Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 259

உன் ரகசிய ரசிகை நான் 259

by Layas Tamil Novel
54 views

EPI 259

ஒரு வழியாக வீட்டில் இருப்பவர்களை சமாளித்து மதுவின் கர்ப்பத்தை அனைவரிடமும் கூறி மதுவிற்கு இருந்த மன அழுத்தத்தை போக்கியிருந்தான் பவன்.

இருவரையும் மண்டபத்தில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்து இருந்தனர் மதுவிற்கு பிறந்த வீட்டில் சார்பாக விக்கி நிலானி இருவரும் கை கொள்ளாத அளவிற்கு மனம் நிறைந்து பவன் மது இருவருக்கும் சீர்வரிசைகளை அனுப்பி இருந்தனர் .

நிலானிக்கு மிகவும் டயர்டாக இருப்பதால் அவள் மதுவை மண்டபத்திலேயே வழி அனுப்பிவிட்டு விக்கியுடன் தன் வீட்டிற்கு சென்று விட்டால் மது பவன் மற்றும் அவன் குடும்பத்தில் இருப்பவர்கள் எல்லாம் அவன் அவர்கள் வீட்டிற்கு வரும்போது இந்த சீர்வரிசைகள் எல்லாம் தயாராக இருந்தது .

அதை பார்த்ததும் மதுவிற்கு மிகவும் சந்தோஷமாகவும் மனம் நெகிழ்ச்சியாகவும் இருந்தது தன் பெற்றோர் இருந்து செய்ய வேண்டியதை தன் தங்கை தனக்கு செய்திருக்கிறாள் என தன் தங்கையை நினைத்து பெருமை கொண்டால் மது அவள் கண்களில் கண்ணீரோடு நின்றிருக்க அவள் தோலை பிடித்து தன் பக்கம் சாய்த்த பவன் இனி நீ எதுக்கும் கவலைப்படக்கூடாது உன் கண்ணில் இருந்து ஒரு சொட்டு kகண்ணீரை வந்தாலும் நான் உன்னை சரியா பார்த்துக்கொள்ளலாம் என்று தான் அர்த்தம் என்று சொல்ல அவள் கண்களை வேகமாக தொலைத்துக்கொண்டு அழமாட்டேன் என்பது போல தலையை இடவலமாக ஆட்டினாள் .

பவனின் தங்கை ஆரத்தி கரைக்க வீட்டிற்குள் சென்று இருக்க எவ்வளவு நேரம் என் பொண்டாட்டி வாசல்லயே நின்னுட்டு இருப்பா புள்ள தச்சி காரிய இவ்ளோ நேரம் நிக்க வச்சா அந்த பாவம் என்னதான் வந்து சேரும் சீக்கிரம் ஆர்த்தி கரைத்து எடுத்துட்டு வா என உள்ள இருந்த தன் தங்கையிடம் கத்தினான் பவன்.

அவன் தோலை இடித்த மது டே நீ ரொம்ப ஓவரா பண்ற கொஞ்ச நேரம் நிக்கறதுனால எனக்கு எதுவும் ஆய்டாது கொஞ்சம் வாயை மூடிட்டு அமைதியா இரு என்றால் .

அவர்கள் இருவரும் பேசிக் கொள்வதை பார்த்த பவனின் அம்மா சிரித்தபடி அம்மாடி மது இப்பதானே என் பையன் ஓட வாழ்க்கைக்குள்ள நுழைந்திருக்க அவன் இனி உன்ன தரையிலேயே நடக்க விடமாட்டேன் நீ வேணா பாரு அவன உன்னை கையில வச்சு தாங்குவான் என்று அவர் சொல்லி முடிக்கும் முன்பு மதுவை தன் கைகளில் ஏந்தி இருந்தால் பவன் .

அவர்கள் இருந்த பிளாட்டில் பக்கத்து பிளாட்டில் இருந்த அனைவருமே புது மாப்பிள்ளை பெண்ணை பார்க்க வந்திருக்க அத்தனை பேரும் முன்பும் பவன் இப்படி தன்னை கைகளில் தூக்கிக் கொண்டதே பார்த்து வெட்கப்பட்டவள் என்னடா பண்ற எல்லாரும் நம்மளே பாக்குறாங்க தயவுசெய்து இறக்கி விடு என்றால் .

யார் பார்த்தா எனக்கு என்ன என் பொண்டாட்டியை நான் தூக்கிட்டு இருக்கேன் என்றவன் அங்கு நின்றவர்களை திரும்பிப் பார்த்து அங்கிருந்து ஆண்களை எல்லாம் பார்த்து அண்ணே நீங்க சொல்லுங்க இந்த மாதிரி உங்க பொண்டாட்டிய நீங்க யாருமே ஒருமுறை கூட தூக்கினது இல்லையா என்னமோ நான் செய்யாத குற்றம் செஞ்ச மாதிரி என் பொண்டாட்டி என்னை திட்டுறா என பவன் கேட்க .

அங்கே இருந்த ஆண்கள் சிலர் தூக்கி இருக்கிறோம் என்பது போல தங்கள் கட்டளை விரலை உயர்த்தி காட்டி அவனிடம் கூற சில பெண்கள் எங்க தம்பி அதெல்லாம் கல்யாணமான புதுசுல நடந்துச்சு என்று சலிப்பாக கூற அவர்களின் கணவன்மார்கள் தங்கள் மனைவியை திரும்பிப் பார்த்து இதெல்லாம் உனக்கு கொஞ்சம் ஓவரா இல்ல உன்ன கல்யாணம் பண்ணின அப்போ ஒல்லியா இருந்த இப்போ எவ்வளவு பெருசா பெருத்திருக்க இப்பவும் உன்னை இதே மாதிரி எங்களால தூக்க முடியும் என்று நினைத்தாயா என்று அவர்கள் கூற..

அங்கே இருந்தவர்கள் எல்லாம் சிரித்து விட்டனர் .

அதற்குள் ஆரத்தி கரைத்து பவனின் தங்கை எடுத்து வந்திருக்க அவனை தூக்கிக்கொண்டு மதுவை தூக்கிக்கொண்டு நின்ற பவனை பார்த்து சிரித்தவள் அண்ணா உன் வேலையை ஆரம்பித்துவிட்ட போல அண்ணி நீங்க என் அண்ணன் கிட்ட நல்ல வசமாக மாட்டிக்கிட்டீங்க என்று சொல்லி சிரித்தவள் அவர்கள் இருவரையும் ஆரத்தி எடுத்து பொட்டு வைத்து உள்ளே அழைத்துச் அனுப்பி வைத்தாள் .

சீர் கொண்டு வந்தவர்கள் இவர்கள் இருவரும் உள்ளே சென்று பிறகு அனைத்தையும் வைத்துவிட்டு அவர்களிடம் விடை பெற்று சென்றனர் .

மதுவை தூக்கி வந்த பவன் நேராக அவளை காலில் அமர்த்திவிட்டு அவரோடு சேர்ந்து அமர்ந்து கொண்டான் மற்ற சடங்குகள் எல்லாம் செய்து முடித்த பின்பு மதுவை பவனின் தங்கை யாரை காட்டி அங்கே சென்று ஓய்வெடுக்கச் சொன்னார் அவன் அம்மா .

இப்போ எதுக்கு அவர் ரூம்ல மதுவை இருக்க சொல்றீங்க ஏன் ஏரூமுக்கு என்ன ஆச்சு என கேட்க அவர் சிரித்துக் கொண்டே அடேய் ஏன்டா இப்படி என் மானத்தை வாங்குற இன்னிக்கு நைட்டுதாண்டா உங்களுக்கு சடங்கு எல்லாம் செய்யும் அதுவரைக்கும் இரண்டு பேரும் தனியாய் இருங்கள் ஏன் கொஞ்ச நேரம் கூட உன் பொண்டாட்டி விட்டு உன்னால இருக்க முடியாத என அவருக்கு கிண்டல் அடிக்க .

அம்மா என்ன பஸ்ட் நைட் தானே சொல்றீங்க அதுதான் எங்களுக்கு ஏற்கனவே நடந்து முடிஞ்சிடுச்சு அதனால தானே அவன் கர்ப்பமாக இருக்கா என்றவன் அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நான் அவளை என்னோட ரூம்கே கூட்டிட்டு போறேன் என்று சோபாவில் இருந்து எழுந்தவன் வா மது என அவள் கைப்பிடித்து அறைக்கு இழுக்க .

அவன் பேசியதில் அதிக கூச்சம் கொண்ட மது ஐயோ இவனால என் மானமே போகுது என தலையில் அடித்துக் கொண்டவள் ஒழுங்கா ஒரு ரூமுக்கு போ நான் அப்புறம் வரேன் என்றவள் அத்தை நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கட்டுமா என கேட்க போமா அவன் இருக்கிறான் அவன் அப்படித்தான் பண்ணுவான் நீ போய் தூங்கு போ என சொல்ல மதுபவனை முறைத்துக் கொண்டே அவனின் தங்கை ரூமுக்கு சென்றாள் .

பவனும் விடாமல் நீ ஏன் ரூமுக்கு வராம போனா என்ன நான் நீ எங்க இருக்கியோ அங்க தான் வருவேன் என்று அவள் பின்னாலேயே செல்ல கடவுளே என் பையனை இப்படி மாத்திட்டியே என புலம்பிக்கொண்டே கிச்சனுக்கு இரவு உணவு தயாரிக்க சென்றார் அவன் அம்மா .

பவனின் தங்கை ரூமுக்குள் நுழைந்ததும் கதவை சாற்றிக் கொண்டான் பவன் டேய் ஏன்டா இப்படி எல்லாரும் முன்னாடியும் என் வானத்தை வாங்குகிறாய் அதுதான் இன்றைக்கு நைட் எல்லா ஏற்பாடும் செய்றாங்கன்னு சொன்னாங்க இல்ல அதுக்குள்ள உனக்கு அவசரமா என மது அவன் கன்னத்தில் இடிக்க .

உன் பின்னால வந்தாலே நான் அதுக்குத்தான் வருவேன் என்று அர்த்தமா அது எல்லாம் எதுவும் கிடையாது என சொல்லி அவளை கட்டிலில் அமர்த்தி வைத்தவன் அவள் காலை எடுத்து தன் மடி மீது வைத்து மெதுவாக பிடித்து விட ஆரம்பித்தான் .

இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை மது அவளுக்கு காலையில் இருந்து மண்டபத்தில் நின்றது எங்கும் அங்கும் அழிந்தது என உடலெல்லாம் சற்று சோர்வாகத்தான் இருந்தது அதை வெளிப்பாட்டிக்கொள்ளாமல் அனைவரிடமும் சகஜமாக அவள் இருக்க ஆனால் பவனும் அவள் முகத்தில் இருந்த சிறு மாற்றத்தை கண்டு அவளுக்கு பணிவிடை செய்வதை நினைத்து சந்தோசம் அடைந்தால் .

தன் கால் பிடித்து விடும் கணவனை ரசித்தவள் அவன் தலைமுடியை கலைத்துவிட்டு பவன் உண்மையாவே நான் ரொம்ப லக்கி டா என்றால் .

ஏன் நான் உன் கால பிடிச்சு விடுறேன்னு அதனாலயா என்றாலும் பவன்

அதுவும் தான் இருந்தாலும் நீ எனக்காக இத்தனை பேர் கிட்ட பேசி நான் கர்ப்பமா இருக்குற விஷயத்தை எடுத்துச் சொல்லி என்னை யாரும் தப்பா நினைச்சுக்காத மாதிரி அவங்கள பேசி கன்வின்ஸ் பண்ணியே அதை சொல்றேன் நான் எவ்வளவு டென்ஷன்ல இருந்தேன் தெரியுமா இந்த விஷயம் தெரிஞ்சதுல இருந்து என்ன பத்தி என்ன நினைப்பாங்க யார் என்ன சொல்லுவாங்கன்னு ரொம்ப பயந்து இருந்தேன் டா ஆனா எனக்கு இப்போ அந்த டென்ஷனே இல்ல இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு.இனி எனக்கு எந்த டென்ஷனும் இல்லாம நான் ரிலாக்ஸா இருக்க போறேன் நல்ல ரெஸ்ட் எடுக்க போறேன் என்றால் மது .

அவள் சொன்னதை கேட்டு மெல்ல சிரித்தவன் உனக்கு எந்த கஷ்டமும் வராம நான் பாத்துக்குறேன் அது மது இப்போ நல்லா தூங்கி ரெஸ்ட் எடுத்துக்கோ இன்னிக்கு நைட் முக்கியமான வேலை இருக்கு என்று சொல்லி கண்ணடிக்க .

எப்படி இருந்தாலும் சுத்தி சுத்தி நீ அங்கேயே வந்து நிக்கிற டா என்றவள் அவன் தலை முடியை கொத்தாக பிடித்து அவளிடம் இழுக்க ..

ஷ்… ஏய் மது வலிக்குதுடி என்றவன் தன் முகத்தை அவள் முகத்தருகில் கொண்டு செல்ல அவன் முகத்தை தனியாக இருக்கைகளும் ஏந்தியவள் அவன் இதழில் அழுந்த முத்தமிட அவளோடு சேர்ந்து கட்டிலில் சரிந்தான் பவன் .

இருவருக்கும் சுவாசிக்க இடைவெளி தேவை என்பது வரை முத்தமிட்டு விட்டு பிரிந்து இருவரும் கட்டிலில் படித்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தபடி கண்மூடி உறங்கி விட்டனர் இரவு முழுவதும் விழிப்பதற்காக.

❤️

இரவு 10 மணி கடந்திருக்கும் ஸ்ரீ ரியாவிற்கு மெசேஜ் செய்திருந்தான்.

ஏய் பூனைக்குட்டி என்னடி பண்ணிட்டு இருக்க தூங்கிட்டியா இங்கே என் தூக்கத்துக்கு எடுத்துட்டு அங்கே என்ன பண்ணிட்டு இருக்க என்று மெசேஜ் அனுப்பி இருந்தான் .

பவனின் தங்கையும் ரியாவின் அண்ணனும் பவன் வீட்டில் தங்கி இருக்க .. அம்மா அப்பா நேரமே சாப்பிட்டு உறங்க சென்று விட இவள் மட்டும் பால்கனியில் பாட்டு கேட்டபடி உலாத்திக்கொண்டு இருந்தால் ஸ்ரீயின் மெசேஜ் வந்ததும் உடனே ஓபன் செய்து பார்த்தால் ரியா .

சிரித்துக் கொண்டே அவன் அனுப்பிய மெசேஜை படித்துவிட்டு உன் தூக்கத்தை நான் கெடுக்கலையே நீ தூங்காமல் போனதுக்கு நான் என்னடா செய்யறது என ரிப்ளை செய்தால் .

மண்டபத்துல உன்ன சேலையில பார்த்ததிலிருந்து என் தூக்கமே போச்சு டி எப்போ உன்னை கல்யாணம் பண்ணி உன்னை என் கூட வச்சு பெண் இருக்கு உன்னை அங்க விட்டுட்டு வீட்டுக்கு வர எனக்கு மனசு இல்லை என்றான் ஸ்ரீ .

என்ன சேலையில பார்த்தது உனக்கு அவ்வளவு பிடிச்சி இருக்கா என்று ஒரு சிரித்த ஸ்மைலி போட்டு மெசேஜ் அனுப்பினால் .

என்னடி இப்படி சொல்லிட்ட அப்படியே நான் பிளாட் ஆயிட்டேன் தெரியுமா எனக்கு மனசுக்குள்ள என்னென்னவோ தோணுது என் கற்பனை குதிரை என்ன மீது மீறி எல்லாம் மீறி எதையெதையோ நினைக்குது என்று அனுப்பி இருந்தான் ஸ்ரீ.

அதை படித்ததும் ரியாவின் முகம் சிவந்துவிட்டது கண்கள் இரண்டும் ஹாட் சிம்பலோடு சிரித்த முகமாக இருக்கும் ஸ்மைலி அனுப்பி அதனோடு முகத்தை மூடி வெட்கப்படும் ஸ்மைலியையும் அனுப்பி இப்படி எல்லாம் மெசேஜ் அனுப்பாதடா எனக்கு ஒரு மாதிரியா இருக்கு என்று அனுப்பி இருந்தால் ரியா .

உடனே நீ வெட்கப்படறியா நான் உன்னை இப்பவே பார்க்கணும் ப்ளீஸ் வீடியோ கால் வாடி என்றான் .

ம்ஹும் …முடியாது போடா என்று ரியா பதில் அனுப்ப ..

ஏய் ப்ளீஸ் டி பூனை குட்டி நீ வெக்கப்படுறத நான் பார்த்ததே இல்லை ப்ளீஸ் ப்ளீஸ் என அவளுக்கு மெசேஜ் விடாமல் ஸ்ரீ அனுப்பி கொண்டே இருக்க.

சரி சரியா டூ மினிட்ஸ் கழிச்சு வீடியோ கால் பண்ணு நீ இவ்வளவு கெஞ்சி கேட்கிறதுனால நான் ஒத்துக்குறேன் ஆனா ரெண்டு நிமிஷம் தான் வீடியோ கால்ல இருப்பேன் அப்புறம் கட் பண்ணிடுவேன் ஓகேவா என்றால் .

ஓகே டி என்றவன் இரண்டு நிமிடத்திற்காக காத்திருக்க அதற்குள் ரியா தன் அம்மா அப்பா உறங்குகிறார்களா என அவர்கள் அறைக்கதவை லேசாகத் திறந்து பார்த்தவள் அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதை உறுதி செய்துவிட்டு கதவை மெல்ல சாற்றியவள் வேகமாக தன் அறைக்கு வந்து தாழ்ப்பாள் போட்டுக் கொண்டாள் .

ஹாலில் இருந்து அவள் ரூமிற்கு வருவதற்குள் ரியாவிற்கு மூச்சு முட்டியது .

அவள் மேல் மூச்சு வாங்க கதவை சாற்று விட்டு சாய்ந்து நின்று இருக்க அதற்குள் இரண்டு நிமிடம் ஓடி விட சரியாக ஸ்ரீ அவளுக்கு வீடியோ கால் செய்திருந்தான் .

அதை பார்த்ததும் இதுக்கெல்லாம் வேகமா டைம் வச்சு கரெக்டா போன் பண்ணிடுவேன் மத்த நேரத்துல நான் தான் இவனுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கணும் என சிரித்தவள் வெட்கப்பட்டு கொண்டே அவன் வீடியோ காலை அட்டென்ட் செய்தாள் .

அவள் கதவில் சாய்ந்து நின்று இருக்க ரியாவின் அறை பெட் லேம்ப் ஒளியில் மங்கலாக இருக்கவும் அவனுக்கு ரியாவின் முகம் தெரியவில்லை.

மச்..ஏய் இருயா என்னடி இது என்ன பழிவாங்காத கொடுத்திருக்கிறது ரெண்டு நிமிஷம் அதுலயும் இப்படி இருட்டுல நின்னுட்டு இருந்தா எனக்கு எப்படி உன் முகம் தெரியும் தயவுசெய்து லைட்டை போடுடி என கெஞ்சினான் ஸ்ரீ .

சாரிடா நான் அதை மறந்துட்டேன் என்று தன் பெட்டில் ஏறி அமர்ந்து அருகில் இருந்த லைட் பிச்சை ஆன் செய்தால் .

அறை முழுவதும் வெளிச்சம் பரவ ரியாவின் வெட்கப்பட்டு சிவந்த முகத்தை பார்த்ததும் ஸ்ரீக்கு அவளை அப்படியே அள்ளி அணைத்து கொஞ்ச வேண்டும் போல இருந்தது .

பூனைக்குட்டி நீ வெட்கப்படுறப்போ ரொம்ப அழகா இருக்குடி உன்ன இப்பவே அல்லி முத்தம் வைக்கணும் போல இருக்கு என்று சொல்லி திரையில் தெரிந்த அவள் முகத்தை கிள்ளி முத்தம் வைத்தான்.

அவன் அப்படி சொன்னதும் ரியாவின் முகம் மேலும் சிவந்து விட்டது அவனை பார்க்க முடியாமல் தன் ஒற்றை கையால் முகத்தை மூடிக்கொள்ள.

ஹாய் கொடுத்த ரெண்டு நிமிஷத்துல இப்படி முகத்தை மறைச்சா எப்படி ப்ளீஸ் கையை எடு என கெஞ்சினான் ஸ்ரீ .

ம்ஹும்..மாட்டேன் என்று ரியா தலையை இடவலமாக ஆட்ட நான் உன் முகத்தை தானடி காட்ட சொன்னேன் மத்தவங்கள மாதிரி மொத்தத்தையும் காட்டச் சொன்னேன் ப்ளீஸ் டி என ஸ்ரீ கெஞ்ச .

அவன் சொன்னதை கேட்டதும் முகத்தில் இருந்து கையை எடுத்தவள் ஓஹோ அப்ப விட்டா நீ மத்தவங்க மாதிரி மொத்ததையும் என்ன காட்ட சொல்லுவியா என்றால் கோபமாக.

நான் என்ன சொல்றேன் நீ என்ன பேசுற நான் அப்படி எல்லாம் கிடையாது என்று உனக்கே நல்லா தெரியும் சும்மா ஒரு பேச்சுக்கு அப்படி சொன்னேன் உடனே நீ இப்படி கோச்சிக்குவியா என்றால் ஸ்ரீ .

அவனை முறைத்தவள் நீ மட்டும் அப்படி கேட்டிருந்தேன் வை நான் இப்பவே கிளம்பி உன் வீட்டுக்கு வந்து… என்று கோபமாக அவனை திட்ட ..

ம்ம்… சொல்லு சொல்லு என் வீட்டுக்கு வந்து என்ன என்ன செய்யப் போற எனக்கு முத்தம் கொடுக்க போறியா என்ன கட்டிப்பிடிச்சுக்க போறியா இல்ல வேற எதுவும் என்று அவன் கண்ணடித்துக் கூற ..

டேய் ஏன்டா இப்படி பேசி என்ன டெம்ப் பண்ற நீ இப்படி எல்லாம் பேசினா எனக்கு ஒரு மாதிரியா ஆகுது என்றால் ரியா

அப்படியா அப்படி என்ன ஒரு மாதிரியா ஆகுது நானும் தான் பாக்குறேனே சொல்லு என்றான் .

போடா இது எல்லாமே உன்கிட்ட சொல்லிக்கிட்டு இருப்பாங்க விவஸ்த்தை இல்லாதவன் என்று ரியா ஸ்ரீ திட்டினாள் .

இது எல்லாம் என்கிட்ட தாண்டி சொல்லுவாங்க உன் அம்மா அப்பா கிட்டயா போய் சொல்லுவேன் என்றவன் ப்ளீஸ் டி சொல்லு சொல்லு எப்படி இருக்கு உனக்கு நான் இப்படி எல்லாம் பேசினா என்றான் .

தலையை குனிந்து வெட்கப்பட்டு கொண்டே நீ இந்த மாதிரி எல்லாம் பேசுறப்போ எனக்கு உன்ன ஓடி வந்து கட்டிக்கணும் போல இருக்கு இப்படி பேசுற வாயை என் வாயால முத்தம் கொடுத்து பேசவிடாமல் செய்யணும்னு இருக்கு இப்படி குறுகுறுன்னு பாக்குற அந்த கண்ணு ரெண்டையும் என்ன பார்க்க விடாமல் முத்தம் கொடுத்து அதை மறைக்கணும்னு இருக்கு என்று சொன்னால் ரியா.

நீ இப்படி எல்லாம் சொல்லும்போது எனக்கும் நீ அப்படி எல்லாம் என்கிட்ட இருந்தா எப்படி இருக்கும் என்று பார்க்க ஆசையா இருக்குடி என்றான் .

ம்ம்ம்..இருக்கும் இருக்கும் டா இதுக்கு தான் உன்கிட்ட எதையும் நான் சொல்றதே இல்ல நான் கொஞ்சம் இடம் கொடுத்தா நீ பாய் போட்டு படுத்துருவியே என்றால் ரியா .

ம்ஹும்..எங்க விட்டா தானே என்றான் சலித்துக் கொண்டு .

ஓஹோ… நான் சரின்னு சொன்னா துரை இப்பவே எல்லாம் பண்ணிடுவிங்களோ என்றால் தன் இடுப்பில் கை வைத்துக் கொண்டு .

நீ மட்டும் ஓகேன்னு சொல்லு நான் எப்பவுமே ரெடி தான் என்றான் ஸ்ரீ .

அப்படியா நான் இப்பவே ஓகே சொன்னா உடனே நீ என்னடா செய்வ என்றாள் .

அவள் அப்படி சொல்லி முடித்ததும் ரியாவின் வீடியோ கால் கட் ஆனது .

என்ன ஆச்சு திடீர்னு கால் கட் ஆயிடுச்சு என்றாவது தன் மொபைலில் டவர் இருக்கிறதா என பார்த்தால் அது சரியாகத்தான் இருந்தது அப்புறம் ஏன் கால் கட் ஆச்சு ஒருவேளை அவளுக்கு சிக்னல் எடுக்கலையோ என யோசித்து பாரு ஸ்ரீ திரும்பவும் அழைப்பான் என அவனுக்கு காத்திருந்தாள் .

அப்போது ரியாவின் அறைக்கதவு தட்டும் சத்தம் கேட்டது .

அய்யய்யோ இவ்வளவு நேரம் ஆகியும் என்னோட ரூம்ல லைட் எரிஞ்சிட்டு இருக்கு அம்மா அப்பா யாரும் இதை பார்த்துட்டு வந்துட்டாங்களோ போச்சு போச்சு இவனால இன்னிக்கு எனக்கு என் வீட்டில் அர்ச்சனை தான் என ஸ்ரீயை திட்டிக்கொண்டே எழுந்து வந்து கதவை திறந்தாள் .

அங்கே அவள் அறை முன்பு இடுப்பில் கை வைத்து சிரித்த முகமாக நின்றிருந்த ஸ்ரீயை பார்த்ததும் அப்படியே விக்கித்து போய் நின்றால் ரியா.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured