News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

கூப்பிட்டா ரொம்ப தான் பண்ணுறீங்க.. மூர்க்கன் 40 

by Sinamika Writes
58 views
A+A-
Reset

மூர்க்கன் 40 

“மேடம் அது.. எனக்கே இப்போதான் தெரியும்” என்றாள் சற்று பதற்றத்தோடு.

“ஓஹோ! உனக்கு யாருமில்லேனு சொன்ன?” என்றாள் நக்கலாக.

“அது.. அது வந்து மேடம்.. “என்று ரம்யா தடுமாறியவள் ரக்ஷனாவின் பின்னால் நின்று இருந்த ராவணைப் பார்த்தாள்.

அவனோ தனக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்ற ரீதியில் எங்கோ பார்த்துக்கொண்டிருந்தான்.

அவனை ஏகத்துக்கும் மனதிற்குள் திட்டியவள் “மேடம் எனக்கும் என் வீட்ல இருக்கவங்களுக்கும் சண்டை . எனக்கு செஞ்ச செலவை எல்லாம் குத்திக் காட்டி பேசிட்டாங்க. அதனால எனக்கும் அவங்களுக்கும் சம்மந்தம் இல்லேனு சொல்லி வீட்டை விட்டு கிளம்பி வந்துட்டேன். நான் வெளியே வந்த சமயம் தான் உங்ககிட்டே வேளைக்கு சேர்ந்தேன். அவங்க மேல இருந்த கடுப்பில் தான் எனக்கு யாரும் இல்லேனு சொல்லிட்டேன் ” என்று பொய்யை அடுக்கினாள்.

பின்னால் இருந்த ராவனோ “ம்ம்.. சூப்பர்!.. ” என்று புருவம் உயர்த்தி ஜாடை செய்தேன்.

அவனை மூக்கு விடைக்க முறைத்தவள் ரக்ஷனா தன்னைப் பார்ப்பதை உணர்த்தவள் முகத்தை அப்பாவி போல வைத்துக்கொண்டாள் .

“சரி இப்போ சமாதானம் ஆகியாச்சா?” என்றாள்.

“ஆச்சு மேடம். என் அப்பாவும், அம்மாவும் திரும்ப திரும்ப போன் பண்ணி என்கிட்டே சாரி கேட்டாங்க. நானும் சரி போனா போகட்டும்னு மன்னிச்சு விட்டுட்டேன் ” என்றாள்.

“ரொம்ப தான் பெரிய மனசு டி உனக்கு ” என்று ராவண் நினைத்துக்கொண்டான்.

“சரி எப்போ கல்யாணம் ” என்றாள் ரக்ஷணா.

“வர வெள்ளிக்கிழமை  “என்றாள்.

“வெள்ளிக்கிழமையா?!” என்றாள் ஆச்சர்யமாக.

“ம்ம்.. ஆமா மேடம். நான் கல்யாணத்துக்கு ஓகே தான் சொன்னேன். இவங்க இவ்ளோ சீக்கிரம் மாப்பிள்ளையை பிக்ஸ் பண்ணுவாங்கன்னு நான் நினைக்கவே இல்ல.” என்றாள்.

“சரி உன்னை கட்டிக்கப்போறவர் என்ன பண்ணிட்டு இருக்கார் ?” என்றாள் தன் வயிற்றை தடவிக்கொண்டே பின்னால் இருந்த சேரில் போய் அமர்ந்தவள் இன்டெர்வியூ எடுப்பது போல கேள்விகளை கேட்க ஆரம்பித்து இருந்தாள்.

“அது அது.. எனக்கு தெரியல மேடம் ” என்றாள் கைகளை பிசைந்து கொண்டு ரம்யா.

“தெரியலையா? “என்று நக்கலாக சிரித்தாள் ரக்ஷணா.

“ம்ம்ம் ஆமா மேடம். மாப்பிளை யாரு? அவர் பேரு என்ன?  அவர் கருப்ப? சிவப்பா? , நெட்டையா? குட்டையா? எதுவுமே எனக்கு தெரியாது மேடம் ” என்றாள்.

“அப்பறோம் எப்படி நீ இந்த கல்யாணத்துக்கு ஓகே சொன்ன?” என்றாள் கேள்வியாக.

“என் அம்மா, அப்பா கண்டிப்பா எனக்கு நல்ல பையனா தான் பார்த்திருப்பாங்க. அதுவும் இல்லாம என் அத்தை பையன் தான் இந்த கல்யாண ஏற்பாட்டை பண்ணிருக்கார். அவர் பார்த்து யாரை காட்டினாலும் நான் கல்யாணம் பண்ணிக்குவேன் ” என்று ராவணை சுட்டிக் காட்டி பேசினாள்.

“பரவல்லையே அப்படி எல்லாம் உனக்கு சொந்தம் இருக்கா? கொடுத்து வெச்சவ தான் நீ.. ” என்று பெருமூச்சு விட்டவள். “எனக்கு அப்படி யாருமே இல்லையே. இருந்திருந்தா எனக்கும் நல்லது கேட்டது எல்லாம் பார்த்து செய்ய ஆள் இருந்திருக்கும்” என்று  தன் வயிற்றை தடவியபடி நினைத்தாள்.

“நிரைய சொந்தம் இருக்காங்க மேடம், அவங்களுக்கும் எங்க பேமிலிக்கும் ஒரு பிரச்சனை இவ்ளோ நாள் பிரிஞ்சிருந்தோம், இப்போ தான் என் கல்யாணத்துல எல்லாரும் ஒண்ணா சேர்ந்திருக்கோம் ” என்றாள்.

“ம்ம்ம் பரவால்ல ” என்றவள் “சரி எப்போ ஊருக்கு கிளம்பப்போற.. ” என்றாள்.

“நீங்க ஓகே சொன்னா இப்பவே கிளம்பிருவேன் மேடம் ” என்று தலையை கவிழ்த்து விழிகளை மட்டும் உயர்த்தி சொன்னாள்.

அவள் சொல்லும் தோரணையைக் கண்டு ரக்ஷணாவுக்கே சிரிப்பு வந்துவிட்டது. “மாப்பிள்ளை யாருன்னு கூட தெரியல.. ஆனா கல்யாணம் பண்ண அவ்ளோ ஆர்வம் உனக்கு.” என்றவள் “சரி கிளம்பு ஒரு மாசம் லீவு எடுத்துக்க.. உன்னோட வேலை எல்லாம் என்ன பெண்டிங் இருக்கு. நீ இதுவரை செய்துட்டு இருந்த வேலையை எல்லாம் விவேக்கிட்டே கொடுத்திரு ” என்றாள்.

“விவேக்கா? யாரு ரக்ஷனா அது? நான் இங்க வந்து ஒன் வீக் மேல ஆச்சு. ஆனா அப்படி ஒரு ஆளை நான் இதுவரை இங்க பார்த்ததே இல்லய்யே?” என்றான் கேள்வியாக.

“அச்சோ.. அவசரப்பட்டு உளறிட்டேனே.. இப்போ என்ன பண்றது ” என்று ரக்ஷணா விழிக்க..

“அது.. விவேக் வந்து மேமோட பெர்சனல் அசிட்டேன்ட அவர் எங்க மேமோட பிசினஸ் எல்லாம் எப்படி போகுது என்ன செய்யணும்னு பார்த்துக்குவார். இப்போ முக்கியமான வேலையா வெளியூர் போயிருக்கார். அதான் நீங்க அவரை எங்க ஆபீஸ்ல பாக்கல.. ” என்று ரக்ஷனாவுக்காக சமாளித்தாள்.

“அப்பாடா நல்ல வேலை ரம்யா என்னை இவன்கிட்டே இருந்து காப்பாத்திட்டே” என்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட ரக்ஷணா ராவணிடம் திரும்பி “நம்ம இன்னொரு ப்ராஞ்சுல அவன் வேலை பாக்குறான். ரொம்ப முக்கியமான வேலைன்னா மட்டும் தான் இங்க வருவான், ” என்றாள்.

“உனக்கு இன்னொரு பிரான்ச் இருக்கா ரக்ஷு.. என்கிட்டே சொல்லவே இல்ல.. ” என்றான் ராவண்.

“அச்சோ!.. மறுபடியும் உளறிக்கொண்டிட்டேனே.. ” என்று யோசித்தவள் ரம்யாவைப் பார்த்து கண்ஜாடை செய்தாள் எதையாவது சொல்லி சமாளிக்கும் படி .

அதை புரிந்து கொண்டவளோ.. “சார் நம்ம சப்ளை பண்ற மெடிசின்ஸ் எல்லாமே ரக்ஷணா மேமோட லேப்ல டெஸ்ட் பண்ணி அப்ரூவ் ஆனா தான் மார்க்கெட்டுக்கு போகும்” என்றாள்.

“மார்க்கெட்டா.. அது என்ன?” என்றான் ராவண் வேண்டுமென்றே .

“ஏதும் தெரியாத மாதிரி நல்லா நடிக்கிறிங்க மாமா ” என்று உள்ளுக்குள் அவனை மெச்சிக்கொண்டவள் “அது… மார்க்கெட் மீன்ஸ் மெடிசின்ஸ் சப்ளை பண்ற மார்க்கெட்டை தான் சொன்னேன் ” என்றவள் “அந்த லேப் முழுக்க விவேக் அப்பறோம் ரக்ஷணா கண்ட்ரோல்ல தான் இருக்கு., இவங்க என்ன மாதிரி மருந்து எங்க கொடுக்கணும்னு இவங்களுக்கு மேல இருக்க சார் தான் சொல்லணும். மேடம் இப்போ ப்ரெக்னெண்டா இருக்கறதுனால அங்க அடிக்கடி போக முடியாது . அதான் விவேக் அங்க இருந்து முழுசா பார்த்துகிறார்.”என்றால்.

“ஓஹோ!.. என்றவன் “ஆமா ரக்ஷணா தானே இதை எல்லாம் பார்த்துகிறா? அப்பறோம் அவளுக்கு மேல ஒரு சார்னு சொன்னியே அது யாரு?” என்று குடைந்தான்.

“இவனை ஆபீஸ்க்கு கூட்டி வந்தது தப்பாகிருச்சு.  எல்லாத்தையும் துருவி துருவி கேக்குறானே ராஸ்கல்  “என்று நினைத்தவள் “இவ்ளோ பெரிய பிசினெஸை என் ஒருத்தியால மட்டும் மைண்டைன் பண்ண முடியாது ராவண் . அதுக்கு இன்வெஸ்ட் பண்ண ஆள் வேணுமே.. அந்த இன்வெஸ்டர் தான் எனக்கு பாஸ். அவர் சொல்றதை மட்டும் தான் நான் செய்வேன். ” என்றாள்.

“அந்த பாஸ் யாருன்னு தான் எனக்குத் தெரியணும் ரக்ஷணா. அவன் பண்ணுற இந்த போதை மருந்து பிசினஸை மொத்தமா அழிக்கணும் . அவனையும் சேர்த்து ” என்று கருவிக்கொண்டவன் அதற்கு மேல் அதுவும் கேட்காமல் அமைதியாக இருந்துவிட..

அதுவே ரக்ஷனாவுக்கு பெருத்த நிம்மதியாக இருந்தது.

“சரி ரம்யா உன்னோட கல்யாணத்துக்கு எங்களுக்கு எல்லாம் அழைப்பு இல்லையா?” என்றாள்.

“மேம் உங்களை கூப்பிடாமலா.. திடீர்னு முடிவானதால எனக்கே எதுவும் புரியல. நான் ஊருக்கு போயிட்டு எல்லாம் பேசிட்டு உங்களுக்கு வாட்ஸாப்ப்ல லொகேஷன் சென்ட் பண்றேன் மேடம் நீங்க , சார் எல்லாரும் வந்திரனும் ” என்றவள் அவளிடம் விடை பெற்று அங்கிருந்து கிளம்பி இருந்தாள்.

ரம்யாவின் திருமணத்திற்கு தன் சார்பில் அவளுக்கு இரண்டு லட்சம் பணம் கொடுத்து அதை திருமண செலவுக்கு வைத்துக்கொள்ள சொன்னாள் ரக்ஷணா.

“ஐயோ ! மேடம் இவ்ளோ பெரிய அமௌன்ட் எல்லாம் வேணாம். ” என்று ரம்யா மறுக்க.

“இல்ல ரம்யா இருக்கட்டும் வெச்சுக்கோ.. சொந்தங்கள் எல்லாம் இருந்து அவங்களோட சேர்ந்து ஒரு விசேஷம் கொண்டாடுறது எல்லாம் எல்லாருக்கும் கொடுத்து வைக்காது . எனக்கு முன்ன மோகன் இருந்தான் , அவன் என்கூட இருந்தது எனக்கு பெரிய பலமா இருந்திச்சு, எப்போ அவன் என்னைவிட்டுப் போனானோ.. அப்போவே என்னோட இருந்த எல்லாமும் போன ஒரு பீல் இருக்கு எனக்கு  “என்று மோகனின் பிரிவை நினைத்து வருந்தியவள் ” உனக்கு அந்த கொடுப்பினை இருக்கு. அதுவுமில்லாம நீ இவ்ளோ வருஷமா என்கிட்டே விசுவாசமா இருந்ததுக்கு நான் உனக்கு எதுவுமே செய்ததில்லை. இதை அதுக்கானதா நினைச்சுக்க ” என்று அவள் கையில் பணத்தை திணித்து அனுப்பி வைத்தாள்.

ராவணுக்கு ரக்ஷனா பேசியதில்  இருந்து அவள் குடும்பத்துக்காக ஏங்குவது நன்றாகவே புரிந்தது அவனுக்கு. இருந்தும் என்ன செய்வது அவள் வாழ்க்கையை அவளே தான் கெடுத்துக்கொண்டாள். அவளுக்கென்ற ஒரு அழகான குடும்பத்தை உறவை உருவாக்கிக்கொள்ள தவறிவிட்டாள் என்று நினைத்துக்கொண்டான்.

நள்ளிரவை கடந்திருக்கும் ரக்ஷனா ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருக்க.. அவள் அருகே உறங்கிக்கொண்டிருந்த இளங்கிளியை ஒரு வலிமை நிறைந்த கரம் பூக்குவியலைப் போல அள்ளி அணைத்து தூக்கிக்கொண்டது.

உறக்கம் கலைந்தவளுக்கு அது ராவண் தான் என்று தெரிந்ததுமே மென்மையாக சிரித்தவள் திரும்பி அவன் கழுத்தில் தன் கைகளை மாலையாக கோர்த்துக் கொண்டு அவன் மார்பில் தலை சாய்ந்துக்கொண்டாள்.

இது இங்கு வந்ததில் இருந்து வாடிக்கையாக நடக்கும் ஒன்று தான். கர்ப்பமாக இருப்பதால் ரக்ஷணா தன்னையும் அறியாமல் உறங்கிவிடுவாள் அது இவர்கள் இருவருக்கும் சாதகமாகி விடுகிறது.

அவளை தூக்கிக்கொண்டு மெல்ல அந்த அறையை விட்டு வெளியே வந்தான் ராவண்.

இவர்கள் இருவரின் திருட்டுத்தனத்தை ரக்ஷணாவுக்கு காட்டிக் கொடுக்க வேண்டும் என்று காத்திருந்த அந்த நபர் ராவண் இளங்கிளியை தூக்கிக்கொண்டு மொட்டை மாடி செல்வதை தன் மொபைலில் படம் பிடித்துக்கொண்டிருந்தது.

அவர்கள் இருவரையும் படம் பிடித்துவிட்டு அந்த புகைப் படத்தைப் பார்த்து திருப்தி அடைந்த அந்த உருவம் “நாளைக்கு காலையில இவங்க ரெண்டு பேருக்கும் இருக்கு ” என்று நினைத்துக்கொண்டது.

இங்கே மாடிப்படி எறியபடி “என்ன டி தூக்கமா?” என்று அவள் காதில் மெல்ல பேசினான் ராவண்.

“ம்ஹும்.. இல்ல .. உங்களுக்காக தான் வெய்ட் பண்ணிட்டு இருக்கேன் ” என்று அவன் கழுத்து வளைவில் முத்தம் பதித்தாள் இளங்கிளி.

“தினமும் உனக்கு இதே வேலையாகிருச்சு. என்னையும் பழக்கி வெச்சுட்டு.. என் பசங்க ரெண்டு பேரும் கூட இல்லேன்னு , அவங்களுக்கு பதிலா தினமும் என்னை வாட்டி எடுக்குற டி.. ” என்றான் செல்லமாக.

“என் பசங்களுக்கு ரெண்டு வயசு வரைக்கும் நான் பால் கொடுக்க நினைச்சிருக்கேன். இப்படி திடீர்னு அவங்களை விட்டு வந்துட்டேன். எனக்கு தினமும் பால் கட்டிக்கிட்டு வலி எடுக்குது. அதை தினமும் வீணாக்க வேணாம்னு உங்கள கூப்பிட்டா ரொம்ப தான் பண்ணுறீங்க.. வேணம்னா போங்க.. ” என்று அவன் கையில் இருந்து துள்ளிக் குதித்து கீழ் இறங்க முயற்சித்தாள்.

“ஏய்! விழுந்துரப் போற.. ” என்று அவளை இறங்க விடாமல் பிடித்துக்கொண்டவன்.

“பின்ன என்னங்க . இதை அப்படியே விட்டுட்டா பால் கட்டி கொஞ்சம் கொஞ்சமா நின்னு போயிரும். அதனால தானே கூப்பிடறேன்.. “என்று வெட்கத்தோடு அவன் மார்பில் முகம் புதைத்துக்கொள்ள..

“அதுக்காக மட்டும் தானா ” என்றான் ராவண் ஏக்கமாக.

“ம்ஹும்.. இல்லையே.. ” என்று அவள் சிரிக்க..

மேலே மாடியில் இருக்கும் ஸ்டோர் ரூமை திறந்து கொண்டு உள்ளே சென்றவன் இளங்கிளியை கீழே இறக்கிவிட்டு கதவை மூடியவன் திரும்பி இளங்கிளியைப் பார்க்க..

அவளோ அங்கே இருந்த கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து அவனை நோக்கி இரு கைகளையும் நீட்டி அவளிடம் வரும்படி அழைத்தாள்.

அணிந்திருந்த டி ஷர்டை கழட்டி அருகே போட்டவன் முறுக்கேறிய தன் புஜங்களை அவளுக்கு காட்டியபடி அவளை நோக்கி ஆசையாக நெருங்கினான்.

அவளும் தன் சேலைத் தலைப்பை விளக்கிவிட்டு அவனை இழுத்து அணைத்தவள் அப்படியே கட்டிலில் சரிய.. ஈரம் படிந்த அவள் ரவிக்கையை பார்த்தவன் “என்ன டி இது இப்படி ஈரமாகிருக்கு ” என்றான்.

அவளும் வெட்கத்தோடு  சிரித்தவள் “எல்லாம் உங்களால தான் ” என்று சிரித்தவள் இங்க மட்டும் இல்ல.. என்று அவனை இழுத்து அணைத்து அவன் காதில் ரகசியம் பேச…

அதை கேட்டு சத்தமாக சிரித்தவன் “நீ ரொம்ப தேறிட்ட இப்போ.. ” என்று அவள் ஆடைகளுக்கு விடுதலை தந்த வந்த வேலையை செவ்வனே செய்யத் துவங்கினான்.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.