Home Uncategorizedஎன் பொண்டாட்டி நீ தான்டி! 11

என் பொண்டாட்டி நீ தான்டி! 11

by Layas Tamil Novel
806 views

EPISODE 11

“இங்க பாரு இதழு … நடந்த எதையும் மத்த முடியாது. நீ பிடிச்சு தானே ராஜனை கல்யாணம் பண்ணி இருக்க. கொஞ்ச நாள் போகட்டும் உன் வீட்டு ஆளுங்ககிட்டே நானே போய் பேசுறேன் ” என்று தேன்மொழி தனக்கு இன்று முதல் இரவு என்று நினைத்து சோகத்தில் இருந்தவளை தேற்ற முயன்று கொண்டு இருந்தார் .

“என் அம்மா , அப்பா, என் குடும்பம் என்கிட்டே பேசலைன்னு எனக்கு வருத்தமா இருக்கு. அவங்க சம்மதம் இல்லாம நான் கல்யாணம் தான் செய்துகிட்டேன் . அடலீஸ்ட் அவங்க சம்மதத்தோட என் வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்னு நினைக்கிறேன் . அவங்க சம்மதிச்சுட்டா போதும் எனக்கு. எந்த கவலையும் இல்லாம சந்தோசமா என் வாழ்க்கையை ஆரம்பிச்சிருவேன் ” என்றாள் .

இந்த மாதிரி எதையாவது சொல்லி தேன்மொழியை சமாதானம் செய்து அவரிடம் சம்மதம் வாங்கிவிட்டால் அவரை வைத்தாவது ராஜனை எப்படியாவது சமாளிக்கலாம், அவனிடம் இருந்து தன் கற்பை காப்பாற்றிக்கொள்ளலாம் என்று தோன்றியது இதழ்யாவுக்கு .

” நீ சொல்றதும் வாஸ்தவம் தான் ஆனா இதுக்கு உன் புருஷன் முதல்ல சம்மதிக்கணுமே .. அவனே சம்மதிச்சாலும் உன் குடும்பம் உன்னை எதுக்குங்குற நம்பிக்கை எனக்கு இல்ல… ஏன்னா அவங்க உன் மேல ரொம்ப கோபமா இருக்காங்க. உங்க அப்பாவும், அண்ணாவும் பேசிட்டு போனதை தான் நீ பார்த்தே இல்ல அப்பறோம் எப்படி அவங்க உன்னையும், இந்த கல்யாணத்தையும் ஏத்துப்பாங்க ” என்றார் தேன்மொழி கேள்வியாக .

“இல்ல இல்ல… என் வீட்டுல நான் பேசி சம்மதிக்க வெக்குறேன். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு ” என்று தேன்மொழியை ஒரு வித எதிர்பார்ப்போடு பார்த்தாள் இதழ்யா .

அவள் சொன்னதை கேட்டு யோசனையாக அவளை பார்த்த தேன்மொழி “என்கிட்டே சொன்னதை அப்படியே உன் புருஷன்கிட்ட சொல்லு . அவன் தானே நீ சொன்னதுக்கு சம்மதிக்கணும் ” என்றார்.

“அவர் நான் சொன்னா கேட்கமாட்டார் அக்கா. நீங்க வேணும்னா அவர்கிட்டே எனக்காக பேசிப்பக்குறிங்களா?” என்று ஒருவித எதிர்பார்ப்போடு கேட்டாள் இதழ்யா .

“நானா! நான் எப்படி இதழு இந்த மாதிரி விஷயத்தை எல்லாம் அவன்கிட்டே கேக்குறது. என்னால முடியாது நீயே உன் புருஷன்கிட்ட கேட்டுப்பாரு ” என்றவர்

“சரி சரி நேரம் ஆச்சு நீ இரு நான் போய் பால் காய்ச்சி எடுத்துட்டு வரேன் ” என்று தேன்மொழி கிச்சனுக்கு சென்றார் .

“ச்சே.. இந்த அக்கா எனக்கு சப்போர்ட் பண்ணி அந்த கருவாயன்கிட்டே கேட்கும்ன்னு பார்த்தா என்னையே கேட்கச்சொல்லிட்டு போய்டுச்சே… அவன்கிட்டே போய் நான் இதை எப்படி கேப்பேன் . ஏற்கனவே அவன் சொல்றதை எல்லாம் நான் செய்யலையின்னா அஞ்சனாவை , என் குடும்பத்தை எதுவும் செய்திடுவேன்ன்னு என்னை மிரட்டுறான் . இதுல இவங்ககிட்டே சொன்னதை எல்லாம் நான் போய் கேட்டா என்ன ஆகும் ” என்று யோசித்தவளுக்கு ராஜனை நினைத்து பயமாக இருந்தது .

எங்கே தான் போய் எதுவும் கேட்டு அதற்கும் கோபம் வந்து தன் குடும்பத்தை எதுவும் செய்துவிடுவானோ என்று பயந்தாள். சற்று நேரம் அப்படியே அமர்ந்து இருந்தவள் எப்படியாவது அவன் கை காலில் விழுந்தாவது தன் கற்பை காத்துக்கொள்ள வேண்டும் என்ற முடிவோடு எழுந்தவள் அவள் இருந்த அறையை விட்டு வெளியே வர…

கையில் வெள்ளியால் ஆன பால் செம்புடன் அவள் எதிரே வந்த தேன்மொழி “இந்த இதை பிடி .. உன் புருசனுக்கு இன்னிக்கு கூட வீட்டுல இருக்கணும்னு தோணலை பாரு . அவனுக்கு பஸ்ட் நைட்டுன்னு கொஞ்சமாவது நினைப்பு இருந்திருக்கணும் . எல்லாம் என் புருஷனை சொல்லணும் எதுக்காக அவனை இந்த நேரத்துக்கு வீட்டுக்கு வர சொல்லி இருக்காரு ” என்று தேன்மொழி புலம்பிக்கொண்டு இருக்க…

“அந்த கருவாயன் வீட்ல இல்லையா !.. அதுவும் அவன் வேலை பாக்குற முதலாளி இந்த நேரத்துல வர சொல்லி இருக்காருன்னா கண்டிப்பா எதுவும் முக்கியமான வேலையா இருக்கும் . கடவுளே ! அவன் ராத்திரி முழுக்க வீட்டுக்கு வரவே கூடாது . எப்படியாவது இந்த முதல் இரவை நிறுத்திடு ” என்று ராஜன் வராததை நினைத்து சந்தோசப்பட்டவள் மானசீகமாக கடவுளிடம் வேண்டிக்கொண்டாள் .

சதாசிவத்தை பார்க்க சென்றவno அவருக்கு தான் இதழ்யாவை முத்தமிட்டு உரிமை எடுத்துக்கொண்ட விஷயம் தெரிந்துவிட்டதோ என்று எண்ணி இருக்க… அதற்கு மாறாக அஞ்சனாவை தூக்கி வந்து மிரட்டிய விஷயத்தை கேட்டு தான் சதாசிவம் அவனை அடித்திருக்கிறார் என்று தெரிந்ததும் ஒரு வகையில் நிம்மதி அடைந்தவன் . அவரிடம் பேசி சமாதானம் செய்துவிட்டு வீடு திரும்பி இருந்தான் .

அவள் வேண்டுதல் கடவுள் காதிற்க்கு கூட சென்றடைந்திருக்காது “என்ன அண்ணி அங்க அண்ணா உங்களை காணோம்னு தேடிட்டு இருக்காரு நீங்க இன்னும் இங்க இருக்கீங்க “என்றபடி உள்ளே நுழைந்தான் ராஜன் .

ஒரு நிமிட சந்தோசம் மட்டுமே இதழ் முகத்தில் இருந்திருக்கும் அதை கெடுப்பதற்கென்றே அவளை மணமுடித்தவன் அங்கு வந்திருந்தான்.

“ஐயோ! இவன் என்ன இவ்ளோ சீக்கிரம் வந்து நிக்குறான் ” என்பதை போல அவள் பார்க்க..  அதை ராஜனும் கவனித்துக்கொண்டே உள்ளே நுழைந்தான்.

” ராஜன் நிஜமாவே உன் அண்ணன் என்னை தேடினாரா? இல்ல… உனக்கு அவசரம்னு என்னை துரத்தி விட பாக்கறியா ..” என்று அவனை கிண்டல் செய்தார் தேன்மொழி .

“அண்ணி உங்களை போய் நான் துரத்துவேனா… அதான் நாசூக்கா அண்ணா தேடுறாருன்னு சொன்னேன் ” என்றான் அவரை நேருக்கு நேராக பார்ப்பதை தவிர்த்தபடியே .

“தெரியுது தெரியுது நீ எதுக்கு சொன்னேன்னு ..” என்று அவனையும் இதழ்யாவையும் பார்த்தவர் ” சரி என் வேலை முடிஞ்சுது நான் கிளம்புறேன் . இங்க பாரு டா உன் பொண்டாட்டி அவ வீட்டு ஆளுங்க கோபமா இருக்றவதை நினைச்சிட்டு வருத்தமா இருக்கா.. அவ கூடவே இருந்து அவளை சமாதானம் செய்து நல்ல விதமா பாத்துக்க… உனக்கு தான் மார்க்கெட்டை பிரிச்சு கொடுத்துட்டேன் இல்ல… சும்மா சும்மா உங்க அண்ணாவுக்கு வேலை செய்றேன்னு அங்க வந்து நிக்காத சரியா.. ” என்றார்.

“சரி சரி அண்ணி நான் அங்க வரவே மாட்டேன் போதுமா.. நீயா எனக்கு போன் பண்ணி கூப்பிட்டா தான் வருவேன் . நீ முதல்ல கிளம்பு உனக்காக அண்ணா வெயிட்டிங் ” என்று அவரை அனுப்புவதிலேயே குறியாக இருந்தான் .

அவன் அவசரத்தை புரிந்துகொண்டவர் “இதழு… நான் கிளம்பறேன் . இந்த முரட்டு பையனை பத்திரமா பாத்துக்கோ சரியா ” என்றபடி தேன்மொழி கிளம்ப .

அவரை வாசல் வரை வந்து ராஜனும், வேறு வழியே இல்லாமல் இதழும் அனுப்பி வைத்தனர்.

அவர் சென்ற திசையையே வெறித்தபடி நின்று இருந்தாள் இதழ்யா இருந்த ஒரு நம்பிக்கையும் போய்விட்டதே என்று ..

“ம்கூம்… ” என்று தொண்டையை கனைத்து அவள் காதருகில் வந்து இதழை பயமுறுத்தினான் ராஜன் .

சட்டென்று திரும்பி அவனை பார்ப்பதற்குள் இதழ்யாவை கைகளில் ஏந்தியயவன் திரும்பி வீட்டிற்குள் வந்து காலால் வீட்டு கதவை உதைக்க அது ஆட்டோமேட்டிக்காக லாக் ஆகிவிட்டது .

இதழ்யாவின் இதயம் தெறித்து வெளியே வந்து விழுந்துவிடும் போல இருந்தது . இந்த காட்டனிடம் வசமாக மாட்டிக்கொண்டோம் என்று.

அவளை மார்போடு அழுத்தியபடி தூக்கைக்கொண்டு நடந்தவன் “என்ன அபப்டி பாக்குற என்னை . நான் என்ன அவ்ளோ அழகா இருக்கேனா ?” என்றான் அவளை பார்க்காமல்.

“ம்கூம் இவன் பெரிய மன்மத கொஞ்சு இவன் அழகா இருக்கா நான் இவனை ரசிக்குறேன். பாக்க கருகருன்னு நிக்க வெச்ச பனைமரத்தை எரிச்சு விட்டா கருகி போன மாதிரி இருந்துட்டு எப்படி கேக்குறேன் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம ” என்று நினைத்தவள்.

“என்னை முதல்ல இறக்கி விடுங்க.. எனக்கு இதெல்லாம் பிடிக்கல ” என்று அவன் கையில் இருந்து கீழே இறங்க  துள்ளினாள் இதழ்.

“என்ன மறுபடியும் முருங்கை மரம் ஏறிட்டியா .. இங்க பாரு உனக்கு பிடிக்குது , பிடிக்கலையின்னு எல்லாம் எனக்கு தேவையே இல்லை. எனக்கு உன்னை பிடிச்சிருக்கு அவ்ளோ தான் . நீ என் கூட ஒழுங்கா இருந்தா உனக்கும் , உன் குடும்பத்துக்கும் நல்லது இல்லே… அது உனக்கு காலையில் நான் காட்டினா டெமோலையே புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன் ” என்றான் .

 காலையில் அவன் அஞ்சனாவை தூக்கி வந்து தான் சொல்வது எல்லாம் கேட்க வேண்டும் என இதழ்யாவை அடிபணியச் சொல்லி மிரட்டியது நினைவில் வர..  இதழ்யாவிற்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. தன் வாழ்க்கை அவ்வளவுதானா ?இவன் கையில் மாட்டிக்கொண்டு இனிய தன் வாழ்க்கை சீரழிய போகிறதா? என்று நினைக்கையிலே அழத் துவங்கி  இருந்தால்.

 “ஏய் இப்ப எதுக்கு அழுதிட்டு இருக்க..  நீ எவ்வளவு அழுதாலும் எதையும் உன்னால மாற்ற முடியாது. உன் கழுத்துல நான் தாலி கட்டினது கட்டினது தான்.  என் பொண்டாட்டி நீ தான் டி.. ஒழுங்கா நான் சொல்றத கேட்டுட்டு என்கூட சந்தோசமா வாழுற வழியை பாரு” என்றவன் “இப்ப மட்டும் நீ அழுகையை  நிப்பாட்டல அப்புறம் நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது” என்று கோபமாக அவளைப்  மிரட்டி கொண்டு பெட்ரூமிற்குள் நுழைந்தவன் இதழ்யாவை கட்டிலில் போட்டான்.

 கட்டிலில் விழுந்தவள் துள்ளிக்குதித்து கீழே இறங்கி “இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன். எனக்கு உங்கள சுத்தமா பிடிக்கல. எனக்கு இது எல்லாம் வேண்டாம். எனக்கு எதுவுமே வேண்டாம்” என்று  அவனிடம் பிடிவாதம் செய்ய துவங்கினாள் .

“இங்க பாரு உன் கண்ணுல இருந்து வர ஒவ்வொரு சொட்டு கண்ணீருக்கும் உன் குடும்பத்தில் இருக்கிற ஆளுங்க உடம்புல இருந்து ரத்தம் ஆறா ஓடும் . ஒழுங்கா அழுகையை நிப்பாட்டிடு இல்ல அவங்களை எல்லாம் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” என்று அவளை மிரட்டினான்.

 அவன் மிரட்டுவதைக் கூட காதில் வாங்காமல் இதழ்யா அழுது கொண்டே நின்று இருக்க…

 “ஏய் இப்போ அழறதை நிப்பாட்டுரியா இல்ல உங்க அப்பன் தலையை வெட்டி கொண்டு வந்து உன் காலடியில் போடட்டுமா” என்று அவன் கர்ஜித்தபடி  இதழ்யாவை மிரட்ட…

அடுத்த நொடி அவள் கப்சிப் என்று அழுகையை நிறுத்தி இருந்தாள்.

“ம்ம்ம்… உன்னை எல்லாம் இப்படி மிரட்டினா தான் வேலைக்கு ஆகும்” என அவள் அழுகையை நிப்பாட்டி இதை பார்த்து நினைத்தவன். 

“இங்க பாரு என் நல்ல மூட இப்படி அழுது கெடுக்காத ஒழுங்கா வா” என்று அவள் கையைப் பிடித்து இழுத்தவன் கட்டிலில் இதழ்யாவை தள்ளினான்.

தன்னை எடுத்துக் கொள்வதில் இவன் ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறான் என்று இதலயாவிற்கு அவன் மீது கோபமாக வந்தது.

அவனிடமிருந்து எப்படி தப்பிப்பது என்று வழிதெரியாமல்  இதழ்யா  இருக்க .. அவளை மீண்டும் கட்டிலில் தள்ளியவன்

 முதல் இரவுக்கு அழகாக அலங்கரித்து கட்டிலில் படுத்திருப்பதை  கவனித்தவன் “சும்மா சொல்லக்கூடாது எங்க அண்ணி உன்ன அழகா அலங்காரம் பண்ணி அனுப்பி வச்சிருக்காங்க. நீ சும்மா பாக்கவே  அம்சமா இருப்ப…  ஆனா இப்போ அலங்காரம் பண்ணுனதுல இன்னும் அழகா இருக்க… இப்படி அழகு சிலை மாதிரி தகதகன்னு மின்னிகிட்டு… அழகா கண்மை போட்டுட்டு தலை நிறைய மல்லிகைப்பூ வெச்சிட்டு இருக்க உன்னை பார்த்ததும் என்னலேயே என்னை கண்ட்ரோல் பண்ண முடியல டி… சீக்கிரம் வா டி …” என்று படுத்திருந்தவள் கையைப் பிடித்து இழுத்தவன் கட்டிலில் ஏறி அவள்  அருகில் படுத்த அடுத்த நிமிடம் இதழ்யாவின்  இதழை சுவைக்க துவங்கியிருந்தான். 

 இனி தன் வாழ்க்கை அவ்வளவுதான் முடிந்து விட்டது என்று கண்களில் கண்ணீர் வழிய அவன் இதழில் மாட்டிக்கொண்டு அவள் இதழ் தவித்தது.

 “!கடவுளே உனக்கு கருணையே இல்லையா.. என் வாழ்க்கையை இப்படி நாசம் பண்ணிட்டியே. இது உனக்கே நியாயமா..” என்று அவனுடன் போராட முடியாமல் தன் மனதிற்குள் கடவுளிடம் முறையிட்டுக் கொண்டிருக்க…

சென்ற முறைதான் அவள் வேண்டுதல் கடவுளுக்கு போய் சேர்ந்திருக்கவில்லை இப்போது அவரிடம் சென்றதோ என்னவோ அவள் முறையிட்டுக் கொண்டிருந்த அந்த நேரத்தில்  ராஜனின் போன் அடித்தது.

அது இதழ்யாவிற்கு கேட்டதே ஒழிய ராஜன் அதை சட்டை செய்யவே இல்லை. போன் அடித்துக் கொண்டே இருக்க அவன் முத்தத்தில் இருந்து அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதிலேயே குறியாக இருந்தானே தவிர போன் அடித்ததை கண்டுகொள்ளவே இல்லை .

போன் முழுவதுமாக அடித்து அணைந்து பின்பு மீண்டும் அடிக்கத்  துவங்க இந்த முறை  அவள் இதழை  விட்டுப் பிரியாமலேயே தன் பாக்கெட்டில் இருந்த போனை எடுத்து யார் அழைத்திருக்கிறார்கள் என்று பார்த்தான்.

ஸ்கிரீனில் தேன்மொழியின் பெயரை பார்த்ததும் சட்டென இதழ்யாவை விட்டு விலகி நின்று எழுந்தவன். போனை அட்டென்ட் செய்து “ஹலோ அண்ணி என்ன இந்த நேரத்துல” என்றான் அவசரமாக.

 “ராஜன் உடனே கிளம்பி வாடா..” என்று ஒரு ஹாஸ்பிட்டலின் பெயரைச் சொல்லி அவனை பதட்டமாக அழைத்தார் தேன்மொழி.

“என்ன அண்ணி.. என்ன ஆச்சு? எதுக்கு ஹாஸ்பிடல் யாருக்கு என்ன?” என்றான் பதட்டமாக.

” டேய் உன் அண்ணா… உன் அண்ணா தாண்டா அவரு ராத்திரி பசங்களோட வெளியே எங்கேயோ கிளம்பினாரு கொஞ்ச நேரத்துல எனக்கு போன் வந்துச்சு உன் அண்ணன் போன வண்டி ஆக்சிடென்ட் ஆயிடுச்சுன்னு. அவரை  ஹாஸ்பிடல் அட்மிட் பண்ணி இருக்கு. கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி வா டா” என்றவர் போனை வைக்க…

“பாப்பா.. சீக்கிரம் கிளம்பி வா அண்ணாவுக்கு அச்சிடேன்ட் ஹாஸ்பிடல் போகணும்  ” என்று கலைந்த தன் சட்டையை சரி செய்துகொண்டே ஜீப் சாவியை எடுத்துக்கொண்டு ராஜன் வெளியே செல்ல…

இன்று இவனிடம் இருந்து தப்பித்ததை நினைத்து சந்தோசப்பட்டவள் வேகமாக கடவுளுக்கு நன்றி சொன்னபடி அமர்ந்து இருக்க…

“பாப்பா… ” என்று வாசலில் இருந்து ராஜன் குரல் கொடுக்கவும் அவசரமாக வந்தவள் அவனோடு ஹாஸ்பிடல் கிளம்பினாள்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured