Fling – 28
லண்டனின் பனிக்கால இரவு. ஜன்னலுக்கு வெளியே பனி மெல்லிய போர்வை போலப் படர்ந்திருக்க, உள்ளே தீரனின் அப்பார்ட்மெண்டிற்குள் அதைவிடக் குளிர்ந்த ஒரு நிசப்தம் நிலவியது. ஆனால், அந்த நிசப்தத்திற்குள் நான்கு இதயங்கள் வெவ்வேறு தாளங்களில் துடித்துக் கொண்டிருந்தன.
கடந்த ஒரு வாரமாகத் தீரனின் நிலைமை நரகத்தை விடக் கொடூரமாக இருந்தது. முகேஷும், ரியாவும் லண்டன் வந்து இறங்கிய அந்த நிமிடத்திலிருந்து, தீரனுக்கும் அகலிகாவுக்கும் இடையே ஒரு கண்ணுக்குத் தெரியாத இரும்புத் திரை விழுந்துவிட்டது.
இருவருக்கும் ஆஃபீஸிலும் சரி, வீட்டிலும் சரி இருவருக்கும் தனிமை என்பது பெருகும் கூட கிடைக்கவில்லை. அதை பற்றி அகலிகா பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவளுக்கு இந்த இடைவெளி தேவைப் பட்டது முகேஷையும், ரியாவையும் இதற்கு மேலும் ஏமாற்ற அவள் விரும்பவில்லை, முடிந்த வரை தீரனிடம் இருந்து விலகியே இருக்க அவள் நினைத்தாள்.
பகல் முழுவதும் அலுவலகத்தில் அகலிகாவுக்கு வேலை மேல் வேலை கொடுத்து அவளைத் தன் கண்ணெதிரே வைத்திருக்க முயன்றான் தீரன். ஆனால், அங்கே அவள் ஒரு ‘பிசினஸ் அசிஸ்டென்ட்’ மட்டுமே. மாலை வீடு திரும்பினால், நிலைமை இன்னும் மோசம். டைனிங் டேபிளில் முகேஷ் அகலிகாவிற்குப் பக்கத்தில் அமர்ந்து, அவள் தட்டில் உணவைப் பரிமாறுவதும், அவளது கைகளைப் பற்றி ஊர் கதைகள் பேசுவதும் தீரனின் ரத்தக் கொதிப்பை ஏற்றி இருந்தான் .
மறுபுறம் ரியா, தீரனின் தோள் மீது சாய்ந்துகொண்டு, “தீரன், நாம இந்தியா போனதும் நம்ம கல்யாண ஏற்பட உடனடியா செய்யனும்,, அப்பா தான் இதை உங்ககிட்டே சொல்ல சொன்னார், அங்க அன்னம் வெட்டிங் ட்ரெஸ்ஸை அகலிகா தான் செலக்ட் பண்ணணும், ஓகேவா?” என்று சொல்லும்போது, தீரன் கையில் இருந்த ஒயின் கிளாஸை உடைக்கும் அளவுக்கு ஆத்திரமடைந்தான்.
அகலிகாவைப் பார்க்கும் போதெல்லாம் அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அவள் கண்களில் ஒருவிதத் தீர்மானம் தெரிந்தது. ‘இந்த உறவு இத்தோடு முடியட்டும்’ என்று அவள் தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொள்வது தீரனுக்குப் புரிந்தது. அதுவே அவனை இன்னும் அதிகமாகத் தூண்டியது.
இரவு 1:30 மணி. அகலிகா தனது அறையில் ரியாவிற்குப் பக்கத்தில் படுத்திருந்தாள். ரியாவின் சீரான மூச்சுக்காற்று அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைக் காட்டியது. ஆனால் அகலிகாவிற்குத் தூக்கம் வரவில்லை. இருட்டில் கூரையைப் பார்த்தபடி கிடந்தவளின் மொபைல் திடீரென அதிர்ந்தது.
“எட்டாவது மாடி. ஸ்டோரேஜ் ரூம் . இப்போவே வா. வரலைன்னா, நான் உன் ரூமுக்கு வந்து கதவைத் தட்டுவேன். ஐ டோன்ட் கேர் !” ஒரே மெசேஜில் அவள் என்ன கேட்பாளோ அதற்கும் சேர்த்து பதில் அனுப்பி அவளை வர சொல்லி ஆர்டர் போட்டான் தீரன்.
அகலிகாவின் இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது. இவன் ஒரு பைத்தியக்காரன், சொன்னால் சொன்னபடி செய்வான் என்று அவளுக்குத் தெரியும். ரியா பக்கத்தில் இருக்கும்போதே அவன் வந்து நின்றால் எல்லாமே சிதைந்துவிடும்.
‘இன்னைக்கு ஒரு முடிவு எடுத்தே ஆகணும். அவன்கிட்ட நேருக்கு நேர் பேசி, இதோட நிறுத்திடச் சொல்லணும்,’ என்று மனதிற்குள் வைராக்கியம் வளர்த்துக் கொண்டாள்.
மெதுவாகப் போர்வையை விலக்கி, காலடிச் சத்தம் கேட்காமல் எழுந்து, ஒரு தடிமனான ஸ்வெட்டரை அணிந்து கொண்டு வெளியே வந்தாள்.
ஹால் இருட்டாக இருந்தது. மாஸ்டர் பெட்ரூமில் முகேஷ் தூங்கிக் கொண்டிருப்பான். மெதுவாக அவர்கள் இருந்த அபார்ட்மெண்டை விட்டு வெளியே வந்தவள் லிஃப்டைத் தவிர்த்துவிட்டு, படிக்கட்டுகள் வழியாக எட்டாவது மாடிக்குச் சென்றாள்.
ஒவ்வொரு படியிலும் கால் வைக்கும்போது அவள் இதயம் ‘திக் திக்’ என்று அடித்துக்கொண்டது. யாராவது பார்த்துவிட்டால்? செக்யூரிட்டி கேமராவில் அவர்களை யாரும் பார்த்துவிட்டாள்? என்ற பயம் அவளை ஆட்கொண்டாலும், தீரனைச் சந்தித்து அவனிடம் முடிவாக பேசி விட வேண்டும் என்ற உந்துதல் அவளை முன்னோக்கித் தள்ளியது.
எட்டாவது மாடியின் மூலையில் இருந்த அந்த பழைய ஸ்டோரேஜ் ரூம் கதவு சற்றே திறந்திருந்தது. அகலிகா உள்ளே நுழைந்த அடுத்த விநாடி, ஒரு வலிமையான கரம் அவளது மணிக்கட்டைப் பற்றி உள்ளே இழுத்தது. கதவு ‘பளார்’ என்று சாத்தப்பட்டு, லாக் செய்யப்பட்டது.
இருட்டு.. கும்மிருட்டு. அந்த அறையில் பழைய பொருட்களின் வாசனையும், தீரனின் பெர்ஃப்யூம் வாசனையும் கலந்திருந்தது.
“தீரன்… விடுங்க… என்ன இது.. உங்ககிட்டே கொஞ்சம் பேசணும் ,” என்று அவள் ஆரம்பிப்பதற்குள், தீரன் அவளைச் சுவற்றோடு சேர்த்து அழுத்தினான்.
“என்ன பேசப் போறே? முகேஷ் கூட எவ்வளவு சந்தோஷமா இருக்கேன்னு சொல்லப் போறியா? இல்ல, என்னை இனிமேல் பார்க்க மாட்டேன்னு சொல்லப் போறியா?” என்றவன் குரல் கோபத்தோடும் , ஆக்ரோஷமாகவும் இருந்தது.
அகலிகா அவன் கண்களைப் பார்க்க முயன்றாள். இருட்டிலும் அவனது கண்கள் சிவந்து ஜொலித்தன. “ஆமா தீரன்! இது தப்பு. ரியா பாவம், முகேஷ் பாவம். நான் அவங்களை ஏமாத்த விரும்பல. நம்ம ரெண்டு பேருக்கும் இடையில நடந்தது ஒரு தப்பு. அதை இத்தோட…” என்று அவள் பேச்சை முடிக்க விடவில்லை தீரன் அவனது இதழ்களால் அவளது வார்த்தைகளைச் சிறைபிடித்தன. அது ஒரு முத்தமல்ல, ஒரு வாரப் பிரிவின் தாகம், பொறாமை, மற்றும் ஆதிக்கத்தின் வெளிப்பாடு.
அகலிகா முதலில் அவனைத் தள்ள முயன்றாள். அவனது பிடிவாதம் அவளைக் கோபப்படுத்தியது. ஆனால், அவனது கரங்கள் அவளது இடுப்பை வளைத்துத் தூக்கியபோது, அவளது வைராக்கியம் மெல்லச் சரிந்தது. அவளது எதிர்ப்பு முனகலாக மாறியது.
“உன்னால என்னை விட்டுப் போக முடியாது அகலிகா. உன் உடம்புக்கும் மனசுக்கும் நான் மட்டும்தான் வேணும்னு எனக்குத் தெரியும்,” என்று தீரன் அவளது காதோரம் கிசுகிசுத்தான். அவனது வெப்பமான மூச்சு அவளது கழுத்தில் பட்டபோது, அகலிகா தன் கட்டுப்பாட்டை முழுமையாக இழந்தாள்.
தீரன் ஸ்வெட்டரை மெதுவாகக் கழற்றினான். அந்த இருண்ட அறையின் குளிர்ச்சியில், தீரனின் ஸ்பரிசம் அவளுக்கு நெருப்பாகத் தெரிந்தது. சுவரில் சாய்ந்தபடி, தீரன் அவளை ஆழமாக ஆட்கொண்டான். அவனது கரங்கள் ஹலோகாவின் உடலில் ஒவ்வொரு அங்குலத்தையும் உரிமையோடு வருடின.
அகலிகா அவனது தலைமுடியைக் கோதியபடி, “ஏன் தீரன் இப்படிப் பண்றீங்க? என்னை ஏன் நிம்மதியாவே இருக்க விடமாட்டேங்கிறீங்க?” என்று அழுதபடியே கேட்டாள். ஆனால் அவளது கைகள் அவனை இன்னும் இறுக்கமாகக் கட்டிக் கொண்டன.
“எனக்கு நீ வேணும் டி.. உன்னை அந்த முகேஷ் கூட அசேர்த்து வெச்சு என்னால பார்க்கவே முடியல.. ” என்றவன் அடுத்து அவளை பேசவிடாமல் முத்தமிட்டபடி
அந்த அறையில் இருந்த பழைய மேசையின் மீது அவளை அமர வைத்து, தீரன் அவளது ஆசையைத் தூண்டினான். அகலிகா இப்போது ஒரு கைதியைப் போல அல்ல, தீரனின் காதலுக்கு அடிமையான ஒரு பெண்ணாகச் சரணடைந்தாள்.
தீரனின் கைகள் அவள் உடலில் அத்துமீறியது. அது காமம் என்று சொல்வதை விட.. அவளை முழுமையாக தனதாக்கிக்கொள்ளும் நோக்கில் அந்த செயல் இருந்தது. தீரன் அவளை கொஞ்சம் கொஞ்சமாக தனதாக்கிக்கொண்டு இருந்தான் , எதை பேச வந்தோமோ அதை மறந்து அவனது கைப்பாவை ஆகி இருந்தாள் அகலிகா.
அவள் உடையை கலைந்து அவளுள் இணைந்து அந்த ஸ்டார் ரூமில் இருவரும் சங்கமித்தனர்.
அவர்கள் இருவரும் அந்த நள்ளிரவில், உலகை மறந்து, உறவுகளை மறந்து, தங்கள் உணர்ச்சிகளின் வேகத்தில் ஒன்றிணைந்தனர்.
ஒவ்வொரு அசைவிலும் தீரன் உரிமையை காட்டி இருந்தது. எங்கே யாராவது கதவைத் தட்டி விடுவார்களோ என்ற அச்சமே அவர்களின் வேகத்தை இன்னும் அதிகப்படுத்தியது. ரகசியமான உறவின் அந்தப் பரபரப்பு, ஒரு போதையை அவர்களுக்குக் கொடுத்தது.
சிறிது நேரம் கழித்து, தீரனின் மார்பில் சாய்ந்து மூச்சு வாங்கிக் கொண்டிருந்தாள் அகலிகா.
“இப்போ போ… ரியா முழிக்கிறதுக்கு முன்னாடி போயிடு,” என்று தீரன் அவளது நெற்றியில் முத்தமிட்டான். அவனது குரலில் இப்போது ஒரு அமைதி இருந்தது.
அகலிகா தனது ஆடைகளைச் சரி செய்துகொண்டு, “தீரன்… இதுதான் கடைசி. இனிமேல் இப்படி ஒரு சந்திப்பு வேணாம்,” என்றாள் பலவீனமான குரலில்.
தீரன் ஒரு கர்வமான புன்னகையை உதிர்த்தான். “பார்க்கலாம். ஆனா ஒன்னு ஞாபகம் வச்சுக்கோ… நீ யாரோட கை பிடிச்சு நடந்தாலும், உன் மனசுக்குள்ள நான் மட்டும்தான் இருப்பேன், இருக்கனும்” என்றான் தீர்க்கமான குரலில்.
அகலிகா பதில் சொல்லாமல் கதவைத் திறந்து வெளியே வந்தாள். ஹால்வேயில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு, வேகமாகத் தனது அறைக்குத் திரும்பினாள். படுக்கையில் ரியா அப்படியே தூங்கிக் கொண்டிருந்தாள்.
அகலிகா போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டாள். அவள் இதயம் இன்னும் வேகமாகத் துடித்துக் கொண்டிருந்தது. ‘முடிக்கலாம்னு தான் போனேன், ஆனா மறுபடியும் அவன்கிட்டயே தோத்துப் போயிட்டேனே…’ என்ற குற்ற உணர்ச்சி அவளை வாட்டியது.
ஆனால், தீரனின் அந்தத் தீண்டல் கொடுத்த போதை அவளை அறியாமல் அவள் உதட்டில் ஒரு சிறு புன்னகையை வரவழைத்தது. ஆபத்தான விளையாட்டு தொடங்கிவிட்டது. இது எங்கே போய் முடியப் போகிறது என்று அவளுக்குத் தெரியாது, ஆனால் திரும்புவதற்கான வழி அடைக்கப்பட்டுவிட்டது என்பது மட்டும் அவளுக்குப் புரிந்தது.
