Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 122

உன் ரகசிய ரசிகை நான் 122

by Layas Tamil Novel
292 views

விக்கி கேட்டதை தான் செய்தால் அவன் தன்னை மன்னித்து விடுவதாக சொன்னதும் அவன் என்ன கேட்கப் போகிறான் என்று பயந்தவாரே நிலானி விக்கியை பார்த்துக் கொண்டிருக்க…

அவள் “சரி” என்று சம்மதம் சொன்னதும் சந்தோசமான விக்கி அவள் அருகில் வந்து, “நான் உன் மடியில் படுத்துக்கவா?” என்றான் விக்கி.

அவன் தன் மடியில் படுக்க வேண்டும் என்று கேட்டதும் நிம்மதி அடைந்தவள், “இதற்குத்தான் இவ்வளவு தயங்குனீங்களா? நான் கூட என்னவோன்னு நினைச்சேன்,” என்று சொல்லி நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் நிலானி.

“நான் இதைத்தான் கேட்க நினைச்சேன், வேற என்ன?” என்றான் விக்கி.

“இல்லை, ஒண்ணும் இல்லை,” என்றவள் அவனைப் பார்க்க…

அவள் தான் கேட்கப் போவதைக் கொண்டு மனதில் என்ன நினைத்து இருப்பாள் என்று புரிந்து கொண்டவன், “நீ என்ன நினைச்சேன்னு என்கிட்டே நீ சொல்லவில்லை என்றாலும் எனக்குத் தெரியும்,” என்றவன், “பயப்படாதே, நான் இப்போ அதெல்லாம் எதுவும் கேட்க மாட்டேன்,” என்றவன், “உன் மடியில் படுத்துக்கவா?” என்றான் திரும்பவும்.

அவள் “சரி” என்று தலையை ஆட்ட… அவள் முன்னாள் அமர்ந்து இருந்தவன் எழுந்து, அவள் அடிபட்டிருந்த பாதங்களைப் பூவை விட மென்மையாகப் பிடித்தவன், அவள் காலை நீட்டி அவள் மடியில் தலை வைத்துக் படுத்துக்கொண்டான்.

தன் மடியில் படுத்திருந்தவனை நிலானி பார்க்க… அவளை நிமிர்ந்து பார்த்த விக்கி, “என்ன நிலாக்குட்டி, அப்படியே உட்கார்ந்திருக்கே,” என்றான்.

“என்ன பண்ணனும்?” என்றாள் நிலானி.

“என்ன பண்ணனும்னு தெரியலையா உனக்கு?” என்றவன், “இப்படி எதுவும் தெரியாத பொண்ணா இருக்கியே,” என்றவன். அவள் கையை எடுத்துத் தன் தலையில் வைத்தவன், “என் தலை முடிக்குள் கையை விட்டு இப்படிப் பண்ணு,” என்று அவளிடம் தன் தலையை வருடிக் காட்டினான்.

அவளும் “சரி” என்று தலையை ஆட்டியவள், விக்கியின் தலையை மெதுவாகத் தயங்கிக் கொண்டே அவன் தலை முடிக்குள் தன் விரல்களை விட்டு வருடிக் கொடுத்தாள்.

“ஆஹா… ஆஹா… என் பொண்டாட்டி கை பட்டதும் எவ்வளவு ஆனந்தமா இருக்கு,” என்று சொல்லி கண்கள் மூடி அவள் மடியில் கண்மூடிப் படுத்து இருந்தான்.

அவளும் அவனை ரசித்துக்கொண்டே அவன் முடியை வருடிக் கொடுத்தாள்.

“நிலாக்குட்டி…” என்றான் விக்கி.

“ம்ம்ம்…. சொல்லுங்க…” என்றால் நிலானி.

“நான் ரூமுக்குள்ளே வந்ததும் நீ ஏன் பதட்டமா இருந்தே?” என்றான்.

அவன் தலையை வருடிக் கொடுத்துக் கொண்டு இருந்தவள் அப்படியே நிறுத்தி விட… அவள் கையைப் பிடித்துத் தன் தலையை மறுபடியும் வருடச் சொல்லி அவள் கையை ஆட்டியவன், “சொல்லு நிலாக்குட்டி,” என்றான் விடாமல்…

“விடமாட்டான் போலயே,” என்று நினைத்தவள், “அது.. அது வந்து…” என்று நிலானி தயங்க…

“நீ எதுக்கு இப்படித் தயங்குறேன்னு எனக்குத் தெரியும்,” என்றவன் அவள் முகத்தைப் பார்க்க…

அவன் தான் எதுக்கு பதட்டம் அடைந்தோம் என்று தனக்குத் தெரியும் என்று சொன்னதும் நிலானிக்கு மீண்டும் பயம் தொற்றிக் கொள்ள…

“பயப்படாத நிலாக்குட்டி… நான் நீ நினைக்கிற மாதிரி எதுவும் செய்ய மாட்டேன்,” என்றான்.

அவன் அப்படிச் சொன்னதும் தான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது.

“ஏன்னு கேட்க மாட்டியா நிலாக்குட்டி?” என்றான்.

அவன் அப்படிச் சொன்னதும், “ஏன்?” என்றாள் நிலானி.

“எனக்குச் சொந்தம்னு சொல்லிக்க ஆதி ஃபேமிலி மட்டும் தான் இருக்கு. அவங்க எல்லார் கிட்டயும் நான் இன்னும் நமக்குக் கல்யாணம் ஆன விஷயத்தை நான் சொல்லவே இல்லை.”

“நான் உன்னைக் ஆதி வீட்டுக்குக் கூட்டிட்டுப் போய் அவங்க கிட்டே நமக்குக் கல்யாணம் ஆன விஷயத்தைச் சொல்லி அவங்க எல்லார் சம்மதத்தோட தான் நமக்குள்ள எல்லாமே,” என்றான் அவளைப் பார்த்து.

அவன் அப்படிச் சொன்னதைக் கேட்டு “சரி,” என்று வெட்கத்துடன் தலையை ஆடியவள், “எப்போ என்னை அங்கே கூட்டிட்டுப் போறீங்க?” என்றாள் நிலானி.

நிலானி அப்படி கேட்டதும் அவள் மடியில் இருந்து எழுந்தவன், “நம்ம ஒண்ணா சேருறதுல உனக்கு அவ்வளவு அவசரம்,” என்றவன், “இப்போ கூட எனக்கு ஓகே தான்,” என்று விக்கி கள்ளத்தனமாகச் சிரிக்க…

அவன் அப்படி கேட்டதும் தான், “என்ன நினைத்துக் கேட்டால், அதை எப்படி அர்த்தம் எடுத்துக் கொள்கிறான் பார்,” என்று நினைத்தவள், வேகமாகத் தலையை ஆட்டி, “இல்லை.. இல்லை.. நான் அப்படி எல்லாம் நினைச்சு சொல்லலை,” என்று மறுத்தாள் நிலானி.

“ஏய்… நான் சும்மா தான் கேட்டேன்,” என்றவன், “இன்னைக்குக் கதிருக்கும் கீர்த்திக்கும் நிச்சயதார்த்தம் இருக்கு இல்ல? அதனால எல்லாரும் ரொம்ப பிஸியா இருப்பாங்க.”

“நான் உன்னை ஈவினிங் கூட்டிட்டுப் போய் அவங்க எல்லார் கிட்டயும் உன்னைக் காட்டி நமக்குக் கல்யாணம் ஆன விஷயத்தைச் சொல்ல போறேன்,” என்றான் விக்கி.

மீண்டும் நிலானியின் மடியில் படுத்துக் கண்மூடி உறங்க ஆரம்பித்தான்.


கதிருக்குத் திருமணம் நிச்சயமான செய்தி அவன் ஆபீஸ் முழுவதும் தெரிய வர…

நிச்சயதார்த்தம் முடிந்து ஆபீஸ் வந்த கதிருக்கு, வேலை பார்த்த அனைத்து ஸ்டாஃப்களும் ஒன்று கூடி அவனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

கதிர் அவன் கேபினில் இருக்க… அவனிடம் ஒரு ஃபைலைக் கொண்டு வந்து கையெழுத்து வாங்க வந்த பவன், கதிருக்கு வாழ்த்து சொன்னான்.

மெல்லியதாக ஒரு சிரிப்பை அவனுக்குப் பதிலாகத் தந்துவிட்டுக் கதிர் இன்டர் காமில் மதுவை கேபினுக்கு வரச் சொன்னவன், அவள் வந்ததும் அவர்கள் இருவரையும் பார்த்து, “நீங்க ரெண்டு பேரும் இன்னைக்கு ஈவினிங் சிம்லா புறப்படுகிறீர்கள்,” என்றான் கதிர்.

அவன் சொன்னதைக் கேட்டதும் அதிர்ச்சியான பவனும் மதுவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துவிட்டுக் கதிரைப் பார்க்க, “என்ன ரெண்டு பேரும் இப்படி ஷாக்காகி நிக்கிறீங்க?”

“எனக்கு ஆல்ரெடி கல்யாணம் ஃபிக்ஸ் இருந்தது உங்களுக்கு நல்லாவே தெரியும். ஒண்ணு மட்டும் தான் இப்போ மாறி இருக்கு,” என்று சொன்னவன், “சிம்லாவுக்குப் போறது பத்தி நான் ஏற்கனவே பவன் கிட்ட சொல்லி இருந்தேன்.”

“முதல்ல அவனை மட்டும் தான் அனுப்புறதா இருந்தது மது. ஆனா அவனுக்கு டிசைனிங் எல்லாம் நல்லா வருமே தவிர, ஃபேப்ரிக் பத்தி ரொம்ப நாலேட்ஜ் பர்சன் கிடையாது.”

“ஆனா நீங்க வொர்க் எல்லாம் பார்த்திருக்கேன். அக்கவுண்ட்ஸில் நீங்க எப்படி எல்லா வேலையும் பெர்ஃபெக்ட்டா இருக்கீங்களோ, அதே போல…”

“நம்ம ஆபீஸில் செய்ற ப்ராஜெக்ட்ஸ் ஃபேப்ரிக் செலக்ட் பண்ணிக் கொடுக்கிறதுலையும் நீங்க சரியா வொர்க் பண்றதை நானும் பார்த்திருக்கேன். ரியாவும் என்கிட்ட உங்களைப் பத்தி சொல்லி இருக்கா…”

**”முதல்ல ரியாவைத் தான் பவன் கூட சிம்லா அனுப்பி வைக்கலாம் என்று இருந்தேன். ஆனா ரியா, **’என்னை விட மது எக்ஸ்பீரியன்ஸ் உள்ள ஆளு. மது அளவுக்கு எனக்கு எக்ஸ்பீரியன்ஸ் கிடையாது சார். அதனால நீங்க பவன் கூட மதுவையும் சிம்லா அனுப்பி வைங்க’ன்னு ரியா சஜஸ்ட் பண்ணினா.”

“எனக்கும் ரியா சொன்னது சரின்னு தோணிச்சு. அதனால நான் உங்களைக் கேட்காமல் உங்க ரெண்டு பேருக்கும் சிம்லா போக ஃப்ளைட் டிக்கெட் புக் பண்ணிட்டேன்.”

“ஈவினிங் ரெண்டு பேரும் கிளம்பணும். அதனால நீங்க ஹால்ஃப் டே லீவு எடுத்துட்டு, அதுக்கான திங்ஸ் எல்லாம் பேக் பண்ணி ரெடியா இருங்க. ஈவினிங் 4 ஓ கிளாக் நான் கார் அனுப்பி வைக்கிறேன். இரண்டு பேரும் கிளம்பிருங்க,” என்று சொன்னான் கதிர்.

பவன் கதிரிடம் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க… மது கதிரைப் பார்த்து, “சார், நான் கிளம்புறதப் பத்தி எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல. ஆனா வீட்ல நிலானி தனியா இருப்பாளே,” என்று சற்றுத் தயங்க.

“என்ன மது, அதுக்குள்ள மறந்துட்டீங்களா? விக்கி தான் ஊர்ல இருந்து வந்தாச்சே. அவன் பார்த்துக்க மாட்டானா நிலானியை?” என்று கேட்டான் கதிர்.

இப்போது விக்கியை காரணம் காட்டி கதிர் சொல்லவும், மதுவால் மறுக்க முடியவில்லை. “ஓகே சார், அப்போ நான் கிளம்புறேன்,” என்று சொல்லிவிட்டு கதிரின் கேபினில் இருந்து மது வெளியே வந்து விட…

பவன் இன்னும் எதுவும் பேசாமல் கதிர் கேபினில் நின்று இருக்க…

“என்ன பவன், நீ கிளம்பலையா?” என்று கேட்டான் கதிர். “சார், நிஜமாவே சிம்லாவுக்குத் தான் அனுப்புறீங்களா எங்களை?” என்று கேட்டான் பவன்.

“ஆமாம், ஏன்டா? அதில் என்ன டவுட்?” என்று கேட்டான் கதிர்.

“ஒண்ணும் இல்லை சார், சும்மாதான் கேட்டேன். ஓகே சார், நானும் கிளம்புறேன். நானும் போய் திங்ஸ் எல்லாம் எடுத்து வைக்கணும்,” என்று சிரித்த முகமாகச் சொல்லிவிட்டு பவன் கிளம்பினான்.

வெளியே வந்த பவன் முதல் வேலையாக ரியாவைத் தான் தேடினான். அவள் கேபினில் அமர்ந்து மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டிருக்க… அவளிடம் வேகமாக வந்த பவன் அவள் கையைப் பிடித்து, “ரொம்ப தேங்க்ஸ் ரியா,” என்றான்.

“எதுக்குடா எனக்குத் தான் தேங்க்ஸ் சொல்றே?” என்றாள் ரியா.

“சிம்லாவுக்கு நீ வரலைன்னு சொன்னியே…. அதுக்குத் தான் இந்தத் தேங்க்ஸ்,” என்றான் சிரித்துக் கொண்டே பவன்.

“ஏண்டா, சொல்ல மாட்டேன். போனாப் போகுதுன்னு மதுவை உன் கூட அங்க அனுப்பி வச்சா, அப்படியாவது நீங்க ரெண்டு பேரும் பேசி செட்டாவீங்கன்னு நினைச்சா…”

“நீ என்னவோ நான் வரலைன்னு சந்தோஷமா சொல்றியா? இரு, நான் இப்பவே போய்க் கதிர் சார்கிட்ட சொல்லி, ‘மது வரலைன்னு சொல்லிட்டா, அவளுக்குப் பதிலா நான் பவன் கூட சிம்லா போறேன்’ என்று சொல்லிட்டு வரேன்,” என்று சேரில் இருந்து எழுந்திருக்கப் போக…

அவளை அப்படியே சேரோடு சேர்த்து அழுத்தி அமர வைத்தவன், “ப்ளீஸ்… ரியா, அப்படி எதுவும் போய்க் கதிர் சார் கிட்ட சொல்லிடாத… நான் சும்மா விளையாட்டுக்கு உன்னைக் கிண்டல் பண்ணேன், சரியா?” என்று அவளைச் சமாதானம் செய்தான் பவன்.

அவனை முறைத்தவள், “சரி, உள்ளே வா சார். உன் கூட மது வரச் சொன்னப்ப அவ எதுவுமே சொல்லலையா?” என்று கேட்டாள் ரியா.

**”இல்லை, **’அவங்களோட தங்கச்சி தனியா இருப்பா, நான் எப்படி வரது?’**ன்னு சொல்லிப் பேசினாங்க. அதுக்குக் கதிர் சார், **’அது அவங்களோட ஹஸ்பண்ட் வந்துட்டாங்கல்ல? அதனால நீங்க போயிட்டு வாங்க’**ன்னு சொன்னதும், அதுக்கப்புறம் எதுவும் சொல்லாமல், **’ஓகே சார் நான் கிளம்புறேன்’ன்னு சொல்லி கிளம்பி வந்துட்டா,” என்று சொன்னான் பவன்.

“சரி, மது இப்போ உன்கிட்ட நல்லா பேசுறா இல்லையா?” என்று கேட்டாள் ரியா.

“எங்கடி…. அவகிட்ட நான் போய்ப் பேசலாம்னு போனாலே அவ முகத்தைத் தூக்கி வச்சிட்டுப் போயிடுறா… நான் வேற அன்னைக்கு லிஃப்ட்ல மாட்டிக்கிட்டப்ப ரொம்ப ஓவரா தான் பேசிட்டேன்.”

**”அதிலிருந்து அவள் என்கிட்ட முகம் கொடுத்துப் பேசவே மாட்டேங்குறா. என் மேலயும் தப்பு இருக்கு இல்லையா? அன்னைக்கே அவள் எனக்கு எவ்வளவு அக்கறையா சாப்பாடு கொடுத்தா. அவள் கொடுத்தப்போ நான் **’வேண்டாம்’னு அவகிட்ட எறிஞ்சு விழுந்தேன்.”

“அப்படி இருந்தும் அவள் என்கிட்ட நல்லாத் தானே நடந்துகிட்டா? நானா தான் அவளை வெறுப்பேத்தற மாதிரி நடந்துகொண்டேன். அதுக்கு இப்போ அனுபவிக்கிறேன்,” என்றான் பவன்.

“ஆமாம், நானும் கேட்கணும்னு நினைச்சிட்டு இருந்தேன். அன்னைக்கு ஏன் நீ மதுக்கிட்டே அவ்வளவு ஆஃபுல்லா பிஹேவ் பண்ணின?” என்று கேட்டாள் ரியா.

“அது ஒண்ணும் அவ்வளவு பெரிய விஷயம் இல்லை ரியா. நீ வேற ஒரு நாள் முழுக்க நான் மது இருக்கும் பக்கமே வரக்கூடாதுன்னு சொல்லிட்டியா?”

“நீ சொன்னதுக்கு அப்புறம் தான் என்னவோ எனக்குப் புரிஞ்சுது. என்னால மதுவைப் பார்க்காம இருக்கவே முடியல.”

“உனக்குத் தெரியாமல், மதுவுக்கும் தெரியாமல் நான் ஒளிஞ்சு ஒளிஞ்சு அவளைப் பார்த்துட்டுத் தான் இருந்தேன். இது இப்படியே போனால் நல்லா இருக்காது. என்னால ஒரு பொண்ணோட பேரு கெட்டிடக்கூடாதுன்னு சொல்லித்தான் நான் அவகிட்ட இருந்து விலகிப் போகணும்னு முடிவு பண்ணி அன்னைக்கு அப்படிப் பேசினேன்.”

“ஆனா அப்படிப் பேசினேன் ஒழிய, எனக்கு அவளைப் பார்க்காமயோ, அவ கூடப் பேசாமயோ இருக்க முடியல.. அவகிட்ட திட்டு வாங்கிட்டு ஆவது அவள் பக்கத்துல வந்து இருக்கத் தோணுது இப்போ எல்லாம்,” என்றான் பவன்.

அவன் சொன்னதைக் கேட்டவளுக்குச் சந்தோஷம் தாங்க முடியவில்லை. பவனின் கையைப் பிடித்துக் குலுக்கியவள், “வாழ்த்துக்கள் டா. ஒரு வழியா நீ மதுவ லவ் பண்ண ஆரம்பிச்சுட்டே,” என்று சொல்லி சந்தோஷப்பட்டாள்.

“ஏண்டி, நானும் மதுவும் லவ் பண்றதுல உனக்கு அப்படி என்ன சந்தோஷம்? நானும் ஆரம்பத்திலிருந்து பார்த்துட்டு இருக்கேன். என்னையும் மதுவையும் சேர்த்து வைப்பதிலேயே நீ குறியா இருக்கியா?” என்று கேட்டான் பவன்.

“அதுக்கெல்லாம் ஒரு காரணம் இருக்கு. அத நான் இப்ப சொல்ல மாட்டேன். கொஞ்ச நாள் கழிச்சு சொல்றேன். சரி சரி, உனக்கு ஈவினிங் ஃப்ளைட் டைம் ஆயிடும். நீ போய்க் கிளம்பு,” என்று சொல்லிப் பவனை அங்கிருந்து கிளப்பி விட்டாள் ரியா.

மாலை கதிர் சொன்னது போல நான்கு மணிக்கு கார் வந்தவுடன், மது நிலானி இடமும் விக்கி இடம் சொல்லிவிட்டு வெளியே வர, பவனும் அவன் வீட்டிற்கு வெளியே நின்று இருந்தான். அவனுடன் அவன் அம்மாவும் தங்கையும் அவனை வழி அனுப்ப, அவர்கள் இருவரையும் பார்த்த மது சிரித்தபடி தலையை அசைத்துவிட்டுக் கீழே செல்ல, பவன் நேராக விக்கியிடம் வந்து, “சார், போயிட்டு வரேன்,” என்று சொல்லிவிட்டு மதுவுடன் சிம்லாவுக்குக் கிளம்பினான்.

விக்கியும் நிலானியிடம், “சரி, நீயும் போய்ப் ரெடியாகு. நம்ம ஆதி வீட்டுக்குப் போயிட்டு வரலாம்,” என்று சொல்லி அவளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.


❤️

வெங்கடாசலம் சங்கவியின் அப்பா வேதாச்சலத்திற்கு கால் செய்து, கதிர் கீர்த்து திருமணத்தைப் பற்றிச் சொல்லி, அவரை குடும்பத்துடன் வரச் சொல்லி அழைப்பு விடுத்திருந்தார்.

வேதாச்சலம் தன் ஃபோனை ஸ்பீக்கரில் போட்டு இருக்க, வெங்கடாசலம் பேசியதை எல்லாம் சங்கவியும் கேட்டுக் கொண்டு தான் இருந்தாள்.

வெங்கடாசலம் ஃபோன் பேசிவிட்டு வைத்ததும், சங்கவி அவள் அப்பாவிடம், “ஏன்ப்பா, கதிருக்கும், துரையோட பொண்ணு ராதாவுக்கும் தானே கல்யாணம் என்று சொன்னார்?”

“ஆனா இப்ப என்ன ராதாவுக்குப் பதிலா, அந்த துர்காவோட தங்கச்சி கீர்த்திகாவை கதிருக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க?” என்று கேட்டாள் சங்கவி.

“நானும் அதுதான் யோசிச்சிட்டு இருக்கேன். எப்படி இந்தச் சொத்து மொத்தமும் துர்கா குடும்பத்துக்கே போயிடுச்சு பாத்தியா?” என்று சொன்னார் வேதாச்சலம்.

“அது எப்படிப்பா? எனக்கு வர வேண்டிய பங்கை நான் விட்டுக் கொடுப்பேனா? சரியா கதிர் கல்யாணத்து அப்போ பாருங்க… ஆதி உடைய மொத்தக் குடும்பமும் கதிர் கல்யாணத்தில் இருக்கும்போது…”

“அதே மேடையில ஆதி கையால நான் தாலி வாங்கிறேனா இல்லையா பாருங்க,” என்று சொன்னாள் சங்கவி.

“என்னம்மா சொல்ற? ஒண்ணும் பிரச்சனை வந்து விடாதே. எல்லாம் சரியா நடக்குமா?” என்று கேட்டார் வேதாச்சலம்.

“அதிலெல்லாம் எந்தப் பிரச்சனையும் வராதுப்பா. அதெல்லாம் நான் பார்த்துக்குறேன்,” என்று சொன்ன சங்கவி. “அங்க நான் ஆதியைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்காக அவங்க கிட்டப் பிரச்சனை பண்ணிப் பேசுறப்போ, நீங்க என் பக்கம் தான் நிக்கணும் அப்பா,” என்று சொன்னாள் சங்கவி.

“என்னம்மா இப்படிச் சொல்ற… நீ என் பொண்ணுடா. நீ எது செஞ்சாலும் நான் உனக்கு சப்போர்ட்டா தான் இருப்பேன்,” என்று சொன்னார் வேதாச்சலம்.

அப்போது சரியாக சிவகாமி சங்கவியின் ரூமுக்குள் வர… சங்கவிக்குச் சப்போர்ட் செய்வதாகச் சொன்னதைக் கேட்டுக் கொண்டே வந்தவர்.

“என்னங்க, சங்கவிக்கு ஏதோ சப்போர்ட் பண்றேன்னு சொல்லிட்டு இருந்தீங்க? அவள் யாரையாவது விரும்புகிறாளா? அவங்களை கல்யாணம் பண்ணிக்க உங்ககிட்ட பர்மிஷன் கேட்கிறாளா?” என்று கேட்டுக் கொண்டே வந்தார் சிவகாமி.

சிவகாமி பேசியதை வைத்து வேதாச்சலம் தாங்கள் இதுவரை பேசியது எதுவும் சிவகாமிக்குத் தெரியவில்லை என்பதைப் புரிந்து கொண்டவர்.

சிவகாமியிடம், “ஆமாண்டி….. உன் பொண்ணுக்கு சீக்கிரமா கல்யாணம் பண்ணப் போறோம். அத பத்தி தான் என்கிட்ட பேசிட்டு இருந்தா. அதுக்குத் தான் நானும் யாரை கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் அவளுக்குத் துணையாய் இருப்பேன்னு சொன்னேன்,” என்று சொன்னார் வேதாச்சலம்.

“என்னங்க சொல்றீங்க? உண்மையாவா? யாருங்க மாப்பிள்ளை?” என்று கேட்டார் சிவகாமி.

“அதெல்லாம் நேரம் வரும்போது சொல்றேன். உன் பொண்ணு கல்யாணத்துக்குச் சம்மதிச்சதே பெருசு,” என்று சொல்லிச் சமாளித்தார் சிவகாமியை.

சங்கவிக்குத் திருமணம் என்று வேதாச்சலம் சொன்னதும், அவர்களுக்காகச் சாப்பிட ஸ்நாக்ஸ் கொண்டுவந்த சிவகாமி தட்டைக் கீழே வைத்துவிட்டு, நேராகச் சங்கவியிடம் சென்று அவளைத் தன் மார்போடு கட்டிக்கொண்டு, கண்களில் நீர் வழிய… “அம்மாடி, உன்னைச் சுத்தி இருக்கிறவங்க எல்லாருமே கல்யாணம், குழந்தைன்னு சந்தோசமா இருக்கிறப்போ, என் பொண்ணு மட்டும் இப்படி இருக்காளேன்னு நான் ரொம்பக் கஷ்டப்பட்டேன்.”

