FLING 22
அது வார இறுதி நாள் என்பதால், அடுத்த இரண்டு நாட்களும் லண்டன் அலுவலகத்திற்குக் விடுமுறை ஆகும்.
அகலிகா, தீரன் இருவரும் அன்றைய இரவு மிகத் தாமதமாகத்தான் அபார்ட்மெண்ட்க்கு வந்திருந்தனர்.
இருவரும் சோர்வில் தங்கள் தனித்தனி அறைகளுக்குச் சென்று படுத்துவிட்டனர். தீரன் அகலிகாவை தொந்தரவு செய்யவில்லை. அவள் வேலை பளு அவன் அறிந்ததே.. அதனால் அவள் ஓய்வெடுக்கட்டும் என்ன விட்டிருந்தான்.
மறுநாள் இருவருக்குமே விடுமுறை தானே பொறுமையாக மற்றதை பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டான்.
ஆனால், மறுநாள் காலையிலேயே, அகலிகா தீரனுக்கு முன் எழுந்துவிட்டாள். லண்டன் அலுவலகத்தில் அவளுடன் பழகிய ஸ்வேதா என்ற பெண்ணுடன் ஊரைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பத் தயாரானாள்.
அவனிடம் சொல்லிக்கொண்டு போக அகலிகாவுக்கு விருப்பம் இல்லை.
தீரன் தூங்கிக் கொண்டிருக்கும்போது, அவள் மெதுவாகக் கிளம்பிச் சென்றுவிட்டாள்.
இரண்டு நாள் விடுமுறை என்றாலும், சோர்வாக இருந்த போதிலும் தீரனின் அருகில் ஒரு நிமிடம் கூட இருக்க அவள் விரும்பவில்லை.
அவர்கள் இருந்த அப்பார்ட்மெண்ட்டை விட்டு வெளியே வர அவள் ஏற்கனவே புக் செய்து இருந்த டாக்ஸி முன்பே வந்து அவளுக்காக காத்திருந்தது. அதில் ஏறியவள் உடனே அழைத்தால் “ஹாய் ஸ்வேதா! நீ எங்கே இருக்க? நான் கிளம்பிட்டேன்” என்றாள்.
” ஏய் என்னடி இவ்ளோ சீக்கிரம் கிளம்பிட்ட!.. இப்பதான் குளிச்சிட்டு வந்தேன்” என்று அவசர அவசரமாக பேசினாள் ஸ்வேதா.
” நோ ப்ராப்ளம் எனக்கு தூக்கம் வரல அதான் சீக்கிரம் கிளம்பிட்டேன். உன்னோட லொகேஷன் அனுப்பு நானே வந்து உன்ன பிக்கப் பண்ணிக்கிறேன்” என்று போனை வைக்க..
ஸ்வேதா அனுப்பிய லொகேஷனுக்கு டாக்ஸியை விடச் சொன்னாள்.
ஸ்வேதா வீட்டின் முன் டாக்ஸி நிற்கவும், ஸ்வேதா கீழே வரவும் சரியா இருந்தது. இருவரும் கிளம்பி லண்டனை சுற்றி பார்க்க சென்றனர்.
அன்று முழுவதும் ஸ்வேதாவுடன் லண்டனின் பிரபலமான இடங்களைச் சுற்றிப் பார்த்தாள் அகலிகா . பிக் பென், லண்டன் ஐ எனப் பல இடங்களைப் பார்த்தாலும், அவள் மனதில் மகிழ்ச்சி இல்லை. அவளுக்குத் தெரியும், இந்தச் சுதந்திரம் தற்காலிகமானது என்று.
அன்று இரவு முழுவதும் அவள் ஸ்வேதாவுடனேயே தங்க முடிவு செய்தாள்.
தீரனின் எந்த அழைப்புக்கும் அவள் பதிலளிக்கவில்லை.
மறுநாள் மதியம், அகலிகா சோர்வுடன் தீரனின் அபார்ட்மெண்ட்க்குத் திரும்பினாள். அவள் உள்ளே நுழைந்ததும், ஹாலில் ருத்ரனாக அமர்ந்து தீரனை
கண்டதும் அதிர்ந்தாள்.
அகலிகா உள்ளே நுழைந்தபோது, ஹாலில் சோஃபாவில் ருத்திரனைப் போலக் கோபமாக அமர்ந்திருந்தான் தீரன். அவன் முகம் சிவந்து, கண்கள் ஆத்திரத்தில் மின்னின. அவன் அவளை எதிர்பார்த்துக் காத்திருந்தான் என்பது தெரிந்தது.
இரவு முழுவதும் தீரன் தூங்கவில்லை என்று அவன் முகமே சொன்னது அவளுக்கும் அவள் வருவாள் வருவாள் என்று எதிர்பார்த்து பொறுமை இழந்திருந்தான் தீரன்.
அகலிகா அவனைக் கண்டும் காணாதவள் போல மெல்லா தன் அறையை நோக்கிச் சென்றாள்.
தன்னைப் பார்த்தும் எதுவும் பேசாமல் புறக்கணித்து சென்றவளை பார்த்து மேலும் அவன் பொறுமை இழந்தான்.
தீரன் கோபத்துடன் எழுந்து வேகமாக அகலிகாவின் அருகில் வந்தான்.
“ஏய்! எங்க போயிட்டு வர்ற? உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா, என்கூட இருக்க வேண்டிய நேரத்துல வெளிய போவ? நான் உன்னை ஏன் இங்கக் கூட்டிட்டு வந்தேன்னு உனக்குத் தெரியாதா? என்னோட ஒரு போன் காலை கூட நீ அட்டென்ட் பண்ணல..” என்று ஆக்ரோஷமாகக் கத்தினான்.
அகலிகா தனது தோளில் இருந்த அப்படியே வைத்தவள் நிதானமாக அவனைப் பார்த்தாள். “நான் ஒரு வாரத்துக்கு முன்னாடி வரைக்கும், யாருடைய அனுமதியும் இல்லாம வாழப் பழகினவ. நான் எங்க போறது, எங்க தங்கறதுன்னு உங்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நான் என்னுடைய பிரைவசியை பயன்படுத்திக்கிட்டேன். நீங்க ஒன்னும் என் ஹஸ்பண்ட் இல்ல, எங்க போறேன், வரேன்னு சொல்லிட்டு இருக்க.. என் ஹஸ்பண்டாவே இருந்தாலும் நான் பெர்மிஸ்ஸன் கேட்க மாட்டேன் தகவல் மட்டும் தான் சொல்லுவேன். அது என்னோட சுதந்திரம். இப்படி அதட்டி உருட்டி பேசினா நான் உங்க பேச்சுக்கு கட்டுப்படுவேன்னு நினைக்காதீங்க” என்று , உதாசீனமாகவும் பதிலளித்தாள்.
இந்த வார்த்தைகள் தீரனை இன்னும் உலுக்கின. “உனக்குத் தெரியுமா? இந்த ரெண்டு நாளும் நான் உனக்காக எவ்ளோ பிளானி பண்ணி வெச்சிருந்தேன்? உன்னை லண்டன்ல கூட்டிட்டுப் போக, ரொமான்டிக் ஸ்பாட்ஸ்க்கு அழைச்சிட்டு போகணும், நமக்குப் பிடிச்ச மாதிரி எல்லாத்தையும் ரெடி பண்ணி வச்சிருந்தேன்! ஆனா நீ என் பேச்சைக் கேட்காம, என்கிட்டே ஒரு வார்த்தை கூட சொல்லாம ஊரை சுத்திக்கிட்டு இருக்கிறியா?” என்று கோபத்தில் கத்தினான்.
அவன் மனதுக்குள் இருந்த ஆசைகளை அவள்மீது ஒரு கட்டாயமாகக் கொட்டியது அவளது கோபத்தை அதிகப்படுத்தியது.
“எனக்கு உங்களோட எந்த ஒரு டேட்ம் தேவையில்லை. என் மேல உங்களுக்கு இருக்கிற இந்த உரிமை, வெறும் மிரட்டல் மூலமா வந்தது தான். அதை மறந்துடாதீங்க. என்னை விட்டுடுங்க,” என்று அலட்சியத்துடன் பேசினாள்.
அவளது அந்த உதாசீனப் பேச்சும், அவனது திட்டங்களை அவள் சற்றும் மதிக்காமல் பேசியதும் தீரனை உச்சக்கட்டக் கோபத்திற்கு இட்டுச் சென்றது. இத்தனை பாசத்தையும், அவள் மீது தான் காட்டும் அக்கறையையும் அகலிகா மறுப்பது தீரனின் ஆணவத்தைத் தாக்கியது.
அவன் ஒரு நொடி தாமதிக்காமல், அவளது கைகளைப் பிடித்து இழுத்துத் தன்னோடு சேர்த்தான். அவனது கைகள், அவள் தோள்களை இறுக்கிக் கொண்டன.
“நீ என்ன சொன்னாலும் எனக்கு அதைப் பத்தி கவலையே இல்ல.., நீ எனக்குச் சொந்தமானவள்!” என்று ஆக்ரோஷமாகக் கத்திக்கொண்டே, அடுத்து அகலிகா பேச வரும் முன் அவளது வாயை அடைப்பது போலக் கோபமாக முத்தமிட்டான்.
தீரனின் இந்த முத்தத்தின் வலிமையைத் தாங்க முடியாமல், அவனைத் தன்னிடம் இருந்து தள்ளிவிட முயன்றாள். ஆனால், அவன் விடவில்லை. அவளைக் முத்தமிட்ட படி அகலிகாவை பெட் ரூமிற்கு இழுத்துச் சென்றான்.
அகலிகாவின் எதிர்ப்பை, அவன் தனது பிடிவாதத்தையும், கோபத்தையும் கொண்டு நசுக்கினான். “நீ என் கூட இருக்க மறுத்தாலும், உன் உடம்பும், மனசும் என்னை விட்டு விலக கண்டிப்பா மறுக்காதுன்னு எனக்குத் தெரியும்!” என்று முணுமுணுத்துக்கொண்டே, அவளது எதிர்ப்புகளை மீறி, அவளை முழுவதுமாக ஆக்கிரமிக்க ஆரம்பித்தான்.
அந்த அபார்ட்மெண்ட்ல், அகலிகாவின் சத்தங்கள் வெளியில் கேட்காதவாறு, தீரன் தனது அதிகாரத்தை அழுத்தமாக அவளிடம் காட்ட ஆரம்பித்தான்.
தீரனின் அதிகாரத்திற்கு முன் அகலிகாவின் பிடிவாதம் செல்லாமல் போனது. அவளால் அவனை எதிர்க்க முடியவில்லை. முதலில் முரண்டு பிடித்தவள் தீரனின் ஆவேசமான முத்தத்திற்க்கே அடங்கிப்போனாள்.
அது தீரனுக்கும் சாதாகமானது. அடுத்த கட்டத்திற்கு அவளிடம் அனுமதி கேட்காமலேயே முன்னேறினான்.
தான் மனதையும், உடலையும் நினைத்து நொந்துகொண்டாள். இப்படி வெட்கமில்லாமல் ஒரு முத்தத்திற்கே கரைந்து நிற்கிறாளே என்று நொந்து கொண்டாள்.
