Home Uncategorizedஇராக்கதனின் ரதி அவள் part-1-12

இராக்கதனின் ரதி அவள் part-1-12

by Layas Tamil Novel
262 views

EPISODE 12

“வாங்க வாங்க… என் உயிரை கைப்பற்றின மகராசி வாங்க வாங்க ..” என்று குணவான் ரதியை வரவேற்றனர் அவளுக்கு மிகவும் பிடிக்கும் நொறுக்கு தீனிகளை ஒரு பாக்ஸில் வைத்து அவளுக்கு அன்பளிப்பாக கொடுத்தார்.

அவரோடு சேர்ந்து கமலியும் நின்று இருந்தாள் .

“வா டி.. my  brave  girl ..  நம்ம ரிப்போர்ட்டர் நடந்தது எல்லாம் சொன்னார் ” என்று கேட்டாள். 

“என்ன பெருசு உன் உயிரை காப்பாத்திருக்கேன். நீ வெறும் ஸ்னாக்ஸ் குடுத்து வேலையை முடிச்சிட்ட.. ” என்றாள் .

“அவசரத்துக்கு என்னால இது தான் வாங்க முடிஞ்சுது ரதி ஈவினிங் ஆபீஸ் முடிஞ்சு கிளம்புவோம்ல அப்போ நீயும் கமலியும்  எங்க சாப்பிட போலாம்னு யோசிச்சு சொல்லுங்க.. இன்னிக்கு நைட் என்னோட செலவுல உங்களுக்கு டின்னர்  ஓக்கவா ” என்றார்

“ஏய் ரதி அப்போ நல்ல 5 ஸ்டார் ஹொட்டேலா பார்த்து பேராசை கூப்டு போவோம் . ஒரு மாச சம்பளத்தை இன்னிக்கு காலி பண்ணிடுவோம் ” என்று குதூகலம் ஆன  கமலி .

“ஆமா ரதி நீ மட்டும் சரியான நேரத்துக்கு வராம இருந்திருந்தா இந்த நேரம் அந்த ரௌடிங்க நம்ம பெருச பஸ்பம் ஆக்கி ஆத்துல கரைச்சிருப்பாங்களாமே .. அப்படியா டி.. ” என்று ஆச்சர்யமாக கேட்டாள்  கமலி .

ரதி சிரித்துக்கொண்டே… “அட அதை ஏன் கேக்குற கமலி நம்ம பெருசை  இவங்க கடத்தி வெச்ச விஷயம் எனக்கு தெரியாது. நான் வேற ஒரு விஷயமா போயிருந்தேன். போன இடத்துல என்னை பிடிச்சு தூக்கிட்டு போய்ட்டாங்க.. அங்க போனதுக்கு அப்பறோம் தான் தெரிஞ்சுது நம்ம பெருசும் அவங்ககிட்டே மாட்டிக்கிச்சுன்னு.. முன்னமே தெரிஞ்சிருந்தா நான் அங்க இருந்து எஸ்கேப் ஆகிருப்பேன் . போனா போகட்டும்ன்னு  இவரை அந்த ரௌடிங்க கிட்டே பேசி பொய் சொல்லி காப்பாத்தி விடிட்டுருக்கேன்” என்றாள்  ரதி.

“ஆமா ரதி நானே கேக்கணும்னு தான் இருந்தேன் . நீ எப்படி அந்த ராக்கிகிட்டே மாட்டிகிட்டே… நீ முதல்ல CM  வீட்டுப்பக்கம் எதுக்காக வந்த ” என்றார் குணவான் ரதியிடம் .

“அய்யய்யோ! அவசரப்பட்டு உளறிட்டோமே.. பெருசு வேற இப்போ எதுக்கு நான் அங்க போனேனு கேள்வி கேக்குதே.. நான் என்ன சொல்லி சமாளிப்பேன்” என்று ரதி விழிக்க…

“ஏய் ஒரு நிமிஷம் நீ அந்த ரௌடியை பார்க்க CM வீட்டுக்கு போயிருந்தியா.. அவனை பாலோ பண்ணி உன்னோட கதைக்கு கன்டென்ட் எடுக்க போயிருக்க அபப்டி தானே.. அப்படி போன இடத்துல நீ வசமா மாட்டி இருக்க… அந்த நேரம் நம்ம பெருசு அங்க இருக்கறதை தெரிஞ்சுட்டு  நம்ம பேராசை வெச்சு நீ எஸ்கேப் அங்கிருக்க அப்படித்தானே ” என்று நடந்ததை எல்லாம் அப்படியே புட்டு புட்டு வைத்தாள்  கமலி.

“அடிப்பாவி! எப்படி நடந்ததை எல்லாம் அபப்டியே சொல்லிட்டே… ” என்று ரதி ஆச்சர்யமாக கமலியை  பார்க்க..

“அப்போ என்னை காப்பாத்த நீ வரல.. நான் தான் உன்னை அந்த ராகிக்கிட்டே இருந்து காப்பாத்தினேனா! ” என்று  அதிர்ச்சியானார் குணவான்.

“ஆமா பெருசு… ” என்று ரதி தலையை சொரிந்துகொண்டு அவரை பார்க்க…

அவளை முறைத்தவர் அவள் அருகில் வந்து  ” நீ பண்ணின வேளைக்கு உனக்கு பரிசு வேறையா ” என்று ரதி கையில் இருந்த ஸ்னாக்ஸை  பிடிங்கிக்கொண்டு அங்கிருந்து சென்றார்.

“பெருசு… என்னோட ஸ்னாக்ஸ் … ” என்று காதலனை பிரிந்த காதலி போல சோகத்தில் அவர் கையில் இருந்த ஸ்னாக்ஸை பார்த்தாள் .

“பெருசு.. ஸ்னாக்சை நீயே வெச்சுக்க.. நைட் எங்க ரெண்டு பேரையும் டின்னருக்கு மட்டும் கூட்டிட்டு போய்ட்டு சரியா.. ” என்று கமலி அவர் சென்ற திசையை நோக்கி சத்தமிட..

“அந்த பிராடை கூட்டிட்டு எங்க வேணா போ.. நான் காசெல்லாம் தரமாட்டேன் ” என்றவர் தன் கேபினுக்கு சென்று வேலைகளை துவங்கினர்.

“ஏய் விடு டி.. நம்ம பெருசு எங்க போகப்போகுது நைட் டின்னர் கண்டிப்பா வாங்கி தரும். நீ வா நம்ம வேலையை பார்க்கலாம் ” என்று  ரதி தன் கேபினுக்கு  செல்ல முயற்சிக்க…

“ஏய் இங்க வா.. ” என்று ரதியை இழுத்துக்கொண்டு தன் கேபினுக்கு வந்தவள்.

” நீ என்கிட்டே அந்த ரௌடி பயலை பாக்க  மாட்டேன். அவனை வெச்சு கதை எழுத்தமாட்டேன்னு சொல்லிட்டு . அவனுக்கே தெரியாம நீ அவனை பாலோ பன்னிருக்க .. என்ன டி இதெல்லாம்” என்றாள்  கமலி.

“ஆமா சொன்னேன் தான். ஆனா அவனை தவிர வேற யாரையும் என் கதைக்கு ஹீரோவா போட  எனக்கு மனசு வரல டி.. அவன் தான் என் கதைக்கு சுட ஆவான். ” என்றாள் .

“அதுக்காக நீ ரிஸ்க் எடுக்கப் போறியா ” என்றாள் கமலி.

“வேற என்ன டி என்னை செய்ய சொல்ற.. அவனை பார்த்தத்தில் இருந்து என் கதையோட ஹீரோவுக்கு அவன் தான் சரியா மேட்ச் ஆவான்னு என் மின்ட் பிக்ஸ் ஆகிருச்சு. நானும் வேற மாதிரி எழுத ட்ரை பண்ணினேன் . ஆனா அது முடியல.. அதான் அவனை பார்த்ததில் இருந்து நடந்ததை எல்லாம் நானே தனியா ஒரு புக்கா  எழுதி நம்ம தினம் கவனி E-BOOK மூலமா டெய்லி எபிசோட் வெளியிடலாம்னு யோசிச்சு கதை எழுத ஆரம்பிச்சுட்டேன்” என்றாள் .

“என்ன டி சொல்ற… கதை எழுத ஆரம்பிச்சுட்டியா ! எங்க நான் பாக்குறேன்” என்று ரதியின் கையில் இருந்த போனை பிடிங்கியவள்.

“எதுல டி ஸ்டோரி எழுதி வெச்சிருக்க.. ” என்று அவள் மொபைலை அன்லாக் செய்ய முயல.. அது பாஸ்வர்ட் கேட்டது.

“ஏய் என்ன டி இது புதுசா பாஸ்வர்ட் எல்லாம் போட்டு வெச்சிருக்க.. ” என்றாள்  ரதியிடம்.

“எல்லாம் ஒரு காரணமா தான் டி.. அந்த ராக்கி இருக்கானே அவனோட சிஸ்டர்  ஓவியா காலேஜில் என்னோட ஜூனியர். நான் கதை எழுத ஆரம்பிச்சுட்டேன். இனி அடிக்கடி அந்த ராக்கியை  பத்தி தெரிஞ்சுக்க அவன் வீட்டுக்கு போக வேண்டி இருக்கும். அங்க போய்  யாராவது என் மொபைலில் நான் எழுதின டாக்குமெண்டை ஓபன் பண்ணி பார்த்துட்டா அப்பறோம் நான் இங்க வேலை பாக்குறது தெரிஞ்சிரும் இல்ல… அதான் லாக் போட்டுட்டேன் ” என்றாள் .

“என்ன டி.. அந்த ரவுடி வீட்டுக்கு போகப்போறியா!.. ” என்று கமலி அதிர்ச்சியில் கத்திவிட…

“இப்போ எதுக்கு டி கத்தின .. பெருசு காதுல விழப்போகுது. அப்பறோம் என்னை எழுத வேணாம்னு கம்பெல்  பண்ண ஆரம்பிச்சிடும் ” என்றவள் திரும்பி குணவான் கேபினை பார்க்க..

அவர் தீவிரமாக ஏதோ வேலை செய்து கொண்டு இருந்தார்.

தன் வாயில் இருந்து ரதியின் கையை விலக்கிவிட்டவள் “உனக்கு தைரியம் தான் டி அவன் எவ்ளோ பெரிய ரௌடி அவன் வீட்டுக்கே போறேன்னு சொல்ற.. அங்க போய்  உனக்கு எதுவும் ஆகிருச்சுனா என்ன டி செய்றது” என்றாள் கமலி.

“எனக்கு எதுவும் ஆகாம நான் பார்த்துகிறேன் டி.. அவன் வீட்டுக்கு போறதுக்கு எனக்கு எந்த பயமும் இல்ல.. அங்க தான் ஓவியா இருக்காளே.. நான் அவளை பார்க்க போற மாதிரி தானே அவன் வீட்டுக்குள்ள நுழையப்  போறேன். அதனால அவனுக்கு என்  மேல எந்த டௌப்டும் வராது. நீ கவலை படாத .. ” என்று கமலியை சமாதானம் செய்தாள் ரதி.

“சரி டி என்னவோ சொல்ற.. எதுக்கும் நீ ஜாக்கிரதையாவே இரு சரியா ” என்றவள்.

“சரி உன் ஸ்டோரியை கொடு நான் படிக்குறேன் ” என்று அவள் கையில் இருந்த மொபைலை வாங்க போக…

“எடிட்டிங் வேலை எல்லாம் முடிச்சு நாளைக்கு நம்ம E- புக்ல  என்னோட ஸ்டோரி வெளிவரும் அங்க படிச்சுக்கோ.. நமக்கு தான் அங்க வர ஸ்டோரி எல்லாம் பிரீயா  படிக்க அக்சஸ் இருக்கே.. ” என்றாள் .

“சரி விடு நாளைக்கே  நான் படிச்சுகிறேன். ஆமா உன்னோட ஸ்டோரி டைட்டில் என்ன சொன்ன. ம்ம்ம்…இராக்கதனின் ரதி அவள்  அதானே உன் ஸ்டோரி டைட்டில் “என்றாள்  கமலி .

“ம்ஹும்… இல்ல.. ஸ்டோரி நேம் ல ஒரு சின்ன சேன்ஞ்ச் பண்ணிருக்கேன் டி.. என் பேரு ரதின்னு அவனுக்கு தெரிஞ்சிருச்சு.. ஒரு வேலை என் ஸ்டோரியை அவன் படிச்சு அதுல  வர எல்லா  கண்டென்ட்டும் அவனுக்கு நடந்த மாதிரியே இருக்குன்னு சந்தேகம் வந்திருச்சுன்னா என்ன செய்றது ” என்றாள் .

“ஏய் எப்படியும் நீ இங்க வேலை பாக்குறது அவனுக்கு தெரியும் தானே.. நம்ம சைட்ல வர ஸ்டோரியை படிச்சா அது நீ எழுதினதுனு அவனுக்கு தெரிஞ்சு போயிராதா ” என்று சந்தேகம் கேட்டாள் கமலி .

“அங்க தான் நீ என்னை புரிஞ்சுக்கணும். நான் அவன்கிட்டே இங்க வேலை பாக்குற விஷயத்தை சொல்லவே இல்ல அவனுக்கு நம்ம பெருசு வேலை பாக்குற இடம் இதுன்னு மட்டும் தான் தெரியும் ” என்றாள் ரதி  .

“ஆனா ஸ்டோரி உன்னோட நேம்ல  வருமே.. அதை வெச்சு அவன் கண்டு பிடிக்க மாட்டானா!! அப்போ என்ன செய்வ .. ” என்றாள்  கமலி .

“நான் ஏன் டி என்னோட நேம்ல  எழுத போறேன் . அதான் என்னோட பென் நேம்  இருக்கே .. அந்த ID ல தான் நான் எழுதப் போறேன் ” என்றாள் .

“அப்போ நீயே சொல்லு டி…” என்று கமலி அழுத்துகொண்டாள்.

“ராத்திரியின் இராக்கதன் இது தான் ஸ்டோரி நேம் நல்லா இருக்கா.. என்னோட பென் நேம் மகிழம் பூ நல்லா இருக்கா டி கமலி” என்று கேட்டாள் ஆர்வமாக.

“என்ன  டி… உன்னோட ஸ்டோரி நேம் கேட்டாலே ஒரு மாதிரியா இருக்கு… ரொமான்ஸ் ஸ்டோரியா!! அதே போல pen நேம் அதுக்கு பொருத்தமா அமைஞ்சிருச்சே…” என்றாள்.

 “கொஞ்சம் கொஞ்சம்  ரொமான்ஸ் இருக்கும் ஆனா அவன் ரவுடி இல்லையா அதிக நேரம் ராத்திரியில தானே அவங்களுக்கு வேலை அதிகமா இருக்கும் அதனால தான் இந்த நேம் வெச்சேன்” என்றாள்.

“சரிடி  அப்போ நாளைக்கு உன்னோட ஸ்டோரி வருமில்லையா நான் படிச்சு தெரிஞ்சுக்கிறேன் அந்த ராக்கி எப்படின்னு” என்று சிரித்து விட்டு கமலி அவள் வேலையை பார்க்கச் செல்ல ரதியும் தன் கதைக்கான வேலைகளில் மும்முரமானாள்.

 வேலை முடிந்து ரதி கமலி இருவரும் வீட்டிற்கு கிளம்ப ஆயத்தமாக அவர்கள் கேபின் முன்பு வந்து பாக்கெட்டில் கைவிட்டபடி எங்கோ பார்த்தவாறு நின்றார் குணவான்.

“என்ன பெருசு காலையில எனக்கு கொடுத்த கிஃப்ட் புடுங்கிட்டு போன… இப்ப என்ன இங்க வந்து நிற்கிற வழியை விடு எங்க ரெண்டு பேருக்கும் வீட்டுக்கு நேரமாயிருச்சு. அதான் நீ எங்களுக்கு டின்னர் வாங்கி தர மாட்டேன்னு சொல்லிட்ட இல்ல” என்றவள்  அவரை இடித்துவிட்டு அவரை தாண்டி செல்ல கமலியும் அவள் பின்னால் சென்றாள்.

“சரி வீட்டுக்கு கிளம்பிட்டீங்களா பாவமே புள்ளைங்க பொக்குன்னு போயிடுவீங்களே… உங்களை கூட்டிட்டு போய் டின்னர் வாங்கி கொடுக்கலாம்னு நினைச்சேன் பரவால்ல விடுங்க… எனக்கு செலவு மிச்சம்” என்றார் குணவான்.

வெளியே செல்லப்போன இருவரும் திரும்பி வேகமாக குணவானிடம்  வந்தவர்கள் “பெருசு!!!  நெஜமாத்த சொல்றியா எங்களுக்கு நைட் சாப்பாடு வாங்கி தரியா!!” என்று இருவரும் ஆர்வமாக கேட்க…

“ ஆமா சாப்பிட போலாமா.. “ என்று இருவரையும் சாப்பிட அழைத்தார் குணவான்.

“தாராளமா போலாமே…  ஒரு நிமிஷம் இரு நான் எங்க வீட்ல சொல்லிட்டு வரேன் “ என்று ரதி ஃபோன் பண்ணச் சொல்ல…

கமலியும் தன் வீட்டில் இரவு சாப்பிட வர மாட்டேன் என்று சொல்லிவிட்டு மூவரும் கிளம்பி சாப்பிட ஹோட்டலுக்கு சென்றனர்.

 குணாவின் காரில் அந்த சிட்டியில் பிரபல ஹோட்டலுக்கு வந்து இறங்கிய இருவரும் குண வந்த பிறகு ஹோட்டலுக்குள் நுழைந்தனர் அங்கே அவர்கள் கதவை திறந்து கொண்டு உள்ளே வர…

“ஓய் 250 பீடா!!” என்று அவளைப் பார்த்து கையை ஆட்டியபடி நடந்து வந்தான் ராக்கி. 

அவனை அங்கு சற்றும் எதிர்பாராத ரதி “அய்யய்யோ இவனா! இவன் எங்க இங்க…” என்று அவனே பார்த்துக் கொண்டிருக்க அவளை நோக்கி வேகமாக வந்த ராக்கி. 

அவளை இடித்துக்கொண்டு வந்து நிற்க்க… குணவானும், கமலியும் ஒருவரை ஒருவர் செய்வதறியாது பார்த்துக் கொண்டு நின்றிருந்தனர்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured