” என்று சோபனா அவளை அதட்ட…

உடனே அமைதியாக ராகவை இடித்துக்கொண்டு நின்று இருந்தாள் மாளவிகா.

ஏனோ மாளவிகா ராகவை  உரசிக்கொண்ட்னு நிற்பதை பார்த்ததும் ஓவியாவுக்கு உள்ளுக்குள் பற்றிக்கொண்டு வந்தது. “யாரு இவ .. இப்படி வெட்கமே இல்லாம உரசிட்டு நிக்குறா.. ” என்று பொறாமையில் பொங்கிய அவள் மனதை “அது யாரா இருந்தா உனக்கு என்ன.. ஒழுங்கா ஆரத்தி சுத்து” என்று அவள் மனம் அவளை அடக்கியது ..

இவ்வளவு நேரம் சிரித்த முகமாக இருந்த ஓவியாவின் முகம் திடீர் என்று  மாறிவிட்டதை கண்ட  ராகவ் அவள் தன்னை உரசிக்கொண்டு இருந்த மாளவிகாவை பார்த்து தான் இப்படி ஆகிவிட்டாள்  என்று ஓவியாவின் பார்வை முழுதும் இப்பொது மாளவிகாவின் மீதே இருப்பதை  கண்டவன்.

“சூப்பர்!.. பார்த்த அஞ்சு நிமிசத்துல என் கூட இன்னோரு பொண்ணு ஒட்டிக்கிட்டு நிக்குறதை பார்த்து பொறாமை படறாளே!.. ” என்று ஆச்சர்யமானவன் . வேண்டுமென்றே தன் கையை மாளவிகாவின் தோளில் போட்டு அவளை தன்னோடு சேர்த்து நிற்க வைத்தான் .

“அதை பார்த்ததும் ஓவியாவுக்கு மேலும் ஆத்திரம் அதிகம் ஆக … மெதுவாக சுற்றிக்கொண்டு இருந்த ஆரத்தி தட்டை வேகமாக அவள் சுற்ற …

“ஏய் மினுக்கி என்ன அவசரம் பொறுமையா சுத்து ” என்றாள்  ரதி .

“சாரி சீனியர் தட்டு சூடா இருக்கு… ” அதான் என்று மூக்கில் காற்றடித்தவாறு ராகவ்வையும் , மாளவிகாவையும் மாற்றி மாற்றி முறைத்தாள்.

அதை பார்த்த ராகவிற்கு  அம்மன் படத்தில் வரும் ரெமி ரெட்டி “சண்டா!!!… முனி… ” என்று சூனியம் வைப்பது போல ஓவியா தனக்கு ஆரத்தி சுற்றுவது அதை போலவே இருந்தது அவனுக்கு.

ஆரத்தி சுற்றி முடித்து சோபனா தட்டை வாங்கிக்கொண்டு வெளியே செல்ல…

“அண்ணா வா.. ” என்று ராகவ்வை கை பிடித்து உள்ளே அழைத்து வந்தாள்  மாளவிகா.

அவள் அண்ணா என்று அழைத்ததும் திரும்பி ராகவ் ஓவியாவை தான் பார்த்தான்.

மாளவிகாவை முறைத்துக்கொண்டு இருந்தவள் முகம் அண்ணா என்ற அழைப்பில் பிரகாசமாக மாற..

“கன்பார்ம் தான்.. ” என்று தனக்குளேயே ஓவியாவை தன் காதலியாக பிக்ஸ் செய்துவிட்டான் ராகவ்.

அனைவரும் உள்ளே வர… ரதி ஓவியவிடம் “மினுக்கி… என் வீடு உனக்கு எப்படி தெரியும். நீ என்ன இங்க ” என்றாள்  அவள் அருகில் நின்று இருந்த ராக்கியை ஒரு பார்வை பார்த்துவிட்டு .

“சீனியர்!! இன்னமும் நீங்க அந்த பேரை மறக்கலையா …” என்று ஓவியா சிணுங்க …

“என்ன செய்றது நீ கல்ச்சுரல்ஸ் அப்போ மேக் அப் போட்றேன்னு கோமாளி மாதிரி முகம் முழுக்க க்ளிட்டரை அப்பிட்டு  வந்து நின்ன அப்போ எனக்கு உன்னை அப்படி தான் கூப்பிட தோணுச்சு.. அது இப்போ வர மறக்கல .. ” என்றாள் .

“சீனியர் அதெல்லாம் இப்போ மறந்திருங்க.. என்னை ஓவியானே கூப்பிடுங்க… ” என்றவள்.

“உங்க வீட்டை என் அண்ணா தான் கண்டு பிடிச்சு கொடுத்தாரு.. ” என்றாள் .

“அண்ணா!” என்று கேட்ட ரதி மாரிஷை பார்க்க..

“அய்யே.. அவன் இல்ல இது தான் என் அண்ணா.. ” என்று ராக்கியை கை  காட்டினாள்.

“என்ன டி இது உன் அண்ணனா … இவன் பெரிய.. ” என்று ரதி பேச வர…

“சீனியர் என் அண்ணன்  ரவுடி தான் . அதை உங்க வீட்டு ஆளுங்க முன்னாடி சொல்லாதீங்க .. ” என்று அவளிடம் ஓவியா மெதுவாக கூற..

“நான் CM சிவராஜன் சார் கிட்டே பெர்சனல் பாடி  கார்டா இருக்கேன். உன் அபிஷியலா அவருக்கு நான் வேலை பாக்குறதுனால என்னை பார்க்க ரவுடி மாதிரி எல்லாரும் அவங்களாவே முடிவு பண்ணிட்டாங்க. அதே தான் உன் சீனியரும்  நினைச்சிட்டாங்க ” என்றான் ராக்கி .

“தம்பி நீங்க CM  கிட்டே வேலை பாக்குறீங்களா!!… என்னை ஒரு நாள் அவர்கிட்டே கூட்டிட்டு போறிங்களா.. எனக்கு அவர் கூட அவரு போட்டோ எடுத்துக்கணும் ” என்று சோபனா சொல்ல..

“போட்டோ தானே எடுத்துக்கலாம் ம்மா.. ” என்றான் ராக்கி .

“ம்மா சும்மா இருக்க மாட்ட  நீ.. .” என்று  ராகவ் அவரை அதட்ட..

“நீ போடா ஏதாவது சொல்லிக்கிட்டு… பேசாம இரு நீ ” என்று அவனை அடக்கியவர் .

“சரி சமையல் ஆகிடுச்சு வாங்க எல்லாரும் சாப்பிடலாம் ” என்று சமையல் கட்டிற்குள் சோபனா செல்ல..

அவரோடு மாளவிகாவும் , ஓவியாவும் தங்களை  ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து பேசிக்கொண்டே சென்றனர்.

“ரதி இவரை உனக்கு முன்னமே தெரியுமா ” என்றான் ராகவ் ராக்கியை குற்றவாளியை போல பார்த்து.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured