News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

கிடைக்குற கேப்ல ரொமான்ஸ்,மூர்க்கன் 68

by Sinamika Writes
29 views
A+A-
Reset

மூர்க்கன் 68

தன் மேல் அமர்ந்து இருந்தவளை அப்படியே அள்ளி அணைத்துக் கொள்ள வேண்டும் என்று ஈஸ்வரின் கைகள் பரபரத்தது.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

அவன் மார்பில் தன் முகத்தை வைத்து தன் மொத்த உடலையும் ஈஸ்வரின் மீது போட்டு  படுத்திருந்த மித்ரா “எனக்கு எவ்ளோ ஹாப்பியா இருக்கு தெரியுமா மச்சான். நீ என்னைப் பாக்குற.. நான் உன் கண்ணைப் பார்த்து நேருக்கு நேரா பேசுறேன். நான் சொல்றது கேட்டு நீ சிரிக்குற.. உன் கண்ணு என்கிட்டே நிறைய பேசணும்னு சொல்லுது. உன் மனசுல நீ படுற தவிப்பை , உன்னோட அவசரத்தை உன் கண்ணு என்கிட்டே சொல்லுது மச்சான் ” என்றாள்.

ஈஸ்வரோ அவள் சொன்னது கேட்டு புருவம் உயர்த்த..

“ம்ம்..  நிஜமா தான் சொல்றேன் மச்சான். நீ கோமாவுல இருந்த இத்தனை வருசமும் நான் ஒரு நாள் விடாம உன்கிட்டே பேசிக்கிட்டே தான் இருப்பேன். உன்னை காட்டிபிடிச்சிட்டு தூங்குவேன். அழுவேன், சிரிப்பேன், புலம்புவேன். ஏன் உன் முன்னாடி டான்ஸ் கூட ஆடிருக்கேன். ஆனா அதை எல்லாம் நீ பார்க்க முடியாலையின்னு எனக்கு வருத்தம் மட்டும் தான் மிஞ்சும். ” என்றவள் அவன் வெற்று மார்பில் தன் இதழ் கொண்டு முத்தம் பதித்தாள்,.

ஈஸ்வரோ மனதில் நினைத்ததை அவளிடம் பேசவும் முடியாமல் , அவள் சொல்வதற்கு ஆறுதல் கூற முடியாமல் தவித்தான்.

“என்ன டா என்கிட்டே பேச முடியாலையின்னு வருத்தமா இருக்கா?” என்று அவனை நிமிர்ந்து பார்த்தாள்,

“ம்ம்.. ” என்று மெலிதாக அவன் தலையை ஆட்ட.

அவன் மேல் இருந்து இறங்கி கட்டிலில் படுத்தவள் அவன் மார்பில் தலையை வைத்து படுத்து “நீ ரொம்ப இளைச்சுப் போயிட்ட டா மச்சான். சீக்கிரமே உனக்கு உடம்பை தேத்தனும். நீ பழைய படி எழுந்து நடமாடனும். உன்கிட்டே முன்ன மாதிரி நான் பேசி சிரிச்சு சண்டை போட்டுன்னு சந்தோசமா இருக்கனும் மச்சான் ” என்றாள் .

தன் மார்பில் தலையை வைத்து படுத்திருந்தவளை குனிந்து பார்த்தவன். அவள் உச்சந்தலையில் முத்தம் பதிக்கும் பொருட்டு சிரமப்பட்டு தன் தலையை மெல்ல உயர்த்த.. அவனுக்கு வலி உயிர் போவது போல இருந்தது.

உயர்த்திய தலையை நிறுத்திப் பிடிக்க முடியாமல் வலுவிழந்து மீண்டும் தலையணையில் தலை வேகமா மோதிவிட… , அந்த சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள் மித்ரா,

அவனோ மீண்டும் தலையை மேலே உயர்த்த முயல..

அவனால் முடியவே இல்லை., ஹாஸ்பிடலில் இருந்தபோது தானாக எழுந்து அமர முடிந்த தன்னால் இப்போது ஏன் துளியும் நகரமுடியவில்லை என்று நினைத்து குழம்பிப்போனான்.

அது அப்போது இருந்த ஒரு அதிர்ச்சி, அல்லியைக் காக்க வேண்டும்  என்ற உத்வேகத்தில் எழுந்து அமர்ந்து இருந்தான். ஆனால் இப்பொது அவனால் அது முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக தான் உடல் தேறி வரும் என்று டாக்டர் சொன்னது அவனுக்கு நினைவில் வர.. தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டான் ஈஸ்வர்.

“அச்சோ ! எதுக்கு டா இப்படி சிரமப்படுற. இப்போ தானே உனக்கு ஆபரேட் பண்ணிருக்கு. கொஞ்சம் கொஞ்சமா சரி ஆகிரும் டா.. ” என்றவள் எழுந்து அவன் தலையை பின்னிருந்து பிடித்து அவனை மீண்டும் தலையணையில் படுக்க வைத்தாள்.

அவனோ அவளை முத்தமிட முடியாமல் தவித்தபடி அவளையே பார்த்தான்.

அவனை படுக்க வைத்தவள் “என்ன டா மச்சான் அப்படிப் பாக்குற.. ?” என்றாள்.

ஈஸ்வர் மெல்ல சிரிக்க..

“உன்னை எவ்ளோ மிஸ் பண்ணினேன் தெரியுமா மச்சான் ” என்று குனிந்து அவன் இதழில் மெல்லிதாக முத்தம் பதித்தாள்,

அவள் மீண்டும் தந்த அந்த ஒற்றை முத்தம் அவன் உடலில் என்னத்த ஒரு எதிர்வினையும்  காட்டாமல் இருக்க..

அவனுக்கோ அவள் தரும் முத்தத்தில் இருக்கும் குறிப்பை உணர முடியாமல் போனது.

அதற்காக அவன் அப்டியே இருக்கவில்லை.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

தன் உதட்டில் பதிந்த அவள் உதட்டை தன் வாய்க்குள் விழுங்கிக்கொண்டு அவளுக்கு முத்தம் வழங்கினான். காதலோடு மித்ரா முத்தம் வைக்க.. அவளை த்ருப்திப் படுத்தும் விதமாக ஈஸ்வர் அவளுக்கு முத்தம் வைத்தான்.

அவளோ ஈஸ்வர் கொடுத்த அந்த பதில் முத்தத்தில் இத்தனை நாள் விட்டு போன காதலும், உயிர்ப்பும் வந்துவிட்டதாக உணர்ந்தவள் அவன் உடலோடு மேலும் ஒன்றி அவனுக்கு இணையாக முத்தம் வழங்கினாள்,

நீங்க வருடங்களுக்குப் பிறகு தரும் முத்தமல்லவா அது.. கண்களை மூடி அவனை இறுக அணைத்து ஆழ்ந்து அனுபவித்து முத்தம் கொடுத்துக்கொண்டிருந்தாள் மித்ரா.

ஆனால் ஈஸ்வருக்கு தான் அவன் கொடுத்த முதத்திலும், அவளிடம் இருந்து பெறப்பட்ட முதத்திலும் எந்த ஒரு உணர்ச்சியையும் உணர்ந்து கொள்ள முடியாமல் போனது.

நீண்ட ஆழமான முத்தத்தை அவனுக்கு வழங்கியவள் “சரி இன்னிக்கு இது போதும்  , கொஞ்சம் கொஞ்சமா நம்ம ரொமான்ஸையும் நாம் டெவெலப் பண்ணிக்கலாம். இப்போ தூங்கலாமா?” என்றாள் .

ஈஸ்வரும் அவளிடம் எதையுமே காட்டிக்கொள்ளாமல் சரி என்று புன்னகை செய்ய.. அவள் எழுந்து பாத்ரூம் சென்றாள்.

அவள் சென்றதும் மீண்டும் தலையை மேலே உயர்த்த முயன்றான். கொஞ்சம் வெளியாக  இருந்தது, இருந்தும் அவனால இப்பொது தலையை நன்றாக உயர்த்த முயல..

உள்ளுக்குள் சற்று நிம்மதியானது ஈஸ்வருக்கு. அப்படியே மெல்ல தலையை தூக்கி தன் இடைக்கு கீழே பார்த்தான்.

ஹாஸ்பிடலில் வைத்து ராஜ் தன்னைக் கிண்டல் செய்தது நினைவிற்கு வந்தது. ஒருத்தனுக்கு எழுந்து நீக்கவே முடியலையாம்.. என்று அவன் குரல் ஈஸ்வருக்குக் கேட்க,,

அவன் சொன்னது போலவே தன் நிலை இப்படி இருக்கிறது என்று ஏமாற்றத்தோடு தலையை கீழே சரித்தவன் “சீக்கிரம் உடம்பை சரி செய்யணும். எழுந்து நடக்கணும். ” என்று அவன் மனம் எண்ணிக்கொள்ள..

  பாத்ரூம் சென்றுவிட்டு வந்த அவனக்கு பெட்சீட்டை போர்த்திவிட்டவள் விளக்கை அனைத்துவிட்டு பெட் லேம்ப்பை ஒளிரவிட்டவள்  “தூங்கலாமா? மச்சான் ” என்று சிரித்தபடி அவனை நோக்கி வந்தாள்.

ஈஸ்வரும் சரி என்று மெல்ல தலையை ஆட்டினான்.

அவனை அணைத்தபடி மித்ரா உறங்கிப்போக..

அவள் உச்சந்தலையில் முத்தம் பதிக்கும் பொருட்டு மெல்ல தலையை உயர்த்த முயன்றான்.

அது அவனுக்கு மிகவும் கஷ்டமாக இருக்க..

சற்று இடைவெளி விட்டு மீண்டும் செய்ய ஆரம்பித்தான்.

இரவு முழுவதும் முயற்சி செய்து ஒரு வழியாக நள்ளிரவைக் கடந்திருந்த நேரத்தில் மித்ராவின் உச்சந்தலையில் தன் முத்தத்தைப் பதித்தான்.

உறங்கியவளுக்கு அது தெஇர்யவில்லை. ஆனால் ஈஸ்வருக்கு இது பெரிய சாதனை என்ற அளவுக்கு மனம் மகிழ்ச்சியில் தோன்றியது,

அவரவர் வேளைகளில் அடுத்து வந்த நாட்களில் மூழ்கி இருக்க..

ராவண் , ராஜ் இருவரும் ஆபீஸ் வேளைகளில் மூழ்கத்துவங்கி இருந்தனர், மித்ரா தினமும் ஈஸ்வருக்கு பயிற்சிகள் கொடுத்து அவனை சாப்பிட வைத்து என அவனையும், மற்றொரு புறம் அவள் நடத்தும் பள்ளியையும் கவனித்துக் கொள்கிறாள்.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

ராவண் ரியல் எஸ்டேட் பிஸினஸையும், பைனான்ஸ் இரண்டையும் கவனித்துக்கொள்கிறான்.

ராஜ்ஜும், அவனுடன் கையாளும் அவ்வப்போது அவனுடன் சென்று மருந்து தயாரிக்கும் தொழிலை கவனித்துக்கொள்கிறார்கள்.

ஈஸ்வர் உடல் நலன் சரியில்லாததால் மலேசியாவில் இருக்கும் அவன் தொழிலை இன்று வரை ஆனந்த் தான் பார்த்துக்கொள்கிறான்.

மாதாமாதம் வந்து மித்ராவிடமும், பார்வதியிடமும் வந்து கணக்கு வழக்குகளை கொடுத்துவிட்டு செல்வான் ஆனந்த். இப்படி அனைவரும் அவரவர் வேளைகளில் வாரம் முழுதும் பிஸியாகவே இருக்க.. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அனைவரும் வீட்டில் தான் இருந்தனர். மாலை போல தோட்டத்தில் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்க..

பெரியவர்கள் அனைவரும் அவர்களை கவனித்தபடி பேசிக்கொண்டு இருந்தனர்.

மற்றவர்கள் தோட்டத்தில் அமர்ந்திருந்தனர். ஈஸ்வர் முன்பை விட கொஞ்சம் தேறி இருந்தான். அவனால் கைகால்களை இப்பொது லேசாக அசைக்க முடிகிறது. வாரம் மூன்று முறை நடப்பதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது அவனுக்கு. பேச முடியவில்லை என்றாலும். அவனிடம் பேசுபவர்களுக்கு தலையை ஆட்டியோ , கையை அசைத்தோ இப்பொது எல்லாம் பதில் சொல்ல வருகிறது.

இதுவே மித்ராவிற்கு சந்தோஷமாக இருந்தது. அவன் வீல் சேரில் அமர்ந்து தனக்கு கீழே அமர்ந்து இருந்த மித்ராவின் தலையை மேனியாக வருடிக்கொண்டு அங்கிருப்பவர்கள் எல்லாம் பேசுவதை கவனித்துக்கொண்டிருந்தான்.

“டேய் ஐரா , உன் மகன் பொறந்து ஒரு மாசம் ஆச்சு. அவனுக்கு புனியாதனம் செய்யணும் . வீட்ல அந்த பூஜையை வெச்சுட்டு மறுநாள் குலதெய்வம் கோவிலுக்கு போய் அவனுக்கு பேர் வெச்சுடலாமா?” என்றார் பரிமளா .

“சரிம்மா செய்துரலாம் , ஏற்கனவே பேசி வெச்சது தானே.. நான் கிளியைப் பார்க்க அவங்க வீட்டுக்குப் போன அப்போ கூட இதைப்பத்தி என்கிட்டே சொல்லிட்டு இருந்தா ” என்றான் ராவண்.

“சரி அப்போ நம்ம ஜோசியர்கிட்டே சொல்லி ஒரு நல்ல நாள் பத்துடலாமா ” என்றார் வேதவள்ளி .

“சரி பாத்துடுங்க. அப்போ நாம எல்லாரும் கிளி வீட்டுக்கு போகணும் .அங்கையே பூஜை முடிச்சிட்டு நைட் ஸ்டே பண்ணிடலாம். காலையில நேரமே அங்கிருந்து கிளியோட அம்மா, அப்பா எல்லாரையும் அழைச்சிட்டு கோவில் போகலாம் ” என்றான்.

“போலாம் போலாம். என் மகனுக்கு உடம்பு குணமானா பொங்கல் வைக்குறேன்னு நானும் வந்திருக்கேன் எல்லாரும் போகலாம் ” என்றார் பார்வதி.

மித்ரா நிமிர்ந்து ஈஸ்வரைப் பார்த்து போலாமா? என்று கண் சிமிட்டிக் கேட்டவள் “அங்க போனா இரத்தினவேல் மாமா வீட்ல தான் எப்படியும் தங்குவோம். ஒரு அட்வெஞ்சர் பாத்துடலாமா அப்படியே ” என்று குறும்பாக அவள் கண் சிமிட்ட..

ஈஸ்வர் ஆச்சர்யமாக அவளைப் பார்த்து வாய் நிரைய புன்னகைத்தவன் தலையை சரி என்று ஆட்டினான்.

“பாத்தியா உன் அண்ணா, ஈஸ்வர் அண்ணா எல்லாரும்  கிடைக்குற கேப்ல ரொமான்ஸ் பண்ண ஏற்பாடு பண்றதை. நீயும் தான் என்கிட்டே சொன்ன.. ஆஃபீஸ்ல் கிடைக்குற கேப்ல வந்து என்கூட ரொமான்ஸ் பன்றேன்னு. ஆனா இப்போவரை அதுக்கான எந்த முயற்சியும் நீ எடுத்ததா இல்லையே ” என்று ராஜ்ஜின் காதைக் கடித்தாள் கயல்.

“ஏண்டி நீயும் என்கூட தான் பாதி நாள் ஆபீஸ் வந்துட்ற.. இதுல நீ வீட்ல இருக்குறதே கம்மி தான். அதுவும் வீட்ல ஷாப்பிங் போக, அண்ணி குழந்தையை பார்க்க போகணும்னு சொன்னா அதுக்காக வீட்ல இருந்துக்குற.. இதுல நான் வந்தா ரொமான்ஸ் பண்ண நீ வேணும் இல்ல… நீ இல்லாம நான் மட்டும் தனியா இங்க வந்து  என்ன டி பண்றது ” என்றான்.

“உனக்கு என் கூட ரொமான்ஸ் பண்ண மூட் இல்லேன்னு சொல்லு. அதை விட்டுட்டு என்னை குறை சொல்லாத ” என்றவள் அவனை முறைக்க..

“இவளை என்ன செய்வது ” என்ற ரீதியில் ராஜ் அவளை முறைத்தான்.

பூஜை செய்ய ஜோசியரிடம் நாள் பார்க்க சொல்லி போனில் அழைத்துப் பேசினார் வரதராஜன்.

“ராஜ், நம்ம பிலிப்பைன்ஸ்ல இருக்க மெடிக்கல் பேக்டரிக்கு நான் இந்த மந்த் எண்ட்ல போலாம்னு இருக்கேன். நீயும் என்கூட வந்தா நம்ம பிசினெஸை கை மாத்தி விட்டு அங்க இருக்க வேலை எல்லாம் முடிச்சிட்டு சீக்கிரம் திரும்பி வந்துடலாம்   ” என்றார் வேல்ராஜன்.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

“என்ன மாமா , அவரை உங்க கூட அழைச்சிட்டுப் போறிங்களா? அங்க இருக்க பிசினஸை மொத்தமா இங்க மாத்திக்கலாம்னு சொன்னிங்க ‘ என்று ராஜ்ஜைப் பிரிய மனமில்லாமல் கேட்டாள் கயல்.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.