News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

என் பொண்டாட்டி நீ தான்டி! 7

by Layas Tamil Novel
924 views
A+A-
Reset

EPISODE 7

“உனக்கு என்ன பைத்தியமா இப்படி ஒரு காரியத்தை எப்படிடி செய்ய உனக்கு மனசு வந்துச்சு . இவனை பத்தி கொஞ்சமாச்சும் நீ யோசிச்சு பார்த்தியா … ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சு தானே கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க. இப்படி கல்யாணம் ஆன அன்னிக்கே நீ செத்து போயிருந்தா அந்த பழி இவன் மேல வந்து விழும்னு கொஞ்சமாச்சும் உனக்கு தோணிச்சா ” என்று தூக்கு போட்டதில் பேசமுடியாமல் தண்டை வறண்டு இருமிக்கொண்டு இருந்தவளை திட்டிக்கொண்டு இருந்தார் தேன்மொழி .

“சொல்லு ம்மா இவனை பிடிச்சு தானே நீ கல்யாணம் செய்துக்க அவன்கூட வந்தே… நீ நினைச்சதும் நடந்திருச்சு , அப்பறோம் எதுக்கு இப்படி ஒரு முடிவை எடுக்க துணிஞ்ச ” என்று தண்டபாணி கேட்டார்.

அவளை சுற்றி இருந்தவர்களை எல்லாம் அழுது சிவந்திருந்த விழிகளில் பார்த்துக்கொண்டு இருந்தவள் அவர்களுக்கு பின்னால் இத்தனைக்கும் காரணமானவனை பார்த்தாள்  . இதழ்யாவை இந்த் முடிவு எடுக்க தூண்டி இருந்த ராஜன் மட்டும் ஓரமாக நின்று இங்கு நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தான் .

அவன் நிதானமாக நின்று இதழ்யாவையே பார்த்துக்கொண்டு இருக்க… அவனை பார்த்தவளுக்கு மேலும் கோபம் அதிகம் ஆனது .

“நான் என்ன பண்ணுவேன் . எனக்கு இதை விட்டா வேற வழி தெரியல. என் குடும்பம் மொத்தமும் என்னை வெறுத்தது ஒத்துக்கிட்டாங்க . இனி எனக்குன்னு யார் இருகாங்க  ” என்று மீண்டும் வெடித்து அழுதாள் .

அவள் அழுவதை பார்த்த தேன்மொழிக்கு இதழ்யாவின் மனநிலை பிரிந்தது. 20 வருடங்களாக வளர்த்த உறவு ரத்தமும் , சதையும் , பாசமுமாக ராணி போல தாங்கிய உறவுகள் ஒரு நாளில் இல்லாமல் போனது எவ்வளவு வலிக்கும் என்று அவருக்கும் தெரியும் தானே.

அவருக்கு மட்டுமல்ல பெண்ணாக பிறந்த எல்லோரின் நிலைமையும் இதுதானே மூன்று முடிச்சு … மூன்றே முடிச்சு நம் வாழ்க்கையை மொத்தமாக மாற்றிவிடும். அந்த மூன்று  முடிச்சிருக்கு பிறகு அவளுக்கு அமையப்போகும் வாழ்க்கை அந்த மூன்று முடிச்சிட்டவனின் கைகளில் தான் இருக்கிறது .

அவள் வாழ்க்கையை சிறந்ததாக அமைத்துக்கொடுப்பதும், அவளை ராணி போல பார்த்துக்கொள்வதிலும் , அவளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதிலும் இருக்கிறது , அதே போல அவள் வாழ்க்கையை வாழுமிடத்தை நரகமாக்குவதும், பாதாளத்தில் தள்ளுவதும் , புதைகுழியில் மாட்டவைப்பதும் கட்டியவன் கைகளில் இருக்கிறது .

இது ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் பொருந்தும் மகாலட்சுமியாய் , பத்திரகாளியாய் , அடங்காபிடாரியாய் அமைவதெல்லாம் அவனவன் முற்பிறவியில் செய்த புண்ணியங்களை பொறுத்தது .

பார்க்கலாம் ராஜனும், இதழ்யாவும் ஒருவருக்கொருவர் வரமா சாபமா என்று …

“உன்னோட நிலைமை புரியுது இதழ்யா . உன் வீட்டு ஆளுங்களுக்கும் உன் மேல கோபம் இருக்க தானே செய்யும். இவ்ளோ வருஷம் பெத்து வளர்த்த பொண்ணு சொல்லாம கொள்ளாம அவங்க சம்மதம் இல்லாம இப்படி திடீர்னு அவங்களுக்கு பரிட்சயம் இல்லாத ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கிட்டா அவங்களால் இதை சுலபமா எடுத்துக்க முடியுமா. விடு எல்லாம் போக போக சரி ஆகிடும் ” என்று அவளை சமாதானம் செய்ய முயன்றார் தேன்மொழி .

அப்படியும் இதழ்யா சமாதானம் ஆகாமல் அழுதுகொண்டு இருந்தாள்.

“ராஜன் அவ அழுதுட்டே இருக்கா நீ அவளை சமாதானம் செய்யாம என்ன டா வேடிக்கை பார்த்துட்டு இருக்க… கொஞ்ச நேரம் அவ கூட பேசிட்டு இரு. அவளை அழாம பாத்துக்கோ . நானும் இவரும் போய் மார்க்கெட் வீட்டுக்கு தேவையானதை வாங்கிக்கிறோம் . ” என்ற தேன்மொழி

“ஏங்க வாங்க நாம போயிட்டு வரலாம் ” என்று சதாசிவத்தை அழைத்தார்.

“இவ ஒருத்தி வந்துட்டா நல்லவ…” என்று நினைத்தவர் அதை காட்டிக்கொள்ளாமல் “ஏன் தேனு நம்ம போகணுமா ? நம்ம பசங்க இவ்ளோ பேர் இருக்காங்க அவங்களை போய் வாங்கிட்டு வர சொல்லிக்கலாமே ” என்றார் சதாசிவம் .

“நான் போடுறதை சாப்டுட்டு நான் சொல்ற வேலையை செய்றவன் இவன் .  என் எடுபுடிக்கு நான் எடுபுடி வேலை செய்யணுமா ? இவனுக்கு போய் நான் வேலை பார்க்கணுமா ? ” என்று ராஜனை ஒரு புழுவை போல பார்த்தார் .

“உங்க கிட்டே இருக்க ஆளுங்களை பணம் வசூல் பண்ணவும் , அடிதடி செய்துட்டு வரவும் தான் லாயக்கு. இவனுங்க அந்த வேலை செய்றதுக்கு தான் லாயக்கு . நீங்க வாங்க போகலாம் ” என்று தேன்மொழி முன்னே செல்ல வேறு வழி இல்லாமல் சதாசிவம் அவர் பின்னால் சென்றார் .

பாலுவும் தன் தம்பிகளை அழைத்துக்கொண்டு கட்சி ஆஃபீஸிற்கு சென்றார்.

அனைவரும் அங்கிருந்து வெளியேறிவிட ஹாலில் அழுது கொண்டு இருந்த இதழும், அவளையே வெறித்துக்கொண்டு ராஜனும் மட்டும் அங்கு இருந்தனர்.

அனைவரும் சென்றதும் வாசல் கதவை சுற்றிவிட்டு அவளிடம் நெருங்கி வந்தான். கதவு சாற்றும் சத்தம் கேட்டதும் நிமிர்ந்து பார்த்தவளுக்கு ராஜன் தன்னை நோக்கி நெருங்கி வருவதை பார்த்தாள்.

வேகமாக எழுந்தவள் “அங்கையே நில்லு … என்கிட்டே வராதே ” என்றாள்.

அதை காதிலேயே போட்டுக்கொள்ளாமல் இதழ்யாவை நெருங்கியவன் நொடியும் தாமதிக்காமல் அவளை கைபிடித்து தன் பக்கம் இழுத்தவன் அடுத்த நொடி அவள் இதழ்களில் முத்தமிட துவங்கி இருந்தான் .

இதை இதழ்யா சற்றும் எதிர்பார்க்கவில்லை . முதலில் அதிர்ந்தவள் பின்பு சுதாரித்துக்கொண்டு அவன் தோள்களில் பலம் கொண்ட மட்டும் அடிக்க ஆரம்பித்தாள்.

அதை கண்டுகொள்ளாதவன் இதழ்யாவின் இதழ்களை சுவைத்துக்கொண்டு இருக்க பாவம் அந்த சின்ன பெண்ணிற்கு அவன் முத்தத்தையும் , அவனையும் எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை . அவள் உடலில் உரசிக்கொண்டு அவன் உடல் அழுந்த அந்த பாரம் தாங்க முடியாமல் பின்னால் நகர்த்தவள் அப்படியே மெத்தையில் சரிய…

அவளோடு சேர்ந்து ராஜனும் அவளோடு  சரிந்தவன் தன் மொத்த உடலையும் இதழ்யாவின் மேல் அழுத்தியபடி தீவிரமாக முத்தமிட்டான்.

“ம்ம்…ம்ம்… ம்கூம்… ” என்று அவன் முத்தத்திற்கு எதிராக அவள் போராடி முனகிய சத்தம் அவளுக்கு மட்டுமே கேட்டது .

தன் முகத்தை இங்கும் அங்கும் கஷ்டப்பட்டு அசைத்தவள் ஒரு வழியாக அவன் உதட்டில் இருந்து தன் உதட்டை பிரித்துவிட்டு தன் மேல் படுத்திருந்தவனை  பார்த்து . ” ச்சி… உனக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா ? என்னை தூக்கிட்டு வந்து என் கழுத்துல தாலி கடினதும் இல்லாம … இப்படி எனக்கு முத்தம் கொடுக்குறியே உனக்கு வெட்கமா இல்ல ” என்றாள் .

“என் பொண்டாட்டிக்கு நான் முத்தம் கொடுக்குறேன் இதுல எனக்கு என்ன வெட்கம் வேண்டி இருக்கு… அப்படி பார்த்தா நான் உனக்கு முத்தம் கொடுக்கிறதை நினைச்சு நீ தான் வெட்கப்படணும் ” என்றவன் மீண்டும் குனிந்தது அவள் இதழில் முத்தமிட போக …

ராஜனின் மார்பில் கை வைத்து அவனை தடுத்தவள் . ” உனக்கு கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா ? ஏன் இப்படி என் வாழ்க்கையில விளையாடின. நான் உனக்கு என்ன செய்தேன். கொஞ்சமும் விருப்பம் இல்லாத என்னை இப்படி தூக்கிட்டு வந்து என்  கழுத்துல தாலி கட்டிட்டியே இது உனக்கு நியாயமா? உன்னை பார்த்தாலே எனக்கு பிடிக்கல ” என்று அருகில் இருந்த அவன் முகத்தை பார்த்து முகம் சுளித்தாள் .

“உனக்கு என்னை பிடிக்குதா ? பிடிக்கலையான்னு எந்த அவசியமும் எனக்கு இல்லை . எனக்கு உன்னை பார்த்ததும் பிடிச்சிருச்சு. முதல் தடவை உன்னை தூக்கிட்டு வந்த அப்போவே உன்னை அனுபவிக்கலாம்னு நினைச்சேன் . அந்த சமயம் பார்த்து என் அண்ணி வேற ஊர்ல இருந்து வந்துட்டாங்க. அவங்களை நம்பவைக்க எனக்கு வேற வழி தெரியல அதான் உன்னை காதலிக்குறதா பொய் சொன்னேன் ” என்றவன் அவள் மேல் இருந்து எழுந்தான் .

“அப்போ என்னை பொய் சொல்ல வெச்சதும் இல்லாம நீயும் என்னை காதலிக்குறதா பொய் சொல்லி இருக்க… அப்படித்தானே ” என்றாள்.

ஆமாம் என்று தலையை ஆட்டியபடி பாக்கெட்டில் இருந்த சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான்.

“நீ என்னை காதலிகளையே அப்பறோம் எதுக்காக என்னை தூக்கிட்டு வந்து என் கழுத்துல தாலி கட்டின … உன் அண்ணி மட்டும் அன்னிக்கு வராம இருந்திருந்தா நீ என்ன செய்திருப்ப ..” என்றாள் குழப்பமாக .

“முதல் முறை தூக்கிட்டு வந்த அப்போவே உன்னை அனுபவிச்சிட்டு விட்டுரலாம்னு நினைச்சேன், அதுக்குள்ள எங்க அண்ணி வந்து காரியம் கேட்டிருச்சு. ஆனா ரெண்டாவது முறை அதான் இன்னிக்கு உன்னை கல்யாண கோலத்துல பார்த்த பிறகு நீ ஒரு முறை அனுபவிச்சு தூக்கி போடுற ரகம் இல்ல… காலம் முழுக்க கிட்டே வெச்சு ரசிச்சு ரசிச்சு உன்னை அனுபவிக்கணும்னு எனக்கு தோணிச்சு ” என்று சிகரெட்டை பிடித்து சோபாவில் அமர்ந்து இருந்தவள் முகத்தில் குனிந்து ஊதியவன் .

“ஆனா நானே எதிர்பார்க்காத ஒன்னு உன் கழுத்துல தாலி கட்டினது தான். உன்னை கல்யாணம் பண்ணிக்குற நோக்கத்துலையே நான் இல்லை. அண்ணா மட்டும் உன்னை கல்யாணம் செய்துக்குற ஐடியா சொல்லாம இருந்திருந்தா . போலீஸ்காரனுங்ககிட்டே நான் வசமா மாட்டி இருப்பேன் ” என்றுவன் அவள் அருகில் நெருங்கி உரசிக்கொண்டு அமர்ந்தான் .

அவன் அமரவும் வெடுக்கென சோபாவில் இருந்து எழுந்தவள் “என்னை காதலிக்கவும் இல்ல , கல்யாணம் செய்துக்குற ஐடியாவும் இல்ல … இப்படி ஒரு பொண்ணோட வாழ்க்கையில் விளையாட உங்களுக்கு என்ன உரிமை இருக்கு . இப்படிப்பட்ட இரக்கமில்லாத ஒரு ஜென்மத்தோட நான் ஒரு நிமிஷம் கூட இருக்க மாட்டேன் ” என்று அங்கிருந்து வேகமாக கிளம்பினாள் இதழ்யா .

“எங்க போற பாப்பா… உன்னை அவ்ளோ லேசுல விடவா நான் உன்னை தூக்கிட்டு வந்தேன் ” என்றவன் திரும்பி செல்ல போன இதழ்யாவின் புடவை முந்தானையை பிடித்து இழுத்தான்.

அதில் அவள் புடவை மொத்தமும் கலந்து ராஜன் கையோடு வந்துவிட மற்றொரு கையாள் இதழ்யாவை பிடித்துக்கொண்டவன். “எப்படியோ இங்கே இருந்து போறதுன்னு முடிவு பண்ணிட்ட… அப்ப இதை பார்த்துட்டு போ… ” என்று கையில் இருந்த புடவையை தூர வீசியவன் தன் மொபைலை எடுத்து அதில் ஒரு விடீயோவை ஓட விட்டான்.

அந்த விடியோவை பார்த்த இதழ்யா திகைத்துப்போனாள் .

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.