வன்முத்தம் 1
“அக்கா! என்ன ஒரே யோசனையா இருக்க? எப்படி பஸ்ட் நைட் கொண்டாடுறதுனு யோசிச்சிட்டு இருக்கியா?” என்று அவள் காது கடித்தாள் நிலாவினியின் தங்கை தாரா.
தாரா பேசியது நிலாவினியின் காதில் விழவே இல்லை. அவள் பதட்டமாக அமர்ந்து இருக்க.. அவளுக்கு வைக்க பூ கொண்டு வந்த அவள் அம்மா..
“நிலா! எதுக்கு இவ்ளோ பதட்டமா இருக்க? சிபி நல்ல பையன். அந்த அன்பு மாதிரி நிச்சயமா உன்னை நடத்தமாட்டான்” என்று தன் மகளுக்கு சிபிவல்லவன் குறித்து நன்மதிப்பு சன்றிதழ் வழங்கிக் கொண்டிருந்தார் தேன்மொழி.
“இல்லம்மா காலையில் என் கழுத்துல தாலி கட்டும்போது நான் வளவனை பார்த்தேன். அவர் முகத்துல துளி கூட சிரிப்பு இல்ல.. அதான் எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு. அவருக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம்னால தான நீங்க கேட்டதும் ஒத்துகிட்டார். அப்பறோம் ஏன் அவர் முகம் அப்படி இருந்துச்சுன்னு தெரியல..” என்றாள் நிலாவினி குழப்பமாக.
“உன் அப்பா நேரடியா சிபி வீட்டுக்கு போய் எல்லா விஷயத்தையும் மறைக்காம சொல்லி தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் கேட்டார். அவங்களும் எல்லாம் தெரிஞ்சு தான் உன்னை அவங்க வீட்டுக்கு மருமகளா வரதுக்கு சம்மதிச்சாங்க” என்றவர்
“நீ உள்ள தானே போகப்போற நீயே கேளேன் அவன்கிட்டே” என்று கையில் வைத்திருந்த மல்லிகை சரத்தை அங்கே இருந்த தாராவிடம் நீட்டி ” உன் அக்காவுக்கு வெச்சு விடு டி. நான் போய் பால் செம்பை எடுத்துட்டு வரேன்” என்று அங்கிருந்து சென்றுவிட்டார்.
“அக்கா! இப்போ எதுக்கு நீ இவ்ளோ டென்ஷன் ஆகுற. இன்னும் கொஞ்ச நேரத்துல சிபியை பார்க்க தானே போற.. நீயே கேளு” என்றாள்.
“ஹேய்! அவர் இப்போ உனக்கு மாமா டி, இப்படியா மரியாதை இல்லாம பேர் சொல்லி கூப்பிடு சரியா” என்று தாராவின் இடையில் பிடித்து கிள்ளினாள் நிலா.
“ஷ்! அக்கா வலிக்குது” என்று சிணுங்கியவள். அவள் தலையில் பூவை மொத்தமாக சூடிவிட்டு அதை முகர்ந்து பார்த்தவள். “ஹும்… எப்பா ஆளைத் தூக்குதே.. மாம்ஸ் அவ்ளோதான் இன்னிக்கு “என்று கண்ணாடியின் வழியே தெரிந்த நிலாவினியைப் பார்த்தாள்.
“சும்மா இரு டி” என்று லேசான வெட்கத்தோடு நிலா தன் பிம்பத்தை ஒரு முறை கண்ணாடியில் பார்த்தாள்.
“அக்கா! மாம்சுக்கு இந்த பஸ்ட் நைட் பத்தி எதுவும் தெரியலையின்னா நீ கொஞ்சம் பொறுமையா சொல்லிக்கொடு. ஆபீஸ்ல எல்லாரையும் அதட்டி உருட்டி வேலை வாங்குற மாதிரியே மாம்ஸயும் படுத்திராத சரியா” என்று கண்ணாடித்தாள்.
“உனக்கு வர வர வாய் கொழுப்பு அதிகம் ஆகிருச்சு” என்று எட்டி தாராவை பிடிக்கப் போக..
“அக்கா ஒரு நிமிஷம் இரு, எனக்கு ஒரு டூவுட்” என்றாள்.
“என்ன டி!”
“உனக்கு அணை ஒன்னும் உடையலையே”
“இல்ல.. ஏன் டி!”
“இல்ல அணை உடைஞ்சிருச்சுன்னா மாம்ஸ் 3 நாளைக்கு உன் பக்கத்துல வர முடியதில்லை அதுவும் இன்னிக்கு உங்களுக்கு பர்ஸ்ட் நைட் வேற… இந்த நேரத்துல போய்.. உன் அணை உடைஞ்சா அவரு ஏமாந்திருவருள்ள…” என்று குறும்பாக நிலாவை பார்க்க..
அவள் சொல்வதன் அர்த்தம் புரிந்தி எழுந்தியா அவளை அடிக்க போனாள் நிலாவினி.
“ஐயோ! அக்கா! என் வேலை முடிஞ்சு நான் போறேன்” என்று அவள் கையில் சிக்காமல் சிட்டாக பறந்துவிட்டாள் தாரா.
தாராவின் துட்டுக்குத் தனமான பேச்சை நினைத்து சிரித்துக்கொண்டாள் நிலா.
இங்கே அடுக்கலையில் பாலை ஊற்றிக் கொண்டிருந்த தேன்மொழி
“சிபி அவன் அம்மாவையும், தம்பி, தங்கச்சியையும் விட்டுட்டு நம்ம வீட்ல வீட்டோட மாப்பிள்ளையா வரது நினைச்சு வருத்தப்பட்றனோ, நிலா வேற அவன் முகமே சரி இல்லேனு சொன்னாளே! ” என்று யோசித்தவர். “பேசாம அவங்களையும் நம்ம வீட்டுக்கே கூப்டு வந்துரலாமா? நான் இதை அப்போவே அவர்கிட்டே சொன்னேன். எங்க கேக்குறாரு. இவருக்கு தெரிஞ்சதெல்லாம் பொண்ணுங்க, பொண்ணுங்க மட்டும் தான். அந்த பையனை பத்தி கொஞ்சமாவது யோசிச்சாரா தெரியல..” என்று தனியாக புலம்பிக் கொண்டிருந்தார்.
“என்ன தேனு! தனியா பேசிட்டு இருக்க?” என்று உள்ளே நுழைந்தார் அவர் கணவர் ஆறுமுகம்.
“ஐயோ! வந்துட்டாரே. நான் புலம்பினது காதுல விழுந்திருக்குமோ..” என்று நினைத்தவர் ” சமாளிப்போம்” என்று திரும்பி “இல்லங்க வீட்ல வேற யாரும் இல்ல நான் போய் எப்படி நம்ம பொண்ண முதல் ராத்திரிக்கு அனுப்பறதுனு பேசிகிட்டு இருந்தேன்” என்று சமாளித்தார். .
“அதனால என்ன டி, போ நேரம் ஆச்சு கொண்டு போய் பாலை கொடுத்துட்டு அவகிட்டே நல்லவிதமா நாலு வார்த்தை சொல்லி அனுப்பு” என்று அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
“ம்ஹும்.. நான் என்னத்த அவகிட்டே புத்திமதி சொல்றது. ஒரு பிசினசையே கட்டி ஆளுரா அதெல்லாம் அவளுக்கா தெரியாது” என்று பால் செம்பை எடுத்து சென்று நிலாவிடம் கொடுத்துவிட்டு தூங்க சென்றுவிட்டார்.
கண்கள் மூடி மூச்சை இழுத்துவிட்டவள் செம்பை எடுத்துக்கொண்டு தன் ரூம் நோக்கி படியேறினாள்.
அறை வரை மேலேறி வந்தவளுக்கு உள்ளே செல்ல முடியவில்லை.
அவள் தினமும் உறங்கும் அறை தான் இன்று அவள் கணவனுடன் என்று நினைக்கும்போதே லேசாக வியர்த்துவிட்டது அவளுக்கு.
கொஞ்சம் மூச்சுக் காற்றும் வேகமெடுக்க..
முகத்தில். வழிந்த வியர்வையை சேலை தலைப்பில் லேசாக ஒற்றி. எடுத்தவள் கதவை திறக்கப் போக…
“அட போ.. அக்கா நீ உள்ள போனதும் மொத்தமா வேர்க்க தான் போகுது. அப்போ துடைச்சுக்க.. மாம்ஸ் எவ்ளோ நேரம் வெய்ட் பண்ணிட்டு இருப்பாரு..” என்று தன் அறைக்குள். இருந்து தலையை. மட்டும் வெளியே. நீட்டி சொல்ல..
அவள் குரலில் திட்டுக்கிட்ட நிலா “தாரா நிஜமாவே ரொம்ப டென்ஷ்டா இருக்கு டி..” என்றாள்.
“அய்யே! என்னக்கா இது… நீயா இப்படி” என்று அவளிடம் வந்தவள்.
“இங்க பாரு உன்னோட எக் ஹஸ்பண்ட் அன்பு மாதிரியே சிபி மாம்ஸ் இருப்பாருனு எல்லாம் யோசிக்காத. அவர் ரொம்ப நல்ல டைப் உனக்கும். அவரை நல்லாவே தெரியும் ஆச்சே அப்பறோம் என்ன பயம், டென்ஷன் இதெல்லாம், போ க்கா… போ..” என்று கையை. நீட்டி தலையை. குனிந்து ஜெயம் மூவி சதாவை போல சொல்ல…
“ம்ஹும்.. சரி டி..” என்று கதவை திறந்துகொண்டு உள்ளே சென்றாள்.
“அக்காவுக்கு கல்யாணம் செய்து வெச்சதுக்கு பதிலா எனக்கு பண்ணி. வெச்சிருக்கலாம்” என்று பெருமூச்சு விட்டப்படி தன் அறைக்கு சென்றுவிட்டாள் தாரா.
இங்கே முதல். இரவு அறைக்குள். வந்த நிலாவினி கதவை தாலிட்டுவிட்டு திரும்பி வளவனை பார்த்தாள்.
கட்டிலில் பூக்களால் அலங்காரிக்கப் பட்டிருக்க.. அவனோ கட்டாந்தரையில் போர்வையை விரித்துப்போட்டு படுத்திருந்தான்.
அவனை அங்கு பார்த்ததும் கையில் இருந்த பால் செம்பை மேஜையில் வைத்துவிட்டு அவன் அருகில். வந்தாள்.
அவளுக்கு முதுகு காட்டி படுத்திருந்தான் வளவன்.
பின்னால் இருந்து அவன் என்ன செய்கிறான் என்று ஆர்வத்தில் கால்களை. உந்தி பார்த்தவளுக்கு அவன் முகம். சரியாக தெரியாமல் போக..
இன்னும் கொஞ்சம் கால்களை உயர்த்தி குனிந்து அவனைப். பார்த்தவள் பேலன்ஸ் இல்லாமல். அவன் மேலே பொத்தென விழுந்தே விட்டாள்.
“ஹா! ஹையோ!..” என்று சத்தமிட்ட படி அவன் மேல் விழ..
படுத்திருந்த வளவன் அவள் சத்தம் கேட்டு திரும்பவும் அவன் மேல் நிலாவினி விழவும் சரியாக இருக்க..
சடுதியில் சுதாரித்து அவளைப் பற்ற அவன் கைகளை நீட்ட, விதிவசத்தால் அவன் விரல்கள் சிறைபிடித்தது என்னவோ அவளது விம்மிய முன்னழகைத்தான்.
இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை அவன். அவளும் தான். அதிர்ந்து அவனை பார்க்க..
வளவன் தன் கைகளை அவள் ஸ்தனங்களில் இருந்து வேகமாக விலகிக்கொள்ள… அவன் மார்பில் பொத்தென விழுந்தாள் நிலாவினி.
இருவரின் முகமும் மிக நெருக்கத்தில். அவளோ சிவந்த கன்னங்களாக அவனை பார்க்க முடியாமல் திணறினாள். அவள் கழுத்தில் வளவன் கட்டிய புது தாலி அவன் முகத்தில் உரசியது
அவனோ இப்படி ஒரு இக்கட்டான சூழலில் மாட்டிக்கொண்டு தவித்தான்.
ஒரு நிமிட சுதாரிப்புக்குள் இருவரும் படுக்கையை விட்டு எழுந்தனர்.
“இல்ல.. நீஙக தூங்கிட்டிங்களான்னு பாக்க வந்தேன். ஸ்லிப் ஆகி.. உங்க மேல..” என்று வெட்கத்தோடு நிலா அவனை பார்த்தாள்.
“சாரி மேடம், நானும் தெரியாம உங்கள..” என்றவன் அவள் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் “நான் வேணும்னு பண்ணல மேடம். நீஙக விழ வந்திங்கன்னு தான் நான் பிடிச்சேன்…” என்றான்.
“இட்ஸ் ஓகே “என்றவள். “நமக்கு கல்யாணம் ஆகிருச்சு. இன்னமும் ஆபீஸ்ல என்னை கூப்பிடற மாதிரியே மேடம்னு சொல்லி கூப்பிடணுமா?” .
“ஆபீஸ்லயும், சரி உங்க வாழ்க்கையிலையும் சரி நான் உங்களுக்கு ஒரு அசிஸ்டன்ட் தான மேடம். அங்க உங்களுக்கு பியேவா வேலை பாக்குறேன். இங்க உங்க வீட்டோட மாப்பிள்ளையா வேலை பாக்குறேன். ஐ மீண் இருக்கேன்னு சொல்ல வந்தேன்” என்று அவள் மனம் நோக வார்த்தைகளை விட்டுவிட்டான்.
அந்த பேச்சில் ஸ்தம்பித்தவள் “வளவன் என்ன சொல்றிங்க.. நாம இப்போ கணவன், மனைவி நமக்குள்ள ஏன் இந்த மாதிரி பாகுபாடு, பேச்செல்லாம்”
“இல்ல மேடம், கணவன் மனைவின்னு சொல்றது சரியா வராது. சரியா உங்க அப்பா என் குடும்ப சூழலை யூஸ் பண்ணி உங்கள கல்யாணம் செய்துக்க சம்மதம் வாங்கிக்கிட்டார். நானும் வேற வழி இல்லாம உங்க அப்போவுக்கு பியேவா இருந்தேன். இப்போ உங்களுக்கு வீட்டோட மாப்பிள்ளையா இருக்கேன். அவ்ளோதான்” என்றான்.
“வளவன் ப்ளீஸ்! இப்படி பேசாதிங்க. உங்களுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இருக்குன்னு தான் நான் நினைச்சேன். என் அப்பா உங்ககிட்டே என்ன பேசினாருனு எனக்கு தெரியாது” என்றாள் ஏமாற்றம் நிறைந்த பார்வையோடு.
” என் அம்மாவோட ஹார்ட் சர்ஜரியை காரணம் காட்டி அவங்க உயிர்க்கு போராடிட்டு இருந்த அப்போ உங்களுக்கு ரெண்டான்தாரமா கல்யாணம் செய்து வைக்க சொல்லி வந்து கேட்ட அப்போ. எனக்கு வேற வழி தெரியல. எனக்கு என் அம்மா முக்கியம். அவங்க உயிர் பிழைக்கணும் அது ரொம்ப முக்கியம் அதுக்காக தான் நான் உங்களை கல்யாணம் செய்துக்கிட்டேன், அதுவும் உங்க அப்பா எனக்கு வேற ஆப்சனே கொடுக்கல.. ” என்றான்.
அவன் சொன்னதெல்லாம் கேட்க கேட்க நிலாவினிக்கு தலையே வெடித்துவிடும் போல இருந்தது.
அவள் அதிர்ந்ததை கண்டவனோ சட்டை செய்யாமல் போர்வையை கையில் எடுத்தவன். “கொஞ்சம் நகருறிங்களா மேடம். நாளைக்கு என் அம்மாவுக்கு சர்ஜெரி நான் நேரமே போகணும்” என்றான்.
நிலாவினியும் அவன் படுக்கை விரிப்பில் இருந்து விலகி நிற்க..
தரையில் விரித்திருந்த போர்வையில் படுக்கப் போனான்.
“வளவன் மேல படுங்க ப்ளீஸ்!”
“என் இடம் இது தான் மேடம். எனக்கு idhuv3 போதும்” என்று போர்த்திப் படுத்துவிட்டான்.
அவனையே பார்த்து நின்றிருந்தவள் ஒருவித ஏமாற்றதோடு போய் கட்டிலில் அவனை பார்த்த படி படுத்துக்கொண்டாள்.
இப்படி முதல் இரவன்று ஆளுக்கு ஒரு பக்கம் தனியாக படுத்து உறங்குகிறார்கள்.
தன் அடுத்த வாழ்க்கையாவது நல்லா முறையில் அமையும் என்று நினைத்து வளவனை இரண்டாவது முறை திருமணம் செய்தாள் நிலாவினி. ஆனால் வளவனுக்கு இந்த திருமணத்தில் பிடித்தம் இல்லை என்று அவன் பேச்சிலேயே தெரிந்துவிட்டது.
என்ன செல்லங்களா வல்லவனின் வன்முத்தம் எப்படி இருக்கு? இவங்க ரெண்டு பேரையும் எப்படி சேர்த்த போறோம்…
