Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 102

உன் ரகசிய ரசிகை நான் 102

by Layas Tamil Novel
377 views

ஹாஸ்பிடலில் இரண்டு நாட்கள் இருந்து விட்டுப் பிறகு டிஸ்சார்ஜ் ஆகி ராதா வீட்டுக்கு வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. விசாலாட்சி தனக்கும் அருளுக்கும் திருமணம் உறுதியான விஷயத்தைச் சந்தோஷிடம் சொன்னபோது அதைக் கேட்டு விட்டுச் சென்றவன் தான். ராதாவிடம் அதன் பிறகு பேசவே இல்லை. அவளும் தன் மொபைலில் இருந்து சந்தோஷுக்கு நிறைய முறை கால் செய்து பார்த்து விட்டாள். அவள் காலை ஒரு முறை கூட எடுத்துச் சந்தோஷ் பேசவே இல்லை.

எப்படியாவது சந்தோஷிடம் பேசித் தீர வேண்டும் என்று நினைத்த ராதா தன் அப்பாவை நச்சரித்து, “என்னால் காலேஜ் தான் போக முடியவில்லை. அட்லீஸ்ட் டியூஷனாவது என்னைக் கொண்டு போய் விடுங்கள். பாடம் எல்லாம் நிறைய மிஸ் ஆகிறது,” என்று அவரிடம் அழுகாத குறையாக அடம்பிடித்து இன்று சந்தோஷ் வீட்டிற்கு டியூஷன் வந்து விட்டாள்.

ராதா டியூஷன் செல்வதாகச் சொன்னதும் கனகா கீர்த்திகாவிற்கு ஃபோன் செய்து அவளையும் டியூஷன் செல்லச் சொல்லி ராதாவைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளச் சொல்லி இருந்தார். ராதாவை வீல் சேரில் வைத்து காரில் அழைத்து வந்திருந்த துரை… சந்தோஷின் வீட்டின் முன் காரை நிறுத்திவிட்டு ராதாவை சக்கர நாற்காலியில் அமர்த்தி சந்தோஷின் வீட்டு கேட்டைத் திறந்துகொண்டு உள்ளே செல்ல…..

தோட்டத்தில் செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சு கொண்டிருந்த சந்தோஷ் தன் வீட்டின் முன்பு கார் நிற்கும் சத்தம் கேட்டதும் யார்? என்று திரும்பிப் பார்த்தவன் வாசல் கதவைத் திறந்து கொண்டு ராதா வீல் சேரில் அமர்ந்திருக்க…. அவள் அப்பா அவளைத் தள்ளிக் கொண்டு வருவதைப் பார்த்ததும் கையில் இருந்த தண்ணீர் பைப்பை அப்படியே போட்டுவிட்டு வேகமாக வாசல் நோக்கி ஓடிவந்தான் சந்தோஷ். “வாங்க அங்கிள் உள்ள வாங்க…” ராதாவைப் பார்த்துவிட்டு “என்ன அங்கிள் இந்த நிலைமையில் ராதாவை இங்க கூட்டிட்டு வந்து இருக்கீங்க,” என்று கேட்டான்.

“ஏன் கேக்குறீங்க தம்பி? காலேஜுக்குத் தான் கொண்டு போக முடியல. நிறையப் பாடம் படிக்க முடியாம மிஸ் ஆகுதுன்னு சொல்லி வீட்டில் ஒரே புலம்பல். இவ புலம்பல் தாங்க முடியாமல் தான் டியூஷனுக்குக் கூட்டிட்டு வந்து இருக்கேன் தம்பி. கொஞ்சம் கவனமாப் பார்த்துக்கோங்க. நான் போயிட்டு அப்புறம் வரேன்,” என்று சொல்லிவிட்டு ராதாவை பத்திரமாக இரு என்று சொல்லிவிட்டுத் துரை கிளம்பினார். அவர் ராதாவை வெளியே விட்டுவிட்டுத் துறை சென்றுவிட…. அவர் விட்ட இடத்திலேயே சந்தோஷ் ராதாவுடன் நின்று இருந்தான்.

இருவரும் எதுவும் பேசாமல் அமைதியாக நின்று இருக்க…. ராதாவே அந்த அமைதியைக் கலைத்தால். “ஏன் நான் போன் பண்ணினா நீங்கள் எடுக்கவே இல்லை,” என்றாள் கோபமாக… “நான் பிஸியா இருந்தேன். அதனால் தான் எடுக்கவில்லை,” என்றான் அவளைப் பார்க்காமலேயே சந்தோஷ். “நான் உங்களுக்குக் கால் பண்ணும்போது எல்லாம் நீங்கள் பிஸியா இருந்திங்களா….” என்றாள் ராதா.

சந்தோஷ் எதுவும் பேசாமல் அவளைப் பார்க்காமல் திரும்பி நின்று இருக்க… தன் சக்கர நாற்காலியைத் தள்ளிக் கொண்டு அவன் முன் வந்தவள் சந்தோஷின் கையைப் பிடித்து. “என்கிட்டே இப்படிப் பேசாம இருக்காதீங்க… எனக்குக் கஷ்டமா இருக்கு,” என்று அழுதாள் ராதா. “நான் உன்னிடம் பேசாமல் இருப்பது தான் உனக்கு நல்லது,” என்றான் சந்தோஷ்.

“நீங்க ஏன் இப்படிப் பேசாம இருக்கீங்கன்னு எனக்குத் தெரியும். என் அத்தை ஹாஸ்பிடலில் வைத்து எனக்கும் கதிர் மாமாவிற்கும் திருமணம் உறுதி ஆகிடுச்சுன்னு சொன்னதை வெச்சு தானே நீங்க இப்படி எல்லாம் பேசுறீங்க…” என்றவள். “எனக்கு இந்தக் கல்யாணத்தில் சுத்தமா விருப்பம் இல்லை…” என்றாள் ராதா.

“உனக்கு விருப்பம் இல்லாமல்…. உன் சம்மதம் இல்லாமல் தான் இந்தக் கல்யாணத்தை உறுதி செஞ்சாங்களா உன் வீட்டில்,” என்றான் கோபமாக. ராதா எதுவும் பேசாமல் அமைதியாகத் தலையைக் குனிந்து கொண்டு இருக்க… அவள் அமைதியாக இருப்பதைப் பார்த்தவன், “அப்போ… நீ சம்மதம் சொன்ன பிறகு தான் அவங்க உன் மாமா கூட உனக்குக் கல்யாணம் பண்றதை உறுதி பண்ணி இருகாங்க அப்படித்தானே?” என்றான் சந்தோஷ் கோபம் பொங்க…

“எனக்கு வேற வழி தெரியலை. என் அக்கா இந்தக் கல்யாணம் வேண்டாம்னு அவங்க கிட்டே சொன்னதினால என்னை என் மாமாவுக்குத் திருமணம் செய்யப் பேசிட்டாங்க… என் அப்பாவை மீறி என்னால் எதுவும் பண்ண முடியல,” என்றாள் ராதா அழுது கொண்டே. “உன் அப்பா பேச்சை மீற முடியாதவ இப்போ இங்கே எதுக்கு வந்தே,” என்றான்.

அவன் அப்படிப் பிடி கொடுக்காமல் தன்னிடம் பேசுவதைத் தாங்க முடியாத ராதா, “தப்பு தான்…. என் அப்பா பேச்சை மீற முடியாமல் வேற வழி தெரியாமல் தான் உங்களைப் பார்த்து எப்படியாவது இந்தக் கல்யாணத்தை நிறுத்துங்கன்னு கேக்க வந்தேன். ஆனா நீங்கள் இப்படி என்கிட்டே பிடி கொடுக்காம பேசுற அப்போ நான் இங்க ஏன் வந்தேன்னு எனக்கு இருக்கு,” என்று சொல்லிவிட்டு அழுது கொண்டே, “நான் போறேன்…. உங்களைத் டிஸ்டர்ப் பண்ணினதுக்கு என்னை மன்னிச்சிருங்க…..” என்று சொல்லி தன் வீல் சேரைத் தள்ளிக் கொண்டே வாசல் சென்றாள்.

தனக்கு எதுவும் வழி சொல்வான் என்று தன்னை நம்பி வந்தவளை வார்த்தைகளால் காயப்படுத்தி விட்டோமே என்று தன்னையே நொந்து கொண்டவன் வேகமாக ராதாவின் முன் வந்தவன். “ஏய்… செல்ல குட்டி… சாரி டி… சாரி…” என்று ராதாவிடம் கெஞ்சியவன். “நான் ஏதோ கோபத்துல பேசிட்டேன். சாரி… டி… ப்ளீஸ்… சாரி..” என்று கெஞ்சினான். “உங்க சாரியைக் கொண்டு போய்க் குப்பையில் போடுங்க… நான் போறேன்,” என்று சொல்லிவிட்டு, “வழியை விடுங்க நான் போகணும்,” என்றாள்.

“தனியா எங்கே டி… போறே… உன் அப்பா வரட்டும்,” என்றான். “எனக்கு வழி தெரியும். நான் போய்க்குவேன். நீங்க வழியை மறிச்சி நிக்காதீங்க …. நகருங்க,” என்று அவனைத் தாண்டி வெளியே செல்லப் போனவளை. “நானும் சாரி கேக்குறேன்… கொஞ்சமாச்சும் இறங்கி வரியா பாரு…” என்றவன். “நீ இப்படி எல்லாம் சொன்னா கேட்க மாட்டே,” என்றவன் வீல் சேருடன் ராதாவைத் தள்ளிக் கொண்டு வீட்டிற்குள் சென்றான்.

“நான் என்ன ஆனா உங்களுக்கு என்ன… என்னை விடுங்க…” என்று அவனிடம் சண்டைக்கு வந்தாள் ராதா. “ஏய்… ஏய்… செல்லம் அப்படியெல்லாம் இல்லை டி… நான் ஏதோ கோபத்துல அப்படிப் பேசிட்டேன். ப்ளீஸ்… டி… நான் பாவம் இல்லையா… ப்ளீஸ் டி…” என்று அவள் முன் மண்டியிட்டு ராதாவின் கையைப் பிடித்துக் கெஞ்சினான். “யோவ்… வாத்தி… போய்யா… உனக்கு இதே வேலையாப் போயிருச்சு. பேசாமப் போய்யா… என்னை அழ வெச்சி பாக்குறதையே பொழப்பா வெச்சு இருக்கே நீ…” என்று ராதா தேம்பித் தேம்பி அழுதாள்.

ராதா அழுவதை நிறுத்த வழி தெரியாமல் அவள் முன் மண்டியிட்டு இருந்த சந்தோஷ் பட்டென்று ராதாவின் முகத்தை எட்டிப் பிடித்தவன் அவள் இதழில் முத்தம் வைத்தான். இவ்வளவு நேரம் தேம்பி அழுத்தவள் சந்தோஷ் முத்தம் கொடுத்ததும் அப்படியே அதிர்ச்சியானவள் கண்களை அகல விரித்துச் சந்தோஷைப் பார்க்க….. அவன் கண்கள் மூடி ராதாவின் முகத்தைப் பிடித்துத் தீவிரமாக முத்தம் கொடுத்துக் கொண்டு இருந்தான்.

அவனைத் தன்னிடம் இருந்து விலக்க எண்ணமே இல்லாமல் அவனிடம் தன் உதட்டைக் கொடுத்து விட்டு விழித்துக் கொண்டு இருந்த ராதா…. அவன் முத்தத்தில் மயங்கிய அவள் கண்கள் தானாக மூடி அவர்களின் முதல் முத்தத்தை அனுபவித்துக் கொண்டு இருந்தாள். திடீர் என்று சந்தோஷ் வீட்டின் கேட் திறக்கும் சத்தம் கேட்கவும் அந்த சத்தம் ராதாவிற்குக் கேட்க… அவனிடம் இருந்து தன் இதழைப் பிரிக்க முயற்சிக்க….

காய்ந்து போன மாடு கம்பங்கொள்ளையில் பாய்ந்தது போல… இதுவரை பெண்களின் வாடையே அறியாதவன் இப்போது முதன்முறை ராதாவின் நெருக்கமும்… அவளுடன் தன் முதல் முத்தமும்… அவள் வாசனையும் அவனைச் சுயம் இழக்கச் செய்து இருக்க… ராதா அவனைத் தன்னிடம் இருந்து பிரிக்கப் போராடுவது அவனுக்கு உரைக்கவே இல்லை. இவனை இப்படி எல்லாம் செய்து தன்னிடம் இருந்து பிரிக்க முடியாது என்று உணர்ந்தவள் அவன் வாய்க்குள் இருந்த தன் உதட்டைக் கடினப் பட்டுப் பிரித்தவள் அவன் உதட்டைப் பிடித்து நறுக்கென்று கடித்து வைத்தவள் சந்தோஷைத் தன்னிடம் இருந்து தள்ளி விட்டவள் மூச்சு விடச் சிரமப்பட்டு மேல் மூச்சு கீழ் மூச்ச்சு வாங்க… சந்தோஷை. பார்த்தவள்.

“யோவ்… வாத்தி… வெளியே யாரோ வராங்க. நீ பாட்டுக்கு இப்படி என்ன நடக்குதுன்னே தெரியாம என் உதட்டை சக்கையா பிழிஞ்சுட்டு இருக்கே… முதல்ல போய்ப் யாரு வராங்கன்னு பாரு… போய்யா…” என்று அவனை விரட்டினால். ராதா இப்படித் திடீர் என்று தன் உதட்டைக் கடித்துக் கீழே தள்ளி விட்டது போதாது என்று என்ன பேச்சு பேசுகிறாள் இவள் என்று நினைத்தவன் ராதாவைப் பார்த்துக் கொண்டே எழுந்தவனை,

“என்னயா.. இங்க லுக்கு…. போய்ப் யாருன்னு முதல்ல பாரு,” என்று ராதா சொல்லிக்கொண்டு இருக்கும்போதே… கீர்த்திகா சந்தோஷ் வீட்டிற்குள் வந்தாள். அவளைப் பார்த்ததும், “வா கீர்த்து… அம்மா போன் பண்ணி சொன்னாங்களா.. நான் டியூஷன் வந்திருக்கேன்னு,” என்று கேட்டாள் ராதா. “ஆமா… ராதா,” என்று சொல்லிக் கொண்டே உள்ளே வந்தவள் சந்தோஷைப் பார்த்து ஒரு சிறு புன்னகையை உதிர்த்து விட்டு, “சார் இன்னிக்கு என்ன சாப்டர் நடத்தப் போறீங்க,” என்று கீர்த்து கேட்டாள்.

“நீங்க உள்ளே போய்ப் புக்ஸ் எடுத்து வைங்க. நான் உங்க ரெண்டு பேருக்கும் டீ எடுத்துட்டு வரேன்,” என்றான். “இல்லை சார் பரவாயில்லை. நான் வரும்போது வீட்டில் டீ குடிச்சுட்டுத் தான் வந்தேன்,” என்றாள் கீர்த்து. “நீ குடிச்சுட்டு வந்துட்டா…. நாங்க எல்லாம் குடிக்க வேணாமா….” என்ற ராதா சந்தோஷிடம் திரும்பி, “எனக்கு டீ வேணும்…. போய்ப் போட்டுட்டு வாங்க…” என்று அதிகாரமாகச் சொல்லிவிட்டு கீர்த்தியிடம் திரும்பி, “வா… உள்ளே போகலாம் வா டி….” என்று தன் வீல் சேரை நகர்த்திக் கொண்டு ராதா உள்ளே செல்ல…

கீர்த்திகா சந்தோஷைப் பார்த்துச் சங்கடமாகச் சிரித்துக் கொண்டே ராதாவின் வீல் சேரைத் தள்ளிக்கொண்டு ஸ்டடி ரூமிற்குச் சென்றாள். ராதா அவனிடம் அதிகாரமாக டீ கேட்டு விட்டு உள்ளே செல்வதைப் பார்த்த சந்தோஷ்… “குடச்சிக்குக் கொழுப்பைப் பார்…” என்றவன் சென்று டீ போட்டு எடுத்து வந்தவன் கீர்த்திகாவிற்கும் கொடுத்துக் குடிக்கச் சொன்ன பிறகு டியூசன் எடுக்க ஆரம்பித்தான்.

மூன்று மணி நேர டியூசனில் சந்தோஷைக் கீர்த்திகாவிற்குக் தெரியாமல் சீண்டிக் கொண்டு பாடம் நடத்துவதைக் கவனிக்காமல் ராதா சந்தோஷை சைட் அடித்துக்கொண்டு இருந்தாள். ஒரு வழியாக டியூசன் முடிந்து விட… “நாளைக்குப் பார்க்கலாம். நான் கிளம்பறேன்,” என்று சொல்லி கீர்த்திகா ராதாவிடமும் சந்தோஷிடம் சொல்லிவிட்டுப் போகச் சென்றவளை. “ஏய்… கீர்த்து இரு… என் அப்பா தான் என்னைக் கூப்பிடக் காரில் வருவார். நான் வீட்டில் இறங்கிவிட்டு உன்னை வீட்டில் விடச் சொல்கிறேன்,” என்று ராதா சொல்ல… வழக்கம் போல் கீர்த்திகா வேண்டாம் என்று மறுத்தாள். “ஏய்… இப்போ பேசாம இருக்கப் போறியா என்ன,” என்று கீர்த்திகாவை அதட்டி இருக்க வைத்தாள்.

“சரி சரி… நான் போகலை. உன்கூடவே வரேன் சரியா,” என்றவள் ராதாவிடம் சொல்லிவிட்டு, “உள்ளே என் போனை வெச்சுட்டேன். இரு நான் எடுத்துட்டு வரேன்,” என்று கீர்த்திகா உள்ளே செல்ல… அவன் சென்ற அடுத்த நொடி சந்தோஷ் ராதாவின் இதழில் குனிந்து முத்தமிட்டுவிட்டு எதுவும் தெரியாதவன் நிமிர்ந்து தள்ளி நின்று கொண்டான்.

அவனை அதிர்ச்சியாகப் பார்த்த ராதாவைப் பார்த்துக் கண்ணடித்து ஒரு பறக்கும் முத்தத்தைத் திரும்பி அனுப்பி வைக்க…. அப்போது கீர்த்திகா உள்ளிருந்து மொபைலை எடுத்துக் கொண்டு வெளியே வரவும் சரியாக இருந்தது. அவளைப் பார்த்ததும் பறக்கும் முத்தம் அனுப்பிக் கொண்டு இருந்தவன் உதட்டை அப்படியே உள்ளே மடக்கி விட்டு காற்றில் இருந்த தன் கையை கொசுவை விரட்டிவது போல… கீர்த்திகாவைப் பார்த்ததும் பாவலா செய்தவன் திரும்பிக் கொள்ள… இதைப் பார்த்துக் கொண்டு இருந்த ராதா சிரிப்பை அடக்க முடியாமல் தன் கையால் வாயைப் பொத்திக் கொண்டாள்.

ராதாவை அழைக்க கார் வந்ததும் வீட்டிற்குள் இருந்து ராதாவின் வீல் சேரைத் தள்ளிக்கொண்டு கீர்த்திகா வர… அவர்களுடன் பேசிக்கொண்டே சந்தோஷும் வந்தான். அவர்கள் இருவரையும் அழைக்க வந்தவரைப் பார்த்ததும் அப்படியே முகம் சுருங்கிப் போனது சந்தோஷிற்கு. அவனுக்கு மட்டும் முகம் சுருங்க வில்லை. ராதாவிற்கும் கீர்த்திகாவிற்கும் தான். தான் தங்களை அழைத்துச் செல்ல வந்த கதிரைப் பார்த்ததும் மூவரின் நிலையும் அப்படித்தான் இருந்தது.


ஆதியுடன் போதி சுவிட்சர்லாந்து வந்துவிட…. சங்கவி அவர்களோடு சேர்ந்து புதிதாகத் துவங்கி உள்ள பிசினஸ் பற்றி நிறையக் கற்றுக் கொண்டாள். போதிக்கும் இது தான் முதன்முறை ஆடை சம்மந்தப்பட்ட பிசினஸ் செய்வது என்பதால். ஒவ்வொன்றையும் மிகவும் கவனமாகக் கற்றுக் கொண்டு வந்தான். ஆதிக்கும், போதியும் நிறைய நேரம் செலவிடுவதால் சங்கவியை இருவரும் அவ்வளவாகக் கண்டுகொள்வது இல்லை.

கிட்டத்தட்ட…. இங்கே வந்த வேலை தொண்ணூறு சதவிகிதத்திற்கும் மேலே முடிந்து விட… ஆதி போதியிடமும், சங்கவியிடமும் மற்ற வேலைகளை கவனிக்கச் சொல்லிவிட்டு ஆதி வேறு ஒரு பிசினஸ் விஷயமாக ஜெர்மன் சென்றான். போதி சங்கவியுடன் நட்புப் பாராட்டி இருக்க… இருவரும் அவ்வப்பொழுது சேர்ந்து வெளியே செல்வது டின்னெர் சாப்பிடுவது என்று வேலைகளுக்கு இடையே வெளியேவும் சென்று வந்து கொண்டு இருந்தனர்.

போதிக்கு ஆதி துர்காவைத் திருமணம் செய்து கொண்ட விஷயம் தெரியாது என்று சங்கவிக்குத் தெரியாது. அவன் இங்கு வந்த நாளில் இருந்து தினமும் இரண்டு முறையாவது துர்காவுடன் போனில் பேசிவிடுவான். அது ஆதிக்குத் தெரிந்தும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. சங்கவி இதை எல்லாம் பார்த்துவிட்டு ஆதி இந்த பிசினஸிற்காக போதி துர்காவுடன் பேசுவதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று நினைத்துக் கொண்டு இருந்தாள் சங்கவி.

ஆனால் துர்காவிடம் போதி மிகவும் நெருகிய நண்பன் போல அடிக்கடி போனில் பேசிக்கொண்டு இருப்பதை கவனித்த சங்கவிக்கு இவனுக்கும் துர்காவிற்கும் எப்படி இவ்வளவு நெருங்கிப் பழகும் அளவிற்கு அப்படி என்ன இவர்கள் இருவருக்குள்ளும் இருக்கிறது என்று யோசிக்க ஆரம்பித்து விட்டாள்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured