FLING 21
விமான நிலையத்தில், அகலிகா தீரனை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். சரியாக அவன் சொன்ன நேரத்தில், மிகவும் ஸ்டைலான உடையில் தீரன் வந்தான். அவன் அவளை நோக்கி வந்தபோது, அவனது கண்களில் ஒருவித மிரட்டலும், கேலியும் கலந்திருந்தது.
“ஹே! ஹை மை ‘PA’ கரெக்ட் டைம்-க்கு வந்துட்டாங்களா? நேத்து ராத்திரி ஏன் நீங்க சீக்கிரம் ஓடிட்டீங்க? எனக்கு ஒரு ‘Morning Kiss’ கூடக் கொடுக்கலையே?” என்று
கிண்டல் செய்தான்.
அகலிகா கோபத்துடன் அவனைப் பார்த்தாள். “கிண்டல் பண்றதை நிறுத்துங்க. நான் எதுக்காக வந்திருக்கேன்னு உங்களுக்குத் தெரியும். உங்க பிடிவாதத்துக்காக நான் பலியாகப் போறேன். அவ்வளவுதான்.” என்றாள்.
தீரன் சிரித்தான். “உன் கோபம் எனக்குப் பிடிச்சிருக்கு. ஆனா, நேத்து ராத்திரி நீ என்கூட வந்த அப்போ ‘Fling’ ஆக இருக்க சம்மதிச்சது உன் பிடிவாதமா? இல்ல, உன் விருப்பமா?” என்று அவளது காதருகே கிசுகிசுத்தான்.
“நான் சம்மதிக்கல! நீங்கதான் என்னை எடுத்துகிட்டீங்க!” என்று அகலிகா ஆத்திரத்துடன் அவனைப் பின்னுக்குத் தள்ளினாள்.
“ஓ! அப்படியா? ‘You sure, you were fully against it?’ நேத்து நைட் உன் சோர்வுல நீ என் மேல சாய்ந்து தூங்கினப்போ, நான் உன்னைத் தொட்டப்போ, நீ விலகலையே? அது ஏன்?” என்று அவன் அவளது மனசாட்சியைத் தொட்டான்.
அகலிகாவின் முகம் வெளிறியது. அவளால் அவனது கேள்விக்குப் பதிலளிக்க முடியவில்லை. அவனது அருகாமை அவளது எதிர்ப்பைக் கடந்தது என்பது உண்மை.
“உங்களுக்கு என்ன வேணும்? நான் உங்ககூட லண்டன் வரேன். அங்க வெறும் வேலை மட்டும் பாக்குறேன். வேறு எதுக்கும் சம்மதிக்க மாட்டேன்,” என்று அவள் தீர்க்கமாகச் சொன்னாள்.
தீரன் சிரித்தான். “சரி. இப்பவே உனக்கு ஒரு ‘Option’ கொடுக்கிறேன். நீ இப்போவே முகேஷ்கிட்ட போன் பண்ணி, இந்த கல்யாணம் நடக்காதுன்னு சொல்லிடு. நான் உனக்காக இப்போவே ‘Flight’ டிக்கெட்டை கேன்சல் பண்றேன். இல்லன்னா, லண்டன்ல நீ என்னோட ஒண்ணா இருந்தே ஆகணும். ஆனா, இந்த முறை அது உன் சம்மதத்துடனே நடக்கணும்.” என்றான் தீர்க்கமாக.
அகலிகா கண்கலங்கினாள். “என்னால முகேஷை ஏமாத்த முடியாது. என் குடும்பம்…” என்று அவள் தயங்கினாள்.
“ஓ! அப்போ உன் குடும்பத்துக்காக நீ இந்தச் சுமையைத் தாங்கப்போறியா? சரி. உன் ‘Duty‘ உனக்கு ரொம்ப முக்கியம்னு நினைக்கிறேன்,” என்று தீரன் அவளது பயணப்பெட்டியை எடுத்துச் செல்ல ஆரம்பித்தான்.
அவள் பின்னால் ஓடிவந்தாள். “நான் என்ன சொன்னாலும் உங்களுக்கு ஒரு பிரச்சினை இல்லைன்னு எனக்குத் தெரியும். சரி! நான் உங்க பிடிவாதத்தை ஏத்துக்கிறேன். ஆனா, இந்த ரெண்டு மாசமும் நீங்க சொன்னது போல இருக்கேன். அதுக்கப்பறம், எல்லாமே முடிஞ்சிடணும். நான் என் கல்யாணத்துக்குத் திரும்பிப் போகணும்,” என்று ஒப்புக்கொண்டாள். அவள் உதட்டைக் கடித்துக்கொண்டு சொன்னாள்.
“நான் ஒத்துக்கிறேன். ரெண்டு மாசம். நீ என் கூட முழு மனசா இருக்கணும். நமக்குள்ள அதுவரை எல்லாமே ஒற்றுமையா இருக்கனும். அதுக்கு அப்பறோம் நமக்குள்ள எந்த தொடர்பும் இருக்காது,” என்று அவள் கையைப் பற்றினான்.
அந்தப் பிடி ஒரு தொழில் ஒப்பந்தம் போல இருந்தது. அகலிகா தனது முதல் நிபந்தனையை அவனிடம் ஒப்படைத்தாள்: அவள் வெறும் ‘Fling’ மட்டும்தான். அவனது பிடிவாதத்தில் இருந்து தப்பிக்க அவளுக்கு வேறு வழியே இல்லை.
அவள் தனது பயணப் பெட்டியுடன் விமான நிலையத்திற்குள், தீரனின் கட்டளைக்கு கட்டுப்பட்டவளாக, ஒரு குற்ற உணர்ச்சியுடன் நுழைந்தாள். அந்த லண்டன் பயணம், அவளது வாழ்வின் தவிர்க்க முடியாத சுமையாக இருக்கப் போகிறது.
…..
விமானம் லண்டனை அடைந்தது. அகலிகா, தீரன் இருவரும் மௌனமாக வெளியேறினர். தீரனின் முகத்தில் ஒருவிதமான திருப்தி இருந்தது. அகலிகாவின் முகம் சோர்வுடனும், எதிர்காலம் குறித்த பயத்துடனும் காணப்பட்டது.
விமான நிலையத்திலிருந்து வெளியே வந்ததும், முகேஷ் ஏற்பாடு செய்திருந்த டாக்ஸியில் அகலிகா ஏறப் போனாள். “நான் தனியா என் ஹோட்டலுக்குப் போறேன்,” என்றாள்.
தீரன் அவள் அருகில் வந்தான். அவன் கண்களில் அவளது எதிர்ப்பைக் கண்டதும் ஒரு சிறு புன்னகை தோன்றியது. “உனக்கு முகேஷ் தனியா ரூம் புக் பண்ணிருக்கான். ஆனா, நீ எங்க இருக்கணும்னு முடிவு பண்ண வேண்டியது முகேஷ் இல்ல, நான். நீ என்னோட தான் வரப் போற,” என்று கூறி அவளது பெட்டியை எடுத்துக் கொண்டான்.
“நான் வர முடியாது! எனக்கு பிரைவசி வேணும்! நான் உங்க பேச்சுக்கு கட்டுப்பட்டாலும், உங்க கூடத் தங்க முடியாது!” என்று அகலிகா எதிர்ப்பு தெரிவித்தாள்.
“நீ தினமும் என்கூட இருக்கணும். இருக்கப் போற.. தனியா முகேஷ் ஏற்பாடு செய்த ஹோட்டல்ல நீ இருக்குறதுல எந்த பிரயோஜனமும் இல்ல. இந்த ரெண்டு மாசம் முழுசும் நீ எனக்கு மட்டுமே சொந்தம். நீ என்ன செய்யணும், எங்க இருக்கனும் எல்லாமே நான் முடிவு பண்றது தான்” என்றான் தீர்க்கமாக.
அகலிகா தீரனை பார்த்தாள் எதுவும் பேசவில்லை. அவன் சொல்வதும் உண்மைதானே.. தீரன் சொன்ன எல்லாவற்றிற்கும் சம்மதம் சொல்லிவிட்டு தானே தான் இங்கே கிளம்பி வந்திருக்கிறோம் . இங்கு வந்து இவனிடம் விதண்டாவாதம் செய்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை என்று தோன்றியது அவளுக்கு.
“நான் சொன்னதுதான் நடக்கும்,” என்று பிடிவாதமாகக் கூறிய தீரன், அவளைத் தன்னுடன் அழைத்துச் சென்று தன் ஆடம்பரமான அபார்ட்மெண்ட்டை நோக்கி காரை ஓட்டிச் சென்றான். வேறு வழியின்றி, அகலிகா அவனுடன் சென்றாள்.
அவனது அபார்ட்மெண்ட் லண்டனின் மையப்பகுதியில், பிரம்மாண்டமாக இருந்தது. உள்ளே நுழைந்த அகலிகா, சுற்றும் முற்றும் பார்த்தாள்.
“நான் இந்த அப்பார்ட்மென்டில் உள்ள இன்னொரு ரூம்ல தங்கிக்குறேன். எனக்குத் பிரைவசி ரொம்ப முக்கியம்,” என்று அகலிகா சொன்னாள்.
தீரன் சோர்வாக இருந்தான். இப்போதைக்கு அவளைச் சண்டைக்கு இழுக்க அவன் விரும்பவில்லை. “சரி, சரி. இப்போதைக்குக் கூட இருக்கிறதே போதும். மத்ததெல்லாம் அப்புறம் பார்க்கலாம். நீ முதல்லப் போய் பிரெஷ் அப் ஆகிட்டு வா,” என்று சொல்லி, அவளை அனுப்பி வைத்தான்.
அவள் தனக்கான மற்றொரு அறையில் சென்று குளித்துவிட்டு, ஒரு கேஸுல் உடைக்கு மாறினாள். தீரனும் குளித்துவிட்டுக் கிளம்ப, இருவரும் புதிய வேலைக்கான உற்சாகம் இல்லாமல், ஆனால் கடமை உணர்வோடு அலுவலகம் நோக்கிச் சென்றனர்.
அலுவலகத்தில், அகலிகா புதிய ப்ராஜெக்ட் குழுவில் அறிமுகம் செய்யப்பட்டாள். தீரன் அவளைத் தனது Co-Project Manager-ஆக, தொழில்நுட்பப் பிரிவுக்குப் பொறுப்பாளராக அறிமுகப்படுத்தினான். அகலிகாவின் திறமை குறித்த பேச்சுகள் அலுவலகத்தில் பரவின.
புதிய ப்ராஜெக்ட் குறித்து குழுவுடனான உரையாடல்கள் ஆரம்பித்தன. வேலை மிகவும் தீவிரமாக இருந்தது. லண்டன் பங்குதாரர்களுடன் சந்திப்புகள், தொழில்நுட்பச் சிக்கல்கள், புதிய மென்பொருள் வரைபடம் என முதல் மூன்று நாட்கள், அகலிகா அலுவலகத்தில் தன்னை முழுவதுமாகப் புதைத்துக் கொண்டாள்.
இரவு தாமதமாகத்தான் இருவரும் அபார்ட்மெண்டிற்குத் திரும்புவார்கள். அவர்கள் வந்ததும், தீரன் தனது அறைக்குச் சென்றுவிடுவான். அகலிகா தனது வேலையையே ஒரு தற்காப்புக் கவசமாகப் பயன்படுத்தினாள். தீரனுடன் பேசுவதையோ, அவனைச் சந்திப்பதையோ முழுவதுமாகத் தவிர்த்தாள்.
தீரனும், அலுவலக வேலையின் காரணமாகவும், அவளைத் தனக்குச் சரணடைய வைக்க நினைக்கவில்லை , அவளைத் தொந்தரவு செய்யவில்லை. அலுவலகத்தில், அவன் அகலிகாவுடன் அதிகாரத்துடன் மட்டுமே பேசினான். அபார்ட்மெண்டில், இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை.
முதல் மூன்று நாட்களும், அவர்கள் அதிகாலையிலிருந்து இரவு வரை வேலையில் மூழ்கியிருந்தனர். அகலிகா, வேலை நெருக்கடியில் தன் மனதை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். ஆனால், அவளுக்குத் தெரியும் – இந்த அமைதி நீடிக்காது. தீரன் எப்போது வேண்டுமானாலும் அவனது அடுத்த கட்ட வேலையை கையில் எடுக்கலாம் என்று.
கண்டிப்பாக அன்றைய இரவு அவள் எதிர்ப்பார்த்தது போல தனிமையை கொடுக்காது . அவளை விடியும்வரை தன் கைக்குள்ளேயே வைத்திருக்க போகிறான் தீரன்
