EPISODE 27
அவனுக்கு சாப்பாடு பரிமாறும் வேளையில் அவள் கையை பிடித்து அவள் நின்று இருந்த இடத்தை விட்டு தன்னை நோக்கி இழுத்தான் . இதை சற்றும் காந்தள் எதிர்பார்க்கவில்லை . அவன் இழுத்தவேகத்தில் சற்று தடுமாறி அவன் அருகில் வந்து நின்றாள்.
அவள் முகத்தை ஆழ்ந்து பார்த்தவன் “எனக்கு நானே பரிமாறிப்பேன் . நீயும் சாப்பிடு” என்றான் .
அவன் சொன்னது கெட்டவள் “அப்பாடா இப்போதாவது நான் சாப்பிட போக அனுமதிதானே” என்று நினைத்தவள்
“ஓகே சார் , நீங்க சாப்பிடுங்க … நான் கான்டீன் போய் சாப்பிட்டு வரேன் ” என்று அங்கிருந்து செல்லப்போக …
“நீ கான்டீன் போய் போவ்ட் ஆர்டர் பண்ணி சாப்பிட்டு வரதுக்கு லேட் ஆகிடும் . நீயும் இங்கயே என்னோடவே சாப்பிடு “என்றவன் தன் பிளேட்டில் உணவு எடுத்து போட்டு சாப்பிட ஆரம்பித்தான் .
காந்தள் என்ன செய்வது என்று தெறியாமல் நின்று இருக்க… சாப்பிட்டுக்கொண்டே நிமிர்ந்து அவளை பார்த்தவன் “ம்ம்… சாப்பிடு நிறைய வேலை இருக்கிறது” என்றான் .
“இல்லை சார் பரவாயில்லை. நீங்க சாப்பிடுங்க… உங்களுக்காக தான் சாப்பாடு கொண்டு வந்து இருக்காங்க . நான் கேன்டீனில் சாப்பிடுகிறேன் ” என்றாள்
“எனக்காக தான் கொண்டு வந்தாங்க அதுக்காக இவ்ளோ உணவையும் நானே சாப்பிட போறது இல்லை . ம்ம்…சாப்பிடு “என்றான் இறுகிய குரலில் . அதன் பின் அவளிடம் எதுவும் சொல்லவில்லை குனிந்து சாப்பிட ஆரம்பித்தான்
அதன் பின் அவள் எதுவும் பேசாமல் அவன் எதிரே இருந்த சேரில் அமர்ந்த்து கொண்டு வந்து இருந்த உணவை எடுத்துப்போட்டு சாப்பிட ஆரம்பித்தாள்
இளன் சாப்பிட்டு முடித்தவன் எழுந்து தன் மேஜைக்கு சென்றான் கட்னஹ்லை பொறுமையாக சாப்பிட்டுவரும்படி கூறிவிட்டு சென்றான்.
அவள் சாப்பிட்டு முடித்து திரும்ப வரும்வரை அவளை தொந்தரவு செய்யவில்லை அவன்.
அவள் சாப்பிட்டு முடித்து பாத்திரங்களை எடுத்து வைக்க போக… “சிவா வெளியே தான் இருப்பான் அவன் வந்து இந்த வேலையை பார்த்துப்பான் . நீ இங்கே வா…” என்று அவளை தன் பக்கம் அழைத்தான் .
“சிவா” என்று யோசித்தவள் சாப்பாடு கொண்டு வந்த இளன் வீட்டு வேலையாளாக இருக்கும் என்று அவளுக்கு தோன்றியது . அவனிடம் வந்தவள் இளனை பார்க்க…
அவள் கொடுத்த அணைத்து டிசைன்களை சரிப்பர்த்து அவள் முன்பு நீட்டியவன் இந்த டிசைன்ஸ் இல்லம் ரீஒர்க் பண்ணுங்க என்ன … என்ன மற்றம் வேணும்னு அதில் குறிச்சு இருக்கேன் ” என்றான் .
அவன் கொடுத்த பைலை பார்த்தவளுக்கு மலைப்பாக இருந்தது . எதுவும் பேசாமல் பைலை வாங்கியவள் தன் மேஜைக்கு சென்று அமர்ந்து வேலை பார்க்க ஆரம்பித்து இருந்தாள் .
அதன் பிறகு அவளிடம் வேலைவாங்கிய வண்ணம் இருந்தான் இளன்.
வேலைகளுக்கு இடையில் காந்தள் போன் மெசேஜ்களால் நிறைந்து வழிந்துகொண்டே இருக்க… அவள் போன் அதிர்ந்துகொன்டே இருந்தது . மெல்ல இளநை நிமிர்ந்து பார்த்தவள் தன் மொபைலை எடுத்து அதில் வந்திருந்த செய்திகளை I பார்க்க ஆரம்பித்து இருந்தாள்.
ஆஃபிஸில் வேலை செய்பவர்களுக்கு என்று ஒரு வாட்ஸாப்ப் குழு இருக்கிறியாது அதில் தான் செய்தி வந்து கொண்டே இருந்தது. அதை ஓபன் செய்து பார்க்க ஆரம்பித்தாள் ” டேய் ரோஹன் உனக்கு விஷயம் தெரியுமா ? நம்ம ராணி மேடாமோட டிபார்ட்மெண்டில் வேலைபார்த்த காத்தலும் , அதே டிபார்ட்மெண்டில் வேலை பார்த்த மதியும் லவ் பண்ணிட்டு இருந்திருக்காங்க “என்றான் ஒருவன்,
“டேய் இது பழைய செய்தி … எங்களுக்கு எல்லாம் இது எப்பவோ தெரியும். அவங்க ரெண்டு பேரும் யாருக்கும் தெரியாம ஒளிஞ்சு ஒளிஞ்சு பேசுறதை நானே நிறைய முறை பாத்திருக்கேன் ” என்றான் ராகுல் .
“ஹேய் அப்பறோம் ஏன் டா மதி காந்தளை லவ் பண்ணிட்டு இருக்க அப்போவே வேற ஒரு பொண்ணு கூட தொடர்பு வெச்சிருந்திருக்கான் ” என்று ஒரு பெண் கேள்வி எழுப்பினாள்.
“யாருக்கு தெரியும் அவன் ஒரே சமயத்துல காந்தளையும், அந்த பெண்ணையும் சமளிக்குற அளவுக்கு தெம்பு உழவனை இருந்திருப்பான் ” என்றான் ஒருவன் .
“ச்சே…ச்சே…காந்தள் ரொம்ப நல்ல பொண்ணு அவ இந்த மாதிரி காரியம் எல்லாம் செய்ய மாட்டா ” என்று ஒரூ பெண் கந்தலுக்கு பரிந்து பேசினாள்
.
அதை படித்த காந்தளுக்கு சற்று நிம்மதியாக இருந்தது. ஆனால் அந்த நிம்மதியை குலைக்கும் வகையில் அடுத்த மெசேஜ் வந்து விழுந்தது .
“ஹே… யாரையும் தோற்றத்தை பார்த்து இடை போடக்கூடாது . அதுக்கு எக்ஸாம்பிள் இந்த காத்தலும், அந்த மதியும் தான். காந்தள் கூட லவ்ல இருக்கும்போதே இனொரு பொண்ணு கூட அவன் ஒண்ணா இருந்து அந்த பொண்ணை கர்ப்பம் ஆக்கி இருக்கான். அப்போ காந்தளை சும்மா விட்டு இருப்பான்னு நினைக்குறிங்களா ” என்றால் ஒரு பெண் .
“இருக்கலாம் யாருக்கு தெரியும் அந்த பொண்ணு உஷாரா இல்லாம மதி கிட்ட புள்ளைய வாங்கி இருக்காதா… ஆனா காந்தள் அதில் கெட்டி காரி போல… அவ பாதுகாப்பா தான் இருந்து இருப்பா … ” என்றாள் இன்னொருத்தி .
“யாருக்கு தெரியும் ஒருவேளை காந்தள் கூட மதியால கர்ப்பம் ஆகி இருக்கலாம் . விஷயம் வெளியே தெரியுறதுக்குள்ள அதை கலைக்கவும் செய்து இருக்கலாம் ” என்று இன்னொருத்தி குண்டை தூக்கி போட்டாள்.
“அப்பப்பா… இங்க என்ன நடக்குதுன்னே புரியலை இவங்க எல்லாம் ஆபீஸ்க்கு வேலை செய்ய வரங்களை இல்ல் டேட் செய்ய வரங்களானே தெரியலை ” என்று ஒருத்தி பேசினாள்.
இதை எல்லாம் படித்த காந்தளுக்கு தான் ஒட்டு மொத்தமாக உடைந்து சுக்குநூறாக போனது போல உணர்ந்தாள் . எப்படி இவர்களால் என்னை பற்றி எதுவும் தெரியாமல் பேச முடிகிறது . மதி அப்படி ஒரு விஷயத்தை செய்தால் நானும் அவனுக்கு இணங்கி… ச்சீ…ச்சீ… நினைக்கவே கேவலமா இருக்கு ” என்று தன்னையே நொந்தது கொண்டால்.
அவள் இதயம் கனத்தது கண்களில் கண்ணீர் பெருகி திரையில் எழுத்துக்கள் தெரியாத அளவுக்கு கண்ணீர் மறைத்தது. அவள் அழுகை வெடித்துவிடும் போல இருந்தது . அந்த வாட்ஸாப்ப் குரூப்பில் காந்தளை பற்றி மேலும் மோசமாக மெஸேஜ்கல் அந்த வண்ணம் இருக்க… அவளால் அதிக எல்லாம் படிக்க முடியவில்லை . ஓவென்று கதறி அலத்தோன்றியது அவளுக்கு .
அப்போது திடீர் என்று அவள் மேஜையில் யாரோ வேகமாக தட்டவும் அதிர்ந்து பொய் நிமிர்ந்து பார்த்தாள் . அவள் மேஜையின் மேல் தன் இரு கைகளையும் ஊனப்பிரி நின்று இருந்த இளன் அவளை ஊன்றி பார்த்துக்கொண்டு இருக்க…
அவனை இங்கு எதிர்பார்க்காதவள் சட்டென்று இருக்கையில் இருந்து எழுந்தாள் . அவசரமாக தன் கண்ணீரை துடைத்துக்கொண்டு ” சார்… ” என்றால் தயங்கிக்கொண்டு .
“நான் கொடுத்த ஒர்க்கை முடிச்சுட்டீங்களா ?” என்றான் இருக்கியா முகத்தோடு.
“இ…இல்ல… சார் ” என்றாள் .
“ம்ம்….சீக்கிரம் முடிங்க இன்னும் நிறைய பெண்டிங் ஒர்க்ஸ் இருக்கு ” என்றவன்.
அவள் முன் ஒரு பைலை [போட்டு “முதல்ல இந்த பைலில் இருக்கருங் எல்லா ஒர்க்கையும் டைப் பண்ணி பிரிண்ட் அவுட் எடுத்துட்டு வாங்க” என்றவன் அவன் இருக்கைக்கு சென்று அமர்ந்தான் .
அவளும் இ்ளன் சொன்னது போல வேலையை முடித்து வான் முன்பு வந்து நீட்ட … அதை வாங்கிக்கொண்டு வேறொரு வேலையை கொடுத்து அவளை வேலைவாணகைகொண்டு இருந்தான். அவளுக்கு உடல் மனம் இரண்டும் மிகவும் சோர்ந்துவிட்டது .
மதியின் விஷயம் ஒரு பக்கம் அவள் மூளைக்குள் ஓடிக்கொண்டு இருக்க… மறுபக்கம் இளன் அவளை ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் வேலை வாங்கிக்கொண்டு இருந்தான் .
காந்தளுக்கு உக்கரகூட நேரம் தராமல் சிறிதும் அவள் அழுத்தத்தை பார்த்தும் எந்த ஒரு உணர்ச்சிகளையும் காட்டாமல் அவளை சிறிது நேரம் கூட இஓய்வு எடுக்க விடாமல் வேலை வாங்கிக்கொண்டே இருந்தான்
மாலை வேலை முடியும் நேரம் தாண்டியும் காந்தள் வேலை செய்து கொண்டு இருந்தாள் . சொல்லப்போனால் அவளுக்கு வேலை நேரம் முடிந்தது கூட தெரியாத அளவுக்கு அவளை வேலை வாங்கினான் இளன்.
அவள் சோர்ந்து அமர்ந்த வேளையில் வந்து எதாவது பைலை நீட்டி அதை சரிபார்க்க சொல்வதும். பெண்டிரைவில் சில வேலைகளை கொடுத்து அதை பிரிண்ட் அவுட் எடுத்து கோப்புகளாக மாற்றி தரவேண்டும் என்று வேலை வாங்கிக்கொண்டே இருந்தான்.
மணி 8 ஐ கடந்திருக்கும் வேளையில் சோர்ந்து பொய் மிகவும் டயர்டாக இருந்த காந்தலிடம் வந்தவன் . ” ஓகே போதும் … எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு… நீ வீட்டுக்கு கிளம்பு மற்றவேலையை நாளைக்கு பார்த்துக்கொள்ளலாம் ” என்று அவளை கிளம்ப சொன்னான்.
சரி என்று தலையை ஆடியவள் தன் கைப்பையை எடுத்துக்கொண்டு அவன் கேபினை விட்டு வெளியே வந்தவள் அப்போதுதான் பார்த்தான் . அங்கு ஆஃபிஸில் யாரும் இல்லை வேலை முடிந்து அனைவரும் கிளம்பி இருக்க… அவள் மட்டும் அங்கே தனியாக இருப்பது போல உணர்ந்தாள் .
மெல்ல நடக்க முடியாமல் சோர்வில் லிப்ட்டை நோக்கி காந்தள் நடந்து கொண்டு இருக்க … அவள் வெளியே வந்த சிறிது நேரத்தில் அவளை தாண்டி புயல் போல் கடந்து காந்தளை தாண்டி இளன் லிப்ட்டை வந்தடைந்தான்.
லிப்ட் கதவை திறந்துகொண்டு இளன் உள்ளே சென்றவன் காந்தலுக்காக கதிருக்கு … அவன் கண்ணிமைக்கும் நேரத்தில் தன்னை கடந்து லிப்ட்டில் நுழைவதை பார்த்த காந்தள் என்ன நடக்கிறது என்று புரியாமல் குழம்பி பொய் நின்று இருந்தாள்.
அவள் இனமும் லிப்ட்டில் ஏறாமல் இருப்பதாய் பார்த்து க்ளிட்டை விட்டு வெளியே வந்த இளன் காந்தளை பார்த்து “இப்போ நீ சீக்கிரம் வர போறியா ? இல்லை லிப்ட் திரும்ப வர வரைக்கும் இங்கயே வெயிட் பண்ண போறியா ? ” என்றான் எரிச்சலாக .
100வது மடியில் இருக்கும் லிப்ட் கீழே பொய் அவனை இறக்கி விட்டு பின் திரும்ப மீண்டும் இங்கே வருவதற்கு எப்படியும் 20 நிமிடமாவது ஆகும் அதுவரை இங்கே தனியேகா இருப்பதா என்று யோசித்தவள் சோர்வையும் தாண்டி வேகமாக வந்து லிப்ட்டில் ஏறிக்கொள்ள.. அவளோடு இளனும் ஏறிக்கொண்டு லிப்ட்டை தரை தளத்திற்கு இயக்கினான.
லிபிட்டிற்குள் வேறு யாரும் இல்லை இவர்கள் இருவரையும் தவிர்த்து… காந்தள் தன்னோடு லிப்ட்டில் இருக்கும் இளனை பார்த்தாள். அழுது அழுது கண்கள் வீங்கி முகம் உதடு எல்லாம் வெளிறிப்போய் இருந்த காந்தளை பார்த்தான் இளன்
