PISODE 28
சோர்ந்து போய் லிப்ட்டில் இளன் அருகில் நின்று இருந்த காந்தளை பார்த்தவன் பின் தன் போனை எடுத்து நொண்ட ஆரம்பித்தான் . லிப்ட் 100 ல் இருந்து பின்னோக்கி பயணிக்க ஆரம்பித்தது …. அதனூடே காத்தலும் தன் நினைவுகளை ஓட விட்டாள்.
அவள் பார்ட் டைமாக வேலை செய்து கொண்டு இருக்கும்போது சித்ரா அவளுக்கு அழைத்து சில்வர் லைன் ஸ்டுடியோவில் அவளுக்கு இன்டெர்வியுவிற்கான அழைப்பு வந்திருப்பதை கூறியதும்…
அதை கேட்டு காந்தள் மிகவும் சந்தோசப்பட்ட தருணங்களும் அவள் மனதில் ஓட ஆரம்பித்தது. வீட்டிற்கு வந்து சித்ரா , பத்மா இருவரிடமும் தன் சந்தோசத்தை பகிர்ந்து கொண்டது …
அவளுக்காக உடை எடுக்க சென்றபோது அவர்கள் இருவரும் கூட வந்து கடைக்காரரை ஓடியது நினைவில் வர… அவள் சோர்ந்து பொய் இருந்த முகத்தில் அதை நினைத்து லேசாக புன்முறுவல் பூத்தது… அதை இளனும் கவனித்தான் .
இப்பொது லிப்ட் 99வைத்து தளத்தை கடந்து இருந்தது .
பிறகு இன்டெர்வியூ கிளம்பும் முதல் நாள் இரவு பத்மா அவளுக்காக ஆசையாக வழங்கிய செயினும் … அவள் வேளையில் தேர்ச்சி பெற வேண்டும் என்று மூவரும் இறைவனிடம் பிரார்தித்ததும் நினைவில் வர காந்தளின் கை தன்னிச்சையாக அவள் கழுத்தில் பத்மா போட்டுவிட செயினை தடவிப்பார்த்தது .
இப்பொது லிப்ட் 95வது தலித்தை தாண்டி இருந்தது .
முதல் நாள் இன்டெர்வியூவிற்காக சில்வர் லைன் ஸ்டுடியோவின் முன்பு நின்று வானுயர்ந்த அந்த கட்டிடத்தை பார்த்ததும் … அதை தொடர்ந்து இன்டர்வியூ நடக்க இருந்த ஹாலிற்கு வந்து எழுத்து தேர்வை வெற்றிகரமாக முடித்து வெளியே வந்ததும் அடுதது நடக்க இருந்த நேர்காணலுக்காக வெயிட்டிங் ஹாலில் காத்திருந்தும் மதியம் நடக்க இருந்த நேர்முகத்தேர்வு அடுத்த நாள் ஒத்தி வைக்க பட்டிருந்ததும் யோசித்தவளுக்கு …
தான் இன்டெர்வியூ வந்து இருந்த அதே நாளில் தானே மதிமாறனும் இன்டெர்வியூ வந்திருப்பான். அப்போ நான் ஏன் அவனை கவனிக்கவில்லை … என்று இப்பொது அவள் மனம் மதியை பற்றிய நினைவுகளை ஓடவித்தது . அவனை நினைத்த அடுத்த நொடி அவள் முகம் சோகத்தை தத்தெடுத்தட்டுக் கொண்டது …
இப்பொது எதற்கு தேவையில்லாமல் அவனை பற்றிய நினைவுகள் தனக்கு வரவேண்டும் என்று அவளுக்கு தோன்றவே பெருமூச்சொன்றை விட்டவாறு லிப்ட் எந்த தலத்தில் போய்க்கொண்டு இருக்கிறது என பார்த்தாள் அது 87 என்று காட்டியது.
அதை பத்துவிட்டு அவள் பார்வை தன் அருகில் நின்று இருந்த இளனை யதார்த்தமாக தழுவ… அவனை பார்த்ததும் நேர்முக தேர்வு கேன்சல் ஆனா அன்று மதியம் தான் இந்த சிட்டியில் உள்ள பிரபல மாலில் நேரத்தை செலவிட்டதும்…. அந்த நேரத்தில் தன் அருகில் வந்து அமர்ந்து இளன் பேச்சுக்கொடுத்ததும்… பிறகு தன் கையில் கற்றை பணத்தை திணித்து அவளுக்கு புதிய ஆடை வாங்க சொன்னதும் நினைவில் வர…
தன்னிச்சையாக குனிந்து இன்று அவள் அணிந்து வந்த ஆடையை பார்த்தாள் . அன்று இளன் கொடுத்த பணத்தில் அந்த மாலில் 80% தள்ளுபடியில் வாங்கிய அதே ஆடையை இன்றும் அணிந்து வந்தது …
இல்லை… இல்லை நேற்று மதியின் பிறந்தநாள் விழாவிற்கு இளன் பணத்தில் வாங்கிக்கொடுத்த ஆடையை தன அணிந்து கொண்டு சென்றதும்… இன்று அதே ஆடையை அணிந்து இருக்க… அது சற்று வெளுத்துபோய்யும்… கசக்கியும் காணப்பட்டது .. அதை பார்த்தவளுக்கு அவன் முன்பு இப்படி அழுக்கேறிய ஆடையுடன் ஒரு நாள் முழுக்க ஒரே அறையில் வேலை செய்திருக்கிறோமே தன்னை பற்றி அவன் என்ன நினைத்து இருப்பான் என்று தோன்றவே தன் அருகில் நின்று போன் நோண்டிக்கொண்டு.
இருந்தவனை பார்த்தாள் .
அவன் முகத்தை கவனித்தாள் அவன் இமைகள் போனில் நிலைகுத்தி இருக்க… அவள் பார்வை அவனை விட்டு விலகிய நேரத்தில் தன்னிச்சையாக அவள் பார்வை இளனின் இதழில் விழுந்தது .
அவன் முதன் முறை மாலில் அவளை இழுத்து வைத்து முத்தம் கொடுத்தது நினைவில் வர … அந்த நினைவில் அவள் ஒரு நிமிடம் சிலிர்த்துவிட சட்டென்று அவன் மீது இருந்த மொத்த பார்வையையும் திருப்பிக்கொண்டு வேறுபக்கம் திருப்பிக்கொண்டாள்.
இப்பொது லிப்ட் 81வது தலத்தை தண்டி இருந்தது.
அதன் பின் இளனுடனான அவள் சந்திப்பும் அவனை பார்த்த அந்த இரண்டு முறையும் அவளுக்கு அவன் முத்தம் கொடுத்ததும் நினைவில் வந்து போக… “ச்சே… என்ன மனசு இது … இப்போதான் மதி செய்த காரியத்துக்கு ஆஃபிஸில் எல்லாரும் என்னை பழி சுமாத்திட்டாங்களேன்னு நான் கவலை போட்டுட்டு இருக்கும்போது . இந்த நேரத்தி இப்படி ஒரு யோசனை தனக்கு ஏன் வந்தது” என்று அவளையே நொந்தது கொண்டாள்.
முதல் முறை வேலைக்கு சேரும்போது நடந்த மீட்டிங் ஹால் இருந்த தளத்தில் லிப்ட் இப்பொது வந்து நின்றது . லிப்ட் கதவு திறக்க… அந்த தளத்தில் வேலை செய்யும் பியூன் அனைவரும் சென்றுவிட்டார்களா என்று சரிபார்த்துவிட்டு லிப்ட் என்ற வந்தவன் உள்ளே இருந்த இளனையும் , காந்தளையும் பார்த்தவன் லிபிட்டிற்குள் ஏறாமல் நின்றுவிட்டான் .
காந்தள் அவனை உள்ளே வர சொல்லலாமா ? வேண்டாமா ? என்னும் ரீதியில் அவனை பார்த்துக்கொண்டு இருக்க… அப்போது லிப்ட் தானாக மூடிக்கொண்டது .
இளனோ அந்த பியூனை வரச்சொல்லவில்லை , அந்த பியூனும் உள்ளே வரவில்லை.
இளன் லிப்ட்டில் செல்லும்போது அவனுடைய பிஏ தவிர்த்து வரு யாரும் வரமாட்டார்கள் . அதனால் தான் அநத பியூன் நின்றுவிட்டான்.
அதைத் தாண்டி லிப்ட் 74வது தளத்தில் வந்து நின்றது. காந்தள் ராணியின் டிபார்ட்மெண்டில் வேலைக்கு சேர்ந்து கடந்த 1 வருடமாக வேலை பார்த்த அவளுக்கு மிகவும் பரிட்சயப்பட்ட தளம் அது …
அந்த தளத்தை பார்த்ததும் கண்களை மூடி பெருமூச்சு விட்டவள் மதியுடன் முதல் நாள் வேலைக்கு வந்தது … அதன் பின் வந்த நாட்கள் இருவரும் அடிக்கடி தனியே லிப்ட்டில் சந்தித்துக்கொண்டது என்று அவள் மனதில் மறக்க நினைத்த மதியின் நினைவுகள் படமாக ஓட ஆரம்பித்து இருந்தது . அவனோடு அவள் பழகிய நாட்கள்… இருவரும் தினமும் ஒரே ரயிலில் பிரயாணம் செய்தது . இருவருக்கும் பிடித்த புத்தகங்களை பற்றி பேசுவது . இடையில் ஏதாவது ஒரு ரெஸ்டாரெண்டில் யாருக்கும் தெரியாமல் இருவரும் சந்தித்து பேசிக்கொள்வது … அவனுடனான தன் காதலை இளனை நம்பவைப்பதற்காகவும், அவனை வெறுப்பேற்றவும் இளன் கண் முன்னாலேயே தான் மதிக்கு தன் காதலை சொன்னது…
அதை கண்டு பின் இளன் தன்னை தொந்தரவு செய்வதை முற்றிலுமாக நிறுத்தி விட்டதும், அதன் பின்னான மதி , காந்தள் முதல் முத்தத்தில் ஆரம்பித்து அவனை வேறு ஒரு பெண்ணுடன் அதுவும் அவன் பிள்ளைக்கு தாயான பெண்ணோடு அவன் சந்தோசமாக பேசிக்கொண்டு சென்றதை முதன் முறை பார்த்தது.
தனக்கு மதி துரோகம் செய்தது என ஒவ்வொன்றாக நினைத்தவள் மனம் கனக்க ஆரம்பித்தது. அவன் [பிறந்தநாள் விழாவில் வைத்து அவன் செயலை ஊறர்முன் அவன் உறவினர்கள் முன்பு அம்பலப்படுத்தியது … இன்று ஆஃபிஸில் இருப்பவர்கள் எல்லாம் மதியை அவன் செய்த தவறை பற்றி பேசாமல் அவனை காதலித்த ஒரே பாவத்திற்காக மொத்த ஆட்களின் கவனமும் தன் பக்கம் திரும்பி தன்னை தரக்குறைவாக அனைவரும் பேசும்படி ஒரு சூழ்நிலை அமைந்தது அவரை எண்ணியவளுக்கு கண்களின் கண்ணீர் பெருக்கெடுத்து அவள் கன்னங்களை நனைத்து சென்றது .
கண்கள் மூடி காந்தள் அழுதுகொண்டு இருக்க… அவள் கன்னத்தில் வழிந்த கண்ணீரை ஒரு சூடான் வெதுவெதுப்பான விறல் வந்து அழுந்த துடைக்கவும் அதை உணர்ந்த காந்தள் மனதில் எழுந்து அவளை ஆட்டிப்படைத்த நினைவோடு சோர்ந்து இருந்தவள் மெல்ல கண்கள் திறந்து பார்த்தாள் ,
அவள் முகத்திற்கு மிக அருகில் இளனின் முகம் இருக்க… அவன் கண்கள் கண்ணீரோடு தேங்கி இருந்த காந்தள் கண்களை ஊடுருவிக்கொண்டு இருந்தது. அவனை அவ்வளவு நெருக்கத்தில் பார்த்தவளுக்கு இதயம் வெளியே குதித்துவிடும் போல ஆகிவிட்டது .
உடனே அவனை விட்டு விலகிப்போனவளின் கன்னத்தை பிடித்து கந்தளாய் நகரவிடாமல் பிடித்து நிறுத்தியவன் “என்ன உன்னோட காதலன் அந்த மதியை நினைச்சு அலறியா? என்னை வேண்டாம்னு ஒதுக்கி தள்ளிட்டு அவன்கிட்டே போனியே… அவன் உனக்கு செய்ததை நினைச்சு அலறியா ?” என்றான் அவள் கன்னங்களில் இருந்த தன் கையின் அழுத்தத்தை கூட்டிக்கொண்டே…
“ஷ்…” என்று வலியில் காந்தள் லேசாக முனகியவள் அவனை நேருக்கு நேராக parththu “என் மனசில் நான் யாரை நினைச்சா உங்களுக்கு என்ன ? முதல்ல என்னை விடுங்க…” என்றுவில் தன் கன்னத்தில் இருந்த இளனின் கையை தட்டிவிட்டவள் அவனை தாண்டி லிப்ட்டை பார்க்க… அது 3 வது தளத்தை காட்டியது. நேராக வந்தவள் சீகிரியாம் லிப்ட் திறக்க வேண்டும் என்று அங்கிருந்த பட்டன்களை அழுத்தினாள் தனக்கு பின்னால் நின்று இருந்த இளனை ஓரக்கண்ணால் பார்த்தபடி .
அவள் பின்னல் நின்று இருந்தவன் காந்தள் தன்னை இப்போதும் உதாசீனப்படுத்திவிட்டு செல்லும் கந்தளாய் பின்னல் இருந்து நெருங்கி இருந்தவன் . லிப்ட் பட்டன்களை அழுத்திகொண்ட்னு இருந்த கந்தன் கையை பிடித்துகே கொண்டு மற்றொரு கையாள் .லிப்ட்டை அதற்கு மேலும் செல்லவிடாமல் நிறுத்தி வைத்தான்.
அவன் இப்படி செய்யவும் அவசரமாக தன் கையை பிடித்து இருந்தவனின் கையை தட்டிவிட்டவள் அவனை திரும்பி பார்த்து “இப்போ எதுக்காக லிஃப்ட்டை ஸ்டாப் பண்ணுணிங்க ?” என்று அவனை முறைத்தவள் திரும்பி லிஃப்ட்டை இயக்க போக…
அவள் கையை பிடித்து தடுத்தவன் அவளை ஒரே சுழற்றில் தன்னை பார்க்குமாறு திருப்பி லிப்ட்டின் சுவற்றில் தள்ளி அழுத்தியவன் “இதுக்கு தான் லிப்ட்டை நிறுத்தினேன்” என்று அவள் இதழை நோக்கி குனிந்தான்.
அவன் முத்தம் கொடுக்க வருவதை பார்த்த காந்தள் “நானும் மதியும் ஒருத்தருக்கு ஒருத்தர் முத்தம் கொடுத்துகிட்டோம் அது உங்களுக்கு தெரியுமே.., அப்படி இருக்க இப்போ இன்னோருத்தனுடைய காதலியா இருந்தவளை .. வேற ஒருத்தன் முத்தம் கொடுத்த எனக்கு நீக்க இப்போ முத்தம் கொடுக்க போறிங்களா ?” என்று அவனிடம் திமிராக பேசியபடி அவனை பார்த்தாள் .
அவள் அப்படி சொன்னதும் காந்தள் உதடு வரை நெருங்கி இருந்தவன் அவள் கண்களை ஆழமாக பார்த்து அவள் இதழை தன் கட்டை விரலால் அழுந்த தேய்த்தவன். நான் முத்தம் கொடுத்த என்னோட காதலிக்கு தான் அவன் முத்தம் கொடுத்தான். நீ என்னோட காதலி … “என்றான்.
அவனை ஆச்சர்யமாக பார்த்த காந்தள் தன்னை காதலி என்று சொல்பவனை என்னவென்று நினைப்பது என்று தெரியாமல் தடுமாறியவள் பின் அதை கண்டுகொள்ளாமல் ” நான் மதியை ஒரு வருசமா காதலிச்சிட்டு இருக்கேன். அவன்கூட நிறைய சுத்தி இருக்கேன். நாங்க ரெண்டு பெரும் காதலர்களா எங்களுக்குள்ள… முத்தத்தையும் , எங்களையும் பரிமாறி இருக்கோம் . அப்படி இருக்க அப்போ இந்த உதடு அவன் முத்தமிட்ட உதடு… அவன் என் உதட்டுல மட்டும் முத்தம் வைக்கல… என்னோட உடம்பு முழுக்க… ” என்று சொல்லி அவள் கொஞ்சமும் பயமோ பதட்டமோ இல்லாமல் அவளுக்கும் ,மதிக்கும் நடக்காத ஒன்றை நடந்தது போல பொய் சொன்னவள் இளனின் கண்களை பார்த்து திமிராக கூறினாள்.
அதை கேட்டு காந்தளை விட்டு விலகி நின்று அவளை பார்த்தான்.
தான் சொன்னதை கேட்டதும் விலகி நின்றவனை பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டவள் . இளன் இனி தேவை இல்லாமல் தன்னிடம் அத்து மீறமாட்டான் என்று காந்தள் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் சுவற்றில் பள்ளிபோல ஒட்டிக்கொண்டு கண்களை உருட்டி உருட்டி தன்னை பார்த்துக்கொண்டு இருந்த காந்தளை பார்த்து நக்கலாக சிரித்தவன் . அவள் கையை பிடித்து தன் அருகில் இழுத்து தன் கைவளைவிற்குள் நிற்க வைத்தவன் .
“உன்னை உன்னோட அப்பார்ட்மெண்ட் முன்னாடி வெச்சு ஒரே ஒரு முறை அதுவும் லேசாக உன் உதட்டை உரசினான் அவ்ளோதான். அதுக்கு பிறகு அவன் உன்னை நெருங்கி இருக்கவே மாட்டானே … ” என்றான் .
இளன் சொன்னதை அவளால் நம்ப முடியவில்லை . “அவனுக்கு எப்படி ? என்று யோசித்தவள். முதல் முறை மதி தனக்கு முத்தம் வைத்ததை பார்ட்டி நடந்து முடிந்த மறுநாள் தான் இளனிடம் பணம் கொடுக்க போன போதே இவன் தன்னிடம் சொன்னானே… அப்போ… அப்படின்னா இவன் எங்களை வாட்ச் பங்கிட்டு இருக்கானா ? ” என்று அதிர்ந்து அவனை பார்த்தவள் பின் அதை வெளிகாட்டிக்கொள்ளாமல் உள்ளுக்குள் மறைத்துக்கொண்டு…
” நீங்க பார்த்தது நாங்க ரெண்டு பெரும் முதல் முறையா முத்தம் பரிமாறிக்கிட்டது… ஆனா அதுக்கு பிறகு நாங்க நிறைய முறை ” என்று அவள் சொல்லி முடிக்கவில்லை .
பேசிக்கொண்டு இருந்தவள் இதழை தன் இதழால் வதைத்து முத்தமிட்டவன் அக்க்ரோச முத்தம் கொடுத்து அவள் இதழை பிரித்தவன் “நீங்க ரெண்டு பெரும் எதனை முறை முயற்சி செய்து இருந்தாலும் அவன் உன்னை நெருங்கி இருக்கவே மாட்டான். நெருங்க நான் விட மாட்டேன் ” என்றவன் மீண்டும் குனிந்து அவளுக்கு முத்தம் வைத்தவன் .
“நான் மட்டும் தான் உனக்கு முத்தம் கொடுக்கணும் . நீ பார்ட்டியில் என்னை உதாசீனப்படுத்திட்டு போன அந்த ஒரு நாள் உன் மேல இருந்த கோபத்தில் நான் நிறைய ட்ரின்க் பண்ணிட்டேன். நான் சரியா நிதானத்துல அந்த நேரத்துல அவன் உன்னை முத்தம் கொடுக்க வரும்போது அதை பார்த்துட்டு நான் தடுக்கமா போய்ட்டேன்” என்றவன் .
“அவன் எப்போ எல்லாம் உன்னை நெருங்கி வரானோ… அப்போ எல்லாம் அவனுக்கு என்னோட முகமும் நான் அவனை எச்சரிச்சதும் தான் நியாபகம் வந்திருக்கும் ” என்றவன் .
“உன்னை எப்போ நான் பார்த்தேனோ… அப்போவே நீ எனக்கு தான்னு நான் பிஸ் பண்ணிட்டேன் . யார் என் வழியில் வந்தாலும் அவங்களை தூக்கிப்போட்டது உன்னை எனக்கு உரிமை ஆக்கிக்கொள்ள எனக்கு பெருசா நேரம் எடுக்காது. ஆனா நீ எப்போ என்னை வேண்டாம்னு சொல்லிட்டு என் முன்னாடி அந்த மதியை லவ் பண்றேன் சொல்லி என்முன்னாடி அவன் கைபிடிச்சு கூட்டிட்டு போனியோ… அப்போவே முடிவு பண்ணினேன். அவனை நம்பி போனா நீ நினைச்சது நடக்குதுன்னு எனக்கு முன்னவே தெரியும் ” என்றான்.
ஏன் என்பது போல காந்தள் இளனை பார்க்க…
“ஏன்னு யோசிக்கிறியா ? அவன் எப்படிப்பட்டவன்னு எனக்கு நல்லாவே தெறியும் ஏன்னா அவன் என் தம்பி …. என் தம்பியை பற்றி எனக்கு தெரியாதா?” என்றான் அவளை ஏளனமாக பார்த்து .
“என்ன! மதி உங்க… உங்க தம்பியா !” என்று அதிர்ந்தாள் காந்தள்.
“ஆமா இந்த இளமாறனோட ஒரே தம்பி தான் அந்த மதிமாறன் ” என்று அவளை மேலும் அதிர்ச்சியடைய வைத்தான் .
காந்தலின் பலவிதமாக சிந்தனைகள் ஓடியது “அப்போ என்னை சுற்றி இந்த ஒரு வருடமாக நடந்த அனைத்து நிகழ்வுகளுக்கும் காரணம் இவனா ? இல்லை அது எல்லாம் எதேர்சையாக நடந்தாத்தா ” என்று புரியாமல் குழம்பியவள் அப்படியே மயங்கி அவன் கைகளில் சரிந்தாள்.
அவள் மயங்கியது கண்டு பெரிதாக அதிர்ந்து போகாத இளன் மயங்கியவளை தூக்கி தன் தோளில் போட்டுக்கொண்டு லிப்ட்டை இயக்கியவன் . அவனுக்காக ப்ரத்யேகமா அமைக்கப்பட்ட தன்னுடைய தனிப்பட்ட கார் பார்க்கிங்கிற்கு அவளை தொக்கி வந்தவன் தன் காரில் அவளை அமர் வைத்து சீட் பெல்ட் போட்டு விட்டவன் . சோர்ந்து போன அவள் முகத்தை பார்த்து கண்களின் ஓரத்தில் துளிர்த்து இருந்த அவள் கண்ணீரை துடைத்தவன் ” ஹே BOO .. இனி எப்பவும் நீ எனக்கு தான் எனக்கு மட்டும் தான் ” என்றவன் வந்து காரை ஸ்டார்ட் செய்து தன் அவுட் ஹௌஸிற்கு காந்தளுடன் கிளம்பினான் .
எனது முதல் கதையை அமேசானில் பதிப்பித்ததற்கு நானா மிகவும் சந்தோசமாக உள்ளேன். போதையடி நீ எனக்கு இந்த கதை முதல் பாகம் நிறைவடைந்தது. கூடிய சீக்கிரமே போதையடி நீ எனக்கு பாகம் 2 வெளியாகும் . இந்த கதையை படித்தவர்கள் இந்த கதை குறித்த உங்கள் கருத்துக்களை விமர்சனங்களாக பதிவிட வேண்டுகிறேன் .
முதல் முறை அமேசானில் கதை பதிவிடும் எனக்கு உங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் .
போதையடி நீ எனக்கு பாகம் 2 layastamilnovel.com என்னும் வெப் தளத்தில் தொடர்ந்து வெளிவரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்
உங்கள் தோழி
சினாமிகா (SINA)
