Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 156

உன் ரகசிய ரசிகை நான் 156

by Layas Tamil Novel
285 views

EPISODE 156

வழக்கம் போலக் காலை 5 மணிக்கு அலாரம் ஒலித்ததும் எழுந்த மாதவி, வீட்டு வேலைகளை எல்லாம் செய்யத் தயாரானாள்.

அவள் தனியாக வீட்டு வேலைகளை எல்லாம் செய்வதைப் பார்த்துப் பரிதாபப்பட்ட வேதாச்சலம், அவளுக்குத் துணையாக மேலும் இரண்டு வேலை ஆட்களைச் சேர்த்து இருந்தார். மேலும், வேலை ஆட்களைச் சேர்க்கச் சொல்லி வேதாச்சலத்திடம் சொன்னதே சங்கவி தான். சங்கவிக்கு மாதவியைப் மிகவும் பிடித்துப் போய்விட்டது. அவளைத் தன் சகோதரியாகவே நினைத்து, பழக ஆரம்பித்து இருந்தாள் சங்கவி.

இப்போது எப்போதும் போலக் காலைச் சிற்றுண்டிக்கு வேண்டியது எல்லாம் செய்து முடித்த மாதவி, வேலைக்காரர்களிடம் மதிய உணவுக்குத் தேவையான காய்கறிகளைச் சொல்லிவிட்டு, கல்லூரிக்குக் (College) கிளம்புவதற்காகத் தன் அறைக்குப் போனாள்.

சிறிது நேரத்தில் தயாராகி வெளியே வந்த மாதவி, உணவு மேஜையில் (Dining Table) தனக்காகக் காத்திருந்த வேதாச்சலத்தையும் சங்கவியையும் பார்த்துவிட்டுச் சிரித்த முகமாக அவர்களிடம் வந்தாள். இருவருக்கும் தட்டில் காலை உணவைப் பரிமாறினாள்.

வழக்கம் போல மாதவியின் சமையலுக்கு அடிமையான இருவரும், வழக்கம் போல அதிகமாகவே சாப்பிட்டனர்.

அவர்கள் சாப்பிடுவதைப் பார்த்துச் சந்தோஷப்பட்ட மாதவி சங்கவியிடம், “அக்கா, இன்னைக்குக் கல்லூரி முடிஞ்சு நான் சாயங்காலம் தாமதமாகத்தான் வீட்டுக்கு வருவேன்,” என்றாள் மாதவி.

“ஏன்? உனக்குக் கல்லூரி முடிந்ததும் நேராக வீட்டுக்கு வரணும்னு தானே நான் சொல்லி இருக்கேன்,” என்று சங்கவி கேட்க…

“அது ஒண்ணும் இல்லை அக்கா. இன்னும் ரெண்டு நாள்ல எங்க கல்லூரியில இன்டர் காலேஜ் போட்டி (Inter College Competition) வருது. அதுல நான் கலந்து (Participate) பண்ணி இருக்கேன். அதுல கலந்துக்கிட்டு ஜெயிச்சா ஒரு லட்ச ரூபாய் பணம் பரிசா தராங்க அக்கா. அதுக்காக நான் கொஞ்சம் என் நண்பர்கள் கூடச் சேர்ந்து பயிற்சி (Practice) பண்ணனும். அதனால தான் நான் இன்னைக்குச் சாயங்காலம் வரத் தாமதம் ஆகும்னு சொன்னேன்,” என்றாள் மாதவி.

“இன்டர் காலேஜ் போட்டியா! எங்க கிட்ட ஏன் நீ முதல்லயே சொல்லல?” என்றார் வேதாச்சலம்.

“அப்பா, எனக்கே ரெண்டு நாள் முன்ன தான் தெரியும். நான் உங்ககிட்டச் சொல்லலாம்னு இருந்தப்போ, நீங்க அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வரவே தாமதமாகிடுச்சு. அதனாலதான் நான் சொல்ல முடியல,” என்றாள் மாதவி.

“சரிம்மா, அந்த ஒரு லட்ச ரூபாய்க்காக நீ இப்படிச் சிரமப்படணுமா… அந்தப் பணத்தை நானே உனக்குத் தரேன்,” என்றார் வேதாச்சலம்.

மாதவியிடம், “அப்பா சொல்றது சரிதான். நீ எங்கேயும் போய்க் கஷ்டப்பட வேண்டாம். உனக்கு அந்த ஒரு லட்ச ரூபாய் நான் தரேன். பேசாம இரு,” என்றால் சங்கவி.

“அக்கா ப்ளீஸ்… என்னை போக வேண்டாம்னு சொல்லாதீங்க. நான் ஏற்கனவே பேர் கொடுத்துட்டேன்,” என்று மாதவி கெஞ்ச…

“இப்போ உனக்கு அந்த ஒரு லட்ச ரூபாய் ரொம்ப அவசியமா? அதுக்காகத்தானே நீ இந்த போட்டியில எல்லாம் கலந்துக்கிறேன்னு சொல்ற?” என்று கேட்டாள் சங்கவி.

“ஆமாம் அக்கா. இந்த ஒரு லட்சம் எனக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்,” என்றாள் மாதவி.

“அப்படி என்ன முக்கியமான செலவு இருக்கு உனக்கு?” என்று கேட்டாள் சங்கவி.

“அது நான் செலவு பண்றதுக்காக இல்ல அக்கா. அந்தப் பணத்தை நான் இவ்வளவு நாள் வளர்ந்த ஆசிரமத்திற்குக் கொடுப்பதற்காக இந்தப் போட்டியில் கலந்துக்கிறேன்,” என்றால் மாதவி.

“இப்போ என்ன? உன்னோட ஆசிரமத்துக்கு அந்த ஒரு லட்ச ரூபாய் நன்கொடையாக (Donation) நீ கொடுக்கணும் அவ்வளவுதானே? இதை நானே உனக்கு இப்போ ஒரு லட்ச ரூபாய் தரேன். அதைக் கொண்டு போய் நீயும் உன் கையால கொடுத்துட்டு வா,” என்றால் சங்கவி.

“இல்லை அக்கா. நானா சம்பாதித்து, நான் வளர்ந்த ஆசிரமத்துக்கு ஏதாவது செய்யணும்னு நினைச்சேன். இப்போதைக்கு எனக்கு வர வருமானம் என்னுடைய படிப்புச் செலவுக்குச் சரியாப் போயிடுது. இந்த ஒரு வாய்ப்பைப் பயன்படுத்தி, என்னால் முடிந்த ஒரு சின்ன உதவியை என்னோட ஆசிரமத்துக்குச் செய்யணும்னு நினைக்கிறேன். அக்கா ப்ளீஸ்… வேண்டாம் என்று மட்டும் சொல்லாதீங்க,” என்றால் மாதவி.

அவள் கெஞ்சுவதைப் பார்த்த வேதாச்சலத்திற்கும் சங்கவிக்கும், அவளை மறுத்துப் பேசப் பிடிக்காமல், “சரி, இந்த ஒரு தடவை தான் உனக்குப் அனுமதி (Permission) தரேன். இனிமேல் இந்த மாதிரி போட்டி அது இதுன்னு எதுவும் நீ கலந்துக்கக் கூடாது,” என்றால் சங்கவி.

“என்ன வேணும்னாலும் என்கிட்டயும் அப்பாகிட்டயும் தயங்காமக் கேளு சரியா?” என்றால் சங்கவி.

சங்கவி தன்னைப் போட்டியில் கலந்து கொள்ளச் சம்மதித்ததும் மாதவிக்குச் சந்தோஷமாக இருக்க, சிரித்த முகத்தோடு, “சரியா அக்கா. இனிமேல் உங்களைக் கேட்காமல் நான் எதுவும் செய்ய மாட்டேன்,” என்று சொல்லிச் சிரித்தவள், “அக்கா, எனக்கு நேரம் ஆகுது. நான் கிளம்பட்டுமா?” என்று சொல்ல…

“என்ன மாதவி? நீ இன்னும் சாப்பிடவே இல்லை. அதுக்குள்ளே எங்க கல்லூரிக்குக் கிளம்புறேன்னு சொல்ற? சாப்பிட்டுட்டுப் போ,” என்றால் சங்கவி.

எப்படியும் தனக்குச் சாப்பாடு வேண்டாம் என்று சொன்னால் சங்கவி விடப்போவதில்லை என்பதை அவளுடன் பழகிய இந்தச் சிறிது நாட்களிலேயே புரிந்துகொண்ட மாதவி, ‘சரி’ என்று தலையாட்டி விட்டு, வேகமாகச் சமையலறைக்குச் சென்று காலை உணவைச் சாப்பிட்டு முடித்துவிட்டு, கல்லூரிக்குக் கிளம்பினாள்.


ராதாவும் சந்தோஷும் கல்லூரி முடிந்து வீட்டிற்கு வர…

அப்போது கூடத்தில் (Hall) பயணப் பெட்டிகளுடன் (Luggage) முத்துவும் கமலாவும் ஸ்ரீயுடன் அமர்ந்திருந்தனர்.

முத்துவும் கமலாவும் இங்கே வந்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதால், தங்கள் இருவரும் ஊருக்குக் கிளம்புவதாகச் சொல்ல…

அவர்களை ஊருக்குப் போக வேண்டாம், தங்களுடன் இருக்கச் சொல்லி ராதாவும் சந்தோஷும் வற்புறுத்த… கமலா ராதாவிடம் வந்தவர், “ஊர்ல எல்லா வேலையும் அப்படியே கிடப்பில் போட்டுட்டு நானும் உன் மாமாவும் வந்துட்டோமா? எங்களுக்குக் கொஞ்சம் அவகாசம் கொடு. அங்கே இருக்கிற எல்லா வேலையும் முடிச்சிட்டு, நாங்க இங்கேயே உன் கூடயே வந்து தங்கிடறோம்,” என்று அவர்கள் இருவரையும் கமலா சமாதானம் செய்ய…

வேறு வழி இல்லாமல் ராதாவும் சந்தோஷும் அரை மனதாக இருவரையும் ஊருக்குச் செல்ல அனுமதித்தனர்.

ஸ்ரீ, முத்துவையும் கமலாவையும் பேருந்தில் (Bus) ஏற்றி விட்டு, தன்னுடைய நண்பனைப் பார்க்கச் செல்வதாகவும், தான் அங்கேயே தன் நண்பனுடன் தங்கி விடுவதாகவும் கூறிவிட்டு அவர்களுடன் சென்றான்.

மூவரும் கிளம்பிய பிறகு, ராதா சமையலறைக்குச் சென்று சூடாகக் காப்பி போட்டு ஆளுக்கு எடுத்து வந்து சந்தோஷிடம் நீட்ட… அவளைப் பார்த்துச் சிரித்தவன், அவள் கையில் இருந்த காப்பிக் கோப்பையை வாங்கி, தொலைக்காட்சியை (TV) பார்த்துக் கொண்டு குடித்தான்.

காப்பி குடித்துவிட்டு, சந்தோஷ் வீட்டிலேயே அவனுக்காகவே அவன் ஏற்பாடு செய்திருந்த உடற்பயிற்சிக் கூடத்திற்குள் (Gym) சென்று உடற்பயிற்சி (Work Out) செய்யச் சென்றுவிட… ராதாவும் தன் அறைக்குச் சென்று உடையை மாற்றிக்கொண்டு வந்தவள், இரவு உணவு தயாரிக்கச் சமையலறைக்குச் சென்றுவிட்டாள்.

உடற்பயிற்சிக் கூடத்திற்குள் கை இல்லாத உள்ளாடையையும் (Sleeveless Vest) ஒரு குறுங்காற்சட்டையும் (Shorts) மட்டும் அணிந்த சந்தோஷ், வேர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தான்.

இரவு உணவுக்காகச் சப்பாத்தியும் பனீர் பட்டர் மசாலாவும் செய்யலாம் என்று முடிவு செய்த ராதா, முதலில் மசாலாவுக்குத் தேவையான பொருள்கள் எல்லாம் அரைத்து, பனீர் பட்டர் மசாலா செய்தவள், சப்பாத்தி பிசைவதற்காக மாவைத் தேட… மளிகைப் பொருள்கள் எல்லாம் மேலே இருக்கும் அலமாரியில் (Shelf) கமலா அடுக்கி வைத்திருந்ததாகக் கூறவும், அதைப் எடுக்கப் பெட்டக அலமாரியை (Cupboard) திறந்த ராதாவிற்கு, மேலே இருக்கும் பொருள்களை எடுக்க கை எட்டவில்லை.

அவள் புலம்பியவாறே… “இந்த மாமா வீட்டைக் அன்பளிப்பாக (Gift) பண்ணினாலும் பண்ணினார், என்னோட உயரத்துக்குத் (Height) தகுந்த மாதிரி அலமாரியெல்லாம் வெச்சு ரெடி பண்ணிக் கொடுத்து இருக்கலாம். எல்லாமே என்னை விட உயரத்தில் இருக்கு. நான் எப்படி அவசரத்துக்கு எடுக்கிறது?” என்று புலம்பியவள். ‘எல்லாரும் அந்த வளர்ந்து கெட்டவன் மாதிரியேவா இருப்பாங்க?’ என்று சந்தோஷை மனதில் நினைத்தவள், வாய்விட்டுப் புலம்பியபடி ராதா திரும்ப…

உடற்பயிற்சிக் கூடத்தில் உடற்பயிற்சி முடித்துவிட்டு, ராதா என்ன செய்கிறாள் என்று பார்ப்பதற்காக, அங்கிருந்து நேராகச் சமையலறைக்குள் வந்த சந்தோஷ், அவள் தன்னைக் திட்டிக் கொண்டிருப்பதை கேட்டவன், அப்படியே அவள் பின்னால் கைகட்டி நின்று இருந்தான்.

ராதா திரும்பியதும் சந்தோஷின் கையில் மோதி அப்படியே நின்றவள். சந்தோஷின் கையில் மோதிக்கொண்டதில் அவள் நெற்றியில் லேசாக அடித்துவிட… “ஷ்…” என்று தலையைத் தேய்த்து விட்டுக்கொண்டு, நிமிர்ந்து பார்த்த ராதா, சந்தோஷ் அவளை முறைத்துக் கொண்டு நின்றிருப்பதைப் பார்த்தவள், தன் நாக்கைக் கடித்துக் கொண்டே… சந்தோஷை நிமிர்ந்து பார்த்தவள்.

‘எவ்வளவு தூரத்திலிருந்து பார்த்தாலும்… எவ்வளவு கிட்டத்துல வெச்சுப் பார்த்தாலும் ஆள் நல்லா பனை மரம் மாதிரி நெடு நெடுன்னு வளர்ந்து இருக்கான். என் அத்தை இவனுக்கு என்னத்தப் போட்டுக் வளர்த்துச்சோ தெரியல. முதல்ல அதுகிட்ட கேட்டு வெச்சுக்கணும். நாம அதைப் பயிற்சி செய்து பார்த்து, அப்படியாவது கொஞ்சமாவது வளர்றோமானு பார்க்கணும்,’ என்று மனதிற்குள் பேசுவதாக நினைத்து, வாய்விட்டுச் சொல்லிவிட்டால்.

ஏற்கனவே அவனை கிண்டல் செய்ததற்குத் தான் சந்தோஷ் அவளை முறைத்துக் கொண்டு நின்று இருக்க, இப்போது அவனை வேறு பனை மரம் என்று சொல்லிவிட… அவளை மேலும் நெருங்கி வந்த சந்தோஷ் இடித்துக்கொண்டு நிற்க…

அவன் வந்து இடித்து நின்றதில், சமநிலை தவறி (Balance) பின்னால் விழப் போனவள், சமையல் மேடையில் இடித்து நின்றாள். சமையல் மேடையில் அவளை இரு பக்கமும் நகர விடாமல், அணைக்கட்டி கையை ஊன்றி, அவள் முகத்திற்கு நேராகக் குனிந்த சந்தோஷ், “என்ன பத்தி என்னடி குட்டச்சி சொல்லிட்டு இருந்த?” என்று கேட்டான்.

“டேய் வாத்தி, இங்கே பாரு, சும்மா குட்டச்சி அது இதுன்னு சொல்லிட்டு இருந்தேன்னா, பாத்துக்க,” என்றவள், தன் கையில் இருந்த கரண்டியை கொண்டு அவன் மூக்கில் இடிக்க…

“ஷ்…. குட்டச்சி, இப்ப எதுக்குடி என்ன அடிக்கிற?” என்று கேட்டான்.

“நான் எங்க வாத்தி உன்னை அடிச்சேன்… சும்மா இடிக்கத் தானே செய்தேன்,” என்றால் பதிலுக்கு ராதாவும்.

“உனக்கு வரவர வாய்க்கொழுப்பு ரொம்ப ஜாஸ்தி ஆயிடுச்சு… கூட கூடப் பேசுறடி நீ…” என்றவன், அவள் இடுப்பைப் பிடித்துத் தூக்கி, சமையல் மேடையில் அமர வைத்தான்.

“உன்னோட உயரத்துக்கு அலமாரி செய்யணும்னா, இந்தச் சின்னப் பாப்பா சமையல் செஞ்சு விளையாடுறதுக்காக இப்பப் புதுசா நிறைய வந்திருக்கு. அந்த மாதிரி தான் உனக்குக் குட்டி குட்டியா எல்லாமே வாங்கி கொடுக்கணும்,” என்றவன்.

“இப்போ உனக்கு என்ன வேணும்?” என்று கேட்க, மேடையில் அமர்ந்தவாறு தன் கையை மேலே உயர்த்தி, “அந்த அலமாரியில இருந்து சப்பாத்தி மாவு எடுத்துக் கொடு,” என்றால்.

“கீழ இருந்து தான் உனக்கு எட்டலை. இந்தச் சமையல் மேடை மேல தானே உட்கார்ந்திருக்க? எங்கே, மேல இருக்கிற மாவை எடு பார்ப்போம்,” என்றான் சந்தோஷ்.

தன் கையைத் தூக்கி மேலே அலமாரியில் இருக்கும் மாவை எடுக்க ராதா முயற்சிக்க… சமையல் மேடையில் அமர்ந்தும், கையைத் தூக்கியும் ராதாவிற்கு அலமாரிக்குள் எட்டாமல் போகவே… அவள் மேலே இருக்கும் மாவை எடுக்கச் சிரமப்படுவதைப் பார்த்துச் சந்தோஷ் சிரிக்க…

அவனைப் பார்த்து ராதா முறைத்துக் கொண்டு, “அதுதான் எனக்கு எட்டலைன்னு தெரியுது இல்ல… நான் கஷ்டப்படுவதைப் பார்க்கிறதுல உனக்கு அவ்வளவு சந்தோஷம். முதல்ல மாவு எடுத்துக் கொடுடா வாத்தி. இல்லைன்னா, நைட் உனக்குச் சாப்பாடு கிடையாது,” என்றால்.

அவள் அருகில் கையை ஊன்றியவாறே, தன் மற்றொரு கையை உயர்த்தி, மேலே இருந்து மாவை எடுத்து அவள் அருகில் வைத்தவன். “வேற எதுவும் எடுக்கணுமா?” என்று அவள் முகத்திற்கு மிக அருகில் தன் முகத்தை வைத்து, அவள் மூக்கை உரசியபடியே சந்தோஷ் கேட்க…

இவ்வளவு நேரம் அவனிடம் வாயாடிவள், அவன் நெருக்கத்தில் திணறிப் போக… அவன் கேட்டதற்கு ‘ஆமாம்’ என்று தலையை ஆட்டினாள்.

“வேற என்ன வேணும்? சொல்லு, எடுத்துத் தரேன்,” என்றான் சந்தோஷ்.

அவன் போட்டிருந்த உள்ளாடையைப் பிடித்துத் தன் அருகில் இழுத்து, கண்கள் மூடி, அவன் உடலில் இருந்து வழிந்த வியர்வை வாசத்தையும், அவனுக்கென்று இருக்கும் பிரத்தியேக வாசத்தையும் சேர்த்து உள் இழுத்தவள், அவன் வாசனையில் கிரங்கிப் போனவள். அதே கிறக்கத்துடன் நிமிர்ந்து சந்தோஷைப் பார்த்து…

“நீ தான் வேணும் வாத்தி…” என்றால் அவன் வாசனையை கண்கள் மூடி உள்ளிழுத்தவாறு.

அவள் ஏதோ ஒரு பொருளை எடுக்கச் சொல்வாள் என்று அவளைப் பார்த்துக் கொண்டிருந்த சந்தோஷ். தன் உள்ளாடையைப் பிடித்து இழுத்துத் தன் வாசத்தை உள் இழுத்தவள், தன்னைத்தான் வேண்டும் என்று சொல்லவும், உடலுக்குள் சில்லென்ற ஒரு உணர்வு அவன் முதுகுத்தண்டில் பரவியது.

ராதா அப்படிச் சொன்னதும், தன் உடலுக்குள் சில்லிட்டதை உணர்ந்த மறு நிமிடம், அவளை விடாமல் சேர்த்து அப்படியே தூக்கி, தன்னிடையில் அமர்த்திக் கொண்ட சந்தோஷ், அவள் இதழில் முத்தமிட்டுக் கொண்டே படுக்கையறையை (Bedroom) நோக்கி நடந்தான்.

ராதாவைத் தூக்கிக் கொண்டு வந்து மெத்தையில் போட்டவன். அவளை முத்தமிட்டுக் கொண்டே, அவள் அணிந்திருந்த உடைகளைக் கழற்றி எரிய… அவன் தந்த முத்தத்தில் அவள் உடல் சூடேற, அவனுடைய உடையை அவிழ்த்து எரிந்தவள். அவன் கழுத்தில் தன் கைகளை மாலையாகப் போட்டு, அவனை இழுத்துத் தன் மீது போட்டுக் கொண்டாள்.


ஒரு முக்கியமான திட்டத்தைப் (Project) குறித்துக் கலந்தாலோசிக்க, ஷிவு நர்மதாவிடம் சொல்லி, சந்திப்பை (Meeting) ஏற்பாடு செய்யச் சொல்லி இருந்தாள்.

அனைவரும் சந்திப்பிற்கு வந்துவிட… ஷிவுவும் சந்திப்பிற்கு வந்துவிட… கூடத்தில் அமர்ந்திருந்த அனைவரையும் ஒரு முறை பார்த்துவிட்டு, தனக்காகப் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தாள். நர்மதாவிடம், “அனைவரும் சந்திப்பிற்கு வந்துவிட்டார்களா?” என்று கேட்டாள்.

நர்மதாவும் தன் கையில் இருந்த பட்டியலைப் (List) பார்த்துவிட்டு, “எல்லாரும் வந்துட்டாங்க மேடம். ஆனால் திரு. ரூபேஷ் மட்டும் இரண்டு நாட்களாவே அலுவலகம் வரவில்லை,” என்றாள்.

நர்மதா, ரூபேஷ் இரண்டு நாட்களாக அலுவலகத்துக்கு வரவில்லை என்று சொன்னதும், புருவம் சுருக்கி நர்மதாவைப் பார்த்தவள், அதன்பிறகு எதுவும் பேசாமல், “சரி, சந்திப்பை ஆரம்பிக்கலாமா?” என்று சொல்லி, ஷிவு தனது புதிய திட்டம் பற்றி அங்கு இருப்பவர்களிடம் பேச ஆரம்பித்தாள்.

இந்தத் திட்டத்தை முடிக்க நான்கு மாத காலங்கள் அவகாசம் இருப்பதாகவும், எவ்வளவு சீக்கிரமாகத் திட்டம் முடித்துக் கொடுக்கிறோமோ, அவ்வளவு லாபம் நமக்குக் கிடைக்கும் என்று, அதைப்பற்றிய விவரங்களைச் சந்திப்பில் கூறினாள் ஷிவு.

தான் நினைத்ததை எல்லாம் சந்திப்பில் சொல்லி முடித்து விட்டாள். இருந்தும் கூட, அவள் மனதில் ஓரமாக, ‘ஏன் ரூபேஷ் இரண்டு நாட்களாக அலுவலகம் வரவில்லை?’ என்ற சிந்தனை ஓடிக் கொண்டே இருந்தது.

சந்திப்பு முடிந்ததும், தனது அறைக்குச் சென்ற ஷிவு, நர்மதாவைத் தொலைபேசியில் அழைத்து, அவள் அறைக்கு வரச் சொன்னாள்.

உள்ளே வந்த நர்மதா, “சொல்லுங்க மேடம்,” என்று கேட்க…

“ரூபேஷ் ஏன் இரண்டு நாட்களாக அலுவலகம் வரலைன்னு உனக்குத் தெரியுமா?” என்று கேட்டாள் ஷிவு.

“மேடம், அவரோட அம்மா ரொம்ப முடியாமல் மருத்துவமனையில் (Hospital) அனுமதிக்கப்பட்டு (Admit) இருக்கிறதா, இரண்டு நாள் முன்னாடி எனக்குத் தகவல் சொல்வதற்காகத் தொலைபேசியில் அழைத்து இருந்தப்போ, நான் காரணம் கேட்டதற்கு இதைச் சொன்னார் மேடம்,” என்றால் நர்மதா.

அவனுடைய அம்மாவுக்கு உடம்பு முடியவில்லை என்று சொன்னதும், ஷிவுவுக்கு உள்ளுக்குள் ஏதோ செய்தது. முதல் முதலாக வீட்டிற்குச் சென்றபோது, அவனுடைய அம்மா தான் தன்னிடம் நன்றாகப் பேசி, தன்னைக் கவனித்துக் கொண்டார். அவர் உடல்நிலை சரியில்லை என்று கேள்விப்பட்டதும், ஷிவுவுக்கு அவரைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது.

ஆனால், உடனே ரூபேஷ் அவளுக்குச் செய்த துரோகம் நினைவுக்கு வர, தன் வயிற்றில் வளரும் குழந்தையைத் தொட்டுப் பார்த்த ஷிவு, ‘இதை எப்படி நான் மறந்தேன்?’ என்று நினைத்தவள். ‘அவன் அம்மாவுக்கு என்ன ஆனால் எனக்கென்ன? அவனுக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை என்று இருக்கும்போது, அவன் அம்மாவைப் பற்றிய கவலை எனக்கு எதற்கு?’ என்று நினைத்தவள், “சரி நர்மதா, நீ போகலாம்,” என்று சொல்லிவிட்டு, தன் வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள்.


இன்டர் காலேஜ் போட்டிக்காக மாலைக் கல்லூரி முடிந்ததும், மாதவி அவளுடைய தோழி சுபாவுடன், காலியாக இருந்த ஒரு அறையை அனுமதி பெற்று, அந்த அறைக்குள் இருந்து பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தாள்.

மாதவி தான் இந்தப் போட்டியில் கலந்து கொள்கிறாள். அவளுக்குத் துணையாகச் சுபா அவளுடன் அங்கு இருந்தால். மாதவி கலந்து கொள்வது பாட்டுப் போட்டி. அதற்காக அந்தப் போட்டியில் பாடுவதற்காகப் பாடல் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதை பாடிப் பயிற்சி செய்து கொண்டு இருந்தாள்.

அவள் ஆசிரமத்தில் இருக்கும்பொழுது, வானொலியில் (Radio) பாடல்கள் எல்லாம் அடிக்கடி கேட்பதுண்டு. அதனோடு சேர்ந்து அப்படியே கொஞ்சம் கொஞ்சமாகப் பாடிப் பழகி இருக்கிறாள். அவ்வளவு முறையாகச் சங்கீதம் எதுவும் கற்றுக் கொள்ளவில்லை மாதவி.

தான் பாடப் போகும் பாட்டைப் பயிற்சி எடுத்து முடித்த மாதவி, தன் தோழியைப் பார்த்து, “ஏய் சுபா, பாட்டு நல்லா இருக்கா? நான் நல்லா பாடினேனா?” என்று கேட்டாள்.

“மாதவி, ரொம்பச் சூப்பரா பாடினடி நீ… பாட்டுப் போட்டியில கண்டிப்பா உனக்குத் தான் முதல் பரிசு கிடைக்கும். நீ நினைச்ச மாதிரியே அந்தப் பணத்தை உங்களோட ஆசிரமத்துக்குக் கொடுக்கலாம்,” என்று அவள் தோழி சுபா கூற…

“சும்மா நீ என்னோட நண்பர் அப்படிங்கறதுக்காக, நான் நல்லா பாடினேன்னு பொய் சொல்லாதே. உண்மைய சொல்லு. நான் நிஜமாவே நல்லா பாடினேனா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள் மாதவி.

“நான் என்மேல சத்தியமா சொல்றேண்டி,” என்று சொல்லித் தன் தலையில் கை வைத்து, “நீ ரொம்ப அழகாச் சூப்பரா பாடின. கண்டிப்பா உனக்கு முதல் பரிசு கிடைக்கும்,” என்று சொன்னாள் சுபா.

சுபா பேசிக் கொண்டிருக்கும்போதே, அவளுடைய தொலைபேசி அடிக்க, அதை எடுத்துப் பார்த்தவள், அவள் அப்பா தான் சுபாவிற்கு அழைத்து இருந்தார். அழைப்பை எடுத்துப் பேசிவிட்டு, “மாதவி, அப்பா வந்து கல்லூரிக்கு வெளியே காத்துட்டு இருக்காரு. நான் கிளம்பட்டுமா? நீ இந்த அறையைப் பூட்டிட்டு, சாவியை அலுவலக அறையில் கொடுத்துவிட்டுக் கிளம்புகிறாயா? நேரம் ஆச்சுடி. அப்பா வேற என்னைக் கொண்டு வீட்ல விட்டுட்டு, அதுக்கப்புறம் திரும்ப அலுவலகம் போகணும்,” என்று சுபா சொல்ல…

“சுபா, நீ முதல்ல கிளம்பு. அப்பா ரொம்ப நேரம் காத்துட்டு இருக்கப் போறாரு. சாவியை நான் கொடுத்துட்டு கிளம்புறேன். நீ கிளம்பு. எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை,” என்று சொல்லிச் சுபாவை அனுப்பிவிட்டு, அந்த அறையைப் பூட்டி, சாவியை எடுத்துக் கொண்டு அலுவலக அறைக்குச் சென்றாள் மாதவி.

அந்த அறையை உபயோகப்படுத்தச் சொல்லிச் சாவியைக் கொடுத்த உதவியாளர் (Peon), மாலை ஆறு மணியோடு நான் கிளம்பி விடுவேன். அதற்கு மேல் நேரம் ஆனால், அலுவலக அறையில் கொண்டு போய்ச் சாவியை வைத்துவிட்டுச் செல்லச் சொல்லி இருந்ததால், அவர்கள் பயிற்சி எல்லாம் முடித்துக் கிளம்பவே மணி ஆறைத் தாண்டிவிட்டது. அவர் எப்படியும் இருக்க மாட்டார் என்று நினைத்த மாதவி, சாவியை எடுத்துக் கொண்டு அலுவலக அறைக்குச் சென்றாள்.

அலுவலக அறைக்கு வந்த மாதவி, யாரும் இருக்கிறார்களா என்று உள்ளே எட்டிப் பார்க்க… அங்கிருந்த அறைக்குள் யாருமே இல்லை.

அலுவலக அறைக்கும் மாதவி இருந்த அறைக்கும் வெகுதூரம். ஏற்கனவே காலை 5 மணிக்கு எழுந்ததில் இருந்து ஓய்வில்லாமல் வீட்டு வேலைகளையும் செய்துவிட்டு, கல்லூரியில் வந்து பாடங்களையும் கவனித்துவிட்டு, மாலைப் போட்டிக்காகத் தன்னைத் தயார்படுத்தி இருந்த மாதவிக்கு, அங்கிருந்து அலுவலகம் வருவதற்கு என்னவோ நீண்ட தொலைவு வந்தது போல மிகவும் சோர்ந்து போய் காணப்பட்டாள். அலுவலக அறைக்குள் மாதவி வருவதற்குள் இருட்டிவிட்டது.

அலுவலக அறையை எட்டிப் பார்க்க… அறை இருட்டாக இருக்கவும், பயந்துகொண்டே உள்ளே சென்ற மாதவி, இருட்டில் தெரிந்த உருவத்தைக் கண்டு பயந்து அப்படியே உறைந்து போய் நின்றாள்.

ஸ்டோரி படிச்சிட்டு மறக்காம கமெண்ட் பண்ணுங்க ப்பா . ஸ்டோரியை போஸ்ட் பண்ண ஒரு மோட்டிவேஷனும் இல்ல


You may also like

2 comments

S joshna November 28, 2025 - 1:48 pm

Next episode podunga please sis iam waiting 🌹💕💝

Reply
Layas Tamil Novel November 29, 2025 - 12:50 pm

Thanm u ❤️😍

Reply

Leave a Reply to S joshna Cancel Reply

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured