EPI 261
ஷிவுவிற்கு 7 மாசம் நெருங்கி இருக்க.. ரூபேஷ் அவளை எந்த வேலையும் செய்ய விடுவதில்லை .
ஆபீஸ் சென்று விட்டு வீடு திரும்பும் வரைக்குள்ளாக ஒரு நாளைக்கு பத்து தடவைக்கு மேலாவது ஷிவுவிற்கு கால் செய்து அவள் என்ன செய்கிறாள் அவளுக்கு எப்படி இருக்கிறது என அடிக்கடி கேட்டுக் கொண்டே இருப்பான்.
ஷிவுவிற்கு அவனுக்கு பதில் சொல்லி ஓய்ந்தப்பாடாக இருக்கும் டேய் உன்கிட்ட எவ்வளவு கூட சொல்றது ஒரு நாளைக்கு இத்தனை முறை போன் பண்ணி நான் என்ன பண்ணிட்டு இருக்கேன் சாப்பிட்டனா சாப்பிடலையா எனக்கு உடம்பு எப்படி இருக்குன்னு பேசாம நீயும் ஆபீஸ் போகாம என் கூடவே வீட்டிலேயே இருந்துட்டு என்ன இப்படி அங்கே போய் உட்கார்ந்துட்டு ஏண்டா எனக்கு போன் பண்ணி கழுத்தறுக்கிற என்று அவனை திட்டினால் ஷிவு.
நல்லா திட்டுமா அவன தொடர்ந்து ஒரு படம் பார்க்க விடுகிறானா படத்துல வர இன்டர்வியூல விட இவன் அவனுக்கு பேசுவதற்காக இன்டர்வெல் பண்றதுதான் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு என்றவர் சத்தமாக போனிற்கு அருகில் வந்து டேய் ரூபேஷ் இன்னொரு தடவை போன் பண்ணுங்க நானே உன் ஆபீஸ் தேடி வந்து என்ன உண்டு இல்லைன்னு பண்ணிடுவேன்னு பேசாம போன வைடா நான் என் மருமக கூட தானே இருக்கேன் எனக்கு அவளை பத்திரமா பாத்துக்க தெரியாதா என்னமோ இவனுக்கு மட்டும்தான் பொண்டாட்டி மேல அக்கறை இருக்கிற மாதிரி ரொம்ப ஓவரா பண்றான்னு வைடா போன என திட்டிய ரூப் பேசி அம்மா ஷிவ் கையில் இருந்த போனை வாங்கி கட் செய்தார்.
நீ வா மருமகளே நம்ம படம் பார்க்கலாம் என்று டிவியில் பாஸ் செய்திருந்த படத்தை ஓடவிட்டார் இருவரும் கையில் பாப்கனை வைத்து அதைக் கொரித்துக் கொண்டே கொண்டே படம் பார்க்க ஆரம்பித்து இருந்தனர்.
இந்த வீட்ல எனக்கு மரியாதையே இல்ல என் அம்மாவும் அவ கூட சேர்ந்துட்டு என்னை சகட்டுமேனிக்கு திட்டுறாங்க கொஞ்சம் கூட மரியாதையே கொடுக்காமல் என அம்மாவையும் ஷிவுவையும் சேர்த்து திட்டினான் ரூபேஷ்.
அவன் போன் போன் பேசிவிட்டு புலம்பிய படி அமர்ந்திருக்க அவன் கேபின் கலவிற்கு அருகில் நின்றிருந்த மித்ரன் கதவை தட்டிக் கொண்டு நான் உள்ள வரலாமா என்றான்.
மித்ரனை பார்த்ததும் எழுந்த ரூபேஷ் வாசலுக்கு வந்து வாங்க மித்ரன் ஏன் அங்கேயே நின்னுட்டீங்க என்று அவனுக்கு கதவை நன்றாக திறந்து விட்டால்
இல்ல நான் உள்ள வரலாம்னு தான் நினைச்சேன் ஆனா இங்கே ஒரு வாய்க்கா தகராறு ஓடிக் ஓடிட்டு இருக்கிறத பார்த்தேன் அதனால தான் குறுக்க புகுந்தா நமக்கு எங்கேயும் கத்தி குத்து விழுந்திருமோன்னு வரல என்று கிண்டல் செய்தான் மித்ரன்.
அதே தான் எனக்கும் இப்ப எல்லாம் எனக்கு வீட்டுக்கு போறதே போர்க்களத்துக்கு போற மாதிரி தான் இருக்கு நான் எது சொன்னாலும் என் அம்மாவும் என் பொண்டாட்டியும் இரண்டு பேரும் ஒன்று சேர்ந்துட்டு என்ன கழுவி கழுவி ஊத்துறாங்க என்ன டேமேஜ் பண்றதுலயே குறியா இருக்காங்க என்று சொல்லி சிரித்தால் ஒரு ஃபேஸ் இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே மே ஐ கம் இன் சார் என கதவை தட்டிக் கொண்டு உள்ளே வந்தால் ரதி
ஹலோ மிஸ் ரதி வாங்க நீங்களும் வந்து இருக்கீங்களா என்றால் ரூபேஷ்.
ஆமா ருபிஸ் சார் என்ன செய்றது என்னோட முதலாளி எங்க இருக்காரோ அங்கே தானே நானும் போக வேண்டி இருக்கு எனக்கு இன்னும் கொஞ்சம் கூட டைம் ஒதுக்கவே மாட்டேங்குறாரு என்னோட முதலாளி என மித்திரனை ஓரமாக பார்த்து முறைத்தபடி கூறினால் ரதி.
அதைக் கேட்டு ரூபீஸ் மித்திரனை பார்த்து என்ன சார் உங்க பிஏவுக்கு கொஞ்சம் கூட ஓய்வு கொடுக்க மாட்டேங்கிறீங்க போல அவங்க இப்படி கம்ப்ளைன்ட் பண்றாங்க உங்கள பத்தி என கேட்டான்.
என்ன பண்றது ரூபேஷ் வேலைன்னு வந்துட்டாலே நான் வெள்ளைக்காரன் தான் என்கிட்ட போய் ரெஸ்ட் வேணும் ஃப்ரீ டைம் வேணும்னு கேட்டா நடக்குமா அதெல்லாம் முடியாது ஆபீஸ் வேலை இருக்கும்போது மத்தத பத்தி எல்லாம் யோசிக்க எனக்கு நேரமே இல்லை என்றான்.
மாமா அப்படியே 24 மணி நேரமும் இவன் வேலை செய்து கிழிச்சுடுறான் நானும் தான் பார்க்கிறேனே என மனதிற்குள் நினைத்துக் கொண்ட ரதி பேசாம இவனுக்கு ஒரு பினாயில் பாய்ஸை போடணும் அப்பதான் உடம்பு சரியில்லைன்னு ஒரு வாரமாவது வீட்டில் இருந்து ரெஸ்ட் எடுப்பான் நானாச்சும் கொஞ்சம் நிம்மதியா இருப்பேன் என அவனை கழுவி ஊற்றினால் ரதி.
அவள் முகத்தில் நொடிக்கு ஒரு முறை மாறும் உணர்வுகளை கண்ட மித்ரன். என்னதான் மனசுக்குள்ள எதையோ சொல்லி கழுவி ஊத்திக்கிட்டு இருக்கா இவள போய் என் தலையில கட்டி விட்டுட்டு இந்த போதி அவன் பொண்டாட்டி கூட ஜாலியா ஊற சுத்திக்கிட்டு இருக்கான்னு ஆபிஸ் பக்கமும் வரதில்ல காலேஜ் பக்கமும் போறதில்லை என் மனசுல என்னதான் நினைச்சுட்டு இருக்கான்னு இன்னைக்கு சாயங்காலம் இதுக்கு ஒரு வழி பண்ணியே ஆகணும் அவனை போய் பார்த்து பேசி ஆகணும் என நினைத்துக் கொண்டால் மித்ரன்..
மிஸ்டர் மித்ரன் ஏதோ யோசனைல இருக்கீங்க போல என்றான் ரூபேஷ்.
அது ஒன்னும் இல்ல ரூபேஷ் நான் இங்கே வந்ததுக்கான விஷயத்தை சொல்லாம வேற ஏதோ பேசிட்டு இருக்கேன் பாருங்க என்றவன் என்னோட ஆபீஸ்ல ஒரு சில சேஞ்சஸ் செய்யணும்னு நான் நினைக்கிறேன் இப்போ இருக்கிற டெக்னாலஜிக்கு ஏற்ற மாதிரி ஆபீஸ்ல சில மாற்றங்களை கொண்டு வரணும்னு நினைக்கிறேன் அதுக்காகத்தான் உங்களை பார்க்க வந்திருக்கேன் என்றான் மித்ரன்.
நான் என்ன செஞ்சு தரணும் என்று கேட்டான் ரூபேஷ்.
மித்ரன் தங்களுடைய ஆபீஸில் அக்கௌன்ட் செக்ஷனில் டிசைனிங் செக்ஷனில் மற்றும் சில கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட பகுதிகளில் எல்லாம் என்னென்ன செய்ய வேண்டும் என்று கூறினான்.
மித்ரன் சொல்வதை எல்லாம் பொறுமையாக கேட்டுக் கொண்டே இருந்த ருபேஸ் ஓகே நீங்க சொன்னதுக்கான விஷயங்களை என்னென்ன மாதிரி ஸ்மார்ட்டா ஈஸியா செய்ய முடியும்னு நான் என்னோட டீம் கிட்ட கலந்து பேசிட்டு உங்களுக்கு ஒரு ப்ளூ பிரிண்ட் கொடுக்கிறேன் அதை பார்த்துட்டு நீங்க ஓகே சொல்லிட்டீங்கன்னா அடுத்து நம்ம ப்ராஜெக்ட் ஸ்டார்ட் பண்ணிடலாம் என்றான்.
இவர்கள் இருவரும் பேசி முடிக்கும் போது அவசரமாக குறுக்கே புகுந்த ரதி அப்படியே இந்த ஆபீஸ் பயல்களை எல்லாம் கையிலேயே எழுதி ஃபைல் பண்ணி எல்லாம் பண்ண வைக்காமல் கம்ப்யூட்டரைஸ்டு எல்லாத்தையும் மாத்தி கொடுத்துடுங்க என்னால அந்த பைலை தூக்கிக்கிட்டு இவர் போற பக்கமெல்லாம் ஓட முடியல அதுவு இல்லாம எழுதி எழுதி என் கை மணிக்கட்டு எல்லாம் வலிக்குது என அழைத்துக் கொண்டால் ரதி.
அவளை திரும்பும் முறைத்த மித்திரன் ஒருவேளை செய்யணும்னா அதை ஆரம்பத்துல இருந்து அதாவது ஜீரோலிருந்து கத்துகிட்டு வந்தா தான் அதை பத்தியான முழுமையான விஷயத்தை நம்ம தெரிஞ்சுக்க முடியும் இப்படி எல்லாத்துலயுமே சோம்பேறித்தனமா இருந்தா எதுவுமே பண்ண முடியாது என்றான்.
ஆமா இன்னும் அந்த காலத்துல கணக்கு வழக்கு எழுதின மாதிரி பேசாம எனக்கு மையும் கோழி இறக்கையும் கொடுத்துடுங்க நான் அதை தொட்டு தொட்டு ஒவ்வொரு கணக்கா எழுதி கொடுக்கிறேன் போதுமா என்றால் ரதி.
சூப்பர் இந்த ஐடியா நல்லா இருக்கே இதயம் ட்ரை பண்ணி பார்ப்போம் எப்போதுமே ஓல்ட் இஸ் கோல்ட் தானே என்றான்.
அவனை முறித்துவிட்டு தன் கையில் இருந்த பைலை தூக்கி மித்ரன் முன்பு இருந்த டேபிளில் பொத்தின போட்டவள் அதுக்கு வேற ஆளை பாருங்க நான் இப்பவே இந்த வேலையை ராஜினாமா பண்றேன் இப்படி டார்ச்சர் பண்ற ஆளுகிட்ட யாராவது வந்து ஒரு நாள் கூட முழுசா வேலை செய்ய மாட்டாங்க ஏதோ நானா இருக்க போயி இத்தனை மாசமா பல்ல கடிச்சுக்கிட்டு உங்ககிட்ட வேலை பார்க்கிறேன் இந்தாங்க என்று சொல்லி அவளுடைய ஐடி கார்டையும் கழட்டி மித்ரன் முன்பு வைத்துவிட்டு ரூபிஸை பார்த்து நான் கிளம்புறேன் என கோபமாக சொல்லியவள் அங்கிருந்து வேகமாக கிளம்பினால்.
அவள் வேலை வேண்டாம் என்று சொல்லிவிட்டுச் செல்ல அதை பார்த்த ரூபேஷ் பதட்டம் அடைந்தவன் என்ன மித்ரன் அவங்க கோவிச்சுட்டு போறாங்க நீங்க எதுவுமே சொல்லாம அமைதியா உட்கார்ந்து இருக்கீங்க அவங்க போதியோட அத்தை பொண்ணு தானே அவங்களால உங்களுக்கு எதுவும் பிரச்சனை வந்திட போகுது போதிகிட்டு போய் உங்களை பற்றி உனக்கு இரண்டாக இதுவும் போட்டு கொடுத்திர போறாங்க என்றான்.
சோபாவில் இருந்து பதட்டமாக எழுந்து வாசல் வரை சென்று பார்த்துவிட்டு பதட்டமாக பேசிய ரூபேஷ் பார்த்து எந்த பதட்டமும் காட்டாமல் இருப்பே இங்கே வாங்க இங்கே வந்து உட்காருங்க அவ எங்கேயும் போக மாட்டா என்கிட்ட கோபித்துக்கொண்டு நேரா கீழ பார்க்கிங்கில் இருக்கிற என் கார் கிட்ட தான் வெயிட் பண்ணிட்டு இருப்பா எனக்கு இது பழகிப்போன விஷயம் தான் என்று சிரித்தவன் சரி நான் சொன்ன விஷயமும் வேற எதுவும் செய்யணுமான்னு யோசிச்சிட்டு என்ன காண்டாக்ட் பண்ணுங்க அதே போல ஒரு நாள் உங்க ஸ்டாப் மெம்பர்ஸ் ஓட எங்க ஆபீஸ்க்கு வாங்க என்னோட ஸ்டாப் மெம்பர்ஸ்யும் மீட் பண்ண ஒரு சின்னதா ஒரு மீட்டிங் அரேஞ்ச் பண்றேன் அவங்களுக்கு என்ன மாதிரியான ஃபியூச்சர்ஸ் வேணும் என்ன மாதிரியான மாற்றங்கள் வேணும்னு எல்லாரும் கலந்து பேசினால் ஒரு சரியான ஐடியா கிடைக்கும்னு நினைக்கிறேன் என்றான் மித்ரன்.
ஓகே சார் மித்ரன் பேசிட்டு உங்களுக்கு சொல்றேன் என்று அவனை வாசல் வரை சென்று வழி அனுப்பி வைத்தான் ரூபேஷ்
ரதி தூக்கி போட்டு விட்ட பையிலையும் அவள் ஐடி கார்டையும் எடுத்துக்கொண்டு லிப்டில் நுழைந்தவன் நேராக பார்க்கிற்கு சென்றான்.
ரூபேஷிடம் சொன்னது போலவே ரதி கோபமாக அவன் கார் அருகில் கையை கட்டிக்கொண்டு குறுக்கும் எடுக்கும் நடந்தபடி ஏதோ புலம்பியவாறு இருந்தாள்.
எனக்கு இன்னமும் தன்மீது கோபம் குறையவில்லை என்பது மட்டும் அவள் நடந்து கொண்டிருக்கும் வேகத்திலேயே புரிந்தது இருந்தும் அதை கண்டுb கொள்ளாதவன் போல விசில் அடித்துக் கொண்டே காரு சாவியை தன் விரலில் சுழல விட்டபடி அவளை நோக்கி வர விசில் சத்தம் கேட்டதும் கோபமாக நடந்து கொண்டிருந்த ரதி திரும்பி மித்ரனை பார்த்தாள்.
விசில் அடித்து படி ஸ்டைலாக உடலை வளைத்து நிலைத்து லேசாக டான்ஸ் மூவ்மெண்ட் செய்து கொண்டே அவள் அருகில் வந்தவன் தன் கையில் இருந்த பைலை தூக்கி அவள் முகத்திற்கு நேராக போட அதை சட்டென பிடித்துக்கொண்ட ரதி.
அவனை முறைக்க அவன் அதை சட்டையே செய்யாமல் கார் கதவை திறந்தவன் அவளைப் பார்க்க மித்ரன் தன்னை பார்க்கிறான் என்று தெரிந்ததும் விடுக்கென தன் முகத்தை திருப்பிக் கொண்டால் ரதி .
அவள் தன்னை பார்க்காமல் திரும்பிக் கொள்ள நின்ற இடத்தில் இருந்து தொடக்கப்போட்டு ரதியை அழைத்தான்.. அவள் அதை கண்டுகொள்ளாதவள் போல நின்றிருக்க ஹலோ ரதி மிஸ்ரதி என்னிடம் வேலை வேண்டாம் என்று சொல்லிட்டு வேகமா கீழ வந்தீங்களே அப்புறம் ஏன் போகாம ஏன் கார் பக்கத்துல நின்னுட்டு இருக்கீங்க என்றான் வேண்டுமென்றே அவளை வம்பு செய்து.
அப்படிச் சொன்னதும் கோபமாக திரும்பி அவனை முறைத்தவள் வேகமாக காரின் பின் சீட்டை திறந்து கையில் இருந்த பைலை தூக்கி வீசிவிட்டு திரும்பி பார்க்கிங்கில் இருந்து வெளியே வேக வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.
அவள் நடந்து செல்லும் போது அவள் பின்னழகை பார்த்து ரசித்தவன். தன் காரில் ஏறி அவளை ரசித்து வாரே அவள் பின்னால் காரை மெதுவாக ஓட்டி சென்றான்.
சரியாக பார்க்கிங் தாண்டி வெளியே வர… ரதியும் சாலையின் ஓரமாக நடக்க ஆரம்பிக்க அவள் பின்னால் மெதுவாக காரை ஓட்டிக்கொண்டே வந்தவன் திடீர் திடீரென தன் ஹாரனை அழுத்தி அவளை பயமுறுத்தினான்.
அவன் ஹார்ன அடிக்கும் போதெல்லாம் சட்டுனு அதிர்ந்து ரதி திரும்பி தனக்கு பின்னால் வந்து கொண்டிருந்த காருக்குள்ள இருந்து மித்ரனை பார்த்து முறைப்பதும் பின்பு திரும்பி மீண்டும் அதே கோபத்தோடு வேகமாக நடப்பதுமாக இருந்தால்.
சற்று தூரம் நடந்து ஆட்கள் நடமாட்டம் இல்லாத சாலை வழியே ரதி திரும்ப… வேகமாக காரை ஓட்டி வந்தவன் அவளுக்கு குறுக்கே தன் காரை கொண்டு வந்து நிப்பாட்டி விட்டு அதில் இருந்து இறங்கி ரதியின் முன்னால் வந்து ஏய் போதும்டி நானும் பாக்குறேன் எனக்கும் இல்லாம இன்னைக்கு ரொம்ப ஓவரா தான் கோவிச்சுக்கற நான் இப்படியே உன் பின்னாடியே கார உருட்டிக்கிட்டு வரணுமா ஒழுங்கா இப்ப வந்து கார்ல ஏற போறியா இல்ல உன்னை இங்கேயே அன்புன்னு விட்டுட்டு நான் கிளம்பட்டுமா என்றான் மித்ரன்.
ஹலோ யார் சார் நீங்க ரோட்ல போற ஒரு பொண்ணுக்கு முன்ன குறுக்கே இப்படித்தான் காரை கொண்டு வந்து நிப்பாட்டி வந்து பேசுவீங்களா. ஒழுங்கா எனக்கு வலியை விடுங்க என்று அவனை தள்ளிவிட்டு ரதி செல்லப் போக மீண்டும் அவள் குறுக்கே வந்து இடுப்பில் கைவைத்து நின்றவன் வழிவிட முடியாதுடி அப்படித்தான் நிற்பேன் என்ன பண்ணுவ என்றான் அவளை வெறுப்பேற்றும் விதமாக.
ஹே மிஸ்டர் சொன்னா கேக்க மாட்ட ஒழுங்கா வலியை விடு நான் போகணும் என ரதி அவனைத் தாண்டி செல்ல போக.
நானும் பேசிக்கிட்டே இருக்கேன் ரொம்ப ஓவரா தான் பிகு பண்ணிக்கிற உன் கிட்ட இல்ல பேசிக்கிட்டு இருந்தா வேலையாகாது என்றவன் சாலை என்று கூட பார்க்காமல் அவளை அப்படியே குண்டு கட்டாக தூக்கி தன் தோளில் போட்டவன் காரை நோக்கி நடந்தான்.
இதை சற்றும் எதிர்பாராத ரதி அவன் தோளில் வேகமாக அடித்து டேய் முதல்ல என்ன இறக்கி விடுடா உன் மனசுல என்னதான் நெனச்சிட்டு இருக்க என்ன பாத்தா லூசு மாதிரி தெரியுதா உனக்கு அங்க வந்து ஆபீஸ் வேலைன்னு வரப்போ என்ன வேலை வாங்குவதும் கழுவி ஊத்துறதுமா இருக்கிறது அதை விட்டு வெளியே வந்தா இப்படி வந்து பேசி என்ன டார்ச்சர் பண்ண வேண்டியது உன் மனசுல என்ன தான்டா நினைச்சுட்டு இருக்க என்று சொல்லி அவன் முதுகில் அடித்துக் கொண்டே இருக்க அதை கண்டுகொள்ளாத மித்ரன் கார் கதவை திறந்து ரதியை உள்ளே அமர வைத்தவன் கார் கதவை சாற்றி விட்டு மறுபுறம் வந்து டிரைவர் சீட்டில் ஏறி அமர்ந்தவன் காரை வேகமாக அங்கிருந்து கிளப்பினான்.
காரில் ஏறியதில் இருந்து ரதி அவனிடம் சண்டை இட்டுக்கொண்டே வர… இப்போ எதுக்குடா என்னை கூட்டிட்டு போற நான்தான் உன்னோட வேலையும் வேண்டாம் எதுவும் வேண்டாம் என்று வந்துவிட்டேனே என்னையே இப்படி டார்ச்சர் பண்ற விடு எனக்கு எதுவும் வேண்டாம் என்று ரதி அவனை வழி எங்கும் அடித்துக் கொண்டே வர.
ஏய் இப்போ உனக்கு என்னடி பிரச்சனை எப்ப பாரு என்கிட்ட சிடு சிடுன்னு பேசிகிட்டு சண்டை போட்டுக்கிட்டே இருக்க அப்படி நான் என்ன பண்ணிட்டேன் என்னை கண்டால் இப்படி எரிஞ்சு எரிஞ்சு விழற என்றான்,
நீ என்ன பண்ணிட்டு உனக்கு எப்படிடா ஞாபகம் இருக்கும் உன்கிட்ட பல்பு வாங்கி அவமானப்பட்ட எனக்கு தானே ஞாபகம் இருக்கும். நான் உன்கிட்ட எவ்வளவு ஆசை ஆசையா என்னோட லவ்வ ப்ரபோஸ் பண்ண வந்தேன் ஆனா நீ எனக்கு அப்பவே நோ சொல்லி பல்பு கொடுத்தது மட்டும் பத்தாம எனக்கு எப்படி அட்வைஸ் பண்றேன்னு என் காது ரெண்டுலயும் ரத்தம் வரல வர அளவுக்கு அட்வைஸ் பண்ணி டார்ச்சர் பண்ணிட்டு நீ எப்பவும் போல நல்லவன் மாதிரி பேசினா நான் பழசை எல்லாம் மறந்துட்டு உன்கிட்ட சகஜமா பேசுவேன்னு நினைச்சியா முதல்ல வண்டியை நிறுத்துடா என்ன இறக்கி விடு நானும் மனசுல ஒரு ஓரத்துல நம்பிக்கையுடன் இருந்தேன் எப்படியும் உன் மனச மாத்திடலாம்னு.
நீ தான் என் போதி மாமாவுக்கு துரோகம் பண்ண கூடாது என் வீட்ல இருக்குறவங்களுக்கு ப்ரோ துரோகம் பண்ண கூடாதுன்னு சொல்லி நான் உன்கிட்ட என் காதலை சொல்ல வரும்போது எல்லாம் என்ன துரத்தி விடுற நான் தான் உனக்கு வேண்டாம்னு முடிவு பண்ணிட்டியே அப்புறம் எதுக்கு கோவிச்சுட்டு போற என்னை சமாதானப்படுத்துரேன்னு இப்படி வந்து டார்ச்சர் பண்ற என்றால் ரதி.
ஏய் கொஞ்ச நேரம் பேசாம வாயேண்டி நான் சொல்றத நீ பொறுமையா உட்கார்ந்து யோசிச்சுன்னாலே என் பக்கம் இருக்கிற நியாயம் உனக்கு தெரியும் என்றான் மித்ரன்.
உன் ஞாயத்தை கொண்டு போய் குப்பையில் போடு காதலிக்கிறதுன்னு வந்தாச்சுன்னா ஜாதி மதம் அந்தஸ்து குடும்பம் சென்டிமென்ட் எதையுமே நினைக்கவோ பார்க்கவோ தோணாது நான் இப்போ அதே நிலைமையில தான் நான் இருக்கேன் உனக்கு என் மேல விருப்பம் இருந்தா என்ன பிடிச்சிருக்கா அதை மட்டும் சொல்லு இல்லையா என்ன இப்படியே விற்று நான் என் வழிய பார்த்து போயிட்டு இருக்கேன் நீயும் உன் வழியை பார்த்து போயிடு என்றாள் ரதி கோபமாக.
உன்ன போக விட்டுட்டு நான் மட்டும் தனியா என்னடி பண்ணுவேன் என்றான் சற்று கோபமாக மித்ரன்.
ஏன் நான் போய்ட்டா ஒரு இளிச்சவாய் என்னை மாதிரி ஆபீஸ் வேலை செய்ய கிடைக்க மாட்டேன் என்று தான் என்ன போக விடாம பிடிச்சு வச்சுக்க ட்ரை பண்றியா என்றால் ரதி.
இவளுக்கு எதையுமே நேரடியா விளக்கிச் சொன்னா தான் புரியும் போல இருக்கு என்று நினைத்தவன் இவளை இனிமேல் பேசவே விடக்கூடாது என்று சொல்லி காரை சாலையின் ஓரமாக கொண்டு வந்து பார்க் செய்தவன் சீட் பெல்ட் கழட்டிவிட்டு அவள் பக்கம் திரும்பி அவள் கழுத்தோடு தன் கையை நுழைத்து தன் அருகில் இழுத்து அவள் இதழில் முத்தம் பதிக்க ஆரம்பித்தான்.
