Home Uncategorizedஎன் பொண்டாட்டி நீ தான்டி! 8

என் பொண்டாட்டி நீ தான்டி! 8

by Layas Tamil Novel
770 views

EPISODE 8

ராஜன் காட்டிய வீடியோவில் இதழ்யாவின் மொத்த குடும்பமும் அவள்  வீட்டு ஹாலில் இடிந்து போய் அமர்ந்து இருந்தனர் . அவர்கலை எல்லாம் அந்த வீடியோவில் காட்டிவிட்டு அப்படியே அவர்களை தாண்டி ஹாலுக்கு ஒட்டி இருந்த ஜன்னலுக்கு அந்த வீடியோ ஜூம் போனது .

அங்கே கையில் ஆயுதங்களோடு சில ஆட்கள் அவர்கள் வீட்டிற்கு வெளியிலும், உள்ளேயும் யாருக்கும் தெரியாமல் பதுங்கி நின்று இருந்தனர். அவர்களை எல்லாம் பார்த்ததும் இதழ்யாவின் முகம் பயத்தில் வியர்த்து விட..

“என்ன பாப்பா இந்த விடியோவுக்கே இப்படி வேர்த்து கொட்டுது உன் முகம் ” என்றவன் அவள் சேலை தலைப்பை எடுத்து அவள் முகத்தை ஒற்றி எடுத்தவன்.

“உன்னை வியர்க்க வைக்க நான் வேற வழி எல்லாம் வெச்சிருக்கேன் சரியா ” என்று அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட..

“இ… இவங்க எல்லாம் உன்கூட இருக்க ஆளுங்க தானே… இவங்க எதுக்காக என் வீட்டுல இருக்காங்க ” என்றாள் பயந்துகொண்டே .

“பரவல்லையே அவனுங்களை பார்த்ததும் கண்டுபிடிச்சுட்ட… ம்ம்ஹும்… பார்த்தே இல்ல… எல்லாரும் உன் வீட்டை சுத்தி வளைச்சிருக்குறதை. என்னோட ஆளுங்க ஏற்பாடும் உன் வீட்டு ஆளுங்களை சுத்தி இனிமேல் இருக்க போறாங்க . நீ என்கிட்டே ஒழுங்கா நடந்துக்குற வரைக்கும், நான் என்ன சொன்னாலும் கேட்குற வரைக்கும் அவங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. நீ முரண்டு பிடிச்சா என் ஆளுங்க உன் வீட்டுக்குள்ள புகுந்து அங்க இருக்கவங்களை கொன்னு புதைச்சிடுவாங்க ” என்றான் இறுகிய குரலில்.

அவன் குரலில் இருந்த அதிகாரத்தையும், மிரட்டும் தோரணையையும் கண்டு அதிர்ந்தவள் பின்பு தன்னை தேற்றிக்கொண்டு தன்னை உரசிக்கொண்டு அமர்ந்து இருந்தவனை தள்ளிவிட்டு எழுந்தவள்

“இப்படி எல்லாம் சொன்னா நான் பயபதிருவேன்னு நினைக்குறியா … இது என்ன சினிமா , டிராமான்னு நினைக்குறியா நீ …” என்று அவனை முறைத்தவள் .

“இங்க பாரு என்னால எல்லாம் நீ சொல்றதை கேட்டுட்டு உன்கூட குப்பை கொட்ட முடியாது . after all நீ ஒரு அல்லக்கை , இந்த வீட்டுல போடுறதை சாப்பிட்டுட்டு காலம் தள்ளிட்டு இருக்க ரவுடி நீ… உனக்கு நான் வேணுமா ? உன் முகத்தை நீ ஒரு வாட்டியாச்சும் கண்ணாடியில பார்த்திருக்கியா ? உன் மூஞ்சியும், உன் கலரும் இப்படி ஒரு ஆளை நான் என் வாழ்நாளிலேயே பார்த்ததில்லை… இந்த மூஞ்சி கூட செல்லம் என்னால வாழ முடியாது . நீ பயமுறுத்தினா நான் பயப்படற ஆள் கிடையாது . இவ்வ்ளோ நேரம் நான் எதையும் சரியா யோசிக்காம விட்டுட்டேன். அதனால் தான் நீ சொன்னதை எல்லாம் கேட்டு என் வாழ்க்கையை நானே நாசம் பண்ணிட்டேன் . இனியும் என்னால் சும்மா இருக்க முடியாது . போறேன் … இப்பவே போறேன் நானே போய் உன்மேல போலீஸ்ல கம்பளைண்ட் கொடுத்து உன்னை உள்ளே தூக்கி வெக்கல … ” என்று அவன் முகத்திற்கு முன் கை நீட்டி அவனை எச்சரித்தவள் வாசல் கதவை திறக்கப் போக…

அப்போது யாரோ  வாசல் கதவை தட்டும் சத்தம் கேட்டது .

இதழ்யா அப்படியே நின்று விட… “அத்தை!! அத்தை… ” என்று ஒரு மழலையின் குரல் வெளியே இருந்து கேட்டது .

ஒரு கணம் அந்த குரல் கேட்டு இதழ்யா உறைந்து போய் நிற்க … அவள் பின்னால் எழுந்து   வந்தவன் “என்ன கூப்பிடறது காதுல விழலையா ? எங்கயோ கேட்ட குரல் மாதிரி இருக்கு இல்ல … யாருனு தெரியலையா ?” என்று அவளை கேட்டபடி வாசல் கதவை திறக்க 4 வயது சிறுமி ஒருத்தி கதவு திறந்ததும் உள்ளே நின்று இருந்த இதழ்யாவை பார்த்ததும் ஓடி வந்து “அத்தை… ” என்று அவள் கால்களை கட்டிக்கொண்டது .

சட்டென்று குனிந்து அந்த சிறுமியை வாரியணைத்தவள் “அஞ்சனா!! நீ எப்படி இங்க வந்த… உன்னை யார் இங்கே கூட்டிட்டு வந்தாங்க  ” என்று கேட்டுக்கொண்டே அவளை தூக்கியவள் வாசல் பக்கம் தன் வீட்டு ஆட்கள் யாரேனும் இருக்கிறார்களா என்று பார்த்தாள்.

“அங்க என்ன பாப்பா பாக்குற … உன் வீட்டு ஆளுங்க யாரும் இந்த குட்டியை கூட்டிட்டு வரல… என் ஆளுங்க தான் உன் அண்ணன் பொண்ணை இங்கே தூக்கிட்டு வந்தாங்க ” என்றான் .

அவன் சொன்னது கேட்டு பயந்து போனவள் அவள் அண்ணன் மகளை இருக்க கட்டிக்கொண்டு    “இவளை எதுக்காக இங்க தூக்கிட்டு வந்திங்க … ” என்றாள் அவனை பார்த்து .

“ம்ம்… நீதான் என்னவோ பெரிய இவளாட்டம் என் கூட வாழ முடியாது , போலீஸ் கிட்டே போறேன்னு சீன போட்ட… அதான் இந்த குட்டியை தூக்கிட்டு வர சொன்னேன். எங்கே இப்போ போ பாக்கலாம் போலிஸ்கிட்டே .. ” என்றவன் அவள் கையில் இருந்து அஞ்சனாவை வலுக்கட்டாயமாக பிரித்தவன் .

“டேய் குமாரு இந்த குட்டியை தூக்கிட்டு போய் மறைச்சு வெக்க சொன்னா தூக்கிட்டு நேர இவ கைல கொண்டு வந்து கொடுக்கிறிங்க… உங்களை எல்லாம் வேலைக்கு வெச்சு சோத்தை போட்டு என்ன டா பிரயோஜனம் இருக்கு .. புடிடா” என்று அஞ்சனாவை தூக்கி குமாரிடம் வீசினான்.

அஞ்சனாவை வீசியதை பார்த்து “ஐயோ! ” என்று அலறிக்கொண்டு குமாரிடம் ஓடியவள் அவன் கையில் இருந்து  குழந்தையை வாங்கிக்கொண்டு “எதுக்கு இப்படி எல்லாம் செயிரிங்க .. இந்த குழந்தை என்ன செய்துச்சு. ” என்று அழுதபடி ராஜனை பார்த்தாள் .

“டேய் சொல்லிட்டு இருக்கேன் நீ அவகிட்டயே இந்த குட்டிய கொடுத்துட்டு நிக்குற … உனக்கு ஒருவாட்டி சொன்னா புரியாது ” என்று குமாரை ஓங்கி அறைந்தான் .

அதை பார்த்ததும் அஞ்சனா பயத்தில் அழ ஆரம்பிக்க…

“இல்ல மெர்சலு…  அண்ணியை பார்க்க பாவமா இருந்துச்சு அதான் ” என்று அவன் கன்னத்தை தேய்த்துவிட்டுக்கொண்டு கூற..

“உங்க நொண்ணியை நான் பார்த்துகிறேன் . நீ முதல்ல இந்த குட்டியை வாங்கிட்டு நம்ம இடத்துக்கு கிளம்பு ” என்றவன் இதழ்யாவின் கையில் இருந்து குழந்தையை பிடுங்க போக..

“இல்ல… இல்ல.. நான் தர மாட்டேன்” என்று பின்னால் அஞ்சனாவை இறுக கட்டிக்கொண்டு பின்னால் நகர்ந்தாள்.

அவள் அழுவதை பார்க்க பிடிக்காமல் குமார் அங்கிருந்து சென்றுவிட…

“இங்க பாரு ஒழுங்கா நான் சொல்றதை கேட்டுட்டு என்கூட அமைதியா எந்த பிரச்னையும் பண்ணாம இருந்தேன்னா இந்த குட்டிக்கும், உன் வீடு ஆளுங்களுக்கு எதுவும் ஆகாது . அதை விட்டுட்டு என்கூட வாழ மாட்டேன் . போலீஸ்க்கு போறேன், என்னை பிடிக்கல என் மூஞ்சி சரி இல்ல முகரை சரி இல்லேன்னு சொல்லிட்டு இருக்கேன்னு வை… இப்போ உன் கண்ணு முன்னாடி உயிரோட தூக்கிட்டு வந்த குட்டியை இருக்க இடம் தெரியாம செஞ்சிருவேன் பாத்துக்கோ.. ” என்றவன் ஏதோ நியாபகம் வந்தவனாக .

“அப்பறோம் என்கூட வாழ பிடிக்காம கொஞ்ச நேரம் முன்னாடி தூக்கு போட போன பாரு . அந்த மாதிரி இன்னொரு வாட்டி செஞ்சு நீ செஞ்சு செத்து போய் என்கிட்டே இருந்து தப்பிச்சுடலா்மனு மட்டும் கனவுளையும் நினைக்காத . அப்படி க்கிப்படி நீ செத்துட்டா நான் உன் வீட்டு ஆளுங்களை ஒன்னும் செய்ய மாட்டேன்னு மட்டும் தப்பு கணக்கு போட்டடாத. நீ எப்படி செத்து போறியோ அதே போல மொத்த குடும்பத்தையும் சாகடிச்சிருவேன் ஜாக்கிரதை ” என்று கோபத்தின் உச்சத்தில் அவளை மிரட்டினான் 

அவன் குரலை உயர்த்தி இதழ்யாவை மிரட்டுவதை பார்த்த அஞ்சனா பயத்தில் அழ ஆரம்பிக்க … அவளை சமாதானம்  செய்யகே கூட தோன்றாமல் ராஜனின் பேச்சை கேட்டு உறைந்து போனாள் இதழ்யா . அவன் பேச்சும் , தோரணையும் கண்டவள் கண்டிப்பாக இவன் சொன்னதை செய்யக் கூடிய ஆள் தான் என்று நன்றாக புரிந்து கொண்டவள் .

“இல்ல… இல்ல… இல்ல…  இனிமேல் அந்த மாதிரி வார்த்தை என் வாயில் இருந்து வராது . நான் எந்த மாதிரியான தப்பான முடிவுக்கும் போக மாட்டேன். நீங்க என்ன சொன்னாலும் கேக்குறேன் . நீங்க சொல்றதை எல்லாம் செய்றேன். உங்க கூடவே இருக்கேன் ” என்றாள் அழுதுகொண்டே .

“ம்ம்ம்… இது நல்ல புள்ளைக்கு அழகு… ” என்றவன் அவள் கையில் இருந்த குழந்தையை வாங்க வர,…

” நான் தான் நீங்க சொல்றதை எல்லாம் செய்றேன்னு சொல்லிட்டேனே .. இவளை விட்டுடுங்க . பாவோம் அவ குழந்தை  ஏற்கனவே பயந்து போய் இருக்கா ” என்று அஞ்சனாவை ராஜனிடம் கொடுக்க மறுத்தாள் .

“அப்போ நீ சொன்னது போல இனிமேல் என்கிட்டே நடந்துப்ப அப்படி தானே … ” என்றான் .

அவள் ஆமாம் என்று தலையை வேகமாக ஆட்ட…

” நான் சொல்றதை எல்லாம் கேட்ப சரியா ” என்றான் .

“அ … ஆமா” என்றாள் .

“எனக்கு புடிச்சதெல்லாம் செய்த அப்படி தானே.. ” என்றான் அவளை மேலும் கீழும் பார்த்து .

“ம்ம்… செய்றேன் ” என்று ஈன ஸ்வரத்தில் வார்த்தைகளை கஷ்டப்பட்டு கூறினாள்

“என்ன சொன்ன எனக்கு காதுல சரியா விழல … ” என்று அவள் அருகில் வந்தான் .

“உங்களுக்கு ப்பு.. புடிச்சதெல்லாம் செய்றேன்னு சொன்னேன் ” என்றாள் சற்று சத்தமாக ,

“நம்பலாமா ?” என்றான் .

“ம்ம்… ” என்றாள்

“என்ன ம்ம்ம்… நீ பேசுறதை பார்த்தா ஏதோ விருப்பம் இல்லாம செய்யுற மாதிரி இல்ல இருக்கு… இது சரிப்படாது .. ” என்றவன்

” டேய் குமாரு இந்த குட்டியை தூக்கு ” என்றான் .

“இல்ல… இல்ல… என்னை நம்புங்க  நான் உண்மையா தான் சொல்றேன் . நீங்க சொல்றதை எல்லாம் கேக்குறேன் ” என்றால் பதற்றமாக .

“சரி அப்போ எங்கே எனக்கு ஒரு முத்தம் கொடு நீ சொல்றதை நான் நம்புறேன் ” என்று அவளிடம் நெருங்கினான் .

இதழ்யா தங்கிக்கொண்டு அவனை பார்க்க…

அவள் முகத்தருகில் தன் முகத்தை மேலும் நெருங்கி கொண்டு வந்தவன் “குமாரு…… ” என்று ராஜன் கூறி முடிக்கும் முன் அவன் இதழில் முத்தமிட்டு இருந்தாள் இதழ்யா .

அவள் லேசாக முத்தமிட்டு அவனை விட்டு பிரிந்தவள் “ப்ளீஸ் அஞ்சனாவை விட்ருங்க… ” என்று கெஞ்சினாள்.

அவள் துடித்த உதடும் கெஞ்சிய கண்களையும் பார்த்து இரக்கம் வந்ததோ என்னவோ ” சரி குடு நான் குட்டியை வீட்டுல விட்டுட்டு வர சொல்றேன் ” என்றான்.

“இல்ல அவங்க யாரும் வேண்டாம் நானே…நானே.. வீட்டுல இவளை விட்டுட்டு வந்துடறேன் . அவ பயந்து போயிருவா ” என்றாள் .

“எதுக்கு குழந்தையை வீட்டுல விடுறேன்னு நீயும் அப்படியே இங்க இருந்து எஸ்கேப் ஆகலாம்னு பார்க்குறியா ?” என்றான் அவளை நம்பாமல் .

“இல்ல… இல்ல.. நான் அபப்டி எல்லாம் செய்ய மாட்டேன் . அஞ்சனாவை வாசலையே விட்டுட்டு திரும்ப வந்துடறேன் . ப்ளீஸ்.. ” என்று மீண்டும் அவனிடம் கெஞ்சினாள்.

“இப்படி கெஞ்சினா நான் உன்னை தனியா விட்டிருவேன்னு நீ நினைக்குறியா ” என்று அவளை விட மறுத்தான் .

“”அப்போ என்கூட உங்க ஆளுங்க யாரைவது அனுப்புங்க . நான் அவங்க கூடவே போய் அஞ்சனாவை வீட்டுல விட்டுட்டு திரும்ப உங்க ஆளுங்க கூடவே வீட்டுக்கு வந்துட்றேன் ” என்றாள்.

“அதுக்கு எதுக்கு என் பசங்களை அனுப்பனும் . நானே வரேன் வா நம்ம ரெண்டு பேரும் ஜோடியா போய் உன் அண்ணன் பொண்ணை வீட்டுல விட்டுட்டு வந்துடலாம் ” என்று இதழ்யாவின் தோளில் கை போட்டு அவளை ஜீப்பிற்கு அழைத்து செல்ல…

அவளும் வேறு வழி இல்லாமல் ராஜனோடு தன் வீட்டிற்கு கிளம்பினாள்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured