Home Uncategorizedஎன்னை கொண்டாட பிறந்தவனே 19

என்னை கொண்டாட பிறந்தவனே 19

by Layas Tamil Novel
329 views

EPISODE 19

இரவு போதையில் நடந்தது எதுவும் தெரியாமல் காலை விடியும் வேளையில் கண்விழித்த விஜய் தான் நடு ஹாலில் அதுவும் தரையில் படுத்து உறங்கி இருப்பதை பார்த்து குழப்பமாக எழுந்தவன் . தான் நேற்று அணிந்த ஆடையையே அணிந்தபடி இருப்பதை கவனித்தவன் .

“இப்படியேவா நைட் முழுக்க தூங்கி இருக்கேன். அதுவும் ஹாலில் எப்படி வந்து படுத்தேன் ” என்று குழப்பத்தோடு நிமிர்ந்து பார்த்தவன் அப்போதுதான் இனியாவும் ஹாலில் அமர்ந்தபடி உறங்கிக்கொண்டு இருப்பதை கவனித்தான்.

உடனே தரையில் இருந்து எழுந்தவன் தன் கசங்கிய உடையை பார்த்து இவ்வளவு மோசமா என் டிரஸ் எல்லாம் கசங்கி இருக்கு . ச்சே… இனிமேல் குடிக்கவே கூடாது ” என்று தலையை பிடித்துக்கொண்டு நின்றவன் . தன்னை நிதானித்துக்கொண்டு தலைவலியை சமாளித்துக்கொண்டு இனியாவிடம் வந்தவன்

“இனியா!! இனியா!! ” என்று அவள் தோளை தொட்டு உலுக்கி எழுப்பினான்.

அடிபட்ட காலில் ஏற்பட்ட வலியோடு சோபாவில் சாய்ந்துகொண்டு இரவு முழுவதும் உறங்கி இருந்த இனியா விஜய்யின் குரலில் கண்விழித்தவள் .

தன் முகத்திற்கு மிக அருகில் விஜய்யின் முகத்தை பார்த்ததும் பயந்துபோனவள் அவசர அவசரமாக எழுந்தாள்.

அவள் தன்னை பார்த்து பதட்டத்துடன் எழுந்து நிற்பதை பார்த்தவன் .”இனியா பதட்டப்படாதே நான் தான் ” என்று அவளை சமாதானம் செய்தான் .

“சார்.. என்ன… என்ன வேணும்.” என்று இரவு நடந்ததெல்லாம் நினைவு வந்தவளாக விஜய்யை கண்டு பயந்துகொண்டே கேட்டாள்.

“ஒன்னும் இல்ல இனியா . நீ தரையில் உக்காந்து தூங்கிட்டு இருந்த … நானும் இங்கே கீழே தரையில் படுத்து இருந்தேன். அதான் உன்னை எழுப்பி கேட்டா எதுவும் சொல்லவியோன்னு நினைச்சு உன்னை எழுப்பினேன் ” என்றான் மிகவும் சாதாரணமாக பேசிக்கொண்டே அவள் அருகில் நெருங்கி வந்தான்.

விஜய் இனியா அருகில் வருவதை பார்த்து பயந்து போனவள் பின்னால் நகர போக… அப்போது தான் அவள் காலில் அடிபட்டது நினைவு வர… அவள் காலை நடப்பதற்காக ஊன்றியதில் வலித்த இடத்திலேயே மீண்டும் வலி ஏற்பட… “ஐயோ!! அம்மா…. ” என்று இனியா அலறிவிட்டாள் .

அவள் காலை பிடித்துக் கொண்டு வலியில் அலறுவதை பார்த்து விஜய்க்கு ஒன்றும் புரியவில்லை. ஏற்கனவே இரவு அருந்திய மதுவின் வீரியத்தால் தான் எதுவோ தவறு விளைவித்ததுவிட்டோமே.. என்று யோசனையோடு நின்று இருந்தவன் இனியா வேறு காலை பிடித்துக்கொண்டு வலியுடன் கத்துவதை பார்த்தவன் . அவள் அருகில் வேகமாக வந்தவன் இனியாவின் கையை பிடித்து சோபாவில் அமர வைத்தவன் .

“இனியா என்ன ஆச்சு ? ஏன் இப்படி கத்துற… எதுவும் அடி பட்டிருச்சா? ” என்று குனிந்து அவள் கைவைத்து அழுத்திக்கொண்டு இருந்த இடத்தை பார்த்தான்.

“என்ன இனியா நான் கேட்டுட்டு இருக்கேன். என்ன ஆச்சு உனக்கு . உன் காலில் எதுவும் அடிப்படிருச்சா… ” என்று அவளை பார்த்தவன் .

அப்போதுதான் இனியாவின் உடை ஆங்காங்கே கிழிந்து இருப்பதையும்  அவள் ஆடை களைந்து இருப்பதையும் கவனித்ததவன் ” என்ன ஆச்சு இனியா உனக்கு. ஏன் உன் டிரஸ் எல்லாம் கலைஞ்சு … கிழிஞ்சு போய் இருக்கு… ” என்றான் புரியாமல்.

அதை கவனித்த இனியா “என்ன விஜய் சார் நைட் நடந்தது எதுவும் நியாபகம் இல்லாத மாதிரி என்கிட்டையே நேத்து நைட் என்ன நடந்துச்சுன்னு கேக்குறாரு. அப்போ அவருக்கு எதுவுமே நியாபகம் இல்லையா ?” என்று தனக்கு விஜய்யுடன் இரவு நேர்ந்ததை நினைத்து மிகவும் வேதனையோடு அவனை பார்த்தாள்.

அவளை கேள்வியாக பார்த்துக்கொண்டு நின்று இருந்த  விஜய் இனியாவின் இந்த குழப்பிய , பயந்துபோன முகத்தை கண்டு ” என்ன ஆச்சு இவளுக்கு. ஏன் என்னை பார்த்து பயந்து நிக்குறா.. ” என்று யோசித்தவன் .

“ஏன் இனியா என்னை பார்த்து இப்படி பயப்படுற… என்ன ஆச்சு உனக்கு” என்று அவளை பார்த்தான்.

” நீங்க பண்ணின காரியத்துக்கு உங்களை பார்த்து பயப்படாம என்ன வேற என்ன சொல்றிங்க…” என்றாள் கண்களில் இப்பவோ… அப்பவோ… என்று வெளி வர காத்திருக்கும் கண்ணீரோடு அவனிடம் கேட்டாள்.

“என்ன .. என்ன இனியா சொல்றே.. நான்… நேத்து…. ” என்று மீண்டும் குழம்பியவன் சற்று நேரம் யோசித்தபடியே இனியாவை பார்த்தான்.

அவன் முன்பு குருவிக்குஞ்சு பயந்து நடுங்குவதை போல நின்று அவனையே பார்த்துக்கொண்டு இருந்த இனியாவை குழப்பத்தோடு பார்த்தவன் .

“இனியா தயவு செய்து நேத்து என்ன நடந்துச்சுன்னு சொல்லு… நீ இப்படி தயங்கி தயங்கி பேசுறதை பார்த்தா எனக்கு பயமா இருக்கு ” என்றான்.

அவன் பேசியது கேட்டும் இனியா அமைதியாக அவனையே வெறித்தபடி நின்று இருந்தாள் .

“ஐயோ! இனியா ! தயவு செய்து உன் வாயை திறந்து நேத்து நைட் என்ன நடந்துச்சுன்னு சொல்லு… நீ அமைதியா இருக்கறதை பார்த்தா எனக்கு ரொம்ப பயமா இருக்கு . நேத்து நைட் நான் அளவுக்கு அதிகமா குடிச்சுட்டேன் . குடிச்சிட்டு வந்து நான் எதுவும் உன்னை திட்டிட்டேனா ?” என்று அவளை பார்த்தான்.

“ம்கூம்.. திட்டி இருந்தா கூட பரவாயில்லையே… ” என்று தன் உதட்டை சுளித்தாள் .

“என்ன இனியா சொல்லு.. குடிபோதையில் உன்னை அடிச்சிட்டேனா?  என்ன ஆச்சுன்னு சொல்லு இனியா … உன் காலில் வேற அடிபட்டிருக்கு . நேத்து நைட் என்னவோ ஆகியிருக்கு  என்கிட்டே எதையோ சொல்லாம மறைக்குற  நீ ” என்று அவளை சந்தேக பார்வை பார்த்தான்.

“அடிகுறதா.. என்னை கடிக்குறதும் , புடிக்கிறதும் , என்னக்கு முத்தம் கொடுக்குறதுமா இல்ல இருந்தாரு இவரு. என்  வாயை திறந்து என்னை கொஞ்சமாவது பேச ட்ரை பண்ண விட்டிருக்கலாம் . அதை எல்லாம் விட்டுட்டு நேத்து  இவரு பண்ணின காரியத்துக்கு இவரை எதுவும் செய்யாம சும்மா விட்டு வெச்சிருக்கேன் ” என்று வாய்க்குள் முனகினாள் .

“என்ன இனியா என்ன சொன்ன… எனக்கு எதுமே சரியா கேட்கல… என்று அவள் அருகில் கால்களை மடக்கி அவள் அருகில் செல்ல… விஜய் அருகில் வரவும் இனியாவிற்கு படபடப்பு அதிகமானது .

தன்னை இந்த நிலைக்கு ஆளாகியவனை பார்த்து தனக்கு கோபமோ… வெறுப்போ அழுகையோ வராமல் இருப்பதை நினைத்து அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது . விஜய்யின் நெருக்கம் நேற்று இரவு அவனுடன் ஒன்றாக இருட்னஹ்தி நினைவு படுத்த …

“சார் வராதீங்க… ” என்று கையை நீட்டி அவனை தடுத்தாள் இனியா .

“என்ன ஆச்சு இனியா ஏன் இப்படி நடந்துக்குறே… ” என்று அவள் அருகில் வர…

இனியா வேகமாக விஜய்யை விட்டு விலகி இரண்டடி பின்னால் செல்ல… அடிபட்ட கால் விண்ணென்று வலி எடுத்து அந்த வலி அவள் உச்சந்தலை வரை பரவியது. வலி தாங்காமல் “அம்மா!! ” என்று அலறிக்கொண்டே தரையில் பொத்தென அமர்ந்தாள்.

அவள் வலியில் துடிப்பதை பார்த்துக்கொண்டு விஜய்யால் சும்மா நிறைக்க முடியவில்லை. வேகமாக கீழே விழுந்தவளிடம் வந்தவன் . அவள் அருகில் அமர்ந்து இனியாவின் காலை பிடித்து தூக்கி தன் தொடை மேல் வைத்து ஆராய ஆரம்பித்தான்.

“சார் என்ன பண்றீங்க… விடுங்க… ” என்று அவன் மடியில் இருந்த தன் காலை பின்னால் இழுத்தாள் .

“ம்ச்… கொஞ்சம் அமைதியா இருக்கியா .. நீ ஏன் வலியில் கத்தினேன்னு நான் தெரிஞ்சுக்க வேண்டாமா ? நான் கேட்டதுக்கு நீ பதிலும் சொல்ல மாட்டேங்குற… நானாவது பார்த்து தெரிஞ்சுக்கிறேன் ” என்று தன் மடிமீது இருந்த இனியாவின் காலை பார்த்தான்.

அவள் வலது கால் நன்றாக வீங்கி சிவந்து போய் இருந்தது .

“இனியா! என்ன இது ? என்ன ஆச்சு உன் காலுக்கு . ஏன் இப்படி வீங்கி இருக்கு ” என்றான் விஜய் .

அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் தலையை குனிந்து கொண்டே “டேபிளில் இடிச்சுக்கிட்டேன் ” என்றாள் .

“எப்படி? எங்கே ? இடிச்சுக்கிட்டே.. எப்போ உன் காலில் அடிபட்டது ” என்றான் அவள் காலை முன்னும் பின்னும் அசைத்து பார்த்து .

“ஷ்… ஆ… சார்…  வலிக்குது ” என்று வலியில் முகம் சுளித்தபடி விஜய்யை பார்க்க…

அவனும் அவள் முகம் சுணங்கியதை பார்த்து பரிதப்பட்டவன் “சாரி இனியா ” என்றவன் . அவள் காலை மெதுவாக கீழே வைத்தவன்.

குனிந்து அவளை தூக்க போனான்.

அதை பார்த்ததும் பதறிய இனியா “சார்… சார்… என்ன பண்றீங்க… எனக்கு கால் ஒன்னும் உடைஞ்சு போகலை. லேசா அடி தான் பட்டிருக்கு. நானே எழுந்துப்பேன் ” என்று அவன் கையை தட்டிவிட்டாள்.

“இல்ல இனியா உன்னோட கால் ரொம்ப வீங்கி இருக்கு.. எவ்ளோ நேரம் நீ இப்படி வீங்கின காலோட இருந்தேன்னு  வேற தெரியலை. வா நம்ம முதல்ல ஹாஸ்பிடல் போகலாம் ” என்று மீண்டும் குனிந்து அவளை தூக்கப் போக…

“ஐயோ!! ஹாஸ்பிடலா நான் எங்கையும் வரல.. எனக்கு ஒன்னும் இல்லை கொஞ்சம் சூடுதண்ணி ஒத்தடம் கொடுத்தா சரி ஆகிடும்” என்றவள் தன்னை தூக்கி வந்தவன் கையை தட்டிவிட்டு தரையில் கையை ஊன்றி அருகில் இருந்து மேஜையை பிடித்துக்கொண்டு மேலே எழுந்து நின்றவள் மெல்ல காலை ஊன்றி அவள் அறைக்கு செல்ல முயற்சித்தாள் .

இரண்டு அடி கூட எடுத்து வைத்திருக்க மாட்டாள். கால் வலி உயிர் போனது . அந்த வலியை பல்லைக்கடித்துக்கொண்டு பொறுத்தவள் . அடிபட்ட காலை லேசாக ஊன்றி ஒன்றி நடந்தாள்.

கண்களில் இனியாவிற்கு கண்ணீரே வந்துவிட்டது அந்த அளவுக்கு அவள் கால் வலித்தது.

தன் உதட்டை கடித்துக்கொண்டு பொறுத்தவள் அடுத்த அடி எடுத்து வைக்க போக… அவள் நடக்க சிரமப்படுவதை பார்த்து பொறுக்க முடியாமல் வேகமாக அவள் பின்னால் வந்த விஜய் அடுத்த நொடி இனியாவை தன் கைகளில் ஏந்தி இருந்தான்.

திடீர் என்று காற்றில் மிதப்பது போன்று உணர்ந்தவள் தன் முகத்தருகே இருந்த விஜய்யின் முகத்தை பார்த்தவள் கண்களை அகல விரித்தாள்.

அதை சட்டை செய்யாத விஜய் இனியாவை தூக்கிக்கொண்டு அவள் அறைக்குள் வந்தவன் . அவளை மெல்ல மெத்தையில் அமர வைத்துவிட்டு “அப்படி என்ன உனக்கு வந்துச்சு. உன்னால தான் ஒரு அடி கூட எடுத்து வெக்க முடியலையே… அப்பறோம் என்ன வீம்பு உனக்கு ” என்று அவளை முறைத்தவன் தன் பாண்ட் பாக்கெட்டில் இருந்து போனை எடுத்து தன் குடும்ப டாக்டருக்கு அழைத்து வெறுமனே காலில் அடிபட்ட விபரம் சொல்லி அவரை தன் கெஸ்ட் ஹௌஸிற்கு வர சொன்னான்.

“சாரி விஜய் நான் ஒரு கானபெரென்ஸ் விஷயமா புனே வந்திருக்கேன் . எப்படியும் நான் வர ரெண்டு நாள் ஆகிடுமே ” என்றார்.

” சரி அங்கிள் நீங்க முடிச்சிட்டு பொறுமையாவே வாங்க . நான் உங்க ஹோச்பிடலுகு போய்க்கிறேன் ” என்றான் விஜய் .

“சரிப்பா… ” என்றவர் .

“ஆமா விஜய் காயம் யாருக்கு ஆகி இருக்கு ” என்றார்.

“அது… வந்து அங்கிள்… ” என்று தயங்கியவன் . என்னோட வீட்ல வேலை பாக்குற ஒரு பொண்ணுக்கு கால்ல அடிபட்டு வீங்கி இருக்கு. மத்த சேர்வேன்ட்ஸ் யாரும் இன்னும் வரல… ரொம்ப நேரம் வலியோடவே இருந்திருப்பா போல… நான் இப்போதான் கவனிச்சேன். அதான் உடனே உங்களுக்கு கால் பண்ணினேன் ” என்று பொய் சொல்லி சமாளித்தான்.

” சரிப்பா… நான் என் ஜூனியர்க்கு இன்போர்ம் பண்ணிட்றேன் ” என்று போனை வைத்தார்.

ஒரு இரவில் அவளை முழுவதுமாக எடுத்துக்கொண்டவன் . இப்படி தன்னை வேலையாள் என்று சொன்னதில் அவள் மனம் கனத்தது. அவன் மனதில் தன்னை எந்த இடத்தில் வைத்திருக்கிறான் என்று இனியா புரிந்து கொண்டாள். அவனால் தன்னை வேலையாளாக பார்க்க முடிந்த அளவுக்கு இனியாவாள் விஜய்யை ஒரு முதலாளி ஸ்த்தானத்தில் வைத்து பார்க்க முடியவில்லை. அதுவும் நேற்று நடந்த சம்பவத்திற்கு பின் அவனை எந்த இடத்தில தன மனதில் வைத்துக்கொள்வது என்று தெரியாமல் குழம்பி தவித்துக்கொண்டு இருக்கிறாள்.

“இனியா வா நம்ம ஹாஸ்பிடல் போயிடு வந்துடலாம் . நேரம் ஆக ஆக உங்கள் வீக்கம் அதிகம் ஆகிட்டு இருக்கு ” என்று அவளை தூக்கப் போனான்.

“சார் சும்மா சும்மா என்னை தூக்காதிங்க… எனக்கு இப்போ கொஞ்சம் வலி பரவாயில்லை. நானே நடந்து வரேன் ” என்று மெதுவாக கட்டிலைவிட்டு கீழே இறங்கினாள்.

“ஆர் யூ சியூர்..” என்று கேள்வியாக விஜய் அவளை பார்த்தான்.

“ஒன்னும் ப்ரொபெல்லம் இல்லை சார் நான் நடந்து வரேன் . நீங்க முன்னாடி போங்க” என்று அவனை அனுப்பிவிட்டு  மெல்ல நடந்துவந்துவள் காரில் ஏறிக்கொள்ள… விஜய் ஹாஸ்பிடல் கிளம்பினான்.

இங்கே வீரா , அதிதி இருவரும் வம்சிக்கும், தாமரைக்கும் சர்ப்ரைஸ் தருகிறேன் என்று சொல்லி அவர்களை வர சொன்னார்கள்.

தங்கள் அறையில் இருந்த இருவரும் ஹாலிற்கு வர…

“வா மருமகளே!… என் மகனை கல்யாணம் செய்துட்டு வந்ததில் இருந்து நீ ரூமைவிட்டே வெளியே வர மாட்டேங்குற… இவன் என்னடான்னா விஜய்யோட சேர்ந்து ஆபீசுக்கும் போகாம… உன்கூட நேரமும் செலவழிக்காம எங்கே தான் போறான்னு தெரியல…” என்றவர் .

“உங்க ரெண்டு பேருக்கும் திடீர்னு கல்யாணம் நடந்திருச்சு. ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பேசிப் புரிஞ்சுக்க கூட நேரம் கிடைக்கல.. இவனும் வீட்டுலையே இருக்குறது இல்லை. இப்படி இருந்தா எப்படி நீங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்குறது . எப்போ உங்க வாழ்க்கையை வாழ ஆரம்பிக்குறது . அதனால  தான் நானும் உன் அத்தையும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்திருக்கிறோம் ” என்று தன அருகில் நின்று இருந்த அதிதியை பார்த்தார்.

வீரா பேசியதை கேட்டு இருவரும் ஒன்றும் புரியாமல் விழித்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள…

“என்ன ரெண்டு பேரும் இப்படி முழிக்குறிங்க… நாங்க என்ன முடிவு எடுத்திருக்கிறோம்னு  தானே யோசிக்குறீங்க… ” என்றவர் இருவரின் முகத்தை பார்த்து தான் எடுத்த முடிவு பற்றி சொல்ல…

வீரா பேசப் பேச வம்சி, தாமரை இருவரின் முகமும் வெளிறிப்போனது . இருவரும் உறைந்து போய் அதிதியையும் , வீராவையும் பார்த்தனர்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured