EPI 257
நீங்கள் கேட்டபடி, கதையில் உள்ள ‘கார்த்திக்’ என்ற பெயரை ‘ஆதி’ என்றும், ‘லட்சுமி’ என்ற பெயரை ‘துர்கா’ என்றும் மாற்றியும், மற்ற பெயர்களை மாற்றாமல் பிழைகளைத் திருத்தியும் கதை கீழே கொடுக்கப்பட்டுள்ளது
மது கர்ப்பமான விஷயம் தெரிந்ததால் இருந்து பவன் அவளை விட்டு எங்கும் செல்வதே இல்லை. ஆபீஸிலும் சரி, அவள் வீட்டிற்கு கிளம்பும்போதும் சரி, அவளை அவனே கொண்டு போய் நிலானியின் வீட்டில் விட்டுவிட்டுத் தான் தன் வீட்டிற்கு கிளம்புவான்.
இன்றும் அப்படித்தான் மதுவை அவள் வீட்டிற்கு அழைத்து வர… நிலானிக்கு 5 மாதம் ஆகிவிட்டதால் வாசலில் சிவகாமியுடன் பேசியபடி வாக்கிங் போய்க்கொண்டு இருந்த நிலானி, அவர்கள் இருவரும் வருவதைப் பார்த்துவிட்டு, “என்ன அக்கா! இன்னைக்கும் உன் ஆளு உன்கூடவே பள்ளி மாதிரி ஒட்டிக்கிட்டு வராரு. நாளைக்கு காலையில் உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம், அது ஞாபகம் இருக்கா இல்லையா?” என்று சிரித்தாள்.
நிலானி தன்னை கிண்டல் செய்வதைக் கேட்டு ஒருபக்கம் வெட்கம் வந்தாலும், மறுபக்கம் பவன் மீது கோபமாக வந்தது அவளுக்கு. “டேய்! நானே வீட்டுக்கு போகிறேன், நாளைக்கு கல்யாணத்தை வெச்சுட்டு இன்னிக்கு என்கூட என் வீடு வரைக்கும் வராதேன்னு சொன்னேனே, கேட்டியா? இப்போ பாரு எனக்கு அப்புறம் பிறந்தவள் எல்லாம் என்னை கிண்டல் செய்யுது!” என்றால் பல்லைக் கடித்துக்கொண்டு அவனுக்கு மட்டும் கேட்கும்படி.
“என்ன அங்கங்கே முணுமுணுப்பு? நீ அவரைத் திட்டிட்டு இருக்கியா?” என்று சொல்லி பவனைப் பார்த்து,
“என்ன மாமா! என் அக்கா தான் உங்களைக் கழுவி ஊத்துவாளே, அது தெரிஞ்சு இப்டி வீடு வரைக்கும் வந்து அவகிட்டே திட்டு வாங்கணும்னு நினைக்கிறீங்களா? நீங்களே இப்படி வான்டடாக வந்து வாங்கி கட்டிக்கிறதுக்கு பேசாம எஸ்கேப் ஆகியிருக்கலாமே!” என்றால்.
“நிலா! எஸ்கேப் ஆகணும்னு நினைச்சிருந்தா உன் அக்காவை முதன்முறையாக எங்க ஆபீஸில் வெச்சு பார்க்கும்போதே எஸ்கேப் ஆகியிருக்கணும். நாளைக்கு காலையில் எங்க கல்யாணம், அப்புறம் எங்கே இருந்து எஸ்கேப் ஆகுறது? அதான் இப்போதிருந்தே உன் அக்காகிட்ட திட்டு வாங்கி பழகிக்கிறேன்,” என்று மதுவைப் பார்த்து சிரித்தபடி கூறினான்.
“பொண்டாட்டி கிட்டே திட்டு வாங்காத எந்த புருஷனும் இந்த உலகத்துல இல்லை. அது அந்த கடவுளாகவே இருந்தாலும் அவருக்கும் இதே நிலைமை தான்,” என்றாள் சிவகாமி.
அவர் சொல்வதைக் கேட்டு உண்மை தான் என்பது போல தலை ஆட்டிய பவன், “நிலா, இப்போ உனக்கு எத்தனை மாசம்?” என்றான் ஆர்வமாக.
“அஞ்சு மாசம் முடியப் போகுது,” என்றாள்.
“உன்னோட முதல் மாசம் கர்ப்பமாயிருக்க அப்போ உனக்கு உடம்பு எப்படி இருந்தது? எதுவும் வாந்தி, மயக்கம் இதுமாதிரி வரும்னு சொல்லுவாங்களே, அப்படி எதுவும் வந்திருக்கா உனக்கு?” என்றான்.
“டேய்! இதையெல்லாம் ஏன்டா அவகிட்டே கேட்டுட்டு இருக்க… கொஞ்ச நேரம் உன் ஆர்வக்கோளாறை அடக்கி வாசிக்கிறியா?” என்று அவன் காதைக் கடித்தாள் மது.
அதைக் கண்டுகொள்ளாமல் நிலானியை ஆர்வமாகப் பார்த்தான் பவன்.
இவர்கள் இருவரும் அடிக்கடி ஏதோ ரகசியம் பேசுவதைப் பார்த்து நிலானியும், சிவகாமியும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.
நிலானி பவனைப் பார்த்து, “மாமா! எனக்கு முதல் ஒரு 3 மாசம் வரை தொடர்ந்து தலைசுற்றல், வாந்தி, மயக்கம்னு இருந்தது. ஆனால் நாள் ஆக ஆக கம்மியாகிருச்சு. இப்போ கொஞ்சம் பரவாயில்லை,” என்றாள்.
“சரிம்மா, நான் சும்மா தெரிஞ்சுக்கலாம்னு கேட்டேன்,” என்று ஓரப்பார்வை பார்த்தான் மதுவை.
பிறகு அனைவரிடமும் சொல்லிக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினான் கல்யாண மாப்பிள்ளை. இவர்களின் கல்யாண ஏற்பாடுகளை எல்லாம் ஷியாம் கவனித்துக் கொள்வதாக கூறிவிட… அதனால் மாப்பிள்ளை ஜாலியாக இப்படி சுத்திக்கொண்டு எந்த வேலையும் இல்லாமல் ஹாயாக இருக்கிறான்.
இன்று இரவு 11 மணி போல ஆதி அவன் வீடு தோட்டத்தில் உலவிக்கொண்டு இருந்தான். அவன் வருவதற்கு உள்ளாகவே இன்று துர்கா தூங்கி இருந்தாள். ஆவலுடன் பேசிக்கொண்டு இருந்தால் நேரம் போவது தெரியாது, அதே போல் சற்று நிம்மதியாக இருக்கும். ஆனால் இன்று அவளும் தூங்கிவிடவே மனம் ஒரு மாதிரி பாரமாக இருக்க சற்று வெளிக்காற்று வாங்கலாம் என்று கார்டனில் உலாத்திக்கொண்டு இருக்கிறான்.
ஹாலில் தன் கண்ணாடியை மறந்து வைத்துவிட்டுச் சென்ற வெங்கடாச்சலம், வெளியில் வாசலில் விளக்கு எரிவதைப் பார்த்துவிட்டு வெளியே வந்தார். அங்கே ஆதி தோட்டத்தில் போட்டிருந்த பெஞ்ச்சில் அமர்ந்து தரையைப் பார்த்துக்கொண்டு வெறித்தபடி அமர்ந்து இருந்தான்.
“ஆதி! ஏன்ப்பா இங்கே உக்காந்திருக்க… அதுவும் தனியா? தூங்கலையா?” என்று கேட்டபடி அவன் அருகில் சென்றார் வெங்கடாச்சலம்.
அவர் குரல் கேட்டதும் நிமிர்ந்து பார்த்தவன், “இல்லப்பா, தூக்கம் வரலை,” என்றான் சற்று சோர்வாக.
அவன் முகத்தை அப்படிப் பார்த்ததும் தன் மகன் ஏதோ குழப்பத்தில் இருக்கிறான் என்று புரிந்துகொண்டவர், அவன் அருகில் வந்து அவரும் அமர்ந்து கொண்டார்.
“அப்பா, நீங்க தூங்கலையா? நான் சும்மா அப்படியே காத்து வாங்கலாம்னு வந்தேன்,” என்றான்.
“பரவாயில்லை ஆதி. என் மகனோடு சேர்ந்து நானும் காத்து வாங்குறேனே! நாம இப்படி ஒண்ணா உட்கார்ந்து பேசி எவ்வளவு நாள் ஆச்சு?” என்றார்.
“ஆமாமா! என்னை விட்டுட்டு அப்பாவும் பிள்ளையும் அப்படி என்ன பேசுறீங்க? நானும் என் பிள்ளையும் அதைக் கேட்கத் தான் வந்திருக்கோம்,” என்றார் விசாலாட்சி. அவருடன் இவர்கள் இருவரும் கார்டனில் பேசுவதைத் தன் ரூம் பால்கனியில் இருந்து பார்த்த கதிரும், விசாலாட்சியை அழைத்துக்கொண்டு அங்கு வந்து இருந்தான்.
அவர்கள் இருவரையும் பார்த்து சிரித்த ஆதியும், வெங்கடாச்சலமும், “இவங்க ரெண்டு பேரும் நம்ம ரெண்டு பேரையும் கொஞ்ச நேரம் தனியா இருக்க விட மாட்டாங்க” என்று சொல்லி வெங்கடாச்சலம் சிரித்தார்.
ஆதியும் ‘ஆமாம்’ என்பது போல தலையையே ஆட்டியவன் எழுந்து அவன் அம்மா அமர வெங்கடாச்சலத்தின் அருகில் இடம் கொடுத்தவன், அவர்கள் இருவருக்கும் கீழே புல் தரையில் அமர… ஆதியும் வெங்கடாச்சலத்தின் முன்னே புல் தரையில் அமர்ந்தான்.
“இப்போ சொல்லு ஆதி. என்ன பிரச்சனை? ஏன் நீ ஏதோ போல இருந்த?” என்றார் வெங்கடாச்சலம்.
ஆதி அவர் கேட்டதும் என்ன சொல்வது, எப்படி சொல்வது என்று தெரியாமல் அவரைப் பார்த்தான்.
“அப்பா! அண்ணா என்னைக்கு அவர் மனசுல இருக்க பிரச்னையை நம்ம கிட்டே ஷேர் பண்ணி இருக்காரு. நான் சொல்றேன் என்ன விபரம்னு,” என்றான் கதிர்.
உடனே ஆதி, “டேய்! சும்மா இரு. இந்த நேரத்துல போய் இதை எல்லாம் அம்மா, அப்பா கிட்டே சொல்லிட்டு இருந்தா அப்புறம் அவங்களும் நம்மை மாதிரி தூக்கம் வராம கஷ்டப்படுவாங்க. நீ கொஞ்சம் அமைதியா இரு. நான் பார்த்துக்கறேன்,” என்றவன் திரும்பி,
“அப்பா, எந்தப் பிரச்சனையும் இல்லை. இவன் ஏதோ உளறுறான். நீங்க அதையெல்லாம் கண்டுக்காதீங்க,” என்றான்.
“ஆதி! நானும், உன் அம்மாவும் இதுவரை பார்க்காத பிரச்னைகளா? நீ சும்மா சொல்லுப்பா,” என்றார் வெங்கடாச்சலம்.
முதலில் சற்று தயங்கியவன், எப்படியும் ஒரு நாள் இல்லை ஒரு நாள் தன் பெற்றோருக்குத் தெரிய வரப் போகிற விஷயம் தானே, அதை ஏன் இன்றே சொல்லிவிடக் கூடாது என்று முடிவெடுத்தவனாய் ஆதி நிமிர்ந்து வெங்கடாச்சலத்தைப் பார்த்தான்.
வெங்கடாச்சலமும், விசாலாட்சியும் ஆதியின் முகத்தை ஆர்வமாகப் பார்க்க… சங்கவி, அபி, துரை, கனகாவைக் கடத்தி வைத்துக்கொண்டு துர்காவையும், தன்னையும் ஒரு டெண்டருக்காக பிளாக் மெயில் செய்ததையும், அவர்களை மீட்கவும் மரகதமும், அபியும் நம் வீட்டை விட்டு வெளியேறுவதற்குமாக டெண்டருக்கான தொகையை அப்போதே கொடுத்து துரை, கனகாவை அவர்களிடம் இருந்து மீட்டது பற்றியும்.
அடுத்து அபிக்கும், மரகதத்திற்கும் அவர்கள் எதிர்பார்ப்பதை தான் செய்து தரப் போவதாக ஆதி அவளுக்கு வாக்குக் கொடுத்து இருப்பதையும் கூறினான்.
இதற்கு எல்லாம் முழு முக்கிய காரணமும் சங்கவி தான். அவள் தான் நம் குடும்பத்தைப் பிரிக்கவும், நம்மிடம் இருக்கும் சொத்துக்களை எல்லாம் நம்மிடம் இருந்து பறிக்கவும் அபி மூலம் பிளான் செய்கிறாள்.
அவள் பேச்சைக் கேட்டு தான் அபி இப்படி ஒரு காரியத்தைச் செய்திருக்கிறாள் என்று தன் பெற்றோரிடம் மறைத்து இருந்த விஷயத்தை முழுவதுமாக கூறி முடித்தான்.
அதை கேட்டதும் தன் தம்பியையும், கனகாவையும் கடத்த நினைத்த அபி, சங்கவி இருவரின் மீதும் விசாலாட்சிக்கு கோபம் வந்தது.
“அவளால் எப்போதும் யாருக்கேனும் ஏதாவது பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. இவளை எப்படிச் சமளிப்பது என்று தெரியாமல் ஏற்கனவே அனைவரும் குழம்பி இருக்க… இருக்கும் பிரச்சனை போதாது என்று புதிது புதிதாக ஏதாவது செய்து இருப்பவர்கள் நிம்மதியைக் கெடுப்பதே இந்த சங்கவிக்கு வேலையாகிப் போனது,” என்று புலம்பினார்.
“ஏன்ப்பா ஆதி! இந்த சங்கவி திருந்தவே முடியாதா? இவ இப்படியே பண்ணிட்டு இருந்தா எல்லாரும் எப்படி நிம்மதியா இருக்குறது? இவளால யாருக்கும் நிம்மதியே இருக்காது. நம்ம செண்பகம் முகத்துக்காக இவளை சகிச்சுக்க வேண்டி இருக்கு,” என்று அலுத்துக்கொண்டார் விசாலாட்சி.
“அம்மா! அவள் திருந்தியிருப்பான்னு நம்ம ஒரு வாய்ப்பு ஆரம்பத்துல கொடுத்தோம். ஆனா அவள் எப்பவும் இப்படித்தான், மாறவே மாட்டான்னு புரிஞ்சிருச்சு. இனி அவளை எப்படி சமளிக்கிறதுனு மட்டும் தான் யோசிக்கணும். அவளால் எந்தப் பிரச்சனையும் வரக்கூடாது. நம்ம குடும்பத்துல யாருக்கும் எதுவும் ஆகிடக் கூடாது. அவளை கவனமா எல்லாரும் பார்த்துக்க்கணும். அப்போதான் அவ என்னென்ன செய்றா, யார் கூட எல்லாம் பேசுறா, எங்கே எல்லாம் போறான்னு நமக்குத் தெரியணும். அப்போதான் அவளோட அடுத்த மூவ் நமக்குத் தெரியும். அந்த சங்கவியை மடக்கிப் பிடிச்சு அவளைப் பற்றி செண்பகம் அத்தைகிட்டே சொல்லி புரிய வைக்கணும். அவங்க இன்னமும் சங்கவி முன்ன மாதிரி இல்லை, திருந்திட்டான்னு தான் நினைச்சுட்டு இருக்காங்க. அவங்க கிட்டே பக்குவமா எடுத்துச் சொல்லி நாம எல்லாரும் செண்பகம் அத்தைக்காக இங்கே இருக்கோம்னு அவங்களுக்கு புரிய வைக்கணும்,” என்றான் ஆதி.
“ஆதி! நீ சொல்றதும் சரி தான்ப்பா. முதல்ல அபி என்ன கண்டிஷன்ல இந்த வீட்டை விட்டு போறேன்னு சொன்னாலோ அதுக்கு நீ என்னப்பா செய்யப் போற?” என்றார் வெங்கடாச்சலம்.
“அப்பா! ஏற்கனவே நாம அவளுக்கு ஒரு பிசினஸ் ஸ்டார்ட் பண்ண நமக்கு வரவேண்டிய டெண்டரை தெரிஞ்சே அவளுக்குக் கொடுத்துட்டோம். அவ அந்த டெண்டரை எடுத்தாலும் அதை சரியா ஹேண்டில் பண்ணவோ, அதை எடுத்து ஒரு நிறுவனமா நடத்தவோ அவகிட்டே ஆள் பலம் கிடையாது.
அபி கண்ணடிப்பா. அவளுக்கு வந்த ஆர்டர்களை எல்லாம் வேற ஒருத்தவங்க கிட்டே கொடுத்து, கம்மி விலைக்கு செஞ்சு வாங்கித் தரம் இல்லாததா கொடுப்பா. அதனால அவகிட்டே பேசி அந்த டெண்டரை அவ பேரில் நாமளே செய்து தரோம்னு பேசலாம்.
அதே போல அந்த டெண்டரை செஞ்சு தந்து அவளுக்கு நல்ல ரெப்யூடேஷன் கிடைக்கிற அளவுக்கு நாம செய்து கொடுக்க அவகிட்டே நான் ஒரு அக்ரீமெண்ட் போடப் போறேன்,” என்றான் ஆதி.
உடனே கதிர், “அண்ணா! அவகூட எதுக்கு அக்ரீமெண்ட் சைன் பண்ணனும்? அப்படி என்ன அக்ரீமெண்ட் அவகிட்டே போடப் போறீங்க?” என்றான் ஆதியிடம்.
“கதிர்! சொல்றேன். நான் பேசுறதைக் கேட்டு நீ டென்ஷன் ஆக கூடாது, சரியா? இப்போ நம்ம கம்பெனி ஷேர்ஸ் எல்லாமே அப்பாவோட வாரிசான உனக்கும், எனக்கும் தான் வரும். ஆனா அபியும் அப்பாவோட வாரிசுங்குறதுனால அவள் அப்பாவோட 60ஆம் கல்யாணத்து அப்போ அப்பாகிட்டே அவரோட ஷேர்ஸ் மொத்தத்தையும் அவ பேர்ல எழுதி வைக்க சொல்லி கேட்குறதுதான் அவங்களோட பிளானே,” என்றான்.
“அண்ணா! அது எப்படி அவ அப்பாவோட மொத்த ஷேரையும் கேட்பா? அப்படி பார்த்தா அப்பாவுக்கு சேர வேண்டிய 50% ஷேர்ஸ் அவ பேருக்கு போயிடும். அப்படி அவளுக்கு அப்பா ஷேர்ஸ் போயிடுச்சுன்னா… அவ தானே நம்ம கம்பெனியோட CEO ஆகிருவா?” என்றான் ஆற்றாமையோடு.
“அதனால தான் நான் என்ன செய்றதுனு யோசிச்சிட்டு இருக்கேன். அபிக்கு அப்பாவோட ஷேர்ஸ் கொடுக்குறதுல எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனா அவகிட்டே இந்தப் பொறுப்பைக் கொடுத்து, அதனால எதும் நம்ம இத்தனை வருஷ உழைப்பில் உருவான நம்ம நிறுவனத்துக்கு எதும் பாதிப்பு வந்தால், வேலை பாக்குறவங்களுக்கு எதும் பிரச்சனை வந்தா என்ன செய்றது?” என்றான் ஆதி.
“ஆதி! இப்போ நம்ம கம்பெனியோட ஷேர்ஸ் என் பேர்லயும், உன் அம்மா பேர்லயும் தானே இருக்கு? அப்போ நான் சொல்றதை முதல்ல நீங்க ரெண்டு பேரும் கேளுங்க. அதுக்கு பிறகு நாம என்ன செய்யலாம்னு முடிவு பண்ணிக்கலாம்,” என்றார் வெங்கடாச்சலம்.
“என்னப்பா முடிவு எடுத்திருக்கீங்க?” என்றான் ஆதி ஆர்வமாக. அவனைப் போலவே கதிரும் ஆர்வமாகத் தன் தந்தையைப் பார்க்க…
“சொல்றேன்ப்பா…” என்றவர், அவர் யோசித்து வைத்து இருந்த அனைத்தையும் தன் மகன்கள் இருவரிடமும் கூறி முடித்தவர், “இதை எல்லாம் நான் மரகதமும், அபியும் என்னைக்கு இந்த வீட்டுக்கு வந்தார்களோ அப்போவே இந்த விஷயத்தைச் செய்யணும்னு முடிவு செய்து வெச்சிருந்தேன்.
அதைச் செயல் படுத்துவதற்கான நேரம் வந்திருச்சு ஆதி,” என்றவர் தன் மகன்கள் இருவரின் தலையை ஆசையாக வருடிக் கொடுத்து, “அப்பாவோட இந்த முடிவுல உங்க ரெண்டு பேருக்கும் வருத்தம் இல்லையே?” என்றார்.
“இல்லப்பா! நீங்க எந்த முடிவு எடுத்தாலும் அதுக்கு நானும் அண்ணாவும் கட்டுப்பட்டு தான் நடந்துக்குவோம்… இந்த விஷயத்தை நீங்க எங்க கிட்டே சொல்லாம செய்து இருந்தாலும் நாங்க உங்க முடிவுக்கு கட்டுப்பட்டு இருப்போம்,” என்றான் கதிர்.
தன் மனைவியின் அருகில் திரும்பி, “விசாலாட்சி! உனக்கு இந்த முடிவுல…” என்று அவர் கூறி முடிக்கும் முன்.
“நீங்க சொன்னதுக்கு நான் என்னைக்கு மறுத்து இருக்கேன்? உங்க இஷ்டம் எப்படியோ அப்டி செய்யுங்க,” என்றார் விசாலாட்சி.
அவர்கள் இருவரின் இத்தனை வருட அன்பும் அன்னியோன்னியமும் பார்த்துவிட்டு அவர்கள் பிள்ளைகள் இருவரும் சந்தோஷப்பட்டனர்.
