EPISODE 177
மாதவி போதியைப் பார்த்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது.
அவனைப் பார்க்க முடியாமல் அவள் சோகத்தில் இருக்க… அதைக் கவனித்த அவள் தோழி லேகா, மாதவியைச் சமாதானம் செய்வதற்காக அவளை அழைத்துக்கொண்டு கேன்டீனுக்குச் சென்றாள்.
ஆய்வுக்கூடத்தில் (லேபில்) இருந்த சின்ன சின்னப் பிரச்சனைகளை முடித்துவிட்டு நேராக மாதவியைக் காண போதி அவள் வகுப்பறைக்கு (கிளாஸ் ரூமிற்க்கு) சென்றான்.
மாதவியை வகுப்பறையில் தேட, மாதவி அங்கு இல்லாமல் போகவே, அங்கிருந்த ஒரு மாணவியிடம் அழைத்து மாதவி எங்கே என்று விசாரித்தான். அவள் இப்போது தான் மாதவியின் தோழியுடன் கேன்டீனுக்குச் சென்றாள் என்று அந்தப் பெண் சொன்னாள்.
ஒரு வாரமாக மாதவியுடன் பேசாமல் இருந்ததில் ஏற்கனவே அவனுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. ‘உன்னைப் பார்க்கவில்லை, நானும் உன்னைப் பார்க்கவில்லை’ என்ற வருத்தம் எதுவும் இல்லாமல், தன்னை பற்றி கொஞ்சம் கூட எதையும் யோசிக்காமல் எப்படித் தன் தோழியுடன் சந்தோஷமாக இருக்கிறாள்? என்று நினைத்துக் கொண்டு போதி அவள் மீது கோபம் கொண்டு அவளைக் காண கேன்டீனுக்கு விரைந்தான்.
லேகா மாதவியை கேன்டீனுக்கு அழைத்து வந்தவள். “ஏ மாதவி, உனக்கு என்ன வேணும் சொல்லு? நான் போய் வாங்கிட்டு வரேன்” என்று கேட்டாள்.
“எனக்கு எதுவும் வேண்டாம் லேகா. நீ தானே பசிக்குதுன்னு சொன்ன, உனக்கு என்ன பிடிக்குதோ அதை வாங்கிட்டு வந்து சாப்பிடு” என்றால் அதே சோகத்தோடு.
“இப்ப எதுக்குடி முகத்தை இப்படித் தூக்கி வச்சுக்கிட்டு இருக்க? உனக்கு உன் காதலனைப் (லவ்வர) பாக்கணுன்னு இருந்தா போய் பார்க்க வேண்டியதுதானே. இல்ல அவருக்குப் போன் பண்ணிப் பேச வேண்டியதுதானே?” என்று கேட்டாள்.
“நான் போய் அவரைப் பார்க்காமல் இருந்து இருப்பேன்னு நினைக்கிறியா? தினமும் நான் வகுப்பிற்கு வரதுக்கு முன்னாடி அலுவலக அறைக்கு (ஆபீஸ் ரூம்) போயிட்டு அவர் வந்திருக்கிறாரான்னு பார்த்துட்டுத் தான் இங்கே வரேன். அவரு ஒரு வாரமா அலுவலகப் பக்கமே வரலைன்னு சொன்னாரு.”
“அவர்கிட்ட கூப்பிட்டு, அவருக்கு எதுவும் உடம்பு சரியில்லையான்னு கேட்கலாம்னு நினைச்சா கூட என்னிடம் அவர் போன் நம்பர் இல்லை.”
“உனக்கே தெரியும், நானே இப்போதான் சங்கவி அக்கா போன் வாங்கி கொடுத்த பின் தான் எனக்குன்னு போன் வெச்சி இருக்கேன். இன்னும் என்கிட்ட போன் இருக்குன்னு கூட அவருக்குத் தெரியாது. அப்படி இருக்கிறப்ப நான் எப்படி அவர் நம்பர் வச்சிருப்பேன்? இதைக் கூட நீ யோசிக்காத அளவுக்கு அறிவு இல்லையா உனக்கு?” என்று லேகாவை திட்டினாள் மாதவி.
“எல்லாம் என் நேரம் டி…பாவமே, நீ சோகமா இருக்கியேன்னு உன்னைக் கூட்டிட்டு வந்து கொஞ்சம் சமாதானம் படுத்தலாம் என்று பார்த்தால். நீ எனக்கு என்னையே அறிவு இருக்கா இல்லையான்னு கேட்கிறே?” என்று லேகா பதிலுக்கு மாதவியிடம் கோபித்துக் கொள்ள.
லேகா கோபமாக இருப்பதைக் கவனித்த மாதவிக்கு, தன்னைச் சமாதானம் செய்ய கேன்டீனுக்கு அழைத்து வந்தவளையே பிடித்துத் திட்டி விட்டோமே என்று மனம் வருந்தியவள்.
லேகாவின் கையைப் பிடித்து, “ஏய் லேகா, சாரிடி… நான் ஏதோ மன அழுத்தத்தில் (டென்ஷன்ல) உன்னைத் திட்டிட்டேன். நீ எதுவும் மனசுல வச்சுக்காத ப்ளீஸ்” என்று முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கெஞ்ச.
“அப்போ எனக்கு ஐஸ்கிரீம் வாங்கித்தா, அப்போதான் நான் சமாதானமாவேன்” என்றால் லேகா.
தன்னிடம் ஒரு நிமிடம் கூட கோபித்துக் கொண்டு இருக்க முடியாத தன் தோழியைப் பார்த்துச் சிரித்த மாதவி, “சரி, இரு. உனக்குப் பிடிச்ச வெண்ணிலா சுவை (ஃப்ளேவர்) தானே வேணும்?” என்றாள்.
லேகா “ஆமாம்” என்று தலையை வேகமாக ஆட்ட… மாதவி சென்று தனக்குப் பிடித்த பட்டர் ஸ்காட்ச் சுவையையும், லேகாவிற்கு வெண்ணிலா சுவையையும் வாங்கிக்கொண்டு மேஜைக்கு (டேபிளர்க்கு) வந்தால்.
ரொம்பப் பேசிக்கொண்டு இருவரும் தன் கூம்பு வடிவ ஐஸ்கிரீமை (கோன் ஐஸ்கிரீம்) சாப்பிட்டுக் கொண்டிருக்க…
“ஏண்டி, லவ் பண்றவங்களோட போன் நம்பர் தான் எல்லாரும் முதல்ல வாங்கி வெச்சுப்பாங்க. நீ என்னடி இப்படி இருக்க?” என்று கேட்டாள் லேகா.
“நான் என்னடி செய்வேன்? எனக்கு வர காசு எல்லாம் என்னோட படிப்பு செலவுக்கும், ஆசிரமத்திற்கு அனுப்புவதற்கும் சரியா போயிடுச்சு.”
“இந்த போனே சங்கவி அக்கா வாங்கி கொடுத்தது தான். இதில் அவர் கிட்ட எங்கே போன் நம்பர் கேட்பேன். அவர பார்க்கலாம்னு போனா என்னை அழித்துவிட்டு நேரா அவர் வீட்டுக்கு போயிட்டாரு.”
“அங்க போய் அவங்க கூட இருந்ததிலேயே நேரம் சரியா இருந்தது. இதற்கிடையில் நான் போய் எங்கே அவர் போன் நம்பர் கேட்டு வாங்குவது?” என்றால் மாதவி.
“சரி, நான் போதி சாரோட போன் நம்பர் சொல்றேன், நோட் பண்ணிக்கோ. அவருக்கு அழைப்பு (கால்) பண்ணி, எப்படி இருக்காரு, எங்க இருக்காருன்னு கேளு” என்றால் லேகா.
“ஏய், உனக்கு அவரோட போன் நம்பர் தெரியுமா?” என்று ஆவலாக கேட்டாள் மாதவி.
“தெரியும்” என்றால் ஒற்றை வார்த்தையில்.
“உனக்கு எப்படியாவது போன் நம்பர் கிடைத்தது?” என்று கேட்டாள் மாதவி.
“ஏய் லூசு, முதல்ல நீ எங்க வீட்டுக்கு வந்து இருக்கியா? நான் உன்னை எவ்வளவு தரம் என் வீட்டுக்கு வர சொல்லி கூப்பிட்டேன்?” என்று கேட்டாள் லேகா.
“நான்தான் சொன்னேனே, காலைல காலேஜ் வந்துட்டு, சாயங்காலம் காலேஜ் முடிச்சிட்டு நேரா வீட்டுக்கு வந்துடணும்னு சங்கவி அக்கா ஒரு நாள் ஆபீஸ் ரூம்ல அவரோட மாட்டிக்கிட்டேனே, நியாபகம் இருக்கா?” என்றாள்.
“ஆமா, அப்போ கூட அவரோட நம்ம காலேஜ் பிரின்சிபல் என்று சொல்லி உன் அக்கா கிட்ட இருந்து தப்பிச்சியே, அன்னைக்கு தானே?” என்றால் லேகா.
“ஆமா லேகா, அப்போதான் சங்கவி அக்கா என்னை வீட்டுக்கு அழைச்சிட்டுப் போகும்போது, என்கிட்ட ‘மேல டைமுக்கு காலேஜுக்கு போயிட்டு, டைமுக்கு வீட்டுக்கு வந்துடணும்’னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாங்க டி.”
“நான் எப்படி உன் வீட்டுக்கு இந்த மாதிரி இனிமேல் வர முடியும் சொல்லு?” என்று கேட்டாள் மாதவி.
“என் வீட்டுக்கு எல்லாம் வர முடியாது. ஆனால் என் வீட்டுப் பக்கத்துல இருக்கிற போதி சார் வீட்டுக்கு மட்டும் நீ போயிட்டு வருவ, அப்படித்தானே?” என்றால் லேகா.
லேகா சொல்வதைக் கேட்டு ஆச்சரியமான மாதவி, “ஏய்! என்னடி சொல்ற? அவர் வீட்டுப் பக்கத்துல தான் உன் வீடு இருக்கா?” என்று கேட்டாள்.
“ம்ஹும்…. என் வீட்டுப் பக்கத்துல தான் உங்களோட அவரோட வீடு இருக்கு” என்றாள் லேகா.
“ரெண்டும் ஒன்னு தாண்டி. இதை ஏன் நீ என்கிட்ட முன்னமே சொல்லல?” என்று சிடுசிடுத்தாள் மாதவி.
“நீ இதுவரை என்கிட்ட என்ன பத்தி எதுவுமே கேட்டதில்லை. அதனால் நானும் எதுவும் சொல்லல. சிம்பிள்!” என்றாள் லேகா தன் தோளைக் குலுக்கியவாறு.
அவளை முறைத்த மாதவி, “ஏய்… லேகா நீ ஃபிரெண்ட் தானே… என் செல்லம்ல…” என்று கொஞ்சினால் லேகாவை.
“ம்ஹும்… இல்லை” என்றாள் லேகா.
“என் தங்கம் தானே? ப்ளீஸ்… அவர் நம்பரை குடுடி ப்ளீஸ்” என்று கெஞ்சினால் மாதவி.
“ரொம்பக் கெஞ்சுற. உன்னைக் கெஞ்ச வெச்சு பார்க்க நல்லா தான் இருக்கு. ஆனா நீயும் பாவம் தான். போன போகுதுன்னு உனக்கு நம்பர் தரேன்” என்றவள் தன் மொபைலை எடுத்து போதியின் நம்பரைக் கொடுத்தாள்.
அவள் நம்பர் கொடுத்ததும், “தேங்க்ஸ் டி என் செல்லம்” என்று சொல்லி லேகாவின் கன்னம் கிள்ளிய மாதவி போதிக்கு உடனே அழைத்தாள் (கால் செய்தால்).
இங்கு மாதவியின் வகுப்பறையில் இருந்து அவளைத் தேடி கோபமாக போதி கேன்டீனை நோக்கி வந்து கொண்டு இருந்தான். மாதவியை மனதில் வருத்தம் எடுத்துக்கொண்டே கேன்டீனுக்கு வந்து கொண்டு இருக்க… அவன் செல்போன் அலறியது.
ஏற்கனவே கடுப்பில் வந்த போதி தன் பாக்கெட்டில் இருந்து போனை எடுத்து யார் என்று பார்க்க… ஏதோ புதிய நம்பர் வந்து இருந்தது. அதைப் பார்த்தவன் போனை அட்டென்ட் செய்யாமல் அழைப்பைக் (கால்) கட் செய்தவன் போனைப் பாக்கெட்டில் போட்டு விட்டு வேக எட்டுக்களோடு நேராக கேன்டீன் சென்றான்..
இங்கே போதிக்குச் சென்ற அழைப்பு கட் ஆனதும், காதில் வைத்து இருந்த போனை எடுத்து அதன் திரையை வெறித்த மாதவி, “ஏய் லேகா, நீ கொடுத்தது அவரோட நம்பர் தானே?” என்றாள் சந்தேகமாக.
அவளை முறைத்த லேகா, “ஆமா, அவரோட நம்பர் தான் கொடுத்தேன் டி…” என்றாள் பதிலுக்கு.
“அப்பறோம் ஏன் என் போனை எடுக்காம கட் பன்றாரு?” என்றாள் புரியாமல்.
“உன் அவர் எதுவும் வேலையில் பிஸியாக எதுவும் இருப்பார். அதனால் தான் உன் போனை எடுக்கலையா இருக்கும்” என்றாள் லேகா.
அவள் சொல்வது போல போதி பிஸியாக இருக்கலாம் என்று நினைத்த மாதவி கையில் வைத்து இருந்த ஐஸ்கிரீம் கோனைச் சுவைத்தப்படி மீண்டும் போதிக்கு அழைத்தாள்.
மீண்டும் வந்த அழைப்பை எடுக்காமலேயே கேன்டீன் வந்த போதி மாதவியைத் தேட… அவளும் லேகாவும் ஒரு மேஜையில் அமர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டு இருக்க…
மாதவி காதில் போனை வைத்து யாருடனோ பேசிக் கொண்டு இருப்பது போல போதிக்குத் தோன்ற… மாதவி தன்னை பற்றிய எண்ணமே இல்லாமல் சந்தோசமாக யாருடனோ பேசிக்கொண்டு இருப்பதாக நினைத்த போதி நேராக அவள் இருந்து மேஜை முன்பு வந்து நிற்க…
அவனைப் பார்த்த லேகா, “சார்” என்று சொல்லி நாற்காலியில் இருந்து எழுந்து அமர…
‘தங்கள் துறைச் சார் தான் யாரோ, வகுப்பை கட் அடித்துவிட்டு கேன்டீன் வந்த தங்களைக் கண்டு பிடித்து கையும் களவுமாகக் பிடிக்க கேன்டீனுக்கே வந்துவிட்டார்’ என்று நினைத்து மாதவி தனக்கு எதிரில் நின்று இருந்தவரை நிமிர்ந்து பார்க்க… அங்கே போதி நின்று இருந்தான் கோபமாக..
ஆனால் மாதவிக்கு அது எல்லாம் தெரியவில்லை. ஒரு வாரமாக அவனைப் பார்க்காமல் இப்படித் திடீர் என்று சர்ப்ரைசாக அவள் முன்பு வந்து போதி நிற்கவும்.
நாற்காலியில் இருந்து சந்தோசமாக ஒரு கையில் ஐஸ்கிரீம் கோனுடனும், மறு கையில் போனுமாக மாதவி போதியைப் பார்த்துச் சிரிக்க…
அவள் கொஞ்சம் கூடத் தன்னைப் பார்க்கவில்லை என்ற வருத்தம் துளியும் இல்லாமல் இப்படிச் சிரித்துக் கொண்டு நிற்பதைச் சரியாகத் தப்பாகப் புரிந்து கொண்ட போதி மாதவியை முறைத்தவன்.
அவள் அருகில் வந்து, “உனக்கு குளிர் விட்டு போயிருச்சு…” என்று சொல்லி அவள் போன் வைத்து இருந்த கையைப் பிடித்தவன்.
லேகாவைப் பார்த்து, “லேகா, நீ வகுப்பிற்குப் போ” என்றவன் மாதவியை இழுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றான்.
லேகா எதுவும் பேசாமல் வகுப்பறைக்குச் சென்றுவிட… கேன்டீனில் இருந்த மற்றவர்கள் அனைவரும் போதியையும் மாதவியையும் பார்த்துக் கொண்டு ‘இவர்களுக்குள் என்ன நடக்கிறது?’ என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டு இவர்களையே பார்க்க…
மாதவியை இழுத்துக் கொண்டு சென்ற போதி ஒரு நிமிடம் அப்படியே நிற்க… அவன் இழுத்த வேகத்தில் போதியின் பின்னால் நாய் குட்டி போலச் சென்று கொண்டு இருந்த மாதவி. போதி திடீர் என்று நின்றதும் அவன் மீது மோதி நின்றாள்.
அவனைப் புரியாமல் மாதவி பார்க்க…. போதி அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு மாதவியைத் தாண்டி சுற்றி இருந்தவர்களைப் பார்க்க… அவர்கள் போதி பார்த்த பார்வையிலேயே அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட…
மாதவியிடம் திரும்பி முறைத்தவன் அங்கிருந்து அவளை மீண்டும் இழுத்துக் கொண்டு சென்றான். போதி எதற்காகத் தன்னை முறைக்கிறான் என்று தெரியாமல் மாதவி அவன் பின்னாலேயே செல்ல..
இங்கு நடந்ததை எல்லாம் இவ்வளவு நேரம் ஒருவன் கவனித்துக் கொண்டு இருந்தான்.
