Home Uncategorizedஅவளுடன்(அகலியுடன்) ஒரு நாள்! தொடருமா? தீரனே! 8

அவளுடன்(அகலியுடன்) ஒரு நாள்! தொடருமா? தீரனே! 8

by Layas Tamil Novel
517 views

Fling 7

விடியற்காலை நேரம். பனி மூட்டம் விலகாத அந்த நேரத்தில், அகலிகா மெதுவாக அறைக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தாள். நேற்றிரவு அணிந்து சென்ற அதே உடையில்தான் இருந்தாள், ஆனால் முகத்தில் இருந்த சோர்வு, நேற்றிரவு அவள் தூங்காததை காட்டியது. அந்த சோர்வையும் தாண்டி அவள் முகத்தில் ஒரு தேஜஸ் இருந்தது.

கதவைச் சத்தம் இல்லாமல் மூடிவிட்டு, நேராக வந்து கட்டிலில் விழுந்தவள் . தீரனுடன் இருந்த இரவை நினைத்த வண்ணம் உறங்கியும் போனாள்.

அவள் வந்த சத்தம் தெரியாமல் உறங்கிக் கொண்டிருந்த பார்வதி, வழக்கம்போல் காலையில் தாமதமாக எழுந்தவள் . எதிரில் இருந்த அகலிகாவின் கட்டிலைப் பார்த்தவள் ஒரு கணம் அதிர்ந்தாள். அகலிகா போர்த்தியபடி தூங்கிக் கொண்டிருந்தாள்.

“ஏய் அஹி! எப்போடி வந்த? நேத்து டேட் எப்படி இருந்துச்சு? என்ன ஆச்சு?” என்று ஆர்வமும் பதட்டமுமாகக் கேட்டபடி எழுந்து அவளிடம் சென்றாள் பார்வதி .

அகலிகா கண் திறக்காமல், “அதெல்லாம் நல்லாதான் இருந்துச்சு,” என்று உறக்கத்தில் பேசினாள் .

“நல்லா இருந்துச்சுன்னா இப்போ இப்படி தூங்கிட்டு இருப்பியா? என்ன டி ஆச்சு? அவன் உன்கிட்ட நல்லா பேசினானா? , உனக்குப் அவனை பிடிச்சிருக்கா? ரெண்டு பேரும் என்ன பேசுனீங்க.. ” என்று விடாமல் கேள்வி கேட்டாள் பார்வதி..

தூக்கம் இன்னமும் இருக்க பார்வதியின் தொணதொணப்பு தாங்காமல் எழுந்து அமர்ந்தவள். இரவு முழுவதும் தீரனுடன் இருந்த நெருக்கம், இப்போது அவளுக்கு மனதளவில் ஒருவித லேசான உணர்வைக் கொடுத்தது. ஆனால், அதைப்பற்றிப் பார்வதியிடம் பேச அவள் தயாராக இல்லை. அது அவினாஷைப் போல, மற்றவர்களின் கிண்டலுக்கும், கேள்விகளுக்கும் ஆளாகும் ஒரு விஷயம் அல்ல என்று நினைத்தாள்.

“ரெண்டு பேரும் பேசிப் பார்த்தோம், பாரு. எனக்கு செட் ஆகுறது போலத் தோணல. அதான் கிளம்பி வந்துட்டேன்,” என்று அவளிடம் முதல் முறை பொய்யான பதிலை கூறினாள் அகலிகா.

“அப்படியா? அய்யோ, அவன் ப்ரொபைல்ல ரொம்பவே நல்லா இருந்தானே. சரி, உனக்குப் பிடிக்கலைன்னா விடு வேண்டாம். உடனே வந்துட்டல? அதுவரைக்கும் சந்தோஷம்,” என்று நம்பிவிட்டாள் பார்வதி.

அகலிகாவின் வெளிப்படையான குணத்தைப் பற்றி அறிவாள் பார்வதி. தன்னிடம் அவள் எதையும் மறைக்க மாட்டாள் என்ற நம்பிக்கையால் அதை அப்படியே நம்பிவிட்டாள்.

“இனிமே அந்த ஆப் பக்கம் போகாதே. சரி, எழுந்து வா. பிரெஷ் ஆகி காபி குடிப்போம்,” என்று அவளை இழுத்தாள்.

அகலிகா மெதுவாக எழுந்தாள். அவள் மனதுக்குள், “நான் பெரிய தப்பு பண்ணிட்டேன். தீரனை பார்த்ததும் என் மூளை வேலை செய்யலையா? நான் ஏன் நேத்து அவனுக்கு என்கிட்டே உரிமை எடுத்துக்க பெர்மிஸ்ஸின் கொடுத்தேன்” என்று யோசித்தாள்.

“நீ எங்க டி பெர்மிஸ்ஸின் கொடுத்த. .அவனா தானே உன்கிட்டே நெருங்கி வந்தான். அவன் வந்தா நீ வேணாம்னு சொல்றதை விட்டுட்டு . அவன் உன்கிட்டே வந்து கண்ணால பேசுறான் நீயும் எதுவும் சொல்லாம நைட் முழுக்க அவனோட என்ஜோய் பண்ணிட்டு வந்திருக்க… ” என்று அவளை கழுவி ஊற்றியது அவள் மனம்.

“சரி விடு இனி அதை பத்தி யோசிக்கவோ .. பேசவோ கூடாது ” என்று எழுந்து சென்றாள்.

***

அந்த நட்சத்திர ஹோட்டல் அறையில், தீரன் தன் லேப்டாப்பில் அதி தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்தான். அவனது முகம் கோபத்திலும், ஏமாற்றத்திலும் கருத்து இருந்தது.

அகலிகாவின் அக்கௌன்ட் (Paru\_1) நீக்கப்பட்ட கண்டத்தில் இருந்து அவனுக்கு தன்னை கட்டுப்படுத்திக்கொள்ளவே முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டது போல உணர்ந்தான் தீரன்.

அவளது IP முகவரியைக் கொண்டு அவளது விவரங்களை எடுக்க AD டெக்னாலஜிஸ் சர்வர் சிஸ்டத்தில் லாக்-இன் செய்தான்.

IP முகவரியைப் போட்டுத் தேடியபோது, அந்த முகவரிக்குச் சொந்தமான பயனாளர் (User) குறித்த எந்தவொரு தனிப்பட்ட தகவல்களும் சர்வரில் இல்லை என்று தகவல் வந்தது.

தீரன் ஆத்திரத்துடன் லேப்டாப்பை மூடாமல், தன் தலையில் கை வைத்துப் பிடித்துக் கொண்டான்.

“ச்ச்ச்ச்… என்ன ஒரு முட்டாள்தனம் பண்ணிட்டேன்! நான் பண்ணின ப்ரோக்ராம் இப்போ எனக்கு எதிரா மாறிடுச்சே.. ” என்று தன்னை தானே நொந்தது கொண்டான் .

‘Fling’ ஆப் உருவாக்கப்பட்ட ஆரம்ப நாட்களில், பயனாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் எந்தவொரு சூழ்நிலையிலும், யாராலும், ஏன்? ஆப்பை உருவாக்கிய CEO-வாகிய தன்னால் கூட எடுக்க முடியாதபடி ஒரு ‘சீக்ரெட் என்கிரிப்ஷன்’ கோடிங்கை அவன் வடிவமைத்திருந்தான்.

ஆரம்பத்தில் ஆப்பை அறிமுகம் செய்யும்போது, “உங்களின் விவரங்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கும், யாருக்கும் தெரியாது” என்று உறுதி அளிப்பதற்காகவே இந்த ‘டபுள் லேயர் பாதுகாப்பு’ அமைப்பை அவன் உருவாக்கி இருந்தான்.

அந்தப் பாதுகாப்புக் குறியீட்டின் ‘மாஸ்டர் கீ’ கூட அவனிடம் இல்லை. ஏனெனில், அவனும் தன்னுடைய பயனாளர்களைப் போலச் சமமானவன் என்று காட்டவே அப்படிச் செய்திருந்தான்.

“என் சொந்த ஆப்லே, நான் ஒரு பொண்ணைத் தேட முடியல! யாருக்கும் தெரியக் கூடாதுன்னு செஞ்ச கோட், இப்ப எனக்கே எதிராக வேலை செய்யுதே?” என்று கோபம் கொப்பளிக்க முணுமுணுத்தான்.

அகலிகாவுக்கு இருந்த ஒரே ஐடியாகிய ‘Paru\_1’ இப்போது ஒரு தடயமும் இல்லாமல் நீக்கப்பட்டுவிட்டது. அவளைப் பற்றித் தெரிந்து கொள்ள, அவளது உண்மையான பெயர், தொலைபேசி எண், அல்லது மின்னஞ்சல் முகவரி என எந்தவொரு துணுக்குத் தகவலும் இப்போது தீரனிடம் இல்லை.

“அவ என்னைப் பயன்படுத்திட்டு, அப்படியே ஓடிப் போயிட்டா. அவளை ஏமாத்தினவனுக்கு பதிலடி கொடுக்க, நான் ஒரு கருவியா இருந்தேனா?” என்று நினைத்தவன், ஒரு கணம் வெறித்துப் பார்த்தான்.

“இவளை பத்தி நான் எப்படியாவது தெரிஞ்சுக்கணும். கண்டிப்பா நான் அவ டீடெயில்ஸ் மொத்தமும் எடுப்பேன். அப்டி நான் எடுக்கலையின்னா எனக்கு இந்த CEO பதவி லாயக்கு இலேன்னு தான் அர்த்தம் ” என்று தன் லேப்டாப்பை மீண்டும் திறந்தான்.

அவன் கண்கள் செர்வருக்குள் பதிவான சில ‘மெட்டா டேட்டா’ விவரங்களைத் தேட ஆரம்பித்தன.

என்ன ஆனாலும் சரி எப்படியாவது பாரு ID ஐ கண்டுபிடித்த ஆகவேண்டும் என்ற உத்வேகத்தோடு அவன் வேளையில் மூழ்கினான்

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured