Home Uncategorizedஎன் பொண்டாட்டி நீ தான்டி! 6

என் பொண்டாட்டி நீ தான்டி! 6

by Layas Tamil Novel
729 views

EPISODE 6

“இங்க வா ” என்று இதழை அழைத்தார் .

அவள் என்ன செய்வது என்று தெரியாமல் பயந்துகொண்டே ராஜனை பார்க்க… “அட என்னை ஏன் பாக்குற அண்ணி தானே கூப்பிட்றாங்க போ ” என்று அவளை முன்னாள் தள்ளினான் .

“இங்க வா ம்மா…  ” என்று அவளை கைபிடித்து அழைத்து சென்று தேன்மொழி .

“உங்க பொண்ணு ஏதோ தெரியாம இப்படி ஒரு காரியத்தை பண்ணிட்டா . பாவோம் சின்ன பொண்ணு இல்ல என்ன செய்றதுன்னு தெரியாம செய்திட்டா. நீங்க பெரியவங்க பெரிய மனசு பண்ணி மன்னிச்சு அவளையும் , இந்த கல்யாணத்தையும் ஏத்துக்கோங்க ” என்று பக்குவமாக பேசினார் தேன்மொழி .

அவரை பார்த்த குமரன் ” எப்போ எங்ககிட்ட இருந்து உண்மையை மறைச்சு நாடகம் ஆடினேனு இவ சொன்னாலோ அப்போவே எங்க குடும்பத்துக்கும், இவளுக்கும் இடையில் இருக்குற உறவு அறுந்து போய்டுச்சு . இனிமேல் இவ என் பொண்ணே இல்லை ” என்றார் குமரன் .

“அப்பா!! ” என்று இதழ் கதறலோடு அவரை அழைக்க …

“மாமா ! அவசர பட்டு வார்த்தையை விடாதீங்க . இப்படி எல்லாம் சொல்லாதீங்க என்ன இருந்தாலும் அவ நம்ம பொண்ணு ” என்று சகுந்தலா இதழுக்கு சப்போர்ட்டாக பேச வர …

“ஏய் நீ சும்மா இரு . அவ தான் தெளிவா சொல்லிட்டா இல்ல அந்த அல்லக்கையை தான் பிடிச்சிருக்குன்னு . அப்பறோம் என்ன அவளுக்கு பரிஞ்சு பேசிட்டு வர…” என்று இதழ்யாவின் அண்ணன் செல்வம் சகுந்தலாவை பேசவிடாமல் செய்தார் .

“டேய் என் பொண்ணு பாவோம் டா ” என்று இதழ்யாவின் அம்மா பேச வர…

“வாணி !” என்று குமரனின் அதட்டல் குரலில் அவர் அப்படியே நின்றுவிட..

“இங்க பாருங்க இனி என் குடும்பத்துக்கும் இவளுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல.. இனிமேல் இவளை பத்தி எங்க கிட்டே பேச எதுவும் இல்லை ” என்றவர் அங்கிருந்து கிளம்பிவிட…

வாணி இதழ்யாவை பார்த்துவிட்டு தன்னால் எதுவும் செய்யமுடியாத நிலையில் அங்கிருந்து கிளம்ப…

“இன்னும் என்ன இங்கயே நின்னுட்டு இருக்க … வீட்டுக்கு வரப்போறியா இல்ல இவைகூட இங்கையே இருந்துகிறயா ” என்று செல்வத்தின் அதட்டலில் சகுந்தலாவும் அங்கிருந்து கிளம்பி இருந்தார் .

இப்படி ஒரு நாளில் தன் குடும்பத்திடம் இருந்த பந்தத்தை ஒட்டுமொத்தமாக அறுத்துவிட்டவனை ஆத்திரத்தோடு பார்த்தாள் இதழ்யா .

“கொஞ்ச நாள் போகட்டும் ம்மா… சீகிரியாமே ரெண்டு பெரும் ஒரு குழந்தையை பெத்து உன்வீட்டு ஆளுங்க கண்ணுல காட்டினா போதும். தானாவே அவங்க உன்னையும், இவனையும் ஏத்துப்பாங்க ” என்றார் தேன்மொழி .

“இவனை எதுக்காக என் வீட்டு ஆளுங்க ஏத்துக்கணும் . இவனுக்கும் என் குடும்பத்துக்கும் என்ன சம்மந்தம் . என் வாழ்க்கையை இப்படி நிம்மதி இல்லாம ஆகின இவன் நிம்மதியை நான் கெடுக்காம விடமாட்டேன். இவன்கிட்டே இருந்து நான் சீக்கிரமே தப்பிச்சு போகணும் ” என்று ராஜனை வெறுக்கும் பார்வை பார்க்க..

அவனோ எனக்கு என்ன என்பது போல வீட்டிற்குள் சென்றான் .

“நீ உள்ளே வா ம்மா… ” என்று இதழை கை பிடித்து உள்ளே அழைத்து சென்றார் தேன்மொழி.

இதழ் இடிந்து போன உள்ளத்தோடு ராஜனை முறைத்துக்கொண்டு உள்ளே வர … அவளை அப்போதே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வெறியோடு இதழை பார்த்துக்கொண்டு இருந்தார் சதாசிவம்.

“சரி தேனு அப்போ நாங்க கிளம்பறோம் எல்லாம் போட்டது போட்டது படி அப்படியே இருக்கு ” என்று தேன்மொழியின் அண்ணன்கள் மூவரும் கிளம்பினர்.

“என்ன வந்ததும் கிளம்புறேன்னு சொல்றிங்க ஒரு முக்கியமான வேலை இருக்கு . அதை முடிச்சு கொடுத்துட்டு அப்பறோம் ஊருக்கு போகலாம் ” என்றார் தேன்மொழி .

“என்ன முக்கியமான வேலை தேனு ” என்றார் தண்டபாணி .

“அண்ணா நானும் ivarum கல்யாணம் பண்ணிட்டு இந்த ooruku வந்த அப்போ நீங்க மூணு பெரும் தான் எங்களுக்கு வீடு பாத்ததுல இருந்து எல்லாமே செய்து கொடுத்திங்க . அதே போல ராஜனும் நம்ம வீடு பையன் . அவனுக்கு இன்னிக்கு தானே கல்யாணம் ஆகியிருக்கு . அவன் வாழ்க்கையை தொடங்கறதுக்கு நீங்க இருந்து எல்லாமே நல்லபடியா செய்து கொடுக்க வேண்டாமா ?” என்றார் தேன்மொழி .

“ஆமா அவன் என்னவோ அந்த பொண்ணு கூட குடித்தனம் பண்ணுற மாதிரி இல்ல பேசுறா இவ . ஏதோ நான் அவ மேல ஆசை பட்டுட்டேன்ன்னு எனக்காக பொய் கல்யாணம் பண்ணி இருக்கான் . நான் எப்போ இவளை ஆசை தீர அனுபவிச்சு போதும்னு தூக்கி வீசுறேனோ அப்போ வேணா அவளை கூட்டிட்டு போய் குடித்தனம் நடத்தட்டும் ” என்று உள்ளுக்குள் எப்போது இதழ்யாவை அனுபவிக்கலாம் என்று இறை தேடும் கழுகு போல அவளை எடுத்துக்கொள்ள … தன் ஆசையை அனுபவிக்க வேண்டும் என்று காத்துகொண்டு இருக்கும் சதாசிவம் தனக்குள் கணக்கு போட்டுக்கொண்டு  இருக்க …

‘ஏன் தேனு , அவன் என்ன நமக்கு ரத்த சொந்தமா . உன் புருசனுக்கு அல்லக்கையின்னு அந்த போலீஸ் வார்த்தைக்கு வார்த்தை சொல்லிட்டு போகும்போதே இந்த ஊர்ல இருக்கவங்க எல்லாம் இவனை எந்த இடத்துல அவெச்சிருக்கான்ன்கன்னு உனக்கு புரியலையா ? இவனுக்கு போய் எங்க மூணுபேரையும் முன்ன நின்னு எல்லாம் பண்ணிகொடுக்கணும்னு சொல்றியே மா ” என்றார் பாலு .

“அண்ணா மத்தவங்க என்ன வேணும்னாலும் பேசிட்டு போகட்டும் எனக்கு அது பத்தி எந்த கவலையும் இல்லை . ராஜன் என் புருசனுக்கு தம்பி மாதிரி அவரும் அவனை அப்படி தான் நடத்துறாரு . நீங்களே பாக்குறீங்க தானே என் புருஷன் அவனை எப்படி வெச்சிருக்காருனு . அவரோட எல்லா வேலையையும் இவன் தான் பாத்துகிறான் . அவருக்கு என்ன வேணுமோ அதை அவர் சொல்லமையே செய்து கொடுக்குறான் . அதுக்காக அவனை அல்லக்கையினு நீங்களும் சொல்லாதீங்க ” என்ற தேன்மொழி .

“ராஜன் நீ போய் மார்க்கெட்க்கு பக்கத்துல இருக்க நம்ம வீட்டை ஆளுங்களை வெச்சு சுத்தம் பண்ண சொல்லு ” என்றார் தேன்மொழி .

“எதுக்கு தேனு இப்போ அந்த வீட்டை கிளீன் பண்ண சொல்ற ?” என்றார் சதாசிவம் புரியாமல் .

“எங்க இனிமேல் ராஜன் இங்கே இருந்தா நல்லா இருக்காது . அவனுக்குன்னு ஒருத்தி இப்போ வந்தாச்சு .இனிமேல் அந்த கார் செட்டுக்கு பக்கத்துல இருக்க ரூம்ல இவங்களை தங்க வெக்கிறது நல்ல இருகத்திள்ள… அதுவும் இல்லாம இனிமேல் மார்க்கெட் கடை எல்லாம் அவன் தானே பாத்துக்க போறான் . அப்போ அவன் அங்கேயே இருந்தா தானே சரி வரும். இவன் அங்கே இருந்தா மார்க்கெட்டுல என்ன நடக்குதுன்னு எல்லாமே பாக்க சௌகரியமா இருக்கும் . அதுக்காக தான் ராஜனையும் , அவன் பொண்டாட்டியையும் அங்க குடிவெக்குறேன் ” என்றார் தேன்மொழி  .

“அதுக்கில்ல தேனு… ” என்று சதாசிவம் பேச வர… “இப்போ என்ன தான் செய்யணும்ங்குறீங்க நீங்க..  நான் சொல்றது உங்களுக்கு புரியுதா? இல்லையா?” என்று தேன்மொழி தன் குரலை உயர்த்த .

“என்ன மாப்பிள்ளை நீங்க… தங்கச்சி டென்ஷன் ஆனா அவ உடம்புக்கு நல்லது இல்லைன்னு தெரிஞ்சும் அவளை டென்ஷன் பண்ணுற மாதிரி பேசிட்டு இருக்கீங்க ” என்றார் கந்தன் .

“வந்துட்டான் தங்கச்சி … தொங்கச்சினு . இவனுங்க வேற  பாசமலருங்க… ச்சே… இவ அண்ணன் மட்டும் அரசியல்ல இல்லாம சாதாரண ஆளா இருந்திருந்தா இந்த நேரம் இவனுங்க சொல்றதை எல்லாம் நான் கேட்டுட்டு இருக்கணும்னு எனக்கு என்ன தலையெழுத்தா ” என்று புலம்பினார் சதாசிவம் .

“”இப்போ என்ன அவசரம்னு தான் கேட்டேன் மச்சான். நான் என்னிக்கு உங்க தங்கச்சி பேச்சுக்கு மறு பேச்சு பேசியிருக்கேன் ” என்று அதோடு தன் பேச்சாய் முடித்துக்கொள்ள ..

“டேய் என்ன டா இன்னும் இங்கையே நின்னுட்டு இருக்க… இன்னிக்கு வீட்டை சுத்தம் செய்து எதுவும் ரிப்பேரா  இருந்தா அதை சரி செய்து வை . நானும் உன் பொண்டாட்டியும் போய் வீட்டுக்கு வேணுங்குறதை வாங்கிட்டு வந்துடறோம் . 

நாளைக்கு காலையில் பால் காய்ச்சிடலாம். அதுக்கு பிறகு நீயும் உன் பொண்டாட்டியும் அந்த வீட்டுல உங்க வாழ்க்கையை ஆரம்பிங்க.. ” என்று தேன்மொழி சிரித்த்துக்கொண்டே கூற..

ராஜனுக்கு என்ன செய்வது என்று குழப்பத்தில் சதாசிவத்தை பார்க்க… “என்ன டா இன்னும் இங்கயே நிக்குற போ… போய் ஆகவேண்டிய வேலையை பாரு ” என்று அவனை தண்டபாணி விரட்ட..

ராஜன் திரும்பி சதாசிவத்தை பார்த்தான் .

“என்ன டா அதான் சின்ன மச்சான் சொல்லிட்டாரு இல்ல போ… வேலையை பாரு ” என்று ராஜனை அனுப்பிவைத்தார். மார்க்கெட்டில் அவர் திருட்டு வேலையை எல்லாம் செய்வதற்காக வாங்கி போட்டிருந்த வீட்டை இப்பொது ராஜனுக்கு தாரை வார்த்துக்கொடுத்திருந்த கடுப்பில்

இவ்வளவு நேரம் பேசியது எதுவும் இதழ்யாவின் காதில் விழவில்லை . ஆனால் கடைசியாக தேன்மொழி சொன்ன வார்த்தை மட்டும் அதை கேட்டதும் இவனுடன் தனக்கு வாழ்க்கையா ? அதை நினைத்து பார்க்கவே அவளால் முடியவில்லை .

அவனோடு தன் வாழ்க்கையை துவங்குவதா ? அதற்கு தான் செத்தே போய்விடலாம் என்று அழுதுகொண்டே அவனை பார்த்தவள் அடுத்த நிமிடம் அங்கிருந்த ஒரு அறைக்குள் சென்று கதவை தாழிட … அனைவர்க்கும் இன்றும் விளங்கவில்லை .

“டேய் என்ன டா ஆச்சு அழுதுட்டே போய் கதவை சாத்திட்டா ” என்று பதட்டமான தேன்மொழி “இதழ்யா … என்ன பண்ற… ”  என்று கதவருகே இருந்த ஜன்னலை திறந்து பார்க்க அவர் கண்முன்னாலேயே தன் கழுத்தில் சேலையை மாட்டி சேரில் இருந்து குதித்து தூக்கிட்டு தன் உயிரை மாய்த்துக்கொள்ள துணிந்துவிட்டிருந்தாள் .

அதை பார்த்ததும் “இதழ்யா !!! ” என்று அலறினார் தேன்மொழி அவரோடு சேர்த்து அந்த காட்சியை பார்த்த மற்றவர்களும் உறைந்து போயினர் . ஒருவனை தவிர வேற யாரு… ராஜன் தான் .

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured