EPISODE 12
ஹாஸ்பிடலுக்கு விரைந்த ராஜன் ஜீப்பை நிறுத்திவிட்டு அவசரமாக உள்ளே செல்ல… அவன் பின்னால் மெதுவாக சென்றாள் இதழ்யா .
“ஏய்.. என்ன அன்ன நடை நடந்துட்டு இருக்க… சீக்கிரம் வா ” என்றவன் அவள் அருகில் வேகமாக வந்து இதழ்யாவின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு சென்றான்.
எமெர்ஜென்சி வார்டிற்குள் நுழையும்போதே சதாசிவத்திடம் வேலையில் செய்யும் மொத்த ஆட்களும் கூடி இருந்தனர். அவர்களோடு பாலுவின் கட்சி ஆட்களும் சிலர் அங்கு கூடி இருந்தனர்.
பாலு, கந்தன் , தண்டபாணி மூவரும் அழுதுகொண்டு இருந்த தேன்மொழியை சமாதானம் செய்துகொண்டு இருக்க.. அவர்கள் அருகில் சென்றவன் ” அண்ணி! என்ன ஆச்சு ? அண்ணாவுக்கு எப்படி ஆக்சிடென்ட் ஆச்சு ? அவரை யார் இப்படி செஞ்சது? ” என்று கோபமாக சட்டையை சுருட்டிவிட்டுக்கொண்டே கேட்டான் ராஜன்.
“”மெர்சலு நமக்கு பணம் கொடுக்க வேண்டிய முருகேசன் பணத்தை கொடுக்காம சொல்லாம கொள்ளாம ஊரைவிட்டு போறதா நம்ம கிஷோர் கிட்டே இருந்து தகவல் வந்துச்சு. நாங்களே போய் அந்த முருகேசனை தூக்கிட்டு வரோம்னு அண்ணன்கிட்டே சொன்னோம். ஆனா அண்ணன் அவரே நேர்ல வந்தா தான் சரியா இருக்கும்னு சொல்லி எங்க கூட கிளம்பி ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தாரு … அப்போ… ” என்று இழுத்த அடியாள் ராஜனை யோசனையோடு பார்க்க…
“என்ன டா அப்போ… என்ன ஆச்சு சொல்லி தொலையேன் ” என்று கோபத்தின் உச்சிக்கு சென்று கத்தினான்.
“அது வந்து… ” என்று அவன் தயங்க .
“டேய் இரு நானே சொல்றேன் ” என்று முன்னே வந்த குமார் .
“மெர்சலு நான் ராத்திரி லைட்டா சரக்கு போட்டிருந்தேன். அண்ணன் திடீர்னு கிளம்பனும் வண்டியை எடுன்னு சொன்னதும் அவர்கிட்டே நான் குடிச்சதை சொல்லாம வண்டியை எடுத்த்துட்டு கிளம்புனேன் . வேகமா போயிட்டு இருந்தேன் . சரக்கு அடிச்சதுல கண்ணு கொஞ்சம் மங்களா இருக்கவும் ரோடு சரியா தெரியாம வண்டியை பள்ளத்துல விட்டுட்டேன் . அண்ணன் சீட் பெல்ட் போடாம இருந்ததுனால அண்ணனுக்கு பழமை அடிபட்டிருச்சு . அவருக்கு …. ” என்று குமார் நிறுத்த..
அவன் சட்டையை பிடித்து உலுக்கிய ராஜன் “உன்னை தண்ணியை போட்டுட்டு வண்டி ஒட்டக்கூடாதுன்னு எவ்ளோ முறை சொல்லி இருப்பேன் . சொல்றதை கெடவே மாட்டியா . அண்ணனுக்கு என்ன டா ஆச்சு ?” என்று அவனை சுவற்றில் தள்ளி கழுத்தை நெரித்து அப்படியே மேலே தூக்கினான்.
அதை பார்த்த இதழ் அப்படியே உறைந்து போய் நின்றாள் ராஜனின் கோபமும் , அவன் அதிகாரமும் கண்டு.
“டேய்.. ராஜன் அவனை விடுடா.. சும்மா அவனை திட்டி என்ன செய்றது நடந்தது நடந்துச்சிருச்சு . அவரை யார் அந்த நேரத்தில் கிளம்பி போக சொன்னது வேறையாவது அனுப்பிச்சு பணத்தை வாங்குனவனை தூக்கிட்டு வர சொல்ல வேண்டியது தானே… ” என்று மூக்கை சிந்திய தேன்மொழி .
“இப்போ பாரு இவருக்கு அடிபட்டத்துல இன்னும் 6 மாசத்துக்கு எழுந்து நடக்க கூட முடியாதபடிக்கு ஆகிடுச்சு. அந்த அளவுக்கு அவருக்கு கால் எலும்பு உடைஞ்சி போயிருச்சு ” என்றார் தேன்மொழி
அதை கேட்டு ராஜன், இதழ்யா இருவரும் அதிர்ச்சி அடைந்தனர் . ராஜனுக்கு உள்ளுக்குள் ஏனோ சதாசிவம் 6 மதத்திற்கு எழுந்து நடக்க முடியாது என்று தெரிந்ததும் உளூர சந்தோசமாக இருந்தது . அதை காட்டிக்கொள்ளாமல் “என்ன அண்ணி சொல்றிங்க 6 மாசம் ஆகுமா அண்ணா எழுந்து நடக்க… ” என்றவன் அவர் இருக்கும் அறைக் கதவை திறந்துகொண்டு உள்ளே சென்றான் .
சதாசிவத்தின் கால்கள் இரண்டிலும் முட்டிக்கு மேல் வரை மாவு கட்டு போடப்பட்டு இருந்தது . “அண்ணா என்ன இப்படி பண்ணி வெச்சிருக்கீங்க. நான் தான் உங்களை வீட்டுல பார்க்க வந்தேனே அப்போவே நீங்க சொல்லி இருந்தா நான் போய் அந்த நாதாரியை இழுத்துட்டு வந்திருப்பேன் . உங்களை யார் இந்த நேரத்துல போக சொன்னது ” என்று அவரை கடிந்துகொண்டான் ராஜன் .
“எனக்கு என்ன டா தெரியும் இப்படி எல்லாம் நடக்குதுன்னு . நீ போனதுக்கு அப்பறோம் தான் எனக்கு விஷயமே காதுக்கு எட்டுச்சு. ” என்றவர் அவனை தாண்டி பின்னால் நின்று இருந்த இதழ்யாவை அந்த நிலையிலும் உரித்துவிடுவது போல பார்த்தார் .
அதை கவனித்த ராஜன் எதார்த்தமாக நகர்ந்து நிற்பது போல நடந்து வந்து சதாசிவத்தின் முன் நின்று இதழ்யாவை மறைத்துக்கொண்டு நின்றான்.
அவனை நிமிர்ந்து சதாசிவம் முறைக்க … அவனை தேன்மொழியை கண்ணை காட்டி “அண்ணி , உங்க மச்சானுங்க எல்லாரும் உங்களையே தான் பார்த்துட்டு இருக்காங்க . நீங்களே மாட்டிக்குவிங்க போல இருக்கு . அவ எங்க போக போறா . கவலை படாதீங்க அண்ணா பத்திரமா என் வீட்ல நீங்க வர வரைக்கும் அவளை நான் பார்த்துகிறேன் ” என்று அவர் காதருகில் சொன்னான்.
“இந்த நேரத்துல என்ன டா அவருக்கும், உனக்கும் ரகசியம் ” என்றார் தேன்மொழி .
“அண்ணி … ஒரு ரகசியமும் இல்லை . அண்ணனுக்கு கால் ரொம்ப வலிக்குதுன்னு சொல்லி ஒரு கட்டிங் போடலாமான்னு கேட்டாரு . நான் இப்போதைக்கு வேணாம் அப்புறமா வீட்டுக்கு வந்ததும் வாங்கிட்டு வந்து தரேன்னு சொன்னேன் ” என்று சமாளித்தான் ராஜன் .
“இந்த நேரத்துலயும் உங்களுக்கு குடி கேட்குதா… இந்த அளவுக்கு நீங்க தெளிவா இருப்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா நான் இவனை இங்க வரவே சொல்லி இருக்க மாட்டேன் . பாவோம் முதல் ராத்திரியும் அதுவுமா இவங்க ரெண்டு பேரையும் இங்க வர வரவெச்சுட்டேன் ” என்று வருத்தப்பட்டார் தேன்மொழி.
“பரவாயில்லை க்கா.. இதுல என்ன இருக்கு ” என்று இன்று தப்பித்ததை நினைத்து சந்தோசப்பட்டவள் தன்மொழியிடம் கூற .
அவளை திரும்பி முறைத்தவன் “அண்ணி டாக்டர் வேற என்ன சொன்னாரு . அண்ணனுக்கு வேற எங்கையும் அடி படலையே ” என்றான் ராஜன் .
“இல்ல டா உடம்புல அங்க அங்க லேசா காயம் இருக்கு . கால்ல தான் அடி அதிகம் ” என்றார் .
” சரி நீங்க போய் ரெஸ்ட் எடுங்க .. நான் அண்ணன் கூட இருக்கேன் ” என்று அனைவரையும் போக சொன்னான்.
“டேய் என்ன டா நீ நாங்க தான் மச்சானை பார்த்துக்க இத்தனை பேர் இருக்கோம்ல . நீ புதுசா கல்யாணம் ஆனவன் பேசாம உன் பொண்டாட்டியை கூப்டு கிளம்பு ” என்றார் கந்தன் .
“ஆமா ராஜன் நான் வரும்போது உன்னை என் வீட்டு பக்கமே வரக்கூடாதுன்னு சொன்னேன். ஆனா பாரு நானே உன்னை இங்க வர சொல்ற மாதிரி ஆகிடுச்சு. மணி பாரு இப்பவே ஒன்னு ஆகிருச்சு . இதழும் காலையில் இருந்து ரெஸ்ட் எடுக்கவே இல்லை . போங்க ரெண்டு பெரும் போய் ரெஸ்ட் எடுத்துட்டு பொறுமையா காலையில் வாங்க நான் இவர் கூட இருந்துகிறேன் ” என்று இருவரையும் வலுக்கட்டாயமாக ஹோச்பிடலில் இருந்து அனுப்பி வைக்க…
ராஜன் சதாசிவத்தை பார்த்து நான் பார்த்துகிறேன் என்று சைகை செய்துவிட்டு இதழ்யாவை கூட்டிக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினான்.
ஹாஸ்பிடலில் இருந்து நேராக ராஜன் வீட்டிற்கு வந்தவன் ஜீப்பை நிறுத்திவிட்டு அவளை பார்க்க… இதழ் என்ன என்பது போல புரியாமல் அவனை பார்த்தாள் .
வாசல் கதவை திறக்க யாராவது உன்வீட்டுல இருந்து வருவார்களா ?” என்றான் .
“ம்ம்ம்.. இவனுக்கு கதவை திறந்து விட என் வீட்டு ஆளுங்க வருவாங்க ” என்று நினைத்துக்கொண்டே ஜீப்பை விட்டு இறங்கி சென்று மெயின் கேட்டை திறந்தாள் .
.
ஜீப்பை உள்ளே கொண்டு சென்றவன் நிருத்தி விட்டு இறங்கு வீட்டு கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றான்.
வீட்டிற்கு வந்ததுமே இதழ்யாவுக்கு பக்கென்று இருந்தது . அவனோடு உள்ளே செல்லவே பயந்தாள்.
மெயின் கேட்டை சாற்றாமல் அங்கேயே நின்று இருந்தாள். பின் வேறு வழி இல்லாமல் அக்கதவை சுற்றிவிட்டு தயங்கி தயங்கி நடந்து வீடு வாசல் வரை வந்தவள் .வீட்டிற்குள் செல்லாமல் வாசலில் கையை பிசைந்து கொண்டு நின்று இருக்க..
உள்ளே சென்றவன் கிட்சேன் சென்று தண்ணீர் குடித்துக்கொண்டே வெளியே வந்தவன் வாசலில் நின்று இருந்தவளை பார்த்தான் . அவள் இந்த வீட்டிற்குள் வருவதற்கு இவ்வ்ளவு யோசித்துக்கொண்டு நிற்கிறாள் என்று நினைத்து கோபம் வர.. ராஜன் கையில் இருந்த தண்ணீர் செம்பை தூக்கி விசிறியடித்தான்.
அந்த சத்தத்தை கேட்ட அடுத்த நொடி கீ கொடுத்தவள் போல வேகமாக வீட்டிற்குள் வந்து நின்றாள்.
உள்ளே வந்தபின்னும் நகராமல் கதவருகே நிற்க…
“என்ன பாப்பா… இன்ச் இன்ச் ஆஹ் இந்த வீட்டை அளக்க போறியா ” என்றவன். “ஒழுங்கா கதவை சாத்திட்டு உள்ளே வா.. ” என்று கத்தினான்.
அதில் நடுங்கியவள் மெல்ல திரும்பி வாசல் கதவை நடுங்கிய கைகளில் சாற்றி தாழிட்டு திரும்ப… அதற்குள்ளாக அவளை நெருங்கி இருந்த ராஜன் இதழ்யாவை கதவோடு சேர்த்து அழுத்தி நிற்க வைத்து அவள் இதழை தீவிரமாக சுவைக்க துவங்கி இருந்தான்.
இதழ்யாவாள் எந்த எதிர்வினையும் காட்ட முடியவில்லை . கதவோடு நின்று இருந்தவளை முத்தம் கொடுத்துவிட்டு நிமிர்ந்து அவள் முகத்தை பார்த்தவன் “இன்னிக்கு நமக்கு எதுவும் நடக்காதுனு நினைச்சு சந்தோசப்பட்டிருந்த தானே … ஹாஸ்பிடல்ல நீ அண்ணிகிட்டே பேசும்போதே உன் குரலில் இருட்னஹா சந்தோசத்தை நான் கவனிச்சேன் . நீ நினைக்குறது எதுவும் நடக்காது . நான் என்ன நினைக்கிறேனோ அது தான் நடக்கும், நடத்தி காட்டுவேன் ” என்றவன் அவளை அடுத்தநொடி கையில் ஏந்திக்கொண்டு பெட்ரூம் வந்தவன் .
“இவ்ளோ அலங்காரம் செய்து வெச்சிட்டு இதை வீண் பண்ண எனக்கு எப்படி மனசு வரும் ” என்றான்.
இதழ்யா திரும்பி முதல் இரவுக்காக அலங்கரித்து இருந்த அறையை பார்க்க …
“நன் பெட்ரூமை சொல்லல… உன்னை தான் சொன்னேன் ” என்றவன் .
“என்ன டி பொண்டாட்டி ஸ்டார்ட் பண்ணலாமா?” என்றான்.
இதழ்யா பயந்து கொண்டே வேண்டாம் என்று தலையை இட வளமாக ஆட்ட …
“நான் என்ன சொன்னாலும் கேக்குறேன்னு காலையில் தானே எனக்கு சத்தியம் பண்ணி கொடுத்த … இப்போ முடியாதுனு ஜகா வாங்குற நீ .. இது சரி பட்டு வராது நீ இறங்கு முதல்ல ” என்று அவளை கீழே இறக்கிவிட்டவன் தன் மொபைலை எடுத்து கால் செய்ய போக…
அவன் எதற்காக போன் செய்கிறான் என்று புரிந்து கொண்ட இதழ்யா அவசரமாக அவன் கையில் இருந்த மொபைலை பிடுங்கியவள் ” என் வீட்டு ஆளுங்களை எதுவும் செய்துடாதிங்க . நீங்க என்ன சொன்னாலும் நான் கேக்குறேன் ” என்றாள் .
அவள் சொல்வதை கேட்டு சிரித்த ராஜன் “அப்போ வா வந்து இந்த் மாமாவுக்கு முத்தம் கொடு பாக்கலாம் ” என்று அவன் முகத்தை அவள் முகத்திற்கு நேராக நீட்ட…
இதழ்யா இனி இவனிடம் இருந்து தப்பிக்க தனக்கு வாய்ப்பே இல்லை என்று புரிந்து கொண்டவள் ஒரு நிமிடம் கண்களை மூடி மொச்சை இழுத்து விட்டவள் “இனி இவன் கூட தான் என்னோட வாழ்க்கை. என் வாழ்க்கையை என் விருப்படி வாழ விடாம இப்படி என் குடும்பத்தை அப்பனையும் வெச்சு என்னை எடுத்துக்க நினைக்குறான் . என் ஆசையை, என் கனவை , என் லட்சியத்தை எல்லாம் குழி தோண்டி புதைச்சு இவனை இவன் கூட இருந்தே குழி பறிக்க போறேன். என் வாழ்க்கையை நாசம் பண்ணின மாதிரி இவன் வழியிலையே போய் இவன் வாழ்க்கையை நான் நாசம் பண்ண போறேன் . என் பின்னாடியே இவனை பைத்தியம் பிடிக்குற மாதிரி சுத்த வைப்பேன். என்னை நம்பி நான் தான் எல்லாமேன்னு அவன் நினைக்கும்போது அவனை விட்டு நான் பிரிஞ்சு போவேன். என்னை வேணாம்னு அவனையே அவன் வாயால சொல்ல வைப்பேன் ” என்று தனக்குள் சபதம் எடுத்தவள் கண்கள் திறந்து எதிரே நின்று இருந்தவனை பார்த்தாள்.
” என்ன பாப்பா ஒரு முத்தம் கொடுக்க இவ்ளோ யோசிக்குற.. சீக்கிரம் வா… வந்து எனக்கு முத்தம் கொடு.. என்னால ரொம்ப நேரம் வெயிட் பண்ண முடியல ” என்று தன் கைகளை பரபரவென தேய்த்தான்.
அவன் பேசிக்கொண்டு இருக்கும்போது மெல்ல ராஜன் அருகில் நெருங்கியவள் தன் கால்களை உயர்த்தி அவன் உயரத்திற்கு மேலே வந்து முத்தம் கொடுக்காமல் அவன் தோள்களில் கை வைத்து அவனை கீழே வர சொல்ல…
“இந்த ராஜன் யாருக்கும் இதுவரை தலை வணங்குவதே இல்ல… ” என்றவன் அவள் இடையில் கை கொடுத்து அவன் உயரத்திற்கு அவளை தூக்கினான்.
அதில் அதிர்ந்தாலும் அவன் முகத்தை பிடித்து தன் பக்கம் இழுத்தவன் மெல்ல அவன் இதழில் மெல்ல தன் இதழை பொருத்தினாள் .
லேசாக முத்தம் கொடுக்க ஆரம்பித்து இருந்த இதழ்யாவின் இதழை ராஜன் தன் உதடு கொண்டு மொத்தமாக அவன் உதட்டுக்குள் விழுங்கி இருந்தவன் முத்தமிட்டுக்கொண்டே கட்டிலுக்கு வந்தவன் அவளை மெத்தையில் படுக்க வைத்து அவள் மேல் படுத்தான் .
