News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

ஏன் டா கண்ணை உருட்டியே அதட்டுற மூர்க்கன் 6

by Layas Tamil Novel
499 views
A+A-
Reset

மூர்க்கன் 6

 ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து நில்லுங்க ஆரத்தி எடுத்த பிறகு உள்ள போலாம் என்று வாசலில் இவர்களுக்காக காத்திருந்தார் பரிமளா 

 இளங்கிளியை அழைத்துக் கொண்டு நேராக தன்னுடைய வீட்டுக்கு செல்லாமல் தான் பிறந்த வீட்டிற்கு தன் பூர்வீக வீட்டிற்கு வந்திருந்தான் ராவண் 

 ராவனை விட்டு தள்ளி நின்றவள் கையை பற்றி தன் பக்கம் இழுத்து அவள் தோளோடு கை போட்டு சேர்த்து நிறுத்தியவன்.

ம்ம்ம்…என்று மட்டும் சொன்னான்.

 பெரிய இவன் வாயை திறந்து பேசினா முத்து உதிர்ந்திடும் என்று பரிமளா உள்ளுக்குள் தன் மகனை திட்டிக் கொண்டவர் கமலா அந்த ஆரத்தி தட்ட சீக்கிரம் எடுத்துட்டு வாடி என்று குரல் கொடுக்க உள்ளிருந்து ஆரத்தி தட்டோடு வந்தார் இராவணிn சித்தி கமலா.

 பெரியம்மா அண்ணனுக்கு மட்டும் தான் ஆர்த்தி எடுத்து கூப்பிடுவீங்களா எனக்கு எல்லாம் கிடையாதா என்றான் பின்னால்  நின்றிருந்த ராஜ்  

 நீ கல்யாணம் பண்ணி உன் பொண்டாட்டியோட வரும்போது உனக்கு ஆர்த்தி இருக்கிறேன்டா இப்ப என்ன அவசரம் உனக்கு என்று சிரித்தார் 

ஆர்த்தி தட்டை பரிமளாவின் கையில் கொடுத்துவிட்டு அதில் இருந்து சூடத்தை ஏற்றிய கமலா அவரோடு சேர்ந்து இருவருக்கும் ஆரத்தி சுற்றி உள்ளே  அழைத்துச் சென்றார்.

 இவர்கள் இருவருக்கும் அங்கேதான் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இளங்கிளியின் வீட்டில் இருந்து மாலை அவளை நேராக இங்கே அழைத்து வந்திருந்தான் இதற்காகத்தான்.

 இருவரும் உள்ளே வந்தது நீங்க பேசிட்டு இருங்க என்ற பரிமளா நீ வாமா என்று இளங்கிளியை கையை பற்றி அழைக்க.

 அவ்வளவு செய்ரியாது ராவணை பார்த்தாள் 

 என்கிட்ட பேசுறதுக்கு கூடவா உன் புருஷன் கிட்ட பர்மிஷன் வாங்கணும் நீ வா அவன் எதுவும் சொல்ல மாட்டான் என்று அவள் கையைப் பற்றி தன்னுடன் அழைத்துச் சென்றார் அவரோடு சேர்ந்து கமலாவும் சென்றார்.

அவர்களை அழுத்தமாக பார்த்துவிட்டு தன் அப்பாவை காண அவர் அறைக்கு சென்றான்.

 உள்ளே வந்த மகனைப் பார்த்தவர் எங்கே என் மருமக என்றார்.

 அவரை புருவம் இடுங்க பார்த்தவன் அது என்ன அவ வந்ததும் எல்லாரும் அவப்பக்கம் தாவுரிங்க. நான் தானே உங்க மகன் என்ன பத்தி பேசணும் கேட்கணும்னு எதுவும் தோணலையா என்றான்.

அதைக் கேட்டு சத்தமாக சிரித்த சுவாமிநாதன் நீ நம்ம வீட்டு பிள்ளை டா உன்கிட்ட எதுனாலும் பேசிக்கலாம் எப்ப வேணாலும் பேசிக்கலாம் அவ இப்பதானே நம்ம வீட்டுக்கு வந்து இருக்கா அவளுக்கு முதல் உரிமை கொடுக்கிறது தானே சரி என்றார் 

 அவ அம்மா கூட பேசிட்டு இருக்கா என்றான் இறுக்கமாக.

 சரி சரி நீ வா வந்து உட்காரு  என்றவர் என்னடா உன் அண்ணா இப்படி இருக்கான். பொண்டாட்டி பத்தி  விசாரிச்சா   கூட பொறுக்க மாட்டேங்குது என்று சிரித்தார் 

 பெரியப்பா அண்ணாவ பத்தி தான் உங்களுக்கு நல்லாவே தெரியுமே என்றவன். அதெல்லாம் இருக்கட்டும் விடுங்க எப்போ எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கப் போறீங்க. பாட்டி உடம்பு சரியில்லைன்னு டிராமா பண்ணி அண்ணாவுக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க. அதேபோல எனக்கும் ஒரு டிராமா போட்டிருந்தா நானும் அண்ணா மாதிரி இந்த நேரம் கல்யாணம் பண்ணி இருப்பேனே என்றான்.

