News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

போதையடி நீ எனக்கு-25

by Sinamika Writes
400 views
A+A-
Reset

EPISODE 25

சிட்டியில் ஒரு பிரபல பப்பில் காந்தளும் , ப்ரியாவும் அமர்ந்து இருந்தனர். அவர்களோடு முகுந்தனும் அமர்ந்து இருவரையும் கன்னத்தில் கைவைத்து பார்த்துக்கொண்டு இருந்தான் .

“ஏய் காந்தள் அந்த மதிக்கு எவ்வளவு தைரியம் இருந்தா அவன் பிறந்தாநாள் அன்னிக்கு உன்னை அவன் கல்யாணம் பண்ணிக்க போறதா சொன்னான். ஏற்கனவே ஒரு பொண்ணு கூட ஒன்ன இருந்து அவ வயித்துல ஒரு புள்ளையையும் கொடுத்துட்டு , அவளை வேணாம்னு ஏமாத்திட்டு உன்னை கல்யாணம் பண்ண பிளான் பண்ணி இருப்பான். அவனை சும்மா விடக்கூடாது டி…”என்றவள் தன் கையில் இருந்த மதுக் கோப்பையை முழுவதும் தன் வாயில் சிரித்தவள் தான் அமர்ந்து இருந்த சேரில் இருந்து எழுந்து காந்தளை கைபிடித்து இழுத்தவள் .

“ஏய் காந்தள் வா டி… அவனை பொய் என்னனு கேட்டுட்டு வந்துரலாம். எவ்ளோ தைரியம் இருந்தா அவன் உன்னை ஏமாத்த பாத்திருப்பான் . நீ மட்டும் அவனை நேரில் பக்கமா போய் இருந்தா அவன் இன்னேரம் உன்னை கல்யாணம் பனிக்கப்போறதா எல்லாருக்கும் அறிமுகம் பண்ணி வெச்சிருப்பான் . இல்ல இல்ல … அவன் உன்னை கல்யாணமே பண்ணி இருந்தாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்லை ” என்று புலம்பினாள் 

.

” ஏய் பிரியா விடு .. அவன் புத்தி இப்படி இருக்கும்னு நான் நினைச்சுக்கூட பார்க்கல நான் . என்னை அவன் காதலிச்சு ஏமாத்தின வழியை விட அந்த பொண்ணு வயித்துல ஒரு புள்ளையை கொடுத்திட்டு அதுக்கு அப்பன் நான் இலையின்னு அந்த பொண்ணை உதாசீனப்படுத்த அவனுக்கு எப்படி டி மனசு வந்துச்சு … அந்த பொண்ணு எவ்ளோ பாவம் தெரியுமா ” என்று அந்த நிலையிலும் மதி ஏமாற்றிய பெண்ணை நினைத்து வருத்தப்பட்டாள் காந்தள் .

“காந்தள் அதான் அந்த பொண்ணுக்கு நியாயம் கிடைக்குற மாதிரி பண்ணிட்டியே… அந்த பொன்னுக்கும் மதிக்கும் இருக்குற தொடர்பை அவங்க வீட்டுல இருக்குறவங்க தெரிஞ்சுட்டு அந்த பொண்ணையே அவனுக்கு கல்யாணம் செய்து வைக்க போறதா அவன் அம்மாவும் அப்பாவும் பேசிக்கிட்டாங்களே அப்பறோம் என்ன .. அந்த பொண்ணு நல்ல தான் இருப்பா ” என்ற ப்ரியா .

“எனக்கு உன்னை நினைச்சு தான் டி கஷ்டமா இருக்கு…” என்று மீண்டு சேரில் வந்து அமர்ந்து முகுந்தன் தனக்காக வாங்கி வைத்து இருந்த மது கோப்பையை எடுத்து குடிக்க  ஆரம்பித்தாள்.

“ஏய் லவ் பிரேக் அப் ஆனது காந்தளுக்கு ஆனா நீ அவளை விட அதிகமா குடுக்குற டி… ப்ரியா . போதும் இதோட நிப்பாட்டிக்கோ… உன் உடம்பு தாங்காது ” என்றான் முகுந்தன் .

“டேய் ஏன் டா அவளை குடிக்க வேணாம்னு சொல்லுற… அவ எனக்காக வருத்தப்படுறா அதனால் தான் எனக்கு கம்பெனி கொடுக்குறா … ஆனா நீ எனக்காக வருத்தப்படலை அப்படித்தானே … அதனால தான் நீ குடிக்காம எங்க ரெண்டு போரையும் வேடிக்கை பார்த்துட்டு இருக்கியா ” என்ற காந்தள் மது பாட்டிலை எடுத்து அவன் முன் நீட்டி “இந்தா நீயும் குடி..” என்றாள் .

“இது என்ன டா அநியாயமா இருக்கு… நான் உங்க ரெண்டு பேரையும் குடிக்க வேண்டாம்னு  சொல்லுறேன் நீங்க என்னனா என்னையும் உங்க கூட கூட்டு சேர்த்துறிங்க… அதெல்லாம் முடியாது நீங்க ரெண்டு பெரும் குடிக்கறதை பார்த்தா நான்  தான் உங்க ரெட்னு பேரையு  பத்திரமா வீட்க்கு கூட்டிட்டு போகணும் போல இருக்கு ..  எனக்கு வேணாம்” என்றான் .

“டேய் நாங்க ரெண்டு பேரும் தான் முதல் தடவை குடிக்குறோம்.. ஆனா நீதான் உன் பிரெண்ட்ஸோட அடிக்கடி பார்ட்டி பங்கிட்டு வருவியே… அப்பறோம் என்னடா எங்களுக்கு கம்பெனி கொடுக்க உனக்கு கஷ்டமா இருக்கா ” என்ற ப்ரியா அவன் கையில்  பிடித்து இருந்த மது பாட்டிலை வாங்கி முகுந்தனின் வாயில் வைத்து அவனை வலுக்கட்டாயமாக குடிக்க வைத்தாள் .

“ம்ம்ம்…ம்ம்….ஹக்… ஏய்… என்ன… பண்ற… ” என்று தட்டு தடுமாறி பாதி பாட்டிலை முகுந்தன் விழுங்கி இருக்க…

“ஏய் போதும் கொடு அதை ” என்று அவளிடம் இருந்து பாட்டிலை வாங்கி மிச்சம் இருந்த  மது முழுவதையும் காந்தள் தன் வாயில் சரித்து இருந்தாள் .

மூவரும் நள்ளிரவை கடந்தும் மதுவை குடித்து முடித்தவர்கள் அங்கிருந்து கிளம்பினார்கள் . ப்ரியாவையும், முகுந்தனையும் ஒரு கேபிள் ஏற்றி ப்ரியா தங்கி இருந்த இடத்திற்கு அனுப்பி வாய்த்த காந்தள் இந்த நிலையில் தான் வீட்டிற்கு எப்படி போவது அம்மாவும் ,அத்தையும் தன்னை இப்படி பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்று அவளுக்கு தோன்றியது .

இன்னும் கொஞ்ச நேரம் இங்கே இருந்துவிட்டு லைட்டாக வீட்டிற்கு போகலாம் அதற்குள்  அவர்களும் உறங்கிவிடுவார்கள் என்று நினைத்தவள் அவள் மது அருந்திய  அந்த பாரை விட்டு சற்று தள்ளி இருந்த ஒரு ரெஸ்டாரண்டை பார்த்தாள் . அதை பார்த்த்ததும் காந்தளுக்கு பசி வயிற்றை கிள்ள ஆரம்பித்தது. நேராக அந்த கடைக்குள் நுழைந்தாள்.

அந்த நேரத்திலும் ஆண்களும் , பெண்களும் என அந்த கடையில் மது அருந்திக்கொண்டும் சாப்பிட்டுக்கொண்டும் அமர்ந்து இருந்தனர் .

தள்ளாடியபடியே அந்த ரெஸ்டாரண்டிற்குள் நுழைந்தாள் . அது ஒரு உயர் ரக மக்கள் வந்து சாப்பிடும் இடம் ஆதலால் அங்கே அனைத்தும் பார்ப்பதற்கு மிகவும் நேர்த்தியாக அழகாக இருந்தது . அதை எல்லாம் கவனிக்கும் நிலையில் அவள் மனம் இல்லை . நேராக காந்தள் உள்ளே நுழைந்தவன் தனக்கு அமர் அடேபிலை தேடினாள் .

அனைத்து டேபிள்களும் ஆட்களால் விரைந்து இருக்க… அந்த ஹோட்டலில் மூலையில் அளவான விளக்கொளியில் ஒரு டேபிள் மட்டும் தனியாக யாருமில்லாமல் இருந்தது . 

“ம்ம்…அங்க தான் யாரும் இல்லை . எந்த தொந்தரவும் இல்லாம அங்க போய் சாப்பிடலாம்” என்று நினைத்தவள் தடுமாறிக்கொண்டே அங்கே என்று அமர்ந்தாள் .

அதை பார்த்த ஒரு பேரர் அவசரமாக காந்தள் அருகில் வந்து ” மேடம் இது ஏற்கனவே புக் செய்யப்பட்ட டேபிள் . உங்களுக்கு நான் வேற டேபிள் ஏற்பாடு பண்ணி தரேன் “என்ற மிகவும் பணிவாக .

ஆனால் காந்தளோ “ம்ஹும்… முடியாது நான் இங்கே தான் உக்காருவேன் “என்று பிடிவாதம் செய்தவள் “போ… போய் … எனக்கு ஒரு கிளாஸ் பியரும் அப்பறோம் saapida சூடா என்ன இருகூ அதையும் எடுத்துட்டு வா ..” என்றாள் .

காந்தள் போதையில் இருப்பதை  பார்த்த அந்த பேரர் அவளை எப்படி அங்கே இருந்து எழுப்புவது என்று யோசனையில் நின்று இருக்க… அப்போது அங்கே அந்த டேபிளை புக் செய்து இருந்த நபர் வந்தார். அவர் பார்ப்பதற்கு 50 வயதை கடந்து இருக்க… மிகவும் வசதி படைத்தவர் போலும் இருந்தார்.

வந்தவர் அவர் டேபிளில் காந்தள் அமர்ந்து இருப்பதை பார்த்ததும் கோபம் வந்தது அவருக்கு ” நான் எனக்காக புக் செய்து இருந்த டேபிள் இது. யார் இவங்க என்னோட டேபிளில் இவங்க ஏன் வந்து உக்காந்து இருகாங்க ” என்றார் அந்த பேரரிடம் .

“சாரி சார் ஒரு சின்ன தப்பு நடந்து போயிருச்சு … ஒரு நிமிஷம் நான் இவங்களை இங்கே இருந்து அழைச்சிட்டு போறேன் ” என்றவர் அங்கே இருந்த பெண் ஊழியரை அழைத்து காந்தளை அவள் அமர்ந்து இருந்த டேபிளை இருந்து காந்தளை அழைத்து செல்ல சொன்னார்.

அந்த பெண்ணும் காந்தள் முன்பு வந்து பணிவாக அவளை அழைக்க… காந்தலோ அந்த டேபிளை விட்டு வரமாட்டேன் என்று பிடிவாதம் செய்தாள் . அதை பார்த்து அந்த டேபிளை புக் செய்து இருந்த அந்த நபர் முகம் சுளித்தவர் பேரரிடம் “இந்த மாதிரி லோ கிளாஸ் ஆட்களை எல்லாம் எதுக்காக உள்ளே விடுறிங்க… பாருங்க இவங்களால் என்னோட நேரம் தான் வீண் ஆகுது ” என்றார் கோபமாக .

இதற்கு மேலும் காந்தலி அங்கிருந்து இழுத்து செல்வதை தவிர தங்களுக்கு வேறு வழி இல்லை என்று உணர்ந்த அநத இரு பேரர்களும் அழுக்கு ஒரு புறமாக வந்து காந்தளை பிடித்து அந்த டேபிளை இருந்து தூக்கி தங்கள் ஹோட்டலில் வாசலில் வெளியே அவளை தள்ளி கதைவடைத்தனர்.

அவர்கள் அவளை தள்ளிய வேகத்தில் வெளியே வந்த காந்தள் தடுமாறி கீழே விழப்போக அப்போது அவளை வந்து தாங்கிக்கொண்டது ஒரு கை .

கண்கள் மதுபோதையில் இருக்க… தனக்கு மிக அருகில் தன்னை பிடித்து இருந்த அந்த நபரை பார்த்தது “நீயா !? ” என்று ஆச்சர்யmஉம அதிர்ச்சியும் ஒரு சேர அவளுக்கு தோன்றியது .

…….

மறுநாள் காலை காந்தள் முகத்தில் சுள்ளென்ற சூரிய ஒளி அந்த அறையில் போடப்பட்டிருந்த விலை உயர்ந்த திரைசீலைகளையும் தாண்டி அவள் முகத்தில் விழவும்  சிரமப்பட்டு கண்களை திறந்து பார்த்தாள் . இது அவள் எப்போதும் இருக்கும் தன் அறை இல்லையே என்று யோசனையில் சுற்றும் முற்றும் பார்த்தாள்.

அவள் இருந்தது ஒரு உயர் ரக நட்சத்திர ஹோட்டல் என்று அங்கே இருந்த அலங்கார அமைப்புகளை பார்த்ததுமே புரிந்துகொண்டாள். தான் எப்படி இந்த ஹோட்டலில் அதுவும் இவ்வளவு காஸ்டலியான ஹோட்டலில் இருக்கிறோம். என்னோடு நேற்று இரவு  வந்த ப்ரியா ,முகுந்தன் ரெண்டு பெரும் எங்கே போனாங்க என்று யோசனையில் தன் போர்வையை விளக்க… அப்போதுதான் தன் உடலில் ஆடை இல்லாமல் ஏவாளை மெத்தியில் தான் இருக்கிறோம் என்று அவளுக்கு  புரிந்தது  .

அதை கண்டு அதிர்ச்சியானவள் என்ன நடந்திருக்கும் என்று யூகிக்க ஆரம்பித்தாள் . அவள் யூகம் எப்படி இருந்தது இந்த ஹோட்டலில் காந்தள் yaarடான் முழு இரவை கழித்தாள் என்று தெரிஞ்சுக்கணுமா ? அப்போ நீங்க எபிசொட் 1, 2 இந்த ரெண்டு எபிசோடையும் படிச்சிட்டு வாங்க புரியும்.

…….

இன்று  தான் இருட்னஹா ஹோட்டலில் இருந்து நேராக ஆஃபீஸிற்கு வந்து இறங்கிய காந்தள் டறிவருக்கு டிப்ஸை அதிகமாக கொடுத்துவிட்டு நேராக சில்வர் லைன் ஸ்டுடியோவிற்குள் அவசரமாக நுழைத்தவள் நேராக தற்போது அவள் வேலை செய்யும் நீலகண்டன் இருக்கும் டெபார்ட்மெண்டிற்கு  லிப்ட்டில் ஏறி 99வது தளத்தின் பட்டனை அழுத்தினாள்.

லிப்ட்டில் அவள் மட்டும் தான் இருந்தாள் , அங்கே இருந்த கண்ணாடி வழியாக தெரிந்த தன் முகத்தை பார்த்தாள். நேற்று இரவு சரியாக தூங்காதது … மது அருந்தியது… அழுதது என்று எல்லாமும் சேர்த்து அவள் முகத்தை டல்லாக காட்டி இருந்தது .

“ம்ஹும்… எவ்வளவு மேக் அப் போட்டும் முகத்தில் தெரியும் சோர்வையும், சோகத்தையும் மறைக்க  முடியவில்லையே ” என்று புலம்பியவள் களைந்து இருந்த தலை முடியை சரி செய்யும்போது  லேசாக சிவந்து இருந்த தன் இதழை தொட்டு பார்த்தாள் . “ஷ்…” என்று வலியில் முனகியவள் நேற்று இரவு யாருடன் இருந்தேன் என்பது கூட நினைவு இல்லாத அளவுக்கு குடித்தது மிகப்பெரிய தவறு அதுவும் முதல் முறையே அளவு இல்லாமல் குடித்து இப்படி தன் வாழ்க்கையில் நடந்த முக்கியமான நிகழ்வைக்கூட நியாபகம் வைத்துக்கொள்ள முடியாமல் போய்விட்டதே என்று அவளுக்கு தோன்றியது .

யோசனையோடு காந்தள் நின்று இருக்க… சரியாக 99வது தளம் வந்ததும் லிப்ட் தானாக திறந்துகொண்டது . வெளியே வந்தவள் அவசரமாக தன் கேபினுக்கு வந்து ஹாண்ட்பேகை வைத்தவள் நேராக நீலகண்டனை பார்க்க சென்றாள்  அன்றைய வேலைகளை கேட்டு தெரிந்து கொள்ள …

அவர் முன்பு வந்து நின்ற காந்தளை வித்யாசமாக பார்த்த நீலகண்டன் ஏன் லேட்டாக வந்திருக்கிறாள் என்று அவர் கேட்கவில்லை. ஏன் என்றால் நேற்று மதியின் பிரதிதாய் பார்ட்டியில் நடந்த அணைத்து விஷயமும் நீலகண்டனுக்கு தெரியும்  .அதனால் காந்தளின் நிலையம் வருக்கு புரியவே எதுவும் அவர் அவளிடம் கேட்டுக்கொள்ளவில்லை .

காந்தள் முன்பு அவள் இதுவரை செய்து கொடுத்து இருந்த டிசைன்கலை எல்லாம் எடுத்து கொடுத்தவர் “இன்றில் இருந்து உங்களுக்கு ஒர்க் நம்ம சிஇஓ உடைய அலுவலகத்தில் தான் அவர் பாரிஸில் இருந்து நேற்றே வந்துவிட்டார் . நீ இனிமேல் எனக்கு கீழே வேலை செய்யவேண்டியது இல்லை காந்தள் . நீங்க 104வது தலத்தில் உள்ள சிஇஓ அலுவலகத்திற்கு செல்லலாம் “என்றார்.

அதை கேட்டதும் காந்தளுக்கு அப்போது தான் நினைவிற்கு வந்தது இளன் வந்துவிட்டதையும், தான் அவனை நேற்று மதியின் பிறந்தநாள் விழாவில் பார்த்தத்தையும் . நேற்று கீழே விழா இருந்தவளை விழாமல் தாங்கி பிடித்தவனிடம் ஒரு  நன்றி கூட கூறாமல் அங்கிருந்து காந்தள் சென்று இருந்ததும் நினைவில் வர நீஙலகண்டன் கொடுத்த பையிலை வனாகியவள் தன் வைப்பின் வந்து தன்னுடை  பேகை எடுத்துக்கொண்டு தயங்கியவாறே இளனின் அறைக்கு செல்ல லிப்ட்டின் முன்பு வந்து நின்றாள் .

அப்போது லிப்ட்டை நோக்கி வந்தவர்களை பார்த்து அதிர்ந்த காந்தள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தன்னை நோக்கி வருபவர்களை எதிர்கொள்ள முடியமால் லிப்ட் அருகில் இருந்த தூணின் பின்னால்  சென்று ஒளிந்து கொண்டாள் 

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.