“ஆனால் நீ கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு கேள்விப்பட்டதும், அம்மாவுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?” என்று அழ…

அவர் தன் மீது இப்படி உண்மையான பாசம் காட்டி அழவும், சங்கவிக்கு ஏதோ போல ஆகிவிட்டது.

அவரை நிமிர்ந்து பார்த்த சங்கவி, “சிவகாமி தன்னிடம் உண்மையான தாய் பாசம் என்பதை எப்போதுமே சங்கவியிடம் காட்டிக் கொண்டுதான் இருக்கிறார். ஆனால் சங்கவி தான் அவரை எப்போதுமே தன்னிடம் இருந்து தள்ளி வைத்துப் பார்க்கிறாள்,”

“இவளுக்குத் திருமணம் என்று சொன்னதும் சிவகாமியின் சந்தோஷத்தைப் பார்த்து சங்கவிக்கும் ஏனோ உள்ளுக்குள் அவர் மகிழ்ச்சி அவளுக்கும் சந்தோசமாக இருக்கத்தான் செய்தது.”

“நான் போய் என் அண்ணன் முத்து கிட்ட இந்தச் சந்தோஷமான விஷயத்தை முதலில் சொல்லிட்டு வரேன். அவர் இதைக் கேட்டா எவ்வளவு சந்தோஷப்படுவார் தெரியுமா?” என்று சொல்லிவிட்டு முத்துவிற்கு கால் செய்ய சிவகாமி வெளியே சென்று விட…

சிவகாமி அந்த அறையை விட்டுச் சென்றதும், சங்கவி வேதாச்சலத்தைப் பார்த்து, “என்ன அப்பா… அம்மா எனக்குக் கல்யாணம்னு சொன்னதும் இவ்வளவு சந்தோசப்படுறாங்க.”

“ஆனா ஆதி தான் மாப்பிளைன்னு அம்மாவுக்குத் தெரிஞ்சா, இவங்க இதே போல சந்தோஷப்படுவாங்களா? நமக்குச் சப்போர்ட் பண்ணுவாங்களா?” என்று கேட்டார் சங்கவி.

“அது கொஞ்சம் கஷ்டம் தான் நினைக்கிறேன் சங்கவி. இவளைச் சமாளிச்சுக்கலாம். ஆதி உன் கழுத்துல தாலி கட்டிட்டா, அதுக்கப்புறம் உன் அம்மா எதுவும் சொல்ல மாட்டா,” என்றார் வேதாச்சலம்.


❤️

நிலானியுடன் ஆதியின் வீட்டிற்கு வந்த விக்கி, அவளைக் காரில் இருந்து தூக்கி வீல்சேரில் அமர வைத்தவன்.

நிலானியின் வீல்சேரைத் தள்ளிக்கொண்டு ஆதியின் வீட்டு வாசல் வரை சென்றவன், உள்ளே செல்லத் தயங்கிக் கொண்டு நின்று இருக்க…

இரவு ஹாலில் அமர்ந்து அனைவரும் பேசிக் கொண்டிருக்க, இவர்கள் இருவரும் வந்ததைப் பார்த்தது முதலில் ராதா தான்.

முதலில் நிலானியைப் பார்த்த ராதா, “நிலானி வாடி,” என்று சொல்லிக் கொண்டு எழுந்து சென்றவள், அவள் பின்னால் தயக்கத்தோடு நின்றிருந்த விக்கியைப் பார்த்ததும், “விக்கி அண்ணா வாங்க… நீங்க எப்போ ஆபீஸ்ல இருந்து வந்தீங்க?” என்று கேட்டுக்கொண்டே அவர்கள் அருகில் வந்தவள்.

நிலானியும் விக்கியும் தனித்தனியாக வந்திருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டு ராதா, நிலானி இடம் வந்து, “ஏண்டி வாசலிலே நிற்கிற? வா… உள்ள போலாம்,” என்று அவள் கையைப் பிடித்து அழைக்க…

நிலானி ராதாவின் கையைப் பிடித்துக் கொண்டு “ம்ஹும்,” என்று தலையை இடவலமாக ஆட்டி உள்ளே வரவில்லை என்று சொன்னாள்.

“ஏண்டி, என்னைப் பார்க்க இவ்வளவு தூரம் வந்துட்டு வீட்டுக்குள்ள வர மாட்டேன்னு சொல்ற?” என்று ராதா புரியாமல் கேட்க…

“ராதா, உன் ஃபிரெண்ட் உன்னைப் பார்க்க மட்டும் வந்திருந்தால்… இந்நேரம் உள்ள வந்திருப்பாங்க.”

“ஆனா அவங்க இப்போ இந்த வீட்டுக்குள்ள வரணும்னா, உன்னோட ஃப்ரெண்டோட ஹஸ்பண்ட் பர்மிஷன் கொடுத்தால்தான் உள்ளே வருவாங்க,” என்று சொல்லிக் கொண்டு கதிர் வாசலுக்கு வர…

“கதிர் மாமா, என்ன பேசுறீங்க? நிலானிக்கு இன்னும் கல்யாணமே ஆகல… எப்படி அவளுக்கு ஹஸ்பண்ட் வருவாங்க?” என்று சொன்னவளுக்கு அப்போதுதான் ஏதோ புரிய வர, நிலானியின் அருகில் தயக்கத்தோடு நின்றிருந்த விக்கியைத் திரும்பிப் பார்த்த ராதா, தன் ஆள்காட்டி விரலை நீட்டி நிலானி இடம் நீட்டி…

“நிலா, நீ… அப்போ… உன் ஹஸ்பண்ட்?” என்று சொல்லிக் கொண்டு விக்கியை நோக்கித் தன் விரலைக் காட்டி ராதா கேட்க… “ஆமாம்,” என்று தலையும் மேலும் கீழும் ஆட்டினாள் நிலானி.

நிலானி சொன்னதைக் கேட்ட ராதா, விக்கியையும் நிலானையும் மாறி மாறிப் பார்த்து அதிர்ச்சியானவள். அதே அதிர்ச்சியோடு திரும்பி வீட்டுக்குள் சென்றவள்.

பின் சத்தமாக, “எல்லாரும் வாங்க… எல்லாரும் வாங்க….. விக்கி அண்ணா கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்காரு!” என்று சொல்லிக் கொண்டே ஹாலுக்கு ஓடினாள்.

ஸ்டோரி படிச்சிட்டு கமெண்ட் பண்ணுங்க மக்களே! ஒருத்தர் கூட கமெண்ட் பண்ண மாட்டிங்குறீங்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. யாருமே என் கதையை படிக்கறது இல்லையா ? என் கதை அவ்ளோ சுமாரா இருக்கா ஒரு கமெண்டுக்கு கூட எனக்கும் என் கதைக்கும் தகுதி இல்லையா?😒😒😒

You may also like

2 comments

ARJUNAN November 13, 2025 - 2:44 pm

ஸ்டோரி நல்லாத்தான் இருக்கு ஆனால் அதுக்குள்ள 30 துணை ஸ்டோரி வருது இதனால இந்த கதைக்கான மெயின் கேரக்டர்ஸ் அடிபட்டு போயிடுது, அதனால தான் கதையோட ஒட்ட முடியல,
மெயின் கேரக்டர் ஸ் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்து கதையை நகர்த்தவும், இது தங்களின் மேல் அக்கறை கொண்டவனின் அன்பான வேண்டுகோள் 🙏🙏🙏

Reply
Layas Tamil Novel November 13, 2025 - 4:35 pm

நீங்க சொல்றது சரி தான் சகோ. சின்ன கதையா இருந்தா மெயின் கேரக்டர் மட்டும் வச்சு ஸ்டோரி எழுதலாம். ஆனா இந்த ஸ்டோரி கிட்டத்தட்ட 250 to 300 எபிசொட் வரும். மெயின் கேரக்டரை மட்டும் வச்சு 300 எபிசொட் கதையை நகர்த்தினா போர் அடிக்காதா படிக்கிறவங்களுக்கு. கொஞ்சம் என்னையும் consider பண்ணுங்க ப்ரோ. ஐயம் பாவோம்ல… அவ்ளோ திறமை எல்லாம் என்கிட்டே இல்ல bro😄. எல்லாத்தையும் விட நீங்க கமெண்ட் பண்ணினது எனக்கு ரொம்ப மகிழ்ச்சி தொடர்ந்து உங்கள் விமர்சனங்களை பதிவிடுங்கள்.

Reply

Leave a Reply to Layas Tamil Novel Cancel Reply

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured