Episode 190
அவள் சொன்னதைக் கேட்டதும் மாதவிக்கும் வேதாச்சலத்திற்கும் அதிர்ச்சியாகிப் போனது. இருவரும் தங்கள் முகத்தைப் பார்த்துக் கொண்டு திரும்பிச் சங்கவியைப் பார்க்க… சங்கவி கோபமே உருவாகக் கையில் துப்பாக்கி வைத்துக் கொண்டு அவர்கள் முன்பு நின்று இருக்க, அதைப் பார்த்ததும் இது இருவருக்கும் பதட்டமாகிப் போக…
“சங்கவி, என்ன பண்ணிட்டு இருக்க? இப்போ எதுக்குத் துப்பாக்கியைக் கையில வச்சிட்டு இருக்க? எதுவா இருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம். உன் கோபத்தை கொஞ்சம் குறை,” என்று சொல்லிக் கொண்டே வேதாச்சலம் அவள் அருகில் வர…
அப்போது துப்பாக்கி சுடும் சத்தம் டமார் என்று கேட்டது.
போதியும் மாதவியும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள் என்று விஷயம் தெரிந்த சங்கவி. மாதவியைக் காணத் தன் வீட்டிற்குள் நுழைந்தவள், சமையலறையில் (கிச்சனில்) மாதவி போதியுடன் தொலைபேசியில் (போன்) பேசிக்கொண்டு இருப்பதைப் பார்த்ததும் அவள் கோபம் அதிகமாக, வேகமாக மாறி வந்த சங்கவி அவள் கையில் வைத்திருந்த போனைப் பிடுங்கித் தூக்கித் தரையில் வீசிச் சுக்கல் சுக்கலாக உடைத்தாள்.
சமையலறையில் ஏதோ உடையும் சத்தம் கேட்கவும், கூடத்தில் (ஹாலில்) இருந்த வேதாச்சலம் பதறியவாறு எழுந்து சமையலறைக்குள் வர…
சங்கவி கோபமாக மாதவியைப் பார்த்துக் கொண்டு இருக்க, மாதவி அவள் கோபத்தைக் கண்டு பயந்து, சுவரோடு சுவராகப் பல்லியைப் போல் ஒட்டியபடி உடல் நடுங்க நின்று இருந்தால்.
அவர்கள் இருவரையும் பார்த்த வேதாச்சலம், ‘என்ன நடக்கிறது?’ என்று கேட்க வருவதற்குள், கோபமாகச் சங்கவி சென்று மாதவியின் கழுத்தைப் பிடித்துச் சுவரோடு சேர்த்து நிறுத்தி, “ஏய்! உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் என்னோட எதிரியை என் வீட்டில் இருந்து நீ காதலிச்சிருப்ப? உன்னை இந்த வீட்டில் ஒருத்தியா நினைச்சு, எங்க கூடச் சரிசமமாகப் பழக விட்டு இருக்கும்போதே நீ எப்படி நடந்திருக்கணும். அதையெல்லாம் யோசிக்காம உன் வேலைக்காரப் புத்தியை காட்டிட்ட தானே நீ! ஒழுங்கா அந்தப் போதியோட பேசுறதை இன்னையோட நிப்பாட்டிடு. அவன் என்னோட பரம எதிரி. அவனால்தான் நான் ஆதியைக் கல்யாணம் பண்ணிக்கப் போட்ட திட்டம் (பிளான்) எல்லாம் சுக்கு நூறாக உடைந்தது. அவன் மட்டும் அன்று வந்து குறுக்கே (Absence) பேசாமல் இருந்திருந்தால், நான் இந்த நேரம் ஆதியின் மனைவியாக வலம் வந்து இருப்பேன்,” என்று கோபமாகப் பேசிய சங்கவி மாதவியின் கழுத்தை நெரித்திக் கொண்டே இருக்க…
சங்கவி மாதவியின் கழுத்தை அழுத்தியதில் அவள் முகமெல்லாம் சிவந்து, கழுத்து நரம்புகள் எல்லாம் புடைக்க… கண்கள் இரண்டும் சிவந்து அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து சங்கவியின் கைகளை நனைத்தது.
அதைப் பார்த்துப் பதறிய வேதாச்சலம், வேகமாக அவர்கள் இருவருக்கும் நடுவில் வந்து மாதவியின் கழுத்தில் இருந்த சங்கவியின் கையைப் பிரித்து விட்டவர்.
“சங்கவி, உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருக்கா? இப்போ எதுக்கு மாதவியை இப்படி இருக்க? அவ பாரு, அவள் எப்படிப் பயந்து போயிருக்கிறாள்,” என்று சொல்லிக் கொண்டு இருக்க…
“அப்பா, இவ அந்தப் போதியைக் காதல் (லவ்) பண்ணிக்கிட்டு இருக்கா. அது உங்களுக்குத் தெரியுமா?” என்று சொன்னாள் சங்கவி.
“என்னம்மா சொல்ற? போதியா? இவ போதியைக் காதல் பண்றாளா? இவளுக்கும் போதிக்கும் எப்படிப் பழக்கம் ஆச்சு? அவனை இவளுக்கு எப்படித் தெரியும்?” என்றார் வேதாச்சலம் புரியாமல்.
“அவ படிச்சிட்டு இருக்கிற கல்லூரியின் (காலேஜ்) தாளாளர் (கரஸ்பாண்ட்டு) தான் அந்தப் போதி. இவளுக்கும் அவனுக்கும் அங்கே தான் பழக்கம் ஏற்பட்டு இருக்கணும். உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் என்னோட எதிரியைக் காதலிச்சிருப்பா? அதுவும் என் வீட்டில் இருந்துகிட்டு! இதையெல்லாம் பார்க்கிறப்போ எனக்கு எவ்வளவு ஆத்திரமா இருக்கு தெரியுமா?” என்று சங்கவி பதற்றமாக (டென்ஷன் ஆக)…
“நீ எதுக்குமா வீணா டென்ஷனாகிட்டு இருக்க? ஃப்ரீயா விடு,” என்று வேதாச்சலம் சங்கவியைச் சமாதானம் செய்ய முயல…
“என்னால முடியலப்பா! எல்லாரும் சுத்தி சுத்தி எனக்கு எதிராவே இருக்காங்க. எனக்கு இவர்களை எல்லாம் பார்த்தா அப்பவே சுட்டுக் கொல்லனும் போல இருக்கு,” என்று சொல்லிக் கொண்டிருந்தவள்.
தன் பையில் வைத்திருந்த கைத் துப்பாக்கியை எடுத்து மாதவியின் முன்பு நீட்டி, “இவளை இங்கேயே இப்பவே சுட்டுக் கொன்னுடனும் போல இருக்கு அப்பா! எனக்கு இவளைப் பார்த்தாலே ஆத்திரமா வருது. நீங்க சொன்னீங்கன்னு ஒரே காரணத்துக்காகத்தான் நான் இவளை இந்த வீட்டில் வைத்திருக்கச் சம்மதிச்சிருக்கேன். இவளைப் பத்தின உண்மை தெரிஞ்ச அப்பவே என்னைக்கோ இவளை நான் கொன்று புதைத்திருப்பேன்,” என்றால் சங்கவி கோபமாக.
அவள் கையில் துப்பாக்கி வைத்துக்கொண்டு மாதவியின் முன்பு கையை ஆட்டி ஆட்டிப் பேசிக்கொண்டிருக்க… கோபத்தில் சங்கவி மாதவியை எங்கே சுட்டுவிடப் போகிறாளோ என்று பதறிய வேதாச்சலம், சங்கவியின் கையில் இருந்த துப்பாக்கியைப் பிடுங்க வர…
சங்கவியின் கையில் இருந்த துப்பாக்கியை வேதாச்சலம் பிடுங்க வரவும், சங்கவி சுடவும் சரியாக இருந்தது.
இவ்வளவு நேரம் சங்கவி திட்டியதில் பயந்து போன மாதவி சுவற்றில் பல்லியைப் போல ஒட்டிக்கொண்டு இருந்தவள். இவர்கள் பேசுவதெல்லாம் கேட்டு எதுவும் புரியாமல் குழப்பத்தில் நின்றிருக்க… சங்கவி திடீரென்று பையிலிருந்து துப்பாக்கியை எடுக்கவும். மேலும் பயந்து போனவள், அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டே இருக்க… அப்போது சங்கவி சுடவும்..
துப்பாக்கி சத்தம் கேட்டதும், அந்தப் பயத்தில் மாதவி அங்கேயே “அம்மா….” என்று அலறியபடி மயக்கம் போட்டுத் தரையில் விழுந்தாள்.
சங்கவியின் கையில் இருந்த துப்பாக்கியை வேதாச்சலம் உயர்த்திப் பிடித்து இருக்க… சத்தம் துப்பாக்கிக் கொண்டு மேலே இருந்த சுவற்றைத் துளைத்தது.
அவள் கையில் இருந்த துப்பாக்கியைப் பிடுங்கிய வேதாச்சலம், “சங்கவி, உன் கோபத்தை கொஞ்சம் கட்டுப்படுத்திப் பழகு. இப்படி கோபம் பட்டு பட்டு தான் எல்லாத்தையும் அவசரப்பட்டு இழந்து நிக்கிற நீ. நிதானமாக இருக்கப் பழகு சங்கவி. அப்போதான் நீ நினைச்சதை நடத்த முடியும். புரியுதா?” என்றார்.
சிவப்பேறிய விழிகளில் தரையில் மயங்கி இருந்த மாதவியைப் பார்த்து வேதாச்சலத்திடம், “என்னப்பா? இவ உங்க பொண்ணை கஷ்டப்படுத்தியதும் உனக்கு வலிக்குதா?” என்றாள் சங்கவி.
“ஆமா சங்கவி. இவளுக்கு என்ன ஆனால் எனக்கு என்ன? உனக்கு ஏதோ ஆயிடக் கூடாது. உன்னை எதுவும் யாரும் எதுவும் செய்திடக் கூடாதுன்னு தான் நான் பதறுகிறேன்,” என்றவர்.
துப்பாக்கி சத்தத்திற்கே மயங்கித் தரையில் விழுந்து இருந்த மாதவியைப் பார்த்த வேதாச்சலம், சங்கவியிடம் திரும்பி, “இவள்தான் நமக்குத் துருப்புச் சீட்டு. இவளை வைத்து தான் நான் உன்னை ஆதியின் வாழ்க்கைக்குள் நுழைக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். நீ அவசரப்பட்டு இவளைக் கொன்று இருந்தால், இந்த நேரம் நாம் போட்டு வைத்த திட்டம் அனைத்தும் பாழாகிப் போயிருக்கும்,” என்றார் வேதாச்சலம்.
பின்பு அருகில் இருந்த தண்ணீரைக் (நீரை) எடுத்து மாதவியின் முகத்தில் தெளிக்க… முகத்தில் சில்லென்று நீர் பரவவும், முகத்தைச் சுளித்துக்கொண்டே மாதவி கண்விழிக்க..
அவள் முன்பு மண்டியிட்டு அமர்ந்திருந்த வேதாச்சலம், “மாதவி, ரொம்பப் பயந்துட்டியா? இவ இப்படித்தான் அறிவு கெட்டத்தனமாக கோபம் வந்தால், என்ன செய்றோம்னு தெரியாம எதுவும் செய்து வச்சிட்றா. நீ எழுந்திரு,” என்று அவள் எழுந்திருக்க உதவியவர், “நீ போ உன் அறையில் (ரூம்ல) கொஞ்சம் ஓய்வு (ரெஸ்ட்) எடு. நான் சங்கவியைச் சமாதானம் படுத்துகிறேன். அவளுக்குத் திடீர்னு நீ காதல் பண்ணினதும் அதிர்ச்சியில் கோபம் வந்திருச்சு வேற எதுவும் இல்லை. நீ எதையும் நினைச்சு மனசை போட்டு வருத்திக்காத. கொஞ்ச நேரம் போய்த் ஓய்வு எடு,” என்று மாதவியை அவள் அறைக்கு அனுப்பி வைத்தார் வேதாச்சலம்.
மாதவி வேதாச்சலத்திடம் “சரி” என்று தலையாட்டியவள் சங்கவியைப் பார்க்க, சங்கவி இன்னும் கோபத்தோடு சிவந்த விழிகளோடும் மாதவியைப் பார்த்துக் கொண்டு நின்று இருந்தாள்.
அவளைப் பார்க்கவே மாதவிக்குப் பயமாக இருக்க, நடுங்கியபடியே வேதாச்சலத்தைப் பார்க்க, “சங்கவியை நான் பார்த்துக்கிறேன். நீ போமா,” என்று சொல்லி வேதாச்சலம் மாதவியின் அறைக்கு அவளை அனுப்பி வைத்தார்.
மாதவி திரும்பித் திரும்பி சங்கவியையும் வேதாச்சலத்தையும் பயந்தபடி பார்த்துக் கொண்டே தன் அறைக்குச் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டாள்.
அவள் சென்று அறையைச் சாற்றி விட்டதை உறுதி செய்து கொண்ட வேதாச்சலம். திரும்பிச் சங்கவியிடம் வந்தவர், அவளை அழைத்துக்கொண்டு மாதவியின் அறைக்கு அருகில் இருந்த தன் அறைக்குச் சென்றவர்.
சங்கவியிடம், “இப்போ எதுக்கு அவசரப்பட்டு நீ அவளைச் சுடப் போன சங்கவி? அவ நமக்குக் கிடைச்சிருக்கு ஒரு துருப்புச் சீட்டு. அவளைக் கொன்னுட்டா நம்ம போட்ட திட்டம் எல்லாம் நடந்துடும்னு நீ நினைக்கிறியா? இப்படித் தயவு செய்து மறுபடியும் இன்னொரு தடவை உணர்ச்சிவசப்பட்டு அவளை எதுவும் செஞ்சுடாத. அவளை அந்தக் ஆதி குடும்பம் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக நான் எவ்வளவு பணம் செலவு பண்ணி அவளோட அடையாளத்தை மறைச்சு வச்சிருக்கேன்னு உனக்கே நல்லா தெரியும். நீ பாட்டுக்கு அவளைச் சுட்டு அவளுக்கு எதுவும் ஆபத்து வந்திருச்சுன்னா, இந்த விஷயம் எப்படியும் வெளியே வந்தே தீரும். அப்படி இந்த விஷயம் வெளியே வந்தால், மாதவியைப் பற்றிய எல்லா உண்மையும் ஆதிக்குத் தெரிய வந்துவிடும். உனக்கு உண்மை தெரிஞ்ச அடுத்த நிமிஷம் அந்தச் செண்பகத்தோட பொண்ணை இங்க இருந்து கூட்டிட்டுப் போயிடுவான். தயவு செய்து இன்னொரு முறை இந்த மாதிரிப் பைத்தியக்காரத்தனமா எதுவும் செய்து வச்சிடாத,” என்று வேதாச்சலம் சங்கவியைக் கண்டிக்க…
இவ்வளவு நேரம் அவர் சொன்னது எல்லாம் புரிந்துகொண்ட சங்கவி, “சாரிப்பா. நான் ஏதோ ஆத்திரத்திலும் அவசரத்திலும் அவளைச் சுடப் பார்த்தேன். அந்தப் போதியை மாதவி காதல் பண்றான்னு தெரிஞ்சதும், அதை விடவும் என்கிட்ட இருந்து அவ அதை மறைத்து விட்டதும் தான் என்னால தாங்க முடியல. எனக்கு என்ன செய்றதுன்னு தெரியல. ரொம்பக் கோபமா இருந்துச்சு. இப்ப நான் எப்படிப் பார்த்துக்கொண்டேன்னு உங்களுக்குத் தெரியும் தானே? அந்த நன்றி கொஞ்சம் கூட இல்லாம என்கிட்டயே இவ காதலிக்கிறதை மறைச்சுட்டா. அப்போ இவ எப்பேர்ப்பட்டவளா இருக்க முடியும்?”
“அந்தச் செண்பகம் மாதிரியே தான் இவளும் இருக்கா… அவ அவங்க வீட்ல இருக்குறவங்களுக்குத் தெரியாமத் தானே காதல் பண்ணி அவங்க வீட்டு வேலைக்காரனைக் கூட்டிட்டு ஓடினா. ஆனா, இவ வேலைக்காரியா இருந்துகிட்டு அந்தப் போதியை எனக்குத் தெரியாம அவனை காதலித்து இருக்கா. அவளுக்கும் இவளுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான். அவ வேலைக்காரனை லவ் பண்ணிட்டு ஓடினா, இவ வேலைக்காரியா லவ் பண்ணிட்டு இருக்கா. அவ்வளவு தான் வித்தியாசம்,” என்று செண்பகத்தையும் மாதவியையும் ஒப்பிட்டு வேதாச்சலத்திடம் கூறினாள் சங்கவி.
“விடுமா, அதையெல்லாம் பேசிக்கிட்டு இருக்காத. எப்போ இவ அந்தப் போதியைக் காதல் பண்றான்னு தெரிஞ்சுதோ, நம்ம அடுத்தடுத்த வேலைகளை உடனே ஆரம்பிக்கணும். இல்லைன்னா அந்தக் ஆதி உஷாராகிவிடுவான். நம்ம போட்ட திட்டம் எல்லாம் தவிடு பொடி ஆயிடும்,” என்று சங்கவியை எச்சரித்தார்.
“சரிப்பா. நான் அடுத்து என்ன செய்யலாம் என்பதை யோசிச்சிட்டு உங்ககிட்ட சொல்றேன். அதுவரைக்கும் இவளை நம்ம வீட்டை விட்டு வெளியே எங்கேயும் போக விடாமப் பார்த்துக்கங்க. முக்கியமா அவ அந்தப் போதி கூடப் பேசக்கூடாது. அந்த அறையை விட்டு அவ வெளியே வரக்கூடாது. அவ கையில் இருக்க எல்லாப் பொருளையும் பிடுங்கி வெச்சிடுங்க. ஒரு போன் முதற்கொண்டு எதுவும் அவ கிட்ட கொடுக்கக் கூடாது,” என்று கண்டிப்பாகச் (ஸ்ட்ரிக்ட்டாக) சொன்னவள், அவள் அப்பாவின் அறையை விட்டு வெளியே வர…
சங்கவி வேதாச்சலத்தின் அறையை விட்டு வெளியே வருவதை, இவ்வளவு நேரம் அவர்கள் அறைக்கு வெளியே நின்று பேசியதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த மாதவி, சங்கவி வெளிய வருவது தெரிந்ததும் வேகமாகச் சென்று தன் அறை கதவைச் சாற்றிக் கொள்ள…
வெளியே வந்த சங்கவி மாதவியின் அறையைத் திரும்பிப் பார்க்க, அது சாற்றப்பட்டு இருக்க, “இனி நீ அதுக்குள்ளேயே தான் இருக்கணும்.. எனக்குத் தெரியாம அவனை நீ காதல் பண்ணிட்டு இருந்தியா? இதுக்கெல்லாம் சேர்த்து வச்சு நீ அனுபவிப்பேனடி,” என்று கருவிய சங்கவி, வேலை ஆட்களை அழைத்து, மாதவியின் அறைக்கு யாரும் செல்லக்கூடாது. அவளுக்கு எது வேண்டுமானாலும் தன்னைக் கேட்காமல் கொடுக்கக்கூடாது, அவளிடம் யாரும் பேசக்கூடாது என்று அனைவருக்கும் கட்டளை (ஆர்டர்) போட்டுவிட்டு அங்கிருந்து சென்றாள்.
மாதவி கதவைத் தாளிட்டு, கதவில் சாய்ந்தபடி நின்று வெளியே நடப்பதை எல்லாம் உன்னிப்பாகக் கவனித்தவள். ‘அந்த ஆதி யார்? அவருக்குத் தெரிஞ்சா என்ன ஆகும்? ஏன் வேதாச்சலம் அப்பா என்னவோ சங்கவி கிட்டச் சொல்லி பேசிக்கிட்டு இருந்தாரு?’ என்று தலையும் புரியாமல் வாலும் புரியாமல் தான் கேட்டதை எல்லாம் யோசித்து நின்ற மாதவி.
தன்னிடம் இப்போது தொலைபேசியும் (போனும்) இல்லாமல் போகவே, ‘எப்படி மாதவியும் போதியும் காதலிக்கும் விஷயம் சங்கவிக்குத் தெரிந்தது? எப்படியாவது போதிக்குத் தெரிய வைத்து விட வேண்டும். அவனை இப்போது எப்படித் தொடர்பு கொள்வது?’ என்று தெரியாமல் மாதவி தலையைப் பிடித்துக் கொண்டிருந்தாள். அவள் கையில் இருந்த போனை சங்கவி உடைத்து இருக்க… ‘சங்கவி வாங்கிக் கொடுத்த மடிக்கணினி (லேப்டாப்பில்) வழியாக அவனிடம் எப்படியும் பேசலாம்’ என்று நினைத்தவள், அது எங்கே என்று தேட, அப்போதுதான் தன் கல்லூரியில் இருந்து வரும் போது வேதாச்சலம் காபி கேட்டதும் தன் கைப்பையை கூடத்திலேயே (ஹாலிலேயே) விட்டு வந்தது ஞாபகம் வர…
“ச்சே…. இப்போ என்ன செய்யறது?” என்று தெரியாமல் தலையைப் பிடித்துக் கொண்டு கதவில் சாய்ந்தபடி நின்றிருந்தாள் மாதவி.

3 comments
Akka innaikku episode super vera level akka 🥰🥰🥰❤️❤️❤️👌👌👌🫰🫰🫰🫶🫶👍👍
Akka inaki episode super akka 💐💕🎉💕
Akka inaki episode super akka 💐💕🎉💕