பகுதி 2
ஒரு பெரிய அறையின் நடுவில் போடப்பட்டிருந்த சிறிய மேடையில், 17 வயது இளம் பெண் ஒருத்தி தன் உடல் முழுவதும் பூக்களால் வேலைப்பாடு செய்யப்பட்டிருந்த போர்வையைப் போர்த்திக் கொண்டு நின்றிருந்தாள்.
அங்கே நின்றிருந்த அந்தப் பெண்ணிற்கு தான் எங்கே நிற்கிறோம், எதற்காக நிற்கிறோம் என்பது எதுவுமே தெரியவில்லை. தன்னைச் சுற்றிலும் இருட்டாக, மிகவும் அமைதியாக இருப்பதை உணர்ந்தவள், “நான் இப்போது எங்கே இருக்கிறோம்?” என்று தெரியாமல் உள்ளுக்குள் பயந்து நடுங்கியபடி நின்று கொண்டிருந்தாள்.
அவள் போர்வைக்குள் வெறும் உள்ளாடை மட்டுமே அணிந்திருந்தாள். தன்னைக் இந்தக் கோலத்தில் எங்கே கொண்டுவந்து நிறுத்தி இருக்கிறார்கள் என்று தெரியாமல் குழப்பத்தில், அங்கிருந்து ஓடிவிடலாமா அல்லது என்ன செய்வது என்று தெரியாமல் அந்தப் பெண் நின்றிருந்தால்.
அந்த அறையில் திடீரென அனைத்து விளக்குகளும் எரிய ஆரம்பித்தன. அந்தச் சிறிய மேடையில் நின்றிருந்த அந்தப் பெண் சுதாரிப்பதற்குள், அந்த இருட்டில் நின்றிருந்த பெண்ணின் மீது திடீரென அந்த அறையில் இருந்த மொத்த வெளிச்சமும் விழுந்தது.
தன்மீது திடீரென வெளிச்சம் விழவும் பதறிய அந்தப் பெண், தன் முகத்தை வெளிச்சத்திற்குக் காட்ட முடியாமல், கண்கள் கூசி கைகளால் மறைத்துக் கொண்டு நின்றாள். அவள் தன் முகத்தை மறைத்துக் கொண்டு நிற்க, அப்போது அவள் அருகில் வந்த ஒரு ஆண், “முகத்தை மறைத்திருந்த அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து கீழே இறக்கியவன், ‘இங்கு வந்துவிட்டு இப்படி முகத்தை மறைத்து நின்றுகொண்டிருந்தால் எப்படி நீ இங்கே வந்திருக்கும் செல்வந்தர்களிடமும் பில்லியனர்களிடமும் விலைக்குப் போவாய்? முதலில் உன்னுடைய முகத்தை மறைக்காமல் கையை கீழே இறக்கி ஒழுங்காக நில்லு!'” என்றான்.
“இங்கு வந்திருப்பவர்கள் எல்லாம் உலகத்திலுள்ள பெரிய பணக்காரர்கள், அரசியல் தலைவர்கள், பில்லியனர்கள். உனக்கு இன்றைக்குப் பெரிய லாட்டரிதான் அடித்துள்ளது. இல்லையென்றால், 17 வயதான உன்னை விலைக்கு வாங்குவதற்காக இங்கு இத்தனை பேர் ஆர்வமாகக் காத்துக்கொண்டிருப்பார்களா? உன்னை இன்று இங்கே ஏலம் எடுக்கப் போகிறோம் என்று, உன்னுடைய புகைப்படத்தை வைத்து ஏலத்தில் எடுப்பதற்காகப் பல கோடீஸ்வரர்களும், முக்கிய புள்ளிகளும் இங்கே உன்னைப் போட்டி போட்டு வாங்குவதற்காக வந்திருக்கிறார்கள். இத்தனை பேரும் உன்னை வாங்குவதற்காக வந்திருக்கும்போது சந்தோஷப்பட வேண்டும்; அதற்குப் பதிலாக உன் முகம் ஏன் இப்படிச் சோகமாக இருக்கிறது?” என்று கேட்டான், பெண்களை ஏலத்தில் எடுக்கும் நிறுவனத்தில் வேலை செய்யும் அந்த நபர்.
அவன் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அந்தப் பெண்ணிற்கு இப்போதுதான் புரிந்தது – தன்னை பணத்திற்காக ஏலம் எடுக்கும் இடத்திற்கு அழைத்து வந்திருக்கிறார்கள் என்று. அவன் சொன்னதைக் கேட்டதும், அந்தப் பெண்ணின் இதயம் சுக்கு நூறாக வெடித்துவிடும் போல ஆகிவிட்டது. அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிய, அதைப் பார்த்த அந்த ஏலம் நடத்தும் நபர், “என்னம்மா, நீ இங்கே வந்துவிட்டு அழுதுகொண்டு நிற்கிறாய்? நீ இப்படி அழுது வடிந்துகொண்டிருப்பதைப் பார்த்தால், அவ்வளவுதான், இன்று எங்கள் வேலையே கெட்டுவிட்டது. உன் கண்ணைத் துடைத்துவிட்டு சிரித்த மாதிரி நில்லுமா! அப்போதுதான் உன்னை ஏலம் எடுக்கிறவர்கள் சந்தோஷமாகி, உன் சிரித்த முகத்தைப் பார்த்தே நிறைய பணம் கொட்டிக் கொடுத்து உன்னை வாங்கிட்டுப் போவார்கள்!” என்றான்.
தன்னுடைய நிலையை நினைத்து நொந்து கொண்ட அந்தப் பெண், எங்கிருந்து தப்பிச் செல்ல தனக்கு இனி எந்த வாய்ப்பும் இல்லை என்பதை உணர்ந்தவள். தன் கண்களைத் துடைத்துக் கொண்டு, இதயத்தை கல்லாக்கி, வராத புன்னகையை வலுக்கட்டாயமாக வரவழைத்துக் கொண்டு தன் முகத்தை நிமிர்த்தி நின்றாள். தன் முகத்தை நிமிர்த்தி நின்றவள், தன் பார்வையைச் சுற்றிலும் சூழலைச் செலுத்தினாள். அவள் இருக்கும் இடத்தை தவிர்த்து, அவளைச் சுற்றி இருந்த இடம் மொத்தமும் இருளில் மூழ்கி இருந்தது. அவள் மனதைப் போலவே அந்த இடமும் இருளில் மூழ்கி இருப்பதைப் பார்த்தவள், வெற்றுப் புன்னகையை உதிர்த்தபடி, இதயத்தைக் கல்லாக்கிக் கொண்டு நின்றாள்.
தான் நின்றிருந்த இடத்தில் மட்டும் வெளிச்சம் பரவி இருக்க, தன்னைச் சுற்றிலும் இருட்டாக இருப்பதைப் பார்த்தவள், தன்னை ஏலம் எடுக்க வந்தவர்கள் அனைவரும் அந்த இருட்டில்தான் இருக்க வேண்டும் என்று அவளாகவே யூகித்துக் கொண்டாள். ஏலம் எடுப்பவர் அவள் அருகில் வந்து, “ஏய் பெண்ணே! உன்னைப் பற்றி சும்மா ஒரு இரண்டு வரி நான் இங்கிருப்பவர்களிடம் சொல்லிவிட்டு, உன் மேல் போர்த்தியிருக்கும் இந்தச் சால்வையை எடுத்துவிடுவேன். இந்தச் சால்வையை எடுத்ததும் நீ சிரித்த முகமாய் நின்ற இடத்திலிருந்து இறங்கி, உன் மேல் அடிக்கும் வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாய் உன்னிடமிருந்து நகர்ந்து இந்த அறையைச் சுற்றி வலம் வரும்; அந்த வெளிச்சத்திற்குத் தகுந்த மாதிரி அதனுடன் சேர்ந்து நீ இந்த அறையைச் சுற்றி நடந்து வர வேண்டும்,” என்றார்.
“நீ என் மேல் இருந்த போர்வையை எடுத்துவிட்டால், நான் உள்ளே வெறும் உள்ளாடைகள் மட்டும்தான் அணிந்திருக்கிறேன். இதோடு எப்படி நான் இந்த இடத்தைச் சுற்றி வருவது? இங்கே என்னைச் சுற்றி நிறைய பேர் இருக்கிறார்கள் தானே?” என்றாள் பயந்தபடி.
“இந்த இடத்திற்கு வந்துவிட்டு இப்படி எல்லாம் யோசித்தால் எப்படிம்மா? இந்த ஏலத்திற்குச் சம்மதித்துத்தானே நீ வந்திருக்கிறாய்? அப்படி இருக்க, நாங்கள் சொல்வது அப்படித்தான் நீ செய்ய வேண்டும். சரி சரி, சும்மா பேசி நேரத்தை வீணடிக்காதே! உன்னைச் சுற்றி இருப்பவர்கள் எல்லாம் உன்னை எப்போது ஏலத்தில் எடுக்க வேண்டும் என்று ரொம்ப ஆர்வமாக இருக்கிறார்கள்,” என்றவர், “உன் முகத்தை நிமிர்த்தி சிரித்த முகமாக நில்லு!” என்ற அந்த ஏலம் எடுக்கும் நபர் அவளைத் திரும்பி நிற்க வைத்துவிட்டு, மேடையில் நின்றிருந்தவளைக் காட்டி, “இதோ, உங்கள் முன்னாடி நிற்கும் இந்த இளம் பெண் 17 வயது நிரம்பியவள். 17 வயதுதான் என்று தெரிந்ததும், நான் நீ என்று இங்குள்ள அனைவரும் போட்டி போட்டு இந்தப் பெண்ணை வாங்க வந்திருக்கிறீர்கள். இந்தப் பெண்ணின் எடை 48 கிலோ. அவள் உடலில் எந்தவிதமான நோயும் கிடையாது; அவள் நல்ல ஆரோக்கியத்தோடுதான் இருக்கிறாள். இதைவிட முக்கியமான ஒன்று, இந்தப் பெண் இப்போது வரை கன்னிப் பெண்ணாகத்தான் இருக்கிறாள். அவள் உடல் பரிசோதனை செய்ததும், அவளுக்கு எடுக்கப்பட்ட கன்னித் தன்மைச் சான்றிதழும் உங்கள் முன்பு வைக்கப்பட்டிருக்கிறது. அவளைப் பற்றி இன்னும் நன்றாகத் தெரிய வேண்டும் என்றால், அவள் மேல் போர்த்தியிருக்கும் போர்வையை விலக்கினால் உங்களுக்கு அனைத்தும் விளங்கிவிடும். நான் இப்போது இந்தப் பெண்ணிற்கான ஏலத்தொகையை ஆரம்பிக்கிறேன். நான் அந்தப் பெண்ணின் ஏலத்தொகையைச் சொல்லி முடித்ததும், அந்தப் பெண்ணின் உடலில் போர்த்தியிருக்கும் சால்வையை விலக்கிவிடுவேன். அவள் உடலில் இருந்த சால்வையை விலக்கியதும் மேடையில் இருந்து இறங்கி உங்கள் அருகில் நடந்து வருவாள். அவள் மேலிருந்த சால்வையை விலக்கியதும் நீங்கள் உங்கள் பெட்டிங்கை ஆரம்பிக்கலாம்,” என்ற அந்த ஏலம் எடுப்பவர் சொல்லிவிட்டு, “இங்கே உங்கள் முன்னால் நின்று இருக்கும் இந்த 17 வயது பருவ மங்கையின் ஏலம் எடுக்க ஆரம்ப விலை 100 டாலர்கள்,” என்றான்.
அவன் சொன்ன விலையைக் கேட்டு, மேடையில் நடுவில் நின்றிருந்த அந்த இளம் பெண், தன்னுடைய விலை வெறும் 100 டாலர்கள்தானா என்று எண்ணி, தன்னையே நொந்து கொண்டவள் ஏளனமாக சிரித்தபடி நின்றிருந்தாள்.
தன் நிலையை எண்ணி நொந்து கொண்டு நின்றிருந்த அந்தப் பெண் வேறு யாரும் அல்ல, இலக்கியாதான். அவளை அடித்து இழுத்து வந்த அவளுடைய தாய்மாமன் ராமலிங்கம், மலேசியாவில் அண்டர் கிரவுண்ட்டில் நடக்கக்கூடிய பெண்கள் ஏலம் எடுக்கும் இடத்திற்குத்தான் இலக்கியாவை அழைத்து வந்திருந்தான்.
முதலில் இலாவை அழைத்து வந்த ராமலிங்கம், “ஏற்கனவே உன்னைப் பற்றி எல்லா தகவலும் நான் இங்கே கொடுத்துவிட்டேன். ஒழுங்காக, மரியாதையாக நான் சொன்னபடி இந்த ஏலத்தில் கலந்துகொள். உன்னை நம்பித்தான் நான் நிறைய இடத்தில் கடன் வாங்கி வைத்திருக்கிறேன். உன்னுடைய வயசையும், உன்னுடைய புகைப்படத்தையும் காட்டினதும், உன்னை வாங்குவதற்காக நான் நீ என்று போட்டி போட்டுக்கொண்டு ரொம்பப் பெரிய ஆட்கள் எல்லாம் இங்கே வந்திருப்பதாக அந்த ஏலம் நடத்துகிறவன் என்னிடம் சொன்னான். அவன் நினைத்த மாதிரி உன்னை ஏலத்தில் அதிக விலைக்கு விற்றுவிட்டால், அதில் எனக்குப் பாதி கமிஷன் தருவதாகச் சொல்லி இருக்கிறான். நான் சொன்னபடி இங்கே ஏலத்துக்குச் சம்மதிக்கிறாயா? இல்லை முடியாது, மாட்டேன் என்று அடம் பிடித்தாய் என்றால், என் ஆட்கள் இரண்டு பேரை உன் அம்மாவுக்குக் காவலுக்கு நிறுத்திவிட்டுத்தான் நான் உன்னை இங்கே கூட்டிட்டு வந்திருக்கிறேன். நீ மட்டும் நான் சொல்வதைக் கேட்காமல் பிடிவாதம் பிடித்து, எதுவும் செய்து என்னிடமிருந்து தப்பித்துப் போகலாம் என்று நினைத்தாய் என்றால்…” என்று இலாவைப் பார்க்க, ராமலிங்கத்தையே பயத்தோடு பார்த்துக் கொண்டிருந்த இலாவைப் பார்த்தவன், “இப்போதுதான் நான் நினைத்த மாதிரி என்னை கண்டு பயந்து கொண்டிருக்கிறாள். இவள் மனசு மாறுவதற்குள் இவளை எவனிடமாவது விற்றுவிட்டு பணத்தை வாங்கிக்கொண்டு இங்கிருந்து இந்த ஊரை விட்டே போய்விட வேண்டும்,” என்று நினைத்தவன், “என்ன அப்படிப் பார்க்கிறாய்? நான் சொல்வதையெல்லாம் நீ கேட்கவில்லை என்றால், உன் அம்மாவின் தலை தனியாக, உடம்பு தனியாக வெட்டிப் போட்டு உனக்குக் கடைசியாக உன் அம்மாவைப் பார்ப்பதற்குக் கூட வாய்ப்பு இல்லாமல் செய்துவிடுவேன், ஜாக்கிரதை!” என்றான்.
அவன் சொன்னதைக் கேட்டுப் பதறிய இலக்கியா, “ஐயோ… மாமா, என் அம்மாவை எதுவும் செய்துவிடாதீர்கள்… நான் நீங்கள் சொல்வது படியே செய்கிறேன்!” என்று அவனிடம் கெஞ்சினாள் இலா.
“ம்ம்ம், அப்படி வா! என் வழிக்கு என்னைப்பற்றி இப்போதுதான் நீ நன்றாகப் புரிந்துகொண்டிருக்கிறாய்,” என்றவன் அவளை ஏலத்திற்கு அழைத்து வந்து, சொற்ப பணத்திற்காக விற்பதற்காக வெளியே காத்திருக்கிறான். தான் மட்டும் இன்று அதிக விலைக்குப் போகவில்லை என்றால், தன் அம்மாவைக் கொன்றுவிடுவான் அந்த இரக்கமில்லாதவன் என்று நினைத்துக் கொண்டவள், இறுக்கிய மனதுடன் தன் நிலையை எண்ணி நொந்து கொண்டு நின்று இருந்தாள்.
இலாவை 100 டாலர்கள் என்று சொல்லி ஏலம் நடத்துபவர் ஏலத்தை ஆரம்பித்துவிட்டு, அவளைச் சுற்றி இருட்டில் தங்கள் முகங்களைக் காட்டாமல் மறைந்திருக்கும் செல்வ செழிப்பில் ஜாம்பவான்களைப் பார்த்து ஏலத்தை ஆரம்பித்தார். “இப்போது இந்த 17 வயதுப் பெண்ணை ஏலம் எடுப்பவர்கள், அவள் மீது போர்த்தியிருந்த சால்வையை விலக்கியதும், நீங்கள் கேட்க விரும்பும் ஏலத் தொகையைச் சொல்லி ஆரம்பிக்கலாம்,” என்று சொன்னவன், மேடையை விட்டு கீழே இறங்கிய ஏலம் நடத்துபவன், இலாவின் உடலைச் சுற்றி இருந்த சால்வையில் கை வைத்து அதை விலக்கப் போக…
அப்போது ஒரு குரல் கணீர் என்று “100 மில்லியன் டாலர்கள்!” என்று அழுத்தமாக, கோவமாக கர்ஜித்தது. அந்தக் குரல் வந்த திசையை அனைவரும் பார்க்க, இருட்டில் இருந்தவர்களுக்கும், வெளிச்சத்தில் நின்று கொண்டிருந்தவளுக்கும் அவன் இருக்கும் இடம் தெரியவில்லை. அவன் இலாவை ஏலத்தில் கேட்ட தொகை இந்திய மதிப்பில் 10 கோடி ரூபாய்.
ஏலம் நடத்துபவரே, இலாவை இவ்வளவு விலைக்கு கேட்பார்கள் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவள் ஒரு கணிசமான தொகைக்கு ஏலத்தில் விற்கப்படுவாள் என்று அவர்களுக்கு நன்கு தெரியும். ஆனால், இன்று நடந்த ஏலத்தில் மட்டும் இல்லை, இதற்கு முன்பு நடந்த ஏலங்களில் கூட இந்த அளவுக்கு ஒரு விலையைச் சொல்லி எந்த ஒரு பெண்ணையும் ஏலத்தில் யாரும் எடுத்ததில்லை. ஒரு ரூபாய்க்கு கூடப் பிரயோஜனம் இல்லாத தன்னை இந்திய மதிப்பில் 10 கோடிக்கு யார் ஏலம் கேட்டது என்று ஆச்சரியத்தில் இலா அவர் யார் என்று காணும் ஆவலில் இருந்தாள்.
அங்கே இவளை ஏலம் எடுக்க வந்த மற்றவர்கள், அவளை ஏலம் எடுக்கக் கேட்கப்பட்ட பத்து கோடி ரூபாயைத் தாண்டி அவளை ஏலம் எடுக்க யாரும் முன் வரவில்லை. அவர்கள் அடுத்த தொகையைச் சொல்லி ஏலம் எடுக்க வாய்ப்பு கொடுக்காமல், ஒரே செக்காக 10 கோடி ரூபாயைக் கையெழுத்து இட்டு அவளை ஏலத்தில் வாங்கிவிட்டனர். தன்னை ஏலம் எடுப்பவரைக் காண காத்திருந்தாள் இலக்கியா.

1 comment
Elam eduthathu tamilnu ninaikiren