Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 168

உன் ரகசிய ரசிகை நான் 168

by Layas Tamil Novel
263 views

EPISODE 168

போதி, மாதவியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வீட்டிற்குள் செல்லப் போக… அப்போது அவன் பாட்டி, போதியின் கார் வந்த சத்தம் கேட்டு வெளியே வந்தவர், அங்கே அவன் மாதவியின் கையைப் பிடித்து இழுத்து வருவதைப் பார்த்து, கோபமாக, “அங்கேயே நில்லுடா,” என்றார். அவர் கத்தியதில் பயந்துபோன மாதவி, போதியின் பின்னால் சென்று ஒளிந்து நின்று கொண்டாள்.

அவள் கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்ட போதி, “என் பாட்டி தான், பயப்படாதே,” என்றவன். அவன் பாட்டியைப் பார்த்து, “ஏய் கிழவி! இப்போ எதுக்குத் தேவை இல்லாமக் கத்துற? உனக்குப் பிரஷர் (Blood Pressure) அதிகமாகிடப் போகுது,” என்று சொல்லி மாதவியை அழைத்துக்கொண்டு அவரிடம் வந்தான்.

“நான் உன்னை அங்கேயே நிக்க சொன்னே சொன்னேன்,” என்றார்.

“இப்போ என்ன கிழவி உனக்குப் பிரச்சனை? நானே என் ஆளை முதன் முதலா நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வந்து இருக்கேன். உள்ளே கூட நானாக இன்னும் வரலை. அதுக்குள்ள சொர்ணா அக்கா மாதிரி அடிவயித்துல இருந்து எதுக்குத் தேவை இல்லாமல் சவுண்ட் கொடுக்றே?” என்றான்.

அவனை முறைத்த அவன் பாட்டி சரளாம்மா… “ஏன்டா, முதன் முதல்ல நம்ம வீட்டுக்கு என் பேத்தியை கூட்டிட்டு வந்து இருக்கே. அவளை இப்படியேவா உள்ளே கூட்டிட்டு வருவ?” என்றவர், “ஒரு நிமிஷம் ரெண்டு பெரும் அங்கேயே நில்லுங்க,” என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்றவர் கையில் ஆரத்தித் தட்டுடன் வெளிப்பட்டார்.

போதியையும் மாதவியையும் ஒன்றாக நிற்கச் சொல்லி இருவருக்கும் ஆரத்தி எடுத்துப் பொட்டு வைத்தவர், வேலையாளிடம் தட்டைக் கொடுத்து ஆரத்தியை வெளியே ஊற்றச் சொல்லிவிட்டு, இவர்கள் இருவரையும் பார்த்து, “இப்போ கூட்டிட்டு வாடா என் பேத்தியை,” என்றார்.

இவ்வளவு நேரம் சரளாவைக் கண்டு பயந்து கொண்டு போதியுடன் ஒன்றி நின்று இருந்த மாதவியைப் பார்த்து, “இங்கே வாம்மா,” என்று பாசமாக அழைத்தார். மாதவி தயங்கியபடியே போதியைப் பார்க்க… “பயப்படாமப் போ… என் பாட்டி தான். எதுவும் செய்ய மாட்டாங்க,” என்று சொல்ல…

அவர் அருகில் சென்ற மாதவி, சரளாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினால். இதைச் சற்றும் எதிர்பாராத சரளா அவளைத் தூக்கிவிட்டவர், “நல்லா இரு மா…” என்றவர் அவள் தோளில் கைபோட்டு உள்ளே அழைத்துச் சென்றார்.

அங்கே வரவேற்பறையில் (Hall) போதியின் அம்மா, அப்பா, அவன் தம்பி ராகவ், தங்கை தீபா, ரதியும் அவள் பெற்றோரும் என அனைவரும் அங்கு இருந்தனர். அவர்களை எல்லாம் பார்த்ததும் மாதவிக்குப் பயம் தொற்றிக் கொண்டது. மாதவியின் கையைப் பிடித்துக்கொண்டு இருந்த சரளாவிற்கு அவள் கை பயத்தில் வியர்த்து இருப்பதை உணர்ந்தவர், அவள் கையில் அழுத்தம் கொடுத்து, “இவங்க எல்லாம் நம்ம குடும்பம் தான் மாதவி. நீ பயப்பட வேண்டிய அவசியமே இல்லை,” என்று அவளை அழைத்துச் சென்று அங்கு இருந்தவர்களை மாதவிக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

போதியின் தம்பி ராகவ் மாதவியிடம் வந்து, “அண்ணி! எங்க அண்ணா உங்களைக் காதலிக்க ஆரம்பிச்சதுல இருந்து ஆளே மாறிவிட்டார்,” என்றான் ராகவ். அவன் சொல்வதைக் கேட்டு ஆச்சரியம் போல மாதவி பார்க்க…

மாதவியைப் பார்த்தவாறு சென்று சோபாவில் அமர்ந்த போதி, அவளையே பார்த்துக் கொண்டு இருக்க… மாதவி அவன் குடும்பத்துக்கு மத்தியில் மாட்டிக் கொண்டு பேய் அறைந்தவள் போல முழித்துக் கொண்டு இருந்தாள்.

ராகவ் கேள்விகளாக மாதவியிடம் கேட்டுக் கொண்டு இருக்க… அவன் தங்கை தீபா மாதவியிடம் வந்தவள், “அண்ணி ஏன் அங்கேயே நின்னுட்டு இருக்கீங்க? வாங்க,” என்று அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் போதியின் அருகில் அமர வைக்க… அவன் மேல் இடித்துக் கொண்டு மாதவி அமர்ந்தாள். இல்லை இல்லை தீபா அவளை அமர போதியின் அருகில் அப்படி அமர வைத்தாள்.

போதியின் பெற்றோரின் முன்பு இப்படி அவனுடன் நெருங்கி அமர அவளுக்குச் சங்கடமாக இருக்க… அவனிடம் இருந்து சற்று விலகி மாதவி அமர… “எங்கே தள்ளிப் போறே?” என்ற போதி அவளருகில் வந்து அமர்ந்து அவள் விரல்களுக்குள் தன் விரல்களைக் கோர்த்து அமர…

போதி மாதவிடம் நெருக்கம் காட்டுவதைப் பார்த்து, ரதியின் அம்மா அவனையும் போதியையும் முறைத்துக் கொண்டு இருந்தார். மாதவி உள்ளே வந்ததில் இருந்து அவர் மாதவியைப் பிடிக்காதவர் போல தான் பார்த்துக் கொண்டு இருந்தார். அதை மாதவியும் கவனிக்கத் தவறவில்லை. அவரின் வெறுப்பு அவரின் பார்வையிலேயே நன்கு தெரிந்தது மாதவிக்கு.

“ப்ளீஸ்ங்க! எல்லாரும் இருக்காங்க. எனக்கு ஒரு மாதிரியா இருக்கு,” என்று மாதவி போதிக்கு மட்டும் கேட்கும் படி கெஞ்ச…

“அப்போ தனியா இருந்தா எப்படி வேணும்னாலும் உன்கிட்டே நான் இருக்கலாமா?” என்று கேட்டு கண்ணடித்தான் போதி.

அவனை முறைத்துவிட்டு வலுக்கட்டாயமாக அவனிடம் இருந்து மாதவி விலகி அமர்ந்தாள். பின் ஒவ்வொருவரும் மாதவியிடம் சகஜமாகப் பேச ஆரம்பிக்க… மாதவிக்கும் உள்ளுக்குள் இருந்த பயம் கொஞ்சம் கொஞ்சமாகக் மறைந்து போனது.

மாதவியை சாப்பிடச் சொல்லி போதியின் அம்மா சொல்ல, “வேணாம்மா, நாங்க வரும்போதே சாப்பிட்டு விட்டோம்,” என்றாள்.

“சரி என்கூட வா,” என்று போதியின் பாட்டி மாதவியை அழைக்க… மாதவி திரும்பிப் போதியைப் பார்த்தாள். அவள் பார்வை சென்ற இடத்தைப் பார்த்த சரளா, “கல்யாணத்துக்கு முன்னமே புருஷன் சொல்றதைத்தான் கேட்கணும்னு எழுதி வெச்சிருக்கா என்ன? ஒவ்வொரு விஷயம் செய்றதுக்கு நீ போதியைப் பார்க்குறதுக்கு… அவன் என்னவோ இப்பவே உன் புருஷன். சொல்ற பேச்சைக் கேட்டுட்டுத்தான் எல்லாம் செய்வியா?” என்று சரளா சொல்ல…

“அப்படி எல்லாம் இல்லை பாட்டி,” என்று மாதவி அதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியாமல் மாதவி விழிக்க…

“இப்போ எதுக்குப் பாட்டி அவளைத் தனியா கூட்டிட்டுப் போறீங்க?” என்று சோபாவில் இருந்து எழுந்து வந்து மாதவியின் அருகில் போதி நின்றான்.

“அவளை நான் ஒன்னும் கடித்துச் சாப்பிட்டுட மாட்டேன்டா… வேணும்னா அவளுக்குப் பாதுகாப்பா நீயும் தான் வாயேன்,” என்றார்.

சரளாம்மா முன்னே செல்ல… அவர் பின்னால் மாதவி சென்றால். அவளை ரசித்துக் கொண்டே மாதவியின் பின்னே போதி செல்ல…

இதுவரை இங்கு நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த ரதியின் அம்மா உள்ளுக்குள் கட்டுக் கடங்காத கோபத்தோடு இருந்தவர், தன் அருகில் இருந்த போதியின் அம்மாவிடம், “அண்ணி! இப்பவே உங்க பிள்ளையைப் பார்த்தீங்களா? அவன் முந்தானையைப் பிடிச்சுட்டுப் பின்னாடியே போறான்,” என்று சொல்ல …

“எப்படி மா… அப்பா உன் பின்னாடி உன்னோட முந்தானையைப் பிடிச்சுட்டுச் சுத்துறதா பாட்டி அடிக்கடி சொல்வாங்களே. அதே மாதிரியா?” என்று ரதி அவள் அம்மாவின் கால வார…

ரதியை முறைத்தவர், “உன்னை வேண்டாம்னு சொல்லிட்டு உன் மாமா உன் கண்ணு முன்னாடியே வேற ஒருத்தி பின்னாடி சுத்துறான். உனக்கு அதை எல்லாம் பார்த்துக் கோவம் வரலியா?” என்று கேட்டார்.

“நான் ஏன் மாமா மேல கோபப்படணும் அம்மா? மாமாவுக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லைன்னு சொன்ன பிறகு நான் எப்படி அவர் மேல கோவப்படமுடியும்? சொல்லப் போனால் உங்க எல்லாருக்கும் முன்னாடியே மாமா மாதவியைக் காதலிக்குறது எனக்குத் தெரியும்,” என்றாள்.

“என்னவோ பானு! உன்னோட வாழ்க்கை நல்ல இருக்கணும்னு தான் நானும் உன் அப்பாவும் அவ்வளவு சொல்றோம். உனக்கு ஆனா நீதான் எதையும் புரிஞ்சுக்க மாட்டேங்குறே,” என்றவர், “அண்ணி! இங்க இருந்தா எனக்கு இன்னும் டென்ஷன் தான் ஆகும். நான் கிளம்புறேன்,” என்று சொன்னவர் கிளம்ப, அவர் பின்னாலேயே ரதியும் அப்பாவும் சென்றனர்.

மாதவியை அழைத்துக் கொண்டு உள்ளே சென்ற சரளா, தன் அறைக்கு வந்து தன்னுடைய **பூட்டுப் பெட்டியை (Locker)**த் திறந்தவாறு அதில் இருந்து ஒரு பெட்டியை எடுத்து வந்து மாதவியிடம் கொடுத்து, “இந்தா மாதவி,” என்றார்.

“இது என்னது பாட்டி?” என்று கேட்டாள் மாதவி.

“**இது இத்தனை வருஷமா என் பாட்டி எனக்கு வரப் போற மனைவிக்காக கொடுப்பதற்கு என்று பத்திரமாகக் காத்துட்டு வரவங்களோட பரம்பரை நகை,” என்றான் போதி.

அதைக் கேட்டதும் மாதவி, “ஐயோ… பாட்டி! எனக்கு எதுவும் வேணாம் பாட்டி,” என்றால் அவசரமாக …

“அப்படி எல்லாம் சொல்லக் கூடாது மாதவி. இது என்னோட பரிசு. இந்தப் பேத்திக்காகப் பாட்டிக் கொடுக்குற அன்புப் பரிசு இது. ஆனா நீ இதுல என்ன இருக்குன்னு கூடப் பார்க்காமலேயே நீ வேணாம்னு சொல்லிட்டாயே,” என்றார் சரளா.

“அப்படி இல்லை பாட்டி. நீங்க என்கிட்டே அன்பாப் பேசிப் பழகினாலே எனக்குப் போதும் பாட்டி. இது எல்லாம் எனக்கு வேண்டாம்,” என்றால் தயங்கிய படி.

உடனே சரளா போதியிடம், “டேய்! எனக்கு இவளைப் பிடிக்கலை,” என்று கோபமாகச் சொன்னவர் மாதவியைப் பார்த்து முறைத்துக் கொண்டு சென்று சோபாவில் அமர்ந்தார்.

அவர் மாதவியைப் பிடிக்கவில்லை என்று சொன்னதும் போதி அவரிடம் வந்து, “ஐயோ… பாட்டி! என்ன நீ இப்படிச் சொல்லுறே,” என்றவன் மாதவியிடம் கண்ணைக் காட்டி அவளைத் தன் அருகில் வரச் சொன்னவன், அவன் பாட்டியிடம், “இப்போ என்ன உனக்கு? இந்த பெட்டியை மாதவி வாங்கணும் அவ்ளோதான்,” என்றவன் மாதவியிடம் கண்ணைக் காட்ட…

மாதவி போதி சொன்னதால் ‘சரி’ என்று தலையை ஆட்டி சரளாம்மாவிடம் வந்து, “பாட்டி என்கிட்டே இந்த பெட்டியைக் கொடுங்க. நான் வெச்சுக்கிறேன்,” என்றாள்.

“நிஜமா தான் சொல்றியா? அப்பறம் ‘எனக்கு வேண்டாம் அது இதுன்னு’ சொல்லி என்கிட்டே திரும்பி இதைக் கொண்டு வந்து தரக் கூடாது சரியா?” என்றவர், மாதவி கையில் தன் கையில் இருந்த பெட்டியை மாதவி கையில் கொடுத்தார். பின் மாதவியை அழைத்துக் கொண்டு அவர்கள் வீட்டைச் சுற்றிக் காட்டச் சொன்னார் சரளா.

மாதவியை அழைத்துக் கொண்டு அவர் அறையில் இருந்து வெளியே வந்த போதி, அவளை ஒவ்வொரு அறையாக அழைத்துக்கொண்டு காட்டினார். அவன் காட்டிய அறைகளில் இருந்த பிரம்மாண்டங்களை எல்லாம் பார்த்து மாதவி பிரமித்துப் போனாள். மாதவியை ரசித்துக் கொண்டே அவளுக்குத் தன் வீட்டைச் சுற்றிக் காட்டினான்.

பின் மாதவி அவள் கையில் இருந்த பெட்டியை போதியிடம் நீட்டி, “இதை நீங்களே வெச்சுக்கோங்க,” என்றாள்.

“ஏன்?” என்றான் போதி.

“இல்லை. இதை நான் வீட்டுக்குக் கொண்டு போனால் சங்கவி அக்கா ‘இது எனக்கு எப்படி வந்தது? யார் கொடுத்தது?’ என்று கேள்வியைக் கேட்டு என்னை ஒருவழி பண்ணிடுவாங்க,” என்றாள்.

“இதை நான் வாங்கினால் பாட்டி என்கிட்டே கோச்சுப்பாங்க,” என்றான் போதி.

“ப்ளீஸ் சொன்ன கேளுங்களேன்,” என்று மாதவி கெஞ்ச….

“சரி. நீயே வந்து என் ரூமில் வெச்சிரு. நான் பாட்டிக்குத் தெரியாமல் நான் பார்த்துக்கிறேன்,” என்றான் போதி.

“இல்லை. நீங்களே உங்க ரூமில் கொண்டு போய் வெச்சிருங்க. நான் உங்க ரூமுக்கு எல்லாம் வரலை,” என்றாள்.

“நீயே கொண்டு வந்து என் ரூமில் வைக்கலைன்னா நான் இந்த பெட்டியை வாங்கிக்க மாட்டேன்,” என்று மாதவியிடம் போதி ஆடம் பிடிக்க..

“நீங்க பண்றது கொஞ்சம் கூடச் சரி இல்லை. நேத்து தான் நாம காதலையே ஒருத்தருக்கு ஒருத்தர் சொல்லிக்கிட்டோம். அதுக்குள்ள என்னைக் கல்லூரியில் இருந்து என்னைக் வலுக்கட்டாயமாக வெளியே கூட்டிட்டு வந்துட்டீங்க… எங்கே போறோம்? யாரைப் பார்க்குறோம்னு எதுவும் சொல்லாம உங்க வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துட்டீங்க… நாம ரெண்டு பெரும் காதலிக்க ஆரம்பித்து ஒரு நாள் கூட முழுசா ஆகலை. அதுக்குள்ள உங்க படுக்கை அறைக்கு (Bed Room) என்னைக் கூப்பிடுறீங்க…” என்றாள் மாதவி.

அவள் பேசுவதை எல்லாம் ஏதோ அதிசயம் போல ரசித்த போதி, “நீ எவ்வளவு பேசினாலும் என் ரூமில் நீயே கொண்டு வந்து வைப்பதாக இருந்தால் நான் இதை பாட்டிக்குத் தெரியாமல் வெச்சுக்குவேன். அப்படி இல்ல்லையின்னா நீயே உன் வீட்டுக்கு இதை எடுத்துட்டுப் போ..” என்றான் போதி.

‘இவன் கிட்டே இவ்வளவு சீக்கிரம் என் காதலைச் சொல்லி இருக்கக் கூடாது. கொஞ்ச நாள் என் பின்னாடி அலைய விட்டு இருக்கணும். இப்போ பாரு என்னைக் காலையில் இருந்து எவ்வளவு டார்ச்சர் பண்றான்,’ என்று மாதவி முணுமுணுக்க …

அவள் உதடுகள் இரண்டும் ஏதோ முணுமுணுத்துக் கொண்டு இருப்பதாய் ரசித்த போதி, “சரி சீக்கிரம் சொல்லு. உனக்கு வேற நேரம் ஆகிருச்சு,” என்றான் போதி.

அவனை முறைத்துவிட்டு போதியைத் தாண்டிச் சென்ற மாதவி, அவனைத் திரும்பிப் பார்த்து, “வந்து உங்க ரூமைக் காட்டுங்க,” என்று சொல்லிவிட்டு கையில் பெட்டியுடன் முன்னே மாதவி வேக வேகமாக நடக்க…

“மெதுவா நட வி… அப்பறம் உனக்குக் கால் ஏதும் சுளுக்கிக்கப் போகுது,” என்றான்.

அவனைத் திரும்பி முறைத்தவள், “இப்போ உங்க ரூமைக் காட்டப் போறீங்களா இல்லையா?” என்று மாதவி அவனிடம் சிடு சிடுக்க…

“உன்னோட அத்தான் ரூமைப் பார்க்குறதுக்கு இவ்வளவு அவசரமா உனக்கு?” என்ற போதி அவளைத் தாண்டிச் சென்றவன் அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அவன் அறைக்குக் கூட்டி வந்தான்.

உள்ளே வந்து மாதவியின் கையை விட்டவன், திரும்பித் தன் அறையின் கதவைத் தாழிட… மாதவி பதட்டமாக, “எதுக்கு இப்போ அறை கதவை பூட்டுறீங்க?” என்றாள் பதட்டமாக ..

“நீ என் ரூமில் வந்து இந்த பெட்டியை ஒளிச்சு வெக்குறதை யாரும் பார்க்கக் கூடாதுனு தான் கதவைச் சாற்றினேன்,” என்றான் போதி.

“ஓ… அதுக்குத் தான் கதவை அடைச்சீங்களா… நான் கூட…” என்று சொல்ல வந்தவள் . ‘ஐயோ… மாதவி நீ என்ன லூசா… இவன் கிட்டே போய் இப்படி எல்லாம் பேசினால் அவன் சும்மா விடுவானா உன்னை,’ என்று நினைத்தவள் அதோடு எதுவும் பேசாமல் அமைதியாகி விட..

“சொல்லு… சொல்லு… ‘என்ன நீ கூட’ என்று எதையோ சொல்ல வந்தது அப்படியே நிறுத்திட்டியே,” என்றான் போதி.

“அ…அது வந்து அதெல்லாம் ஒன்னும் இல்லை. நீங்க முதல்ல இந்த பெட்டியை எங்கே வெக்கணும்னு சொல்லுங்க. நான் வெச்சிட்டுச் சீக்கிரம் கிளம்புறேன்,” என்றாள் மாதவி.

அவள் சமாளிப்பது போதிக்கு நன்றாக விளங்க, அதை அவளிடம் காட்டிக் கொள்ளாமல் அவளிடம் தன் **அலமாரியை (Cupboard)**த் திறந்து மேலே இருந்த ஒரு ரேக்கைக் காட்டி, “அங்கே வெச்சிடு. அப்போ தான் யாருக்கும் அங்கே இருப்பது தெரியாது,” என்றான் போதி.

‘சரி’ என்று சிறு பிள்ளை போல தலையை ஆட்டியவள் அவன் சொன்ன ரேக்கில் அந்தப் பெட்டியை வைக்கக் கையை உயர்த்த… அவளுக்கு அந்த ரேக் எட்டவே இல்லை. என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த மாதவி போதியிடம், “நீங்களே இதை மேலே வெச்சீங்களேன். எனக்கு எட்டாவில்லை,” என்றாள் மாதவி.

“உனக்கு எட்டலைன்னு சொல்ல இவ்வளவு நேரமா உனக்கு?” என்றவன், சட்டென அவள் இடையில் கை கொடுத்து மாதவியை மேலே தூக்க… “என்ன பண்றீங்க போதி? என்னைக் கீழே இறக்கி விடுங்க,” என்று கெஞ்சினால் அவனிடமும்.

“நீ என்கிட்டே பேசிட்டு இருக்காம சீக்கிரம் அந்த ரேக்கில் வெச்சிடு,” என்று அவளை அவசரப் படுத்த… வேறு வழி இல்லாமல் அவன் கைக்குள் தன் இடை மாட்டி இருக்க… பேசாமல் அவன் சொன்ன இடத்தில் பெட்டியை வைத்தவள், “என்னை இறக்கி விடுங்க,” என்றாள் மாதவி.

அவனும் மெல்ல மெல்ல மாதவியைக் கீழே இறக்கியவன், அவள் இடையைப் பிடித்து இழுத்துத் தன் உடலோடு சேர்த்து அவளை ஒட்டி நிற்க வைக்க… அவ்வளவு நெருக்கத்தில் மாதவிக்குப் போதியைப் பார்க்க… இதயம் தாறுமாறாக அவள் சொல் பேச்சு கேட்காமல் அவன் பக்கம் அவள் மனம் சாய…

அதை உணர்ந்த மறு நொடி மாதவி போதியின் கையைத் தட்டி விட்டு விட்டு, “எனக்கு நேரம் ஆகுது. நான் கிழம்புறேன்,” என்று மாதவி அவன் அறை கதவைத் திறந்து கொண்டு வெளியே செல்லப் போக…

அவள் துப்பட்டாவைப் பிடித்து விடுகென்று தன்னை நோக்கி மாதவியைப் போதி இழுக்க… அவன் இழுத்த வேகத்தில் அவன் மீது மோதி நின்றால். அவளை இழுத்துத் தன் அருகில் நிற்க வைத்தவன். “நானும் எவ்வளவு நேர்மையா நல்லவனா இருக்கணும்னு நினைக்குறது,” என்று சொன்னவன், சட்டென மாதவியின் இடுப்பைப் பிடித்துத் தன் உடலோடு உரசிக்கொண்டு அவளை நிற்க வைத்தவன். ஒரு கையால் அவள் கன்னத்தைப் பிடித்து அவள் முகத்தைத் தன் முகத்திற்கு நேராக நீட்டியவன் அவள் இதழை ஏக்கமாகப் பார்த்துவிட்டு.

“இனியும் என்னால நல்லவன் போல நடிக்க முடியாது,” என்றுவன் அவள் இதழில் முத்தம் வைத்தான். அதைச் சிறிதும் எதிர்பாராத மாதவி, அதிர்ச்சியில் அவனிடம் தன் உதட்டைக் கொடுத்து மாட்டிக்கொண்டதை நினைத்து வருத்தம் அடைந்தவள் அவன் முத்தத்திற்கு மயங்கி…

You may also like

2 comments

Saranya Arivuselvan December 1, 2025 - 3:44 pm

Super akka sema 🥰🥰🥰❤️❤️❤️🫂🫂🫰🫰🌹🌹🎁👌🫶🫶🫶🤗🤗

Reply
S joshna December 1, 2025 - 8:47 pm

Super 💯😊 akka super episode next episode la Durga athi podunga akka romba wait panranu😍❤️😘🎁💐🤗

Reply

Leave a Reply to S joshna Cancel Reply

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured