Home Uncategorizedஎனை மாயம் செய்யும் ராட்சசன் 7

எனை மாயம் செய்யும் ராட்சசன் 7

by Layas Tamil Novel
191 views

EPISODE 7

கஜேந்திரன் வீட்டு ஹாலில் பரமனும் குருவும் காத்திருக்க நீண்ட நேரம் கழித்து கஜேந்திரன் மாடியில் இருந்து இறங்கி வந்தார்.

ஆறடி உயரம் சிவந்து தேகம், லேசாக வயதால் சுருங்கி இருந்த முகம், கட்டை மீசை அது முழுவதும் நறைத்திருக்க…   இந்த வயதில் மிகவும் கம்பீரமாக படிகளில் இறங்கி வந்த கஜேந்திரனை பார்த்து குருவிற்கு ஒரு நிமிடம் ஆச்சரியமாகத்தான் இருந்தது.  

ஹாலில் அமர்ந்திருந்த பரமனை பார்த்ததும் அடடே சம்மந்தி வாங்க எப்படி இருக்கீங்க என்ன நாளைக்கு காலையில கல்யாணத்தை வெச்சுகிட்டு இன்னைக்கு வந்து இருக்கீங்க. எதுவும் முக்கியமான விஷயம் பேசுமா சொல்லி இருந்தா நானே சம்மந்தி தேடி வந்திருப்பேனே என கேட்டார்.

குரு நினைத்தது போல கஜேந்திரன் பார்ப்பதற்கு ஒன்றும் முரடனாக தெரியவில்லை. அவர் தன் நம்ம அண்ணனிடம் பேசும் விதத்தை பார்த்த குரு 

“இவரைப் பார்த்தா அண்ணி சொன்ன அளவுக்கு ஒன்னும் மோசமானவரா தெரியலையே. அண்ணி ஏன் இவ்வளவு தூரம் தப்பா பேசுறாங்க” என யோசித்தபடி குரு கஜேந்திரனையே பார்த்துக் கொண்டிருக்க..

“இல்ல சம்பந்தி  வீட்ல வச்சு இந்த விஷயத்தை பேச முடியாதுன்னு தான் நான் இங்க வந்தேன்.” என்ற பரமன் இது என்னோட தம்பி குரு என தன்னருகில் அமர்ந்திருந்த குருவை கஜேந்திரனுக்கு அறிமுகப்படுத்தினார் பரமன்.

தன் அண்ணனும் கஜேந்திரனிடம் மிகவும் சாதாரணமாக பேசுவதை பார்த்த குருவிற்கு ஒன்றுமே புரியவில்லை மிகவும் குழப்பமாக இருந்தது.

இவரிடம் கடன் வாங்கி அடைக்க முடியாமல் தானே இன்று தன்னுடைய மகள் ரியாவை  வலுக்கட்டாயமாக  திருமணம் செய்து வைக்கப் போவதாக அண்ணி தன்னிடம் சொன்னாரே… ஆனால் தன் அண்ணன் இவரிடம் பேசுவதை பார்த்தாள் அப்படி ஒன்றும் தோன்றவில்லையே இங்கே என்ன நடக்கிறது” என்று புரியாமல் குழம்பிப் போனார் குரு.

குருவின் குழப்பமான முகத்தை பார்த்த பரமன் “குரு நான் உன்கிட்ட நான் ஒரு பெரிய உண்மையை மறைச்சுட்டேன் டா” என்றார்.

“அண்ணா என்ன சொல்றீங்க?” என கேட்டார் குரு.

“உன் அண்ணியும்,  என் பொண்ணு ரியாவும் சேர்ந்துட்டு உன்கிட்ட நல்லவ  மாதிரி பேசி நாடகம் ஆடுறாங்க. அவங்கள வச்சுக்கிட்டு என்னால எதுவும் சொல்ல முடியல” என்றவர்.

“சொல்லப்போனால் அவங்க ரெண்டு பேருகிட்டயுமே நான் பொய் தான் சொல்லி இருக்கேன்” என்றார் கஜேந்திரன்.

“அண்ணா என்ன சொல்றீங்க கொஞ்சம் தெளிவா சொல்லுங்க எனக்கு எதுவுமே புரியல” என்று மிகவும் குழப்பமாக குரு பேச…

“குரு இவரோட பையன் ஜெய் அமெரிக்காவில ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்ணிட்டு இருக்காரு. ரொம்ப தங்கமான பையன் தொழில்ல நாணயம் உள்ளவரு. கஜேந்திரன் இங்கே என்ன தொழில் பண்ணிட்டு இருக்காரோ அதே அமெரிக்காவில் இவரோட பையன் பண்ணிட்டு இருக்கார்.” 

“நம்ம ரியாவும்  அமெரிக்காவில் தான் படிச்சான்னு உனக்கு நல்லாவே தெரியும். அவ படிப்பு முடிச்சுட்டு திரும்பி இந்தியாவுக்கு வந்துட்டா . இவரோட பையன் ஜெய்யும், கஜேந்திரனுக்கு கொஞ்ச நாளா உடம்பு சரியில்லைன்னு இங்கே இருக்கிற அவரோட ரியல் எஸ்டேட் பிசினஸை பார்த்து கொள்வதற்காக இந்தியா வந்து இருந்தாரு.”

“கஜேந்திரன்கிட்ட தான் நான் பிசினஸ் பண்ணிட்டு இருக்கிறதுனால  என்ன அடிக்கடி பாக்குறதுக்காக இவர் நம்ம வீட்டுக்கு வருவாரு. அவரோட தொழில இப்போ ஜெய் பாத்துக்குறதுனால கஜேந்திரனுக்கு பதிலா ஜெய் நம்ம வீட்டுக்கு வந்திருந்தப்போ ரியாவுக்கு அவர பார்த்ததும் ரொம்ப பிடிச்சு போச்சு.”

“அத உன் அண்ணிகிட்ட சொல்லி உன் அண்ணி தான் ஜெய்ய நம்ம பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க கேளுங்கன்னு சொல்லி என்ன வற்புறுத்தினா நானும் உன் அண்ணியோட தொந்தரவு தாங்காம கஜேந்திரன் கிட்ட நம்ம ரியாவுக்காக ஜெய கல்யாணம் பண்ணி தர சொல்லி கேட்டேன் அவரும் முழு மனசோட இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னாரு.”

” மாப்பிள்ளையும் அவர் அப்பா சொன்ன ஒரே காரணத்துக்காக எந்த மறுப்பும் சொல்லாம இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சாரு ஆனா ஒரே ஒரு கண்டிஷன் மட்டும் தான் சொன்னாரு.ஒரு ஆறு மாசம் போன பிறகு கல்யாணத்தை வச்சுக்கலாம்னு சொல்லி இருந்தார் மாப்பிள்ளை. அவருக்கு அமெரிக்காவுல சில முக்கியமான பிசினஸ் வேலை எல்லாம் இருக்கிறதுனால அதை முடிச்சுட்டு வந்து கல்யாணத்தை வெச்சுக்கலாம்னு சொல்லி இருந்தார். நாங்களும் சம்மதித்தோம்.”

“இதுக்கிடையில உன்னோட அண்ணியோட தொந்தரவு தாங்காம நம்மளோட கன்ஸ்ட்ரக்ஷன் பிசினஸை இன்னும் பெருசு படுத்தனும் அப்போதான் இவங்களுக்கு ஈகுவலா நம்ம இருக்க முடியும்னு சொல்லி கஜேந்திரன்கிட்டயே பணம் கேட்டு வாங்கி தனியா ரியா பேருல ஒரு கன்ஸ்ட்ரக்சன் பிசினஸ் ஆரம்பிச்சாங்க.”

“பொண்ணு கொடுக்க போற இடத்துல கடன் வாங்குவது சரியில்லைன்னு நான் எவ்வளவோ முறை உன் அண்ணிகிட்டயும் ரியாகிட்டயும் எடுத்து சொல்லிட்டேன். ஆனா அவங்க ரெண்டு பேரும் நான் சொல்றத கேக்குறதா இல்ல கிட்டத்தட்ட 200 கோடி வரைக்கும் உன் பணம் வாங்கிட்டாங்க.”

“இவங்களும் நம்ம வீட்டுக்கு வரப்போற மருமகள் தானே என்று நம்பி அவங்க கேக்குறபோது எல்லாம் பணத்த குடுத்துட்டு  இருந்தாங்க.”

“கிட்டத்தட்ட ஒரு மாசத்துக்கு முன்னாடி அமெரிக்காவுக்கு போயிருந்த மாப்பிள்ளைக்கு அங்கே ஆக்சிடென்ட் ஆகி ரெண்டு காலும்  கால் ரெண்டும் செயலிழந்திருச்சுன்னு சொன்னாங்க.”

“அதைக் கேள்விப்பட்டு நாங்க எல்லாருமே இடிஞ்சு போயிட்டோம். என்னடா மாப்பிள்ளைக்கு இப்படி ஒரு சோதனை வரணுமா?அப்படிங்கிற நிலைமைக்கு நாங்க ஆளாகிட்டோம். எப்பவுமே மாப்பிள கம்பீரமா எல்லா வேலையும் அவ்வளவு ஆர்வமா செய்றவர். இந்த சம்பவத்துக்கு பிறகு  அமெரிக்காவிலிருந்து அவர் இங்கே வந்ததிலிருந்து அதோ அங்க இருக்க அந்த ரூமுக்குள்ள தான் இருக்காரு. அவரோட ரூம் விட்டு வெளியேவே வரதில்ல… யார் வந்தாலும் பார்க்க மாட்டார்.  யார்கிட்டயும் பேசமாட்டார். அவருக்கு தனக்கு இப்படி ஒரு நிலைமை ஆயிடுச்சுன்னு நெனச்சு ரொம்ப டிப்ரஷன்ல இருக்காரு. நாங்களும் அதுக்கப்புறம் அவர  தொந்தரவு பண்ணல”

“நான் ரியாவுக்கு கல்யாணம் பிக்ஸ் ஆன விஷயத்தை உன்கிட்ட சொல்லாம இருந்ததும் ஒரு வகையில நல்லதா தான் இருந்தது. ஏன்னா மாப்பிள்ளையோட கால் ரெண்டும் உடைஞ்சிருச்சுன்னு தெரிஞ்சதும் ரியா மாப்பிள்ளை கிட்ட பேசுறதையே சுத்தமா நிறுத்திட்டா. கால் உடைஞ்ச வர என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு அவ பிடிவாதமா இருந்துட்டா.”

“அதேபோல உன் அண்ணி இவங்க கிட்ட இருந்து வாங்கின 200 கோடி ரூபாய் பணத்தையும் திருப்பி தர முடியாதுன்னு பிடிவாதமா நின்னா. எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல நானும் உன் அண்ணிகிட்டேயும் ரியா கிட்டயும் எவ்வளவோ முறை எடுத்துச் சொல்லி இந்த கல்யாணத்தை நடத்துறதுக்கும் பணத்தை திருப்பி கொடுக்கிறதுக்கும் முயற்சி செஞ்சேன் ஆனா ரெண்டு பேருமே கொஞ்சம் கூட நான் சொல்றத காது கொடுத்து கேட்கவே இல்லை கடைசியா நானே ஒரு முடிவு எடுத்துட்டேன். என்னோட பிசினஸ்ல இருந்து வந்த பணம் பிராப்பர்ட்டி எல்லாத்தையும் வித்து அதுல வந்த பணத்தை முதலில் சம்பந்திக்கு வட்டியும் முதலும் கொடுத்து செட்டில் பண்ணினேன்.” என்றவர் அடுத்து பேசப்போக…

“அட இருங்க சம்பந்தி வந்ததிலிருந்து நீங்களே மூச்சுவிடாமல் பேசிட்டு இருக்கீங்க நம்ம சின்ன சம்மந்தி கிட்ட நானே மிச்சத்தை சொல்றேன் நீங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க என்று சொல்லிவிட்டு கஜேந்திரன் குருவை பார்த்து சம்பந்தி இவங்க கொடுத்த பணத்தை வேண்டாம்னு தான் சொன்னேன். ஆனா பரமன் தான் வலுக்கட்டாயமா இந்த பணத்தை வைத்துக்கொள்ள சொல்லி எனக்கு கொடுத்துட்டான் நானும் வேற வழியில்லாமல் தான் வாங்கிட்டேன். அதுவும் எப்படி வாங்கலைன்னு நினைக்கிறீங்க பரம்பன் என்கிட்ட வந்து இந்த மாதிரி என் வீட்டுக்கு நீங்க வரணும் வந்து என்னையும் என் குடும்பத்தையும் மிரட்டி என்கிட்ட இருக்கிற சொத்துக்களை எல்லாம் வாங்குற மாதிரியும் அப்படியே மிரட்டி உங்க பையனையும் கல்யாணம் பண்ணிக்க சொல்லி என் பொன்னையும் மிரட்ட சொல்லி கேட்டாரு.

முதல்ல நான் இதுக்கு ஒத்துக்கவே இல்ல ஏன்னா ஒரு பொண்ணோட விருப்பம் இல்லாம என் பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க எனக்கு இஷ்டம் இல்ல ஆனா சம்மந்தி தான் பிடிவாதமா அவரோட முடிவுல நின்னுட்டாரு.

நானும் வேற வழியில்லாமல் சம்மந்தி சொன்ன மாதிரியே அவரோட வீட்டுக்கு போயி நீங்க கொடுத்த பணம் பத்தாது வட்டியும் முதலும் சேர்த்து எல்லாமே செட்டில் பண்ணுங்கன்னு அவங்கள மிரட்டுனேன் உடனே சம்பந்தி அம்மா பணத்தை கொடுக்க முடியாது நீ பண்றது பண்ணுன்னு எங்கள மிரட்டுனாங்க.

அப்புறம் அதையே சாக்கா வச்சு  பணத்தை திருப்பி கொடுக்க முடியாதுன்னு சொன்னவங்ககிட்டே அதுக்கு பதிலா நின்னு போன இந்த கல்யாணத்தை திருப்பி நடத்துங்க உங்க பொண்ண என் பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு மிரட்டினேன் . 

ஆனா அதுக்கும் சம்பந்தி அம்மாவும்   ஒத்துக்கவே இல்ல அப்புறம் பரமன் தான் ஏதேதோ பேசி அவங்க ரெண்டு பேரையும் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சாங்க என்றார்.

முதல்ல எனக்கு இவங்கள வற்புறுத்தி என் பையனுக்கு ரியாவை கல்யாணம் பண்ணி கொடுக்க விருப்பம் உள்ளதா ஆனால் என் பையன் அவனுக்கு நடந்த இந்த ஆக்சிடென்ட்க்கு பிறகு யாருகிட்டயும் பேசுறது இல்ல யாரையும் அவன் கூட பேச முயற்சி இருந்தானா பின்னாடி அவளுக்குன்னு ஒரு வாழ்க்கை இல்லாமல் போயிடும்னு எனக்கு பயமாயிடுச்சு அதுக்காகவே என் பையனுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைனாலும் என்னோட உடம்ப காரணமாக காட்டி இந்த கல்யாணத்துக்கு அவனையும் வற்புறுத்தி தான் நான் சம்மதிக்க வச்சிருக்கேன் என்றவர் நம் கல்யாணத்துக்கு பிறகு ரியாவுக்கு என் மகனோட குணமெல்லாம் உன் முழுசா தெரிஞ்சு அவன் கூட சந்தோஷமா நம்பிக்கையில தான் இந்த கல்யாணம் ஏற்பாட்டை எல்லாம் செஞ்சிருக்கேன் என்றார் கஜேந்திரன்.

உன் அண்ணி முன்னாடி இத்தனை விஷயத்தையும் சொல்ல முடியல இந்த விஷயம் எனக்கும் சம்மந்திக்கு மட்டும்தான் தெரியும் அதனால தான் காரில் கூட உன்கிட்ட இந்த விஷயத்தை பத்தி நான் சொல்லல என்றார் பரமன்.

சரி அம்மா எனக்கு நீங்க ரெண்டு பேரும் சொன்னது எல்லாமே நல்லா தெரிஞ்சது நான் வேற அண்ணிகிட்ட இப்போ இந்த கல்யாணத்தை நிறுத்துறேன் பணத்தை மொத்தமும் கொடுக்கிறேன் என்று சொல்லித்தானே உங்களை இங்கே கூட்டிட்டு வந்தேன் இப்போ என்ன சொல்லி அண்ணியை கேட்ட சமாளிக்கிறது நாளைக்கு எப்படி இந்த கல்யாணத்தை நடக்கிறது என்று கேட்டார் குரு .

அதை நான் பார்த்துக்கிறேன் நான் சொன்னதுக்கு மட்டும் சரி சரி நீ அங்க வந்து தலையாட்டினா போதும் என்றவர் கஜேந்திரனிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்ப போன பரமன் கஜேந்திரனை பார்த்து நான் ஒருமுறை மாப்பிள்ளை போய் பார்க்கட்டுமா என கேட்டார்.

என்ன சம்பந்தி வேண்டாம் அவன நான் பார்த்து ரெண்டு மூணு நாளுக்கு மேல ஆச்சு இப்போ நீங்க போய் அவன் எதுவும் கோவத்துல உங்க கிட்ட பேசிட்டாங்க அது நல்லா இருக்காது எனக்கு பொறுக்கிட்டு பொறுத்துக்கோங்க நாளைக்கு காலைல என் மகன் உங்க பொண்ணு பக்கத்துல தாலி கட்டுற வரைக்கும் பொறுமையா இருங்க மத்தத அப்புறம் பாத்துக்கலாம் என்றார்.

உடனே குரு கஜேந்திரனை பார்த்து உங்களையே உங்க மகன் இன்னும் பார்க்க ஒத்துக்கொள்ளலைன்னு சொல்றீங்க அப்புறம் எப்படி நாளைக்கு கல்யாணம் என எதுவும் கேட்க.

என் மகன் நான் சொன்னா மறுக்காம எதையும் செய்யறவன் அதனால நாளைக்கு கண்டிப்பா இந்த கல்யாணம் நடக்கும் நீங்க  கவலைப் படாதீங்க என்றார் கஜேந்திரன்.

வரம் அவரிடம் விடை பெற்று விட்டு பரமனும் குருவும் வீட்டில் இருக்கும் சாந்தாபையும் ரியாவையும் எப்படி சமாளிப்பது என யோசித்தபடி கிளம்பினர்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured