Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 85

உன் ரகசிய ரசிகை நான் 85

by Layas Tamil Novel
362 views

EPISODE 85

துர்காவின் அருகில் வந்தவன் அவள் கையைப் பிடித்துத் தூக்கி நிறுத்தியவன் தன் கையில் இருந்த ஃபோட்டோவைக் காட்டி “சொல்லு இதுக்கு எல்லாம் யார் காரணம் சொல்லு?” என்று தன் மாஸ்கைக் கழட்டி விட்டு அவள் முகத்தருகில் தன் முகத்தைக் கொண்டு வந்து ஆதி கேட்க..

துர்கா இவ்வளவு கோபமாக ஆதியைப் இதுவரை துர்கா பார்த்ததே இல்லை… அவனை இவ்வளவு கோபமாகப் பார்த்ததால் உடல் நடுங்க அவனையேப் பார்த்த துர்காவிற்குப் பேச வார்த்தைகளே வரவில்லை…

அவள் எதுவும் பேசாமல் நிற்பதைப் பார்த்தவன் “சொல்லு துர்கா இவ்வளவு நாள் நீ, நான், விக்கி மூவரும் நல்ல நண்பர்களாகத் தானே இருந்தோம்.”

“அப்படி இருக்க உங்கள் இருவருக்கும் எனக்குத் துரோகம் செய்ய எப்படி மனது வந்தது…..” என்று மிகவும் வருந்திய குரலில் ஆதி கேட்க.. துர்காவால் அவனுக்குப் பதிலே சொல்ல முடியாமல் அப்படியே உறைந்து போய் நின்று இருந்தாள்.

“ஆதி நீ நினைக்குற மாதிரி இல்லை ஆதி… உன்னை ஏமாத்தணும்னு நாங்க நினைக்கவே இல்லை..” என்று சொன்னவள் “ஒரு நிமிஷம் இரு,” என்றுவிட்டு அவர்கள் பெட் ரூம் கதவைத் திறந்து அழுது வடிந்து கொண்டு வெளியே வந்தவள் கீழே இன்னும் அதே அதிர்ச்சியில் நின்று கொண்டு இருந்த விக்கியைப் பார்த்து அவனை அழைக்க…. அவன் காதில் துர்கா அழைத்தது விழவே இல்லை.

கீழே விக்கியின் அருகில் நின்று இருந்த சங்கவி அவன் அருகில் சென்று விக்கியின் முகத்திற்கு நேராகச் சொடக்கெடுத்தவள் “மிஸ்டர் விக்கி உங்க நெருங்கிய தோழி உங்களை மேலே கூப்பிடுறாங்க போறீங்களா….” என்று அவனிடம் கூற.

அதிர்ந்தவாரே சங்கவியைப் பார்த்துவிட்டு ‘என்ன டிசைன் இவ இங்கே எவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கு இவ அதுக்கெல்லாம் கொஞ்சம் கூட வருத்தப்படாம இப்படிச் சந்தோஷமாச் சிரிச்ச முகமா இருக்காளே’ என்று நினைத்துக் கொண்டவன்.

துர்கா மறுபடியும் அவனை அழைக்க… வேகமாக மேலேப் போனான். துர்காவின் அருகில் வந்தவன் “ஆதி… ஆதி… நம்ம ரெண்டு பேரும் அவனுக்குத் துரோகம் பண்ணிட்டோம்னு சொல்றான். என்னால அவன் கிட்டச் சொல்லிப் புரிய வைக்க முடியாது விக்கி. நீ தான் வரணும்,” என்றவள் அவன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு உள்ளேச் சென்றாள்.

அவர்கள் இருவரும் பேய் அறைந்தது போல.. ஆதியின் அறைக்குள் செல்வதைக் கீழிருந்துப் பார்த்த சங்கவிக்கு ‘அப்பாடா…. இத்தனை நாள் நான் காத்துட்டு இருந்த விஷயம் இன்னைக்கி என் கண்ணு முன்னையே நடக்குது’ என்று சந்தோஷப்பட்டவள் ‘இனி என் வேலை முடிஞ்சுது ஆதி வந்ததும் நாங்க ஸ்விட்சர்லாந்து கிளம்ப வேண்டியது தான்’ என்று நினைத்தவள் எடுத்து வைத்த பொருட்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்றுப் பார்க்கத் தன் அறைக்கு போய்ட்டாள்.

விக்கியின் கையைப் பிடித்து அழைத்து வந்த துர்காவையும் அவள் பிடித்திருந்த விக்கியின் கையையும் பார்த்தவன் “இப்போ கூட நீ உன்னோட பெஸ்ட் ஃபிரெண்டுக்கு தான் சப்போர்ட் பண்ணுவே அப்படித்தானே?” என்றான் ஆதி.

துர்கா தீர்க்கமான குரலில் “ஆம்…” என்றாள்.

“உங்க ரெண்டு பேருக்கும் எனக்குத் துரோகம் பண்ண எப்படி மனசு வந்துச்சு?” என்றவன் அவர்கள் முன் வந்து தன் மொபைலில் “நிலானி பெட்டில் அமர்ந்து இருக்க விக்கி அவள் கழுத்தில் தாலியை மாட்டிவிடுவதும் அவர்கள் அருகில் துர்கா கீர்த்து சிரித்துக் கொண்டு இருப்பாத்தும் அந்தப் ஃபோட்டோவில் இருந்தது…..” அந்தப் ஃபோட்டோவைக் காட்டி மறுபடியும் ஆதி கேட்க.

துர்கா அந்தப் ஃபோட்டோவை மறுபடியும் பார்த்து “ஆதி… இந்தப் ஃபோட்டோ உனக்கு எப்படி கிடைத்தது?” என்றாள்

“ஏன் எனக்கு யாரு இந்தப் ஃபோட்டோவை அனுப்பினாங்கன்னு சொல்லியே ஆகணுமா என்ன..” என்ற ஆதி.

“என் மேல் அக்கறையும் பாசமும் உள்ளவங்க… எனக்குத் துரோகம் செய்ய மனசு இல்லாதவங்க எனக்கு இந்தப் ஃபோட்டோவை அனுப்பினாங்க,” என்றான் ஆதி.

இதை கேட்ட விக்கி… “என்ன டா.. நானும் வந்ததில் இருந்துப் பார்த்துட்டே இருக்கேன். உனக்குத் துரோகம் பண்ணிட்டோம் உனக்குத் துரோகம் பண்ணிட்டோம்னு என்னையும் துர்காவையும் சொல்லிட்டே இருக்க…”

“இப்போ என்ன நடந்து போயிருச்சு? நீ இல்லாம என்னோட கல்யாணம் நடந்திருச்சு அப்படித்தானே? அதுக்குத் தானே இவ்வளவு ஆர்ப்பாட்டம்? நாங்க ரெண்டு பேரும் வந்ததும் வராததுமா எங்க ரெண்டு பேரையும் சாவடிக்குற…” என்றான் விக்கி.

( அப்பாடா… ஒரு வழியா விஷயத்தைப் போட்டு உடைச்சாச்சு … என்னோட ரீடர்ஸ் எல்லாருக்கும் இப்போ ஹாப்பியா இருக்குமே… ஒரு ரெண்டு எபிசோட் வெயிட் பண்ண மாட்டேங்குறீங்களே அதுக்குள்ள எத்தனை திட்டு நம்ம ஆதிக்கும் எனக்கும் 😭😭😭😭 நான் பாவம் இல்லையா… 😔😔😔 அடித்தடுத்து பொறுமையாப் படிங்க ஃபிரெண்ட்ஸ் ஓகேவா 😃 ❤️ )

ஆமா ஃபிரெண்ட்ஸ் விக்கி கல்யாணம் ஆதி இல்லாம நடந்தது தான் இப்போ நம்ம ஆதிக்குப் பெரியப் பிரச்சனையே… அப்போ சங்கவி கிளப்பி விட புரளி என்ன ஆச்சுன்னு தான கேக்க வரீங்க… இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க அதுக்கும் உங்களுக்கு விடை கிடைச்சிரும் ஓகேவா… சரி வாங்க நம்ம ஆதி என்ன பண்றான்னு பார்ப்போம்.

“நீ இல்லாம என்னோட கல்யாணம் நடந்திருச்சு சரி… அதுக்காக இப்படியா டா அடிப்பே…. என் கன்னம் ரெண்டும் எப்படிப் பழுத்திருச்சு பாரு…” என்று தன் கன்னத்தைத் தேய்த்துவிட்டுக் கொண்டே ஆதியைப் பார்த்து முறைத்தான்.

“நான் இல்லாம உன்னோட கல்யாணம் நடந்துச்சு சரி… ஆனா கல்யாணம் ஆன பிறகு என்கிட்டே நீ போன் பண்ணிச் சொல்லி இருக்கணுமா? இல்லையா?” என்றான் ஆதி ஆதங்கமாக…

“ஆமா டா சொல்லித் தான் இருக்கணும். துர்கா அப்போவே உன்கிட்டே சொல்லணும்னு இருந்தா… நான் தான் எப்படியும் இன்னைக்கு உன்னை நேரில் சந்திக்கத் தானேப் போறோம் அதனால உன்கிட்டே நேரா வந்து சொல்லலாம்னு இருந்தேன். ஆனா நீ என்னடான்னா உள்ளே வந்தும் வராததுமா என்னை பேசவே விடாம நான் என்னவோ கொலைக்குற்றம் பண்ணினவன் மாதிரி என்னை அந்தக் கிழி கிழிக்குற…” என்று ஆதியின் அருகில் வர…

அவனைக் கொன்று விடும் கோபத்தில் இருந்த ஆதி விக்கி தன் அருகில் வந்ததும் அதே கோபப் பார்வையை விக்கியின் மீது வீச…. ‘ஆத்தாடி… என்ன கண்ணுலயே எரிச்சிருவான் போல இருக்கே..’ என்று சொல்லிக் கொண்டே துர்காவின் அருகில் சென்று நின்று கொண்டான்.

“டேய் விக்கி இப்போ எதுக்கு துர்கா… கிட்டப் போய் நிக்குறே? ஒழுங்கா இங்கே வந்திரு. உங்க ரெண்டு பேர் கிட்டயும் இன்னும் கேட்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு,” என்றான் ஆதி.

“ம்ஹும்…. நான் உன் பக்கத்துல வரலை… உன் பக்கத்தில் வந்தால் நீ வாயில பேசாம உன் கையால தான் பேசுவ… என்னன்னு அங்க இருந்தேக் கேளு நான் இங்க இருந்தேப் பதில் சொல்றேன். எனக்குத் துர்கா கிட்ட நிக்குறது தான் பாதுகாப்பு,” என்றான் விக்கி . அவனை முறைத்து “நான் உன்னை எதுவும் செய்ய மாட்டேன். இதுக்கு எல்லாம் காரணம் ஆனவங்களை தான் நான் கவனிக்க வேண்டி இருக்கு,” என்று துர்காவைப் பார்க்க…

இதுவரை அவனையே பார்த்துக் கொண்டிருந்த துர்காவிற்குக் ஆதியின் பார்வை அவளை ஏதோ செய்ய…. அவன் பார்வையில் தடுமாறியவள் அவன் கண்களைக் காண முடியாமல் தலையைத் தாழ்த்திக் கொண்டாள்..

அவனைப் பார்க்க முடியாமல் தலையைக் குனிந்து கொண்ட துர்காவைப் பார்த்துவிட்டு ‘உன்னைப் பிறகுப் பார்த்துக் கொள்கிறேன்’ என்று நினைத்துக் கொண்ட ஆதி.

துர்காவின் அருகில் வந்த ஆதி அவளை முறைத்துவிட்டு…. “உன்னைத் தனியாகக் கவனிச்சுக்கிறேன்,” என்று சொல்லிவிட்டு விக்கியின் அருகில் வந்து அவன் தோள் மீது கைப் போட வர… தன்னை அடிக்கத் தான் வருகிறான் என்று நினைத்து விக்கி அவனிடம் இருந்து விலகப் போக… விக்கியை எட்டி அவன் கழுத்தில் தன் கையைப் போட்டு… இன்னொருகையால் அவன் கழுத்தை லாக் செய்து பிடிப்பது போலப் பிடித்துக் கொண்டவன் விக்கியை இழுத்துக் கொண்டு துர்காவைக் கடந்து ஸ்டடி ரூமிற்குள் சென்றான்.

உள்ளே வந்து ஸ்டடி ரூம் கதவைச் சாற்றிவிட்டு விக்கியை விட… அவனிடம் இருந்துத் தள்ளி நின்றவன் “எதுவா இருந்தாலும் வெளியே வெச்சேப் பேச வேண்டியது தானே டா… உள்ளே எதுக்கு கூட்டிட்டு வந்தே…” என்றான்.

“ம்ம்ம்ம்…. முக்கியமான விஷயம் கேட்கத்தான் இங்கே கூட்டிட்டு வந்தேன்,” என்றான் ஆதி.

“முக்கியமான விஷயமா? அதுதான் வெளியே வெச்சே என் கல்யாண விஷயத்தை அங்கேயேக் கேட்டுட்டியே. அதை விட என்ன முக்கியமான விஷயம் இப்போ இருக்கு?” என்று கேட்டான் விக்கி.

“உன்னோட கல்யாணத்தை விட ரொம்ப முக்கியமான விஷயம் இருக்கு டா…” என்றான் ஆதி.

“அப்படி என்ன டா விஷயம்?” என்று விக்கி கேட்டான்.

“சரி நீ நான் நம்ம ரெண்டு பேரும் தானே ஒன்னா காலேஜில் சேர்ந்தோம்?” என்றான் ஆதி. “ஆமா… நான் வேற காலேஜ் போறேன்னு சொன்னதுக்குப் பணத்தைக் காரணமா வெச்சு நாம ரெண்டு பேரும் பிரிய வேண்டாம். அதனால நீயும் என்கூடவே ஒன்னா ஜாயின் பண்ணிக்கோன்னு சொல்லித்தான் என்னை உன்கூட ஒரே காலேஜ் ஒரே டிபார்ட்மென்ட்டில் நீதான் சேர்த்து விட்டே,” என்றான் விக்கி.

“சரி என்கூட ஒன்னா தானே இருந்தே… நீயும் நானும் எது செஞ்சாலும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஒளிவு மறைவு இல்லாமத் தானா இருந்தோம்?” என்றான் ஆதி.

“ஆமா… டா… இதுல என்ன சந்தேகம்? இப்போ நடந்த என் கல்யாணம் மட்டும் தான் உன்கிட்டச் சொல்ல முடியாமப் போயிருச்சு. அதுவும் சூழ்நிலை அப்படி இருந்தாதினால் தான். அதைத் தவிர நான் எதுவுமே உன்கிட்டே மறைச்சது இல்லை,” என்றான் விக்கி.

“அப்படியா…. அப்போ நீ என்கிட்டே எதுவுமே மறைச்சதில்லை அப்படித்தானே?” என்றான் ஆதி.

“ஆமா டா…. ஆதி நான் எதுவுமே உன்கிட்டே மறைச்சது இல்லை,” என்று சொல்லி முடிக்கும் முன் விக்கியின் கன்னத்தில் பளார்……. என ஒரு அறை விழுந்தது.

மதுவிற்கு இன்று முதல் நாள் ஆதியின் ஆஃபீஸில் வேலை என்பதால் காலை நேரமே எழுந்து குளித்து…. நிலானிக்கும் தனக்கும் காலை மதியம் இரண்டு வேலைகளுக்கும் சாப்பிட உணவுகளைத் தயாரித்து எடுத்து வைத்தவள்.

