EPISODE 11
ராக்கியை எப்படி ரதிக்கு தெரியும் என்று கேள்வி கேட்க “அது.. அது வந்து.. .” என்று ரதி தயங்க..
“அட என்ன ரதி அதான் உன் ப்ரோ கேக்குறாருல்ல… என்னை எப்படி தெரியும்னு சொல்றது.. ” என்று தன் சட்டை கலரை சரி செய்தபடி ராகவ்வை பார்த்தான்.
“ராகவ் நான் அப்பறோம் சொல்றேன்.. நீ போய் டிரஸ் மாத்திட்டு வா .. அம்மா உனக்காக தான் எல்லாம் செய்து வெச்சிருக்காங்க.. “என்று அவனை உள்ளே அனுப்பி வைத்தவள் திரும்பி ராக்கியிடம்.
“நீங்க எதுக்காக என் வீட்டுக்கு வந்திங்க.. அதான் நேத்தே எல்லாம் முடிஞ்சு போயிருச்சே.. நேத்து நீங்க எனக்கு…ம்… ” என்று ராக்கியிடம் நெருங்கி வந்து பேச வந்தவள். அவர்கள் என்ன பேசுகிறார்களா என்று தன் காதுகளை கூர்மையாக்கிக்கொண்டு நின்று இருந்த மாரீஷை பார்த்தாள் ,
மாரீசன் முகத்தில் கையை வைத்து தள்ளிய ராக்கி உள்ளே அம்மாவுக்கு எதுவும் உதவி வேணுமான்னு கேட்டு செய் போ.. என்று அவனை அனுப்பிவிட்டு ரதியிடம் “நேத்து நான் உனக்கு… என்ன ?” என்றான் ஆவலாக.
“ம்ம்… ஒண்ணுமில்ல.. உங்க கூட ஓவியா மட்டும் வரல உங்களை என் வீட்டை விட்டு தொரத்தி இருப்பேன் . அவளால நீங்க தப்பிச்சீங்க… ” என்றாள் கோபமாக.
“ஏன் நான் உன் வீட்டுக்கு எல்லாம் வரக் கூடாதா ” என்றான்.
“ம்ஹும்.. என் வீட்ல உங்களுக்கு என்ன வேலை..”என்றாள் ரதி,
“உன்னை பார்க்க தான் வந்தேன். இனிமேல் வருவேன் ” என்றான்.
அவனை முறைத்தவள் “இங்க பாருங்க நேத்து நடந்தது நேத்தோட முடிஞ்சிருச்சு.. இனி அதை காரணமா வெச்சிட்டு இங்க வராதீங்க..” என்றாள் ,
“ஏன் ரதி அந்த தம்பியை வர வேணாம்னு சொல்ற…” என்று டைனிங் டேபிளில் உணவை வைத்துக்கொண்டே கேட்டார் சோபனா.
“ஒன்னும் இல்ல ம்மா.. நான் இங்க வரத்தை முன்னமே ரதி கிட்டே சொல்லையின்னு கோபம் அதனால தான் என்கிட்டே சொல்லாம வீட்டுக்கு வராதீங்கன்னு சொல்றா..” என்றார் ராக்கி.
“ஆமா இவ பெரிய கலெக்டரு.. இவ கிட்டே சொல்லிட்டு இந்த வீட்டுக்கு வரணுமா.. நீங்க நம்ம வீட்டுக்கு எப்போ வேணா வரலாம் தம்பி . அவ கிடக்குறா.. அவ பாக்குற வேளைக்கு பேச்சை பாரு..” என்றார் சோபனா.
“ஆமா ஆன்டி ரதி எங்க வேலை பாக்குறா…” என்றான் ராக்கி .
“அவ தினம் கவனி… ” என்று அவர் ரதி வேலை செய்யும் பத்திரிக்கை ஆபிஸ் பற்றி கூற வர…
அவர் பின்னால் நின்று சொல்ல வேண்டாம் என்று ரதி சைகை செய்யவும் அதை கவனித்தனர்.
“அவ தினம் ஒரு வேலை செய்யுறா தம்பி ஒரு இடத்துல சரியா வேலை பாக்க மாட்டேங்குறா எதாவது வம்பு இழுத்துட்டு வந்துடறா ” என்று சமாளித்தார்.
அதற்குள் அனைத்தும் டைனிங் டேபிளில் வைத்திருக்க… அனைவரையும் சாப்பிட அழைத்தார்.
மாளவிகா வெளியே வந்துவிட.. சமையல் காட்டில் ஓவியா செய்து வைத்திருந்த பேப்பர் சிக்கனை எடுத்து ஒரு கிண்ணத்தில் மாற்றிக்கொண்டு இருந்தாள் .
அனைவரும் டைனிங் டேபிளில் அமர்ந்து இருக்க.. ரெடி ஆகி வந்த ராகவ் அங்கே ஓவியா இல்லாதது கண்டு எங்கே அவள் என்று தேடினான். அவள் கிச்சனுக்குள் இருப்பதை கண்டதும் சத்தமில்லாமல் கிடச்சனுக்குள் நுழைந்தான்.
சமைத்த பெப்பர் சிக்கனை பாத்திரத்தில் மாற்றிவிட்டு கை கழுவி திரும்பிய ஓவியா அவளுக்கு பின்னால் மிக அருகில் நெருங்கி நின்று இருந்த ராகவை பார்த்ததும் பக்கென்றது.
அதில் அப்படியே அவள் பின்னால் நகர சுவற்றில் இடித்துக் கொண்டு நின்றாள்
அவள் அதிர்ச்சியான முகத்தை பார்த்து சிரித்தவன் “ஹலோ மினிக்கி!! என்ன பண்ணிட்டு இருக்க.. எங்க வீட்டுக்கு கிச்சன்ல உனக்கு என்ன வேலை” என்றான்
“இங்க பாருங்க மின்னுகின்னு கூப்பிட்ற வேலை எல்லாம் வேணாம் ” என்று அவனை முறைத்தவள் “பாத்தா எப்படி தெரியுது சமையல் செஞ்சுட்டு இருந்தேன் ஏன் நாங்க எல்லாம் உங்க வீட்டு கிச்சன்னுக்கு வரக்கூடாதா” என்றாள்.
“ஓ !! தாராளமா வரலாமே அதுக்கு நீ இந்த வீட்ல ஒருத்தியா இருக்கணும்” என்றான்.
“ரதி சீனியர் என்னோட ஃப்ரெண்ட் அந்த உரிமையில நான் உங்க வீட்டு கிச்சனுக்கு வந்து இருக்கேன். இதுல உனக்கு என்ன வந்துச்சு” என்று ராகவ்வை தாண்டி சென்று பாத்திரத்தில் வைத்திருந்த சிக்கனை எடுத்துக் கொண்டு வெளியே செல்லப் போக…
” நான் சொன்ன அர்த்தமே வேற…” என்றவன் “நீ இந்த வீட்டு மருமகளா இருந்தா கிட்சனுக்குள்ள வரலாம்” என்றான் குறும்பாக.
வெளியே செல்ல போனவள் ராகவன் வார்த்தைகளை கேட்டு நின்று அவனை திரும்பிப் பார்த்து “மருமகளா! யாருக்கு” என்றாள் ,
“வேற யாருக்கு என்னோட அம்மாவுக்கு தான்” என்றான்.
“ஓஹோ அப்போ நான் கல்யாணம் பண்ணிக்கிற மாதிரி இந்த வீட்ல எந்த ஆளுமே இல்லையே” என்றாள் வேண்டுமென்றே….
“ஏன் நான் இருக்கேனே.. என்ன பாத்தா அப்படி தெரியலையா” என்றான்.
“நீயும் இந்த வீட்டில் ஒரு ஆள் தானே உன்னை நான் மறந்தே போயிட்டேன்.. எனக்கு உன் மேல இன்ட்ரஸ்ட் இல்ல” என்றாள்.
“அப்படியா! என் மேல உனக்கு இன்ட்ரெஸ்ட் இல்லையா” என்றான்.
“ஆமா.. இல்ல” என்று ஒரே வார்த்தையில் அவள் முடித்துக் கொள்ள..
“அப்போ நான் மாளவிகா தோள்ல கை போட்டு அவ கூட நெருக்கமா நின்னுட்டு இருந்தபோ நீ எதுக்கு அவளை முறச்சுட்டே இருந்த… அவ கூட நான் கிலோசா இருந்ததை பார்த்துட்டு உனக்கு ஏன் அவ்ளோ கோபம் வந்துச்சு… அப்பறோம் மாளவிகா என்னை அண்ணான்னு கூப்பிட்டதும் உன் முகம் சந்தோசமா மாருச்சே… அதை நான் கவனிச்சேன். இதுல இருந்து என்ன தெரியுது . அப்போ உனக்கு என் மேல இன்ட்ரெஸ்ட் இருக்குனு எனக்கு நல்லாவே தெரியுது , நான் இன்னோரு பொண்ணு கூட கிலோசா இருந்ததை பார்த்து உனக்கு பொசசிவ்வா இருந்துச்சா ” என்றான்.
“எனக்கா உன் மேல பொசசிவா..” என்று கேட்டுவிட்டு சத்தமாக சிரித்தவள்
“அந்த மாதிரி எந்த ஒரு எண்ணமும் எனக்கு இல்லை, நீங்க யார் கூட நெருக்கமா இருந்தா எனக்கு என்ன வந்துச்சு அதை பார்த்து நான் ஏன் பொறாமைப்படணும் சும்மா கற்பனை பண்ணிட்டு இருக்காதீங்க” என்றாள்.
அவள் கையைப்பிடித்து தன் பக்கம் இழுத்தவன் “நான் கற்பனை பண்ணல உண்மையத் தான் சொல்றேன். நான் ஒரு IPS ஒபிபிசெர் எனக்கு தெரியும். என் முன்னாடி நிக்கிறவங்களோட மனநிலையை என்னால யூகிக்க முடியும்” என்றான.
“ஓஹோ இத வேற யார்கிட்டயாவது போய் சொல்லுங்க. நீங்க பேசறது எல்லாம் நம்புற அளவுக்கு நான் ஒன்னும் முட்டாள் கிடையாது. முதல்ல இப்படி தொட்டு பேசறது நிறுத்துங்க கைய விடுங்க” என்று அவன் கையை உதறிவிட்டு திரும்பி செல்ல போனவள்.
“அபப்டியே என் மனசுல இருந்ததை படம் பிடிச்சு காட்டிட்டானே !! இவன்கிட்டே கொஞ்சம் இல்ல… ரொம்பவே உஷாரா இருக்கனும் ” என்று நினைத்துக்கொண்டே வெளியே செல்ல போனாள்.
“ஒரு நிமிஷம்..” என்று அவள் முன்னே வந்தவன். “இந்த சிக்கன கொடு” என்று அவள் கையில் இருந்து பாத்திரத்தை வாங்க ராகவ்வை ஓவியா புரியாமல் பார்த்தாள் .
“அப்போ நெஜமாவே உனக்கு என் மேல இன்ட்ரஸ்ட் இல்ல அப்படித்தானே” என்றான்.
“ஆமா இது என்ன கேள்வி நீங்களே என்ன இப்ப தான் பார்த்து இருக்கீங்க நானும் உங்களை இப்பதான் பார்த்து இருக்கேன். எப்படி பார்த்ததும் எனக்கு உங்க மேல இன்ட்ரஸ்ட் வரும் தேவையில்லாத கற்பனையும் மனசுல வளர்த்துட்டு இருக்காதீங்க அது சரிப்பட்டு வராது” என்றாள்.
அதற்குள்ளாக வெளியே இருந்த சோபனா “ஓவியா அந்த பெப்பர் சிக்கன் கொஞ்சம் எடுத்துட்டு வாம்மா எல்லாருக்கும் பரிமாறனும்” என்று கிச்சனை நோக்கி குரல் கொடுக்க..
“இதோ வரேன் ஆன்ட்டி” என்றவள் ராகவ்வை தாண்டி சிக்கனை எடுக்க போக
அவளை போக விடாமல் தடுத்து சுவற்றில் அழுத்தி ஓவியாவை நிற்க வைத்தவன் அவள் முகத்தை பிடித்து அவள் கண்கள் இரண்டையும் கூர்ந்து பார்க்க..
ராகவ்வின் இந்த திடீர் செயலால் ஓவியா நிலை தடுமாறினாள். அவள் மனம் படபடவென அடித்துக் கொண்டது. அதன் எதிரொளியாக அவள் கண்கள் பட்டாம்பூச்சி இமைப்பதை போல வேகமாக இணைத்துக் கொண்டிருக்க… “இப்ப எதுக்கு இவ்வளவு பதட்டப்படற உன் மனசுல தான் ஒன்னும் இல்லன்னு சொல்றியே அப்புறம் என்னை ஏன் இவ்வளவு பதட்டமாக பார்க்கிற” என்றான் ராகவ் .
“ஒரு பொண்ணுகிட்ட திடீர்னு இப்படி அத்துமீறி நடக்குறவங்கள பாத்தா எந்த பொண்ணுக்கும் பதட்டமா பயமா தான் இருக்கும். அதுதான் எனக்கும் முதல்ல இந்த மாதிரி நடந்து கொள்வது நிறுத்துங்க.. நகருங்க என்னை விடுங்க” என்று அவனை தள்ள ஓவியா முயற்சிக்க..
அவளிடம் இருந்து விலகாமல் நின்றிருந்த ராகவ் “உன் மனசுல நான் இருக்கேன் அது எனக்கு நல்லா தெரியும். கண்டதும் காதல் வரக்கூடாதுன்னு எதுவும் சட்டம் இருக்கா என்ன.. எனக்கு உன்ன பார்த்ததும் பிடிச்சிருச்சு உனக்கும் என்ன பிடிக்கும்னு உன்னோட பொசசிவ்வில் இருந்தே நான் கண்டுபிடிச்சிட்டேன். அதனால என்னோட காதலுக்கு அச்சாரமா நான் உனக்கு ஒன்னு இப்ப கொடுக்கப் போறேன்” என்றவன் ஓவியாவை பார்க்க.
“இந்த காதல் கீதல்னு பைத்தியம் மாதிரி பேசிட்டு இருக்காதீங்க. ஒரு போலீசா இருந்துட்டு ஒரு பொண்ணுகிட்ட இப்படித்தான் அனாவசியமா பேசவும் அத்துமீறி நடக்கவும் செய்வீங்களா முதல்ல என்ன விடுங்க” என்று அவன் மார்பில் கை வைத்து ராகவ்வை தன்னிடம் இருந்து ஓவியா விளக்க முயற்சிக்க…
“இரு போகலாம் என்ன அவசரம். நான் கொடுக்கிற காதல் பரிச வாங்கிட்டு அதுக்கப்புறம் நீ தாராளமா போகலாம்” என்றவன்.
கண நேரத்தில் அவள் முகத்தை பிடித்து தன் பக்கம் இழுத்தவன் குனிந்து ஓவியாவில் இதழை தன் வசமாக்கி இருந்தான்.
இதை சற்றும் எதிர்பாராத ஓவியா அதிர்ந்தவள் ராகவ்வின் மார்பில் கை வைத்து அவனை தன்னிடம் இருந்து பிரிக்க முயற்சிக்க..
அவளிடம் இருந்து விலகாமல் சுவற்றில் ஓவியாவை அழுத்தி இருந்தவன் ஆழ்ந்த அழுத்தமான ஒரு முத்தத்தை கொடுத்துவிட்டு அவளை விட்டு விலக..
தனக்கு ராகவ் முத்தம் கொடுத்ததை நம்ப முடியாமல் அதிர்ந்து அப்படியே சுவற்றில் பல்லி போல ஒட்டிக்கொண்டு ஓவியா நின்றிருக்க..
அவள் கீழ் உதட்டை தன் இரு விரல்களால் கசக்கியவன் அந்த விரல்களுக்கு முத்தம் வைத்து “சும்மா சொல்லக்கூடாது உன் உதட்டுல அவ்ளோ கிக் இருக்கு.. உனக்கு முத்தம் கொடுத்ததும் நான் அப்படியே மிதக்குற மாதிரி இருந்துச்சு…” என்றவன்.
தன் உதட்டில் இருந்த ஈரத்தை துடைத்துக்கொண்டே “உன் ரொம்ப ஸ்வீட்டா இருக்குடி.. அதுவும் தேன் மாதிரி… ” என்றவன் சிக்கனை எடுத்துக்கொண்டு வெளியே சென்றான்.
அவன் சென்றும் ஓவியா அப்படியே நின்று இருந்தாள் . அவளால் இங்கு நடந்ததை நம்ப முடியவே இல்லை எப்படி இவன் இப்படி தன்னிடம் அத்துமீறலாம் என்று ஆத்திரமும் கோபமும் அவளுக்கு வந்தது.
அவள் மனதில் ராகவ்வை நினைத்து ஒரு வித உணர்வு ஏற்பட்டது என்னவோ உண்மைதான் அதற்காக எடுத்ததுமே இப்படி தடாலடியாக முத்தத்தை கொடுத்து அவளை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்த ராகவ்வை நினைக்கையில் அவளுக்கு கோபம் தான் வந்தது . ஒரு வித பதட்டத்தோடு நின்றவள் தன் உதட்டை அழுந்த துடைத்துவிட்டு வெளியே சென்றாள் .
“என்னடா சிக்கனை நீ எடுத்துட்டு வர ஓவியா என்ன செய்துட்டு இருக்கா” என்றார் சோபனா.
“அவங்க ஏதோ வேளையில் பிஸியா இருந்தாங்க.. .நான் கிச்சனுக்கு தண்ணி குடிக்க போனேன். நீங்க சிக்கன் வேணும்னு சொன்னதும் நான் எடுத்துட்டு வாட்நத்துட்டேன் ” என்றவாறு அவர் கையில் பாத்திரத்தை கொடுத்துவிட்டு வந்து டைனிங் டேபிளில் அமர்ந்தான் .
“இன்னும் என்ன வேலை செய்துட்டு இருக்கா இந்த பொண்ணு . வந்ததுல இருந்து சமையல் கட்டே கதின்னு இருக்கா… என் வீட்லயும் பொண்ணுங்கன்னு ரெண்டு இருக்கே.. ஒரு வேலைக்கும் லாயக்கு இல்லை ” என்று ரதியையும், மளவிகாவையும் திட்டிக்கொண்டே கிட்சேன் செல்லப்போனார் .
“அக்கா பாரு அம்மா நாம ரெண்டு பேரையும் எப்படி திட்டுறாங்கனு.. இதுக்கு எல்லாம் காரணம் யூனூடே அந்த ஜூனியர் தான்.. சொல்லி வை அவங்க கிட்டே… ” என்று புலம்பினாள்.
“அவ சின்ன பொண்ணு டி. எஹடோ ஆர்வத்துல சமையல் செய்ய போய்ட்டா விடு .. பாத்துக்கலாம் ” என்று ரதி மாளவிகாவை சமாதானம் செய்தாள் .
அதற்குள்ளாக கிச்சனில் இருந்து வெளியே வந்த ஓவியாவிடம் வந்த சோபனா
“என் மகளை பார்க்க. வீட்டுக்கு வந்துட்டு நீயே எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்துட்டு இருக்க… என்னம்மா இது வா முதல்ல நீ வந்து சாப்பிடு” என்று அவளை அழைத்து வந்து டைனிங் டேபிளில் அமர வைத்து அவளுக்கு உணவு பரிமாற அனைவரும் சாப்பிடத் தொடங்கினர். ஓவியா ராகவன் பக்கம் திரும்பவே இல்லை அவன் மீது பயங்கர கோபத்தில் இருந்தாள்
இங்கு ராக்கி ரதியை விழுங்குவது போல பார்த்துக் கொண்டே அவன் தட்டிலிருந்து உணவுகளை சாப்பிட்டு முடித்திருக்க… பரஸ்பரம் ஒருவருக்கொருவர் நல்லவிதமாக பேசி பழகிவிட்டு ரதியின் வீட்டிலிருந்து அனைவரும் கிளம்பினர்.
ரதியின் வீட்டில் இருந்து கிளம்பும் வரை ஓவியா ராகவ்வை திரும்பியும் பார்க்கவில்லை. அவள் ஒரு முறையாவது திரும்பி தன்னை பார்த்து விடுவாளா என்று ஏக்கத்தோடு ராகவ் பார்த்துக் கொண்டிருக்க… ஆனால் அவள் அவனை ஏங்க வைத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டாள்.
“அவ்வளவு அழுத்தக்காரியாடி நீ… கிளம்பி போற வரைக்கும் என்னை ஒரு முறை கூட பாக்காமயே போயிட்ட இல்ல… இதுக்கு நீ கண்டிப்பா அனுபவிச்சே ஆவ… எங்க போய்ட போற இங்க தானே இருக்க போற.. உன்ன நெக்ஸ்ட் மீட் பண்றப்போ உன் வாயாலயே என்ன லவ் பண்றேன்னு சொல்ல வைக்கிறேனா இல்லையா பாரு” என்று தனக்குள்ளேயே ஓவியாவிடம் பேசிக் கொண்டிருந்தான்.