 டேய் உனக்கு என்ன வயசுடா ஆச்சு கல்யாணத்துக்கு இவ்ளோ அவசரப்படுற கொஞ்ச நாள் சந்தோஷமா இருந்துட்டு போயேன் என்றார் வரதராஜன்.

 அது சரி எனக்கு கல்யாணம் பண்ற வயசு வந்து மூணு வருஷம் ஆகுது இன்னும் கல்யாணம் பண்ற வயசான கேட்டா என்ன அர்த்தம் என்றான் பொய் கோபத்தோடு.

கல்யாணம் தானே விடுடா சீக்கிரமே ஒரு நல்ல பொண்ண பார்த்து நான் உனக்கு கல்யாணம் பண்ணி வெக்கிறேன் என்றவர் அப்புறம் ஐரா அடுத்து என்ன பண்றதா பிளான் என்றார்.

சீக்கிரமே அந்த மோகனை என் கால்ல விழ வைக்கணும் என்னோட அடுத்த பிளான் என்றான்.

 ஆமா அண்ணா அவன் அண்ணியோட அப்பாவை கடத்தி வச்சிக்கிட்டு  ரொம்ப குடைச்சல் கொடுத்துட்டான். அவன் நீங்க பண்றத அப்படியே ஃபாலோ பண்ணி உங்கள மட்டுமே டார்கெட் வைக்கிறது போல எனக்கு தோணுது என்றான் ராஜா  

ம்ம்.. என்ற ராவண். அவன க்ளோசா வாட்ச் பண்ணு அவனோட டீலிங்ஸ்செல்லம் யார் கிட்ட வச்சிருக்கான்னு தெரிஞ்சுக்கோ அவங்க எல்லாரையும் நம்ம பக்கம் திருப்பணும் இனிமேல் அவன் ஏண்டா என் வழியில வந்தோன்னு தினம் தினம் யோசிக்கணும் அந்த அளவுக்கு அவனை நான் டார்ச்சர் பண்ணனும்னு முடிவு பண்ணி இருக்கேன் என்றான்.

விடுங்க என்கிட்ட சொல்லிட்டீங்க இல்ல நான் பாத்துக்குறேன் இனிமேல் பாருங்க என்றான் ராஜும்.

 ஐரா எது செஞ்சாலும் கவனமா இருக்கணும். ஏன்னா நம்ம வீட்டு பொண்ணு அவன்கிட்ட தான் இருக்கா. அதை ஞாபகத்துல வச்சுக்கோ.  இது பண விஷயம் மட்டும் இல்லை, நம்மளோட கௌரவ பிரச்சனையும் கூட. மித்ராவுக்கு எதுவும் ஆகக்கூடாது அவள எங்க இருந்தாலும் சந்தோஷமா பாத்துக்க வேண்டிய பொறுப்பு நம்ம எல்லாருக்குமே இருக்கு என்றவர். அந்த மோகன் நம்ம குடும்பம் வரைக்கும் பிரச்சனை பண்ணி இருக்கான். அவனை சும்மா விடக்கூடாது என்றார்.

ம்ம்ம் சரிப்பா நான் பாத்துக்குறேன் என்றவன் மித்ராவை சீக்கிரமே நம்ம பக்கம் கூட்டிட்டு வந்துடுவேன் நீங்க கவலைப்படாதீங்க என்று அவருக்கு ஆறுதல் சொன்னான்.

 நம்மளையும் நம்ம குடும்பமும் வேண்டாம்னு சொல்லிட்டு போனவளை பத்தி இப்போ எதுக்கு பேசிட்டு இருக்கீங்க என்று அங்கு வந்தார் பரிமளா.

 அவளை சந்தோசமா வழி அனுப்பி வச்சதே நீங்க தானே என்றான் ராவண் அழுத்தமாக.

அவனை கலங்கிய விழிகளோடு பார்த்தவர் அந்த மோகன் மோசமானவன்னு எனக்கு எப்படிடா தெரியும். மித்ரா லவ் பண்றேன்னு வந்து நின்னப்போ ஒரு அம்மாவா அவளுக்கு புத்திமதி சொல்லிப் பார்த்தேன். ஆனா அவன் தான் உயிர் அவனத்தான் காதலிக்கிறேன்னு அவ சொன்னப்போ நீங்க எல்லாரும் எதிர்த்தீங்க. எனக்கு என் பொண்ணோட வாழ்க்கை முக்கியம்னு நினைச்சு தான் அவளை அவ விருப்பப்படி வாழட்டும்னு அனுப்பி வச்சேன் என்று பெருமூச்சு விட்டவர்.

ஆனா அவ காதலிச்சவன் இவ்வளவு மோசமா இருப்பான்னு முன்னமே தெரிஞ்சிருந்தா கண்டிப்பா நான் அவளை அனுப்பி வெச்சிருக்கவே மாட்டேன். இதை ஏன் நீ புரிஞ்சுக்கவே மாட்டேங்குற, இந்த ஒரு காரணத்துக்காக இன்னும் எத்தனை வருஷம் என் கூட பேசாம இருப்ப நீ என்றார் ஆதங்கமாக.

அவ சொல்றதும் நியாயம் தானே ஐரா கொஞ்சம் யோசிச்சு பாரு. உன் அம்மா தானே பாவம்டா அவ நீ பேசாம அவ எவ்வளவு கஷ்டப்படுறான்னு எனக்கு தான் தெரியும் என்று தன் மனைவிக்கு ஆதரவாக பேசினார் வரதராஜன்.

ம்ம்.. என்று மட்டும் சொன்னவன் 

வரதராஜனின் முன் இருந்த இருக்கையில் போய் அமர்ந்து கொண்டான்.

பரிமளா அவனையே பார்த்துக்கொண்டு இருந்தவர் திரும்பி கீழே சென்றுவிட..

தங்களது பிசினஸ் குறித்து மற்ற விபரங்களை மூவரும் பேசிக்கொண்டு இருந்தனர்.

2 மணி நேரம் கடந்திருக்கும் “ஐயா!” என்று வந்து ஒரு வேலையாள் அவர்கள் அறைக்கதவை தட்ட..

“உள்ள வா.. ” என்று வரதராஜன் குரல் கொடுத்தார்.

“அம்மா சாப்பிட கூப்பிட்டாங்க ” என்று விபரத்தை சொல்லிவிட்டு அவர் செல்ல..

“சரி போலாமா ” என்று எழுந்தார் வரதராஜன்.

மூவரும் கீழே செல்ல…

அங்கே பரிமளா, கமலா இருவருக்கும் இடையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த இளங்கிளியின் மீது ராவணின் பார்வை படிந்தது. அவள் இங்கே வரும்போது கட்டி இருந்த சேலையில் இல்லை .

மஞ்சள் வண்ண பட்டு சேலை , தலையில் மல்லிகைப் பூ என சூடிக்கொண்டு முன்பை விட அழகாக இருந்தவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி இறங்கினான்.

அவர்கள் வந்ததும் மூவரும் எழுந்து வர.. “வாம்மா  ரெண்டு பேரும் வந்ததும் உன்னைப் பிடிச்சுக்கிட்டாங்களா? ” என்று சிரித்தார் வரதராஜன்.

இளங்கிளி இன்னமும் பயம் மாறாமல் அவரைப் பார்த்தவள் முக தோற்றத்தை வைத்து இது ராவணின் அப்பா என்று தெரிந்து கொண்டாள் . காலையில் மருத்துவமனையில் அவள் இருந்த பதற்றத்திற்கு அங்கிருந்தவர்களை சரியாக அவள் கவனிக்கவில்லை.

அவரை பார்த்து வணக்கம் வைத்தாள் மென்மையாக சிரித்தபடி.

“சரி வாங்க சாப்பிட போலாம்” என்ற பரிமளா.

“ஏங்க நம்ம மருமகளுக்கு கொஞ்சம் நகை எல்லாம் வாங்கணும். எது கொடுத்தாலும் வேணாம் , போட்ட மாட்டேன்னு சொல்றா. ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு செயினை மட்டும் தான் அவளுக்கு போட முடிஞ்சிது ” என்று அவர் காட்ட..

அவள் கழுத்தில் இருந்த மஞ்சள் தாலியை விட மிகவும் மெல்லியதான ஒரு நகை மட்டும் போட்டு இருந்தாள் அவள்.

என்னமா இவ்ளோ சின்னதா இருக்கு வேறை கொடுத்திருக்கலாமே என்றார் வரதராஜன் அவள் கழுத்தில் இருந்த செயினைப் பார்த்துவிட்டு.

“நீங்க வேற மாமா இதை போட்டுவிடவே நானும் , அக்காவும் ஒரு வழியாகிட்டோம்” என்று சலித்துக்கொண்டார் கமலா.

“அம்மா, அண்ணி என்ன உன்னை மாதிரியா எது கொடுத்தாலும் வேணாம்னு சொல்றதுக்கு ” என்று ராஜு தன் அம்மாவின் காலை வார..

“இரு டா உன்னைப் பேசிக்குறேன்” என்றவர் டைனிங் டேபிள் சென்றுவிட..

அவளையே பார்த்துக்கொண்டிருந்த ராவண் தன் கழுத்தில் இருந்த ஒரு பெரிய செயினை கழட்டி அவள் கழுத்தில் போட்டுவிட்டவன் ” இவளுக்கு என்ன வேணும்னாலும் நான் வாங்கி கொடுத்துகிறேன்” என்று இளங்கிளியின் தோளில் கையைப் போட்டு அவளை சாப்பிட அழைத்து சென்றான்.

“பாருங்க இவன.. ஏன் என் மருமகளுக்கு நான் வாங்கி கொடுக்க கூடாதா. அதுக்கு கூட எனக்கு உரிமை இல்லையா?”  என்று அவர் அழுவது போல பேச..

“டேய் ஐரா! உன் அம்மா அழறா டா ” என்று அவன் பின்னாலேயே சென்றார்.

சாப்பிட அமர்ந்தவன் அவரை பார்த்துவிட்டு “என்ன இப்போ” என்றான்.

“நாளைக்கு நான் கூட்டிட்டு போய் அவளுக்கு நகை வாங்கி கொடுக்குறேன்.” என்றவர் “நீ சொல்லு கிளி நான் வாங்கி கொடுக்குற நகையை தானே நீ போட்டுக்குவ” என்றார்.

அவளோ பதில் சொல்ல திணறியபடி அவரைப் பார்த்தார்.

பரிமளா வந்ததும் ஏன் அவளுக்கு கஷ்டமான டாஸ்க் கொடுக்குற.. பாவம் என் மருமக என்றார் வரதராஜன்.

நீங்க சும்மா இருங்க என்று அவர் இளங்கிளியைப் பார்க்க..

“முடியாதுனு சொல்லு ” என்றார் ராவண்.

அவளுக்கோ எங்காவது ஓடிவிடலாம் என்று இருந்தது. தாய்க்கும் , மகனுக்கும் இடையில் வந்து வசமாக மாட்டிக்கொண்டோமோ என்று தோன்றும் அளவு இருவரும் அவளை படுத்துகிறார்கள்.

“இல்லங்க.. அது.. அது வந்து அவங்க பெரியவங்க. அவங்க பேச்சுக்கு மரியாதை கொடுக்கணும் இல்ல.. ” என்று பயந்து கொண்டே பேசினாள்.

“நான் உன் புருஷன் அது நியாபகம் இருக்கா ” என்று அவளை அழுத்தமாக பார்த்தான்.

அவன் பார்வையில் அதிர்ந்து எச்சில் விழுங்கியவள் “அது ..” என்று இழுக்க .

“டேய் அவளை ஏன் டா கண்ணை உறுதியே அதட்டுற நீயே உன் பொண்டாட்டிக்கு வாங்கி கொடு நான் கூப்பிடல அவளை சரியா” என்று அவரே விட்டுக்கொடுத்துவிட்டார்.

இளங்கிளிக்கு சங்கடமாக இருந்தது. அவளால் ராவண் பேச்சை மீறி என்ன செய்துவிட முடியும். பார்வையாலேயே பரிமளாவிடம் மன்னிப்பு கேட்டவள் அமைதியாக சாப்பிட்டு முடித்தாள்.

மனதிற்குள் ராவணை தீட்டித் தீர்த்தாள். “என்ன வந்துச்சு இவருக்கு அத்தை  பாவம். எல்லாரையும் அதட்டி உருட்டுற மாதிரி தான் வீட்லயும் நடந்துப்பாங்களா. இவரை கேக்குறதுக்கு யாரும் இல்ல. அதான் இப்படி இருக்காரு. இவர் கிட்டே வந்து என்னை வசமா மாட்டி விட்டுட்டாரு என் அப்பா. முதல்ல அவர் மட்டும் என் கைல கிடைக்கட்டும் அப்போ இருக்கு” என்று அவருக்கும் சேர்த்து திட்டுவிழுந்தது.

சாப்பிட்டு முடித்து இருவரும் வீட்டிற்கு கிளம்பினர். கார் ஏறியதில் இருந்து யாருடனோ தீவிரமாக போன் பேசிக்கொண்டு வந்த ராவண் அவ்வப்போது ஓரக்கண்ணால் அவளையும் பார்த்துக்கொண்டு தான் வந்தான். அவளோ வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தாள்.

வீடு வந்ததும் கார் கதவை திறந்து கொண்டு இருவரும் இறங்கி வெளியே வர.. ட்ரைவரை போகச்சொல்லிவிட்டு அவன் அருகில் படபடவென கண்களை சிமிட்டிகொண்டு நின்று இருந்தவள் இழுத்து அணைத்தவன் வாசலில் வைத்தே அவளுக்கு முத்தம் கொடுத்த படி தூக்கிக்கொண்டு வீட்டிற்குள் நுழைத்தான்.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.