Episode 186
மறுநாள் காலை துர்கா எழுந்து குளித்து முடித்துக் கீழே வர… பூஜை அறையில் இருந்து வெளியே வந்த செண்பகம், துர்கா படியில் இறங்கி வருவதைப் பார்த்துவிட்டு அவளிடம் பேசப் போக…
ஆனால், துர்காவோ, இரவு ஆதி தன்னுடன் படுக்கையில் நடந்துகொண்டதை எல்லாம் நினைத்து, தானாகச் சிரித்தபடி, முகமெல்லாம் சிவந்து வெட்கப்பட்டவாறு இறங்கி வர…
அதைப் பார்த்த செண்பகம், பூஜை அறையில் இருந்த விசாலாட்சியையும், கனகாவையும் அவசரமாக வெளியே அழைத்து வந்து துர்காவைக் காட்டினாள்.
துர்கா அவர்கள் எல்லாம் அவளைப் பார்ப்பது கூடத் தெரியாமல், படியில் இருந்து வெட்கப்பட்டுக்கொண்டே, தனக்குத்தானே எதையோ நினைத்துச் சிரித்துக்கொண்டே, மிகவும் சோர்ந்துபோய் இறங்கி வந்தவள், இவர்கள் மூவரையும் பார்த்துவிட்டாள்.
மூவரும் துர்கா தங்களைப் பார்த்துவிட்டால் என்று தெரிந்ததும், வேகமாக அவளிடம் வந்து, “என்ன துர்கா, நீயா எதையோ நினைத்துச் சிரிச்சிட்டு வர? என்ன விசேஷம்?” என்றார் செண்பகம்.
“ஏன் துர்கா, ரொம்பச் சோர்ந்து போயிருக்கிறாய்? இரவு எல்லாம் சரியாகத் தூங்கவில்லையா?” என்றார் கனகா.
“எங்கே நீ மட்டும் கீழே வர… எப்பவும் என் மகன் காலையில் நேரமே எழுந்து உடற்பயிற்சிக்குப் (ஜாக்கிங்) போய்விடுவான். ஆனா இன்னும் கீழே வராமல், மேலே என்ன செய்றான்? இன்னும் எழுந்திருக்கவில்லையா?” என்றார் விசாலாட்சி.
மூவரும் மாற்றி மாற்றித் துர்காவை மடக்கி கேள்வி கேட்க… அதற்கு என்ன பதில் என்று தெரியாமல் வெட்கப்பட்டுக்கொண்டு நிற்க…
இவர்கள் மூவரிடமும் மாட்டிக்கொண்டது போதாது என்று, அப்போது சரியாக ஷிவு எழுந்து கீழே வந்தவள், இவர்கள் மூவரும் சேர்ந்து துர்காவை வளைத்துப் பிடித்து வைத்துக்கொண்டு, அவளைப் படுத்திக்கொண்டிருக்க.
அதைப் பார்த்தபடி வந்த ஷிவு துர்காவைப் பார்க்க… அவள் முகம் சிவந்து நின்று இருப்பதைப் பார்த்த ஷிவு, “என்ன அக்கா ஆச்சு? உன் முகமெல்லாம் இப்படிச் சிவந்து இருக்கு,” என்று ஷிவுவும் துர்காவைப் பிடித்துக் கொள்ள…
“ஐயோ… ஏன் இன்னைக்கு இப்படிப் பிடிச்சு வச்சிட்டு, இப்படி எல்லாம் கேள்விகள் கேட்கிறீங்க? என்னை விடுங்க!” என்று அங்கிருந்து செல்லப் போக…
துர்காவின் கையைப் பிடித்த ஷிவு, அவளைப் பார்த்து, “அக்கா, ஒரு நிமிஷம் நில்லு,” என்று துர்காவைப் பிடித்து நிறுத்தியவள், அவள் முகத்தைப் பிடித்து இப்படியும் அப்படியும் திருப்பிப் பார்க்க…
“என்ன ஷிவு பார்க்குற? துர்கா முகத்தில் அப்படி என்ன இருக்கு?” என்று கேட்டார் ஹேமா.
“அம்மா, இங்கே பாருங்க! அக்கா உதட்டுல ஏதோ காயம் ஆகியிருக்கு. அது மட்டும் இல்ல, கன்னம் சிவந்து, லேசா பற்களின் தழும்புகள் ஆங்காங்கே இருக்கு,” என்றவள், அப்படியே அவள் பார்வை துர்காவின் கழுத்திற்கு வர… அங்கேயும் அதே போன்று பற்களின் தழும்புகள் பதிந்திருந்தது.
இதை எல்லாம் சுட்டிக்காட்டி ஷிவு கேட்க… அங்கு இருந்த நாலு பெண்களிடம் மாட்டிக்கொண்டு துர்காவிற்கு அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல், வெட்கப்பட்டுக்கொண்டே… “போடி!” என்று ஷிவுவைத் தள்ளிவிட்டு, வேகமாக மாடிக்கு ஓடித் தன் அறைக்கதவைச் சாற்றிக்கொண்டாள்.
பெண்கள் நால்வரும் தங்களுக்குள்ளேயே ஏதோ புரிந்தவர்கள் போல… சிரித்துக் கொண்டு அவரவர் வேலையைப் பார்க்க ஓடிவிட்டனர்.
துர்கா தன் அறைக்கு வந்து கதவைச் சாற்றிவிட்டுத் திரும்ப… அங்கே இவளைப் பார்த்துச் சிரித்தபடி ஆதி கைகட்டி நின்றுகொண்டு இருந்தான்.
“என்ன ஆதி சிரிக்கிற?” என்று சொல்லிக்கொண்டே அறைக்குள் வந்தவள், ஆதியைத் தாண்டிச் செல்லப் போக…
அவள் கையைப் பிடித்துத் தன் முன் நிறுத்திய ஆதி, “என்ன என் செல்லப் பொண்டாட்டிக்குக் கன்னம் எல்லாம் சிவந்து இருக்கு?” என்று அவள் கன்னம் கிள்ளிக் கேட்டான்.
‘போச்சு… அவன் பார்க்கக் கூடாதுனு தானே நான் உள்ளே போனேன்,’ என்று நினைத்தவள்.
ஆதியைப் பார்த்து, “இன்னிக்கு எல்லாருக்கும் என்ன ஆச்சு? நான் பாட்டுக்குச் சும்மா போனால், என்னைக் கூப்பிட்டு வச்சு எல்லாரும் வம்பு வளர்க்கிறீங்க,” என்றாள் அவன் மேல் கோபமாக இருப்பது போல முகத்தை வைத்துக்கொண்டு.
“என்ன ஆச்சு என் பொண்டாட்டிக்கு? எதுக்குக் கோபப்படுறீங்க?” என்றவன், அவள் கையைப் பிடித்துத் தன் அருகில் இழுத்தவன், அவளைக் கட்டிக்கொண்டு. “என் பொண்டாட்டி என்னிக்கும் இல்லாமல் இன்னைக்கு ரொம்ப வெட்கப்படுறீங்க… கோபப்படுறீங்க… என்ன ஆச்சு?” என்றான் ஆதி.
“என்ன ஆச்சா? எல்லாம் உன்னாலதான் ஆதி, எல்லாம் நீ பண்ணினதுனால தான்,” என்றாள் துர்கா அவன் மார்பில் அடித்து.
“என்னாலயா? ஏன், என்ன ஆச்சு? நான் என்ன பண்ணினேன்?” என்றான் ஆதி.
“பண்றதை எல்லாம் பண்ணிட்டு, ‘என்ன பண்ணினேன்’னு கேட்கிற நீ…” என்றாள்.
“அதான் கேட்கிறேன். நான் என்ன பண்ணினேன்?” என்றான் மீண்டும் ஆதி புரியாமல்.
“நேத்து நைட் நீ செய்த காரியத்துக்குத்தான் கீழே நான் போனதும் எல்லாரும் என்னைப் பார்த்துக் கிண்டல் செய்றாங்க,” என்றாள்.
அவள் சொல்ல வந்தது ஆதிக்குப் புரிந்துவிட… “நான் என்ன செய்தேன் நேத்து நைட்?” என்றான் எதுவும் தெரியாதவன் போல..
“இங்கே பாரு,” என்று தன் கன்னம், உதடு, கழுத்து என்று காட்டி, “இது எல்லாம் யாரால வந்தது?” என்றாள் துர்கா.
“ஓ… இதுவா? இது எல்லாம் உன்னாலதான் வந்துச்சு. நான் ஏதும் செய்யலையே,” என்றான் ஆதி.
“என்னது!!! என்னாலயா? நான் என்ன செய்தேன்?” என்றால் துர்கா.
“ஆமா, நீ மட்டும் நேத்து நான் கேட்டதும் அந்தப் புகைப்படத்தைக் காட்டி இருந்தால், இவ்வளவு தூரத்திற்குக் வந்திருக்காதில்ல.. நீ அந்தப் புகைப்படத்தை வைத்து என்கிட்டே விளையாட்டிற்குக் காட்டி, இப்படியும் அப்படியும் ஓடி, என்னை ஏதோ சொல்லி உசுப்பேத்தி விட்டுட்ட… நீ இப்படி எல்லாம் பேசின பிறகு, நான் எப்படிச் சும்மா இருக்க முடியும்? அதான் என்னோட பலம் எப்படின்னு உன்கிட்டே காட்ட வேண்டியதா போச்சு,” என்றான்.
“அதுக்குன்னு இப்படியா முரடன் மாதிரியா என்கிட்டே நடந்திருப்பாய் ஆதி? பாரு, எப்படி காயம் ஆகியிருக்கு. இங்கே மட்டும் இல்லை, இன்னும் நிறைய இடத்துல உன்னோட பல் பதிஞ்சிருக்கு. என்னால குளிக்கவே முடியலை. சிலுன்னு காயத்து மேல தண்ணீர் பட்டதும் உடம்பெல்லாம் ஒரே எரிச்சல் ஆகிடுச்சு தெரியுமா?” என்றாள் துர்கா பாவமாக.
“நான் முரடன் மாதிரியா துர்கா, நேத்து நடந்துகிட்டேன்?” என்றான் ஆதி.
“ஆமாம், முரடன் மாதிரி தான் என்னை நீ…” என்று பேச வந்தவள் அப்படியே நிறுத்திவிட்டுத் தன் உதட்டைக் கடித்துக்கொண்டு ஆதியைப் பார்க்க.
“என்ன?” என்று அவள் இடுப்பைக் கட்டிக்கொண்டு புருவம் உயர்த்திப் பார்வையாலேயே கேட்டான்.
துர்கா ஆதியின் முகத்தைப் பார்க்க வெட்கப்பட்டுக்கொண்டே தலையைக் குனிந்து கொண்டு, “ரொம்ப முரடனா இல்லை, கொஞ்சம் முரடனாத்தான் நடந்துகிட்ட,” என்றால் துர்கா.
“அப்படியா!!!” என்று கேட்ட ஆதி, “இனிமேல் முரட்டுத்தனமா நடந்துக்காமல், என் பொண்டாட்டியைப் பூ மாதிரி நடத்துறேன் சரியா?” என்று குனிந்து நின்று இருந்தவளின் முன்பு தன் தலை சாய்த்துக் சொன்னான் ஆதி.
அவன் முகத்தைப் பார்க்காமல் துர்கா தன் முகத்தை வெட்கத்தில் திருப்பிக் கொள்ள… அவள் திரும்பிய திசையில் எல்லாம் தன் முகத்தைக் கொண்டு சென்று அவளிடம் வம்பு செய்தான் ஆதி.
அவன் சேட்டையைத் தாங்க முடியாமல் துர்கா தன் முகத்தைத் தன் இரு கை கொண்டும் மூடிக்கொண்டவள், “ஆதி ப்ளீஸ்… சும்மா இருடா….” என்றாள் துர்கா.
“என்னது ‘டா’ வா…. என்ன துர்கா.. ஒரே ராத்திரியில் என் மரியாதையை எல்லாம் காற்றில் பறந்திருச்சு போல,” என்றான்.
ஆள் முகத்தில் இருந்து கை எடுக்காமல், “அப்படித்தான் சொல்லுவேன். என்னடா பண்ணுவே? நீ செய்த காரியத்துக்கு நான் உன்னை அடிக்காமல் சும்மா விட்டு இருக்கேனே, அது போதாதா?” என்றாள் துர்கா.
“ஓஹோ… அப்போ என்னை நீ இனிமேல் ‘டா’ போட்டு தான் கூப்பிடுவியா?” என்றான் ஆதி.
துர்காவும் வேண்டும் என்றே, “ஆமா, நான் அப்படி தான் கூப்பிடுவேன்,” என்றாள்.
“அப்போ நானும் உன்னை ‘டி’ போட்டுத் தான் இனிமேல் கூப்பிடப் போறேன்,” என்றான் ஆதி.
“கூப்பிட்டுக்கோ. உன் பொண்டாட்டியை நீ ‘டி’ போட்டு கூப்பிடு. யார் வேண்டாம் என்றது?” என்றாள்.
“சரி டி பொண்டாட்டி,” என்றவன். துர்காவின் முகத்தில் இருந்து கையைப் பிரித்தவன். “உன் உடம்புல என்னோட பல் பட்டு காயம் ஆகி, சிவந்து இருக்குன்னு சொன்னே. எங்கே காட்டு, நான் பார்க்கிறேன்,” என்றான் ஆதி.
உடனே துர்கா அவள் மார்புக்குக் குறுக்காகக் கையை கொண்டு, அவள் மார்பை மறைத்தவாறு நின்றுகொண்டு, “அதெல்லாம் காட்ட முடியாது,” என்று அவனை விட்டுப் பின்னால் இரண்டு அடி தள்ளி நின்றாள்.
ஆதி உடனே அவள் கை கொண்டு மறைத்துக்கொண்டு இருந்த அவள் மார்பைக் கண்களால் சுட்டிக்காட்டி, “அப்போ உனக்கு அங்கேயும் காயம் ஆகி இருக்கா? நான் கூட உன் கை கால்களில் ஆகி இருக்கும். இல்லைன்னா உன் முதுகுப் புறத்தில் நாம் ஒண்ணா இருந்த அப்போ கடிச்சேனே, அங்கே காயம் ஆகி இருக்கும்னு நினைச்சேன்,” என்றவன் அவள் அருகில் செல்லப் போக…
“ஆதி, ஏன் நேற்று நடந்ததை எல்லாம் இப்போ பேசுற? எனக்கு ஒரு மாதிரியா இருக்கு,” என்று துர்கா அவனைப் பார்க்காமல் திரும்பிக் கொள்ள…
அவள் திரும்பியதும் அவள் கழுத்தில், கழுத்துக்குக் கீழே, அவள் சேலை விலகித் தெரிந்த அவள் இடையில் என காயங்கள், நகக் கீறல்கள், பற்களின் தழும்புகள் என்று இருக்க…
அதைப் பார்த்ததும் துர்காவைப் பின்னால் இருந்து கட்டிக்கொண்டு, அவள் காயங்களில் தன் உதட்டை ஈரமாக்கி முத்தங்கள் வைத்துக்கொண்டே… “மன்னிச்சுடு (சாரி) துர்கா,… நான் கொஞ்சம் முரடனாக நடந்து கொண்டிருக்கிறேன்,” என்றவன் அவள் முதுகில் முத்தம் வைத்துக்கொண்டே… அவளைத் தன் புறம் திருப்பியவன்.
அவள் மறைத்திருந்த கையை விலக்கியவன், “அங்கே இருக்கும் காயத்துக்கும் நான் என் முத்தத்தாலேயே மருந்து போடவா?” என்றான்.
துர்கா கண்களை அதிர்ச்சியில் அகலமாக விரித்தவள், “ஆதி,” என்று வெட்கத்தில் சிணுங்கிக் கொண்டே… அவன் மார்பு மீது கை வைத்து ஆதியைப் பின்னால் தள்ள…
தன் மார்பு மீது வைத்து இருந்த துர்காவின் கையைப் பிடித்தவன், அவளைத் தள்ளிக்கொண்டு மெத்தைக்குத் தள்ளிச் சென்றவன்.
அவளைத் தள்ளி மெத்தையில் படுக்க வைத்தவன், துர்காவின் கையைப் பிடித்துக்கொண்டு, அவள் மார்பை மறைத்து இருந்த சேலையை விளக்க…
அவள் இரவிக்கை (ப்ளௌஸ்) தாண்டித் திமிரிக்கொண்டு இருந்த அவள் மார்பில் ஆங்காங்கே சிவந்து, கன்றிப் போய் இருக்க… அதைப் பார்த்த ஆதி, துர்காவின் முகத்தைப் பார்த்து, “சாரி துர்கா… என்னால் உன் பக்கத்துல இருக்கும்போது என்னைக் கட்டுப்படுத்தவே (கண்ட்ரோல் பண்ணவே) முடிய மாட்டேங்குது,” என்றான்.
“அதெல்லாம் பரவாயில்லை ஆதி. நீ வேண்டும் என்றால் பண்ணுவியா?” என்றாள் துர்கா.
“ஏன், வேண்டும் என்று நான் பண்ண மாட்டேனா?” என்று சிரித்தவன், நறுக்கென்று அவள் மார்பில் லேசாகக் கடிக்க..
“ஷ்… ஆஹ்….,” என்று கத்திய துர்கா, “ஆதி, வலிக்குதுடா…” என்றவள். “எனக்கு மருந்து போடுறேன்னு சொல்லிட்டு, காயம் ஆக்குறாயே,” என்றாள் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு.
“சரி சரி துர்கா… நான் இப்போ மருந்து போடுறேன்,” என்று சொல்லிவிட்டு அவள் ஆடையை வேகமாக கலைந்தவன். அவள் உடலில் ஆங்காங்கே சிவந்து இருந்த காயங்களையும் தழும்புகளையும் பார்த்த ஆதிக்கு, இனி மறந்தும் கூடத் துர்காவிடம் வன்மையை கையில் எடுத்துவிடக் கூடாது என்று நினைத்தவன்.
குனிந்து அவள் காயங்களில், தன் ஈர முத்தத்தை மென்மையாகப் பற்களின் தழும்புகளில் இருந்து கொடுத்துக்கொண்டே முன்னேறிச் சென்றான்.
துர்கா அவன் ஈர உதட்டில் அவள் காயங்களில் முத்தம் வைக்க வைக்க… அவள் கண்கள் தானாக மூடிக் கொண்டு, அவள் காயங்களில் ‘சில்’ என்று பரவும் அவன் முத்தத்தை ரசிக்கத் தொடங்கினாள்.
அவள் காயங்களுக்கு மருந்து கொடுக்க கொடுக்க… இருவரின் உணர்வுகளும் தூண்டப்பட்டு, ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிட்டனர்.
