“கெட்டிமேளம்! கெட்டிமேளம்!” என்ற குரல் கேட்டதும் நிலாவினியின் நெஞ்சம் அதிர்ந்தது.
அதே அதிர்வுடன் அவள் இருக்க… அவள் கழுத்தில் மூன்று முடிச்சிட்டான் சிபி வளவன்.
காதல் என்றால் என்னவென்று அறிந்திராத இரு உள்ளங்கள் ஒன்றாக இணையும் இந்த திருமண பந்தம்! ஒருவித படபடப்போடு தன் அருகில் அமர்ந்து இருந்த வளவனை ஆசையாக ஏறிட்டாள் நிலாவினி. ஆனால் அவனோ, இறுக்கமான முகத்தோடு எங்கோ பார்த்துக்கொண்டு இருந்தான்.
இரண்டு கெட்டிமேளச் சத்தம்தான்; இது அவளது வாழ்க்கையில் கேட்கும் இரண்டாவது கெட்டிமேளம். ஆம்! அவனுக்கு இது முதல் திருமணம், அவளுக்கோ இது மறுமணம்.
இணையுமோ இருமனம்?
