Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 101

உன் ரகசிய ரசிகை நான் 101

by Layas Tamil Novel
326 views

சந்தோஷ் “ஒன்று…. இரண்டு….” என்று எண்ண ஆரம்பித்தான். எண்ணிக் கொண்டிருக்கும்போதே கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் தங்களுக்குள் யார் இதைச் செய்திருப்பார்கள் என்று தங்களைச் சுற்றி இருப்பவர்களைப் பார்த்துக் கொண்டிருக்க….

சந்தோஷ் “ஏழு…..எட்டு….” என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே கூட்டத்திலிருந்து கையை உயர்த்தி “சார் நான் தான் இதைச் செய்தேன்,” என்று சொல்லி ஒருவன் முன்னே வந்து நின்றான். அவனைப் பார்த்துப் புருவம் சுருக்கிய சந்தோஷ், “நீயா இதைச் செஞ்ச?” என்று கேட்டான்.

ராதா ஆடிய மணலில் கண்ணாடி கலந்தது நான் தான் என்று தானாக வந்து ஒப்புக்கொண்டவன் ராதா காலேஜ் சேரும்போது அவளை ராக் செய்த கிருஷ்ணா தான். அவனுக்கும் அவளுக்கும் இருந்த பிரச்சனை அன்றோடு முடிந்து விட்டது. ஆனால் அதை மனதில் வைத்து அவன் இவ்வளவு தூரம் செய்திருப்பானா? என்று யோசித்துக் கொண்டிருந்தான் சந்தோஷ்.

“உனக்கும் ராதாவிற்கும் அப்டி என்ன பிரச்சனை? நிஜமா நீதான் செய்தாயா?” என்றான் கிருஷ்ணாவைப் பார்த்து சந்தோஷ். “ஆமா சார் நான் தான் செஞ்சேன். ராதாவுக்கு எனக்கும் அவ இங்க காலேஜ்ல சேர்ந்த அன்றில் இருந்து ஒத்து வரல…. அதனாலதான் அவளை எப்படியாவது பழி வாங்கணும்னு சொல்லிட்டு மணலின் மேல் அவ டான்ஸ் ஆடுகிறாள் என்று தெரிந்து அதில் கண்ணாடியை உடைத்துக் கலந்துவிட்டேன்,” என்றான்.

“ஓ அப்போ நீ தான் ராதா ஆடின மணலில் கண்ணாடி உடைச்சுக் கலந்துட்டேன்னு ஒப்புக்கொள்கிறாய் அப்படித்தானே,” என்று கிருஷ்ணாவிடம் கேட்டான் சந்தோஷ். கிருஷ்ணா “ஆமா சார். எத்தனை முறை நீங்க கேட்டாலும் என்னோட பதில் இதுதான். நான் தான் கண்ணாடிச் சில்லுகளைக் கலந்தேன். அவளுக்கு இப்படியானதுக்குக் காரணம் நான் தான்….” என கத்திக்கொண்டே சொன்னான் கிருஷ்ணா.

“ஒரு விஷயத்தைத் திரும்பத் திரும்ப நீ சொல்லிட்டா…. அந்த விஷயத்தை நீதான் செஞ்சேன்னு ஆகிடாது கிருஷ்ணா. இந்த விஷயத்தை நீ செய்யலன்னு நான் சொல்றேன். வேற யாரோ செய்த வேலைக்கு பதிலாகத் தான் நீ இப்போ எல்லாரும் முன்னாடியும் வந்து செய்யாத குற்றத்தை செஞ்சதா ஒத்துக்கிட்ட,” என்றான் சந்தோஷ்.

சந்தோஷ் வேறு யாரோ செய்த குற்றத்திற்குப் பதிலாக….. தான் அந்தக் குற்றத்தை செய்ததாக பொய்யாக ஒப்புக்கொண்டதை சந்தோஷ் சரியாகக் கவனித்து விட்டான் என்று உள்ளுக்குள் ஒரு நிமிடம் பதறிய கிருஷ்ணா சந்தோஷைப் பார்த்து அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல், “சார்…. நீங்க என்ன தேவையில்லாம உளறிட்டு இருக்கீங்க. நான் தான் இந்தக் தப்பைச் செய்தேன் ஒத்துக்கிட்டேனே…. அப்புறம் எதுக்கு மறுபடியும் துருவி கேட்டுட்டு இருக்கீங்க…. என்னை போலீஸ்ல பிடிச்சுக் கொடுக்கணுமா இல்ல வேற ஏதாவது தண்டனை தரனுமா….. சொல்லுங்க. எதுவா இருந்தாலும் எனக்குக் கொடுங்க. நான் அதை ஏத்துக்கத் தயாராத்தான் இருக்கேன்,” என்றான் கிருஷ்ணா.

கிருஷ்ணாவின் அருகில் வந்த சந்தோஷ் அவன் தோளில் கையைப் போட்டு தன்னுடன் அழைத்து நடந்து கொண்டே…. “பொதுவா ஒரு விஷயம் சொல்லுவாங்க கிருஷ்ணா. எப்பவுமே தப்பு செய்றவங்கள விட அதைச் செய்யத் தூண்டிவிட்டவங்களுக்குத் தான் தண்டனை அதிகம். நீ தான் இதைச் செய்ததாக ஒத்துக்கிட்டாலும் …. ஆனா இதைத் தூண்டி விட்டவங்களுக்குத்தானே முக்கியமா நான் தண்டனை கொடுக்கணும்,” என்று சந்தோஷ் கிருஷ்ணாவை அழைத்துக் கொண்டே போய் நேராக மாலாவின் முன் நிற்க வைத்தான். இதுவரை அவன் சொன்னதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த மாலா சரியாகத் தன் முன் வந்து நின்று சந்தோஷைப் பார்த்ததும் பயத்தில் நடுங்க ஆரம்பித்தாள்.

மாலாவிடம் போய் நின்ற சந்தோஷ் கிருஷ்ணாவைப் பார்த்து, “நீ இந்தக் குற்றத்தைச் செய்ததா ஒத்துக்கிட்ட. உன்னைச் செய்யச் சொன்னது மாலா தானே,” என்று கேட்டான் சந்தோஷ். சரியாகத் தன்னை ராதாவிற்கு எதிராக இந்த வேலையைச் செய்யச் சொன்னது மாலா தான் என்று கண்டுபிடித்து அவள் முன்னே தன்னைக் கொண்டு வந்து நிறுத்தி விட்டானே என்று நினைத்த கிருஷ்ணா. சந்தோஷிடம், “சார்… என்ன நீங்களே ஒன்னு புதுசா கதை கட்டி விடுறீங்க… இவங்க யாருன்னு எனக்குத் தெரியாது!! இவங்க ஒன்னும் எனக்குத் தப்பா சொல்லிக் கொடுக்கவில்லை,” என்றான் கிருஷ்ணா.

“ஓ…. அப்போ மாலாவை உனக்கு யாருன்னு தெரியாது அப்படித்தானே,” என்று கேட்டான் சந்தோஷ். கிருஷ்ணா “ஆம்…” என்று தலையாட்டிக் கொண்டிருக்கும்போது கூட்டத்திலிருந்து வந்த ஒருவன், “சார் இவன் பொய் சொல்றான். இன்னைக்கு ப்ரோக்ராம் ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடி தான் மாலாவும் கிருஷ்ணாவும் பாத்ரூம் கிட்ட நின்னு ஏதோ தீவிரமா பேசிட்டு இருந்தாங்க. அந்த வழியா நான் வந்தப்போ இவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சு ஒன்னா பார்த்தேன் சார்… கிருஷ்ணா பொய் சொல்கிறான்…” என்று அந்த மாணவன் வந்து தானாகவே சொல்ல.

அந்த மாணவனை அழைத்த சந்தோஷ், “நிஜமாகத்தான் நீ சொல்றியா? அப்போ கிருஷ்ணா பொய் பேசுறானா?” என்று கேட்டான். “ஆமா சார் நான் பொய் சொல்லல. நிஜமாகத்தான் சொல்கிறேன்,” என்று சொன்ன விஷயங்கள் உண்மையென்று அந்த மாணவன் அடித்துக் கூற. அந்த மாணவன் சொல்வதைக் கேட்ட மாலாவிற்கு மேலும் பயம் தொற்றிக்கொள்ள யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து மெதுவாக நழுவப் பார்க்க சந்தோஷ் சட்டென்று எட்டி அவளைப் பிடித்து நிறுத்தியவன்.

தன் அருகில் இருந்த இரு மாணவிகளை அழைத்து மாலாவைப் பிடித்துக் கொடுத்தவன், “கொஞ்ச நேரத்தில இங்கே போலீஸ் வந்துவிடுவார்கள். அதுவரை இவங்க ரெண்டு பேரையும் பத்திரமாப் பாத்துக்கோங்க….” அந்தப் பெண்கள் இருவரும் மாலாவை ஆளுக்கு ஒரு புறம் என்று அவள் கைகளில் பிடித்துக் கொண்டு அவளை எங்கேயும் போக விடாமல் பார்த்துக் கொண்டனர். கிருஷ்ணாவையும் மாலாவையும் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டுத் தன்னுடன் ஸ்டாப்பிடம் ஒப்படைத்து விட்டு ராதாவைப் பார்க்க ஹாஸ்பிடல் சென்றுவிட்டான்.


சுவிட்சர்லாந்தில் இருந்த சங்கவி டென்மார்க் சென்று விட்டு நான்கு நாட்களில் வந்து விடுவேன் என்று சொல்லிச் சென்ற ஆதி நான்கு நாட்கள் கடந்தும் இன்னும் வராமல் இருக்கவே…. டென்மார்க்கில் இருக்கும் தனது ஆட்களுக்கு போன் செய்து ஆதி பற்றிய விபரங்களைக் கேட்டாள். அவர்கள் ஆதி இந்த நான்கு நாட்கள் என்னென்ன செய்து கொண்டு இருந்தான் என்று ஆதியைப் பற்றி அவன் சேகரித்த விஷயங்கள் அனைத்தையும் சொன்னவன். அவன் துர்காவுடன் ராசியாகி விட்டது அவர்களுக்குத் தெரியாது.

இன்று ஆதி தன் ஃபிரெண்ட்ஸ் உடன் பார்ட்டிக்குச் சென்று இருக்க… அங்கிருந்து சங்கவியின் ஆட்கள் அவளுக்கு வீடியோ கால் செய்து அங்கு நடந்து கொண்டு இருப்பதை நேரலை செய்து கொண்டு இருந்தான். அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க…. லதாவும் துர்காவும் ஒரு சோபாவில் அமர்ந்து ஜூஸ் குடித்துக் கொண்டு இருக்க… மற்றவர்கள் அருகில் அமர்ந்து சியர்ஸ் சொல்லி மது அருந்திக் கொண்டு இருந்தனர்.

ஆதி துர்காவைப் பார்த்துக் கொண்டே தன் கையில் இருந்த மதுவை அருந்திக் கொண்டு இருக்க… அனைவரும் இருப்பதை நினைத்துத் துர்கா அவன் பக்கம் திரும்பினாலும் பெரிதாக அவனைக் கண்டுகொள்ளாதவள் போல லதாவிடம் பேசிக்கொண்டு இருந்தாள். விக்கி ஆதியிடம், “ஏன் ஆதி சுவிட்சர்லாந்துல வேலை எல்லாம் எப்படிப் போகுது,” என்றான். “ம்ம்ம்…. அல்மோஸ்ட் எல்லாமே முடிஞ்சிருச்சு. இன்னும் கொஞ்ச நாளில் எல்லா வேலையும் முடிஞ்சிரும்,” என்றவன் போதியிடம், “போதி நீயும் என்கூட சுவிட்சர்லாந்து வர வேண்டி இருக்கும். நீ அங்கே என் கூட வந்தா தான் உனக்கும் அங்கு என்ன நடக்கிறது என்று நீ அருகில் இருந்து தெரிந்து கொள்ளலாம்,” என்றான்.

திடீர் என்று தன்னையும் அவனுடன் சேர்ந்து ஆதி வரச் சொல்வான் என்று போதி எதிர் பார்க்கவே இல்லை…. இருந்தும் ஆதி சொன்ன விஷயம் சரி என்று பட…. “ஓகே ஆதி நான் வரேன். நீ எப்போ போறே ஆதி? நானும் உன்கூட வரேன்,” என்றான் போதி. “நான் இன்னும் டூ டேஸ்ல கிளம்பிருவேன்,” என்றான் ஆதி துர்காவைப் பார்த்துக் கொண்டே சொன்னான். “ஓகே… ஆதி நானும் உன்கூடவே சுவிட்சர்லாந்து வரேன்,” என்றான் போதி.

அவர்கள் பேசிக் கொண்டு இருந்ததைப் பார்த்து சங்கவி, “இவனை யாரு இப்போ அந்தப் போதியையும் கூடக் கூட்டிட்டு வரச் சொல்றது,” என்று புலம்பியவள் போனை கட் செய்தால். ஆதி இன்னும் ரெண்டு நாளில் சுவிட்சர்லாந்து செல்வதைக் கேள்விப்பட்டதும் துர்காவின் முகம் சுருங்குவதைக் கவனித்துக் கொண்டு இருந்தான் ஆதி.

ஆதியை எதார்த்தமாகப் பார்ப்பது போலத் துர்கா பார்க்க…. ஆதி துர்காவைப் பார்த்து “ஏன் சோகமா இருக்கே?” என்று சைகை செய்தான். அவள் சுற்றிலும் பார்த்துவிட்டுத் தன் மொபைலைக் காட்டிவிட்டு அதில் ஏதோ டைப் செய்தாள். அவள் டைப் செய்து ஆதிக்கு அனுப்பிவிட்டு ஆதியிடம் தன் மொபைலைக் காட்டி படி என்றாள். “நீ இப்போதான் என்கிட்டே கொஞ்சம் நல்லாப் பேச ஆரம்பிச்சு இருக்க…. அதுக்குள்ள என்னை இங்கே விட்டுட்டு ஊருக்குப் போறேன்னு சொல்லிட்ட ஆதி. எனக்குக் கஷ்டமா இருக்கு உன்னைப் பிரியுறதுக்கு,” என்று எழுதி அனுப்பி இருந்தாள்.

“சாரி துர்கா. கொஞ்ச நாள் வெயிட் பண்ணு. அதன் பிறகு நான் உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன். ப்ரோமிஸ்,” என்று அனுப்பினான். “நிஜமாவா!!! ஆதி,” என்று அனுப்பிவிட்டு ஆதியைப் பார்த்தாள். “ஆம்,” என்று தலையை ஆட்டினான் துர்காவைப் பார்த்து. தன் மொபைலை மறுபடியும் எதையோ எழுதி அனுப்பி விட்டுத் துர்கா ஆதியைப் பார்த்தாள். அவளைப் பார்த்துக் கொண்டே மொபைலைப் பார்த்தவன், “போதியை உன்னோட அழைச்சிட்டுப் போறதுக்குக் காரணம் அவன் என்கூட கிளோசா பேசிட்டு இருக்குறதுனாலே தானே ஆதி,” என்று அனுப்பி இருந்தாள்.

அதைப் படித்ததும் ஆதிக்குச் சிரிப்பு வந்துவிட….. ‘நான் எதுக்காகப் போதியை என் கூட அழைச்சிட்டுப் போறேன்னு சரியாக் கண்டுபிடிச்சிட்டாளே!!!!’ என்று நினைத்தவன் துர்காவை நிமிர்ந்து பார்த்து ஆம் என்று தன் கண்களை மூடித் திறந்து பதில் அளித்தான்.

“உங்கள் இருவரும் கண் ஜாடையில் பேசிக் கொள்வதையும் போனில் மெசேஜ் அனுப்பி கொண்டிருப்பதையும் அருகில் இருந்து பார்த்துவிட்டேன். ஆதியிடம், “என்னடா எங்க போனாலும் ரெண்டு பேரும் கண்ணாலேயே பேசிக்கிறீங்க… நானும் கவனிச்சுட்டுத் தான் இருக்கேன். காரில் வரும்போதும் அப்படித்தான். இங்க வந்து பார்ட்டில நேருக்கு நேரா உட்கார்ந்து இருந்தாலும் ரெண்டு பேரும் போன்ல மெசேஜ் பண்றது என்ன… கண்ணாலயே பேசிக்கிறது என்ன….. உங்க ரொமான்ஸ்க்கு அளவே இல்லாமப் போச்சுடா ஆதி,” என்று சொன்னான் விக்கி.

“நான் என் பொண்டாட்டி கூட ரொமான்ஸ் பண்ணா உனக்கு எங்கடா வலிக்குது… வேணும்னா நீயும் உன் பொண்டாட்டி கூட ரொமான்ஸ் பண்ண வேண்டியதுதானே,” என்று கேட்டான் ஆதி.

“நீ உன் பொண்டாட்டியை கூட வச்சுக்கிட்டு அவ கூட ஜாலியாப் பேசக்கூட முடியாமத் தூரத்திலிருந்து ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்க….. நான் என் பொண்டாட்டிய ஊர்ல விட்டுட்டு இங்க வந்து டெய்லியும் போன்ல அவ கூட ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கேன். உன் நிலைமையும் என் நிலைமையும் பார்த்தியாடா. கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருக்கு,” என்றான் விக்கி.

“ஆமா விக்கி நீ சொல்றது சரிதான். இதுக்கு எல்லாம் முக்கியமான காரணம் யார் தெரியுமா,” என்றான் ஆதி பல்லைக் கடித்துக் கொண்டே… “வேற யாரு உன் தம்பி கதிர் தானே…” என்றான் விக்கி. “ஆமாம்,” என்று தலையாட்டிய ஆதி. கதிர் சொன்ன ஒரு பொய்யால் இப்போது அவனால் துர்காவுடன் அனைவரும் முன்பும் சகஜமாகக்கூடப் பேச முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான் ஆதி.


ராதாவை அட்மிட் செய்த ஹாஸ்பிடல் எங்கே என்று கீர்த்திகாவிடம் கேட்டுவிட்டு வந்த சந்தோஷ் ராதா இருக்கும் அறைக்குள் செல்ல…. அவள் கண்மூடிப் படுத்திருந்தாள். அவள் கால் பாதம் இரண்டும் சிகிச்சை செய்து கட்டுப் போட்டு இருந்தது. சந்தோஷைப் பார்த்ததும் ராதாவின் அருகில் அமர்ந்திருந்த கீர்த்திகா எழுந்து, “டாக்டர் என்ன சொன்னாங்க? கீர்த்திகா,” என்று கேட்டான்.

“அவ கால்ல நிறைய கண்ணாடிச் சில்லுங்க குத்தி இருந்தது. அதையெல்லாம் அவ வந்த உடனேயே ரிமுவ் பண்ண ரொம்பச் சிரமப்பட்டதா டாக்டர் சொன்னாங்க… சில கண்ணாடிச் சில்லுகள் ரொம்ப ஆழமா ஏறி இருக்கு…. ஏற்கனவே ராதா ரொம்ப வீக்கா இருக்கா. இப்போ இந்தக் கண்ணாடிச் சில்லுகளை எல்லாம் குத்தி அவ பாதத்தில் நிறைய ரத்தம் போயிருக்கு. அதனால அவளை ஹெல்தியா சாப்பிடச் சொல்லிப் பத்திரமாப் பார்த்திருக்க சொல்லி இருக்காங்க சார். மத்தபடி பயப்படும்படி ஒன்னும் இல்ல… காயம் முழுசா குணமாகி அவள் எழுந்து நடக்கவே பத்து பதினைந்து நாளைக்கு மேல ஆயிடும்னு டாக்டர் சொன்னாங்க,” என்றாள்.

கீர்த்திகா சொன்னதை எல்லாம் கேட்டவனுக்கு ராதாவைப் பார்க்கையில் அவன் மனம் மிகவும் வலித்தது. தன்னால் தானே அவள் இவ்வளவு கஷ்டப்படுகிறாள். ‘நான் முன்னுமே அவளிடம் நன்றாகப் பேசியிருந்தால், என்னை அவளிடம் முன்பு போலப் பேச வைக்கிறேன் என்று சொல்லி மணலில் இப்படி வரைந்து அவள் காலைப் புண்படுத்தி இருக்க மாட்டாளே….’ என்று அவனை நினைத்து அவனுக்குக் கோபம் வந்தது.

ராதாவின் ரூமிற்குள் வந்த நர்ஸ், “இங்க ராதா கூட வந்த அட்டண்டர் யாரு,” என்று அவர்கள் இருவரையும் பார்த்து கேட்க “நான் தான்,” என்று சொன்னாள் கீர்த்திகா. “ரிசப்ஷன்ல அவங்களப் பத்தி சில டீடெயில்ஸ் எல்லாம் கேக்குறாங்க. நீங்க வந்து கொஞ்சம் அந்த ஃபார்ம் ஃபில்லப் பண்ணி கொடுத்துட்டு வந்துருங்க,” என்று சொல்லிவிட்டு நர்ஸ் வெளியே போக…

“சார் ஒரு நிமிஷம் நான் வந்துடுறேன். அதுவரைக்கும் நீங்க ராதா கூட இருக்கீங்களா? ராதா வீட்ல இருக்குறவங்க கிட்ட நான் போன் பண்ணி சொல்லிட்டேன். அவங்க கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க,” என்று சொல்லிவிட்டுச் சந்தோஷிடம் ராதாவை விட்டு விட்டு கீர்த்திகா வெளியே சென்றாள்.

அதுவரைத் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி வைத்திருந்த சந்தோஷ் கீர்த்திகா வெளியே சென்றதும். நேராக ராதாவிடம் வந்து அமர்ந்தவன் அவள் கையைப் பிடித்துக் கொண்டு… “ராதா என்ன மன்னிச்சிடுடி. உண்மையாவே உனக்கு என்ன பிடிக்கலைன்னு நினைச்சு தான் நான் உன்கிட்ட இருந்து ஒதுங்கி போனேன். நீ என்னை பெண்கள் பின்னால் சுற்றும் பொறுக்கின்னு சொன்னதுனால எனக்கு உன் மேல கோபம் வந்துருச்சுடி…. நீயே என்ன புரிஞ்சுக்கலைன்னா நான் என்ன பண்ண முடியும். அதனாலதான் நான் உன்கிட்ட இருந்து ஒதுங்கி இருந்தேன். என்னதான் நான் உன்கிட்ட பேசாம உன்கிட்ட இருந்து நான் ஒதுங்கியே இருந்தாலும் என் நினைவு முழுவதிலும் நீ மட்டும் தான் இருந்த,” என்று சொன்னான் சந்தோஷ்.

ராதாவின் கையைப் பிடித்துக் கொண்டு சந்தோஷ் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அழுது கொண்டு பேச… அவன் கண்ணீர் துளிகள் அவள் கையில் படவும் கண் விழித்த ராதா தன் கையைப் பிடித்து அழுது கொண்டிருக்கும் சந்தோஷைப் பார்த்தவளுக்குக் கஷ்டமாக இருந்தது. அவன் தலையை ராதா லேசாக வருடிவிடவும் சட்டென்று நிமிர்ந்து ராதாவைப் பார்த்தவன். “ராதா கண் முழிச்சிட்டியா!!! இப்போ எப்படி இருக்கு உனக்கு? கால் ரொம்ப வலிக்குதா?” என்று பதட்டமாக அவளிடம் பேச …. “இல்லை,” என்று தன் தலையை இடவலமாக ஆட்டினாள்.

“மணல்ல நீ வரஞ்ச நம்ம படத்தை நான் மட்டும்தான் பார்த்தேன். முதல் முதலா நான் உனக்குக் கொடுத்த முத்தத்தை நீ இன்னும் மறக்காமல் அப்படியே மனசுலப் பதிய வைத்து இருக்கியா? அதைத்தான் அப்படியே அந்த மணல்ல படமா வரைஞ்சு இருந்தியா,” என்று கேட்டான் சந்தோஷ். ராதா ஆம் என்று தலையை ஆட்ட….

“ஏண்டி என்கிட்ட நீ நேரா சொல்லாம இப்படி பண்ணுன? எவ்வளவு நாள் நீ வேஸ்ட் பண்ணிட்ட தெரியுமா? என்னதான் நான் உன் மேல கோபமா இருந்தாலும் நீ வந்து என்கிட்ட உன்னோட லவ்வர் சொல்லி இருக்கணுமா… இல்லையா…” என்று ஆதங்கமாக ராதாவிடம் கேட்டான். “நான் உங்களை அப்படித் திட்டின பிறகு உங்ககிட்ட வந்து நான் உங்களக் காதலிக்கிறேன்னு சொன்னா…. நீங்க என்னப் பத்தி என்ன நினைப்பீங்கன்னு பயத்துல தான் நான் சொல்லாமல் விட்டுட்டேன்,” என்று சொன்னால் ராதா.

“நீ என்னைப் பார்த்துப் பயந்துட்டியா? இத நான் நம்பனுமா?” என்றான் சந்தோஷ் சிரித்துக் கொண்டே. “ஆமா. நான் எப்ப உங்க கிட்டப் பேச வந்தாலும் மூஞ்சியும் உம்முனு வச்சுட்டு சிடு சிடுன்னு என்கிட்டப் பேசுறீங்க… அப்புறம் எப்படி நான் வந்து தைரியமா உங்கள லவ் பண்றேன்னு சொல்ல முடியும்,” என்றால் ராதா.

“சரி இப்பதான் இவ்வளவு வாய் பேசுறியே. இப்ப சொல்லு. நீ என்னை நிஜமாகவே லவ் பண்றியா?” என்று கேட்டான் சந்தோஷ். அவன் கேட்டதும் ராதாவிற்கு அத்தனை வலியிலும் வெட்கத்தில் முகம் சிவந்து விட…. அவனைப் பார்க்க முடியாமல் வேறு பக்கம் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள் ராதா.

நான் கேட்டதற்குப் பதில் சொல்லாமல் ராதா திரும்பிக் கொள்ள அவள் வெட்கப்படுகிறாள் என்பதைப் புரிந்து கொண்டவன் அவள் முகத்தைப் பிடித்துத் தன்னைப் பார்க்குமாறு திருப்பியவன். “சொல்லு ராதா ப்ளீஸ்…. நீ சொல்ற அந்த மூணு வார்த்தையை கேட்பதற்காக நான் ரொம்ப ஆவலா இருக்கேன்,” என்று சொன்னான் சந்தோஷ். “நீ என்னை லவ் பண்ணுறியா? ராதா,” என்று கேட்டுவிட்டு அவள் முகத்தை ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தான் சந்தோஷ்.

ராதா அவன் முகத்தைப் பார்த்தவள் முதலில் ஆம் என்று தலையை மேலும் கீழும் ஆட்டியவள். பின் தனக்குக் கதிருடன் திருமணம் பேசி முடித்து விட்டார்கள் என்பது நினைவிற்கு வர….. அவள் கண்களில் இருந்து கண்ணீர் வர ஆரம்பித்தது. முதலில் சந்தோஷ் என்னை காதலிக்கிறாயா என்று ராதாவிடம் கேட்டதற்கு ஆம் என்று தலையை ஆட்டிய ராதா…. இப்போது திடீரென்று அழவும் சந்தோஷத்திற்கு எதுவுமே புரியவில்லை. எழுந்து அவள் அருகில் கட்டிலில் அமர்ந்தவன். “ஏய்….. ராதா என்ன ஆச்சு? ஏன் இப்ப அழற…. கால் எதுவும் ரொம்ப வலிக்குதா? என்ன ஆச்சு சொல்லு? இப்ப ஏன் அழற,” என்று பதட்டப் பட்டான்.

சந்தோஷைப் பார்த்து அழுது கொண்டே, “எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும்… நீங்க என்னைக் காதலிக்கிறேன்னு சொன்னப்போ என் மனசுக்குள்ள எழுந்த உணர்வுகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஒவ்வொரு முறையும் நான் உங்ககிட்ட என்னோட காதலைச் சொல்ல வரப்போ நீங்க என்கிட்ட முகத்தில் எடுத்தார் போல தான் பேசி என்னை அனுப்பி வைத்தீர்கள். இருந்தும் உங்ககிட்ட என்னோட காதலைச் சொல்லணும்னு நான் ரொம்ப ஆசைப்பட்டேன் ஆனா….” அவள் நிறுத்த.

“என்ன சொல்லு ராதா? ஏன் ஏதோ சொல்ல வந்துட்டு அப்படியே நிறுத்திட்டே. நீ என்ன சொல்ல வந்தியோ அதைச் சொல்லு ராதா,” என்றான். “இப்போ நான் நினைச்சது எதுவுமே நடக்காத போது நான் உங்களைக் காதலிக்கிறேன் என்று சொல்லி எந்தப் பிரயோஜனமும் இல்லை,” என்று சொன்னால் ராதா.

“என்ன ராதா சொல்ற? எனக்குப் புரியல. நீ என்னைக் காதலிக்கிறாயா? இல்லையா? அதை முதல்ல சொல்லு,” என்று சொன்னால் சந்தோஷ். “ஆமா நான் உங்களைக் காதலிக்கிறேன். ஆனால் என்னால் உங்க கூடக் காலம் முழுவதும் உங்க காதலியாகவோ…. உங்க மனைவியாகவோ…. வர முடியாது. என்னை மன்னிச்சிடுங்க,” என்றால் ராதா.

“ஏன்? ராதா அப்படி சொல்ற…. நீ என்னைக் காதலிக்கிறேன்னு தானே சொல்ற… பிறகு என்ன … உன் வீட்டில் நம்ம காதலை சொல்றதுக்கு பயந்துக்கிறியா? உன் வீட்டில் சொன்னால் ஏத்துக்க மாட்டாங்கன்னு பயந்துட்டு தான் இப்படிப் பேசுறியா? இல்ல வேற எதுவும் பிரச்சனையா? எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லு….. நானே நேரடியா என் அப்பாவை அழைச்சிட்டு வந்து உன் அப்பாகிட்டப் பேசுறேன்,” என்று சந்தோஷ் சொல்லிக் கொண்டிருக்க.

ராதா இருந்த அறைக்கதவை பட்டென்று திறந்து கொண்டு, “ஐயோ ராதா….. என்ன ஆச்சு உனக்கு,” என்று அழுது கொண்டே கனகா அம்மா உள்ளே வர அவருடன் ராதாவின் குடும்பத்தில் இருந்த அனைவரும் ஹாஸ்பிடல் வந்துவிட்டனர். அறை கதவைத் திறந்து கொண்டு ராதாவின் சொந்தங்கள் அனைவரும் உள்ளே வரவும் சற்றுமுன் கட்டிலில் இருந்து எழுந்து சற்றுத் தள்ளி நின்று கொண்டான் சந்தோஷ். அவனைப் பார்த்த துரை, “தம்பி என் பொண்ணுக்கு என்ன ஆச்சு? எப்படி அவளுக்கு இந்த மாதிரி ஒரு விஷயம் நடந்தது. நீங்கள் எல்லாம் இருக்கீங்கன்னு நம்பி தானே நான் அவளைக் காலேஜுக்கு அனுப்பினேன்,” என்று பதட்டமாக சந்தோஷிடம் கேட்க.

“நீங்க எதுவும் பயந்துக்காதீங்க. இதுக்குக் காரணமானவங்களும் நான் பிடிச்சுக் போலீஸ்கிட்ட ஒப்படைச்சிட்டுத் தான் இங்கே வந்தேன். நீங்க முதல்ல ராதா கிட்டப் பேசுங்க,” என்றான். கனகா அருகில் அமர்ந்து அவள் தலையை வருடிக் கொடுத்தவர். “அதான் உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே. டாக்டர் என்ன சொன்னாங்க? ரொம்ப வலிக்குதா,” என்று அவர் பதட்டமாக ராதாவிடம் பேச. “எனக்கு ஒன்னும் ஆகல மா. நான் நல்லாத்தான் இருக்கேன் பாருங்க. கால்ல மட்டும் தானே காயமா இருக்கு. வேற எதுவும் இல்ல. நான் நல்லாத்தான் இருக்கேன்,” என்று சொன்னால் ராதா.

“என்னடி இவ்வளவு அசால்ட்டா சொல்ற? கால்ல மட்டும் தான் காயமா இருக்குன்னு. நீ எழுந்து நடக்க முடியாத மாதிரி இல்ல இருக்கு. இரண்டு கால்லையும் இவ்ளோ பெரிய கட்டுப் போட்டு இருக்காங்க,” என்றார். விசாலாட்சி ராதாவிடம் வந்தவர், “ராதா கொஞ்சம் கவனமா இருந்திருக்கலாமே நீ…. உனக்கும் கதிருக்கும் கல்யாணம் உறுதி பண்ணி இருக்கிற இந்த வேலையில். நீ இப்படி காலில் காயம் பண்ணிட்டு வந்து முக்கியமா எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு,” என்று அவர் சொல்லவும் சந்தோஷ் அதிர்ச்சியாகத் திரும்பி ராதாவைப் பார்க்க….

விசாலாட்சி தனக்கும் கதிருக்கும் திருமணம் முடிவானதைச் சந்தோஷின் முன் சொன்னதும் ராதாவும் திரும்பிச் சந்தோஷைப் பார்த்தாள். சற்றுமுன் தன்னைக் காதலிக்கிறேன் என்று சொல்லிவிட்டு ஆனால் என்று அவள் சொல்லி நிறுத்தியதற்குக் காரணம் இதுவா… என்று யோசித்தவாறு சந்தோஷ் ராதாவைப் பார்க்க. ஆனால் இப்போது இருக்கும் சூழ்நிலையில் சந்தோஷிடம் எதையுமே அவளால் கூற முடியாது என்பதை அவள் முகத்தைப் பார்த்தே தெரிந்து கொண்டான் சந்தோஷ்.

ராதா சந்தோஷ் இடம் பேசத் துடிப்பதை அவன் உணர்ந்தாலும் இப்போது இருக்கும் சூழ்நிலையில் தான் இங்கே இருப்பது நல்லதல்ல என்று துரையிடம் வந்து, “அங்கிள் நான் கிளம்புறேன். நீங்க ராதாவைப் பத்திரமாப் பாத்துக்கோங்க,” என்று சொல்லிவிட்டு யாரிடமும் பேசாமல் அவர் பதிலையும் எதிர்பார்க்காமல் திரும்பி ராதாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு வேகமாக அந்த அறையை விட்டு வெளியே சென்றான் சந்தோஷ். அவனைத் தடுக்க முடியாத நிலையில் தான் இப்போது இருக்கிறோமே என்று நினைத்து மிகவும் வருந்திய ராதா எத்தனை பேர் முன்னிலையிலும் அழக் கூட முடியாமல் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு படுத்திருந்தாள்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured