News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

போதையடி நீ எனக்கு-24

by Sinamika Writes
399 views
A+A-
Reset

EPISODE 24

சிறிது நேரத்தில் பார்ட்டியும் ஆரம்பித்திருக்க…  மதி தன்னோடு காந்தளை அழைத்து நிற்க வைத்தவன் அவளோடு சேர்ந்து தன் பிறந்த நாள் கேக்கை வெட்டினான் . கட் செய்த பிறந்தநாள் கேக்கை அவளுக்கு ஊட்டிவிடப்  போக…

அவன் கொடுத்த கேக்கை கையில் வாங்கியவள் “முதல்ல உன் அம்மா அப்பாவுக்கு கொடு மதி..” என்றாள் சிரித்துக்கொண்டே..

மதியும் தன் பெற்றோரை  அழைத்து கேக்கை அவருக்கு ஊட்டிவிட்டான்  . “பரவாயில்லையே என் மருமக எங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்குறதை பாக்குற அப்போ சந்தோசமா தான் இருக்கு” என்றார் மதியின் அம்மா காந்தளை [பார்த்து .

அவர் அருகில் நின்று இருந்த மதியின் சொந்தங்கள் சிலர் மதியின் அம்மா காந்தளை தன் மருமகள் என்று உரிமையாக அழைப்பதை பார்த்துவிட்டு ஒருவருக்கு ஒருவர் தங்களுக்குள்ளேயே பேசிக்கொண்டனர்.

அதை கவனித்த மதி அவன் அம்மாவிடம் ” அம்மா நீங்களே எங்களை பத்தி சொல்றிங்களா? இல்லை நானே காந்தளை எல்லாருக்கும் அறிமுகம் செய்து வைக்கட்டுமா?” என்றான் .

“நானே சொல்றேன் மதிமாறா ..” என்றவர் “காந்தளை பார்த்து இங்கே வா.. ம்மா..” என்று அவளை தன் அருகில் அழைத்தார் .

காந்தள் மதியை பார்க்க … அவனோ போ… என்பது போல தலையை ஆட்டினான் .

மதியியின் அம்மாவை பார்த்து காந்தள் ” ஆண்ட்டி ஒரு நிமிஷம் இருங்க முதல்ல நான் மதிக்காக கொண்டு வந்த கிபிட்டாய் வாங்கிட்டே கொடுக்கிறேன் அதிக அவன் ஓபன் பண்ணி பார்த்தபிறகு பேசிக்கலாம்” என்றாள் .

தான் வாங்கி வந்த பரிசு பொருளை சிரித்த முகமாக மதியிடம் நீட்டியவள் “இந்த கிப்டை வாங்கிக்கோ மதி இது ரொம்ப ஸ்பெஷலான கிப்ட்.. உனக்காக  நானே தயார் செஞ்சது இது முதலில் பார்த்து உனக்கு பிடிச்சிருக்கான்னு சொல்லு. ” என்றாள்.

காந்தள்  கொடுத்த கிப்ட்டை சிரித்த முகமாக வாங்கியவன் அதை பிரித்துப் பார்க்க அந்த கிப்ட்டை பார்த்ததும்  மதியின் முகம் அப்படியே சுருங்கி கருத்துக் போய்விட்டது.

மதியின் முக மாறுதலை அங்கிருந்த அனைவரும் கவனித்தனர் . ப்ரியா முகுந்தனிடம் “என்ன கிபிட் டா.. காந்தள் மதிக்கு கொடுத்திருப்பா … அவன் முகமே சரி இல்லையே..” என்று கேட்டாள்.

” தெரியல ப்ரியா பொறு பார்க்கலாம் ” என்று அவள் ஆர்வத்தை தடுத்து நிறுத்தினான் முகுந்தன் .

காந்தள் அம்மாவும் , அத்தையும் கூட மதியின் முகமருதலை கைக்குண்டு ஒன்றும் புரியாமல்  ஒருவரை ஒருவர் பார்த்துக்கொணடனர்.

காந்தலிடம் வந்த சித்ரா “அம்மு என்ன ஆச்சு மதி தம்பி முகமே சரி இல்லை . நீ அவருக்கு பிடிக்காத பொருளை எதுவும் கொடுத்துட்டியா ?” என்றார்.

அவர் பேசியது கேட்டு மதி சித்ராவை பார்க்க…, காந்தளோ அவள் அம்மாவிடம் “அம்மா… நான் மதிக்கு பிடிக்காத ஒன்னை கிப்ட்டா  கொடுப்பேனா …” என்றவள் .

மதியை மார்த்து ” என்ன மதி நான் உனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு கிப்ட்டை தானே கொடுத்திருக்கேன் ” என்றாள் சிரித்தமுகமாக .

அவள் பேசியது கேட்டு மதிக்கு பதில் கூற முடியவில்லை ” க்க..காந்தள் … இது.. இந்த …கிப்ட்” என்று மதி வார்த்தைக்கு வார்த்தை தடுமாறியபடி பேசினான் .

“டேய் மதி என்ன டா ஆச்சு ? அப்படி என்ன பொல்லாத பரிசை இவை உனக்கு கொடுத்துட்டா… அதை பார்த்துட்டு நீ ஏன் ஒரு மாதிரி ஆகிட்டே ” என்று கேட்டுக்கொண்டே அவன் அருகில் வந்தவர் மதியின் கையில் இருந்த கிப்ட்டாய் வாங்கி பார்த்தார் .

அவரிடம் அந்த பரிசை காட்டக்கூடாது என்று மதி நினைக்கும் முன் அவன் அம்மா அந்த பரிசை அவர் கையில் வாங்கி இருக்க… மதி அதைக் கண்டு மேலும் கலவரம் அடைந்தான்.

அதற்குள்ளாக அவன் அம்மா காந்தள் கொடுத்த பார்த்தவர் அதிர்ந்து போய் “டேய் மதி என்ன டா இது!” என்று அதிர்ச்சியாக தன் மகனை பார்த்தவர் தன் கையில் இருந்த பரிசை கீழே நழுவ விட்டவர் மதியை நம்பமுடியாத பார்வை பார்த்தார் .

அதற்குள்ளாக அங்கே கூடி இருந்த மதியின் உறவினர்கள் அவர்கள் வந்துவிட … கீழே விழுந்து இருந்த காந்தள் கொடுத்த பரிசை  பார்த்த்தார் 

.

அவள் கொடுத்த பரிசுப்பெட்டி தரையில் தலை குப்புற விழுந்து இருந்தது . அதை குனிந்து எடுக்க…அதில் இருந்த சில போட்டோக்களும், ஒரு ப்ரெக்நென்சி கிட்டும் தரையில் விழுந்தது .

போட்டோக்கள் கீழே விழுந்ததில் காற்றில் அங்கும் இங்கும் சிதறிவிட… கீழே குனிந்து அந்த பெண் ப்ரெக்நென்சி கிட்டை கையில் எடுத்தவர் அதில் இரண்டு நீல நிறக்கோடு வந்து இருப்பதை பார்த்தவர் . 

நம்பமுடியாமல் மதியையும், அவன் அருகில் நின்று இருந்த காந்தளையும் மாறி மாறி பார்த்தார் . பின் மதியை பார்த்தது ” டேய் மதி நீ … நீ அப்பா ஆக போறியா ? டா… அதை தான் அந்த பொண்ணு உனக்கு பிறந்தநாள்  பரிசா கொடுக்க வந்து இருக்காளா?” என்றார் நம்பமுடியாமல்.

அவர் சொன்னதை கேட்டு சித்ரா , பத்மா , ப்ரியா , முகுந்த் , மற்றும் காந்தளுடன் பனி புரிந்தவர்கள் அனைவரும் ஆச்சர்யமாகினர் . காந்தளும் ,மதியும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள் என்று அரசல் புரசலாக ஆஃபிஸில் செய்தி பரவி இருக்க… ஆனால் இவர்கள் இருவரும் ஒரு படி மேலே போய் தங்கள் காதலில் இருந்து குடும்பத்திற்குள் நுழையும் கட்டாயத்தில் தள்ளப்பட்டு இருக்கிறார்கள் என்று அங்கிருந்த யாருமே எதிர்பார்க்கவில்லை .

சித்ரா அதிர்ந்து போய் காந்தளிடம் வந்தவர் ” ஏய் காந்தள் என்ன இது? அந்த அம்மா கேக்குறது எல்லாம் உண்மையா? இந்த தம்பியும் நீயும்… கல்யாணத்துக்கு முன்னயே… ” என்று அவர் கண்ணீர் வழிய காந்தளை பார்த்து கேட்டார் .

காந்தள் அவள் அம்மாவை வலி நிறைந்த பார்வை ஒன்றை பார்த்தாள். “அம்மாஆஆ…” என்று  கண்களில் கண்ணீரோடு அவரை பார்த்தாள் .

அவள் கண்களில் வழிந்த கண்ணீரைக் கண்டதும் சித்ராவிற்கு இதயமே நின்றுவிடும் போல இருந்தது. அவர் நிற்கமுடியாமல் தடுமாறி கீழே விழாப் போக.. அவரை பத்மாவும் முகுந்தனும் தாங்கி பிடித்தவர்கள் அருகில் இருந்த சாறில் அமர வைத்து பத்மா சித்ராவின் கண்ணீரை தன் சேலை தலைப்பில் துடைத்துவிட…

ப்ரியா அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து சித்ராவிடம் நீட்டி “அம்மா  நம்ம காந்தளை பார்த்து என்ன இப்படி ஒரு கேள்வி கேட்டுட்டீங்க… அவ அப்படி எல்லாம் செய்திருக்க மாட்டா… அவ மேல நம்பிக்கை வைக்க வேண்டிய நீங்களே இப்படி பேசலாமா ?” என்றால் தன் தோழிக்கு ஆதரவாக .

முகுந்தும் ப்ரியா சொன்னது சரிதான் என்பது போல தலையை ஆட்டினான்.

பத்மாவும் “அம்மா சித்ரா நம்ம அம்மு இப்படி எல்லாம் செய்திருக்க மாட்டா… நீ இப்படி ஒரு கேள்வி நம்ம அம்மனுவை பார்த்தது கேட்டுட்டியே… பாரு புள்ள எப்படி அழுத்திட்டு  நிக்குறான்னு பாரு ” என்றார் பத்மா .

“அப்படியா? அப்போ இந்த அம்ம்மா சொல்றது பொய்யா ? இதுல  காட்டுறது பொய்யா? என் பொண்ணு அந்த பையன் கூட… சேர்ந்து.. ” என்று பேச முடியாமல் விம்மி அழுதார் சித்ரா .

அனைவரும் என்ன பேசுவது என்று தெரியாமல் சுற்றி நின்று இருக்க… கீழே விழுந்து இருந்த போட்டோக்களை கையில் எடுத்துக்கொண்ட்னு மதியின் முன்பு வந்த அவன் அப்பா அவனிடம் அந்த போட்டோக்களை காட்டி ” என்ன மதி இது எல்லாம் இது எல்லாம் உண்மையா ? ” என்று தன் கையில் இருந்த போட்டோவை  அவன் முன்பு நீட்டி கேட்டார் .

அவர் நீட்டிய போட்டோவை வாங்கி பார்த்தவன் திரும்பி காந்தளை பார்த்தான் “ஏன் மதி ? ஏன் இப்படி ஒரு காரியத்தை பண்ணுணிங்க… எனக்கு துரோகம் பண்ண உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு ” என்று விம்மி வெடித்து அழுதாள் காந்தள் .

அவள் பேசியது கேட்டு சித்ராவிற்கு ஒன்றும் புரியவில்லை . தனக்கு த்ரிகம் செய்துவிட்டதாக காந்தள் மதியிடம் கேட்பதை பார்த்தவர் “அப்படினா… அப்படின்னா என் பொண்ணு சுத்தமானவ தான் . நான் தான் என் பொண்ணை தப்ப நினைச்சுட்டேனா ” என்று உறைந்துபோனார் .

காந்தள் கேட்டதற்கு பதில் பேசமுடியாமல் மதி நின்று இருக்க… “அக்கா… அழாதீங்க.. அவனை காதலிச்சதோட நிறுத்திட்டீங்கன்னு சந்தோசப்படுங்க… என்னை மாதிரி இவனோட ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி என்னையே பறிகொடுத்தது இன்னிக்கு என் வயித்துல வளர்ற இவனோட குழந்தைக்கும் ,இவனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லைன்னு என்னை ஏமாத்திட்டீ போனவன்கிட்டே இருந்து நீங்க தப்பிச்சீங்கன்னு நினைச்சுக்கோங்க…” என்று மதியால் ஏமாற்றப்பட்டு கைவிடப்பட்ட கயல்விழி என்ற பெண் வயிற்றை தள்ளிக்கொண்டு அங்கே வந்து நின்றாள்.

அந்த பெண் பேசியதை கேட்டு மற்றவர்கள் அங்கு என்ன நடக்கிறது என்று புரிந்து போக… கூட்டத்திற்குள் சலசலப்பு ஏற்பட ஆரம்பித்தது . கயல்விழியை அங்கு சற்றும் எதிர்பார்த்திடாத மதி அவளை கண்டு அதிர்ந்து போனான் .

:”ஏய்…நீ.. நீ… எப்படி இங்கே…” என்று மதி கயலை நோக்கி செல்ல…

அவனை கண்டு கயல்விழி பயந்து பின்வாங்கினாள் . உடனே அவள் முன்பு வந்து நின்று காந்தள் .

மதி இனியும் உண்மையைமறைச்சி எந்த ப்ரயோஜனனும் இல்லை . இந்த பொண்ணு வயித்துல வளர்வது உங்க குழந்தை .இதை நீங்க ஓத்துக்கிட்டு தான் ஆகணும் ” ENDRU அவனை பார்த்தாள் .

“காந்தள் இவை சொல்றதை நம்பாத பொய் சொல்றா !! இந்த குழந்தை என்னோடது இல்லை. என்னை நம்பு…” என்று காந்தள் கையை  பிடிக்க போக…

அவனை விட்டு விலகி நின்ற காந்தள் “அப்போ இந்த போட்டோல இருக்குறது எல்லாம் பொய்யின்னு சொல்றிங்களா ? மதி ” என்றாள் .

“ஐயோ ! காந்தள் இது நான் இல்லை . அந்த போட்டோவில் இருக்குறது நான் கிடையாது. இந்த பொண்ணு வேணும்னே யாரோடவோ இருந்துட்டு அவன் இருக்க வேண்டிய இடத்துல என்னோட போட்டோவை மார்பிங் செய்த்திருக்கா”என்றான் .

“அப்படியா மதி.. இந்த போட்டோ நீ சொன்னது போல மார்பிங்காவே இருக்கட்டும் . சரியா என்னோட புது அப்பார்ட்மெண்ட்க்கு நான் குடிபோன அன்னிக்கு இந்த பொண்ணை நீ ஹோச்பிடலில் இருந்து கூட்டிட்டு போனதை நான் என் ரெண்டு கண்ணால பார்த்தேன் . நீயும் அந்த பொன்னும் ஒண்ணா பேசி சிரிச்சிட்டு ஆட்டோவில் போனதை நான் பார்த்தேன் , உன்னையும் இந்த பொன்னையும் நான் பாலோ பங்கிட்டு நீங்க தனியா வீடு எடுத்து தங்கி இருந்த இடத்துக்கே நான் வந்தேன்.” என்றாள் காந்தள்.

காந்தள் சொன்னதை கேட்டு ப்ரியாவிற்கும், முகுந்தனுக்கும் காந்தள் புது அப்பார்ட்மெண்ட்டில் பால் காய்ச்சிய அன்று இரவு கடைக்கு செல்கிறேன் என்று சொல்லி வெகு நேரம் கழித்து அவள் வீடு திரும்பியதும் , அன்று அவள் ஆடை முழுதும் சேரும் சகதியும் இருந்துது நினைவிற்கு வர ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

‘சொல்லு மதி ஏன் பேசாம நிக்குற… நான் பார்த்தது எல்லாம் பொய்யா சொல்லு… ” என்றாள் .

மதி எதுவும் பேசமுடியாமல் தலை கவிழ்ந்து நின்றான் .

அதற்கு மேலும் அங்கு நிற்க பிடிக்காமல் காந்தள் அங்கிருந்து கிளம்பினாள் . அவள் பின்னால் சித்ரா, பத்மா , ப்ரியா , முகுந்தன் என அனைவரும் சென்றனர்  .

இதயம் கனக்க அந்த பார்ட்டி ஹாலில் இருந்து வெளியே வந்த காந்தள் கண்களில் கண்ணீரோடு வெளியே வர… அப்போது அவள் எதிரே அவளுக்கு பரிட்சயமான ஒரு உருவம் அவள் கண்ணீரை தாண்டி தெரிந்தது .

கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு தனக்கு எதிரே கம்பீர நடை போட்டு வந்த இளனை பார்த்தாள்.

அவனை அங்கு சற்றும் எதிர்பார்த்திராத காந்தள் அதிர்ந்து அவனை பார்த்தபடி நடந்தவள் தடுமாறி கீழே விழப்போக … கீழே விழ இருந்தவளை ஓடி வந்து தாங்கி பிடித்திருந்தான் இளன் என்கிற இளமாறன்.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.