Home Uncategorizedஇராக்கதனின் ரதி அவள் part-1-27

இராக்கதனின் ரதி அவள் part-1-27

by Layas Tamil Novel
223 views

EPISODE 27

குணவானும், கமலியும் வாயை பிளந்தபடி அவர்களுக்கு எதிரில் நின்று இருந்த ரதியையும் அவள் கையில் இருந்த இன்விடேஷனையும் மாறி மாறி பார்த்துக்கொண்டு நின்று இருந்தனர்.

“என்ன ரதி இது… நீ யும், அந்த ராக்கியும் கல்யாணம் வரை போயிருக்கிங்க… எப்போ ரெண்டு பேரும் லவ் பண்ண ஆரம்பிச்சீங்க.. எப்போ இது எல்லாம் நடந்துச்சு “ என்று நம்பமுடியாமல் குணவான் அவளிடம் கேட்டார்.

 “ஏண்டி எனக்கு தெரிந்து ஒரு ஒன்றரை ரெண்டு மாசம் இருக்குமா நீங்க ரெண்டு பேரும் முழுசா பார்த்து பேசி பழகி. இப்பதான் உங்க ரெண்டு பேர பத்தியும் கதை எழுதி சூடு பிடிச்சிருக்கு.. அவரை நீ கொஞ்சம் நாள் முன்னாடி தான் லவ் பண்ணவும் ஆரம்பிச்ச…   அதுக்குள்ள ரெண்டு பேருக்கும் கல்யாணம் வர போயாச்சா!” என்று கமலியும் அதே ஆச்சரியத்தோடு ரதியிடம் கேட்டாள்.

 “என்னது இவங்க ரெண்டு பேர் பத்தி தான் ரதி கதையை எழுதிட்டு  இருக்காளா! அப்போ அந்த இராக்கதன் கதை அந்த ராக்கியும் ரதியும் இவங்க ரெண்டு பேரும் சேர்ந்த கதை தானா”  என்று மேலும் அதிர்ச்சி தாங்காமல் குணவான் ரதியை பார்க்க..

 “சாரி பெருசு உன்கிட்ட முன்னாடியே நான் ராக்கிய பாலோ பண்ணி தான் கதை எழுதுறேன்னு சொல்லி இருந்தா நீ என்ன கண்டிப்பா இந்த கதையை எழுதிவிட்டு இருக்கவே மாட்ட… அதனாலதான் உன்கிட்ட சொல்லாம இந்த கதையை ஸ்டார்ட் பண்ணினேன். அப்பப்போ அவன் கூட பேசி பழகப் போய் அப்படியே எங்க ரெண்டு பேருக்குள்ளேயும் லவ் வந்துருச்சு” என்று சொல்லி ரதி வெட்கப்பட்டாள்.

“ ரதி ஒருவாட்டிக்கு இரண்டு முறை நல்லா யோசிச்சுக்கோ.. அவன பத்தி உனக்கு நல்லா தெரியுமா.  எல்லாம் தெரிஞ்சுதான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டியா.. இல்ல எதுவும் நீயா வம்படியா போய் அவன்கிட்ட சிக்கிட்டியா” என்று அவள் மேல் இருந்த அக்கறையில் கேட்டார் குணவான்.

“ ஐயோ பெரிசு நீ யோசிக்கிற அளவுக்கெல்லாம் எதுவுமே கிடையாது ராக்கியோட தங்கச்சி என்னோட காலேஜ் ஜூனியர். அவங்க கூட ஓரளவுக்கு பேசி பழகுனதுக்கு அப்புறம் தான் ராக்கி கிட்ட என்னோட லவ்வையும் நான் சொன்னேன் நீ நினைக்கிற மாதிரி எதுவுமே இல்ல கூல் “ என்று குணவானுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைத்தாள்.

 “எப்படியோ உனக்கு கல்யாணம் பிக்ஸ் ஆயிடுச்சு வாழ்த்துக்கள். நீயும் அந்த ரவுடி பயலும் சந்தோசமா இருந்தா சரிதான்” என்றவர்.

 அவள் கையில் இருந்த பத்திரிக்கையை வாங்கி “எப்போ கல்யாணம்..”  என்று கேட்டபடி பத்திரிகையை பிரித்து பார்த்தவர் அதில் இருந்து தேதியை பார்த்ததும் “என்ன! வர திங்கட்கிழமை உனக்கு உனக்கு கல்யாணமா! என்ன இவ்வளவு பாஸ்ட்டா இருக்கீங்க” என்றார் ஆச்சரியமாக

 அதை நம்ப முடியாத கமலி குணவானிடமிருந்த பத்திரிக்கையை வாங்கி பார்த்தவள் “அடிப்பாவி! இருந்தாலும் இவ்வளவு ஸ்பீடாகாது டி..  விட்டா அடுத்த வாரமே குழந்தை பெத்துக்கு போல இருக்கே” என்று ரதியை கமலி கிண்டல் செய்ய.

அதில் வெட்கப்பட்ட ரதி, “ சும்மா இருடி இரண்டு பேரும் ஃபேமிலியோட கல்யாணத்துக்கு வந்துடனும்” என்று கமலியிடமும் ஒரு பத்திரிகை எடுத்து கையில் திணித்துவிட்டு தன் கேபினுக்கு சென்று வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.  

 ரதி வேலையில் நிம்மதமாக ஈடுபட்டிருக்க அவள் அருகில் வந்து அமர்ந்த கமலின் எதுவும் பேசாமல் ரதியை பார்த்துக் கொண்டு இருந்தாள்.

 வேலை செய்து கொண்டிருந்த ரதி சிறிது நேரம் கழித்து தான் கமலியை கவனித்தால்.

 கம்ப்யூட்டரில் செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே நிறுத்திவிட்டு கமலிடம் திரும்பியவள் “சொல்லுடி என்ன கேட்கணும் என்கிட்ட “ என்றாள்.

“ ஏண்டி வேலைய ஸ்டாப் பண்ணிட்ட நான்  ஏதாவது கேட்க வந்தேன்னு உன்கிட்ட சொன்னேனா நீ உன் வேலையை பார்க்க வேண்டியதுதானே” என்றாள் கமலி.

“ ஏ கமலி சும்மா பேசி சமாளிக்காத நீ என்கிட்ட ஏதோ கேட்கணும்னு தான் இங்க வந்து உட்கார்ந்து இருக்க… உன் கூட எவ்வளவு வருஷம் பழகி இருக்கேன் இது கூட எனக்கு தெரியாதா” என்றால் ரதி.

 “ஆமா உன்கிட்ட முக்கியமா ஒரு விஷயம் பேசணும். ஆனா இங்க வச்சு எதுவும் பேச வேண்டாம் பெருசு நம்ம பேசுறது கேட்டா அப்புறம் கேள்வி மேல கேள்வி கேட்கும். நீ வா நம்ம வெளிய போய் காபி சாப்பிட்டு பேசலாம்” என்று  ரதியை தன்னோடு அழித்துக் கொண்டு கமலி வெளியே கிளம்பினாள்.

 ரதியும் யோசனையோடு கமலி தன்னிடம் என்ன கேட்கப் போகிறாள் என்று வரே தன் ஹேண்ட் பேக்கையும் ஃபோனையும் எடுத்தவள் கம்ப்யூட்டரை சட் டவுன்  செய்துவிட்டு கிளம்பி இருந்தாள்.

 இங்கே ஓவியா தன் வீட்டையே தலைகீழாக புரட்டிப்போட்டுக் கொண்டிருந்தாள்.

 “சீக்கிரம் சீக்கிரம் இன்னும் ரெண்டு நாள் தான்  டைம் அதுக்குள்ள இந்த வீட்டை பளிச்சுன்னு சுத்தம் செஞ்சு நான் சொன்ன மாதிரி பெயிண்ட் அடிச்சு இருக்கணும். இந்த ரெண்டு நாளுக்குள்ள வேலை எதுவும் முடிக்கல.. அப்புறம் என் அண்ணன் கிட்ட சொல்லி உன்னை உண்டு இல்லைன்னு பண்ணிடுவேன்” என்று ராக்கிய போலவே அவள் வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க வந்த ஆளை மிரட்டி வேலை வாங்கிக் கொண்டு இருந்தாள்.

 “ஏம்மா நான் ஒரு ஆள் முடிஞ்ச அளவுக்கு என்ன வேலை பார்க்க முடியுமோ அதை பார்த்து தரேன் நீயும் கொஞ்சம் கூட எனக்கு ஒத்தாச்சியா இரு” என்று அந்த ஒற்றையால் அங்கிருந்த பொருட்களை எல்லாம் அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார்.

 “நீ ஒரு ஆள வந்து இந்த மொத்த வீட்டையும் பெயிண்ட் அடிப்பேன்னு அனுப்பி வெச்சிருக்காங்க    என்ன நடக்கப் போகுதோ போ” என்று புலம்பியபடி அவருக்கு உதவி கொண்டிருந்தால் ஓவியா  

 “என்ன தங்கச்சி வேலையெல்லாம் படு சரூரா நடக்குது போல” என்றபடி உள்ளே வந்த மாரீஸ் வீட்டை பார்த்தவன் 

“ரெண்டு நாளைக்குள்ள இந்த வேலையெல்லாம் இவங்க முடிச்சிடுவாங்கன்னு  நினைக்கிற.. “ என்று சந்தேகமாக கேட்டபடி அவளிடம் சென்றான்.

 “வா வா இப்பதான் உனக்கு வலி தெரிஞ்சுதா.. இன்னும் ஒரு வாரத்துல அண்ணனுக்கு கல்யாணம் வந்து கூட மாட இருந்து ஏதாவது ஒத்தாசை பண்ணுவேன்னு இருக்கா.   காபி போடறதுக்கு முன்னாடி காலங்காத்தால வந்து கதவை தட்டுவ இப்ப ஆடி அசைந்து பத்து மணிக்கு வர” என்று அவனையும் அதிகாரம் செய்தால் ஓவியா.

“ நான் ஒன்னும் சும்மா ஊரை சுத்திட்டு இருக்கலாமா இவ்வளவு நேரம் உன் அண்ணன் கூட சேர்ந்து சிவராஜ் அண்ணன் வீட்டில் இருக்கிற வேலையெல்லாம் முடிச்சிட்டு. அப்படியே கல்யாணத்துக்கு சமையலுக்கு வாத்திய கோஷ்டி, மண்டபம்னு இத்தன வேலையும் முடிச்சிட்டு தான் வீட்டுக்கு வரேன் அது தெரியாம என்ன இந்த வாறு வாருர..”  என்று மாரீஸ் ஓவியாவிடம் எகுற..

 “அப்போ நீ மட்டும் தனியா வீட்டுக்கு வர அண்ணன் எங்க போச்சு” என்று கேட்டால் ஓவியா.

 “அதுவா உன் அண்ணன் சிவராஜன்ணன் வீட்ல இருந்து நேரா ரதிய பாக்குறேன்னு கிளம்பி இருக்கு. அப்படியே ரதியை கூப்பிட்டு அதோட  பிரண்டு அந்த குள்ள வாத்து இருக்குல்ல அதையும் பார்த்து நம்ம ராக்கி சார்பா கல்யாணத்துக்கு வர சொல்லி பத்திரிக்கை வைக்கிறேனு போயிருக்கு. நான் தான் நீ தனியா இங்க கிடந்து வேலையெல்லாம் பார்க்கணுமே உனக்கு ஒத்தாசைக்கு வரலாம்னு கிளம்பி வந்தேன்” என்றான்.

 “சரி சரி பேசிக்கிட்டு இருக்காத பெயிண்ட் அடிக்க ஒரு ஆளு தான் வந்திருக்கு.  இந்த ஒத்த ஆளை  வச்சு ரெண்டு நாள்ல நான் எப்படி மொத்த வீட்டையும் பெயிண்ட் அடிக்க முடியும்ம். நீ ஒன்னு பண்ணு இவர கூட்டிட்டு நம்ம அண்ணன் காண்ட்ராக்ட் பேசி விட்ட அந்த பெயிண்டர்கிட்ட போய் இன்னும் ரெண்டு ஆளுங்களை கூட வேணும்னு கேட்டு எல்லா பேசி முடிச்சு   கூட்டிட்டு வா. அதுவரைக்கும் நான் இங்க இருக்குற சின்ன வேலை சின்ன சின்ன வேலை எல்லாம் பார்த்து வைக்கிறேன்” என்று மாரிசையும் அவனுடன்  அந்த பெயிண்டரையும் அனுப்பி வைத்தாள். 

 அவர்கள் சென்ற பிறகு தன் பெட்ரூமில் வீட்டு வைத்திருந்த உடைகளை எல்லாம் பீரோவிற்குள் வைத்து அடுக்கிக்கொண்டு இருந்தால்.

 அப்போது தன் நண்பனுடன் ராக்கியின் வீட்டிற்கு முதன் முதலாக வந்த ராகு தன் நண்பனை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு இவன் மட்டும் உள்ளே ஓவியாவை பார்ப்பதற்காக வந்தான்.

 உள்ளே வந்தவன் ஹாலில் யாரும் இல்லாமல் பொருட்கள் எல்லாம் எங்கும் அங்கும் எடுத்து வைக்கப்பட்டு இருக்க அதை பார்த்ததுமே வீட்டை சுத்தம் செய்கிறார்கள் என்பது என்று நினைத்துக் கொண்டவன்.

 ஓவியாவை தேடிக்கொண்டு சத்தமில்லாமல் அங்கிருந்த அறைகளை எட்டிப் பார்த்தபடி உள்ளே நடந்தான்.

 ராகவன் வந்தது தெரியாமல் தன் பெட்ரூமில் மும்பரமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தால் ஓவியா வந்தவன் நேராக கிச்சனுக்கு சென்று உள்ளே பார்க்க அங்கே ஓவியா இல்லாததை கண்டவன்.

 ஒரு அறைக்குள்ள இருந்து ஏதோ பொருளை உருட்டும் சத்தம் கேட்க அவள் அங்கு தான் இருக்க வேண்டும் என்று யோகித்தவன் மெல்ல சத்தம் இல்லாமல் அந்த அறையை நோக்கி வந்து தலையை மட்டும் உள்ளே நீட்டி பார்த்தான் .

 கையில் ஒரு பெரிய பெட் சீட்டை அந்த பீரோவின் மேல் ராகில் வைப்பதற்காக கால்களை உயர்த்தியபடி அந்த பெட்ஷீட்டை வைத்து உள்ளே தள்ளிக் கொண்டிருந்தாள் ஓவியா.

 அவள் அங்கு இருப்பதை பார்த்தவன் திரும்பி வீட்டிற்குள் வேறு யாரும் இருக்கிறார்களா என்று ஒரு முறை பார்த்துவிட்டு மெல்ல அறைக்குள் நுழைந்தான்.

கால்களை உயர்த்தி நின்றிருந்த ஓவியாவின் பின்னால் நெருக்கமாக நின்றவன். அவள் கால்களுக்கு அடியில் தன் கால்களை நுழைத்து நிற்க திடீரென அவ்வளவு நெருக்கத்தில் தன் பின்னால் யாரும் நிற்பதை கண்டதும் அதிர்ந்து திரும்பி பார்த்த ஓவியா.

 அவளுக்கு மிக அருகில் நின்றிருந்த ராகவ்வை பார்த்து அதிர்ச்சியில் விழி விரித்தவள் “நீயா!” என்று கேட்டபடி பின்னால் நகர..

“ம்ம்… நானே தான்” என்று கட்டு போட்டு இருந்த கையை லேசாக ஆட்டி அவளை பார்த்தவன் “என்ன பண்ணிட்டு இருக்க” என கேட்டபடி ஓவியாவின் அருகில் நெருங்கினான்.

 கால்களை உயர்த்தி நின்றிருந்தவள் ராகவ் அருகில் வரவும் சரியாக நிற்க முடியாமல் தடுமாறி பின்னால் இருந்த பீரோவின் மீது சாயப் போக…

 அவளை ஒற்றை கையால் வளைத்து பிடித்தவன் “ஏய் பார்த்து எதுக்கு இப்படி பதர்ர..” என்று ஓவியாவின் இடையை வளைத்து தன்னருகில் நெருக்கி நிற்க வைத்தான்.

 “இப்படி திடீர்னு என் வீட்டுக்குள்ள.. என் ரூமுக்குள்ள வந்து நின்னா பதறாம என்ன பண்றது. ஆமா என் வீட்டுல உங்களுக்கு என்ன வேலை. இங்கே எதுக்காக வந்தீங்க” என்று அவனை மிரட்டுவது போல ஓவியா பேச..

“ உன் வீட்டுக்கு எதுக்கு வருவாங்க இதுக்கு தான் வந்தேன்” என்று சொன்னவன் அடுத்த நொடி ஓவியாவின் இதழில் தன் இதழை பொருத்தி இருக்க…

 இதை சற்றும் எதிர்பாராத ஓவியா அதிர்ந்து போனவள் ராகவன் மார்பில் கைவைத்து அவனை தன்னிடம் இருந்து விளக்கப் போனால் ஆனால் அவனும் ஒற்றை கையால் பிடித்து இருக்க அவன் பிடி தளராமல் ஓவியாவை இறுக்கி அணைத்தபடி அவள் இதழில் அழுத்தமாக முத்தமிட…

“ம்ம்… ம்ம்…” என்று ஓவியா திணறிக் கொண்டிருக்க…

 அப்போது “ஓவியாஆ” என்று ராக்கியின் குரல் அந்த வீட்டையே உழுக்குவது போல எதிரொலித்தது.

 ராக்கியின் குரலைக் கேட்ட ஓவியா ராகம் இருவரும் பதறிப் போயினர் 

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured