FLING 27
“என்னைத் தவிர்க்கிறாயா அகலிகா? என் மெசேஜிற்குப் பதில் கூட இல்லையா? நீ ரியாவுடன் ஒரே அறையில் இருக்கலாம், ஆனால் உன் மனம் என்னிடம் தான் இருக்கிறது என்று எனக்குத் தெரியும்,” என்று தனக்குள் முணுமுணுத்தவன், மெதுவாகப் படுக்கையை விட்டு எழுந்தான்.
முகேஷ் அசையாமல் தூங்குவதை உறுதி செய்து கொண்டு, பூனை நடையில் கதவைத் திறந்து வெளியே வந்தான்.
அடுத்த அறையில், ரியா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். ஆனால் அகலிகாவிற்குத் தூக்கம் என்பது எட்டாக்கனியாக இருந்தது. தீரனின் அந்த மெசேஜ் அவள் இதயத்தைத் துளைத்தது.
“தூங்கிட்டியா? எனக்கு மூச்சு முட்டுது அகலிகா. நீ இல்லாம இந்த ரூம் எனக்கு நரகமா இருக்கு.”
அவள் பதிலை டைப் செய்தாள்… பின் அழித்தாள். “நானும் உன்னைத் தான் நினைக்கிறேன் தீரன்,” என்று சொல்லத் துடித்த கை, பக்கத்தில் தூங்கும் ரியாவைப் பார்த்ததும் நின்று போனது.
‘முகேஷைப் பற்றிப் பேசும்போது எனக்குள் எவ்வளவு பெரிய குற்ற உணர்ச்சி ஏற்பட்டது? நான் ஒரு துரோகி. முகேஷுக்கும், ரியாவுக்கும் நான் செய்யும் துரோகம் இது. நான் தீரனிடம் பேசக் கூடாது. அவனை மறக்க வேண்டும்,’ என்று போர்வையை இழுத்து மூடிக்கொண்டாள்.
திடீரென்று, அறையின் கதவை தட்டும் சத்தம் கேட்டது. யாரோ கதவைத் திறக்க முயல்வது போல இருக்க.. அதைக் கண்டதும் அகலிகாவின் இதயம் தொண்டைக்கு வந்தது. ‘தீரனா? அவன் இந்த நேரத்திலா? முகேஷ் எழுந்தால் என்னாகும்?’ அவள் பயத்தில் அப்படியே உறைந்து கிடந்தாள்.
சிறிது நேரத்தில் அவளது மொபைல் அதிர்ந்தது.
“கிச்சனுக்கு வா… இப்போவே. இல்லைன்னா நான் உள்ளே வருவேன். ரியா எழுந்தாலும் எனக்குக் கவலையில்லை.” என்று தீரன் மெசேஜ் அனுப்பி இருந்தான்.
தீரனின் இந்த மிரட்டல் அவளை நடுங்க வைத்தது. அவன் சொன்னால் செய்வான் என்று அவளுக்குத் தெரியும். அவன் ஒரு பிடிவாதக்காரன். அவன் ரியாவின் முன்னால் வந்து நின்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அகலிகா மெதுவாகப் போர்வையை விலக்கிவிட்டு எழுந்தாள். ரியா ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை உறுதி செய்து கொண்டு, மிகவும் எச்சரிக்கையாகக் கதவைத் திறந்து ஹாலுக்கு வந்தாள்.
ஹால் இருட்டாக இருந்தது. கிச்சனில் இருந்து ஒரு மெல்லிய நீல நிற வெளிச்சம் மட்டும் வந்து கொண்டிருந்தது. தீரன் முன்னமே அங்கு வந்துவிட்டான் என்று அவளுக்கு தெரிந்தது. அகலிகா கிச்சனுக்குள் நுழைந்தாள்.
அங்கே தீரன், கிச்சன் பிளாட்பார்மில் சாய்ந்து கொண்டு அவளுக்காகக் காத்துக் கொண்டிருந்தான். அவனது கண்கள் இருட்டில் மின்னின. அகலிகா உள்ளே வந்ததும், அவன் முன்னேறி வந்து அவளது கையைப் பற்றி இழுத்தான்.
“ஏன் பதில் அனுப்பல?” அவனது குரல் கரகரப்பாகவும், அதிகாரமாகவும் இருந்தது.
“தீரன்… விடுங்க! முகேஷ் பக்கத்து ரூம்ல இருக்காரு. ரியா எழுந்துட்டா என்ன பண்றது? உங்களுக்குப் பைத்தியமா?” என்று அவள் பதட்டமாக கேட்டாள்.
தீரன் அவளைச் சுவற்றோடு சேர்த்து அணைத்தான். “ஆமாம்… எனக்குப் பைத்தியம் தான். உன் மேல இருக்கிற பைத்தியம். முகேஷ் தூங்கிட்டு இருக்கான். ரியாவும் ஆழ்ந்து தூங்குவா. இப்போ நாம ரெண்டு பேர் மட்டும் தான்,” என்று அவளது கழுத்தில் முகம் புதைத்தான்.
அகலிகா அவனைத் தள்ள முயன்றாள். “வேண்டாம் தீரன்… இது ரொம்ப ரிஸ்க். காலையில சொன்ன ‘Kitchen Adventure’ இதானா? ப்ளீஸ்… என்னை விடுங்க. எனக்குப் பயமா இருக்கு.” என்றாள்.
தீரன் அவளது இடுப்பை இறுகப் பற்றினான். “பயமா? அந்தப் பயம் தான் இந்த ஆட்டத்துக்கே சுவாரஸ்யம் அகலிகா. நீ முகேஷ் கூட கல்யாணத்தைப் பத்திப் பேசும்போது எனக்கு எப்படி இருந்தது தெரியுமா? என் முன்னாடியே அவனைப் பத்திப் பேசுற… அவனைத் தொட விடுற… என்னைக் கண்டுக்காத மாதிரி நடிக்கிற… இதெல்லாம் எதுக்கு?” என்றான் சற்று பொறாமையோடு.
“அவன் என் வருங்கால கணவர் தீரன்! அவன் கூட நான் பேசித் தான் ஆகணும்,” என்று அவள் அழுதாள்.
“இல்லை! நீ எனக்கு மட்டும் தான் சொந்தம். இந்த 20 நாள்ல நீ என்னோடவள் மட்டும் தான். அந்த முகேஷை நீ இப்போ நினைக்கவே கூடாது,” என்று ஆக்ரோஷமாக அவளது இதழ்களைச் சிறை பிடித்தான்.
அவன் கொடுத்த அந்த முத்தம்… அது அவள் மீதிருந்த ஆசையாலோ, காதலாலோ ஆனதல்ல, முழுக்க முழுக்கப் பொறாமையாலும் ஆதிக்கத்தாலும் உருவானது. அகலிகா முதலில் எதிர்த்தாலும், தீரனின் அந்த ஆழமான தீண்டலில் மெல்லத் தன்னை மறந்தாள். அவனது கைகள் அவளது முதுகில் ஊர்ந்து செல்ல, அவளது பயம் மெல்ல இன்பமாக மாறியது.
திடீரென்று, கிச்சனுக்கு வெளியே ஒரு சத்தம் கேட்டது. யாரோ நடந்து வரும் சத்தம்.
அகலிகா தீரனைப் பலமாகத் தள்ளினாள். “யாரோ வராங்க… தீரன்! யாரோ வராங்க!” என்று முணுமுணுத்தாள்.
தீரனும் உஷாரானான். அவன் அவளது வாயைத் தன் கையால் பொத்தினான். இருவரும் கிச்சன் ஐலேண்ட் பின்னால் மறைந்து குனிந்து அமர்ந்தனர்.
வெளியே காலடிச் சத்தம் நெருங்கி வந்தது.
“தீரன்? நீ இங்க இருக்கியா?” – அது ரியாவின் குரல்!
ரியா தூக்கத்தில் எழுந்து தண்ணீர் குடிக்க வந்திருக்கிறாள். அகலிகாவின் இதயம் நின்றது போலிருந்தது. ‘ரியா உள்ளே வந்து லைட்டைப் போட்டால்… நாம் இருவரும் இப்படிப் பிடிபட்டால்… எல்லாமே முடிந்துவிடும்.’
ரியா கிச்சனுக்குள் நுழைந்தாள். அவள் லைட்டைப் போடவில்லை, ஆனால் பிரிட்ஜைத் திறந்து தண்ணீர் பாட்டிலை எடுத்தாள். பிரிட்ஜின் வெளிச்சம் அந்த அறையில் படர்ந்தது.
அகலிகா தீரனின் சட்டையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள். அவளது முகம் அவன் மார்பில் புதைந்திருந்தது. தீரனின் இதயம் வேகமாகத் துடிப்பதை அவளால் உணர முடிந்தது. அவன் ஒரு கையால் அவளை அணைத்தபடி, மற்றொரு கையில் தன் மொபைலை வைத்திருந்தான்.
ரியா தண்ணீர் குடித்துவிட்டு, கிச்சனை விட்டு வெளியேறினாள். அவளது காலடிச் சத்தம் மீண்டும் ரூமுக்குள் செல்வது வரை இருவரும் மூச்சைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தனர்.
கதவு மூடும் சத்தம் கேட்டதும், அகலிகா பெரிய மூச்சு விட்டாள். “தீரன்… போதும். எனக்கு இதயம் நின்னுடும் போல இருக்கு. நான் போறேன்,” என்று எழ முயன்றாள்.
ஆனால் தீரன் அவளை விடவில்லை. “பார்த்தியா? எவ்வளவு திரில்லா இருக்கு? இந்தத் திரில் தான் எனக்கு வேணும். ரியா போயிட்டா… இப்போ யாரும் வர மாட்டாங்க,” என்று அவளை மீண்டும் தன் மடியில் இழுத்துப் போட்டுக் கொண்டான்.
“தீரன்… இது அநியாயம். ரியா பாவம். முகேஷ் பாவம்,” என்று அவள் முணுமுணுத்தாள்.
“பாவம், புண்ணியம் அப்புறம் பார்த்துக்கலாம். இப்போ இந்த நிமிஷம்… நீயும் நானும் மட்டும் தான்,” என்றவன், அவளது காது மடல்களைக் கடித்தான்.
“நாளைக்கு நான் முகேஷையும் ரியாவையும் வெளியே கூட்டிட்டுப் போவேன். ஆனா நீ என் கூடத் தான் இருக்கப் போற. அதுக்கு இப்போவே ஒரு அட்வான்ஸ் வேணும்.” என்று அவள் அணிந்திருந்த டி ஷர்ட்டை கட்டினான்.
அகலிகா அவனது பிடிவாதத்தில் விழுந்தாள். அந்த இருட்டு கிச்சனில், நிலவொளியின் மெல்லிய வெளிச்சத்தில், அவர்களின் காதல் லீலைகள் தொடர்ந்தன.
அவளது உடலின் ஒவ்வொரு அணுவையும் அவன் தன் ஸ்பரிசத்தால் ஆராய்ந்தான். அகலிகா மிரட்டலால் அல்ல, அவனது அந்த அதிரடிக் காதலால் அடிமையாகிக் கிடந்தாள்.
மணி அதிகாலை 4. அகலிகா மெதுவாகத் தன் அறைக்குத் திரும்பினாள். ரியா இன்னும் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தாள். அகலிகா படுக்கையில் விழுந்தாள். அவளது உடல் தீரனின் நினைவுகளில் இன்னும் தகித்துக் கொண்டிருந்தது.
அடுத்த அறையில், தீரன் மீண்டும் முகேஷ் பக்கத்தில் வந்து படுத்துக் கொண்டான். அவன் முகத்தில் ஒரு வெற்றிப் புன்னகை.
அவன் தன் மொபைலை எடுத்து அகலிகாவிற்கு ஒரு கடைசி மெசேஜ் அனுப்பினான்.
“Kitchen Adventure முடிஞ்சது… நாளைக்கு ‘Office Adventure’ இருக்கு. தயாரா இரு மை டியர் பேபி.”
அகலிகா மெசேஜைப் பார்த்தாள். அவள் புன்னகைப்பதா அல்லது அழுவதா என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதி… தீரன் சொன்னது போல, அவன் அவளை அவ்வளவு எளிதில் விடப் போவதில்லை.
விடியப் போகும் அந்த நாள், லண்டனில் இன்னும் பல அதிரடிகளையும், ஆபத்தான திருப்பங்களையும் சுமந்து வரப் போகிறது என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது.
முகேஷின் அன்பு ஒரு பக்கம், தீரனின் ஆக்ரோஷமான காதல் ஒரு பக்கம்… அகலிகா என்ற படகு எந்தக் கரையில் சேரும் என்பது அந்த இறைவனுக்கே வெளிச்சம்.
