EPI 224
போதியையும் மாதவியையும் வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களுக்கு ஆர்த்தி சுற்றி உள்ளே அழைத்துச் சென்றனர் போதியின் அம்மாவும் அவன் தங்கை தீபாவும்.
வீட்டிற்கு வந்ததும் இருவருக்கும் பாலும் பழமும் கொடுத்து பூஜை அறையில் விளக்கேற்ற வைத்து மற்ற சிறு சிறு சம்பிரதங்களை எல்லாம் மாதவியை செய்ய வைத்துவிட்டு அவளை தீபாவின் அறையில் ஓய்வெடுக்கச் சொல்லி தீபாவுடன் மாதவியை அவள் அறைக்கு அனுப்பி வைத்தனர்.
எல்லாம் முடிந்து மாதவியை தன்னறைக்கு அனுப்பி வைப்பார்கள் என்று எதிர்பார்த்த போதி அவள் அவனைக் கடந்து தீபாவின் அறைக்கு செல்லவும் திரும்பி தன் அம்மாவை பார்த்து “ஏன் மாதவியை தீபா ரூமுக்கு அனுப்பி வைக்கிறீங்க ரூம்லயே இருக்கட்டுமே” என்றான் போதி.
அவனைப் பார்த்து அனைவரும் சிரிக்க “ரொம்ப அவசரப்படாதடா உன் பொண்டாட்டி வரப்போ வருவா போய் ஒழுங்கா ரூம்ல ரெஸ்ட் எடு” என்று அவனை அவன் ரூமுக்கு அனுப்பி வைத்தார் போதியின் அம்மா.
மாதவியும் சிரித்துக் கொண்டு தீபாவின் அறைக்கு சென்று விட அவளை பார்ப்பதற்காக சிவகாமி அவர்கள் அறைக்கு வந்தார். அவரும் வெங்கடாசலமும் மாதவியை காண தீபாவின் அறைக்கு செல்ல…
தீபா “நீங்க எல்லாரும் பேசிட்டு இருங்க நான் வந்துட்டேன்” என்று அவர்களை தனியாக இருக்க சொல்லிவிட்டு நாசுக்காக வெளியே வந்து விட்டாள்.
மாதவியிடம் வந்த சிவகாமி அவள் கையைப் பிடித்துக் கொண்டு “ஏன் மாதவி ஒரு மாதிரியாவே இருக்க… மண்டபத்திலேயே கேட்கலாம்னு நினைச்சேன் ஆனா எல்லாரும் இருந்ததால எங்களால் உன்கிட்ட சரியா பேச முடியல” என்றார் கவலையாக.
“நான் ஏன் கவலையாய் இருக்கேன்னு உங்களுக்கு தெரியலையா அம்மா?” என்று கேட்டாள் மாதவி.
அவர் “எனக்கு புரியுது மாதவி என்ன பண்றது அந்த சங்கவி இன்னும் மாறவே இல்ல. அவ மாறிட்டான்னு தான் நான் முதல்ல நினைச்சேன் ஆனா எப்போ நிலானி வயித்துல வளர அந்த பிஞ்சு குழந்தையை கலைச்சிடுவேன்னு சொன்னாளோ, இனிமேலும் அவகிட்ட பேசி பிரயோஜனம் இல்லை என்று தான் அவகிட்ட இனிமேல் சுத்தமா பேசி வச்சுக்க கூடாதுன்னு அவள் கேட்ட எல்லாத்தையும் நாங்க எழுதி கொடுத்துட்டோம்” என்றார்.
“எல்லாத்தையும் எழுதி வச்சிட்டு அப்புறம் அப்பாவும் நீங்களும் என்ன பண்ணுவீங்க?” என்று கேட்டாள் மாதவி.
“எங்களுக்குத்தான் என் மகனும் மகளும் இருக்காங்களே இந்த ரெண்டு சொத்து எங்களுக்கு போதும் வேற எதுவும் வேண்டாம். ஏன் நீங்க ரெண்டு பேரும் என்னையும் உன் அப்பாவையும் பார்த்துக்க மாட்டீங்களா?” என்று அவள் கன்னம் கிள்ளி கேட்டார் சிவகாமி.
மாதவி அவரைப் பார்த்து சிரித்து “அதை எல்லாம் நானும் என் அண்ணாவும் உங்க ரெண்டு பேரையும் நல்லா பாத்துக்குவோம்” என்றாள்.
அதற்குள் விக்கியும் நிலானியும் அவர்கள் அறைக்கு வந்துவிட… நிலானியை பார்த்ததும் மாதவி முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு திரும்பி அமர்ந்து கொண்டாள்.
தன்னைப் பார்த்ததும் மாதவி கோபமாக இருப்பதை உணர்ந்த நிலானி அவள் அருகில் வந்து அவள் முகத்தை பிடித்து தன்னை பார்க்குமாறு திருப்பி “சாரிடி நான் வேணும்னு ஒன்னும் உன்கிட்ட இருந்து மறைக்கல நானே இதை எதிர்பார்க்கல… உன்கிட்ட சொல்லலாம் என்று தான் இருந்தேன். ஆனால் இந்த சங்கவி பண்ணின கலவரத்துல நான் சுத்தமா மறந்துட்டேன்” என்றாள் நிலானி.
சங்கவியின் பெயரைச் சொன்னதும் மாதவி நிலானியின் கையைப் பிடித்துக் கொண்டு… “உனக்கு ரொம்ப கஷ்டமா இருந்திருக்கும் இல்ல சங்கவி அக்கா அப்படி உன்னிடம் நடந்து கொண்டதுக்கு” என்றாள் மாதவி.
“கஷ்டமா இல்ல ரொம்ப பயமா தான் இருந்துச்சு. என்ன பண்ணினாலும் அவங்க மாற மாட்டாங்க இந்த ஒரு சம்பவத்திலேயே எங்க எல்லாருக்கும் நல்லா புரிஞ்சுடுச்சு. ஆனா என்ன அவ இருக்கிற வீட்டில இருக்கிறவங்களுக்கு தான் அவளை பத்தி எதுவும் தெரியல. அங்கே இருந்துட்டு இவ அவங்களுக்கெல்லாம் என்னென்ன குடைச்சல் கொடுக்க போறாளோ தெரியல அதுக்குள்ள எப்படியும் அவளை பத்தி எல்லார்கிட்டயும் சொல்லிடனும்” என்றாள் நிலானி.
விக்கி ஆம் என்று தலையாட்டியவன் “அதை நான் பார்த்துக்கிறேன், ஆதிக்கும் துர்காவுக்கும் விஷயத்தை சீக்கிரமா சொல்லிடனும்” என்றான்.
பிறகு அனைவரும் பேசிக்கொண்டு இருக்க அங்கு போதியின் பாட்டி வந்தார். கையில் ஒரு பெட்டியுடன் வந்தவர் அவர்களைப் பார்த்து “உள்ளே வரலாமா?” என்றார் வாசலில் நின்று கொண்டு.
“ஐயோ என்னம்மா இது உங்க வீடு இது நீங்க வரதுக்கு அனுமதி கேட்கணுமா?” என்றார் சிவகாமி எழுந்து வாசலுக்கு வந்து.
சிரித்தபடியே உள்ளே வந்த போதியின் பாட்டி “என் பேத்தி என்ன சொல்றா?” என்று கேட்டார்.
நிலானி சிரித்தபடி “நாங்க சும்மா தான் பேசிக்கிட்டு இருந்தோம் பாட்டி” என்றாள் நிலானி.
சரி என்று தலையாட்டியவர் மாதவியிடம் வந்து தன் கையில் இருந்த பெட்டியை நீட்டி “இத நான் உனக்குத்தானே பரிசா கொடுத்தேன் ஞாபகம் இருக்கா? இல்லையா?” என்றார்.
“ஐயோ பாட்டி இதை நான் எப்படி மறப்பேன் நான் தானே இதை கொண்டு போய் அவர் ரூம்லயே வச்சேன்” என்றாள் மாதவி.
“சரி இன்னைக்கு இந்த நகை எல்லாம் போட்டுக்கோ எதையும் வேண்டாம்னு ஒதுக்காம இதுல இருக்குற எல்லா நகையும் ரெடி ஆகி போட்டுட்டு வரணும்” என்றார்.
“ஐயோ… பாட்டி இத்தனை நகை எல்லாம் எதுக்கு ஏதாவது ஒன்னு மட்டும் கொடுங்க அது மட்டும் நான் போட்டுக்கிறேன்” என்றாள்.
“இங்க பாரு இது என்னோட பரம்பரை நகை… இதை நான் என் மருமகளுக்கு கூட கொடுக்காமல் இவ்வளவு வருஷமா பத்திரமா வெச்சி இருந்து என் பேரனோட பொண்டாட்டிக்கு தான் கொடுக்கனும்னு கொடுக்கிறேன் நீ என்னடான்னா வேண்டாம்னு எப்ப பார்த்தாலும் தட்டி கழிச்சிட்டு இருக்க” என்று அவர் கோபமாக பேச…
“அச்சு பாட்டி ஃபீல் பண்ணாதீங்க குடுங்க நான் எல்லா நகையும் போட்டுக்கிறேன்” என்று பெட்டியை வாங்கிக் கொள்ள…
“அப்படி வாடி பைத்தியம் வழிக்கு” என்று அவள் கன்னம் தொட்டு கிள்ளியவர் நிலானியிடம் “எம் பேத்திய நல்ல அழகா அலங்காரம் பண்ணி இந்த நகை எல்லாம் போட்டு அழைச்சிட்டு வாங்க நான் வெளியே வெயிட் பண்றேன்” என்று சொல்லிவிட்டு செல்ல…
விக்கியும் வேதாச்சலமும் வெளியே சென்று விட… சிவகாமி மகளை பார்த்து சந்தோசமாக சிரித்து அவள் கன்னத்தில் முத்தம் வைத்தவர் “மாப்பிள்ளை மனசுக் கோணாம நடந்துக்கோ… சரியா?” என்று சொல்லிவிட்டு அவர் வெளியே சென்றுவிட… நிலானியும் மாதவியும் மட்டுமே அந்த அறையில் இருந்தனர்.
“மாதவி, நிலா நீ பார்க்க அத்தை சொல்லிட்டு போனதெல்லாம் ஞாபகம் வெச்சுக்கோ…. உன் புருஷன் இன்னிக்கு என்ன சொன்னாலும் என்ன செஞ்சாலும் சரி சரின்னு போயிடனும்” என்று அவள் இரட்டை அர்த்தத்தில் சொல்லி கிண்டல் செய்ய…
“ஐயோ நிலானி நீ வேற ஏன் இப்படி பேசுற” என்று வெட்கத்தில் தன் முகத்தை மாதவி மூடிக்கொள்ள…
“என்கிட்ட வெட்கப்பட்டு என்ன பிரயோஜனம் போய் உன் மாப்பிள்ளை முன்னாடி இப்படி வெட்கப்பட்டு நிக்காத…” என்று சிரித்தாள் நிலானி.
“ச்சீ…. போடி…” என்று மாதவி வெட்கப்பட…
“போதும்டி ரொம்ப வெட்கப்படாத உன் புருஷனுக்கும் கொஞ்சம் மிச்சம் வை… நிலானி சரிப்போ சீக்கிரம் போய் குளிச்சிட்டு வா நேரம் ஆயிடும் அப்புறம் எதுவும் சொல்லப் போறாங்க” என்றவள் மாதவியை பாத்ரூமிற்குள் தள்ளி கதவடைத்தாள்.
குளித்துவிட்டு பாவாடையும் பிளவுசும் மட்டும் கட்டிக்கொண்டு மேலே ஒரு துண்டைப் போர்த்திவிட்டு பாத்ரூமில் இருந்து வெளியே வந்தால் மாதவி. அவள் மேலிருந்த துண்டை எடுத்து விட்ட நிலானி “இந்தா சீக்கிரம் இந்த புடவையை கட்டிட்டு இதெல்லாம் நகை எல்லாம் உனக்கு போட்டு விடுறேன்” என்று நிலானி அவள் முன்பு புடவையை நீட்ட…
“ஐயோ நிலானி எனக்கு புடவை கட்ட தெரியாது இப்படி திடீர்னு என்கிட்ட புடவைய கொடுத்து கட்ட சொன்னா நான் என்ன பண்ணுவேன்” என்றாள் மாதவி.
“ம்ம்ம்…. போய் உன் புருஷன் கிட்ட புடவை கட்டிக்கோ… இன்னும் நானே வந்து உனக்கு புடவை கட்டி விட்டுட்டு இருப்பேனாடி… அக்கா நீயே கட்டிப்பழகு நான் சொல்லி தரேன் நீ கட்டு” என்றாள் நிலானி.
சரி என தலையாட்டிய மாதவி நிலானி சொல்லச் சொல்ல புடவையை கட்ட ஆரம்பித்தாள். அவள் புடவை கட்டி முடிக்கவும் அவளை பார்த்த நிலானிக்கு அவள் அழகை பார்த்து சற்று பொறாமையாகத் தான் இருந்தது.
“சும்மா சொல்லக்கூடாதுடி உன் புருஷன் மட்டும் இந்த சேலையில உன்ன பார்த்தான் அவ்வளவுதான் இன்னிக்கு நீ…” என்று நிலானி சிரிக்க… “ஏய் ச்சீ…போடி” என்று மாதவி வெட்கப்பட…
“ஐயோ உன்னை இப்படி இந்த சேலையை கட்டிக்கிட்டு வெட்கப்பட்டு நிற்கிறதைப் பார்க்கிறப்ப எனக்கு ஒரு மாதிரியா இருக்கு. உன் புருஷன் என்ன பாடுபட போறானோ தெரியல” என்று சொல்லிக் கொண்டே அவளை அழகாக அலங்காரம் செய்து போதி பாட்டி கொடுத்த நகைகளை எல்லாம் மாதவிக்கு போட்டுவிட்டு அவளை அழகு பார்த்த நிலானி மாதவியை அழைத்துக்கொண்டு ஹாலிற்கு வர…
ஹாலில் அமர்ந்திருந்து பேசிக் கொண்டு இருந்த அனைவரும் மாதவி ரெடியாகி வந்திருப்பதை பார்த்து அப்படியே அவள் அழகை பார்த்து உறைந்து போய் நின்றனர். தன் அறையிலிருந்து அப்போதுதான் வெளியே வந்த போதியும் மாதவியின் அழகில் மயங்கி அப்படியே நின்று விட்டான்.
போதி மாதவியை பார்த்து அப்படியே ஸ்தம்பித்து போய் நின்றதை அருகில் நின்று பார்த்த நிலானி மாதவியின் காதில் வந்து “நான் சொன்னேன் இல்ல… உன் புருஷன் மட்டும் உன்னை இப்படி பார்த்தா அப்படியே கிளீன் போல்ட் ஆகிடுவாருன்னு பாத்தியா… நான் சொன்ன மாதிரியே எப்படி ஷாக் ஆகி நிக்கிறார்” என்று மாதவியின் தோளை இடிக்க…
“ஏய் எல்லாரும் இருக்காங்க கொஞ்ச நேரம் சும்மா இரு நிலானி” என்று மாதவி அங்கே நிற்க கூச்சப்பட்டு கொண்டு நெளிந்தவாறு கூற..
ஹாலில் அமர்ந்து இருந்த ரதியின் அம்மா மாதவியின் அழகை பார்த்து பொறாமைப்பட்டவர் அவள் போட்டிருந்த நகைகளை எல்லாம் பார்த்தவர் “இந்த நகை எல்லாம் என் பொண்ணுக்கு வந்து சேர வேண்டியது ஆனால் எங்கிருந்தோ வந்தவ என் மருமகனை மயக்கி கைக்குள்ள போட்டுக்கிட்டு எல்லாத்தையும் வாரி சுருட்டிக்கிட்டா” என்று பொறாமையில் கூற…
அவர் பேசியதை கேட்ட போதியின் பாட்டி சரளா “விஜயா!” என்று சத்தம் இட…
“ஆமா நான் என் மனசுல பட்டதை சொன்னா உடனே என்னை மிரட்டி வாயை அடைச்சிடுங்க. என் மகள் போதியை கல்யாணம் பண்ணிக்க வேண்டியது. இன்னைக்கு இவ கல்யாணம் பண்ணிக்கிட்டு என் மகள் இருக்கிற இடத்தில் வந்து நிற்கிறாள். அதை பார்த்தா எனக்கு கடுப்பாகுமா ஆகாதா நான் இனிமேல் இந்த பக்கமே வரமாட்டேன்” என்று சொல்லிவிட்டு கோபமாக எழுந்து அவர் வெளியே செல்ல… விஜயா உடன் சேர்ந்து அவர் கணவரும் சென்றுவிட… ரதிதான் சங்கடமாக அங்கே அமர்ந்து இருந்தாள்.
ரதி ஏன் அப்படி அமர்ந்திருப்பதை பார்த்த மாதவி அவளிடம் சென்று அமர்ந்தவள் “நீ ஏன் வருத்தப்படுற ரதி. அவங்க மகளுக்கு கிடைக்க வேண்டிய வாழ்க்கை கிடைக்கலையேன்னு உன் அம்மா கோபப்படுறதும் நியாயம் தானே… அதுக்காக நீ வருத்தப்படாத உனக்கு என் மேல எதுவும் வருத்தம் இருந்தால் சொல்லு… நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன். உன் மாமாவை உன் கிட்ட இருந்து நான் பிரிச்சதுக்காக” என்றாள் மாதவி ஆத்மார்த்தமாக.
“ஐயோ மாதவி எனக்கு அப்படியெல்லாம் எந்த வருத்தமும் கிடையாது. சொல்லப்போனால் என் மாமாவுக்கு பிடிச்ச பொண்ணு அவர் கல்யாணம் பண்ணிக்கிட்டார்ன்னு எனக்கு சந்தோசம் தான். என் அம்மா தான் புரிஞ்சுக்காம அந்த காலம் மாதிரியே இன்னமும் பேசிக்கிட்டு இருக்காங்க விடு நான் கொஞ்ச நேரத்துல சரியாகிக்குவேன்” என்று ரதி மாதவியிடம் சகஜமாக பேச…
மாதவி தன் வீட்டில் இருப்பவர்களும் போகக்கூடாது என்னும் வழியில் இறங்கி சென்று ரதியிடம் பேசுவதை பார்த்த சரளாவிற்கு தன் பேரனின் வாழ்க்கை நல்ல முறையில் அமையும் என்று மனம் நிறைந்து சந்தோஷப்பட்டார்.
“சரி வாங்க எல்லாரும் சாப்பிட போகலாம்” என்று சரளா அனைவரையும் சாப்பிட அழைக்க… ரதி எழுந்து மாதவியின் கையை பிடித்து சாப்பிட அழைத்துச் செல்ல… தன் புது மனைவியை விழி வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த போதியோ மாதவி தன்னை கண்டு கொள்ளாமல் தன்னை தாண்டி செல்வதை பார்த்து கோபத்தோடு “இப்படியும் இன்னிக்கி நைட்டு என் ரூமுக்கு தானடி நீ வந்தாகணும் அங்கே வா உன்ன வச்சிக்கிறேன்” என்று மனதில் புலம்பியவன் அவர்கள் பின்னால் சாப்பிட சென்றான்.
அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் ஆதி மற்றும் துர்கா அங்கிருந்து கிளம்ப, மற்றவர்கள் மணமக்களை வாழ்த்தி விடைபெற்றனர்.