வேலை ஆட்கள் வருவதற்குள் நிலானிக்குத் தேவையானதை எல்லாம் செய்து வைத்துவிட்டு… நிலானியை எழுப்பி அவளுக்கும் அனைத்து வேலைகளையும் செய்துவிட்டு வேலை ஆட்களுக்காகக் காத்திருக்க….

சரியாக விக்கி சொன்னது போலச் சொன்ன நேரத்திற்கு வந்துவிட்டார் அவன் சொன்ன வேலை ஆள்.

வீட்டு வாசலில் வந்து நின்ற அந்தப் பெண் “அம்மா வணக்கம்… என் பேரு பத்மா. விக்கி ஐயா என்னை இன்றைக்கு இருந்து என்னை இங்கே வேலைக்கு வர சொன்னாரு,” என்று சொல்ல.

அவளைப் பார்த்ததும் ஹாலில் அமர்ந்து இருந்த நிலானியும் மதுவும் பத்மாவை “உள்ளே வா,” என்று அழைத்தனர்.

பத்மாவிடம் பொதுவாகப் பேசிவிட்டு மது “நான் இன்னைக்குச் சமையல் வேலை எல்லாம் முடிச்சு வெச்சுட்டேன். நீங்க எத்தனை மணிக்கு வரீங்கனு எனக்குத் தெரியலை.”

“நாளையில் இருந்து ஏழு மணிக்கு வந்திடுங்க… நாம ரெண்டு பேரும் சேர்ந்தே சீக்கிரம் வேலை எல்லாம் முடிச்சிடலாம்.”

“நான் போனதுக்குப் பிறகு நீங்க என் தங்கச்சி கூடவே இருந்து அவளை கவனமாப் பார்த்துக்கிட்டா போதும்….. வேற எந்த வேலையும் செய்ய வேணாம். சாயங்காலம் நான் வந்த பிறகு மற்ற வேலை எல்லாம் செய்தால் போதும்,” என்றாள் மது.

“என்ன டா…. இது அதிசயமா இல்லை இருக்கு…. நான் இதுவரைக்கும் வேலைக்குப் போன இடத்துல நான் எப்போ வருவேன் எல்லா வேலையும் என் தலையில கட்டிபுட்டுப் போலாம்னு இருக்குற ஆளுங்களை தான் நான் பார்த்திருக்கேன். நீங்க என்னடான்னா… என் கூடவே சேர்ந்து வேலைப் பாக்குறீங்கனு சொல்றீங்க…”

“நீ கவலையேப் படாதமா… நான் காலைல கரெக்டா சொன்ன டைம்க்கு வந்திருவேன். நீ பயமில்லாமல் போய்ட்டு வாம்மா… உன் தங்கச்சியை என் குழந்தை மாதிரி பார்த்துக்குவேன் சரியா…” என்று பேசும்போதே…. பத்மாவினுடைய வார்த்தையில் அத்தனை சந்தோஷம் தெரிய…

மதுவும், நிலானியும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டுச் சிரித்தவர்கள் பத்மாவைப் பார்த்து மது “மாமா கிட்சனில் எது எது எங்கே இருக்குன்னு சொல்லிட்டுப் போகட்டுமா?” என்று எழுந்திருக்க…

“அட சும்மா உக்காருமா… நான் அது எல்லாம் எல்லாத் தப்பாவையும் திறந்து பார்த்து எல்லாத்தையும் பார்த்துக்கிறேன். நீ அதைப் பத்தி எல்லாம் கவலப் படாத….” என்றவள் மதுவிடம் குனிந்து… “நீ உன் வீட்டுக்காரனுக்குத் தெரியாமல் கடுகு டப்பா அரிசி டப்பான்னு எதுலயாவது காசு வெச்சிருந்த அதை மட்டும் எடுத்து வேற பக்கம் வெச்சிட்டுப் போ… அப்பறோம் பணத்தை எங்கயாச்சும் வெச்சுட்டு அதைக் காணோம் இதைக் காணோம்னு என்னை எதுவும் சொல்லக்கூடாது,” என்றாள் பத்மா.

அவள் வாய் துடுக்கைப் பார்த்துச் சிரித்த மது, நிலானியிடம் திரும்பி “டிவி எதுவும் இல்லாமலேயே உனக்கு நல்ல பொழுது போகும்,” என்று பத்மாவைக் காட்டிச் சொல்லிவிட்டு….

பத்மாவிடம் திரும்பி “நான் எந்தக் கடுகு டப்பாவிலும் காசு வைக்கலை… எல்லாமே என் கைக்குள்ள தான் இருக்கு,” என்று தன் மொபைலைக் காட்ட…

“ஓ… அதுல தான் வெச்சிருக்கியா…. பரவால்ல…. இப்போ வீட்டுலப் பூந்துத் திருடுறவங்களை விட…. இந்தப் போனுக்குள்ள வெச்சிருக்குற எல்லாத்தையும் எவனோ எங்கயோ இருந்துட்டு….. ஊர் பேர் தெரியாதவன் எல்லாம் நம்ம கிட்ட திருடுறது பத்தாதுன்னு நம்ம வீட்டுக்குள்ள என்ன நடக்குதுன்னு வேற நமக்குத் தெரியாமலேயேப் பாக்குறானுங்கலாமா….”

“கவனமாக இரு மா… அதனால தான் நான் இந்தப் போனை வாங்காம இன்னும் இந்தப் பட்டன் போனை வெச்சுட்டுச் சுத்திட்டு இருக்கேன்,” என்று தன் இடுப்பில் இருந்த பட்டன் போனை எடுத்து காட்டினாள்.

“பார்க்க விவரம் தெரியாதவன் மாதிரி இருக்க…. ஆனா இந்த விஷயம் எல்லாம் உனக்கு நல்லாத் தெரியுதே,” என்று நிலானி ஆச்சரியமாகக் கேட்டாள்.

“அதுவா? இது எல்லாம் நான் இதுக்கு முந்தி வேலைப் பார்த்த வீட்டுல நடந்த விஷயம். அதனால தான் இதை எல்லாம் நான் தெரிஞ்சுக்கிட்டேன்,” என்றவள் “சரி சரி சும்மா என்கிட்டே பேசிட்டே இருக்காதமா.. அப்பறோம் என் வேலை தான் கெடும்,” என்று சொன்னவள்.

மதுவிடம் திரும்பி “நீ வேலைக்குக் கிளம்புறதா இருந்தா கிளம்பு மா.. வெட்டியா இங்க நின்னு கதைப் பேசிட்டு அப்பறோம் ஆஃபீசுக்குப் போய் லேட் ஆகிருச்சுன்னு நிக்காத,” என்று மதுவை விரட்ட…

“அம்மாடி உன்கிட்டே கொஞ்சம் ஜாக்கிரதையாத் தான் பேசணும்,” என்று சொன்ன மது. “நிலா நான் கிளம்புறேன் நீ தான் இந்த வாயாடி பத்மாகிட்டே மாட்டிகிட்டே,” என்று சொல்லிவிட்டுப் பேக்கை எடுத்துக் கொண்டு ஆஃபீஸ் கிளம்பினாள்.

முதல் நாள் அலுவலகத்திற்கு நேரமாகி விடக்கூடாது என்று ஒரு கேப் புக் பண்ணிச் சரியான நேரத்திற்கு ஆதியின் ஆஃபீஸிற்கு முன் வந்து இறங்கினாள் மது.

கேபை அனுப்பிவிட்டு ஆதியின் அலுவலகத்தைத் திரும்பிப் பார்த்த மதுவிற்கு ஆச்சரியமாக இருந்தது. ஆதியின் அலுவலகம் அவ்வளவு பிரம்மாண்டமாக வான் உயர்ந்த கட்டிடத்தோடு கம்பீரமாக நிமிர்ந்து நின்றிருந்தது.

கதிர் மதுவிடம் அவள் வேலை செய்யும் அலுவலகம் 16 ஆவது மாடியில் இருக்கிறது என்று ஏற்கனவேச் சொல்லி இருந்தான்.

ஆதியின் ஆஃபீஸிற்குள் நுழைந்த மது… ரிசப்ஷனில் 16வது மாடிக்குச் செல்ல வேண்டும் என்று தனக்கு அப்பாயின்ட்மென்ட் இருப்பதாகக் கூறவும்.

அவள் கையில் அப்பாயின்ட்மென்ட் பேப்பர் இருக்கிறதா என்று ரிசப்ஷன் பெண் கேட்க…. தன்னிடம் அது எல்லாம் எதுவும் இல்லை என்று சொன்ன மது…

“மிஸ்டர் விக்கிக்கு நான் ரிலேட்டிவ், அவரோட ஃபிரெண்ட் மிஸ்டர் கதிர் தான் என்னை இங்கே வேலைக்காக வர சொல்லி இருக்கிறார். நீங்கள் வேண்டுமென்றால் அவரிடம் கேளுங்கள்,” என்று மது சொல்ல..

“சாரி மேம் அப்பாயின்ட்மென்ட் பேப்பர் இல்லாம நாங்க யாரையுமே 16வது மாடிக்கு அனுப்புவதில்லை,” என்று ரிசப்ஷனில் இருந்தப் பெண் மது கதிரைப் பற்றிச் சொல்லிக் கூறியதையோ காதிலே வாங்கிக் கொள்ளாமல் அவளை அனுப்ப மறுத்துவிட்டாள்.

மது ரிசப்ஷனில் இருந்தப் பெண்ணிடம் கதிரைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கும்போது அவ்வழியில் வந்த பவன் அவள் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டவன் நேற்று கதிர் ஆஃபீஸில் இன்று நியூ ஜாயினியாக ஒரு பெண் வருவதாகச் சொல்லிக் கொண்டிருந்தது அவனுக்கு நினைவில் வந்தது.

நேராக ரிசப்ஷனுக்கு வந்த பவன் “மேடம் நீங்க கதிர் சாரைப் பார்க்கணுமா?” என்று கேட்டான்.

மது அவனை ஒருமுறை பார்த்துவிட்டு ஆம் என்று தலையை ஆட்ட…. “சரி என் கூட வாங்க. நான் உங்களைக் கதிர் சார் கிட்ட கூட்டிட்டுப் போறேன்,” என்று சொல்லி மதுவைத் தன்னுடன் அழைக்க..

தன் எதிரில் நின்றிருந்த பவனை ஏற இறங்கப் பார்த்த மது “ஹலோ….. யாரு சார் நீங்க? நீங்களா வந்து எனக்கு ஹெல்ப் பண்றேன்னு சொல்றீங்க… என்னை உங்களுக்கு முன்னப் பின்னத் தெரியுமா என்ன…”

“நான் ரிசப்ஷன்லப் பேசிட்டு இருக்கேன் இல்லையா…. யாரு என்னன்னு தெரியாம நீங்க கூப்பிட்டதும் நான் உங்க கூட வந்திரனுமா?” என்று மது அவனிடம் சிடுசிடு எனப் பேச…

‘இது என்னடா எனக்கு வந்த சோதனை? பாவம் நீங்க ரிசப்ஷனில் நின்னு இவங்க கிட்ட கெஞ்சிட்டு இருக்கீங்களேன்னு பாவம் பார்த்து வாண்டடா வந்து உங்களுக்கு ஹெல்ப் பண்ணினேன் பாருங்க.. எனக்கு இந்த நோஸ் கட் தேவை தான்,’ என்றவன்.

ரிசப்ஷனில் இருந்தப் பெண்ணிடம் வந்தவன் “கதிர் சாரே வந்து சொன்னா தான் இவங்களை உள்ளே விடணும். அவங்களை தெரியும் இவங்களை தெரியும்னு சொன்னாக் கேட்காதீங்க,” என்று சொல்லிவிட்டு மதுவை முறைத்துவிட்டுச் சென்றான்.

பவன் சென்றதும். மது எவ்வளவு சொல்லியும் அவளை உள்ளே விட மறுத்து விட்டனர். விக்கியிடம் சொல்லலாம் என்றாள் அவனுக்கு கால் போகவே இல்லை… கதிர் கொடுத்த நம்பருக்கு ட்ரை பண்ணினால் அவன் லைன் பிசி என்று வந்தது.

என்ன செய்வது என்று தெரியாமல் ரிசப்ஷனில் இருந்த சேரில் என்ன செய்வது என்று தெரியாமல் அமர்ந்து இருந்தாள்.

தன் இடத்திற்கு வந்து வேலை செய்து கொண்டு இருந்த பவன் ஏதோ முணுமுணுத்துக் கொண்டே வேலை செய்ய… அதைத் தன் கேபினிற்குள் இருந்து கவனித்துக் கொண்டு இருந்த கதிர். பவனுக்குக் கால் செய்து தனக்குத் தேவையான ஃபைலை எடுத்து வரச் சொன்னான்.

பவன் நேராக கதிரின் அறைக்கு வந்தவன் அவன் கொண்டு வந்த ஃபைலைக் கதிரின் முன் வைத்துவிட்டுக் கோபமாக வெளியேச் செல்ல…

“ஏய் பவன் நில்லு….” என்ற கதிர் அவனைத் தன்னிடம் வரச் சொல்லிச் சைகை செய்ய… “சொல்லுங்க சார்,” என்று கோபமாகக் கதிரின் அருகில் வந்து நின்றான்.

“என்ன பவன் நீ ஆஃபீஸ் வந்து ரெண்டு நாள் ஆச்சு… இருக்க இடம் தெரியாமல் அமைதியா இருந்தே… இன்னிக்கு என்னடான்னா.. ஒரே கோபமாச் சுத்திட்டு இருப்ப போல,” என்றான் கதிர்.

“ஆமா சார் நான் உண்டு என் வேலை உண்டுன்னு நான் பாட்டுக்கு அமைதியா இருந்திருக்கணும்.”

“சும்மா இருக்காம ரிசப்ஷன்ல ஒரு பொண்ணு உங்க கிட்டேப் பேசணும்னு சொல்லி கேட்டுட்டு இருந்துச்சு… பார்க்கப் பாவமா இருக்குன்னு போய் வாங்க நான் உங்களைக் கதிர் சார் கிட்ட கூட்டிட்டுப் போறேன்னுப் போய்ச் சொன்னே. அதுக்கு அந்தப் பொண்ணு நீங்க யாரு… நீங்க சொன்னா நான் உங்க கூட வந்திரனுமா அது இதுன்னு சொல்லி என்னை கண்டபடித் திட்டிச்சு சார்,” என்று சொல்ல.

“நான் வரச் சொன்னேன்னு சொல்லி வந்திருக்காங்களா…” என்று கேட்டான் கதிர்.

“ஆமா சார் விக்கி சார் பேரைச் சொல்லி அவருக்கு ரிலேஷன்னு சொல்லிச்சு…. நான் ரிசப்ஷன்லச் சொல்லி அந்தப் பொண்ணை உள்ளே விடாதேன்னு சொல்லிட்டு வந்துட்டேன்,” என்றான் பவன்..

பவன் சொன்னதை எல்லாம் கேட்ட கதிர்…. வந்திருப்பது மதுவாகத் தான் இருக்கும் என்று யூகித்தவன்.

“ஹேய் இடியட்… அவங்க தான் நான் வரச் சொல்லி இருந்த நியூ ஜாயினி,” என்றவன். ரிசப்ஷனுக்குப் போன் செய்து மதுவை அனுப்பச் சொல்லிப் போனை வைத்தவன் “போ… போய் அவங்க வந்ததும் என்னோட கேபினுக்குக் கூட்டிட்டு வா…” என்று பவனை அனுப்பி வைத்தான்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured