News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

போதையடி நீ எனக்கு-26

by Sinamika Writes
444 views
A+A-
Reset

EPISODE -26

அப்போது ராணியுடன் அவள் வேலை செய்யும்போது தன்னோடு வேலை செய்த சிலர் அங்கே வருவதை பார்த்தவள் நேற்று அவர்கள் தன்னை மதியின் பார்ட்டியில் பார்த்தது நினைவிற்கு வர … அவர்களை கண்டதும் அவர்களை எதிர்கொள்ள முடியாமல் லிப்ட்டின் அருகில் இருந்த தூணின் பின்னால் போய் ஒளிந்து கொண்டாள் .

அவரகள் எல்லாம் காந்தள் ஒளிந்து இருந்த தூணை தாண்டி போகும்போது பேசிக்கொனது அவள் காதில் தெளிவாக விழுந்தது

“டேய் மச்சான் காந்தளை லவ் பண்ணிட்டு அந்த மதிமாறன் இனொரு பொண்ணு கூட ஒண்ணா இருந்து இருக்கானே… அப்போ இந்த ஒரு வருசத்துல காந்தளை எப்படி எல்லாம் அனுபவிச்சிருப்பான். அவன் கொடுத்து வெச்ச ஆளு தான் டா… நமக்கு எல்லாம் இப்படி ஒரு ஆளு மாட்ட மாட்டேங்குதே ” என்று சிரித்துப்பேசிக்கொண்டு நின்று இருந்தனர் அதை கேட்டு அதிர்ந்தவளின் கண்கள் கண்ணீரால் நிறைந்தது .

அவரகள் செல்வதை உறுதி செய்தவள் மறைந்து நின்று இருந்த தூணில் இருந்து வெளியே வந்து லிப்ட்டை நோக்கி வரவும் லிப்ட் அங்கே வரவும் சரியாக இருந்தது. லிப்ட் கதவு திறக்கவும் உள்ளே செல்லப்போனவள் லிபிட்டிற்குள் நின்று இருந்த இளனை பார்த்து அதிர்ந்தாள் ,.

வெடித்த அழுகையை கீழ் உதட்டை கடித்து கட்டுப்படுத்தியப்படி அவள் நின்று இருக்க… இ்ளனும் எதுவும் அவளிடம் பேசவில்லை . சிறிது நேரத்தில் லிப்ட் மூடப்போக… அதை கவனித்த காந்தள் அவசரமாக லிபிட்டிற்குள் ஏறிக்கொண்டாள்.

லிப்ட் கதவு தானாக மூடிக்கொள்ள… உள்ளே நின்று இருந்த இளனை ஓரக்கண்ணால் பார்த்தாள் . ஆனால் அவனோ காந்தள் நின்று இருந்த பக்கம் தன் பார்வையை  திருப்பவே இல்லை .

நீண்ட அமைதி அந்த லிபிட்டிற்குள் நிலவியது ஒருவழியாக தைரியத்தை வரவழைத்துக்கொண்டு காந்தள் நேற்று அவளை கீழே விழாமல் காப்பாற்றியதற்கு நன்றி சொல்ல என்னை அவன் புறம் திரும்பினாள் .

சரியாக அந்த நேரம் லிப்ட் கதவு திறக்கவும் தன் வாட்சில் மணியை பார்த்த படி லிபியில் இருந்து வெளியேறி தன்னுடைய கேபினுக்கு சென்றான்.

காந்தள் என்ன செய்வது என்று தடுமாறியவள் கையில் வைத்து இருந்த பைல்களுடன் அவன் பின்னால் சென்றாள்.

தன்னுடைய கேபின் கதவை திறந்துகொண்டு கம்பீரமாக இளன் உள்ளே சென்றுவிட… அவன் அறை கதவு காந்தள் உள்ளே செல்வதற்கு முன் மூடிக்கொண்டது . அவன் அறையின் முன்பு நின்ற காந்தள் உள்ளே செல்லலாமா ? வேண்டாாமா ? என்ற யோசனையில் நின்று இருந்தாள் .

அவள் லிப்ட்டின் அருகில் நின்று இருக்கையில் அவளை பற்றியும் மதியை பற்றியும் பேசிவிட்டு சென்றவர்களின் நினைவு வந்து தன்னை பற்றிய எண்ணம் அடுத்தவர் பார்வையில் எப்படி இருக்கிறது என்று எண்ணி ஒரு பக்கம் அவளுக்கு அவமானமாக இருந்தது. 

நேற்று மதியின் பார்ட்டியில் நடந்த சம்பவம் , இரவு குடித்து… வெகுநேரம் முகம் தெரியாதவனுடன் இரவைக் கழித்து என்று எல்லாமும் வந்து சுறுசுறுப்பாக இருக்க வேண்டிய காலை வேளையில் மிகவும் சோர்வாக உணர்ந்தாள் . அவள் மனம்  மிகவும் அசதியாக அழுத்தத்திற்கு உள்ளாகி காந்தளை மேலும் சோர்வாகியது .

இந்த யோசனையோடு இளனின் அறைக்கு முன்பு காந்தள் நின்று இருக்க… அப்போது அவள் அருகில் வந்த ஒரு பெண் “மேடம் சார் உங்களை உள்ளே கூப்பிடுறார் ” என்று அவளை சுயநினைவுக்கு கொண்டு வந்தாள் .

அவள் பேசியது கேட்டு என்ன ? என்று கேள்வியாக காந்தள் அந்த பெண்ணை பார்க்க…

மீண்டும் அந்த பெண் காந்தலிடம் ” மேடம் சார் உங்களை உள்ளே வர சொன்னார்” என்றாள் .

காந்தள் சரி என்று ஒரு புன்முறுவலோடு அந்த பெண்ணை பார்த்தது தலையிற் ஆடியவள் நீண்ட மூச்சை இழுத்து உள்வாங்கியவள் அவன் கேபின் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள் . 

அவள் வரும்போது அவளுக்கு முதுகு காட்டி சேரை திருப்பியபடி அவன் இருந்த தலத்தில் இருந்து கண்ணாடி ஜன்னல் வழியே வெளியே தெரிந்த சிட்டியை பார்த்தவாறு யாருடனோ மிகவும் தீவிரமாக பேசிக்கொண்டு இருந்தான் .

காந்தள் வந்து இளனின் டேபிளின் முன்பு அமைதியாக நின்று இருந்தாள் . இளன் பேசுவது அவளுக்கு தெளிவாக கேட்டது.

“ம்ம்ம்… ஆமா , நான் சொன்னதை சரியா முடிச்சிருங்க … வேலை முடிஞ்சதும் எனக்கு கால் பண்ணுங்க அதுவரை என்னை தொந்தரவு செய்ய வேண்டாம் ” என்று போனை வைத்தவன் தன் சேரை திரும்பியவன் அங்கே அவன் மேஜை முன்பு காந்தள் நின்று இருந்ததை பார்த்தான் .

அவளும் அவனை தான் பார்த்துக்கொண்டு நின்று இருந்தாள் . அவன் எதுவும் பேசாமல் அமைதியாக காந்தளையே பார்த்தான் . அவன் பார்வையை எதிர்கொள்ள காந்தளுக்கு கடினமாக இருந்தது . என்ன செய்வது என்ன பேசுவது என்று அவளுக்கு தெரியவில்லை . அவனும் அவளிடம் எதுவும் பேசவில்லை .

அவளே அந்த அமைதியை உடைத்து தன் கையில் நீலகண்டன் அவளுக்கு கொடுத்து  அனுப்பிய பைலை அவன் முன் மேஜையில் வைத்தவள் “நீலகண்டன் சார் இந்த பைலை  உங்ககிட்டே கொடுத்து இந்த டிசைனுக்கு எல்லாம் அப்ரூவல் வாங்க சொன்னார்” என்றாள்.

“ம்ம்ம்…” என்றவன் .

அவனுக்கு எதிரே சற்று தள்ளி போட்டு இருந்த மேஜையை காட்டி “அது தான் உங்க டெஸ்க்.. நீங்க உங்க திங்க்ஸை எல்லாம் அங்கே வெச்சுக்கோங்க… அங்கே இருக்க ஸிஸ்டமை நீங்க யூஸ் பண்ணிக்கலாம் .உங்களுக்கு முன்னே வேலை பார்த்தவங்க லாஸ்ட்டா முடிக்க வேண்டிய வேலையின் விபரங்களை அதில் நோட் செய்து வெச்சிருப்பாங்க … அதை எலாம் செக் பண்ணி என்னோட அடுத்த ஷெடியூல் என்னன்னு தெரிஞ்சுக்கோங்க… அதுக்குள்ள நான் இந்த டிசைன்ஸை பார்த்துட்டு சொல்றேன்” என்றான்.

முதல் முறை அவனை பார்த்தபோது இளனிடம் இருந்த அந்த கரிசன பார்வை இப்பொது இல்லை . அவனுடைய குரலில் தெரிந்த இறுக்கம் அதற்கு பின் அவனிடம் அவள் பேச ஒன்றுமில்லை என்பதை நன்கு உணர்த்தி இருந்தது .

அவள் எதுவும் பேசாமல் தலையை மட்டும் சரி என்பது போல ஆட்டியவள் . திரும்பி அவளுக்காக ஒதுக்கப்பட்டு இருந்த மேஜைக்கு சென்றாள்.

தான் கொண்டு வந்த தன்னுடைய கைப்பையை ஓரமாக வைத்துவிட்டு அந்த மேஜையில் இருந்த பொருட்களை பார்த்தவள் அதில் எதை தான் பயன்படுத்த வேண்டுமோ அதை மட்டும் வைத்துவிட்டு வேண்டாததை எடுத்து அருகில் இருந்த ஒரு  காட்டன் பாக்ஸில் போட்டவள் . ஸிஸ்டமை ஆன் செய்தாள் .

கம்ப்யூட்டரை ஆன் செய்தவள் திரை ஓபன் ஆனதும் அதில் அவன் செய்ய வேண்டிய வேலைகளின் குறிப்பை அவனுடைய முந்தைய பிஏ தெளிவாக குறித்து வைத்து இருக்க.. அதை பார்த்து இளனுடைய அடுத்தடுத்த வேலைகள் என்ன என்று தெரிந்துகொண்டவள் அதற்கு தேவையான டாக்குமெண்ட்களை தயாரிக்க ஆரம்பித்தாள் .

அதை எல்லாம் பார்த்து இளனுடைய ஷெட்டியுளை முழுவதுமாக பார்த்து அதற்கு தேவையான ஆவணங்களை சரி பார்த்து அடுத்து அவன் அட்டென்ட் செய்யப்போகும் மீட்டிங் குறித்தும் அதில் அவன் பார்க்க வேண்டிய பைகளையும் எடுத்துக்கொண்டு வந்து அவன் முன்பு டேபிளில் வைத்தவள் .

“சார் இன்னும் அரை மணி நேரத்தில் உங்களுக்கு மிஸ்டர் நீலகண்டன் மற்றும் மிஸ்டர் குபேரனுடன் நம் கம்பனியுடைய அடுத்த ப்ராஜெக்ட் குறித்த மீட்டிங் ஸ்டார்ட் ஆகா போகுது . அதுக்குண்டான பைல்ஸ்கள் இங்கே இருக்கு ” என்று கையை நீட்டி அவன் முன்பு இருந்த பைலை காட்டினாள் .

அவள் காட்டிய பைல்களை எடுத்து புரட்டியவன் தன் கைக்கடிகாரத்தை பார்த்தவன் “அந்த மீட்டிங்கை கான்செல் பண்ணிருங்க .. இங்கே முடிக்க வேண்டிய வேலைகள் இருக்கு…” என்றவன் அவள் ஏற்கனவே கொண்டு வந்த டிசைனை எடுத்து பார்க்க ஆரம்பித்தான் .

அவன் சொன்னது கேட்டு அதிர்ந்தவள் “சார் இன்னிக்கு நீங்க மீட் பண்ண போற மிஸ்டர் குபேரன் இந்த நாட்டிலேயே மிகவும் பிரபலமான விளம்பர நிறுவனத்தின் எம் டி … அவரோட இந்த ப்ராஜெக்ட் நமக்கு ரொம்ப முக்கியமானது . அபப்டி இருக்க அப்போ இந்த மீட்டிங்கை நீங்க கான்சல் பண்றது சரிதானா ?” என்று தன் மனதில் தோன்றியதை அவனிடம் கேட்டே விட்டாள்.

அவளை ஒரு பார்வை பார்த்தவன் “ஜஸ்ட் டூ வாட் ஐ சே …( JUST DO WHAT I SAY) என்று அவன் பதில் சொல்லிவிட்டு கையில் இருந்த பைலில் மூழ்கினான்.

காந்தளுக்கு அவன் பதில் சற்று அதிர்ச்சியை கொடுத்தது. “எவ்வளவு பெரிய ப்ரொஜெக்ட் சம்மந்தமான மீட்டினகை இப்படி எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி கேன்சல் செய்கிறானே ” என்று இருந்தது அவளுக்கு .

அவனிடம் எடுத்து சொல்லவோ… அல்லதுஹ் அவனது முடிவை சுட்டிக்காட்டும் இடத்திலோ அவள் இல்லை . அதனால் அமைதியாக வால் டெஸ்க்கிற்கு வந்தவள் இளன் சொன்னது போல நீலகண்டனிடமும், குபேரனிடமும் மீட்டிங் கான்செல் ஆனா விஷயத்தை மிகவும் தயக்கத்தோடு அவள் கூற… 

ஆனால் அவர்கள் இருவரும் மீட்டிங் கேன்சல் ஆனது குறித்து எந்த ஒரு அதிர்ச்சியும் காட்டிக்கொண்டது போல அவளுக்கு தோன்றவில்லை . இருவரும் மிகவும் சாதாரணமாகேவ அவள் சொன்ன செய்தியை கேட்டுக்கொண்டவர்கள் அடுத்த மீடிங்கிர்க்கான நேரத்தை முன்கூட்ட்டியே அவர்களிடம்  தெரிவிக்க சொல்லி போனை வைத்தனர் .

அவர்களிடம் பேசிவிட்டு இளனிடம் விபரத்தை காந்தள் சொன்னாள் . அவள் சொன்னதை கேட்டு வெறும் தலையை மட்டுமே ஆட்டியவன் தன் வேளைகளில் மூழ்கிவிட்டான் .

காந்தளுக்கு மிகவும் சோர்வாக இருந்தது காலையில் அவள் வரும் அவசரத்தில் சாப்பிடவில்லை . இங்கே வந்ததில் இருந்து இளன் ஓய்வு இல்லாமல் அவளை வேலை வாங்கிக்கொண்டு  இருந்தான். கை கடிகாரத்தை பார்த்தான் மணி 1 ஐகே கடடஙகு இருந்தது . நேற்று மதியம் சாப்பிட்டதோடு சரி .. பிரியாவுடன் இரவு குடித்தது . சாப்பிடாமல் இருந்தது என அவளை மிகவும் சோர்வடைய வைத்து இருந்தது .

அவள் இங்கு வந்ததில் இருந்து தண்ணீர் கூட குடிக்க வில்லை . அப்போதுதான் அந்த அறையை சுற்றிலும் நோட்டம் விட்டால் தண்ணீர் குடிப்பதற்காக …  அங்கே பிரிட்ஜ் இருந்தது . அதில் தண்ணீர் இருக்கும் என்று காந்தள் எழுந்து தயக்கத்தோடு அந்த பிரிட்ஜை நோக்கி நடந்தாள்.

அப்போது அவர்கள் இருந்த அறைக்கதவு தட்டப்பட்டது . அதில் அதிர்ந்தவள் நின்ற இடத்தில் அப்படியே கதவை பார்த்தவள் திரும்பி இளனை பார்த்தாள்.

அவனும் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தவன் காந்தளை பார்த்து கதவை திற என்று கட்டளையிட்டான் .

காந்தள் தலையை ஆடியவள் சென்று கதவை திறந்தாள் . அங்கே அவன் வீடு வேலையாள் வழக்கமாக இளன் சாப்பிட உணவு கொண்டு வரும் நேரம் .கதவை திறந்ததும் அந்த வேலை ஆள் காந்தளை பார்த்தது சிரித்தவன் ” மேடம் அய்யாவுக்கு லஞ்ச் கொண்டு வந்திருக்கேன் ” என்றான்.

காந்தள் கதவை திறந்துஹ் வைத்துக்கொண்டு திரும்பி இளனை பார்க்க… அவன் வேலையாளை பார்த்து “நீ கொண்டு வந்து வெச்சிட்டு போல சிவா அவங்க எனக்கு பரிமாறுவாங்க” என்றான் .

இளன் சொன்னதை கேட்டு அதிர்ச்சியாக காந்தள் பார்த்தாள் . வேலையாளிடம் பேசிவிட்டு அவளை சட்டை செய்யாமல் வேளையில் மூழ்கினான் இளன் .

சிவா கொண்டு வந்து உணவை வைத்துவிட்டு காந்தளை பார்த்து தலையாட்டிவிட்டு வெளியே செல்ல… கதவை சுற்றிவிட்டு காந்தள் உள்ளே வர தன் மேஜையில் இருந்த ரிமோட்டை எடுத்து டோரை லாக் செய்தான் இளன் . அந்த அமைதியான அறையில் கதவு லாக் செய்யும் சத்தம் கேட்டு காந்தள் இதயம் ஒரு நிமிடம் வெளியே வந்து விழுமளவிற்கு அதிர்ச்சியானது அவளுக்கு.

உணவு வைத்து இருந்த டைனிங் டேபிளுக்கு சென்ற இளன் அங்கே இருந்த வாஷ் பேசினில் கைகழுவி விட்டு வந்தவன் சேரில் அமர்ந்தான் . காந்தள் மிகவும் தயக்கத்தோடு வந்தவள் அங்கே வைத்து இருந்த உணவு கேரியரை எடுத்து பிரித்து கொண்டு வந்து இருந்த உணவை அவன் முன்பு எடுத்து வைத்தாள்.

அனைத்தையும் எடுத்துவைத்துவிட்டு பார்த்தவளுக்கு தொண்டைக்குழியில் எச்சில் இறங்கியது . நேற்றில் இருந்து சாப்பிடாமல் இருந்தவள் இவ்வளவு உணவையும் ஒன்றாக பார்த்து அவள் படி வயிற்றை கிள்ளியது .

ஒருத்தன் சாப்பிட இவ்வளவு உணவா என்று அவளுக்கு தோன்ற… பின் தன் எண்ணத்தை புறந்தள்ளிவிட்டு அவனுக்கு உணவு பரிமாற போனாள் காந்தள்.

அப்போது சரியாக இளன் அவள் கையை பிடித்து காந்தளை தன் பக்கம் இழுத்தான்.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.